Home Blog Page 202

நயகரா நீர்வீழ்ச்சி எனும் அதிசயம்

0

நக்கீரா,
இது நீர் வீழ்ச்சி என்பது பொருள்குற்றம் அல்லவா? நீருக்கு இது வீழ்ச்சி அல்ல,, எழுச்சி

என்று வைரமுத்து சொல்வது போல 167 அடி உயர்ந்து நிற்கும் நயாகரா அருவி ஒரு அதிசயம் தான்.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் ஒரு பகுதியையும், கனடாவிலுள்ள  அண்டாரியோ ஒரு பகுதியையும் இணைத்து 3 அருவிகளின் சங்கமம் தான் இந்த நயகரா.

ஹார்ஸ் ஷூ அருவி தான் 90% நயகரா நீர் வீழ்ச்சிக்கு முக்கிய பங்கானது.

அதிகபட்சமாக ஹாசர்ஸ் ஷூ அருவியில் 6400 கியூபிக் மீட்டர் தண்ணீர் கொட்டும். இதுவே கோடை காலத்தில் 2800 கியூபிக் மீட்டர் கொள்ளளவு தண்ணீர் கொட்டும்.

இதில் 90 சதவீத தண்ணீரை ஹைட்ரோ எலக்ட்ரிக் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படுகிறது. சில பருவ மாற்ற காலங்களில் 1400 கியூபிக் மீட்டராக ஆக குறையும்.

பாறை அரிப்பின் காரணமாக மற்றும் மண்களில் உள்ள உப்புக் கரைசலின் காரணமாகவும் நயாகரா அருவி வெளிர் பச்சை நிறமாக காட்சியளிக்கும்.

இரண்டு கரைகளிலும் ஏற்படும் மண் அரிப்பு காரணமாக நயகராவின் அகலம் குறிப்பிடத்தக்க வகையில் வருடா வருடம் கூடிக் கொண்டே செல்கிறது.

அதாவது 10900 ஆண்டு கணக்கெடுத்து பார்த்தால் முன்பிருந்து அருவியை விட தற்போது 11 கிலோ மீட்டர் தூரம் அதிகமாக உள்ளது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அதனால் அதனுடைய வடிவமைப்பு ஆனதும் மாறிக்கொண்டே வருகிறது.

நயகரா நீர் வீழ்ச்சியில் சாதனைக்காக முதல்முறையாக குதித்தது ஒரு பெண்மணி, ஆணி எட்ஸன் டெய்லர்.

அவர் இந்த சாதனைக்காக ஒரு பேரலில் தன்னைப் பொருத்திக் கொண்டு நீர் நீர்வீழ்ச்சியின் உச்சியிலிருந்து விழுந்தார். ஆனால் இவர் உயிர் பிழைத்து விட்டார்.

நயகரா நீர்வீழ்ச்சி தோன்றின் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

உறைபனிக் காலத்தில் இது முற்றிலும் குறைந்து போவதில்லை நீர் வரத்து மற்றும் சற்று குறைந்து காணப்படும்.

நயகரா நீர்வீழ்ச்சியின் மூலம் பெறப்படும் மின்சாரம் ஆனது மிக அதிக அளவில் உள்ளது.

அதாவது நியூயார்க் மற்றும் ஆண்டேரியாவின் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் இங்கு இருந்து பெறப்படும் மின்சாரம் ஆகும்.

வருடத்திற்கு 30 மில்லியன் உலக மக்கள் இந்த நயகரா நீர்வீழ்ச்சியை பார்க்க சுற்றுலா பயணிகளாக வருகிறார்கள்.

200 வருடங்களுக்கு மேலாக நயகரா நீர்வீழ்ச்சியே சிறந்த தேனிலவு காண இடமாக கருதப்படுகிறது

3

விசு குடும்ப கதாநாயகன்: விசு உடலுக்கு எஸ்வி சேகர் அஞ்சலி!

1
Visu Passed Away

Visu Died; அவர் ஒரு குடும்ப கதாநாயகன்: விசு உடலுக்கு எஸ்வி சேகர் அஞ்சலி! உடல்நலக் குறைவால் விசு நேற்று மாலை உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது உடலுக்கு நடிகர் எஸ்வி சேகர் மற்றும் ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

விசு மறைவு

குடும்ப கதைகளை மையப்படுத்தி ஏராளமான படங்களை கொடுத்தவர் நடிகர் விசு. பிரிந்திருந்த தம்பதியினர் விசுவின் படங்களை பார்த்தாலே ஒன்று சேர்ந்துவிடுவார்கள்.

அந்தளவிற்கு கூட்டுக் குடும்பம், கணவன் – மனைவி, அண்ணன், தம்பி, அப்பா – அம்மா உறவு என்று குடும்ப கதைகளையே விசு கொடுத்துள்ளார். அது போன்ற படங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.

இந்த நிலையில், சிறுநீரகக் கோளாறு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த விசு, சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.

விசுவின் மறைவு தமிழ் சினிமாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸ் உலகத்தை ஆட்டி வைக்கும் நிலையில், விசுவின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிற்கும் பேரிழப்பாக அமைந்துள்ளது.

விசு மறைவு செய்தி அறிந்த நடிகர் எஸ்வி சேகர் மற்றும் ஒய்ஜி மகேந்திரன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அப்போது பேசிய எஸ்வி சேகர் கூறுகையில், நானும், விசுவும் 50 ஆண்டுகால நண்பர்கள். வாடா, போடா என்று பேசும் அளவிற்கு நண்பர்களாக இருந்தோம்.

அவர் இயக்கிய முதல் படத்தில் நான் தான் ஹீரோ. அதே போன்று விசு முதன் முதலில் நடித்த படத்தில் நான் தான் ஹீரோ. ஒரு இயக்குனரோடு இணைந்து அதிக படங்களில் நடித்துள்ளேன் என்றால் அது விசுவின் படங்கள்தான்.

வாரத்திற்கு ஒரு முறை, இரண்டு முறை இருந்த டயாலிஸிஸ் அதன் பிறகு தினமும் டயாலிஸிஸ் செய்ய வேண்டியதாயிற்று.

சினிமா இருக்கும் வரை விசுவின் எழுத்துக்களும், விசுவும் சாகமாட்டார். அவரது ஆத்மா சாந்தியடை வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றார்.

எஸ்வி சேகர்

என் அருமை 50 ஆண்டுகால நண்பன் நாடக திரைப்பட கதை வசனகர்தா இயக்குனர் விசு சற்றுமுன் நம்மை விட்டு பிரிந்து விட்டார்.  A GREAT LOSS.

இதையடுத்து, ஒய்ஜி மகேந்திரன் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களைத் தொடர்ந்து சினிமா பிரபலங்கள் பலரும் டுவிட்டரில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

ரஜினிகாந்த்

என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய நண்பர், ஒப்பற்ற எழுத்தாளர், இயக்குனர், நடிகர் விசு அவர்களின் மறைவு என் மனதை மிகவும் பாதித்துள்ளது.

அவரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விக்னேஷ் சிவன்

ஆளுமை நம்மை விட்டு சென்றுவிட்டார். அற்புதமான எழுத்தாளர், இயக்குநர், தனித்துவமான ஒரு நடிகர், தனது சென்டிமெண்ட் மற்றும் காமெடியான வசனங்கள் மூலம் குடும்பங்களை தொட்டவர், இன்றும் இவரது படங்கள் பேசும்.

விசு சாரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

‘அரட்டை அரங்கம்’, ‘தில்லு முல்லு’, ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘சிதம்பர ரகசியம்’, ‘பெண்மணி அவள் கண்மணி’, ‘திருமதி ஒரு வெகுமதி’, ‘வரவு நல்ல உறவு’, ‘மணல் கயிறு’ உள்ளிட்ட பல முக்கிய படங்கள் என்றென்றும் வாழும். உங்களை மறக்க முடியாது சார்” என்று பதிவிட்டுள்ளார்.

முக ஸ்டாலின்

இயக்குநர் விசுவின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள ஒக்கியம் பகுதியில் மாதா கோயில் தெருவில் உள்ள பிரபஞ்ச அபார்ட்மெண்டில் உள்ள விசுவின் இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.

சினிமா பிரபலங்கள் பலரும் விசுவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

3

2003 உலககோப்பை இந்தியாவின் இறுதி போட்டியை மறக்க முடியுமா?

0

2003-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, கென்யா நாடுகளில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்து அஸ்திரேலியா.

பாதுகாப்பு காரணமாக சில நாடுகள் கென்யா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளில் விளையாட மறுத்தன.

லீக் போட்டிகள்

12 நாடுகள் பங்கு பெற்ற இந்த உலக கோப்பையில் பிரிவு ஏ-வில் ஆஸ்திரேலியா, இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. பிரிவு பி யில் கென்யா, ஸ்ரீலங்கா, நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றன.

சூப்பர் சிக்ஸ் போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியா, கென்யா, ஸ்ரீலங்கா அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

அரையிறுதி போட்டிகள்

முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவும் ஸ்ரீலங்காவும் மோதி, ஆஸ்திரேலியா அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

மற்றுமொரு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும் கென்யா அணியும் தென் ஆப்பிரிக்காவில் உள்ள டர்பன் நகரில் மோதின.

இந்த போட்டிகள் 91 ரன்கள் வித்தியாசத்தில் கென்யா அணியை இந்தியா வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இரண்டாவது முறையாக முன்னேறியது.

1985 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் இந்திய அணி உலக கோப்பையை வென்று இருந்தது. அதன் பிறகு இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை.

1999 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை வென்று நடப்பு சாம்பியனாக 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் களம் இறங்கியது.

இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் கணிசமான ரன்களை இந்த உலக கோப்பையில் குவித்தார்.

மார்ச் 23 ஆம் தேதி 2003 ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வேன்டர்ஸ் ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி பகலிரவு ஆட்டமாக தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

கில்கிறிஸ்ட் 57

அதன்படி களமிறங்கிய மேத்யூ ஹைடன் மற்றும் கில்கிறிஸ்ட் இருவரும் சேர்ந்து அணி 14 ஓவர்களில் 108 ரன்கள் இருந்த போது கில்கிறிஸ்ட் 57 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த ரிக்கி பாண்டிங், மேத்யூ ஹைடனுடன் சேர்ந்து விளையாடினார், ஹைடன் சிறிது நேரம் மட்டுமே தாக்கு பிடித்து 38 ரன்களில் 20வது ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

நான்காவது வீரராக களமிறங்கிய டேமியன் மார்ட்டின் ரிக்கி பாண்டிங் இந்திய பந்துவீச்சாளர்களை சோதித்தனர்.

ரிக்கி 140 ரன்கள்

இருவரும் சேர்ந்து இந்திய பந்துவீச்சில் சிக்சர் பவுண்டரிகளாக விளாசினார், ஆஸ்திரேலியாவின் மூன்றாவது விக்கெட்டை வீழ்த்த முடியாமல் திணறியது.

சௌரவ் கங்குலி இந்தியாவில் 8 பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியும் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்கள் எடுத்தது.

ரிக்கி பாண்டிங் 4 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 140 ரன்கள் எடுக்க, டேமியன் மார்ட்டின் 84 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து களத்தில் நின்றனர். இந்திய தரப்பில் ஹர்பஜன் மட்டும் 2 விக்கெட் வீழ்த்தினர்.

சச்சின் ஏமாற்றம்

360 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய இந்திய அணியில் சேவாக் மற்றும் சச்சின் களமிறங்கினார்கள்.

கிளன் மெக்ராத் முதல் ஓவரிலேயே நான்கு ரன்கள் எடுத்து சச்சின் டெண்டுல்கர்  அவுட் ஆகி வெளியேறி இந்திய ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

கடந்த இரண்டு உலகக் கோப்பையில் சச்சின் டெண்டுல்கர் கணிசமாக ரன் குவித்து வந்தார்.

2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பையிலும் அதிக ரன்கள் எடுத்த வீரர் பட்டியலில் சச்சினுக்கு அதிக ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருந்தார்.

பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர் முதல் விக்கெட்டை இழந்து இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.

டிவி ஆஃப் செய்த ரசிகர்கள்

அப்போதே இந்தியாவில் டிவியில் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் மற்றும் மக்கள் முக்கால்வாசி பேர் டிவியை மூடிவிட்டனர். இந்திய ரசிகர்கள் நம்பிக்கையும் 80% முடிந்து போனது.

அடுத்து வந்த கேப்டன் கங்குலியின் சிறிது நேரம் தாக்குபிடித்து இந்திய அணி 58 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டாகி வெளியேறினார்.

நான்காவது வீரராக களமிறங்கிய முகமது கைப் ரன் எடுக்காமலும், அடுத்து வந்த டிராவிட் சேவாக்குடன் கூட்டணி அமைத்து 47 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார்.

அடுத்தடுத்து யுவராஜ் 24 ரன்கள், தினேஷ் மோங்கியா 12 ரன்கள், ஹர்பஜன்சிங் 7 ரன்கள் எடுத்தனர்.

சேவாக் அதிரடி

மழை மீண்டும் குறுக்கிட்டு ஆட்டத்தை தடுத்தது. மீண்டும் நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட உலக கோப்பை போட்டி மழை விட்டு சற்று நேரத்தில் மீண்டும் தொடங்கியது.

சேவாக் மீண்டும் களத்திற்கு வந்து 3 சிக்சர்களை பறக்கவிட்டு இந்திய ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தார்.

ஆனால் அவரும் இறுதியில் டேரன் லீமேனால் ரன் அவுட் ஆகி 81 பந்தில் 82 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

ஆஸ்திரேலியா வெற்றி

இந்திய அணி 39.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 234 ரன்கள் மட்டுமே எடுத்து 125 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.

ஜாகிர்கான் நான்கு ரன்னும், ஸ்ரீநாத் 1 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர், நெகரா மட்டும் 8ரன்கள் எடுத்து களத்தில் நின்றார்.

ஆஸ்திரேலியா தரப்பில் மெக்கிரத் 3 விக்கெட்டும், லீ மற்றும் சைமன்ஸ் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்தியா இரண்டாவது முறை உலகக் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட போது ஆஸ்திரேலியா மூன்றாவது முறை உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது.

ஆட்ட நாயகன் விருதை 140 ரன்கள் எடுத்த ரிக்கி பாண்டிங் தட்டிச்சென்றார். தொடர் நாயகன் விருதை அதிக ரன் குவித்த சச்சின் டெண்டுல்கர் தட்டிச் சென்றார்.

அன்றைய உலக கோப்பையில் சச்சினை மட்டுமே நம்பி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆனால் இறுதிப் போட்டியில் சச்சின் பெரிதாக சோபிக்காமல் அவுட்டானது மிகப் பெரிய ஏமாற்றமே.

இன்று இந்திய அணியின் அதுபோல வீராத் கோலியை மட்டுமே நம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வதந்திகள்

இந்த உலக கோப்பையில் பல சர்ச்சைகள் வதந்திகளும் வந்தவண்ணம் இருந்தன.

ரிக்கி பாண்டிங் பயன்படுத்திய மட்டையில் ஸ்பிரிங் பயன்படுத்தியதாகவும் அதனால் இறுதிப் போட்டியில் மீண்டும் நடைபெறுவதாகவும் வதந்திகள் வந்தன.

ஆஸ்திரேலியா வீரர்கள் போதைப்பொருளை பயன்படுத்தியதாகவும் வதந்திகள் வந்த வண்ணம் மட்டுமே இருந்தன.

3

22/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

23/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

ஆன்மீகத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாளாகும். பணிகள் சிறப்பாக இருக்கும். காதலில் வெற்றி கிடைக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் குறையில்லை.

அம்பிகையை வழிபட கூடுதல் பலன்கள் உண்டு.

ரிஷப ராசிபலன்

இன்று உங்கள் பேச்சினால் வெற்றி காண்பீர்கள்.  பணியில் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடு வரலாம். தொழில் சிறப்பாக இருக்கும். தோள் வலி ஏற்பட வாய்ப்புண்டு.

சந்திர பகவானை விளக்கேற்றி வழிபட கவலைகள் குறையும்.

மிதுன ராசிபலன்

இன்று நாள் பயணங்கள் நிறைந்திருக்கும். வியாபார நிமித்தமாக பயணம் செய்வீர்கள். வீட்டில் நல்லாதரவு இருக்கும். தனலாபம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிவபெருமானை விளக்கேற்றி வழிபட நன்மைகள் உண்டாகும்.

கடக ராசிபலன்

இன்று திட்டங்கள் அவசியம். பணியில் கவனமாக இருக்கவும். காதலை வெளிபடுத்த வேண்டாம். லாபம் குறைவாக இருக்கும். கால் வலி ஏற்பட வாய்ப்புண்டு.

பெருமாளை விளக்கேற்றி வழிபட நன்மைகள் உண்டாகும்.

சிம்ம ராசிபலன்

இன்று செயல்களில் வெற்றி பெறுவீர்கள். பணியில் பாராட்டை பெறுவீர்கள். துணையுடன் நேரத்தை செலவிடுவீர்கள். நிதி நிலை சிறப்பாக இருக்கும். உற்சாகமாக இருப்பீர்கள்.

மகாலட்சுமியை விளக்கேற்றி வழிபட கூடுதல் பலன்கள் உண்டு.

கன்னி ராசிபலன் 

இன்று மன உறுதியோடு இருப்பீர்கள். பணிகளில் சிறப்பாக முடிப்பீர்கள். துணையிடம் காதலோடு இருப்பீர்கள். பொருளாதார நிலை மேம்படும். உடல்நிலை சீராக இருக்கும்.

காமாட்சியம்மனை வழிபட கூடுதல் பலன்களை பெறுவீர்கள்.

துலா ராசிபலன்

இன்று நாள் மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் சுய புத்தியால் பாராட்டுகள் கிடைக்கும். உறவுகள் மேம்படும். பண வரவு கூடுதலாக இருக்கும். தைரியமாக செயலாற்றுவீர்கள்.

விநாயகரை வழிபட கூடுதல் பலன்களை பெறுவீர்கள்.

விருச்சிக ராசிபலன்

இன்று மன உளைச்சல் அதிகமாக இருக்கும். தியானம் அவசியம் தேவை. வீட்டில் பிரச்சனைகள் ஏற்படும். பண வரவு சிறப்பாக இருக்காது. தாயின் உடல்நிலையில் கவனம் தேவை.

சந்திர பகவானை விளக்கேற்றி வழிபடுங்கள்.

தனுசு ராசிபலன்

இன்று நல்ல பலன்கள் தேடி வரும். சக ஊழியர்களால் நன்மைகள் உண்டு.  வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். தொழிலில் லாபம் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் குறையில்லை.

சிவ பெருமானை வழிபட கூடுதல் பலன்கள் பெறலாம்.

மகர ராசிபலன் 

இன்று சுமாரான நாளாக இருக்கும். பணியிடத்தில் நன்மைகள் கிடையாது. பேச்சில் கவனம் தேவை. தனலாபம் குறைவாக காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

அம்பிகையை வழிபட நன்மைகள் உண்டு.

கும்ப ராசிபலன்

இன்று அபரிமிதமாக பலன்களை தரும் நாளாக இருக்கும்.  உத்தியோகத்தர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். வீட்டில் இன்பமான நிலை இருக்கும். தன வரவு சிறப்பாக இருக்கும். உடல் ஆற்றல் மேம்படும்.

பெருமாளை வழிபட கூடுதல் நன்மைகள் உண்டு.

மீன ராசிபலன் 

இன்று சற்று மோசமான நாளாக இருக்கும். பணியில் முக்கிய முடிவுகள் வேண்டாம். குடும்பத்தில் குழப்பமான சூழல் நிலவும். பணவரவு நன்றாக இருக்காது. குழந்தைகள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மகாலட்சுமியை விளக்கேற்றி வழிபட நன்மைகள் உண்டாகும்.

23/3/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

இவங்க இப்படியெல்லாம் செய்வாங்களா? ஆச்சரியப்பட வைத்த சினிமா பிரபலங்கள்!

0
Corona Wishes

Corona; இப்படியெல்லாம் இவங்க செய்வாங்களா? ஆச்சரியப்பட வைத்த சினிமா பிரபலங்கள்!

கொரோனா வைரஸ் (Corona Virus) நம்மை தாக்காமல் பாதுகாத்து வரும் மருத்துவர்கள், நர்ஸ்கள், மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், இன்று மாலை 5 மணிக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என்று பலரும் கைதட்டி ஆரவாரம் செய்துள்ளனர்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகளையும் கடந்து இந்தியாவிலும் பரவி வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த மருந்துகள் இன்னும் கண்டுப்பிடிக்கவில்லை. இந்த நிலையில், நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

ஒருவரிடமிருந்து, மற்றவருக்கு எளிதில் பரவக்கூடியது தொற்று நோய் கிருமியான கொரோனா.

ஆதலால், முகத்தில் மாஸ்க், அடிக்கடி கை கழுவுதல், வீட்டிற்குள்ளாகவே இருத்தல் என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடு இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளும், மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடி கொரொனா காரணமாக இன்று ஒருநாள் மட்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்ற போராடும் மருத்துவர்கள், நர்ஸ்கள், மருத்துவ ஊழியர்கள் ஆகியோருக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கும் வகையில், கை தட்டி ஆரவாரம் செய்ய வேண்டும் என்று மோடி கூறியிருந்தார்.

அதன்படி, இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட, சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என்று பலரும் வீட்டிற்கு வெளியில், பால்கனியில் மொட்டை மாடியில் நின்று கொண்டு கைதட்டி ஆரவாரம் செய்துள்ளனர்.

அந்த வகையில், நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டில் சாப்பிடும் தட்டில் தாளம் போட்டார். அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், பவன் கல்யாண் ஆகியோர் மணி ஓசை எழுப்பினர்.

சிரஞ்சீவி தனது குடும்பத்தோடு வீட்டின் முன்பு நின்று கைதட்டி ஆரவாரம் செய்தார். பார்த்திபன், மனோபாலா, நீலிமா ராணி, மகத், கங்கனா ரணாவத் ஆகியோரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

இவர்களைத் தொடர்ந்து பாலிவுட் பிரபலங்களான சப்னா சௌத்ரி, மோனாலிசா, ஹினா கான், அர்ஜூன் பிஜ்லானி, கரண் சிங் குரோவர், பிபாசா பாசு, இஷிதா தத்தா ஆகியோர் உள்பட பலரும் கைதட்டி ஆரவாரம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்த்த விசுவின் உயிர் பிரிந்தது!

1
Visu Passed Away

Visu; பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்த்த விசுவின் உயிர் பிரிந்தது! நடிகர் விசு உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்து நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை காலமானார்.

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை வகுத்துக் கொண்டவர் மீனாட்சிசுந்தரம் ராமசாமி விஸ்வநாதன் விசு. கடந்த 1941 ஆம் ஆண்டு பிறந்தார்.

திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்னதாக, மேடை நாடகங்களிலும், தொலைக்காட்சியிலும் நடித்துள்ளார்.

சினிமாவிற்கு வருவதற்கு முன்னதாக இயக்குநர் சிகரம் கே பாலசந்தரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி அதன் பிறகு இயக்குநராக அவதாரம் எடுத்தார்.

இவரது இயக்கத்தில் வந்த படங்கள் பெரும்பாலும், சமூக, குடும்பக்கதையை மையப்படுத்தியே திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்த்து வைப்பதில், இவரை மிஞ்ச யாருமில்லை.

சன் தொலைக்காட்சியில் விசு அரங்கேற்றிய அரட்டை அரங்கம் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்களே உண்டு. இதிலிருந்து விலகிய விசு ஜெயா தொலைக்காட்சியில் மக்கள் அரங்கம் என்ற நிகழ்ச்சியை அரங்கேற்றினார்.

குடும்பம் ஒரு கதம்பம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். இதே போன்று கண்மணி பூங்கா என்ற படத்தின் மூலம் இயக்குநரானார்.

1977 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் கால்பதித்து வந்தார். விசு, தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என்று பல திறமைகளை கொண்டவராக திகழ்ந்துள்ளார்.

தில்லு முல்லு படம் முதல் நல்லவனுக்கு நல்லவன், அவள் சுமங்கலிதான், கெட்டி மேளம், சிதம்பர ரகசியம், வனஜா கிரிஜா, எல்லாம் அவன் செயல், மணல் கயிறு 2 வரை ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

விசு இயக்கத்தில் வந்த சம்சாரம் அது மின்சாரம் படம் பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்திற்கு பிலிம் பேர் விருது கிடைத்தது.

விசுவிற்கு சுந்தரி என்ற மனைவியும், லாவண்யா, சங்கீதா, கல்பனா ஆகிய 3 மகள்களும் இருக்கின்றனர். மூவருக்கும் திருமணம் நடத்தி வைத்துள்ளார்.

மேலும், விசுவிற்கு கிஷ்மு, ராஜாமணி மற்றும் குரியகோஸ் ஆகிய சகோதரர்கள் இருக்கின்றனர். மூவரும் சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம், ரஜினிகாந்த் நடிப்பில் வந்த நெற்றிக்கண் படத்தை தனுஷ் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வந்தது.

அப்போது இது குறித்து பேசிய விசு, இந்த தகவல் பொய்யாக இருந்தால் பிரச்சனை இல்லை. ஒருவேலை உண்மையாக இருந்தால், இந்தப் படத்தின் கதாசிரியரான என்னிடம் ரீமேக் உரிமையை பெற்ற பிறகே நெற்றிக்கண் படத்தை எடுக்க முடியும்.

அப்படியில்லை என்றால், தனுஷ் மீது வழக்கு தொடரப்படும் என்று ஆவேசமாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், உடல்நிலை கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், சிறுநீரக செயலிழப்பு காரணமாக இன்று மாலை விசு உயிரிழந்தார். அவருக்கு வயது 74.

விசு உயிரிழந்த செய்தி சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமா பிரபலங்கள் பலரும் விசுவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்கள் அஞ்சலி செலுத்தும் வகையில், துரைப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் விசுவின் உடல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஏமாந்த விஜய் ரசிகர்கள்: மாஸ்டர் டிரைலர் எப்போது ரிலீஸ்?

0
Master Trailer Release Date

Master Trailer; முதல் முறையாக ஏமாந்த விஜய் ரசிகர்கள்: மாஸ்டர் டிரைலர் எப்போது ரிலீஸ்? மாஸ்டர் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வெளியாகவில்லை. இதனால், விஜய் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் டிரைலர் (Master Trailer) அறிவித்தபடி இன்று மாலை வெளியாகவில்லை.

மாஸ்டர் டிரைலர் வெளியாகததால், விஜய் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர் (Master). விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார்.

இவருடன் இணைந்து விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தணு, நாசர், சஞ்சீவ், ஸ்ரீமன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்தது. இதையடுத்து, மாஸ்டர் டிரைலர் வரும் 22 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், அறிவித்தபடி இன்று வெளியாகும் கொண்டாடலாம் என்று விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால், மாஸ்டர் டிரைலர் வெளியாகவில்லை. இதனால், விஜய் ரசிகர்கள் முதல் முறையாக ஏமாற்றமடைந்தனர்.

ஆம், அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியான போதிலும் மாஸ்டர் டிரைலர் வெளியாகாதது அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

கொரோனா வைரஸ் காரணமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பயனாக ஜந்தா கர்பியூ எனப்படும் ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன் காரணமாக மாஸ்டர் டிரைலர் திட்டமிட்டுள்ளபடி இன்று வெளியாகவில்லை. எனினும், வரும் 25 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மாஸ்டர் டிரைலர் வெளியாகும் என்று தகவல் வெளியாகி வருகிறது.

இது குறித்து தயாரிப்பு நிறுவனம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக மாஸ்டர் திட்டமிட்டுள்ளபடி வெளியாகுமா என்பது கேள்விக்குறிதான்.

3

Visu: சம்சாரம் அது மின்சாரம் புகழ் விசு காலமானார்!

0
Visu Passed Away

Visu Passed Away; சம்சாரம் அது மின்சாரம் புகழ் விசு காலமானார்! விசு உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானர்.

தமிழ் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என்று பல திறமைகளைக் கொண்ட விசு இன்று சென்னையில் காலமானார்.

கடந்த 1941 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது இயற்பெயர் மீனாட்சிசுந்தரம் ராமசாமி விஸ்வநாதன். படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல், மேடை நாடகங்களிலும், தொலைக்காட்சி தொடரிலும் பங்கேற்றுள்ளார்.

விசு இயக்கத்தில் வந்த சம்சாரம் அது மின்சாரம் பெரும்பாலான மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

சம்சாரம் அது மின்சாரம் படத்திற்கு சிறந்த  தமிழ் படத்திற்கான பிலிம் பேர் விருது கிடைத்துள்ளது.

இந்த நிலையில், வயது முதிர்வு காரணமாக இன்று மாலை 5.30 மணிக்கு உயிரிழந்தார். விசுவின் மறைவு கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், விசுவிற்கு கிஷ்மு, ராஜாமணி மற்றும் குரியகோஸ் ஆகிய சகோதரர்கள் இருக்கின்றனர். மூவரும் சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

3

இதுவரை மெட்ரோல போகாத விஜய்க்கு இப்படியொரு சர்ப்ரைஸா?

0
Vijay Master Fight Scene

Master Fight Scene;இதுவரை மெட்ரோல போகாத விஜய்க்கு இப்படியொரு சர்ப்ரைஸா? விஜய் இதுவரை மெட்ரோ ரயிலில் செல்லவில்லையாம். ஆனால், மாஸ்டருக்காக கிட்டத்தட்ட 3 மணிநேரம் மெட்ரோ ரயிலில் சண்டைக் காட்சி எடுக்கப்பட்டதாம்.

மாஸ்டர் (Master Fight Scene) படம் பற்றிய சண்டைக் காட்சிகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படம் அறிவித்தபடி வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் (Vijay Metro Train Travel) நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள படம் மாஸ்டர். வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், கொரொனா வைரஸ் (Corona Virus) காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், இந்த மாதம் திரைக்கு வர வேண்டிய படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

மேலும், அந்தப் படங்களுக்குதான் முதலில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், மாஸ்டர் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாஸ்டர் சண்டைக் காட்சிகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த சண்டைக் காட்சிதான் படத்தின் முதல் சண்டைக்காட்சி என்றும், நன்றாக வந்திருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.

மேலும், சென்னை மெட்ரோவில் இந்த சண்டைக் காட்சி எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக 3 மணிநேரம் வாடகைக்கு எடுத்துள்ளார்களாம்.

இதுவரை விஜய் சென்னை மெட்ரோவில் சென்றதில்லை என்ற போதிலும், மாஸ்டர் படத்தின் மூலம் மெட்ரோவிலே சென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

அதோடு, மெட்ரோவில் இருந்தபடி சென்னையை ரசித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், மெட்ரோ ரயிலில் எங்கிருந்து சென்றார் என்ற தகவல் வரவில்லை.

எனினும், இதுவே இப்போது விஜய் ரசிகர்களுக்கு போதும். இன்று மாலை 5 மணிக்கு மாஸ்டர் டிரைலரும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

மகிழ்ச்சியில்லாத நாடுகள் பட்டியலில் இந்தியா 10-வது இடம்

0

சமூக நிலை, பொருளாதார நிலை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, சுதந்திரம் மற்றும் ஊழல் லஞ்சம் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு ஐநா பட்டியலை தயாரித்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது வருடமாக முதல் இடத்தில் பின்லாந்து இருந்து வருகிறது.

மொத்தம் 153 நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது இடத்தில் டென்மார்க், மூன்றாவது இடத்தில் ஸ்விட்சர்லாந்து, நான்காவது இடத்தில் நார்வே உள்ளது.

ஐந்தாவது இடத்தில் நெதர்லாந்து போன்ற நாடுகளும், ஸ்வீடன், நியூசிலாந்து, ஆஸ்திரியா, லக்சம்பர்க் போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

லக்சம்பர்க் நாடு முதன் முறையாக முதல் பத்து இடங்களுக்குள் இடம் பிடித்திருக்கிறது.

முதல் 10 இடங்களில் நியூசிலாந்து நாட்டைத் தவிர மற்ற அனைத்து நாடுகளும் ஐரோப்பா கண்டங்களில் உள்ள நாடாகும்.

11வது இடத்தில் கனடாவும், பிரிட்டன் 13வது இடத்திலும் நேபாளம் 15 ஆவது இடத்திலும், அமெரிக்கா பதினெட்டாவது இடத்திலும் உள்ளது.

பெரிய அளவில் மேம்பாடு இல்லாத சிறிய நாடா நேபாளம் மக்கள் அமெரிக்கர்களை விட சந்தோசமாக வாழ்கிறார்கள் என்று இந்தப் பட்டியல் கூறியுள்ளது.

ஆசிய நாடான தீவிரவாதிகளின் முக்கிய நாடான பாகிஸ்தான் 29வது இடத்திலும் மற்றும் தெற்காசிய நாடான இலங்கை 107 வது இடம் மற்றும் வங்கதேசம் 130 வது இடத்தில் இருந்து வருகிறது.

இந்தப் பட்டியலில் இந்தியாவிற்கு 144 வது இடம் கிடைத்துள்ளது.

அதாவது மகிழ்ச்சியில்லாத பட்டியலில் இந்தியாவிற்கு பத்தாவது இடம் கிடைத்துள்ளது. முதலிடத்தில் ஆப்கானிஸ்தான், இரண்டாவது இடத்தில் தெற்கு சூடானும், மூன்றாமிடத்தில் ஜிம்பாப்வே உள்ளன.

சந்தோஷமான சிட்டி பட்டியலில் பின்லாந்தின் ஹேல்சில்கி நகரும், இரண்டாவது இடத்தில் டென்மார்க்கின் ஆர்கஸ் நகரும், மூன்றாவது இடத்தில் நியூசிலாந்தில் வெல்லிங்டன் நகரும் பத்தாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரும் உள்ளன.

சந்தோசம் இல்லாத சிட்டி பட்டியலில் முதலிடத்தில் ஆப்கானிஸ்தானின் காபூல் நகரும்,
இரண்டாம் இடத்தில் ஏமன் நாட்டின் சனா நகரும், 3வது இடத்தில் பாலஸ்தீன நாட்டின் காசா நகரும் உள்ளன.

இந்தியாவில் தலைநகரான டெல்லி நகரம் மகிழ்ச்சியில்லாத பட்டியலில் இடம் பிடித்துள்ளது

3