Home Blog Page 324

இஸ்லாமியப் பெண்ணிற்காக இரு நாடுகள் பகை!

0
இஸ்லாமியப் பெண்ணிற்காக

இஸ்லாமிய பெண்ணிற்காக இரு நாடுகள் பகை! கனடா, சவுதி அரேபியா இடையான நல்லுறவு பாதிப்பு.

ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன் என்ற 18 வயதான சவுதி குடியுரிமை பெற்ற பெண் தாய்லாந்து வழியாக ஆஸ்திரேலியா தப்பிச்செல்லத் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், தாய்லாந்து விமானநிலையத்தில் அதிகாரிகளால் தடுக்கப்பட்டு, சொந்த நாட்டிற்குத் திரும்பிச்செல்ல வலியுறுத்தப்பட்டார்.

பாஸ்போர்ட் பறிமுதல்

ரஹாப்பின் பாஸ்போர்ட்டை சவுதி தூதரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனால் விமான நிலைய விடுதியின் அறைக்குள் சென்று தாளிட்டுக்கொண்டார்.

தான் இஸ்லாமிய மதத்தை துறந்துவிட்டதாகவும், பெற்றோரை பார்க்க விரும்பவில்லை எனவும் கூறி சொந்த நாட்டிற்குச் செல்ல மறுத்துள்ளார்.

ட்விட்டர் பவர்

அவரிடம் இருந்த செல்போன் மூலம் 5-ம் தேதி ட்விட்டர் கணக்கைத் துவங்கியுள்ளார். அவருடைய சூழலை விளக்கி ட்விட் செய்துள்ளார்.

6-ம் தேதி மாலை 17,000 பேர் பின்தொடர்ந்துள்ளனர். 7-ம் தேதி மதியம் 57,000 பேர். 8-ம் தேதி 90,000 பேர் எனப் பின்தொடர்வோர் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துவிட்டது.

உலக அளவில் ரஹாஃப் கவனிக்கதக்க நபராக மாறினார். 3 நாட்களாக ரஹாஃப் அறையைவிட்டு வெளியில் வர மறுத்துவிட்டார்.

ஐநா ஆதரவு

அதன்பின்பே, ஐ.நா. இந்த விசயத்தைக் கையில் எடுத்தது. ரஹாப்பிற்கு அகதி அந்தஸ்து வழங்கியது. ஆஸ்திரேலியாவைப் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அடைக்கலம் கொடுக்க கேட்டுக்கொண்டது.

ரஹாப்பிற்கு அடைக்கலம் கொடுத்தால் அநேகம் பேர் ஆஸ்திரேலியாவை நோக்கி வருவார்கள் எனவும் சவுதியை பகைத்துக்கொள்ள நேரிடும் எனவும் தயங்கியுள்ளது.

கனடா ஆதரவுக் கரம்

இந்நிலையில் கனடா நாடு, ஐ.நா. வேண்டுகோளின்படி  ரஹாப்பிற்கு  அகதி அந்தஸ்து வழங்கியுள்ளது.

இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது, “உலகளவில் மனித உரிமைகளுக்காவும், பெண்களின் உரிமைகளுக்காகவும் ஆதரவளிப்பதில் கனடா உறுதியாக உள்ளது.

ரஹாஃப் மொஹம்மத் அல்-குனனுக்கு அகதிகள் அந்தஸ்து வழங்குவதற்கு ஐ.நா. எங்களிடம் கேட்டுக்கொண்டது, அதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்” எனத் தெரிவித்தார்.

பெண்களின் உரிமைகளுக்காக போராடி கைதானவர்களை, விடுதலை செய்யவேண்டும் எனவும் சௌதி அரேபியாவிற்கு கனடா பிரதமர் கோரிக்கை வைத்தார்.

சவுதி அரேபியா கோபம்

இதனால், ஆத்திரமடைந்த சவுதி அரேபிய அரசு, சவுதி அரேபியாவில் இருந்த கனடத் தூதரை வெளியேற்றியது. கனடா தொடர்பான அனைத்துப் புதிய வர்த்தகங்களையும் முடக்கியது.

ரஹாஃப் மொஹம்மத், உலக அளவில் பரபரப்பான நபராக மாறிவிட்டார். ஒரு பெண்ணால் இருநாடுகள் பகையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

3

அலோக் வர்மா ராஜினாமா செய்தது ஏன்?

0
அலோக் வர்மா ராஜினாமா

அலோக் வர்மா ராஜினாமா செய்தது ஏன்? அடுத்தடுத்து நடக்கும் அதிரடி திருப்பங்கள்.

சி.பி.ஐ. இயக்குனராக பதவி வகித்த அலோக்குமார் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அலோக் வர்மா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அலோக் வர்மா கட்டாய விடுப்பு வழக்கை விசாரித்த நீதிபதிகள், வர்மா தொடர்ந்து பணிபுரியலாம். அவரைக் கட்டாய விடுப்பில் அனுப்ப யாருக்கும் அதிகாரம் கிடையாது எனத் தீர்ப்பளித்தனர்.

இத்தீர்ப்பை தொடர்ந்து, மோடி தன்னுடைய இல்லத்தில் நியமனக்குழுவைக் கூட்டினார். அதில் பிரதமர் மோடி, நீதிபதி ஏ.கே.சிக்ரி, எதிர்கட்சி சார்பில் மல்லிகார்ஜுனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அக்கூட்டத்தில் சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து ஆலோக் வர்மாவை நீக்குவது எனவும் அதற்கு பதிலாக தீயணைப்பு துறையின் இயக்குனராக நியமிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, அலோக் வர்மா தீயணைப்பு துறை இயக்குனர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மத்திய பணியாளர் செயலகத்துக்கு எழுதிய கடிதம் பின்வருமாறு, “இன்றோடு தன்னுடைய பணிக்காலம் முடிந்துவிட்டதாக கொள்ளுங்கள். இயக்குனர் பதவிக்கான வயது வரம்பை, நான் ஏற்கனவே கடந்துவிட்டேன்” என எழுதியுள்ளார்.

3

பேட்ட திரைவிமர்சனம் – நஞ்சாகூ ரஜினியின் பேட்ட

0
பேட்ட திரைவிமர்சனம்

பேட்ட திரைவிமர்சனம் – நஞ்சாகூ ரஜினியின் பேட்ட

பேட்ட படம் பார்க்க, தியேட்டருக்கு வந்த 40 வயதில் இருந்து 80 வயது உள்ள ரசிகர்கள் பலர் எழுந்து ஆடி உற்சாகமாகக் கொண்டாடிய படம்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய ரஜினியைப் பார்த்த ரசிகர்கள், தங்களின் இளவயதுக்கு சென்று ஆடிப்பாடி குதித்துவிட்டனர்.

முதல் பாதி

முதல் பாதியில் ஒருபுறம் ரஜினி பூஸ்ட் கொடுக்க, இன்னொரு பக்கம் சிம்ரன் கிறுகிறுக்க வைக்கிறார்.

சீமராஜாவுல, ‘எப்படி இருந்த சிம்ரன் இப்டி ஆயிட்டாங்களே’ என சீமக்கோழிய, சீக்குகோழி ரேஞ்சுக்கு மொக்கை பண்ணி வைத்திருந்தனர்.

ஆனால், பேட்ட படத்தில் சிம்ரனை இளமையாகவும், கிளாமராகவும் ரசிக்கும்படியாக காட்டியிருந்தனர். அடுத்து ஒரு ரவுண்டு இருக்கு.

ஹாலிவுட் படங்களில் மட்டுமே 40 வயதுக்கு மேற்பட்ட நடிகைகளை கவர்ச்சிக்கும், கதையின் நாயகியாகவும் நடிக்க வைப்பார்கள்.

தமிழ் சினிமாவிலும் அதைச் சாத்தியப்படுத்தி அனைவரையும் ரசிக்கும்படியாக சிம்ரன் கதாப்பாத்திரத்தை வடிவமைத்த கார்த்திக் சுப்புராஜூக்கு பாராட்டுக்கள்.

ரஜினியை இவ்வளவு இளமையாக காட்ட அவருடைய துடிப்பு மட்டுமே போதாது, இன்றைய தொழில்நுட்பம் முழுக்க முழுக்க கைகொடுத்துள்ளது.

அதுவும் குறிப்பாக அவர் “நஞ்சாகூ” சுற்றும் விதம் மிகச்சிறப்பு. கிராபிக்ஸ் என்றாலும் மிகவும் நேர்த்தியாக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எடுத்துள்ளனர்.

ரஜினி, சிம்ரன் மற்றும் சனத் இவர்களைத் தவிர மற்ற எந்தக் கதாப்பாத்திரத்திற்கும் படத்தில் ஸ்கோப் இல்லை.

ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பதற்காகவே நடித்துள்ளனர். விஜய் சேதுபதி, த்ரிஷா, சசிகுமார், பாபி சிம்ஹா ஆகியோர் அந்தக் கதாப்பாத்திரங்களுக்குத் தேவையே இல்லை.

இத்தனை வருட சினிமா வாழ்வில் ரஜினியுடன் நடிக்கவேண்டும் என முட்டி மோதிப் பார்த்த த்ரிஷாவின் கனவு கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நிறைவேறி உள்ளது.

இரண்டாம் பாதி

முதல் பாதியில் எழுந்து ஆடிய ரசிகர்கள் இரண்டாம் பாதியில் கை தட்டலைக் காண்பதே அரிதாக இருந்தது.

ஒரு கட்டத்தில், வில்லன் நவாசுதினைக் கொலை செய்தவுடன் படம் முடிந்தது. ஆளை விட்டால் போதும் எனப் பாதி ரசிகர்கள் எழுந்து ஓடிவிட்டனர்.

ஆனால், அதற்குப் பிறகும் ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளனர். அது ரசிக்கும் படியாகக்கூட இல்லை. எதுக்கு இந்த ட்விஸ்ட் என முகம் சுழிக்கும் படியாகவே இருந்தது. நவாசுதினைக் கெத்தாக அறிமுகம் செய்து மொக்கையாக முடித்துள்ளனர்.

90-ல் இருந்த ரஜினியின் வேகத்தைப் பார்க்க முடிந்தது. ஆனால் அவருடைய தைரியத்தைப் பார்க்க முடியவில்லை.

மருந்துக்கூட ஒரு தைரியமான நேரடி அரசியல் வசனங்கள் இல்லை. பொத்தாம் பொதுவாகவே அரசியல் பேசியுள்ளார்.

மொத்தத்தில் பேட்ட நஞ்சாகூ ரஜினியின் பேட்ட

3

விஸ்வாசம் ரிலீஸ்: முதியவரைத் தாக்கிய அஜித் ரசிகர் அஜித் கைது!

0
விஸ்வாசம் ரிலீஸ்
இப்படம் விஸ்வாசம் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம்

விஸ்வாசம் ரிலீஸ்: முதியவரைத் தாக்கிய அஜித் கைது!

விஸ்வாசம், பேட்ட நள்ளிரவு முதலே திரையிடப்பட்டு வருகிறது. இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரை நடந்த அசம்பாவிதங்கள் ஒரு பார்வை.

காத்து வாங்குகிறது பேட்ட

பேட்ட திரைப்படம் சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டுமே கூட்டம் காணப்படுகிறது. மற்ற திரையரங்குகளில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே ரசிகர்கள் வந்துள்ளனர்.

விஸ்வாசம் கூட்டத்தை ஒப்பிட்டால் பேட்டயின் கூட்டம் பாதி தான்…

ரஜினி ரசிகர் திருமணம்

பேட்ட படம் ரிலீஸ் ஆன தியேட்டரிலே ரசிகர் ஒருவர் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

ராயப்பேட்டை தியேட்டரில் உட்லாண்ட்ஸ் தியேட்டரில்  பலூன்களைப் பறக்கவிட்டு மணமகள் கழுத்தில் தாலியைக் கட்டி ஜோடியாக படம் பார்த்துள்ளார்.

அஜித் ரசிகர் அஜித் கைது

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கீழச்சூர் திரையரங்கில் விஸ்வாசம் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.

அங்கு ஏராளமான ரசிகர்கள் நள்ளிரவே குவிந்துள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த பாண்டியன் மகன் அஜித், படத்தைப் பார்க்க ஆர்வமுடன் கிளம்பியுள்ளார்.

தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்துள்ளார். அஜித் என பெயர் வைக்கத் தெரியும் பணம் தர மாட்டியா என பெட்ரோலை ஊற்றி தீவைக்க முயன்றுள்ளார்.

அக்கம் பக்கத்தினர் பாண்டியனின் அலறல் சத்தம்கேட்டு, அவரைக் காப்பாற்றியுள்ளனர். வயதில் முதியவர் என்று கூட பாராமல் முதியவரைத் தாக்கியதால் போலீசார் அஜித்தை கைது செய்தனர்.

பேனர் கிழிப்பு

விஸ்வாசம் படத்தை முதலில் திரையிடாமல் பேட்ட படத்தை திரையிட்டதற்காக அஜித் ரசிகர்கள் ரோகினி தியேட்டரில் பேட்ட படத்தின் பேனரை கிழித்துள்ளனர்.

பேனர் கவிழ்ந்தது

அநேக தியேட்டரில் அஜித் கட்டவுட் மற்றும் பால் ஊற்ற மேலே ஏறியதில் பேனர் மற்றும் சாரங்கள் சரிந்துள்ளன.

போக்குவரத்து நெரிசல்

விஸ்வாசம் படம் திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்கள் அருகில் உள்ள சாலைகளில் கூட்ட நெரிசல். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

1 கோடி ரூபாய் டிக்கெட்

பல்வேறு திரையரங்குகளில் டிக்கெட் விலை 1000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சில தொலைக்காட்சியில், ஒரு கோடி டிக்கெட் விலை என்றாலும் நாங்கள் வாங்கிப் பார்ப்போம் எனப் பேட்டி கொடுத்துள்ளனர்.

அஜித் படம் வெளியாவதே ஒரு திருவிழா. திருவிழா நேரத்தில் வெளியானால் சம்பவம் இல்லாமல் இருக்குமா? தர தப்பட்டை கிழியுது ஒவ்வொரு திரையரங்கிலும்..

 

எங்களுடைய வாட்ஸ்ஆப் குழுவில் இணைய கிளிக் செய்யவும்

join whatsapp group

3

Movie Review Sigai – சிகை திரைவிமர்சனம்

0
Movie Review Sigai

Movie Review Sigai – சிகை திரைவிமர்சனம்

விஸ்வாசம், பேட்ட இந்த இரண்டு படங்கள் தான் பொங்கலுக்கு ரிலீஸ் என இருந்த நிலையில் சத்தமில்லாமல் யுத்தமில்லாமல் பொங்கலுக்கு வெளியாகியுள்ள படம் சிகை.

இப்படம் திரையரங்கில் வெளியாகவில்லை. படத்தை ZEE5 ஆப்பில் வெளியிட வேண்டும் என முன்கூட்டியே திட்டமிடப்பட்டே எடுக்கப்பட்டுள்ளது.

நபருக்கு 120 செலுத்தி குடும்பத்துடன் படம் பார்க்க பலர் தயாராக இல்லை. இந்த நேரத்தில், சிகை படம் நேரடியாக ஆன்லைனில் வெளியாகியுள்ளது வரவேற்கத்தக்கது.

படம் எப்படி?

படம் வித்தியாசமான படங்களை பார்பவர்களுக்குப் பிடித்தமாக இருக்கும். திருநங்கைகள், பாலியல் தொழிலாளிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்.

பாலியல் தொழிலாளியாக ரித்விகா நடித்துள்ளார். இதுபோன்ற கதாபாத்திரத்தில் தைரியமாக நடித்ததற்கே ஒரு ஸ்பெஷல் பாராட்டுகள்.

படத்தின் இரண்டாம் பாதியில்தான் கதிர் வருகின்றார். ராஜ் பாரத் படம் முழுவதும் நடித்துள்ளார்.

படத்தின் இறுதியில் இது கதிருக்கான கதை எனக் காட்டினாலும், படத்தை முழுமையாக நகர்த்தியுள்ளவர் ராஜ் பார்த்.

மீரா நாயர் பாலியலை விரும்பிச் செய்யும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். என்னதான் பாலியல் பற்றிய படமாக இருந்தாலும் ஒரே ஒரு காட்சியைத் தவிர கிளாமர் இல்லை.

படத்தின் கதை பெரிதாக சொல்லும் அளவிற்கு மிகவும் அழமாக எடுக்கப்படவில்லை. ஆனால் படம் எங்கும் தொய்வில்லாமல் சுவாரஸ்யமாக செல்கின்றது.

பிர்லா போசை பழிவாங்கும் காட்சி உண்மைகளின் வலி. ஒரு பெண் நினைத்தால் ஒரு ஆணை எப்படி வேண்டுமானாலும் பழிவாங்கலாம் என்பதற்கு அந்த ஒரு காட்சியே போதும்.

படத்தின் மைனஸ் மற்றும் ப்ளஸ்

படம் ஒன்றரை மணி நேரமே. 49 ரூபாய் கட்டணம் செலுத்தி ஆன்லைனின் பார்ப்பது கூடுதல் சிறப்பு.

படத்தின் மைனஸ் ஒன்றரை மணி நேரமே. படம் ஆன்லைனில் வெளியாவதால் 1GB-யில் படத்தைப் பார்க்க வேண்டும் என நேரத்தை குறைத்துள்ளனர்.

இதனால், பாதிக்காட்சிகளை இறுதியில் ஒரு பாடலில் அடக்கிவிட்டனர். படத்தில் திருநங்கையாக நடித்த கதிர் அந்த அளவிற்கு சிறப்பாக நமக்கு தோன்றவில்லை.

ஏற்கனவே, திருநங்கையாக பலர் நடித்துள்ளதால், இவருடைய நடிப்பு நம்மை வியக்கவைக்கவில்லை.

A பட இமேஜ் படத்திற்கு கிடைத்துவிடக்கூடாது என பாலியலைப் பற்றி விரிவான காட்சிகள் வைக்கவில்லை. இன்னும் கொஞ்சம் ஆழமான காட்சிகள் வைத்திருக்கலாம்.

குறிப்பாக கதிரின் சிறுவயது முதலே உள்ள கதாப்பாத்திரத்தை நீட்டி இருக்கலாம்.

3

பேட்ட படத்தின் பேனர் கிழிப்பு: அஜித் ரசிகர்கள் வெறிச்செயல்

0
பேட்ட படத்தின்

பேட்ட படத்தின் பேனர்கள் கிழிப்பு: அஜித் ரசிகர்கள் வெறிச்செயல்

விஸ்வாசம், பேட்ட  இரு திரைப்படங்களும் இன்று வெளியாகியுள்ளது. பொங்கலை முன்னிட்டு 10-ம் தேதியே படம் வெளியாகியுள்ளது. இரண்டு படங்களும் டீசர் வெளியீடு முதலே மோதலைத் துவங்கிவிட்டனர்.

பேட்ட படத்தின் டீசரில், ரஜினியின் வசனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே விஸ்வாசம் டீசர் வெளியிடப்பட்டது.

தியேட்டர்களைப் பிடிப்பதில் போட்டி, ரசிகர் காட்சி திரையிடுவதில் போட்டி என அடிதடி ரகளையுடனேயே இரு படங்களும் வெளியாகியுள்ளது.

சென்னை கோயம்பேடில் உள்ள ரோகினி திரையரங்கில் விஸ்வாசம் படம் அதிகாலைக்காட்சி திரையிடப்படவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த அஜித் ரசிகர்கள் பேட்டபடத்தின் பேனர்களைக் கிழித்து வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.

பல இடங்களில் இரவு 2 மணி முதலே காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றது. இரு தரப்பு ரசிகர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பேட்ட படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து பிரபல திரையரங்கில் கண்டுகழித்துள்ளார்.

தனுஷ், ரஜினியின் பாபா முத்திரையைக் காட்டியபடி பேட்ட படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து பார்க்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

பேட்ட படத்திற்கு ரசிகர்கள் அளித்த உற்சாகமான வரவேற்பை பார்த்து கார்த்திக் சுப்புராஜ் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

3

இஸ்லாமை துறந்த பெண்ணைக் காப்பாற்றிய புன்னகை தேசம்

0
இஸ்லாமை துறந்த

இஸ்லாமை துறந்த பெண்ணைக் காப்பாற்றிய புன்னகை தேசம்

ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன் என்ற 18 வயதான சவுதி பெண் இஸ்லாமிய மதத்தை துறந்துவிட்டார்.

சவுதியில் இருந்தால் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்து, ஆஸ்திரேலியாவிற்கு தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளார்.

தாய்லாந்து வழியாக விமானத்தில் சென்றுள்ளார். ஆனால் தாய்லாந்திலிருந்து விமானத்தில் அப்பெண்ணை அனுப்ப மறுத்துள்ளனர்.

குடியுரிமையும் இல்லை, அகதி என்ற அந்தஸ்தும் இல்லாததால் ஆஸ்திரேலியாவிற்குள் செல்லமுடியாத சூழல் உருவாகியுள்ளது.

இதனால், தாய்லாந்திலேயே முடங்கிவிட்டார். சவுதியும் அப்பெண்ணை அகதியாக அறிவிக்க முன்வரவில்லை. அவருடைய பெற்றோர்கள், அவரைச் சவுதிக்கே அழைத்துச்செல்ல தாய்லாந்து வந்துவிட்டனர்.

ஆனால் ரஹாஃப், பெற்றோரை பார்க்க விரும்பவில்லை. நான் சவுதிக்கு சென்றால் என்னை கொன்றுவிடுவார்கள் என மறுத்துவிட்டார்.

இதை அறிந்த ஐ.நா. சபை அவருக்கு உதவ முன்வந்தது. அவரை அகதி என அறிவித்துவிட்டது. சொந்த நாடு அகதியாக அறிவிக்காத பட்சத்தில் ஐ.நா. அறிவிக்க முடியும் என விளக்கம் அளித்துள்ளது.

தற்பொழுது ரஹாஃப்பை, ஆஸ்திரேலியாவிற்கு அனுப்புவது குறித்து தாய்லாந்து பரிசீலித்து வருகிறது.

தாய்லாந்து காவல்துறை தலைமை அதிகாரி சுராசட் ஹக்பர்ன் இதுகுறித்து கூறியதாவது, அவரை நாங்கள் சிறப்பாக கவனித்துக்கொண்டுள்ளோம்.

அரச குடும்பத்தின் பாதுகாப்பில் அவர் இருக்கின்றார். அவரை நாங்கள் சாவதற்காக அவருடைய நாட்டிற்கு அனுப்பிவிட மாட்டோம்.

தாய்லாந்து புன்னகைகளின் தேசம் நாங்கள் யாரையும் இறப்பதற்காக அனுப்பமாட்டோம் என தெரிவித்தார்.

3

கமலை விஞ்சிய கதிர்: Rs.29 டிக்கெட் விலை, பொங்கல் ரிலீஸ்!

0
கமலை விஞ்சிய கதிர்

கமலை விஞ்சிய கதிர்: Rs.29 டிக்கெட் விலை, பொங்கல் ரிலீஸ்!

விஸ்வரூபம் டி.டி.எச் ரிலீஸ்

விஸ்வரூபம் படத்தை முதன் முதலில் ஏர்டெல் டி.டி.எச் வழியாக வெளியிட கமல் முயன்றார். ஆனால் திரையரங்கத்தினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.

திரையரங்கத்தில் வெளியிடும் நாளிலேயே படத்தை டி.டி.எச்சில் வெளியிட்டால், திரையரங்குகள் நலிவடைந்து பாதிக்கப்படும் என எதிர்ப்புகள் கிளம்பியது.

இதனால், கடைசி நேரத்தில் டி.டி.எச் முடிவைக் கைவிட்டு திரையரங்கில் மட்டுமே படம் வெளியானது.

C2H ரிலீஸ்

அதன்பிறகு, ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை என்ற திரைப்படத்தை C2H என்ற புதிய நிறுவனத்தை துவங்கி நேரடியாக படத்தை வெளியிட்டார் சேரன்.

இத்திட்டமே தோல்வியில் முடிந்தது. காரணம், படத்தை சி.டி.யில் வெளியிட்டனர். வீடுவீடாக மார்க்கெட்டிங் செய்யும் முறை தோல்வியில் முடிந்தது.

அதன்பிறகு வேறு படங்களை C2H மூலமாக ரிலீஸ் செய்யமுடியவில்லை. அந்த நிறுவனமே கடன் பிரச்சனையால் ஊத்திமூடிடப்பட்டது.

வெப் சீரியஸ் வருகை

ஆன்லைன் ஆப்கள் அதிக அளவு உருவாகின. குறிப்பாக அமேசான், நெட்பிளிக்ஸ் வருகைக்குப்பின் இது அதிகரித்துவிட்டது.

இதில் அதிக அளவில் வெப் சீரியஸ் வெளியாகின. தமிழ் நடிகர்கள் கூட வெப் சீரியலில் நடிக்கத் துவங்கினர்.

நேரடித் திரைப்படம்

தியேட்டர்கள் முறையாக கிடைக்கவில்லை என ஆன்லைனை நோக்கி சிகை திரைப்படம் சென்றுள்ளது.

முதல்முறையாக ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் வெளியாகிறது. ZEE5 இணையதளம் மற்றும் செயலியில் இப்படத்தைக் காணலாம்.

29 அல்லது 49 ரூபாய் கட்டணம் செலுத்தி இப்படத்தைப் பார்க்கலாம். 49 ரூபாய் கட்டணம் என்பது ஒரு மாதம் முழுவதும் வெளியாகும் படங்கள், வெப்சீரியஸ்கள், டி.வி. நிகழ்சிகளைப் பார்பதற்குரிய கட்டணமாகும்.

தமிழ்ராக்கர்ஸ் ஊத்தி மூடப்படுமா?

தியேட்டரில் வெளியாகும் படங்களையே திருட்டுத்தனமாக வெளியிட்டு வரும் தமிழ்ராக்கர்ஸ் இதனால் பாதிக்கப்படுமா?

இல்லை, இந்த தளத்தில் உள்ள படத்தையும் திருட்டுத்தனமாக வெளியிட்டு செழிப்படையுமா? எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

49 ரூபாய் கூடச் செலுத்தி குடும்பத்துடன் படம் பார்க்கும் மனநிலை மக்களுக்கு ஏற்படாதவரை, தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களை ஒழிக்க முடியாது என்பதே உண்மை.

3

சமூக வலைத்தளம் பயங்கரவாதிகள் பிடியில்: பகீர் தகவல்

0
சமூக வலைத்தளம்

சமூக வலைத்தளம் பயங்கரவாதிகள் பிடியில் உள்ளதாக பகீர் தகவலை ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.

டில்லியில் நடைபெற்ற நிகழ்வில் இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியதாவது,

இந்தியாவில் பிரிவினையை ஏற்படுத்த முக்கியத்தளமாக, சமூக வலைதளங்கள் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு வேண்டும்.

சமூக வலைதளங்களில், வரலாற்றை திரித்து கூறுதல், நடக்காத ஒன்றை நடைபெற்றதாக கூறுதல், மதங்கள் குறித்து தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன.

இதன் காரணமாகவே காஷ்மீரில் பிரிவினைவாதம் ஒழிக்கமுடியாத சக்தியாக வளர்ந்துள்ளது. எனவே சமூக ஊடங்களுக்கு சென்சார் தேவை.

படித்த இளைஞர்களைக்கூட மூளைச்சலவை செய்து பயங்கரவாத அமைப்பில் இணைய வைக்கின்றனர்.

பயங்கரவாதத்தை மட்டுமே கொள்கையாக வைத்திருக்கும் நாடு இருக்கும் வரை, பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது. பயங்கரவாதம் இருந்துகொண்டே இருக்கும்.

பலவீனமான நாடு, பலம்வாய்ந்த நாட்டை எதிர்கொள்ள முடியாமல் பயங்கரவாதத்தை வளர்த்து வருகின்றது.

நிபந்தனை ஏதுமின்றி, தாலிபான் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும். பாகிஸ்தான், தாலிபான்கள் பின்னணியில் செயல்படும் நாடு.

இதைக் கவனத்தில் கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும். இவ்வாறு நிகழ்ச்சியில் பிபின் ராவத் பேசினார்

3

ஐபிஎல் போட்டி நடைபெறுமா? சர்ச்சை துவங்கியது!

0
ஐபிஎல் போட்டி

ஐபிஎல் போட்டி நடைபெறுமா? சர்ச்சை துவங்கியது!

12-ம் ஐ.பி.எல் தொடர் வழக்கமான ஐபிஎல் போட்டி போன்று இருக்காது, சற்று வித்தியாசமாக இருக்கும் என பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.

2019-ம் ஆண்டு ஐ.பி.எல் லீக் போட்டிகளை நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலும், ஐ‌பி‌எல் போட்டிகளும் ஒரே காலங்களில் நடக்க இருப்பதே இதற்கு காரணம்.

தேர்தல் சமயம் என்பதால், அரசாங்கத்தால் போதிய பாதுகாப்பு வழங்க இயலாது. எனவே, போட்டிகளை எப்படி நடத்தலாம் என பிசிசிஐ குழப்பமடைந்தது.

கடந்த வருடத் தேர்தல் சமயங்களில், தென்னாப்ரிக்கா அல்லது அரபுநாடுகளில் போட்டியை நடத்தியது போன்று வெளிநாடுகளில் ஐபிஎல்-யை நடத்த பிசிசிஐ விரும்பவில்லை.

இந்தியாவில் நடந்தால் மட்டுமே ரசிகர்கள் ஆதரவு அதிகமாக இருக்கும் என்பது பிசிசிஐ-யின் முடிவு. எனவே எப்படியாவது போட்டியை இந்தியாவில் நடத்தும் முனைப்பில் உள்ளது.

இம்முறை சற்று வித்தியாசமாக போட்டியை நடத்த முடிவு செய்துள்ளது. வெறும் மூன்று போட்டிகள் மட்டுமே ஒவ்வொரு அணியின் சொந்த மாநில மைதானத்தில் நடக்கும்.

மற்ற அனைத்துப் போட்டிகளும் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் 5 முதல் 6  பொதுவான மைதானங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரின் பாதுகாப்பை முன்வைத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இன்னும் தேர்தல் நாள் அறிவிக்கப்படாததால், போட்டிகள் குறித்த முழு அட்டவணையைத் தேர்தல்தேதி அறிவிக்கப்பட்டவுடன் வெளியிட முடிவுசெய்துள்ளது.

எனவே, வருகிற பிப்ரவரி 2 அல்லது 3-ம் தேதிகளில் போட்டி அட்டவணையைத் திருத்தம்செய்து வெளியிடப்போவதாகக் கூறியுள்ளது.

3