Home Blog Page 322

ஒரு ரவுண்டுக்கு 16 கோடி: அம்பானி குடும்ப ரகசியம்!

0
ஒரு ரவுண்டுக்கு

ஒரு ரவுண்டுக்கு 16 கோடி: அம்பானி குடும்ப ரகசியம்!

அம்பானி வீட்டில் உள்ள ஒரு நபர், ஒரு முறை வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்ப ஆகும் செலவு 16 கோடி ரூபாய்.

எப்படி இவ்வளவு செலவு ஆகிறது?

அம்பானியின் குழந்தைகள் வீட்டிலிருந்து வெளியில் செல்லும் பொழுது 16.55 கோடி  மதிப்புள்ள சொகுசு கார்கள் பின்தொடர்கின்றது.

ஆசிய கண்டத்தின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் 61 வயதான முகேஷ் அம்பானி. உலகின் விலை உயர்ந்த பல கார்களுக்குச் சொந்தக்காரர்.

இவருடைய குழந்தைகள் ஒரு முறை வீட்டிலிருந்து வெளியே எங்காவது செல்ல வேண்டுமெனில், பலகோடி மதிப்புள்ள பல அதிநவீன பாதுகாப்பு கார்களுடன் தான் வெளியே செல்லுகின்றனர்.

  • பெண்ட்லி பேண்டைகா (2 கார்கள்) – ரூபாய் 7.56 கோடி
  • லண்ட் ரோவர் டிஸ்கவரி (4 கார்கள்) – ரூபாய் 1.78 கோடி
  • லண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் (1 கார்கள்) – ரூபாய் 52 லட்சம்
  • ஃபோர்ட் எண்டிவர் (6 கார்கள்) – ரூபாய் 1.57 கோடி 
  • லண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர்  ஸ்போர்ட்  (3 கார்கள்) –  ரூபாய் 3.45 கோடி
  • பி‌எம்‌டபிள்யு (5 கார்கள்) – ரூபாய் 1.67 கோடி 

இவற்றின் மொத்த மதிப்பு 16.55 கோடி ஆகும்.

முதல் இரண்டு கார்களில் மட்டுமே அம்பானியின் குடும்பம் பயணிக்கும். மற்ற அனைத்துக் கார்களுமே பாதுகாப்புக்காக செல்லும் கார்கள்.

அனைத்துக் கார்களுமே அதி நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கார்கள். இது வெறும் காரின் செலவு தான்.

அவர்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்கள். காரின் எரிபொருள் செலவு. வெளியில் தங்கும் செலவு. ஷாப்பிங் செலவு இதெல்லாம் தனி.

3

நிலவில் தாவரம்: மெய்சிலிர்க்க வைத்த ஆசிய தேசம்!

0
நிலவில் தாவரம்:

நிலவில் தாவரம்: வாயடைத்துப்போன உலக விஞ்ஞானிகள்!

விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் முதல் முறையாக நிலவில் ஒரு தாவரச் செடி முளைக்க வைக்கப்பட்டுள்ளது.

‘தி மார்சின்” படத்தில் ஒரு காட்சி இருக்கும். செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் ஹீரோ அங்கேயே சிக்கிக்கொள்ள நேரிடும்.

இதனால் உணவுக்காக உருளைக்கிழங்கை முளைக்க வைத்து அதை உண்டு உயிர் வாழ்வார்.

இதேபோன்று விண்வெளி கிரகங்களில் தாவரங்களை முளைக்க வைக்கும் முயற்சியை பல நாடுகள் மேற்கொண்டது. எல்லா நாடுகளின் முயற்சிகளுமே தோல்வியில் முடிந்தது.

தற்பொழுது சீனா விஞ்ஞானிகள் நிலவில் தாவரத்தை முளைக்க வைத்து சாதனை படைத்துள்ளனர்.

சாங்-இ4 என்ற ரோபோ ஆய்வு விண்கலம் மூலம், நிலவுக்குக் கொண்டுசெல்லப்பட்ட தாவர விதைகள் முளைத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

நிலவில் முதன்முதலில் உயிரின வளர்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலக விஞ்ஞானிகள் அனைவரும் சீனாவின் முயற்சிக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

நிலவின் இருளான பகுதியிலேயே இந்த முயற்சியை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளனர். இந்த முயற்சி செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்புவதற்கு உதவும்.

ஜனவரி 3-ம் தேதி நிலவில் தரையிறங்கிய சீனாவின் விண்கலத்தில் பருத்தி விதை, உருளைக்கிழங்கு எடுத்துச் செல்லப்பட்டது.

ஈஸ்ட் மற்றும் பழ ஈக்களின் முட்டை அடங்கிய மண்ணில் இந்த விதைகள் முளைக்க வைக்கப்பட்டுள்ளன.

விண்வெளியில் முதன் முதலில் தோன்றிய தாவரம் என்ற சிறப்பை பருத்திச்  செடி பெற்றுள்ளது.

3

மெரினாவில் கூடவுள்ள 2 லட்சம்பேர்: போலீசார் பலத்த பாதுகாப்பு

0
மெரினாவில்

மெரினாவில் கூடவுள்ள 2 லட்சம்பேர்: போலீசார் பலத்த பாதுகாப்பு

பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்வர். மாட்டுப்பொங்கலுக்கு மாடுகளை வணங்குவர். காணும் பொங்கலுக்கு?

காணும் பொங்கலை இயற்கை அழகுடன் கொண்டாடுவதே வழக்கம். குறிப்பாக சென்னையிலேயே பெரும்பாலும் கொண்டாடப்படுகிறது.

மெரினா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி உயிரியல் பூங்கா, கோல்டன் பீச் போன்ற இடங்களில் மக்கள் கூடுவது வழக்கம்.

காலையில் குடும்பத்துடன் கூடும் மக்கள்,  தங்களுக்கான உணவுகளை சமைத்து எடுத்துச் செல்வர். இல்லையேல் அங்கேயே சமைக்கவும் செய்வர்.

இந்த வருடம் மெரினாவில், காணும் பொங்கலை ரசிக்க 2 லட்சம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதனால் கூட்டத்தை கட்டுபடுத்த, அசம்பாவிதங்களை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடலில் இறங்கி குளிக்க எப்போதும்போல் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலில் மக்கள் இறங்குவதை தடுக்க பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.

6 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குதிரைப்படை வீரர்களும் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

குழந்தைகள் காணமல்போவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தைகள் கையில், பெற்றோரின் மொபைல் எண்கள் கட்டப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட உள்ளனர்.

3

ஒரே நேரத்தில் மூன்று தூக்குதுரை: அதிரவைத்த ரசிகர்கள்!

0
ஒரே நேரத்தில் மூன்று தூக்குதுரை

ஒரே நேரத்தில் மூன்று தூக்குதுரை: அதிரவைத்த ரசிகர்கள்!

ஜல்லிக்கட்டு காளை ஒரு புறம் காளையர்களை தூக்கி அடிக்க, இன்னொரு புறம் மகேந்திர சிங் தோனி பந்தை தூக்கிஅடிக்க, தியேட்டரில் விஸ்வாசம் ஹிட் அடிக்க…

ஒரே நேரத்தில் எத்தனை அடிக்க. ஒரே நேரத்தில் மூன்று தூக்குதுரைகள் மாறி மாறி இன்ப வெள்ளத்தில் நனைய வைத்துவிட்டனர் இந்த வருட பொங்கலில்…

சென்ற ஆட்டத்தில் தோனி அடிக்கவில்லை. அவ்வளவு தான் “வேல்ர்ட் கப்” வரை “பாடி” தாங்காது என இஷ்டத்துக்கு கலாய்த்தனர்.

இன்று மரண காட்டு காட்டி, திகிலுடனும் திகைப்புடனும் வெற்றிக் கனியைப் பறித்து தந்துள்ளார் தோனி.

எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் எல்லா போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிவிட முடியாது. எல்லோருக்குமே ஒரு சரிவு இருக்கத்தான் செய்திருக்கிறது.

ஒரு போட்டியில் விளையாடவில்லை எனில் அந்த வீரரின் வீட்டில் கல்லெடுத்து அடிப்பதே நம் ரசிகர்களின் வழக்கமாகிவிட்டது.

சமூக வலைத்தளம் வந்தபின் நேராக டிவிட்டருக்குச் சென்று சம்பந்தப்பட்டவரை டாக் செய்து கலாய்ப்பது வாடிக்கையாகி விட்டது.

இதுமிகவும் வேதனையான விஷயம். அஜித், தோனி இருவருக்குமே இது பொருந்தும். இருவருக்கும் விமர்சனங்கள் புதிதல்ல.

3

சபரிமலைக்குள் நுழைந்த பெண்: அடித்து துவைத்த மாமியார்!

0
சபரிமலைக்குள் நுழைந்த பெண்

சபரிமலைக்குள் நுழைந்த பெண்: அடித்து துவைத்த மாமியார்!

சமீபத்தில் சபரிமலைக்குள் அதிகாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஐயப்பன் கோவிலுக்குள் சென்று இரு பெண்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அதற்கு முன்னர் பகலில் பெண்கள் குழுவாக சென்றபோது, ஐய்யப்ப பக்தர்களால் அடித்து விரட்டப்பட்டனர்.

அதன்பின் அங்கேயே முகாமிட்டு போலீஸ் பாதுகாப்புடன் கனகதுர்காவும், சிந்துவும் உள்ளே நுழைந்தனர். இது கேரளா முழுவதும் பலத்த சர்ச்சையைக் கிளப்பியது.

பெரும்பாலான பெண்களே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் போலீஸ் பாதுகாப்பில் தங்கவைக்கப்பட்டனர்.

போலீஸ் பாதுகாப்பில் இருந்து கொண்டு பெண்ணியத்தை நிலைநாட்டியதாக பல்வேறு பத்திரிக்கைகளுக்கு போஸ் கொடுத்து விளம்பரம் தேடிக்கொண்டனர்.

ஜனவரி 2-ம் தேதி கனக துர்கா, பிந்து என்ற இரு பெண்கள் கோவிலுக்குள் சென்றுவிட்டு மறைமுகமாக கேரளாவிற்குள்ளேயே பதுங்கியிருந்தனர்.

இந்நிலையில் சர்சைகள் ஓரளவு ஓய்ந்துவிட்டதாக கருதி நேற்று போலீஸ் பாதுகாப்புடன் வீடு திரும்பினர்.

கனக துர்கா வீடு திரும்பியதும், அவருடைய மாமியார் மற்றும் உறவினர்கள் வீட்டிற்குள் கதவை சாத்தி வெளு வெளுவென்று வெளுத்துள்ளனர்.

பலமாக தாக்கப்பட்டு படுகாயமடைந்த அவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

வெளியில் இருந்து அச்சுறுத்தல் வரும் என எதிர்பார்த்து வாசலில் காவலுக்கு இருந்த போலீசார், வீட்டிற்குள் மாமியாரே பொளந்து கட்டியதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சபரிமலைக்குள் நுழைய நினைத்த அனைத்துப் பெண்களுக்கும் இது அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கனகதுர்கா கூறியதாவது, “காலையில்தான் வீட்டிற்குச் சென்று கதவை தட்டினேன். என் மாமியார் உருட்டுக் கட்டையுடன் வந்து 12 முறை தலையில் அடித்து, தரதரவென இழுத்து வெளியே வீசினார் எனப் புகார் தெரிவித்துள்ளார்.

ஆனால், அவரது மாமியார் வீல் சேரில் சென்று மருத்துவமனையில் படுத்துள்ளார். கனக துர்கா தான் என்னைத் தாக்கிவிட்டார் என மாமியார் கூறியுள்ளார்.

3

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: திக் திக் நிமிடங்கள்

0
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு:

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: திக் திக் நிமிடங்கள்

ஜல்லிக்கட்டு என்றாலே உலக அளவில் பிரபலமானவை மதுரை மாவட்டத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள்.

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று ஊர்களில் நடக்கும் ஜல்லிக்கட்டை காண உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் வருகின்றனர்.

தற்பொழுது, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

மொத்தம் 636 காளைகள் களமிறக்கப்பட உள்ளன. 500 மாடுபிடி வீரர்கள் மாடுகளைப் பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

1000-ற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மருத்துவக் குழுவும் அங்கு முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

காயமடையும் வீரர்களுக்கு ஒரு குழுவும், கால்நடைகளுக்கு ஒரு மருத்துவக் குழுவும் சிகிச்சை அளித்து வருகின்றது.

உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டால் மருத்துவமனை கொண்டு செல்ல, ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளது.

இதுவரை 17 மாடுபிடி வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவக்குழு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றது.

ஜல்லிக்கட்டில் மாடுகள் வெளிவரும்போது பார்பவர்களுக்கே பயத்தை உண்டு செய்கின்றது. அந்த அளவிற்கு ஆக்ரோசமாக சீறுகின்றன.

3

விஜய்க்கு விரித்த வலை; சிக்கியது ரஜினி

0
விஜய்க்கு விரித்த வலை

விஜய்க்கு விரித்த வலை; சிக்கியது ரஜினி

பேட்ட படத்துடன் விஸ்வாசம் ஏன் ரிலீஸ் ஆனது. திட்டமிடப்பட்டே ரஜினியுடன் மோதியதா? என்ற கேள்விக்குப் படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன் பேட்டி கொடுத்துள்ளார்.

விஸ்வாசம் படம் முதலில் தீபாவளிக்கு வெளியிடவே முடிவு செய்தோம். ஆனால் தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தம் காரணமாக ரிலீஸ் செய்யத் தாமதமாகிவிட்டது.

அதன்பிறகு பொங்கலுக்கு ரிலீஸ் செய்து கொள்ளலாம் என முடிவு செய்தோம். அங்கும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

ரஜினி நடித்த பேட்ட படத்தைப் பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துவிட்டனர். ரஜினியுடன் மோதும் நிலை தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.

எனவே இதுகுறித்து சன்பிக்சர் நிறுவனத்திடம் பேச்சு வார்த்தை நடத்தினோம். அவர்களும் பொங்கலுக்கு வருவதில் உறுதியாக இருந்தனர்.

ரஜினியை ஹீரோவாக வைத்து 6 படங்கள் தயாரித்துவிட்டேன். இதனால் கொஞ்சம் தர்ம சங்கடமாகவே இருந்தது.

இது திட்டமிட்ட மோதல் அல்ல. சினிமா ஸ்ட்ரைக் மட்டும் இல்லை எனில் விஜய்யுடன் தான் மோதி இருப்போம் எனக் கூறினார்.

3

காம்பீர், சேவாக், சச்சின்: மூவரையும் ஓரம் கட்டியவர் தோனி!

0
காம்பீர்

காம்பீர், சேவாக், சச்சின்: மூவரையும் ஓரம் கட்டியவர் தோனி!

இந்தியாவின் துவக்க ஆட்டக்காரர் என்றால் அது கவுதம்காம்பீர், சேவாக் கூட்டணியே. அதிரடிக்குப் பஞ்சம் இருக்காது.

சேவாக்-காம்பீர் கூட்டணி 10 ஓவர்கள் ஒன்றாக நின்று விட்டால், எதிரணி பவுலர்கள் கதிகலங்கிவிடுவர். அதன் பிறகு அவர்களின் அடி ஒவ்வொன்றும் இடி போன்று இருக்கும்.

சேவாக், காம்பீர் மற்றும் சச்சின் மூவரும் அவுட் ஆகிவிட்டால் ரசிகர்கள் டிவியை ஆப் பண்ணும் அளவிற்கு நம்பிக்கை வீரர்களாக விளங்கினர்.

காம்பீர்-சேவாக், இருவரதும் இறுதி நாட்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை. குறிப்பாக கவுதம்காம்பீர் முற்றிலும் இந்திய அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார்.

இதற்கு காரணம் தோனியே என அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இதுகுறித்து முதல் முறையாக மௌனம் கலைத்துள்ளார் காம்பீர்.

கவுதம்காம்பீர் கூறியதாவது, 2012-ல் ஆஸ்திரேலியாவில் நடந்த சிபி தொடரின்போது சச்சின், சேவாக் மற்றும் என்னை அணியில் ஆடவைக்க முடியாது என தோனி முடிவு செய்தார்.

ஒரே நேரத்தில் மூவரையும் அணியில் சேர்க்க முடியாது எனத் தெரிவித்தார். தொடக்க வீரர்கள் சரியாக ஆடவில்லை. இதனால் தோல்வியைத் தழுவுகின்றோம்.

உங்கள் மூவரால் இளம் வீரர்களை அணியில் சேர்க்க முடிவதில்லை. 2015 உலக கோப்பை போட்டிக்கு அணியைத் தயார் செய்ய வேண்டும்.

இவ்வாறு கூறி மூவரையும் ஓரம் கட்டினார். இது எனக்கு அதிர்ச்சியளித்தது. 2015-ல் நடக்கும் உலகக் கோப்பைக்கு 2012-ல் முடிவு செய்வது எப்படி எனக் கேட்டேன்?

ஆனால், அவர் எடுத்த முடிவு தவறானது. நாங்கள் இல்லாத அணி தொடர் தோல்விகளைத் தழுவிவந்தது.

எங்கள் மூவரையும் ஒன்றாக களமிறக்கினார். சச்சினும் சேவாக்கும் துவக்க ஆட்டக்காரர்களாகவும், நான் மூன்றாவதாகவும் களமிறங்கினேன்.

இலங்கைக்கு எதிரான அப்போட்டியில் அபார வெற்றி பெற்றோம். இதனால் தோனி,  அவருடைய முடிவை மாற்றிக்கொண்டார்.

மூவரும் ஒன்றாக ஆடக்கூடாது என்ற முடிவு தவறா? இல்லை, மூவரையும் ஒன்றாக களமிறக்கியது தவறா? எனக் கோபமாக பதிலளித்திருந்தார்.

அதேவேளை, நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். ஒரே அறையில் ஓய்வு எடுத்துள்ளோம். இருவருக்கும் இடையே நல்ல உறவு நீடித்தது.

இருவருக்கும் இடையே பகை உள்ளது என வெளியான செய்திகள் எல்லாம் வெறும் வதந்தியே எனவும் தெரிவித்திருந்தார்.

3

யோகிபாபு ஜாலம்: டாப்பு டக்கர் ஹீரோயின்களுடன் வலம்

0
யோகிபாபு

யோகிபாபு ஜாலம்: டாப்பு டக்கர் ஹீரோயின்களுடன் வலம். yogi babu with many actress. யோகி பாபு காதல் திருமணம், டான்ஸ் என கலக்கல்.

யோகிபாபு தமிழின் முன்னணி காமெடி நாடிகராக உருவாகிவிட்டார். நயன்தாராவின் காதலனாக நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்கள் என்றாலும் வளர்ந்து வரும் நடிகர்கள் படம் என்றாலும் யோகிபாபு இல்லாமல் இல்லை.

இந்த வருடம் 17 படங்களுக்கு மேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தர்ம ராஜா, குர்கா, ஜாம்பி ஆகிய படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஏ.எல் விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள படம் ‘வாட்ச்மேன்’. சம்யுக்தா ஹெக்டே படத்தின் நாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்திற்கு புரோமோஷன் சாங் ஒன்று இயக்கப்பட உள்ளது. ஜி.வி. இசையில் நடிகை சாயிஷாவுடன் இணைந்து யோகி பாபு நடனம் ஆடுகிறார்.

சாயிஷா, சூர்யாவுடன் ‘காப்பான்’ படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. சண்டி முனி என்ற படத்திலும் யோகி பாபு, நடிகைக்கு தாலி கட்டுவது போன்ற படங்கள் வெளியாகியுள்ளது.

யோகி பாபு ஜாலம், கண்டு சக காமெடி நடிகர்களே பொறாமையில் உள்ளனராம்.

3

தோனியும் ரசிகையும்: ஆஸ்திரேலியாவில் நடந்த அற்புதம்!

0
தோனியும் ரசிகையும்

தோனியும் ரசிகையும்: ஆஸ்திரேலியாவில் நடந்த அற்புதம்!

தோனியின் மிகப்பெரிய ரசிகை 87 வயதான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எடித் நார்மன். மூதாட்டியிடம் தோனி நடந்து கொண்ட விதம் அனைவராலும் ரசிக்கும்படி இருந்தது.

முன்னாள் இந்தியா அணியின் கேப்டன் தோனி, பணிவுக்கும், அன்புக்கும், அடக்கத்திற்கும் பெயர் போனவர் என்பது அனைவரும் அறிந்ததே.

இதன் காரணமாகவே “கேப்டன் கூல்” என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்டார்.

இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடச் சென்றது.

டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி, ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியது.

இந்திய அணி வீரர்கள் சிட்னி மைதானத்தில் வலைப்பயிற்சி செய்துகொண்டு இருக்கும்போது 87 வயதான ‘எடித் நார்மன்’ என்ற மூதாட்டி தோனியைக் காண மகனுடன் மைதானத்திற்கு வந்திருந்தார்.

தோனிக்கு தகவல் தெரிந்ததும் இருவரும் உட்கார்ந்து நீண்ட நேரம் உரையாடிக்கொண்டு இருந்துள்ளார்கள்.

இருவர் முகத்திலும் புன்னகை மலர்ந்துகொண்டே இருந்தது. அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இணயத்தில் வைரலாகி வருகின்றது.

நார்மன் கூறியதாவது, “நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக என்னை உணர்கிறேன் எந்த தடையும் இன்றி தோனியுடன் உரிமையுடன் பேசியதாக உணர்கிறேன்” என்று கூறினார்.

இது குறித்து நார்மன் மகன் கூறியதாவது, “இது மிகவும் சிறப்பான ஒரு நிகழ்வு. கிரிக்கெட் சாம்பவான் டான் பிராட்மேன் காலத்திலிருந்து கிரிக்கெட் பார்த்து வரும் என் தாய், இப்பொழுது விளையாடும் ஒரு கிரிக்கெட் வீரரின் மிகப்பெரிய ரசிகையாக இருப்பது ஆச்சரியமான ஒன்று எனக் கூறியுள்ளார்.

3