Home Blog Page 24

புதுச்சேரி பல்கலைகழகம் வியாழக்கிழமை 2020-2021ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்களை அனுப்ப ஆன்லைன் மூலம் அனுமதி

புதுச்சேரி பல்கலைகழகம்

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைகழகம் வியாழக்கிழமை 2020-2021ஆம் ஆண்டிற்கான முதுகலை படிப்புகள், முதுநிலை பட்டயப்படிப்புகள், 5 வருட ஒருங்கினைந்த பட்டயப்படிப்புகள் மற்றும் ஆய்வுப்படிப்புகள் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்களை அனுப்ப ஆன்லைன் மூலம் அனுமதி.

விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் ஜூலை 31

விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாளாக ஜூலை 31ன்றை அறிவித்தது. மேலும் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வை ஆகஸ்ட் மாதம் 21,22 மற்றும் 23 ஆம் தேதிகளில் நடத்த முடிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்கலைகழக இணையதளத்தில் முழுவிவரங்கள்

பல்கலைகழகம் 2020-2021 கல்வியாண்டிற்கான படிப்புகள் பட்டியலிட்ட திட்டஅறிக்கையை www.pondiuni.edu.in என்னும் அதிகாரப்பூர்வ இணைய முகவரியில் வெளியிட்டுள்ளது.

3

உன் மாஸ்டர் பிளான் தான் என்ன? விஜய் சேதுபதியிடம் கேட்ட பார்த்திபன்!

0
Vijay Sethupathi Tughlaq Durbar Movie Stills

Vijay Sethupathi; உன் மாஸ்டர் பிளான் தான் என்ன? விஜய் சேதுபதியிடம் கேட்ட பார்த்திபன்! துக்ளக் தர்பார் படத்தின் புகைப்படத்தை தனது டுவிட்டரில் பகிர்ந்து நடிகர் பார்த்திபன், உன் மாஸ்டர் பிளான் தான் என்ன என்று விஜய் சேதுபதியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

துக்ளக் தர்பார் படத்தின் விஜய் சேதுபதி அரசியல் கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில், மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, புஷ்பா, யாதும் ஊரே யாவரும் கேளிர், க/பெ.ரணசிங்கம், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துக்ளக் தர்பார். வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.

கோவிந்த வசந்தா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். துக்ளக் தர்பார் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடித்து வருகிறார். மேலும், பார்த்திபன் இந்தப் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில், விஜய் சேதுபதி இருவிதமான சட்டை அணிந்து அமர்ந்திருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.

அதில் ஒன்று தலைகீழாக தெரிகிறது. மேலும், விஜய் சேதுபதியின் தலைக்கு மேலே பட்டாம் பூச்சி பறப்பது போன்றும் காட்டப்பட்டுள்ளது.

இதுஒருபுறம் இருக்க, துக்ளக் தர்பார் படத்தின் புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், விஜய் சேதுபதி உடன் தான் இருக்கும் புகைப்படத்தை நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது: பார்த்திபன்:நானும் ரவுடிதான்,நீயும் ரவுடிதான்.இன்னைக்கு உன் துக்luck தர்பார் எவ்வளவு பெரிய Level-ல இருக்குன்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சுகிட்டு”இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா”ங்கிற Range-க்கு பவ்யமா கையை கட்டிகிட்டு நின்னா என்ன அர்த்தம்?

உன் MASTER plan தான் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

3

பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி: கமல் ஹாசன் உதவி!

0
Ponnambalam Hospitalised

Ponnambalam; சிறுநீரக கோளாறு காரணமாக பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி! வில்லன் நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாட்டாமை புகழ் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 1988 ஆம் ஆண்டு கலியுகம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் வில்லன் நடிகர் பொன்னம்பலம். இந்தப் படத்தில் சிறைக்கைதியாக நடித்திருந்தார்.

Moonnam Mura, Orkkapurathu ஆகிய மலையாளப் படங்களில் நடித்தார். அதன் பிறகு தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். அபூர்வ சகோதரர்கள், வெற்றி விழா, மைக்கேல் மதன காம ராஜன், வெற்றி படிகள், புது மனிதன், மாநகர காவல், நாங்கள்,…

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், தங்கராசு, பரதன், நாளைய செய்தி, கோட்டை வாசல், செந்தமிழ் பாட்டு, எல்லைச்சாமி, சாமுண்டி, வால்டர் வெற்றிவேல், மாமியார் வீடு, இந்து, முத்து, இந்திய, மாமன் மகள்,…

காந்தி பிறந்த மண், தர்மசக்கரம், அருணாச்சலம், வள்ளல், வல்லரசு, மாயி, தை பொறந்தாச்சு, லூட்டி, ராஜ்ஜியம், தமிழ், நாட்டாமை, சாமி, தென்னவன், ஆஞ்சநேயா, ஜெய், கில்லி, கிரி, அருள், கோமாளி என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 1988 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகி தற்போது வரை தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

நாட்டாமை, முத்து, அருணாச்சலம் ஆகிய படங்கள் பொன்னம்பலத்தின் வில்லத்தனத்தை பறைசாற்றும் படங்களாக அமைந்துள்ளன.

ரஜினிகாந்த், விஜயகாந்த் ஆகியோருடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சங்கர் குரு, பேர் சொல்லும் பிள்ளை, சத்யா, என் தங்கை கல்யாணி என்று பல படங்களுக்கு ஸ்டண்ட் மேனாகவும் இருந்துள்ளார்.

இவ்வளவு ஏன், கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில், நடிகர் பொன்னம்பலம் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் உள்ள விஹெச்எஸ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொன்னம்பலத்தின் மருத்துவ சிகிச்சைக்கு கமல் ஹாசன் நிதியுதவி செய்து வருகிறார். மேலும், பொன்னம்பலத்தின் இரு குழந்தைகளையும் கமல் ஹாசன் தான் படிக்க வைத்தும் வருகிறார்.

அதோடு, தினமும் பொன்னம்பலத்தை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்னம்பலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொன்னம்பலம் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

தகவல் தொழிநுட்ப துறையில் 10% பணியாட்கள் அலுவலத்தில் இருந்து பணிபுரிய அனுமதி:சென்னை

தகவல் தொழிநுட்ப

சென்னை: தமிழ்நாடு அரசு வியாழக்கிழமை தகவல் தொழிநுட்ப துறையில் நேரடியாக பணிபுரிபவர்களின் பணித் தேவையை கருத்தில் கொண்டு 10% பணியாட்களை சென்னை மண்டலத்தில் உள்ள அலுவலகங்களில் பணிபுரிய அணுமதி வழங்கியது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பயண்

தமிழக அரசின் இந்த முடிவால் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களாக கருதப்படும் டி.சி.எஸ், ஹெச்.சி.எல், காக்னிசெண்ட், ஐபிஎம் மற்றும் மற்ற பல நிறுவனங்கள் பயணடையும் என தெரிகிறது.

இந்த அறிவிப்பு உடனடியாக அமல்படுத்தப்படுகிறது

மேலும் அந்த அறிக்கையில் பணியாட்கள் அலுவல பேருந்தில் சென்று பணிபுரியலாம் என தெரிவிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பு உடனடியாக அமல்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த குழு ஒன்று மாநில தகவல் தொழ்நுட்ப செயலாளர் கன்ஸ் ராஜ் வெர்மாவை வெள்ளிக்கிழமை சந்தித்து தகவல்தொழில்நுட்ப பணியாளர்களின் தேவை மற்றும் அவசியம் குறித்து தெரிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

3

அரசியலில் களமிறங்கிய விஜய் சேதுபதி: வைரலாகும் துக்ளக் தர்பார் புகைப்படங்கள்!

0
Tughlaq Darbar Stills

Tughlaq Durbar Movie Stills; அரசியலில் களமிறங்கிய விஜய் சேதுபதி: வைரலாகும் துக்ளக் தர்பார் புகைப்படங்கள்! விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் துக்ளக் தர்பார் படத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

துக்ளக் தர்பார் படத்தின் விஜய் சேதுபதி அரசியல் கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில், மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, புஷ்பா, யாதும் ஊரே யாவரும் கேளிர், க/பெ.ரணசிங்கம், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துக்ளக் தர்பார். வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. கோவிந்த வசந்தா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

துக்ளக் தர்பார் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடித்து வருகிறார். மேலும், பார்த்திபன் இந்தப் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில், விஜய் சேதுபதி இருவிதமான சட்டை அணிந்து அமர்ந்திருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.

அதில் ஒன்று தலைகீழாக தெரிகிறது. மேலும், விஜய் சேதுபதியின் தலைக்கு மேலே பட்டாம் பூச்சி பறப்பது போன்றும் காட்டப்பட்டுள்ளது.

இதுஒருபுறம் இருக்க, துக்ளக் தர்பார் படத்தின் புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், விஜய் சேதுபதி மற்றும் பார்த்தின் ஆகியோர் அரசியல் கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது.

இதுவரை விஜய் சேதுபதியை அரசியல் கெட்டப்பில் பார்க்காத ரசிகர்கள், விஜய் சேதுபதி அரசியல் கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்களை கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.

 

3

தீபாவளியா? பொங்கலா? மாஸ்டர் குறித்து சேவியர் பிரிட்டோ தகவல்!

0
Thalapathy Vijay Master Movie

Master Theatre Release; தீபாவளியா? பொங்கலா? மாஸ்டர் குறித்து சேவியர் பிரிட்டோ தகவல்! தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் எப்போது திரைக்கு வரும் என்பது குறித்து தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் எப்போது திரைக்கு வரும் என்பது குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் மாஸ்டர்.

அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை விஜய்யின் மாமா சேவியர் பிரிட்டோ தனது எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.

இளம் இசையமைப்பாளர் அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள 12 பாடல்களில் 8 பாடல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் அமோக வரவேற்பு பெற்றது.

கடந்த மார்ச் மாதம் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் பாடல்கள் வெளியிடப்பட்டது. இதையடுத்து மாஸ்டர் டிரைலர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

மாஸ்டர் படமும் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், நாடு முழுவதும் அச்சுறுத்திய கொரோனா வைரஸ் காரணமாக, திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

வரும் 31 ஆம் தேதி வரையில் 6ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்டவை இயங்குவதற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

திரையரங்குகள் திறக்கப்படாததால், பொன்மகள் வந்தாள், பென்குயின் ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதே போன்று மாஸ்டர் படமும் வெளியாக வாய்ப்பிருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், தனியார் இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்த தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மாஸ்டர் படம் குறித்து புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, திரையரங்குகள் எப்போது திறக்கப்படுமோ அப்போதுதான் மாஸ்டர் படம் வெளியிடப்படும்.

அது, தீபாவளிக்கோ அல்லது பொங்கலுக்கோ என்பது திரையரங்குகள் திறக்கப்படுவதை பொறுத்துதான் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் திரையரங்குகள் திறக்கப்பட்டதும் பெரிய ஹிட் படம் என்றால் அது மாஸ்டர் படமாக இருக்கும். விஜய்யும் திரையரங்குகள் திறக்கப்பட்ட பிறகு மாஸ்டர் படத்தை வெளியிட வேண்டும் என்பதில் திட்டவட்டமாக இருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி: சென்னை

அமைச்சர் பி.தங்கமணிக்கு கொரோனா

சென்னை: மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணிக்கு புதன்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட. தமிழக முதல்வரின் அமைச்சரவையில் கொரோனா பாதிப்படைந்த இரண்டாவது அமைச்சர் ஆவார். இதற்கு முன் அமைச்சர் கே.பி. அன்பழகன் கொரோனாவால் பாதிப்படைந்தார்.

பரிசோதனையின் கொரோனா அறிகுறி இல்லை

புதன் கிழமை நடந்த முதல்வர் எடப்பாடியுடனான சந்திப்பில் மின்சாரத்துறை அமைச்சர் பங்கேற்கவில்லை. இதை அடுத்து அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், ஆனால் பரிசோதனையின் பொழுது எந்த அறிகுறியும் தெரியவில்லை, எனவும் தெரிவிக்கப்படுகிறது.

செவ்வாய்கிழமை நடந்த அரசு நிகழ்ச்சியில் இருந்த பி.தங்கமணி

செவ்வாய் அன்று முதல் அமைச்சருடன் செவ்வாய்கிழமை நடந்த அரசு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்கட்சி தலைவர் நலம் விசாரித்தார்

எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் அமைச்சர் தங்கமணியிடம் உடல் நலம் முன்னேற வாழ்த்து தெரிவித்ததாக தெரிவித்தார்.

3

ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய ரோஜா!

0
Roja Drives Ambulance

Roja Driving Ambulance; ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய ரோஜா! நடிகையும், நகரி தொகுதி எம்.எல்.ஏவுமான ரோஜா ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

நகரி தொகுதி எம்.எல்.ஏ. ரோஜா ஆம்புலன்ஸ் ஓட்டிச் சென்று அனைவரிடமும் பாராட்டு பெற்றுள்ள நிலையில், அவசர கால ஊர்தியை ஓட்ட ரோஜாவிற்கு லைசென்ஸ் உள்ளதா? என்று தெலுங்கு தேசம் கட்சியினர் விமர்சனம் செய்துள்ளனர்.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ரோஜா. செம்பருத்தி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி ஹீரோயினாக உயர்ந்தவர்.

சூரியன், உழைப்பாளி, வீரா, அதிரடி படை, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், ராசைய்யா, மக்கள் ஆட்சி, அரசியல், நாட்டாமை, சுயம்வரம், மிட்டா மிராசு, மாயன், அரசு, சகுனி, மாசாணி என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

பின்னர், ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சினிமாவைத் தொடர்ந்து ஆந்திரா அரசியலில் குதித்தார். தற்போது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கிறார்.

ஆந்திரா மாநிலத்தில், மருத்துவ வசதிகளுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் சேவையை அந்த மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, நகரி தொகுதிக்கு உட்பட்ட கிராமன்க்களுக்கான ஆம்புலன்ஸ்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி புத்தூரில் நடந்துள்ளது. இதில், அந்த தொகுதி எம்.எல்.ஏ.ரோஜாவும் கலந்து கொண்டார்.

அப்போது, ஆம்புலன்ஸில் ஏறி, வாகனத்தை ஓட்டத் தொடங்கினார். நகரி வரை கிட்டத்தட்ட 20 கிலோ மீட்டர் தூரம் வரை ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்று சர்ச்சையில் சிக்கியுள்ளார். அப்போது அவர் முகக்கவசமும் அணியவில்லை. ஆம், தெலுங்கு தேசம் கட்சியினர் ரோஜாவை விமர்சனம் செய்துள்ளனர்.

ரோஜா சாகசம் செய்வதற்காக இது போன்று செய்துள்ளார். அவசர கால ஊர்தியை ஓட்டுவதற்கு அவருக்கு லைசென்ஸ் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

3

டுவிட்டரில் டிரெண்டாகும் KeerthyBDayGalaIn100D ஹேஷ்டேக்!

0
Keerthy Suresh Birthday Hashtag

Keerthy Suresh; டுவிட்டரில் டிரெண்டாகும் KeerthyBDayGalaIn100D ஹேஷ்டேக்! நடிகை கீர்த்தி சுரேஷ் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி தனது 28 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், KeerthyBDayGalaIn100D என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

டுவிட்டரில், KeerthyBDayGalaIn100D என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சீமராஜா, சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, சர்கார் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ஹீரோயினை மையப்படுத்திய பென்குயின் படத்தில் நடித்திருந்தார். அண்மையில், இந்தப் படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது, ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தவிர, மிஸ் இந்தியா, குட் லக் சகி, ராங்க் தே ஆகிய தெலுங்கு படங்களிலும், மரக்கார் என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.

குறுகிய காலத்திலேயே தனது நடிப்புத் திறமையால், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து நிற்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி கீர்த்தி சுரேஷ் தனது 28 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவரது பிறந்தநாளுக்கு இன்னும் 100 நாட்கள் இருக்கும் நிலையில், டுவிட்டரில், KeerthyBDayGalaIn100D என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

மேலும், கீர்த்தி சுரேஷ்க்கு ரசிகர்கள் Advance Happy Birthday தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

பிரபாஸ் 20 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

0
Prabhas 20 First Look

Prabhas 20 First Look; பிரபாஸ் 20 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடிக்கும் 20 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 10 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 10 ஆம் தேதி காலை 10 மணிக்கு பிரபாஸ் 20 படத்தின் ஃபரஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருக்கிறது.

சாஹோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ் தனது 20ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

இத்தாலி மற்றும் அதனை சுற்றி நடக்கும் காதல் கதையை மையப்படுத்தி பிரபாஸ்20 படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து முரளி சர்மா, சச்சின் கடேகர், பிரியதர்ஷி, சத்யன், பாக்யஸ்ரீ ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.

முதலில் இப்படத்தின் சேஸிங் காட்சி படமாக்கப்பட்டது. இதையடுத்து, ஜியார்ஜியாவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடந்துள்ளது.

தற்போது கொரோனா காரணமாக அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆதால், இந்தப் படத்தின் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா முற்றிலும் சரியான பிறகு படப்பிடிப்பிற்கு அனுமதி கிடைத்த உடன் பிரபாஸ்20 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படும் என்று ஏற்கனவே படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளிவரும் என்பது குறித்து அறிவித்துள்ளது. அதன்படி வரும் 10 ஆம் தேதி நாளை காலை 10 மணிக்கு பிரபாஸ்20 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரும் என்று அறிவித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் பிரபாஸ்20 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கின்றது.

3