Home Blog Page 318

உசைன் போல்டின் ஆட்டம் இதோடு முடிந்தது

0
உசைன் போல்டின்

உசைன் போல்டின் ஆட்டம் இதோடு முடிந்தது

ஜமைக்கா நாட்டைச்சேர்ந்த 32 வயதான  உசைன் போல்ட் தன்னுடைய விளையாட்டு வாழ்க்கை முடிந்து விட்டதாக சமீபத்தில் தெரிவித்தார்.

உலக அளவில் கால்பந்து வீரராக வேண்டும் என்ற தன்னுடைய கனவை கைவிட்டு இனிமேல் எந்தவித விளையாட்டிலும் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

இவர் 8 முறை ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவர். 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில்  உலகசாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய கால்பந்தாட்ட கிளப் சென்ட்ரல் கோஸ்ட் மெரைனர் அணிக்காக கடந்த செப்டம்பர் மாதம் தன்னுடைய கால்பந்தாட்ட பயணத்தை தொடங்கினார்.

நல்ல ஒரு முன்னேற்றம் அவருடைய கால்பந்தாட்டத்தில் இருந்தும் அவரை சென்ட்ரல் கோஸ்ட் மெரைனர் கிளப் நிராகரித்தது.

கிளப்பில் காண்ட்ராக்ட் கிடைக்காததால் தன்னுடைய கால்பந்து கனவை பாதியிலேயே கைவிட்டுச் சென்றுவிட்டார்.

உசைன் போல்ட் இதுகுறித்து கூறியதாவது

என்னுடைய இந்த விளையாட்டு வாழ்க்கை இறுதிவரை மிகவும் மகிழ்ச்சியாக சென்றது. கற்றுக்கொள்வதே என்னுடைய வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருந்தது. என்னுடைய அணியில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் எனக்கு மகிழ்ச்சிதான்.

என்னுடைய விளையாட்டு வாழ்க்கை இத்தோடு முடிந்ததாக நான் நினைக்கிறேன். இனிமேல் புதிதாக தொழில் தொடங்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

3

ஹன்சிகா லீக்ஸ்: மியாமி ஹோட்டல் அறையில் அரங்கேறிய அவலம்

0
ஹன்சிகா லீக்ஸ்

ஹன்சிகா லீக்ஸ்: மியாமி ஹோட்டல் அறையில் அரங்கேறிய அவலம்

மியாமி அமெரிக்காவில் உள்ள அழகிய நகரம். சுற்றலா பயணிகளை பெரிதும் ஈர்க்கக்கூடிய நகரம். மியாமி கடற்கரை மிகவும் பிரபலம்.

சமீபத்தில் ஹன்சிகா ஹோட்டல் அறைக்குள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தன.

இது தெரியாமல் நடந்ததா? என முதலில் சந்தேகம் எழுந்தது. ஏற்கனவே ஹன்சிகாவின் குளியல் வீடியோ இணையத்தில் கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உள்ளாடை மட்டுமே அணிந்துகொண்டு கண்ணாடி முன்பு நிற்கும் புகைப்படம் லீக் ஆகியது. இது எங்கு எடுக்கப்பட்டது என துலாவியபோது அடுத்தடுத்த புகைப்படங்கள் வெளியாகின.

ஹன்சிகா சமீபத்தில் மியாமிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு உள்ள ஓட்டல் அறையில் கவர்ச்சியாக புகைப்படங்களை அவரே மொபைலில் எடுத்துள்ளார்.

அதை அவர் மேனேஜர் மூலம் இணையத்தில் கசியவிட்டுள்ளார். காரணம், அவர் இழந்த மார்கெட்டை பிடிக்கவேண்டும் என்று.

ஹன்சிகாவிற்கு படவாய்ப்புகள் இல்லை. மகா என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஓட வைக்க அவரே கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து இணையத்தில் கசிய விட்டு வாய்ப்புத்தேடி வருகின்றாராம்.

முக்கியத் தயாரிப்பார்கள் வாட்ஸ்ஆப் எண்களுக்கு இதைவிட கவர்ச்சியான புகைப்படங்கள் அனுப்பியுள்ளார்.

சினிமா வாய்ப்பு இல்லையெனில் நடிகைகள் எந்த அளவிற்கு இறங்கி வருவார்கள் என்பதற்கு ஹன்சிகாவே ஒரு உதாரணம்.

நடிகைகள் வாய்ப்பு இல்லை எனில் சினிமாவை விட்டுச்செல்ல, அவர்கள் மனம் மறுக்கிறது.

எப்படியாவது மீண்டும் நடிக்க வேண்டும் என எந்த அளவிற்கும் செல்லத் தயாராகும் அவலம் தமிழ்சினிமாவில் அதிகரித்து வருகிறது.

3

இந்தோனேசியாவில் கனமழை: 8 பேர் பலி; 2000 பேர் பாதிப்பு

0
இந்தோனேசியாவில் கனமழை

இந்தோனேசியாவில் கனமழை: 8 பேர் பலி; 2000 பேர் பாதிப்பு. கனமழை காரணமாக இந்தோனேசிய நாடு பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 8-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2000 பேருக்கும் மேற்பட்டோர் வசிக்க வீடு இல்லாமல், பாதுகாப்பான இடங்களை நோக்கி குடிபெயர்ந்து உள்ளதாக மீட்புபடை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பில்லி பில்லி என்ற அணை நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதே இவ்வளவு பெரிய பாதிப்புக்கு காரணம்.

நள்ளிரவில் இச்சம்பவம் நடந்ததால் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபடமுடியவில்லை.

இந்தோனேசியாவில் பருவ மழை காலங்களில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுவதும், நிலச்சரிவு ஏற்படுவது வாடிக்கையே.

3

கரண்ட் பில் 23 கோடியாம்: அப்துல் பாசித் அதிர்ச்சி!

0
கரண்ட் பில்

கரண்ட் பில் 23 கோடி ரூபாய்: அப்துல் பாசித் அதிர்ச்சி!

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அப்துல் பாசித். சமீபத்தில் வீட்டுக்கு மின்சாரக்கட்டணம் செலுத்த மின்சாரிய வாரிய அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு சென்று பில்லை பார்த்தவருக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. வீட்டு மின்சாரக் கட்டணம் என ரூ.23,67,71,524 இருந்துள்ளது.

என்ன ரெண்டு குண்டு பல்பு, ஒரு டியூப் லைட்டுக்கு 23 கோடி பில்லா என அதிர்ந்துள்ளார் அப்துல் பாசித். வாழ்நாள் முழுவதும் சம்பாதித்தாலும் இவ்வளவு தொகையை கட்டமுடியாதே எனக் கவலை கொண்டுள்ளார்.

மின்சார வாரிய அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தார். ரீடிங் மீட்டரில் பழுது ஏற்பட்டு இருக்கலாம்.

அதனால் தவறான ரீடிங் பதிவாகியிருக்கும் எனத் தெரிவித்துள்ளனர். மேலும், ரீடிங் மீட்டர் சரி செய்யப்பட்டு சரியான கட்டணம் வசூலிக்கப்படும்.

அதுவரை தாங்கள் மின்சாரக்கட்டணம் செலுத்த வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர் மின்சாரத் துறை அதிகாரிகள்.

இட்லிக்கும், சட்னிக்கும் கோடி கோடியா பில் போட்ட நம்ம ஊர் கதையவே இது மிஞ்சிவிட்டது.

3

குட்டி இந்திராகாந்தி: குடும்பமே கட்சியாக மாறியது!

0
குட்டி இந்திராகாந்தி

குட்டி இந்திராகாந்தி: குடும்பமே கட்சியாக மாறியது!

ஒரு அரசியல் தலைவர் மறைவுக்குப்பின் இன்னொரு தலைவர் உருவாக வேண்டும். அந்த தலைவர் பெரும்பாலும் வாரிசு தலைவர்களாகவே இருப்பர்.

நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, சோனியா காந்தி என ஒருவர் மறைவுக்குப்பின்பே அவர்களுடைய வாரிசுகள் கட்சிக்குள் புகுந்தனர்.

தற்பொழுது, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி என அடுத்தடுத்து காங்கிரஸ் கட்சியில் இடம் பிடித்துவிட்டனர்.

இவர்களின் முன்னோடி திமுக கட்சியே. இந்திய அளவில் அரசியல் புதுமைகளைப் புகுத்தி வந்தது திமுக. அதில் ஒன்று வாரிசு அரசியல்.

கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி, அழகிரி, தயாநிதிமாறன் இப்படி மொத்த குடும்பமுமே அரசியலுக்குள் நுழைந்தனர். அதைத்தான் காங்கிரஸ் பின்பற்றியுள்ளது.

சோனியாகாந்தியின் மகள் பிரியங்கா காந்தி நீண்ட நாட்களாகவே குட்டி இந்திராகாந்தி என அழைக்கப்பட்டு வந்தார். காங்கிரஸ் கட்சியில் தற்பொழுது பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் அசோக் இதுகுறித்து கூறியதாவது,  “பிரியங்கா காந்தியை உத்திரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதி பொதுச்செயலாளராகவும், சிந்தியாவை உத்திரப்பிரதேசத்தின் மேற்குப் பகுதி பொதுச்செயலாளராகவும் ராகுல்காந்தி நியமணம் செய்து உள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

3

ஜெயலலிதா குற்றவாளியா? – குமாரசாமிக்கு அடுத்து நச் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்!

0
ஜெயலலிதா குற்றவாளியா?

ஜெயலலிதா குற்றவாளியா? – குமாரசாமிக்கு அடுத்து நச் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்!

மறைந்த முன்னாள் தமிழக முதலவர் ஜெயலலிதாவிற்கு அரசு செலவில் நினைவிடம் கட்டத் தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி டிகுன்ஹா 2015 ஆண்டு விசாரித்து தீர்ப்பு வழங்கினார்.

ஜெயலலிதா குற்றவாளி எனவும் ரூ.100 கோடி அபராதம் விதித்து 4 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கினார்.

அடுத்த சில மாதங்களிலேயே இந்த வழக்கின் மேல்முறையிட்டு மனுவை விசாரித்த நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா குற்றமற்றவர் என தீர்ப்பளித்து விடுதலை செய்தார்.

மீண்டும் சி.பி.ஐ. மூலம் வழக்கு தொடரப்பட்டது. அதன்பிறகு ஜெயலலிதா 2016 டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.

அவர் காலமான சில மாதங்களிலேயே, சசிகலா முதலமைச்சராக ஏற்பாடுகள் நடந்தன. அதற்குள் மீண்டும் அதே வழக்கில் ஜெயலலிதா உட்பட அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

தற்பொழுது, ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தமிழகஅரசு தீர்மானித்தது. அதை எதிர்த்து ரவி என்ற வழக்கறிஞர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு, அரசுப் பணத்தில் நினைவிடம் அமைக்கக்கூடாது என வழக்குத் தொடுத்தார்.

இந்த வாழ்க்கை சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் தலைமையிலான அமர்வு, விசாரித்து வந்தனர். இன்று அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினர்.

ஜெயலலிதா குற்றவாளியா? தீர்ப்பு விவரம் பின்வருமாறு,

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டபோது, அதற்கு எதிரான மேல் முறையீட்டில் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு, உச்சநீதிமன்றம் தடைவிதிக்கவில்லை.

எனவே, ஜெயலிதாவை குற்றவாளி எனக் கருதமுடியாது. மேலும் தீர்ப்பு வருவதற்கு முன்பாக அவர் இறந்துவிட்டார். இதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.

இந்த வழக்கில் ஓவ்வொரு முறையும், நேர்எதிராக தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3

உலகின் மிக நீளமான 3டி பாலம் – சீனா சாதனை

0
உலகின் மிகநீளமான 3டி பாலம் நீளமான பாலம் 3D கட்டுமானம் World Longest 3D Bridge Tamil

உலகின் மிக நீளமான 3டி பாலம் – சீனா சாதனை. நீளமான பாலம் 3D கட்டுமானம். World Longest 3D Bridge Tamil.

சீனா நாட்டின் சாங்காய் நகரத்தில் உலகின் மிக நீளமான 3டி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் பெடெஸ்ற்றியான்  ஆகும்.

சைங்குவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் வெய்குவோ இந்தப் பாலத்தை டிசைன் செய்தார்.

இந்த 3டி பாலம் 26.3மீட்டர் நீளமும் 3.6 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மிகப்பழமையான சீன பாலம் ஆஞ்சியின் (Anji) தழுவலிலயே இந்த கான்கிரீட் 3டி பாலம் கட்டப்பட்டதாக கூறுகின்றனர்.

3D பாலம் என்றால் என்ன?

3டி பாலம் என்பது 3D பிரிண்டர்களை கொண்டு கட்டப்படுவதாகும். மொத்த பாலத்தையும் பிரிண்ட் செய்து எந்த இடத்தில் பொருத்த வேண்டுமோ அங்கு பொருத்தி விடுவார்கள்.

கம்பிகட்டி பில்லர் வைத்து, ஜல்லிகளை கொண்டு காங்கிரட் செய்வது போன்று இருக்காது. இது முற்றிலும் மாறுபட்ட தொழில்நுட்பம்.

பெடெஸ்ற்றியான்  பாலம்

3டி பெடெஸ்ற்றியான்  பாலமானது 44 ஹாலோவ்டு 3டி பிரிண்டட் கான்கிரீட் கற்களால் (hollowed-out 3D printed concrete blocks) அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை இந்த பாலமானது திறக்கப்பட்டது. 100க்கும் மேற்ப்பட்டோர் இதில் நடக்க அனுமதித்து பரிசோதனை செய்து பார்த்தனர்.

இரண்டு ரோபோட் ஆர்ம்களால் பெடெஸ்ற்றியான்  பாலத்தின் கான்கிரீட் அமைப்புகள் டிசைன் செய்யப்பட்டது. குறைந்த செலவில் அமைக்கப்பட்ட பாலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொருட்களின் இடமாற்றதைக் கணிப்பதற்காக பெடெஸ்ற்றியான் பாலத்தில் சென்சார் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சென்சாரின் உதவியால் வருங்காலங்களில் 3டி பாலத்தை இன்னும் சிறப்பாக அமைக்கமுடியும் என்று பேராசிரியர் வெய்குவோ தெரிவித்துள்ளார்.

இந்த கட்டுரைகளையும் கொஞ்சம் படியுங்களேன்

உலகின் மிக நீளமான ஆறுகள் டாப் 10 பட்டியல்

உலகின் நீளமான கடற்கரைகள் டாப் 10 பட்டியல் 

உலகின் நீளமான மலை தொடர்ச்சி – டாப் 10 பட்டியல்
இந்தியாவின் எல்லைகள் பற்றி தெரியுமா? 
உலகின் மிக உயரமான மலைகள் டாப் 10 பட்டியல்
3

நினைத்ததை அடைய ஈர்ப்பு விதி அவசியம்!

0
நினைத்ததை அடைய

நினைத்ததை அடைய ஈர்ப்பு விதி அவசியம்!

உலகில் இருக்கும் விதிகளில் மிகவும் சக்தி வாய்ந்த விதிகளில் இந்த ஈர்ப்பு விதியும் ஒன்று என்பது மறுக்கமுடியாத உண்மை.

புவிஈர்ப்பு விசையைப்போல நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்விலும் நம்முடன் பயணித்து வருகிறது.

வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும் நாம் உருவாக்கிக்கொண்டே வருகிறோம் என்பது தான் உண்மை.

உருவாக்குதல் என்பதற்கு ஒரு முடிவே இல்லை. நம்முடைய எண்ணங்கள் நம்மை செயல்பட வைக்கிறது.

ஒவ்வொரு செயலும் நம்முடைய எதிர்காலத்தை தீர்மானிக்கும். வாழ்க்கையில் வெற்றி அடைந்த அனைவரும் பயன்படுத்திய ஒரு தாரக மந்திரமே இந்த ஈர்ப்பு விதி என்று கூறலாம்.

நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் நம்முடைய எண்ணங்களால் உருவாக்கப்பட்டதே.

நம் வாழ்க்கையில் நினைத்ததை அடைய அதாவது பணம், பொருள், உறவு, பதவி மற்றும் விளையாட்டு எதுவாயினும் இந்த ஈர்ப்பு விதியை முறையாக பயன்படுத்தினால் மட்டுமே முடியும்.

நம்முடைய எண்ணங்களை நமக்கு எது தேவை என்று அறிந்து அதில் நம்பிக்கையுடன் நேர்மறையில் முயற்சி செய்தால் நீங்கள் கண்டிப்பாக அதை அடைவீர்கள் என்பதுதான் ஈர்ப்பு விதி.

உன்னுடைய வாழ்க்கையில் நீ எதானால் ஈர்க்கப்பட்டு உள்ளாயோ அதை நோக்கி ஓடி கொண்டு இருக்கிறாய் என்று பொருள்.

உன்னுடைய முழுமையான கவனத்தை ஒரு செயலில் நேர்மறையான எண்ணங்களுடன் நம்பிக்கையுடன் கொடுக்கும் பொழுது நீ எதிர்பார்த்த பலனை அடைவாய்.

நம்முடைய எண்ணங்கள்

எடுத்துக்காட்டாக புதிய தொழில் தொடங்குவதாக எடுத்துக்கொள்வோம். நம்முடைய எண்ணங்கள் எப்படி இருக்குமானால், “நான் முதல் முறை தொழில் தொடங்கி உள்ளேன்.

இதை நான் முறையாக செய்து விடுவேனா? என்னால் இதை சமாளித்து விட முடியுமா? எனக்கு கீழே தொழிலாளிகளை பணி அமர்த்தி விடுவேனா?

இந்த முயற்சியை நான் நட்டம் இல்லாமல் செய்து முடித்து விடுவேனா? இதைச் சிறப்பாக கொண்டு செல்வதற்கு மற்றவர்களின் உதவியை நாடுவோமா?” இது போன்ற எதிர்மறையான எண்ணங்கள்தான் அனைவரிடமும் உள்ளது.

என்னுடைய சிந்தனைகள் அனைத்தும் எப்படி என்னுடைய தொழில் தோற்றுப்போகும் என்றுதான் உள்ளது. இது போன்ற பயத்துடன் கூடிய எதிர்மறையான எண்ணங்களே 99% பேர் தொழிலில் வீழ்ச்சி அடைவதற்கு காரணம் இதுவே.

எதிர்மறையான சிந்தனைகள் மற்றும் அதன் விளைவுகள்

நீங்கள் காதல் வலையில் இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களுடைய காதலி நீங்கள் போன் செய்யும் பொழுது நேரத்திற்கு எடுப்பதில்லை.

நீங்கள் வாட்ஸ்ஆப் செயலியில் தகவல் செய்யும் பொழுதெல்லாம் தாமதமாக பதிலளிக்கிறாள் என்று வைத்துக்கொள்வோம்.

எங்காவது செல்லும் போது தாமதமாக வருவது. உங்கள் முன்னாடியே கால்மேல் கால்போட்டு உட்காருவது போன்ற செயல்கள் செய்கிறாள் என்று வைத்துக்கொள்வோம்.

இப்பொழுது, உங்கள் சிந்தனை எங்கு செல்லும். பெண் இவளே இந்த அளவுக்கு செய்தால், நான் ஆண் எந்த அளவுக்கு இருப்பேன் என்று காதலித்த சிறிது நாளிலேயே பிரிவினை ஏற்படும்.

ஆனால் நீங்கள், அவளிடம் இருக்கும் நல்ல குணங்களை ஒரு போதும் கவனித்தது கிடையாது. உங்களுக்குத் தெரியாமல் அவளிடம் பல்வேறு நல்ல குணங்களும் நோக்கங்களும் இருக்கலாம்.

வேறு ஏதாவது ஒரு செயலில் தன்னை ஈடுபடுத்தி உழைத்து கொண்டு இருப்பதால் உங்களிடம் நேரம் செலவிட முடியாமல் கூட போகலாம்.

மிகவும் எளிதாக ஒரு எடுத்துக்காட்டை பார்ப்போம்

இப்பொழுது ஒருவர் உங்களுக்கு ஒரு வேலைவாய்ப்பு அளிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.

அந்த தருணத்தில் உங்களுடைய சிந்தனை அதில் இருக்கும் கஷ்டங்களை மட்டுமே பார்க்கும். அதில் இருக்கும் குறைகளை மட்டுமே பார்த்தால், நிறைகள் கண்களுக்குப் புலப்படாமல் போகும்.

எனக்கு இந்த போக்குவரத்து நெரிசல் பிடிக்கவில்லை! நான் வாங்கும் சம்பளம் எனக்கு போதவில்லை என்று புலம்புவது.

என்னுடைய உடலின் நிலமை எனக்கு மோசமாகிக்கொண்டே வருகிறது. என்னை எனக்கு பிடிக்கவில்லை நான் ஒல்லியாக அல்லது குண்டாக இருக்கிறேன்.

இது போன்ற சிந்தனைகளால், என்ன நிகழும் தெரியுமா?

ஈர்ப்பு விதியின்படி நீங்கள் எந்த ஒரு விஷயங்களில் அதிக கவனம் செலுத்துகிறீர்களோ அந்த விஷயங்களால் அதிகம் ஈர்க்கப்படுவீர்கள்.

நீங்கள் ஒவ்வொரு நிகழ்வில் இருக்கும் குறைகளை மட்டுமே பார்க்கும் பொழுது உங்கள் ஆழ்மனதில் இந்த குறைகள் பதிந்து மனதளவில் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள்.

ஒவ்வொரு சூழ்நிலையிலும் உங்கள் சிந்தனைகள் குறைகளை மட்டுமே பார்க்க ஆரம்பித்து எதிர்மறையான எண்ணங்களில் மூழ்கி விடுவீர்கள்.

எதிர்மறையான எண்ணங்களால் குறைகளை மட்டுமே பார்த்து உங்களிடம் இருந்து எந்த ஒரு செயலும் வெளிப்படாது. பதட்டம், தலைவலி, பயம் போன்று மனதளவிலும், உடலளவிலும் அதிகமாக  பாதிக்கப்படுவீர்கள்.

ஈர்ப்பு விதி பயன்படுத்தும் முறை

எது உங்களுக்கு தேவையோ அதை மட்டும் தேர்ந்தெடுத்து சரியான தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு வேண்டியது உங்களை வந்தடையும் என்பதே ஈர்ப்பு விதி.

உங்களுக்கு வருமானம் குறைவாக வந்தால் அதிக வருமானம் ஈட்ட என்ன வழி என்று நினைத்து முயற்சி செய்தால் மட்டுமே உங்களுக்கு அதிக வருமானம் தானாக வந்தடையும்.

உங்களுடைய இந்த நேர்மறையான எண்ணமே உங்களுக்கான வழியை அமைத்து கொடுக்கும். கடவுள் கூரையை பிழந்துகொண்டு வந்து கொடுத்தாலும் கொடுப்பார் யாருக்கு தெரியும்.

அனைத்து நிகழ்விலுமே நிறைகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டால் எல்லாமே வெற்றி தான். நேர்மறையான எண்ணங்களே ஈர்ப்பு விதியின் உயிர் மூச்சு எனலாம்.

நேர்மறையான எண்ணங்களினாலே, உங்கள் ஆழ்மனதில் தேவைகள் மட்டுமே பதியும். தேவையானதில் மட்டுமே கவனம் செல்லும்.

ஈர்ப்புவிதியில் பெரும்பாலோனோர் ஏன் தோல்வியடைகின்றனர்?

இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அனைவருக்குமே ஈர்ப்பு விதி பொருந்தும். அனைவராலும் பின்பற்ற இயலும். ஆனால் நாம் செய்யும் ஒரு சில தவறுகளால் இதை முறையாக பயன்படுத்த முடியாமல் போகிறது.

நம்மை நாமே குறைத்து மதிப்பிடுவது. எந்த நேர்த்திலும் நான் இதற்கு சரிப்பட்டு வரமாட்டேன் போன்ற எண்ணங்கள் நம்மை ஒரு செயலை செய்ய விடாமல் தடுக்கிறது.

இரு மனதாக இருப்பது. நான் இதை செய்து முடிப்பேனோ, மாட்டேனோ அல்லது இது கிடைக்குமோ, கிடைக்காதோ போன்ற எண்ணங்கள் மற்றொரு காரணம்.

நம்முடைய எண்ணங்கள் எப்பொழுதும் நமக்குத் தேவையானதை மட்டுமே சிந்திக்க வேண்டும்.

நன்றியுணர்வு எப்பொழுதுமே உங்களிடம் இருக்க வேண்டும். நன்றி இல்லாத எந்த ஒரு செயல், நிகழ்வு மற்றும் உறவு போன்றவை நீண்ட காலம் வராது.

எதிர்மறை எண்ணங்கள் அல்லது தேவை இல்லாததில் உங்கள் கவனத்தை செலுத்துவது தெளிவாக சொல்லப்போனால் ஒரு செயலில் இருக்கும் குறைகளை மட்டுமே பார்ப்பது.

பொறுமையின்மை மற்றொரு காரணம் ஆகும். பொறுமை கடலினும் பெரிது என்பது அனைவரும் அறிந்ததே.  பொறுமை இல்லையெனில் ஈர்ப்பு விதியை முறையாக பயன்படுத்த இயலாது.

எண்ணமும் உணர்வும் ஒரே மாதிரி ஆக இருக்க வேண்டும். உணர்வுகள் வேறு மாதிரி ஆக இருப்பின் ஈர்ப்புவிதிக்கு புறம்பானது.

எண்ணங்களில் ஒரு பொருள் வேண்டும் என்று நினைத்து உணர்வில் வருத்தப்பட்டு கொண்டு இருந்தால் ஈர்ப்பு விதி உங்களுக்குப் பொருந்தாது.

3

மச்சம் இருக்கா? அப்போ நீங்க அப்படிப்பட்டவர் தான்!

0
மச்சம் இருக்கா?

மச்சம் இருக்கா? அப்போ நீங்க எப்படிப்பட்டவர் என்று ஜோதிடம் மூலம் மச்ச பலன்களை வைத்து தெரிந்துகொள்ள முடியும்.

அந்தக் காலத்தில் இருந்தே உடலில் மச்சம் எங்கு இருந்தால் என்ன பலன் என முன்னோர்கள் கணித்து வந்துள்ளனர். அப்படி மச்சத்தை வைத்து ‘ஜோதிடம்’ ஒருவரின் குணத்தை புட்டு புட்டு வைக்கிறது.

மச்சத்தின் பலன்களும், அவர்களின் குணங்களும்:

மூக்கில் மச்சம் இருக்கா?

முனி மூக்கில் மச்சம் இருந்தால் அனைத்து வலம் பெற்று வளமுடன் வாழ்வார்கள். மூக்கின் வலப்பக்கத்தில் இருந்தால் நினைத்ததை அடையாமல் விடமாட்டார்கள்.

மூக்கின் இடப்பக்கத்தில் இருந்தால் யாரையும் நம்பமாட்டார்கள். விலை மாதுவைத் தேடி அழைவார்கள்.

காது 

இரு காதில் மச்சம் உள்ளவர்கள் பேச்சாளர்கள், வசீகரத் தோற்றம் கொண்டவர்களாக இருப்பர். வலது பக்க காதில் மட்டும் இருந்தால் அவர்களுக்குத் தண்ணீரில் கண்டம். இடது பக்கம் இருந்தால் பெண்களால் கண்டம்.

புருவம்

புருவத்தின் நடுவில் மச்சம் இருந்தால் திடமான ஆயுள் உடையவர்கள் என்று அர்த்தம். வலப்புருவதில் இருந்தால் மனைவி அதிர்ஷ்டசாலியாக அமைவார்.

கன்னம்-நெற்றி

நெற்றி வலது ஓரத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத சங்கடங்கள் நேரிடும். இடதுபுறக் கன்னத்தில் மச்சம் இருந்தால் வாழ்வு ஏற்றம் இறுக்கமாக அமையும்.

கழுத்து

தொண்டை குழியில் மச்சம் இருந்தால் பணக்கார வரன் அமையும். கழுத்தின் வலப்புறம் இருந்தால் பங்காளிகளுடன் நல்ல உறவு நீடிக்கும்.

கழுத்தின் இடப்புறத்தில் மச்சம் இருந்தால், பெரிய அளவில் துன்பம் இல்லாமல் வாழ்வார்கள்.

மார்பு

இடதுபுற மார்பில் மச்சம் இருந்தால் பிறப்பதெல்லாம் ஆண்குழந்தையாகத் தான் இருக்கும். வலது மார்பில் மச்சம் இருந்தால் பெண்குழந்தைகள் தான் அதிகம் பிறக்கும்.

வயிறு

வயிற்றில் மச்சம் இருந்தாலே அவர்கள் பொறமை பிடித்தவர்களாக இருப்பார்கள். தொப்புளில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கையை அனுபவிக்கலாம்.

தோள்-கை

வலது தோளில் மச்சம் இருந்தால் சின்ன விசயத்தை கூட ஊதி பெரிது படுத்துவர். வலது உள்ளங்கையில் மச்சமிருந்தால் அவர்கள் நல்ல நட்புடன் பழகுவர்.

தொடை

தொடையில் மச்சம் இருப்பவர்கள் ரசனை மிகுந்தவராக இருப்பார்கள். எதையுமே வித்தியாசமான கோணத்தில் அணுகுவர்.

3

அசுரத்தனமாக தமிழ் கற்கும் சீனர்கள்: அதிரவைக்கும் கேள்விகள்?

0
அசுரத்தனமாக தமிழ்

அசுரத்தனமாக தமிழ் கற்கும் சீனர்கள்: அதிரவைக்கும் கேள்விகள்?

பொங்கல் தினத்தன்று, சீனாவின் யுன்னான் மின்சு பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்கும் மாணவர்கள் பொங்கல் கொண்டாடிய வீடியோ வெளியானது.

இந்த வீடியோ நம்மை ஆச்சரியப்படுத்தினாலும், சமூக வலைதளங்களில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.

சீனாவில் தமிழ் பேசுவது புதிதல்ல. தமிழ் மொழியில் வானொலி நிகழ்ச்சிகள் பலவருடங்கள் முன்பு இருந்தே ஒளிபரப்பட்டு வருகிறது. கலைமகள் என்ற சீனப்பெண் தமிழ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார்.

ஆனால், தற்பொழுது சீனப் பல்கலைக்கழகம் தமிழ் பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. அதில் பல சீன மாணவர்கள் தமிழ் கற்று வருகின்றனர்.

மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பை தமிழகத்தில் மேற்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது யுன்னான் மின்சு பல்கலைக்கழகம்.

ஏன் சீனர்கள் தமிழ் கற்கின்றனர்?

இந்தியா ஒரு மிகப்பெரிய பொருளாதார சந்தை கொண்ட நாடு. இந்தியப் பணியாளர்களை நம்பி பல வல்லரசு நாடுகள் தொழில் துவங்கியுள்ளது.

சீனாவின் பல நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் துவங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பல நிறுவனங்கள் உள்ளன.

இங்குள்ள சீன முதலாளிகளுக்கு ஆங்கிலமும், சீன மொழியும் மட்டுமே தெரியும். இதனால் அனைத்து தரப்பு பணியாளர்களிடமும் நேரடியாக அவர்களால் பேசமுடிவதில்லை.

எனவே தமிழ் மொழி கற்ற சீனர்களே நேரடியாக அவர்களுடன் பேசுவதன் மூலம் நிறுவனத்தை மேலும் வளர்ச்சிபெறச் செய்யமுடியும் என்பது ஒரு காரணம்.

சீனாவில் தமிழுக்கென ஒரு துறை உள்ளது. மேலும் சீனாவில் தமிழ் மொழியில் பத்திரிகைகளும் உள்ளன. இதனால் அதில் வேலைவாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவை சீன மொழில் மொழிபெயர்ப்பு செய்யும் பணியும் தற்பொழுது அதிகரித்துள்ளது. இதிலும் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும்.

தமிழ், தமிழகத்தில் மட்டுமல்ல. உலகில் பல நாடுகளில் தமிழ் பேசும் மக்கள் வசிக்கின்றனர். குறிப்பாக இலங்கை. சீனாவின் நட்பு தேசம். அங்கு அவர்கள் தொழில் துவங்க தமிழ் மொழி உதவலாம்.

மேலும் உலகில் உள்ள முக்கிய மொழிகள் அனைத்தையும் சீனர்கள் கற்று வருகின்றனர். உலகில் மூளை முடுக்களில் சீனா ஆதிக்கம் செலுத்தும் காலம் வெகுதொலைவில் இல்லை.

3