Home Blog Page 323

தோல்வி பயம்: ராகுலைப் பார்த்து பயப்படும் பாஜக!

0
தோல்வி பயம்

தோல்வி பயம்: ராகுலைப் பார்த்து பயப்படும் பாஜக!

ராகுல்காந்தியை, ஒரு தமிழ் சிறுமி கேள்வி கேட்டு மிரள வைத்ததாகவும், அவர் சிவகங்கையைச் சேர்ந்த சிறுமி.

இச்செய்தி ஆங்கில ஊடகங்கள் முதல், தமிழ் ஊடங்கள் வரை பகிரப்பட்டது. ஒரு உறுதிப்படுத்தப்படாத செய்தியை எப்படி முன்னணி ஊடகங்கள் பகிர்ந்தன.

பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள், ராகுல்காந்தி பேசிய அரங்கில் உள்ளனர். பல தலைவர்கள் அமர்ந்துள்ளனர்.

பல்வேறு ஊடகங்கள் அங்கு வந்துள்ளனர். இவர்களையும் மீறி, இவர்கள் கண்ணில்படாமல், ஒரு சிறுமி ராகுல் காந்தியைக் கேள்வி கேட்டுள்ளது.

அந்த நேரலையை நிறுத்தி விட்டார்களாம். எப்படி இது சாத்தியம்? மொபைல் இல்லாத நபர் துபாயில் உண்டா?

சிறுமியின் உறவினர்கள் அவள் பேசியதை வீடியோ எடுக்கவில்லையா. ஒரு ஊடகம் கூட இதைக் கவனிக்கவில்லையா?

இப்படிச் சாதாரணமானவர்களுக்கே இவ்வளவு கேள்விகள் மனதிற்குள் தோன்றுகின்றது. ஆனால், முன்னணி ஊடகங்கள் போலியான செய்தி எனத் தெரிந்துகொண்டே அதை வெளியிட்டுள்ளனர்.

முதலில் இந்த வீடியோவைப் பாருங்கள் உண்மை என்ன என்பது புரியவரும்.

இப்படி ஒரு போலிச்செய்தியை பரப்பியது முழுக்க முழுக்க பாஜகவும், ஒரு சமூக அமைப்பினைச் சேர்ந்தவர்கள் என தற்பொழுது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

மேல் சமூக அமைப்பினருக்கு சாதகமான இட ஒதுக்கிட்டை பாஜக அறிவித்துள்ளது. அதை தக்கவைத்துக்கொள்ள மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே முடியும்.

எனவே, பாஜகவை எப்படியாவது ஆட்சிக்கு கொண்டுவர நினைத்ததின் விளைவே இப்படி போலிச் செய்திகளை வெளியிடத் தூண்டியுள்ளது.

மேலும், அந்த ஊடகங்கள் இதுவரை மறுப்பு செய்தி வெளியிடவில்லை. காரணம், செய்திவெளியிட்ட அனைத்து ஊடகங்களிலுமே பணிபுரிவது ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

திட்டமிட்டு பரப்பப்பட்ட செய்திக்கு எப்படி மறுப்பு தெரிவிப்பார்கள்? அப்படியே தெரிவித்தாலும் ஏதாவது ஒரு மூலையில் துணுக்குச் செய்தியாகப் போடுவார்கள்.

3

வாட்ஸ்ஆப்பை ஓபன் செய்ய இனி கைரேகை தேவை!

0
வாட்ஸ்ஆப்பை ஓபன்

வாட்ஸ்ஆப்பை ஓபன் செய்ய இனி கைரேகை தேவை!

வாட்ஸ்ஆப் செயலியில் கூடிய விரைவில் கைரேகை பூட்டு (Fingerprint Lock) அம்சம் வரப்போவதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் வாடிக்கையாளர்கள் தங்களுடைய தகவல்களை எளிதாக பாதுகாக்க இயலும். ஆண்ட்ராய்ட் மொபைல் போனில் முதலில் கொண்டு வரப்போவதாக தெரிவித்துள்ளது.

உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்படும் உடனடித் தகவல் அனுப்பும் செயலி வாட்ஸ்ஆப் ஆகும்.

தற்பொழுது பேஸ்புக்கு சொந்தமான இந்த செயலியில் 100 கோடி பயனாளர்கள் இருக்கின்றனர்.

பெரும்பாலான வாட்ஸ்ஆப் பயனாளர்கள் லாக் செய்வதற்கு  மூன்றாம் பார்ட்டி செயலிகளையே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த அம்சமானது இனி உங்கள் செயலியிலயே வழங்கப்படும். இதன் மூலம் எளிதாக உங்கள் அனைத்து தகவல்களையும் பாதுகாக்க இயலும்.

வாட்ஸ்ஆப் பீட்டா ஆண்ட்ராய்ட் 2.19.3 

வாட்ஸ்ஆப் பீட்டா பயனாளர்கள் மட்டுமே இப்போதைக்கு இந்த அம்சத்தை பயன்படுத்த இயலும்.

உங்களுடைய ப்ரைவசி செட்டிங்கில் இந்த அம்சத்தை ஆக்டிவேட் செய்ய இயலும். உங்களுடைய கைரேகயை உங்கள் போன் லாக்கிற்கு செட் செய்ததுபோல் செட் செய்யவேண்டும்.

ஆப்பிள் போன்களில் வாட்ஸ்ஆப் பீட்டா பயனாளர்கள், டச் மற்றும் முக ஐடி (face lock) கொண்டு லாக் மற்றும் அன்லாக் செய்ய இயலும்.

பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் செயலியில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த இந்த அம்சம் கொண்டு வந்ததாக நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3

யுபிஐ – ஒரு நொடியில் பணம் அனுப்புவது எப்படி?

0
யூபிஐ upi

யுபிஐ முறையில் நீங்கள் ஒரு நிறுவனத்துக்கோ அல்லது தனி நபருக்கோ கார்ட் எண், சி‌வி‌வி எண், அக்கவுண்ட் எண் அல்லது ஐஃப்எஸ்சி கோட் இல்லாமல்கூட ஒரு நொடியில் பணம் அனுப்ப இயலும்.

நேஷனல் பேமெண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் அறிக்கையின் படி யுபிஐ முறையின் மூலம் இதுவரை 1 ட்ரில்லியன் ரூபாய் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

யுபிஐ – (UPI)

கடந்த 2016ஆம் ஆண்டு யு‌பி‌ஐ பணப்பரிமாற்ற முறை அறிமுகமானது அப்பொழுது, தனிநபர்களின் அக்கவுண்டுக்கு மட்டுமே பணம் பரிமாற்றம் செய்ய இயலும்.

கடந்த இரண்டு வருடங்களில் எதிர்பாராத அளவுக்கு யு‌பி‌ஐ முறையை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

ஆன்லைனில் நீங்கள் பொருட்கள் வாங்குவது, கட்டணம் செலுத்துவது, நிறுவனத்திற்கு பணம் செலுத்துவத்துவது போன்ற அனைத்து செயல்களும் இதில் நீங்கள் மிகவும் எளிமையாக  செய்ய இயலும்.

2018ஆம் ஆண்டுகளில் பெரும்பலான நிறுவனங்கள் யு‌பி‌ஐ முறையை தங்களுடன் இணைத்துக்கொண்டனர்.

ஐ‌ஆர்‌சி‌டி‌சி, ஒயோ ரூம்ஸ், பூக்மைஷோ, அமேசான், பேடிம் மற்றும் போன்பே   போன்ற அனைத்து நிறுவனங்களும் யு‌பி‌ஐ முறையை தங்களுடன் இணைத்துக்கொண்டனர்.

வெறும் யு‌பி‌ஐ ஐ‌டி இருந்தால் மட்டுமே நீங்கள் எளிதாக பணத்தை அனுப்பலாம். உங்களுடய வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் உங்கள் கார்ட் எங்களைவைத்துப் பதிவுசெய்து நீங்கள் உங்கள் யு‌பி‌ஐ ஐ‌டி‌யை பெறலாம்.

name@bankname அல்லது phonenumber@upi இந்த வரிசையில் உங்கள் யு‌பி‌ஐ ஐ‌டி உருவாகி இருக்கும்.

அதை நீங்கள் பதிவு செய்து உங்களுக்குக்குத் தேவையான பணத்தை தேர்வு செய்து அனுப்பினால் சில வினாடிகளில் பணப்பரிமாற்றம் நடக்கும்.

உங்கள் மொபைல் போனின் செயலியிலயே நீங்கள் எளிதாக பணத்தை அனுப்ப இயலும். பிம், கூகுள் பே போன்ற செயலிகள் இதற்காகவே கொண்டு வரப்பட்டவை.

3

15-20 வினாடிகள் நான் திகைத்துப்போய் விட்டேன் – சுப்மன் கில் 

0
15-20 வினாடிகள்

15-20 வினாடிகள் நான் திகைத்துப்போய் விட்டேன் – சுப்மன் கில்

கடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இதில் எல்லோராலும் அதிகமாகப் பேசப்பட்ட இருவீரர்கள் கேப்டன் பிரிதிவ் சா, துணை கேப்டன் சுப்மன் கில்.

பிரிதிவ் சா ஏற்கனவே இந்திய அணியில் மேற்கிந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக பங்கேற்றார். அதிலும் சிறப்பாக செயல்பட்டார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பயிற்சியின் போது  எதிர்பாராத விதமாக காயமடைந்து பங்கேற்க முடியாமல் நாடு திரும்பினார்.

நியூசிலாந்து அணிக்கு எதிராக தேர்வு செய்யப்பட்டதை, தன்னுடைய போனில் பார்த்தவுடன் 15 முதல் 20 வினாடிகள் திகைத்துப் போனதாக கில் கூறியுள்ளார்.

இரவு 1 மணிக்கு தனக்கு வாட்ஸ்ஆஃப் செயலியில் விஜய் சங்கர், ஹார்த்திக் பாண்ட்யாவுக்கு பதிலாகவும்; சுப்மன் கில், கே‌.எல். ராகுலுக்குப் பதிலாகவும்  தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல் வந்ததாக கூறியுள்ளார்.

பஞ்சாப்பை சேர்ந்த 19 வயதான கில் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றார்.

ரஞ்சி கிரிக்கெட்டில் 9 இன்னிங்சில் 728 ரன்களும் சராசரி 104.00 தியோதார் போட்டியில் 3 இன்னிங்சில் 168 ரன்களும் எடுத்துள்ளார்.

கே‌.எல். ராகுலின் இடைக்காலத்தடை சுப்மன் கில்க்கு எளிதாக வழி வகுத்தது. ஏற்கனவே கில், லிஸ்ட் A போட்டிகளில் சராசரி 50 மற்றும் முதல் வகுப்பு போட்டிகளில் சராசரி 80க்கு மேல் வைத்துள்ளார்.

ஏற்கனவே இந்திய அணியின் மிடில் ஆர்டர் கொஞ்சம் பலவீனமாக இருக்கிறது. கில் சிறப்பாக செயல்பட்டால் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள உலகக்கோப்பையிலும் பங்கேற்க வாய்ப்புள்ளது.

3

ராகுல்காந்தியை மிரள வைத்த சிறுமியின் வீடியோ

0
ராகுல்காந்தியை மிரள

ராகுல்காந்தியை மிரள வைத்த சிறுமியின் வீடியோ

ராகுல்காந்தியை ஒரு தமிழ் சிறுமி கேள்வி கேட்டு மிரள வைத்ததாகவும், அவர் சிவகங்கையைச் சேர்ந்த சிறுமி.

அவருக்கு துபாய் சங்கம் விருது அறிவித்துள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது என இந்த செய்தியை முதலில் Tnnews24 என்ற இணையதளம் வெளியிட்டது.

அதன்பிறகு ஆசியா நெட் தமிழில் இந்த செய்தி வெளியிடப்பட்டது. அதன்பிறகு தினமலர் இணையதளத்திலும் இச்செய்தி வெளிவந்தது.

இந்த மூன்று இணையத்திலும் செய்தியை எடிட் செய்யாமல் அப்படியே வெளியிட்டனர்.

ஒரே செய்தி எப்படி எடிட் செய்யாமல் பெரிய இணையதளத்தில் வந்தது  என மிஸ்டர் புயல் ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது ஒரு உண்மை தெரிந்தது.

அந்தப் புகைப்படத்தில் உள்ளவர் சித்தி பாபே. அவர் வட இந்தியாவை சேர்ந்த சிறுமி தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மேடைப்பேச்சு வீடியோவை வைத்து ஒரு கட்டுக்கதையை கிளப்பி உள்ளனர்.

புரளி கிளப்பிய அந்த இணைய தளத்தின் லோகோ காவி நிறத்தில் உள்ளது. அப்படியெனில் புரளியைக் கிளப்பியது யார் என உங்களுக்குத் தெரிந்திருக்கும்…

3

ராகுல்காந்தியை மிரள வைத்த 14 வயது தமிழ் சிறுமி

0
ராகுல்காந்தியை மிரள வைத்த

ராகுல்காந்தியை மிரள வைத்த 14 வயது தமிழ் சிறுமி.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இரண்டு நாள் பயணமாக துபாய் சென்றுள்ளார். துபாய் இளவரசரை நேற்று சந்தித்துப் பேசினார்.

அன்று மாலை, துபாயில் உள்ள இந்தியர்கள் முன்னிலையில் மேடையில் தோன்றிப் பேசினார். இதை காங்கிரஸ் ஐ.டி. விங் சமூக வலைதளத்தில் லைவ் செய்தது.

ராகுல் விழாவில் பல்வேறு விசயங்கள் குறித்துப் பேசினார். குறிப்பாக பாஜகவைத் தாக்கிப் பேசினார்.

இந்தியாவில் மதவாதம் அதிகரித்துவிட்டது. மோடியை இந்தியாவில் இருந்து அகற்ற வேண்டும் எனக்கூறி உங்களுடைய கருத்து என்ன என மக்களைப் பார்த்துக் கேட்டார்.

உடனே பலர் கையைத் தூக்கினர். அவர்களில் ஒரு சிறுமியும் கையத் தூக்கியுள்ளார். இதைக் கவனித்த ராகுல்காந்தி சிறுமியிடம் முதலில் மைக்கை கொடுக்க கட்டளையிட்டார்.

வணக்கம் என அந்த சிறுமி கூறிய பின்பே தமிழ் சிறுமி என அனைவருக்கும் தெரிந்தது. அவர் சிவகங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

இலங்கைத் தமிழர் படுகொலை ஆவணப் படத்தைப் பார்த்த நாள் முதலே காங்கிரஸ் மீது தீரக் கோபத்தில் இருந்ததாக நிகழ்சிக்குப்பின் தெரிவித்துள்ளார்.

இத்தனை நாள் இருந்த கோபத்தை தான் நான், ராகுலிடம் கேள்விகளாகக் கேட்டேன் எனவும் கூறியுள்ளார்.

பவித்ரா கேட்ட முதல் கேள்வி:

இந்தியாவில் மதவாதம் அதிகரித்து உள்ளதாக கூறிய நீங்கள் குஜராத் தேர்தல் என்றால் பட்டை அடித்துக்கொண்டு கோவிலுக்குள் செல்கிறீர்கள். அதுவே, காஷ்மீர் தேர்தல் என்றால் குல்லா அணிந்து கொண்டு மசூதிக்குள் செல்கின்றீர்கள் ஏன்?

ராகுல் காந்தியின் பதில்,

உடனே ராகுல் சுதாரித்துக்கொண்டு, அனைத்து மதத்தினரும் சமம் என்பதை உணர்த்தவே, அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்கின்றேன். விரைவில் சமத்துவமான இந்தியாவை உருவாக்குவேன் எனப் பதிலளித்தார்.

பவித்ரா கேட்ட இரண்டாவது கேள்வி:

இந்தியா சுதந்திரம் பெற்று, 80% ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியில் இருந்தது. இத்தனை வருடம் செய்யாததை இப்போது எப்படிச் செய்யப் போகின்றீர்கள் எனக் கேட்டார்.

முதல் கேள்விக்கு நாசுக்காக பதிலளித்த ராகுலுக்கு இந்த கேள்விக்குப் பதில் கூற முடியாமல் சிரித்து சமாளிக்கத் துவங்கிவிட்டர். இதை புரிந்துகொண்ட ஐ.டி.விங் நேரலையை நிறுத்தியது.

சிறுமி விடுவதாய் இல்லை

மோடியின் ஆட்சிக்குபின்பே வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு முறையான அங்கீகாரம் கிடைத்துள்ளது எனவும் மதவாதத்தை ஒழிப்போம் எனக் கூறி ஓட்டுக்கேட்காமல் ஊழல் இல்லா ஆட்சியைத் தருவோம் எனக் கூறுங்கள் எனக் கோரிக்கை வைத்தார்.

சிறுமி கர்ஜனைகளுக்கு இடையை ராகுல் காந்தியின் மேடை அதிர கைதட்டல்கள் கிடைத்துள்ளது.

சிறுமி என்று தானே என ராகுல் போட்ட கணக்கு தவறாகிப்போனது. இந்த அவமானம் ராகுல் காந்தியின் அரசியல் பிரவேசத்தில் ஏற்பட்ட பெரிய கரும்புள்ளி.

ராகுல் காந்தியை பஸ்பமாக்கிய பவித்ராவிற்கு, துபாய் தமிழ் சங்கம் விருது ஒன்றை அறிவித்துள்ளதாம்.

3

ஜல்லிக்கட்டு எங்கு, எப்போது, எப்படி நடக்கும்?

0
ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு எங்கு, எப்போது, எப்படி நடக்கப்போகிறது? ஜல்லிக்கட்டு போட்டிக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டுகள் மிகவும் பிரபலம்.

மதுரை மாவட்டத்திலேயே இந்த மூன்று ஊர்கள் இருப்பது கூடுதல் சிறப்பு. சென்ற வருட ஜல்லிக்கட்டு தடை நீக்கத்திற்கு பிறகு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் முறையே 15, 16, 17 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கென பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற்றுள்ளது. மொத்தம், 848 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எப்படித் தேர்வு செய்தனர்?

  • மாடுபிடி வீரர்கள் வயது தகுதி 18 முதல் 40 வரை மட்டுமே.
  • சீரான உடற்தகுதி கொண்டிருக்க வேண்டும்.
  • 150 செ.மீ. உயரமும் அதற்கு அதிகமாவும் இருக்கவேண்டும்.
  • உயரத்திற்கு ஏற்ற எடை இருக்கவேண்டும்.
  • இரத்தப் பரிசோதனை செய்திருக்க வேண்டும்.

போட்டிக் களத்தின் விதிமுறை

  • வீரர் மது அருந்துதல் கூடாது.
  • மாடுகளுக்கு போதை மருந்து செலுத்தக்கூடாது
  • ஒரே சீருடையில் இருக்க வேண்டும்.
  • மாடுகளை அடிக்கவோ, துன்புறுத்தவோ கூடாது.
  • ரத்தப்பரிசோதனை, மது பரிசோதனை செய்த பின்பே களத்திற்குள் நுழைய வேண்டும்.

இப்படி பல்வேறு விதிமுறைகளும், சோதனைகளும் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்களின் பெயரில் காப்பீடும் செய்யப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் போட்டியை அமர்ந்து பார்க்க வசதியாக கூடுதல் இருக்கை வசதிகளுடன் மேடை அமைக்கப்பட்டுள்ளதாம்.

ஜல்லிக்கட்டுப் போட்டி நீதிமன்ற வழிகாட்டுதலின் படியே நடக்க உள்ளது. மாடுகளை துன்புறுத்துவோர், விதிமுறைகளை மீறுவோர் உடனே போட்டிக் களத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.

நேரடியாக போட்டியைக் காண முடியாதவர்கள் தொலைக்காட்சிகளின் நேரலை மூலம் போட்டியைக் கண்டுகளிக்கலாம்.

3

ஆன்லைன் பணப்பரிவர்த்தனை: ரிசர்வ் வங்கி அதிரடி திருத்தம்

0
ஆன்லைன் பணப்பரிவர்த்தனை

ஆன்லைன் பணப்பரிவர்த்தனை: இந்திய ரிசர்வ் வங்கியின் சீர்திருத்தங்கள் பற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நீங்கள் பேடீஎம், ஃபோன்பே, கூகுள் பே அல்லது வங்கிகளின் செயலிகளை உபயோகிப்பவரா? கட்டாயம் இதைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

ரிசர்வ் வங்கி இணையத்தில் மோசடி செய்து பணம் திருடும் கும்பலிடம் இருந்து நுகர்வோரை பாதுகாக்க பல்வேறு மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் கொண்டு வந்துள்ளது.

1. அனைத்து மொபைல் வாலெட் நிறுவனங்களும் ஒவ்வொரு பணப்பரிமாற்றத்தின் போது வரும் தகவலில், புகார் செய்வதற்கான எண் கட்டாயம் குறிப்பிட்டிருக்க வேண்டும். மர்ம நபர்களால் பணம் திருடப்பட்டால், புகார் செய்வதற்க்கு இது ஏதுவாக இருக்கும்.

2. அனைத்து மொபைல் வாலெட் நிறுவனங்களும் பணப்பரிமாற்றத்தின்போது தகவலை உகந்த நுகர்வோருக்கு அனுப்பவேண்டும். நுகர்வோர்கள் அனைவரும் கட்டாயம் தங்கள் மொபைல் எண்ணை வங்கிக்கணக்குடன் இணைத்தால் மட்டுமே, மர்ம நபர்கள் பணம் திருடும்போது தடுக்கவும் புகார்செய்யவும் முடியும்.

3. மொபைல் வாலெட் நிறுவனங்கள் 24/7 வாடிக்கையாளர் சேவை மையத்தை வைத்திருக்கவேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. அப்பொழுது தான் தவறு நடந்த உடனே நடவடிக்கை எடுக்க இயலும்.

4. மொபைல் வாலெட்டில் ஒரு நுகர்வோர் எதிர்பாராத விதமாக மோசடி கும்பலிடம்  பணத்தை இழந்தால், அவருக்கு நிறுவனமே  மொத்தப் பணத்தையும் திருப்பிக் கொடுக்க வேண்டும். அவர் இதை தகவல் மூலமோ அல்லது மெயில் மூலமோ  புகார் செய்து இருந்தால் 3 வேலை நாட்களுக்குள் திருப்பி அளிக்க வேண்டும்.

5. சந்தேகத்திற்கு உட்பட்ட பணப்பரிமாற்றம் எதுவும் நடந்து நுகர்வோர் புகார் செய்யாமல் இருந்தாலும் மொபைல் வாலெட் நிறுவனம் பணத்தை திருப்பி நுகர்வோர் வாலெட்டுக்கு அனுப்ப வேண்டும்.

6. 4 முதல் 7 நாட்களுக்குள் நுகர்வோரால் புகார் அளிக்கப்படும் பொழுது பண மதிப்பு 10000 ரூபாய் அல்லது அதற்கு குறைவாக இருக்கும்போது நிறுவனம் அதைத்திருப்பி அளிக்க வேண்டும்.

7. ஏழு நாட்களுக்கு பிறகு கொடுக்கப்படும் புகார்களுக்கு நிறுவனத்தின் விதிமுறைகளின்படி திருப்பிக் கொடுக்கலாம்.

8. அனைத்துக் குற்றங்களும் புகார் செய்த 10 நாட்களுக்குள் உகந்த தீர்வு காணப்பட வேண்டும்.

9. அனைத்து புகார்களும், தவறு யார் பக்கம் இருந்தாலும் சரி.  அது நுகர்வோரோ அல்லது நிறுவனமாகவோ இருக்கட்டும் அதிகபட்சம் 90 நாட்களுக்குள் சரி செய்யப்பட வேண்டும்.

10. 90 நாட்களுக்குள் புகார் சரி செய்யப்படவில்லை எனில் நுகர்வோர் இழந்த அனைத்துப் பணத்திற்கும் முழுப்பொறுப்பு நிறுவனமே. அந்நிறுவனமே நுகர்வோர் இழந்த பணத்தை திருப்பி அழிக்க வேண்டும்.

11. கே‌ஒய்‌சி வெரிபிக்கேசன் (KYC- Know Your Customer) செய்யாத எந்த ஒரு நுகர்வோரும் பிப்ரவரி 2019க்கு பிறகு மொபைல் வாலெட் செயலியை பயன்படுத்த இயலாது.

12. இந்த கே‌ஒய்‌சி வெரிபிகேசன் மூலம் வருகிற மார்ச் மாதத்திற்கு பிறகு வல்லுனர்களின் கணிப்பின் படி 95% மொபைல் வாலெட் நுகர்வோர்கள் தங்களுடைய செயல்பாட்டை நிறுத்த வாய்ப்புள்ளது.

3

ஒரு ட்விட்டில் ஹிந்தியரை கிறுகிறுக்க வைத்த தமிழன்!

0
ஒரு ட்விட்டில்

ஒரு ட்விட்டில் ஹிந்தியரை கிறுகிறுக்க வைத்த தமிழன்!

தமிழகத்தைச் சேர்ந்த ஆப்ரகாம் சாமுவேல், அமெரிக்கா செல்வதற்காக மும்பை விமான நிலையம் சென்றுள்ளார்.

அப்போது குடியுரிமை அதிகாரி ஒருவர், இவரிடம் ஹிந்தியில் பேசி உள்ளார். இவர், எனக்கு ஹிந்தி தெரியாது எனக் கூறியுள்ளார்.

உடனே அந்த அதிகாரி, “அப்போ தமிழ் நாட்டுக்குப்போயி ப்ளைட் ஏறு. ஹிந்தி தெரியலன இங்க ஏன் வந்த தமிழ்நாட்டுக்கே போ” எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஆப்ரகாம் விமானநிலைய மேலதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். அப்போதும் அந்த அதிகாரி ஹிந்தி தெரியாத இவர தமிழ்நாட்டுக்குப் போகச்சொல்லுங்க என தென்வெட்டாக கூறியுள்ளார்.

அதன்பிறகு மேலதிகாரி, ஆப்ரகாமை வேறு கவுண்டருக்கு அனுப்பியுள்ளார். விமானத்திற்கு நேரமாகிவிட்டதால் இதைப்பற்றி புகாராக தெரிவிக்காமல் சென்று விட்டார்.

இந்தச் சம்பவம் 8-ம் தேதி இரவு 1 மணிக்கு நடந்துள்ளது. அதன்பிறகு இதைப்பற்றி ட்விட்டரில் எழுதியுள்ளார்.

நான் இந்தியனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். அதைவிட தமிழனாக இருப்பதை பெருமையாக நினைக்கிறன்.

தேசியக்கட்சிகள் மாநிலத்தில் காலூன்ற முடியாமல் போவதற்கு இதுவே காரணம் என ட்விட் மேல் ட்விட் தட்டிவிட்டுள்ளார்.

நரேந்திர மோடி, சுஸ்மா சுவராஜ், மு.க.ஸ்டாலின் ஆகியோரையும் பல போலீஸ் உயர் அதிகாரிகளையும் டாக் செய்துவிட்டார்.

அவ்வளவுதான் இவ்விசயம் நெருப்பாக பற்றிக்கொண்டது. ட்விட்டரில் ஆதரவுகள் பெருகியது. சம்பந்தப்பட்ட அந்த அதிகாரியும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஹிந்தியை உயர்த்துவதாக நினைத்து தற்பொழுது அவப்பெயரைச் சந்தித்துள்ளார்.

இந்தியன் என்ற ஒற்றுமையை நிலைநாட்டுவதை விடுத்து, ஹிந்தி திணிப்பை செலுத்த நினைப்பதன் விளைவே இதுபோன்ற மொழிப் பாகுபாடிற்கு வழிவகுக்கிறது.

3

ஹார்த்திக், ராகுல்: மனைவியைக் காக்க ஹர்பஜனின் முடிவு!

0
ஹார்த்திக், ராகுல்

ஹார்த்திக், ராகுல்: மனைவியைக் காக்க ஹர்பஜனின் முடிவு!

ஹார்திக் பாண்ட்யா மற்றும் கே‌.எல்.ராகுல் இருவரும் செல்லும் பேருந்தில் பயணிக்க மாட்டேன் என ஹர்பஜன் சிங் அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

ஹார்த்திக், ராகுல் சர்ச்சை கருத்து:

சமீபத்தில் டி‌.வி. நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியக் கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஹார்திக் பாண்ட்யா மற்றும் கே‌.எல்.ராகுல் பதிலளித்த விதம் பல்வேறு சர்ச்சைக்கு உள்ளானது.
.
காஃபீ வித் கரன் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இருவரும் பெண்களைப் பற்றி முரண்பாடான பதில்களைக் கூறினர்.

குறிப்பாக, பாண்ட்யா பதிலளித்த விதம் வெறுக்கும்படி இருந்தது. பெண்களைப் பற்றி இழிவாகவும், மரியாதையில்லாமலும், கிண்டல்செய்து கருத்துக் கூறியிருந்தார்.

இது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது.

கோலி பேட்டி:

கோலி இருவர் குறித்தும் பேட்டியளித்ததாவது, இந்திய அணி இந்நிகழ்வைப் பற்றி எந்தவொரு முடிவையும் இதுவரை எடுக்கவில்லை. இருவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்குத் தேவையில்லை.

இந்திய அணியுடன் இருவரும் தங்க வேண்டாம் எனப் பேட்டியளித்துள்ளார்.

பி‌சி‌சி‌ஐ முடிவு:

இரு வீரர்களையும் தற்காலிகமாக போட்டியில் விளையாட தடைசெய்து உள்ளது. யார் அனுமதியுடன் இவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் என்றும் கேள்வி எழுப்பியது.

இருவரும் இந்தியா வந்ததும் தனிக்கமிட்டி அமைத்து விசாரிக்கப்போவதாக தெரிவித்துள்ளது.

ஹர்பஜன்சிங் கருத்து:

என்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள் என்னுடன் வரும்போது அவர்களைப் பாதுகாக்க, ஹார்த்திக்குடனும் ராகுலுடன் பேருந்தில் பயணிக்கவோ, உரையாடவோ மாட்டேன்.

ஹார்திக் பாண்ட்யாவின் இச்செயலால் ஓட்டுமொத்த இந்திய அணி வீரர்களும் வருத்தப்படும் அளவிற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்குமுன் எந்த வீரரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது இல்லை எனக் கூறினார்.

3