Home Blog Page 321

கனக துர்காவிற்கு கழுத்துப்போச்சு: 24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு!

0
கனக துர்காவிற்கு கழுத்துப்போச்சு

கனக துர்காவிற்கு கழுத்துப்போச்சு: 24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு!

கனகதுர்காவும், பிந்துவும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் போலீஸ் பாதுகாப்புடன் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தியவர்கள்.

சில நாட்கள் போலீஸ் பாதுகாப்பில் இருந்துவிட்டு சமீபத்தில் வீடு திரும்பினார்கள். வீடு திரும்பியவுடன் கனகதுர்காவை மாமியார் உருட்டுக்கட்டையால் அடித்துவிட்டார் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மலப்புரம், பெரிந்தலமன்னாவிலுள்ள அவருடைய கணவர் வீட்டில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

அதன்பிறகு மாமியார் சுமதியம்மா மீது கனகதுர்கா போலீசில், 12 முறை உருட்டுக்கட்டையால் தாக்கியதாகப் புகார் தெரிவித்திருந்தார்.

மேலும் பிந்துவும், கனகதுர்காவும் உயிருக்கு ஆபத்து இருப்பதாக போலீஸ் பாதுகாப்பு வேண்டி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

அவர்களின் மனுவை விசாரித்த நீதிமன்றம், 24 மணி நேர பாதுகாப்பு வழங்க கேரள அரசையும் காவல்துறையையும் வலியுறுத்தி உள்ளது.

அதேபோல், கனக துர்காவின் மாமியாரும் தான் தாக்கப்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கனகதுர்காவை நான் தாக்கவில்லை அவர் தான் என்னைத் தாக்கினார் எனப் புகார் தெரிவித்துள்ளார்.

இதனால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

3

எச்.ஐ.வி. ரத்தம்: கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது!

0
எச்.ஐ.வி. ரத்தம்

எச்.ஐ.வி. ரத்தம்: கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது!

சென்ற வருடம் நவம்பர், 30ம் தேதி சிவகாசியைச் சேர்ந்த ரமேஷ், சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்ததானம் செய்துள்ளார்.

சிவகாசி அரசு மருத்துவமனை ஊழியர்கள், ரமேஷின் ரத்தத்தை முறையாக பரிசோதிக்காமல் சேமித்து வைத்துள்ளனர் .

இதன்பிறகு, ரமேஷ் வெளிநாடு செல்வதற்காக மதுரையில் முழு உடற் பரிசோதனை செய்துகொண்டுள்ளார்.

அங்கு ரமேஷுக்கு HIV இருப்பது தெரியவந்தது. இதனால் அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். பிறகு அவருக்கு ரத்ததானம் செய்தது நினைவுக்கு வந்துள்ளது.

உடனே, சிவகாசி அரசு மருத்துவமனைக்குச் சென்று, HIV-யால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், என்னுடைய ரத்தத்தை யாருக்கும் செலுத்த வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் அதற்கு முன்பே, சிவகாசியிலிருந்து சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதிக்கப்படாத ரமேஷின் HIV ரத்தம் அனுப்பப்பட்டுவிட்டது.

அதன்பிறகும், ஊழியர்கள் இதை சரிவரக் கவனிக்கவில்லை. இந்நிலையில் தான் சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு ரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவாக உள்ளது. எனவே ரத்தம் செலுத்த மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

அப்பெண்ணிற்கு ரமேஷின் HIV ரத்தத்தை செலுத்திவிட்டனர். 15 நாட்கள் கழித்து மீண்டும் சிகிச்சைக்கு வந்த பிறகு தான் அவருக்கு HIV இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த கர்ப்பிணிப் பெண்ணும், அவருடைய கணவரும் மருத்துவமனை ஊழியர்களுடன் சண்டையிட்டுள்ளனர்.

விசாரணையில் ரமேஷின் ரத்தம் ஏற்றப்பட்டது உறுதியானது. அதன்பிறகு சமந்தப்பட்ட ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்தத் தகவல் அறிந்த ரமேஷ், விஷயம் ஊருக்கே தெரிந்துவிட்டது எனத் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அதன்பிறகு அந்தக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தனர்.

நேற்று அவருக்கு அழகிய பெண்குழந்தை பிறந்தது. குழந்தை குறைந்த எடையுடன் பிறந்ததால்  தீவிரக் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

குழந்தைக்கு HIV தொற்று ஏற்படாமல் இருக்க, தாய்ப்பால் கொடுக்க அனுமதிக்கப் படவில்லை.

இன்னும் இருவாரங்கள் கழித்தே, குழந்தையை முழுப்பரிசோதனை செய்து, குழந்தைக்கு HIV பாதிப்பில்லை என்பதை உறுதி செய்யமுடியும்.

3

10 இயர் சேலஞ்ச்: தோனியால் வரப்போகும் ஆபத்து!

0
10 இயர் சேலஞ்ச்

10 இயர் சேலஞ்ச்: தோனியால் வரப்போகும் ஆபத்து!

#10yearchallenge என்ற ஹாஸ்டாக் சமீப காலமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

10 வருடத்திற்கு முந்தைய புகைப்படத்தையும், தற்பொழுது உள்ள புகைப்படத்தையும் மக்கள் அதில் பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்பாக பிரபலங்கள் இதை அதிகம் பரப்புவதால், அவருடைய ரசிகர்களும், அதே ஹேஸ்டாக்கில் தங்களுடைய புகைப்படங்களை அப்லோட் செய்கின்றனர்.

இதில் பிரபலங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அவர்களுடைய புகைப்படங்கள் இணையத்தில் நிறையவே உள்ளன.

அதே சாதாரண மக்கள் இதைச் செய்வதன் மூலம், 10 வருடத்திற்குமுன் அல்லது இளம் வயது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவும் வாய்ப்பு உள்ளது.

எப்படி செல்பி எடுக்கும்போது கைரேகை திருட வாய்ப்பு உள்ளதே அதே போன்று உங்கள் முக அமைப்புகள் திருடுபோக வாய்ப்பு உள்ளது.

Facial Recognition மூலம் உங்களுடைய புகைப்படம் ஹாக்கர்கள் கையில் அல்லது தவறானவர்களுக்கு சென்றால், நீங்கள் எந்த வயதில் இருந்தாலும் உங்களை யார் என எளிதில் அடையாளம் காண முடியும்.

இதனால் உங்களுடைய பாதுகாப்புத்தன்மை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. சில முக்கிய சமூக வலைத்தளம் ஒன்று பயனர்களின் புகைப்படத்தைக் கொண்டு அடையாளம் கண்டு வருகிறது.

எனவே நீங்கள் மேலும் உங்களுடைய தரவுகளை அதில் ஏற்றுவதன் மூலம், உங்கள் முகம் நன்கு பரிச்சியம் ஆகிவிடும்.

மூன்றாம் தரப்பினருக்கு தகவல் லீக் ஆனால் உங்களுடைய முழுத் தகவல்களையும் எதிர்கால தொழில்நுட்பம் மூலம் அபகரிக்க வாய்ப்புகள் அதிகம்.

தோனி போன்ற பெரிய பிரபலங்கள் இதுபோன்ற ஹாஸ்டாக்குகளை தவிர்ப்பது நல்லது. ஐ.சி.சி. 10 இயர் சேலஞ்ச் ஹாஸ்டாக்கை தொடர்ந்து பிரபலப்படுத்தி வருகின்றது.

இதனால் சாதாரண ரசிகர்களும் ஆர்வக்கோளாறில் தங்களுடைய புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். எனவே இனியாவது ரசிகர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

3

16 வயதில் தொழில்; மாணவியின் வாழ்க்கையே மாறியது!

0
16 வயதில்

16 வயதில் துவங்கிய தொழில்; மாணவியின் வாழ்க்கையே மாறிப்போனது!

ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் லிவ் கான்லான். இவருக்கு வயது 20. இவர் வருடத்திற்கு 1 மில்லியன் பவுண்ட் சம்பாதித்து வருகிறார்.

ஒரு பவுண்ட் இன்றைய விலையில் 91 ரூபாய்.  9.19 கோடி ரூபாய் ஒரு வருடத்தின் ஆண்டு வருமானமாகக் கொண்டுள்ளார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரைச் சேர்ந்த இவர், 16 வயதில் பள்ளிப்படிப்பை நிறுத்தியுள்ளார்.

ஆசிரியை ஏன் எனக்கேட்க தொழில் துவங்கப்போவதாக கூறி ஆசிரியையை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

சீனாவில் உள்ள பொருட்களை வாங்கி அதை, ஸ்காட்லாந்தில் விற்பனை செய்ததின் மூலம், முதலாம் ஆண்டு 5,000 பவுண்டுகள் கிடைத்துள்ளது.

அதைக்கொண்டு, ThePropertyStagers என்ற இணையத்தை உருவாக்கி வீடுகளின் இன்டீரியர் அமைப்பை மாற்றியமைத்து விற்பனை செய்துள்ளார்.

அந்நிறுவனத்தின் மூலம், 30,000 பவுண்டுகள் வருவாய் கிடைத்துள்ளது. அடுத்த ஒரு வருடத்திலேயே 1 மில்லியன் பவுண்டுகள் வருவாயாக உயர்ந்துள்ளது.

கான்லான் மற்றும் அவரது நிறுவனைத்தை சேர்ந்தவர்கள் ஒரு வருடத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை தயார் செய்து மெருகேற்றி வருகின்றனர்.

கான்லான் மற்றும் அவருடைய தாய் அலி இருவரும் சேர்ந்து உருவாக்கிய நிறுவனம் இது. இதில் மொத்தம் 10 க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.

16 வயதில் துவங்கிய தொழில் இன்று கான்லான் கோடிஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

3

கட்சி ஆரம்பித்தும் கமல் திருந்தவில்லை; சிங்கப்பூரில் நடந்தது என்ன?

0
கட்சி ஆரம்பித்தும் கமல்

கட்சி ஆரம்பித்தும் கமல் திருந்தவில்லை; சிங்கப்பூரில் நடந்தது என்ன?

கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக ஒரு புகைப்படம் வைரலாகி வருகின்றது. அதில் கமலும், பூஜாகுமாரும் சிங்கபூர் வீதியில் உலா வருகின்றனர்.

இதுவரை கமல் தரப்பில் இருந்து, இந்தப் புகைப்படம் குறித்து எந்தத் தகவலும் வெளிவரவில்லை.

ஆனால், மீடியாக்கள் சும்மா இருக்குமா? கண்ணு, காது, மூக்கு வைத்து பல கோணங்களில் எழுதி வருகின்றனர்.

ஒரு சில யுடியூப் சேனல்கள், கமல், பூஜா குமாருடன் பொங்கல் கொண்டாட சிங்கப்பூர் சென்றுள்ளார் எனக் கூறியுள்ளது.

சில மீடியாக்கள், கவுதமியின் உறவு முறிவுக்குப்பின் பூஜா குமாருடன் வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியிட்டுள்ளனர்.

சிலர் இந்தியன்-2 படத்திற்காக சிங்கப்பூர் சென்று ஸ்டோரி டிஸ்கசன் செய்திருக்கலாம் எனக் கூறியுள்ளனர்.

இந்தியன்-2 படம் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவே தகவல்கள் தெரிவிகின்றன.

மேலும், பூஜாகுமார் அந்தப்படத்தில் நடிப்பது பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

கமலும் இதுவரை இதுகுறித்து விளக்கம் கொடுக்கவில்லை. அப்புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது?

கமல், பூஜாகுமார் இருவருக்கும் இடையே உள்ள உறவு என்ன? இது குறித்து கமல் விளக்கம் கொடுப்பதே சிறந்தது.

கட்சி ஆரம்பித்த பின்பும் கமல் இதுபோன்ற சர்ச்சையில் சிக்குவது, அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்பது மட்டும் உறுதி.

3

இறந்த நடிகை ஸ்ரீதேவி: புதிய வீடியோவால் பரபரப்பு!

0
இறந்த நடிகை ஸ்ரீதேவி

இறந்த நடிகை ஸ்ரீதேவி: புதிய வீடியோவால் பரபரப்பு!

நடிகை ஸ்ரீதேவி சென்ற ஆண்டு துபாயில் உள்ள ஓட்டலில் நீர்த்தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார்.

ஸ்ரீதேவி உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக கருதி துபாய் போலீஸ், உடலை உடனே இந்தியாவிற்கு அனுப்பிவைக்கவில்லை.

ஸ்ரீதேவியின் கணவரிடம் துருவித்துருவி விசாரணை நடத்தியது. இந்திய அரசு கொடுத்த அழுத்தத்தின் மூலமே ஸ்ரீதேவியின் உடலை சீக்கிரம் இந்தியாவிற்கு கொண்டுவர முடிந்தது.

ஸ்ரீதேவி மது போதையில் இருக்கும்போது குளியலறைத் தொட்டியில் இருந்த நீரில் மூழ்கி இறந்ததாக ஒரு செய்தி பரவியது.

ஸ்ரீதேவியின் கணவர் கொலை செய்ததாகவும், அதனால் துபாய் போலீஸ் விசாரணை செய்ததாகவும் மற்றொரு செய்தி பரவியது.

இருப்பினும் ஸ்ரீதேவியின் உடல் அரசு மரியாதையுடன் மும்பையில் அடக்கம் செய்யப்பட்டது. அத்துடன் அந்த சர்சைகளும் ஓய்ந்தது.

தற்பொழுது மலையாள கண்ணழகி ப்ரியா பிரகாஷ் வாரியார் நடித்த புதிய படத்தின் ட்ரைலர் பொங்கல் அன்று வெளியானது.

அந்த படத்தின் பெயரே ஸ்ரீதேவி பங்களா. படத்தில் ஸ்ரீதேவி என்ற பெயரில் நடித்துள்ளார். மை, மையில் என ஒரு குழந்தையிடம் சொல்கிறார்.

மது அருந்திவிட்டு அரைநிர்வாணமாக குளியலறையில் அழுவதுபோன்றும், இறந்து கிடப்பது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

ஒரு ஆதார் லவ் என்ற படத்தில் கண்ணடித்த காட்சி மூலம் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆனார்.

தற்பொழுது  ஸ்ரீதேவியாக நடித்து கோலிவுட், பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

உண்மையில் இப்படம் ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று படமாக இருக்க வாய்ப்பில்லை. பரபரப்பிற்காக காட்சிகள் வைக்கப்பட்டு இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

3

சூப்பர் எர்த்: 2-வது சூரிய குடும்பம், பூமி கண்டுபிடிப்பு!

0
சூப்பர் எர்த்

சூப்பர் எர்த்: 2-வது சூரிய குடும்பம், 2-வது பூமி கண்டுபிடிப்பு! புதிதாக கண்டறியப்பட்ட சூப்பர் எர்த்தில் வேற்று கிரகவாசிகள் வசிக்க வாய்ப்பு அதிகம்.

நமது சூரிய குடும்பத்திற்கு மிகஅருகில் உள்ள இரண்டாவது நட்சத்திரக் குடும்பம் (milky way galaxy) இதுவாகும்.

இந்த இரண்டாவது நட்சத்திரக் குடும்பத்திற்கு ரெட் டுவர்ஃப் என்று பெயரிட்டுள்ளனர். இந்த சூரிய குடும்பத்தில் ஒரு பூமி போன்ற கோள் சுற்றி வருகின்றது.

அந்தக் கோளிற்கு பர்னார்ட் பி (barnard b or GJ 699 b) என்று பெயரிட்டுள்ளனர். இக்கோளானது பூமியை விட மூன்று மடங்கு அதிக எடைகொண்டது.

பர்னார்ட், ரெட் டுவர்ஃப் நட்சத்திரத்தை 233 நாட்களுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது. பர்னார்ட் பி கோளானது சூப்பர் எர்த் என்று அழைக்கப்படுகிறது.

இதன் வெப்பநிலையானது, மைனஸ் 150-170 டிகிரி செல்சியஸ் ஆகும். இவ்வளவு கடும் குளிரிலும் அதன் மையப்பகுதி சூடாக உள்ளது.

சூப்பர் எர்த்தின் மையப்பகுதியில் சூடான இரும்பு மற்றும் நிக்கல் போன்ற தனிமங்கள் இருப்பதால் கோளின் வெப்பநிலை அதிகரித்து (geothermal heating) உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் ஏற்பட்டு வருகிறது.

இந்த தகவலை அமெரிக்க வில்லநோவா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இக்கோள் பற்றிய ஆராய்ச்சிகள் 20 வருடமாக நடந்து வருகிறதாம்.

பர்னார்ட் பி கோளின் ரெட் டுவர்ஃப் நட்சத்திரம் நமது சூரியனை விட வயதில் பெரியது. இரண்டு மடங்கு அதிக வயதைக் கொண்டுள்ளது.

நமது சூரியனின் வயது  4.6 பில்லியன் வருடங்கள். ரெட் டுவர்ஃப் நட்சத்திரத்தின் வயது 9 பில்லியன் வருடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பர்னாட் பி நட்சத்திரக் குடும்பத்தில், நமது பூமியின் அளவுள்ள கோள்கள் நாம் எதிர்பார்ப்பதை விட மிகவும் தொலைவில் அமைந்துள்ளன. அவற்றை அடைய கிட்டதட்ட 5 ஒளியாண்டுகள் ஆகும்.

எட்வர்ட் கினான் இதுகுறித்து கூறியதாவது,

ஜியோதெர்மல் வெப்பத்தால் தான் அண்டார்டிகா கண்டத்தின் ஏரிகளில் உயிரினங்கள் வாழ்கின்றன.

மேலும் வியாழன்கோளின் யுரோப்பா நிலவின் வெப்பநிலையும் (jupiter’s icy moon europa) பர்னார்ட் பி கோளின் வெப்பநிலையும் ஏறத்தாழ ஒரே அளவாகும்.

டைடல் ஹீட்டிங்க் (tidal heating) மூலம் கடலின் மேற்பகுதி திரவமாகவும் அடிப்பகுதி பனிக்கட்டி ஆகவும் காணப்படுகிறது.

வரும் காலங்களில் சூப்பர் எர்த் மிகப்பெரிய தொலைநோக்கியால், பூமியில் இருந்தே பார்க்க இயலும் என்று இயற்பியல் வல்லுனர் எட்வர்ட் கினான் கூறியுள்ளார்.

அவர், இக்கோள் பற்றி 20 வருடங்களாக ஆராய்ச்சி நடப்பதாகக் கூறியுள்ளார். எனவே, வெளியில் தெரியாமல் பல ஆராய்ச்சிகள் ரகசியமாக நடைபெறுவது இதன்மூலம் புலப்படுகிறது.

3

செஸ் போட்டி: 12 வயது தமிழக சிறுவன் கிராண்ட் மாஸ்டர்

0
செஸ் போட்டி

செஸ் போட்டி: 12 வயது தமிழக சிறுவன் கிராண்ட் மாஸ்டர்

தமிழகத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் குகேஷ் என்பவர் கிராண்ட் மாஸ்டர் பட்டதைப் பெற்றுள்ளார்.

இதற்குமுன், பிரக்யானந்தா என்ற சிறுவன் 12 வயது 10 மாதங்கள் 13 நாட்களே ஆனா நிலையில் கிராண்ட் மாஸ்டர் படத்தை வென்றார்.

இவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். 2018-ம் ஆண்டு இவர், இந்தச் சாதனையைப் புரிந்தார். தற்போது, அதை குகேஷ் முறியடித்துள்ளார்.

12 வயது 7 மாதங்கள் 17 நாட்களே ஆனா குகேஷ், இந்தியாவின் இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்று வந்த சர்வதேச செஸ் போட்டியில், 9-வது சுற்றில் வெற்றி பெற்றபோது, கிராண்ட் மாஸ்டர் பட்டதை அடைந்தார்.

ஆனால், உலக அளவில், ரஷ்யாவின் செர்ஜை கர்ஜாகின் என்ற வீரர் முதலிடத்தில் உள்ளார். 12 வயது 7 மாதங்களிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெற்றுவிட்டார்.

3

வேலைக்காரப் பெண்ணா பதறிய லதா ரஜினிகாந்த்!

0
வேலைக்காரப் பெண்ணா

வேலைக்காரப் பெண்ணா பதறிய லதா ரஜினிகாந்த்!

பணக்காரர்களாக இருப்பதில் கூட பிரச்சனை இல்லை. ஆனால் பிரபலங்களாக இருந்தால், இங்கு இடுக்குகளில் இருந்துகூட பிரச்சனை என்கிற பூதம் கிளம்பிவிடும்.

சமீபத்தில் ரஜினிகாந்த் குடும்பத்துடன் 2.0 படம் பார்க்க தியேட்டருக்குச் சென்றார். அந்தப் புகைப்படம் இணையத்தில் வெளியானது.

அந்தப் புகைப்படத்தில் ரஜினி, மனைவி மற்றும் பேரக்குழந்தைகள் அமர்ந்து இருந்தனர். பின்னால், வேலைக்காரப்பெண் நின்றுகொண்டு இருந்தார் .

பிறகு என்ன வேண்டும். நெட்டிசன்கள், பலி ஆடு தானாக வந்து சிக்கிவிட்டது என பொறிந்து தள்ளினர்.

ரைட் இது முடிந்த பழைய கதை. சமீபத்தில் பேட்ட படத்தைப் பார்க்க லதா ரஜினிகாந்த் கிளம்பியுள்ளார்.

வேலைக்காரப் பெண்ணும் நானும் வருகிறேன் எனக் கிளம்பியுள்ளார். உடனே பதறிப்போன லதா, அய்யோ நீ வரவேணாம் எனக் கூறியுள்ளார்.

உனக்கு தனியா வேணுனா டிக்கெட் எடுத்து தரேன் போய் பார்த்துட்டு வா எனக் கூறியுள்ளார்.

நீ பாட்டுக்கு வந்து, திரும்ப யாராவது போட்டோ எடுத்துட்டா பஞ்சாயத்து ஆயிடும் என லதா ரஜினிகாந்த் மறுத்துள்ளார்.

3

ரஜினி-அஜித்: தோனிக்கு ஈடுகொடுக்க முடியுமா?

0
ரஜினி-அஜித்

ரஜினி-அஜித்: தோனிக்கு ஈடுகொடுக்க முடியுமா?

தல இந்த சொல்லுக்கு உரியவர் அஜித். அது சினிமாவில் மட்டும் தான். உலக அளவில் தலையாக மாறியவர் தோனி.

விஜய் ரசிகராக இருந்தாலும், அஜித் ரசிகராக இருந்தாலும் முகம் கோணாமல், மனதார தல எனக் கூப்பிடும் நபர் தோனி.

தோனி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த போட்டியில், அரைச்சதத்துடன் ஒரு சிக்சர் அடித்து போட்டியை நிறைவு செய்தார்.

இதைச் சிறப்பிக்கும் வகையில், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி, ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

வீடியோவை பார்த்தவுடன் ஒரு நிமிடம் மெய்சிலிர்த்துவிட்டது. சூப்பர் ஸ்டாருக்கு நிகர் சூப்பர் ஸ்டார் என்பதையே ஒரு நிமிடம் உரசிப் பார்த்துவிட்டார் தோனி.

‘நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’ பேட்டையில் ரஜினி என்ட்ரி கொடுப்பதுபோல், வீடியோவில் தோன்றியுள்ளார் தோனி.

அப்படியே பேட்ட படத்தின் ட்ரைலரை உல்டாவாக மாற்றியுள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினி ஆஸ்தான லோகோ, ‘கேப்டன் கூல் தோனி’ என மாறியுள்ளது.

அடுத்து தல என்ற வார்த்தை பின்னணியில் இருக்க தூக்கி அடிக்கின்றார் பந்தை. ரஜினியும், அஜித்தும் ஒன்றாக ஓருடலானால் எப்படி இருக்கும்!

அப்படி இருந்தது! தோனியின் தோற்றம். வீடியோ மாஸ் வைரலாகி வருகின்றது. வீடியோவைப் பார்த்தால் நமக்கே நாடி நரம்புகள் முறுக்கேறுகின்றது.

வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பார்க்கவும்

3