பெர்செவரென்ஸ் ரோவர் மெஷின்; நாசாவின் மார்ஸ் 2020ன் புதிய பெயர்
வருகிற ஜூலை மாதம் செவ்வாய் செல்ல இருக்கும் ரோவர் மெஷின்க்கு பெர்செவரென்ஸ்(Perseverance) என்னும் பெயர் தேர்வு செய்துள்ள நாசா விண்வெளி மையம். பெர்சேவரன்ஸ் என்பதற்கு தமிழில் விட முயற்சி என்று பொருள்.
இதற்கு முன் இந்த ரோவர் மெஷின்க்கு மார்ஸ் 2020 என பெயர் வைக்கப்பட்டு இருந்தது. வருகிற ஜூலை 17ஆம் தேதி விண்ணில் செலுத்த முடிவு செய்துள்ளனர்.
Perseverance Rover Machine Aim
வெர்ஜினியா மாகாணத்தில் நடந்த போட்டியில் 7ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் தேர்வு செய்த பெயர் இதுவாகும்.
மாணவனுக்கு பெர்சேவரேன்ஸ் விண்ணில் செலுத்தும் நாளில் வாட்ச் ஒன்று பரிசலிக்கப்பட உள்ளதாம்.
பெர்செவரென்ஸ் ரோவர் மெஷினின் நோக்கம் அங்கு வாழ்ந்த நுண்ணுயிர், வேற்று கிரக வாசிகளின் வாழ்ந்த சான்றுகளையும் எதிர்காலத்தில் பூமியில் இருந்து அங்கு செல்வதற்கான வாய்ப்புகளை கண்டறிவதே.