கொரோனா வளர்ப்பு பிராணிகள் மூலம் பரவுமா? பிரபலங்கள் கூறுவது என்ன?
வளர்ப்பு பிராணிகள் மற்றும் பிற விலங்குகள் வழியாக கொரோனா பரவாது. கோவிட் 19 விலங்குகளை பாதிக்காது.
இது குறித்து உலக சுகாதார மையம் கூறுகையில் ‘கோவிட் 19 விலங்குகள் மூலம் பரவுவதில்லை என இது வரை நடந்த ஆய்வில் தெரிகிறது. இது வரை விலங்கு பாதிக்கப்பட்டதாக கேஸ் எதுவும் இல்லை’.
நேற்று பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர், வழக்கம் போல் விலங்குகளுடன் பழகுங்கள் அவைகள் மூலம் பரவாது என சமூக வலைதளத்தில் ஒரு பதிவிட்டார்.
மேலும் அவை மூலம் எந்த வித பாதிப்பும் வராது. பிற பாலிவுட் பிரபலங்களும் இது குறித்து பதிவிட்டுள்ளனர்.
Natasha Singh Marriage; விஜய்யை திருமணம் செய்து கொள்ள ஆசை பிரபல நடிகை ஓபன் டாக்! நடிகர் விஜய்யை திருமணம் செய்து ஆசைப்படுவதாக நடிகை நடாஷா சிங் தெரிவித்துள்ளார்.
குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்களை இயக்கியவர் ராஜூ முருகன். இவரது இயக்கத்தில் வந்த 3 ஆவது படம் ஜிப்ஸி.
அரசியல், காதல் கதைகளை மையப்படுத்திய இந்தப் படத்தில், ஜீவா, நடாஷா சிங் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அண்மையில், ஒரு பேட்டியில் கலந்து கொண்ட அவரிடம் ஒரு சில கேள்விகள் கேட்கபட்டது. நீங்கள் யாரை கொலை செய்ய விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஜீவா என்று யோசிக்காமல் பதிலளித்துள்ளார்.
தொடர்ந்து யாருடன் சேர்ந்து டேட்டிங் செல்ல ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு சிரித்துக் கொண்டே தனுஷ் என்று பதிலளித்துள்ளார்.
இறுதியாக, நீங்கள், யாரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்கவே, அதற்கு தளபதி விஜய் தான் என்று பதிலளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால், ஜிப்ஸி படமும் திரையரங்குகளில் இருந்து நீக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்ட பிறகு வரும் 31 ஆம் தேதிக்குப் பின் திரையரங்குகள் திறக்கப்பட இருக்கிறது. அப்போது, ஜிப்ஸி படம் மீண்டும் மறுவெளியீடு செய்யப்படும் என்று படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Suhasini Mani Ratnam; சரியான நேரத்தில் சரியான வீடியோ வெளியிட்ட சுஹாஷினி! நடிகை சுஹாசினி தனது மகன் வெளிநாட்டிலிருந்து வந்ததிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.
நடிகை சுஹாசினி தனது மகன் வெளிநாட்டிலிருந்து சென்னை வந்து தொடர்ந்து 5ஆவது நாளாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் 100 நாடுகளுக்கும் மேலாக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நடிகை சுஹாசினியின் மகன் லண்டனிலிருந்து திரும்பி வந்து தனியறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது: நான் இப்போது எனது மகன் நந்தன் கிட்ட பேசிக்கொண்டிருக்கிறேன். லண்டனிலிருந்து கடந்த 18 ஆம் தேதி சென்னை வந்தார். வந்ததிலிருந்து தனியறையில்தான் இருக்கிறார்.
14 நாட்கள் வெளிநாட்டிலிருந்து வந்த பிறகு யாரிடமும் நெருங்கி பழகாமல் தூரத்தில் இருந்து அவர்களது குடும்பத்தாரிடமும் நெருங்கி பேசாமல் இருக்க வேண்டும்.
சாப்பாடு கூட ஒரு அறையில் கொண்டு வந்து வைத்துவிடுவார்கள். அப்போது கூட அவர்கள் கையை கழுவிக்கொள்வார்கள். அதன் பிறகு ஸ்ப்ரே அடிப்பார்கள், அடுத்து நான் கையை கழுவிக் கொண்டு தான் அந்த சாப்பாட்டை சாப்பிடுவேன்.
எனக்கு இப்போது வைரஸ் இல்லை. எனினும், இருப்பது போன்று உணர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். எல்லோரும் இது போன்றுதான் இருக்க வேண்டும் என்று அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கனிகா கபூர் முதல் குடியரசு தலைவர் வரை எப்படி கொரோனா ஜெயின் லிங்க் கணக்கிடப்பட்டது என்பதற்கான வரைபடம். கொரோனா பரவிய வரைபடம் kanika kapoor corona tree map.
லண்டன் பயணம்
கடந்த வாரம் கனிகா கபூர் லண்டன் சென்று உள்ளார். அங்கு இருந்து மார்ச் 9-ம் தேதி விமானம் மூலம் மும்பை வந்தவர் கொரோனா பரிசோதனை செய்யாமல் எஸ்கேப் ஆகியுள்ளார்.
மக்கள் கூட்டம் கூடும் என விமானத்தில் இருந்து இறங்கியவுடன் பாத்ரூமிற்கு சென்று உள்ளார். அங்கு இருந்த ஊழியர் ஒருவருக்கு பணம் கொடுத்து பரிசோதனை செய்து கொள்ளாமல் பிரபலம் என்ற வாய்ப்பை பயன்படுத்தி தப்பி உள்ளார்.
லக்னோ பார்ட்டி
மும்பையில் இருந்து விமானம் மூலம் லக்னோ சென்றுள்ளார். இந்த முறை உள்ளூர் பயணம் என்பதால் கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை.
மார்ச் 13, 14, 15 ஆகிய தேதிகளில் லக்னோவில் பல்வேறு பார்டிகளில் கலந்துகொண்டு உள்ளார். அதில் ஒன்று வசுந்தரா ராஜே கொடுத்த விருந்து நிகழ்ச்சியும் அடங்கும்.
இந்த நிகழ்ச்சியில் வசுந்தராவின் கன்னத்தை உரசியபடி புகைப்படம் கூட எடுத்துள்ளார். இந்த சம்பவம் நிகழ்ந்து அடுத்த நாள் மார்ச் 16-ல் கனிகாவிற்கு கொரோனா வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டது.
மருத்துவப் பரிசோதனை
மருத்துவப்பரிசோதனை செய்து கொண்டதில் இரண்டு நாட்களுக்கு முன் ரிசல்ட் வெளியாகியது. அதில் கனிகாவிற்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனிகா கலந்துகொண்ட பார்ட்டியில் வந்திருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டது.
இதில் வசுந்தரா ராஜே மற்றும் அவரது மகன் துஷ்யந்த் சிங்கிற்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
அதிஷ்ட வசமாக எனக்கும் என் மகனுக்கும் கொரோனா தொற்று பரவில்லை என வசுந்தரா டிவிட்டரில் தெரிவித்துள்ளார்
இதேபோல் குடியரசுத்தலைவருக்கும் சோதனை நடத்தப்பட்டது. அவருக்கு கொரோனா தோற்று உள்ளதா என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
இருப்பினும் வசுந்தராவிற்கும், அவரது மகனுக்கும் தொற்று இல்லை என்பதால் அவர்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கும் தொற்று பரவியிருக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.
Shriya Saran; ரணகளத்திலும் குதூகலம்:ஸ்ரேயாவின் பால்கனி டான்ஸ்! நடிகை ஸ்ரேயா பால்கனி நின்று கொண்டு டான்ஸ் ஆடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உலகமே கொரோனா (Corona Virus) பீதியில் இருக்கிறது. எத்தனையோ உயிர் இழப்பு ஏற்பட்டும் வருகிறது.
அப்படியிருக்கும் போது பார்சிலோனாவில் இருந்து கொண்டு டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்றை ஸ்ரேயா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து உலக தலைவர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என்று யாரும் தப்பவில்லை.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கி தற்போது இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டிற்கு சென்றிருந்த நடிகை ஸ்ரேயா சரண், அவரது கணவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவர்கள் பார்சிலோனாவில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். கணவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்ட போதிலும் ஸ்ரேயாவின் அலப்பறைக்கு அளவே இல்லை. அந்தளவிற்கு அவர் நடந்து கொண்டுள்ளார்.
ஆம், கணவருடன் சேர்ந்து கொண்டு பால்கனியில் நின்று கொண்டு ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Corona Virus; பாலிவுட் நடிகைகள் எடுத்துக்கொண்ட கை கழுவும் சேலஞ்ச்! ஷில்பா ஷெட்டி, தீபிகா படுகோன், அனுஷ்கா ஷர்மா ஆகியோர் உள்பட சினிமா பிரபலங்கள் பலரும் Safe Hands Challenge எடுத்துக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸை (Corona Virus) கண்டு உலகமே அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. சீனா, இத்தாலி, மலேசியா, சிங்கப்பூர், பாகிஸ்தான், அமெரிக்கா என்று 100 நாடுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவி மக்களை காவு வாங்கி வருகிறது. தற்போது இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், மத்திய அரசு ஜந்தா கர்பியூ (Janta Curfew) என்று ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டும் என்று உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் (Corona Updates In India) ஒருதொற்று நோய் என்பதால், அனைவரும் அடிக்கடி தங்களது கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறையும், மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், சினிமா பிரபலங்கள் தங்களது வீடுகளில் இருந்து கொண்டு கைகளை எப்படியெல்லாம் பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்கிறார்கள் என்று நீங்களே பாருங்கள்…
இவர்களைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் குறித்து கோலிவுட் பிரபலங்கள் பலரும் வீடியோ வெளியிட்டு தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் உலக தண்ணீர் தினம் மார்ச் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தண்ணீரின் முக்கியத்துவத்தையும் அதை குறைத்து பயன்படுத்துவதையும் கூறுவது இதன் நோக்கமாகும்.
உலக தண்ணீர் தினம் 2020 தீம் (World Water Day 2020 theme)
இந்த நாளில் தண்ணீரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும். நிலத்தடி நீரின் முக்கியத்துவம்,தண்ணீரால் எதிர்காலத்தில் வரும் பிரச்சனைகள் ஆகியவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
இப்பொழுதே தண்ணீர் பற்றாக்குறையால் எவ்வளவு பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம் என்பது நம் அறிந்ததே.
1992ஆம் ஆண்டு முதன் முதலில் யுனைடெட் நேசனால் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனரியோவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த தலைப்புகளில் தொடர்ந்து ஒவ்வொரு நாளின் சிறப்புகளைப் பற்றி எழுதி வருகிறோம். தொடர்ந்து படியுங்கள். உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
அக்கட்டுரைகளைப் படித்து அன்றைய நாளின் சிறப்புகள் என்ன என்பதைப் பற்றியும், அது ஏன் உருவானது? எதற்காக கொண்டாடப்படுகிறது என்ற வரலாறு பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை கொன்றுள்ளது.
கொரோனா வைரஸ் தடுக்க பல நாடுகள் முன்னெச்சரிக்கை எடுத்து வரும் நிலையில் பல நாடுகள் வெளிநாட்டு விமான சேவைகளையும் நிறுத்தி வைத்துள்ளது.
கொரோனாவை கட்டுபடுத்த மற்ற நாட்டிலிருக்கும் தன் சொந்த மக்களை அழைத்து வர பல நாடுகள் தயங்கும் அஞ்சவும் செய்கிறது.
இந்த நிலையில்தான் கியூபா அரசு மனிதநேயத்துடன் ஒரு நல்ல காரியத்துக்கு உதவிசெய்து உலகளவில் பாராட்டை பெற்று வருகிறது.
600 சுற்றுலா பயணிகளுடன் எம்எஸ் பிரீமர் என்ற பிரிட்டனைச் சேர்ந்த கப்பல் கரீபியன் கடலில் பயணித்துக் கொண்டிருந்தது.
பயணிகள் பெரும்பாலானோர் பிரிட்டனை சேர்ந்தவர் ஆவார்கள். அவர்களுக்கு அந்த கப்பலில் கொரோனா தொற்று அறிகுறி இருப்பது தெரியவந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தக் கப்பலை ஏதாவது ஒரு துறைமுகத்திற்கு நிறுத்த பல கரீபியன் தீவுகளிடம் உதவி கேட்டது. ஆனால் எந்த அரசும் இந்த கப்பலுக்கு உதவ முன்வரவில்லை.
ஆகவே பிரிட்டன் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் அமெரிக்கா மற்றும் கியூபா அரசுகளிடம் கப்பலை நிறுத்த அனுமதிக்குமாறு உதவி கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆனால் அமெரிக்காவோ அதற்கு தடை விதித்தது. கியூபா அரசு மனிதம் போற்றி உதவ முன்வந்தது.
அவர்கள் கேட்டுக் கொண்டதை கியூபா அரசும் ஏற்று அந்த கப்பலை எங்கள் தேசத்தில் நிறுத்துமாறு அனுமதித்தது.
கியூபாவில் தற்போது வரை 5 நபர்களுக்கு மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த கப்பலின் மூலம் அதிக மக்களுக்கு கொரோனா வந்து விடுமோ என்று அஞ்சாமல் அந்தக் கப்பலுக்கு உதவ முன்வந்ததால் உலகமே கியூபா அரசை பாராட்டி வருகிறது.
கியூபா கட்டுபாட்டில் உள்ள பஹமாஸ் என்னும் துறைமுகத்தில் இந்தப் பீரமர் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதில் உள்ள சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கொரோனா சோதனைக்கு பிறகு கியூபா நாட்டிற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
அந்தக் கப்பலில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாகவும், 52 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகவும் இண்டிபெண்டன்ஸ் செய்தியில் வெளியிடப்பட்டுள்ளது.
வைரஸ் பாதித்தவர்களை கியூபா வில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும். மற்றவர்களை 4 விமானங்கள் மூலம் பிரிட்டனுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கியூபா அரசு தெரிவித்துள்ளது.
உலகமே கொரோனா சவாலை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்த கப்பலை வரவேற்று அதில் மக்களின் காப்பாற்றும் எண்ணத்துடன் செயல்பட்டது கியூபா அரசை பாராட்டியே ஆக வேண்டும்.
இதுபோன்ற செயல் கியூபாவிற்கு புதிதல்ல
கியூபா நாட்டின் சுகாதார வழங்குநர்கள் ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸ் பாதிப்பில் கியூபா மருத்துவர்கள் செய்த உதவிகளால் பாராட்டப்பட்டனர்.
ஊரடங்கு சட்டத்தின் நோக்கமும் பயனும் என்ன? கொரோனா எந்த அளவிற்கு ஆபத்தானது, ஊரடங்கு சட்டத்தின் நோக்கம்
ஊரடங்கு சட்டத்தை பற்றி பேசுவதற்கு முன் கொரோனா எவ்வாறு பரவுகிறது வீரியம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
கொரோனா எந்த அளவிற்கு ஆபத்தானது
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு குறைந்தது 5 நாட்கள் கழித்தே அறிகுறி தென்படலாம். ஒரு சிலருக்கு 10 நாட்கள் கழித்து கூட அறிகுறி தென்படுகிறது.
இதுபோன்ற தருணங்களில் அவர் மற்றவர்களுடனோ அல்லது மக்கள் அதிகம் கூடும் இடங்களிலோ நேரம் செலவிடும் பொழுது அவருக்கு அருகில் இருந்த நபர் என ஒவ்வொருவராக பரவக்கூடும்.
இது ஒரு சங்கிலி தொடர் போன்று பரவக்கூடியது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களே முதலில் பாதிக்கப்படுகின்றனர்.
மிக எளிதாக ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் பரவும் தன்மை கொண்டுள்ளது. சீனாவில் பரவிய வேகம் உங்களுக்கு தெரியும். அதைவிட இத்தாலி சிறிது மெத்தனமாக இருந்ததால் அது படும் பாடை பார்த்தாலே புரியும்.
சீனாவை விட அதிக இறப்பு விகிதம் இத்தாலியில் ஏற்பட்டுள்ளது என்பதை தாங்கள் தினசரி செய்தி படித்தாலே தெரியும். இதுவரை 3,00,000 பாதிக்கப்பட்டுள்ளனர், 13000 நபர்களுக்கு மேல் உயிரழந்துள்ளனர்.
கொரோனா பரவும் சங்கிலி தொடரை உடைப்பதே இதன் ஊரடங்கு சட்டத்தின் நோக்கமும். அனைவரும் எங்கும் பயணம் செய்யாமல் வீட்டில் இருப்பது அதன் வேகத்தை குறைக்கும்.
உலோகத்திலோ துணியிலோ அல்லது பிற இடங்களிலோ சில மணி நேரங்களில் இருந்து பல நாட்கள் வரை உயிரோடு இருக்கும் தன்மை கொண்டது. ஆராய்ச்சி இன்னும் சென்று கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு நாட்டின் கொரோனா பரவிய வேகத்தை ஒவ்வொரு வாரமாக கணக்கெடுத்தால் நான்காம் வாரத்தில் அது பரவிய வேகத்தை நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.
இத்தாலியில் ஐந்து வாரத்திற்கு 3, 152, 1036, 6362, 21157 இத்தனை மடங்கில் அதிகரித்துள்ளது. இந்தியாவில் 3, 24, 105, 315 வரை நான்கு வாரத்திற்கு பரவியுள்ளது.
அடுத்த வரும் வாரங்களில் மிக தீவிரமாக பரவும் இதனால் சுய தனிமைப்படுத்துதல் மிக அவசியமான, தவிர்க்க இயலாத ஒன்று.
இந்நேரத்தில் அனைவரும் சுய தனிமைப்படுத்தல் நல்ல முடிவு தான். ஆனால் இதுவே தீர்வு இல்லை. தேவையில்லாத பயணங்களை குறைப்பது மிகவும் நல்லது.
ரயிலில் விமானத்தில் பயணம் செய்த பெரும்பாலோனோருக்கு மிக எளிதாக கொரோனா பரவுகிறது. எனவே விமானம், ரயில், பஸ் சேவைகளை நிறுத்தியது ஒருவகையில் நல்லது.
இதை ஒரு நாள் மட்டும் இல்லாமல் ஒரு வாரம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது மிகவும் அவசியம். பணத்தை விட உயிர் மிகவும் அவசியம்.
வருவாய் பாதிக்கும் என வேலைக்குச் சென்று கொரோனா பரப்பி முற்றிலும் இறப்பதை விட, ஒரு வாரம் அமைதியாய் இருந்து பூரண ஆயுள் பெறுவதே சிறந்தது.
இதை விளையாட்டாக எடுத்துக்கொண்டு மீண்டும் கொரோனாவுடன் உரை வலம் வந்தால், இந்தியா அதிலிருந்து மீண்டு வர 6 மதமாவது ஆகும்.
அதுவும் சீனாவை போன்று மிகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே. எனவே இதற்கு முதலில் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இந்த நோயை விரட்ட ஒன்று கூடுவதை தவிர்த்துவிட்டு தனிமை படுத்திக்கொண்டாலே பேதும், அதுவே தன்னால் அழிந்துவிடும்.