கோவை: தமிழ்நாடு வனத்துறை படிக்க வசதிகள் ஏற்படுத்தி கொடுத்த 16 வயது பழங்குடி இன மாணவி சீ. ஸ்ரீதேவி பத்தாம் வகுப்பில் 95% மதிப்பெண்களுடன் கேரள மாநில பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெற்றார்.
மாணவிக்கு கேடையம் மற்றும் பொன்ஆடை மூலம் கவுரவிப்பு
பொள்ளாச்சி ஆனைமலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் இயக்குனர்எஸ். ஆரோக்கிய ராஜ் சேவியர் அந்த மாணவிக்கு கேடையம் மற்றும் பொன்ஆடை போர்த்தி கவுரவித்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை சரகத்தில் உள்ள பூச்சுகொட்டம்பாறை என்ற பகுதி பேருந்து நிலையத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
150கி.மீ தூரத்திற்கும் அதிகமாக பயணம் செய்து தேர்வுகள் எழுதினார்
இங்கு மின்சார அமைப்பு மற்றும் தொலைபேசி என எந்த வசதிகளும் கிடையாது. ஒரு மாதத்திற்கு முன் அந்த மாணவி 150கி.மீ தூரத்திற்கும் அதிகமாக பயணம் செய்தும் மற்றும் கேரள எல்லையில் உள்ள அம்மாநில பேருந்தில் ஏறி பயணம் செய்தும் பள்ளிக்கு சென்று தேர்வுகள் எழுதி வந்துள்ளார்.
வனத்துறை சார்பில் உதவிகள் செய்யப்பட்டு வந்தன
இவ்வாறு தொலை தூரம் சென்று படித்து வந்த பெண்ணிற்கு வனத்துறை சார்பில் தொடர்ந்து உதவிகள் செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் தான் இந்த மாணவி அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளார், இது மிகவும் பாராட்டிற்கு உரியது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அறிவியல் துறையில் மேல் படிப்பை தொடங்க மாணவி விருப்பம்
அந்த மாணவி தனக்கு எல்லா உதவிகளையும் வனத்துறையினர் செய்து கொடுத்ததாகவும், அறிவியல் துறையில் மேல் படிப்பை தொடங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சென்னை: புதன்கிழமை தமிழ்நாட்டில் 3756 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து தமிழ்நாட்டின் மொத்த கொரோனா எண்ணிக்கை 1,22,350 ஐ தொட்டது. இதில் 1,261 கொரோனா தொற்றுகள் சென்னையில் மட்டும் உறுதி செய்யப்பட்டன.
மதுரையில் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மதுரையில் தீவிர கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தாலும், புதன்கிழமை 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதன்கிழமை தமிழகத்தில் 64 பேர் கொரோனாவால் இறந்தனர்
புதன்கிழமை மட்டும் தமிழகத்தில் 64 பேர் கொரோனாவால் இறந்தனர். இதில் 26 பேர் சென்னையில் இறந்தனர். இதை அடுத்து கொரோனாவால் தமிழகத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,700ஐ தொட்டது.
இதுவரை 74,167 பேர் கொரோனா தொற்றில் இருந்து விடுதலை
நல்ல செய்தியாக 3,051 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். இதுவரை 74,167 பேருக்கு கொரோனா தொற்று குணமடைந்து உள்ளது.
தமிழ்நாட்டில் இப்போது 46,480 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது.
Ramya Pandian; பிக் பாஸ்க்காக காத்திருக்கும் ரம்யா பாண்டியன்? பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4ஆவது சீசனில் ரம்யா பாண்டியன் கலந்து கொள்வதாக வெளியான தகவல் குறித்து அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து வெளியான தகவலுக்கு ரம்யா பாண்டியன் விளக்கம் கொடுத்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பிக் பாஸ் 2, பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த மாதம் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்ய வேண்டியது.
ஆனால், கொரோனா தாக்கம் காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டதோடு, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, பிக் பாஸ் 4 நிகழ்ச்சி தொடங்கப்படுவதில் காலதாமதம் ஆகியுள்ளது. எனினும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பவர்கள் குறித்து தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது.
அந்த வகையில், நடிகை ரம்யா பாண்டியன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வேனா என்பது தெரியவில்லை. பிக் பாஸ் தரப்பிலிருந்து எந்த அழைப்பும் இதுவரை வரவில்லை. அப்படி அழைத்தால் தானே போக முடியும் என்று கூறியுள்ளார்.
இதன் மூலம், ரம்யா பாண்டியனுக்கு பிக் பாஸ் 4 சீசனில் கலந்து கொள்வதற்கு அதிக ஆர்வம் இருப்பது தெரியவருகிறது.
ஆகையால், பிக் பாஸ் தரப்பிடமிருந்து அழைப்பு வந்தால், பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் ரம்யா பாண்டியன் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Murungaikai Chips First Look; டுவிட்டரில் டிரெண்டாகும் Murungaikai Chips ஹேஷ்டேக்! சாந்தனு நடிக்க இருக்கும் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், Murungaikai Chips என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், Murungaikai Chips என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
இயக்குநர் ஸ்ரீஜர் இயக்கத்தில், லிப்ரா புரோடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சிவசுப்பிரமணியன், சரவண பிரியன் தயாரிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்திற்கு முருங்கைக்காய் சிப்ஸ் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில், சாந்தனு ஹீரோவாகவும், அதுல்யா ரவி ஹீரோயினாகவும் நடிக்க இருக்கின்றனர். இவர்களுடன் இணைந்து கே பாக்யராஜ், மனோபாலா, ஆனந்தராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் பலரும் நடிக்கின்றனர்.
திருமணமான புதுமண தம்பதிகளின் முதல் இரவில் நடக்கும் பாரம்பரிய நிகழ்வுகளையும், சாங்கியத்யங்களையும் நகைச்சுவை உணர்வோடு சுவாரஸ்மாக கொடுக்க இருக்கிறார்கள்.
முழுக்க முழுக்க ரொமாண்டிக் காதல் காமெடி திரைப்படமாக இந்தப் படம் உருவாக இருக்கிறது.
இந்த நிலையில், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் பிறந்தநாளை முன்னிட்டு முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது இந்தப் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு, முருங்கைக்காய்க்கு பேர் போனவர் நடிகர் பாக்யராஜ்.
அவரது பிள்ளை சாந்தனு அதே டெக்னிக்கை வைத்து முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் என்று நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.
Karthi Upcoming Movies; கார்த்தி நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள படங்களின் பட்டியல் இதோ! நடிகர் கார்த்தி நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் 6 படங்களின் பட்டியல் என்ன என்பது தெரியவந்துள்ளது.
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படங்கள் என்ன என்பது குறித்து தெரியவந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கார்த்தி. ஆயுத எழுத்து படத்தில் அசிஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றினார்.
அதன் பிறகு 2007 ஆம் ஆண்டு வந்த பருத்திவீரன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, சகுனி, மெட்ராஸ், கொம்பன், தோழா, காற்று வெளியிடை, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், தேவ், கைதி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.
தற்போது சுல்தான் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
கைதி மற்றும் கொம்பன் ஆகிய படங்களுக்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, அந்தப் படங்களின் 2ம் பாகமும் உருவாக இருக்கிறது.
மேலும், பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் ஒரு படத்திலும், அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுல்தான், கைதி 2, பொன்னியின் செல்வன், கொம்பன் 2, பிஎஸ் மித்ரன் படம், அருண் ராஜா காமராஜ் படம் என்று அடுத்தடுத்து 6 படங்களில் நடிக்க இருக்கிறார்.
Soorarai Pottru Trailer; சூர்யா பிறந்தநாள் ஸ்பெஷல்: சூரரைப் போற்று டிரைலர் ரிலீஸ்? நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சூரரைப் போற்று படத்தின் டிரைலர் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூரரைப் போற்று டிரைலர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப் போற்று. ஏர் டெக்கான் நிறுவனர் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி சூரரைப் போற்று படம் உருவாக்கப்பட்டுள்ளது.
சூரரைப் போற்று படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.
மேலும், கருணாஸ், மோகன் பாபு, ஊர்வசி, ஜாக்கி ஷெராஃப், காளி வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரித்துள்ளது.
கடந்த மே மாதம் திரைக்கு வரயிருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து, வரும் ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தை முன்னிட்டு படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், வரும் ஜூலை 23 சூர்யா தனது 45 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை சிறப்பிக்கும் வகையில், சூரரைப் போற்று படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
சூர்யாவின் சினிமா வாழ்க்கையில், சூரரைப் போற்று சிறந்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூரரைப் போற்று படத்தைத் தொடர்ந்து, சூர்யா இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.
தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். அதுவும், இந்தப் படத்தில், அப்பா – மகன் கதாபாத்திரம் என்று இரு வேடங்களில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Murungaikai Chips First Look; முருங்கைக்காய் சிப்ஸ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! சாந்தனு மற்றும் அதுல்யா ஆகியோரது நடிப்பில் உருவாக இருக்கும் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஸ்ரீஜர் இயக்கத்தில், லிப்ரா புரோடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சிவசுப்பிரமணியன், சரவண பிரியன் தயாரிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்திற்கு முருங்கைக்காய் சிப்ஸ் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில், சாந்தனு ஹீரோவாகவும், அதுல்யா ரவி ஹீரோயினாகவும் நடிக்க இருக்கின்றனர்.
இவர்களுடன் இணைந்து கே பாக்யராஜ், மனோபாலா, ஆனந்தராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் பலரும் நடிக்கின்றனர்.
திருமணமான புதுமண தம்பதிகளின் முதல் இரவில் நடக்கும் பாரம்பரிய நிகழ்வுகளையும், சாங்கியத்யங்களையும் நகைச்சுவை உணர்வோடு சுவாரஸ்மாக கொடுக்க இருக்கிறார்கள்.
முழுக்க முழுக்க ரொமாண்டிக் காதல் காமெடி திரைப்படமாக இந்தப் படம் உருவாக இருக்கிறது.
இந்த நிலையில், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் பிறந்தநாளை முன்னிட்டு முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது இந்தப் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு, முருங்கைக்காய்க்கு பேர் போனவர் நடிகர் பாக்யராஜ்.
அவரது பிள்ளை சாந்தனு அதே டெக்னிக்கை வைத்து முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் என்று நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.
Jagame Thandhiram OTT Release; தனுஷின் ஜகமே தந்திரம் ஓடிடியில் ரிலீஸ்? கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்! தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக வந்த தகவல் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் விளக்கம் கொடுத்துள்ளார்.
தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி, சுள்ளான், புதுப்பேட்டை, பொல்லாதவன், யாரடி நீ மோகினி, மாப்பிள்ளை, 3, மாரி, மாரி 2, அசுரன் என்று வரிசையாக பல படங்களில் நடித்தார்.
அசுரன் படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த எனை நோக்கி பாயும் தோட்டம் வெளிவந்து ஓரளவு விமர்சனம் பெற்றது.
ஜகமே தந்திரம் (Jagame Thandhiram)
இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் பட்டாஸ். தற்போது, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் Jagame Thandhiram என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ஜகமே தந்திரம் படத்தில், தனுஷுடன் இணைந்து சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லெட்சுமி, கலையரசன், சின்னி ஜெயந்த் ஆகியோர் உள்பட சினிமா பிரபலங்கள் பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், ஜகமே தந்திரம் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியானது.
மேலும், தயாரிப்பாலருக்கு லாபம் கிடைக்கும் என்றால் இணையத்தில் ரிலீஸ் செய்யலாம் என்று தனுஷ் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியானது.
இது குறித்து, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் விளக்கம் கொடுத்துள்ளார். ஜகமே தந்திரம் நேரடியாக திரையரங்கில் தான் வெளியிடப்படும் என்று கூறி முற்றுப்புள்ளை வைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக பொன்மகள் வந்தாள், பென்குயின் ஆகிய படங்கள் ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் படங்களைத் தொடர்ந்து காக்டெய்ல், டேனி, ஆர்கே நகர், லட்சுமி பாம் ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tughlaq Durbar First Look; தலைக்கு மேல பட்டாம் பூச்சி பறக்குது: துக்ளக் தர்பார் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில், மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, புஷ்பா, யாதும் ஊரே யாவரும் கேளிர், க/பெ.ரணசிங்கம், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துக்ளக் தர்பார். வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. கோவிந்த வசந்தா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
துக்ளக் தர்பார் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடித்து வருகிறார். மேலும், பார்த்திபன் இந்தப் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில், விஜய் சேதுபதி இருவிதமான சட்டை அணிந்து அமர்ந்திருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.
அதில் ஒன்று தலைகீழாக தெரிகிறது. மேலும், விஜய் சேதுபதியின் தலைக்கு மேலே பட்டாம் பூச்சி பறப்பது போன்றும் காட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
துக்ளக் தர்பார் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து டுவிட்டரில், #TughlaqDurbarFirstLook #VijaySethupathi ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.
Thamasha : தமாஷா எனும் மலையாளப்படத்தை பற்றிய ஒரு பார்வை!
‘Ondu motteya kathe’ என்ற கன்னட திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான மறுஉருவாக்கம்தான் ‘தமாஷா’ என்கிற மலையாளத்திரைப்படம்.
ரீமேக் திரைப்படமாக இருந்தாலும் மலையாள திரைப்படத்திற்கான் சுபாவங்களை திரைப்படம் முழுக்க காணமுடிகிறது. மலையாளத்தில் இத்திரைப்படத்தை இயக்கியவர் ‘அஷ்ரஃப் ஹம்சா’ .
பிரேமம் திரைப்படத்தில் சாய்பல்லவியை காதலிப்பது போன்று வேடிக்கையாக ஒரு ஆசிரியர் கதாப்பாத்திரம் கையாளப்பட்டிருக்கும். மாவா என்று அழைக்கப்படும் அந்த ஆசிரியர் கதாப்பாத்திரத்தில் நடித்தவர்தான் இந்த திரைப்படத்தின் கதாநாயகன். அவரின் பெயர் ‘வினய் ஃபார்ட்’. மேலும் திவ்ய பிரபா, சின்னு சந்தினி நாயர், கிரேஸ் ஆண்டனி, அருன் குரியன், நவாஸ் போன்றோரும் நடித்திருக்கின்றனர்.
கதை
முக்கால்வாசி தலைமுடி இல்லாத கல்லூரியில் வேலை செய்யும் ஒரு ஆசிரியர், தனக்கு கல்யாணத்திற்காக பெண் தேடுகிற போது நடக்கும் அட்ராசிட்டிகளில் கதை ஆரம்பித்து
காதல், நட்பு, அரவணைத்தல், வலி, அன்பு, body ashaming, bullying என திரைப்படம் பல குணங்களை தொடுகிறது. வெறுமனே தொட்டுச்செல்லாமல் திரைப்படத்தை பார்த்து முடித்தப்பின்னும் நமக்குள் குறைந்தபட்சமாக, ஒரு 15 நிமிடமாவது நற்குணங்களை விதைத்து வைக்கிறது.விதைத்து வைக்கும்.
நகர்வு
தினசரி வாழ்வில் நாம் கடக்கும் மனிதர்களில் ஒருவரை
பிடித்துக்கொண்டு அவர் வாழ்வை நமக்கு காண்பிப்பது போலானது தமாஷா. சொட்டை தலையுடனிருக்கும் நபர்களை தொடர்ந்து கிண்டல் செய்தபடி மட்டுமே திரைப்படத்தில் கண்டு பழகிய நமக்கு
தமாஷா காமெடிகளுடன் அவர்களுக்குள் இருக்கும்
எமொஷன்களையும் நம்முடன் கணெக்ட் செய்கிறது. அதற்காக சோக காட்சிகளாக திரைப்படுத்தி நம்மை கண்ணீராக விட்டுக்கொண்டிருக்க
செய்யவில்லை. கதை வெகு இயல்பாகவே நகர்கிறது பெறும்பாலும் காமெடி காட்சிகளை கொண்டே நகர்கிறது. சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஈடேறிக்கொண்டிருக்கும்
Body shamingகையும் bullyingகையும் காண்பித்த விதம் பாராட்டக்கூறியது.
சின்னு என்கிற கதாப்பாத்திரம் கொண்டிருக்கும் தைரியத்தையும் நேர்மறை குணத்தையும் வெளிப்படையாக்காமல் கதையினூடே கூறியதும் அசத்தல்.
நாமும் கரைகிறோம். மேலும் பாடல்களும் அவைகளின் காட்சிப்பதிவுகளும் கூடுதல் சிறப்பு.
மாஷே என்கிற காதாநாயகனுடன் இருக்கும் நண்பன் ரஹீம் கதாப்பாத்திரமும் கதைக்கு பக்கபலம்.
உடல் குறைகளை தாண்டியும் மனிதர்களை ஏற்பது என்பதுதான் படத்தின் ஆதி. ஏற்பதென்பது ப்ரியத்தினால் அன்பினால் நிகழவேண்டும் என்பது கதையின் நிகழ்வு.
STOP BULLYING என்ற வார்த்தையை சமூகவலைதளங்களில் ஏதேனும் ஓர் பெரிய துர்சம்பவம் நடக்கும்போது மட்டுமே நம்மால் காண நேர்கிறது. நாமும் அப்போது மட்டும்தான் உபயோகிக்கிறோம். அதுவும் வார்த்தையாக மட்டும்தான். மனித இயல்பில் பலரிடம் இதை காண இயலவில்லை. அப்படியே கண்டாலும் அதுவும் சில நாட்களுக்கு மட்டுமே! பின்பு அப்படியொரு வார்த்தையை கூட நாம் நினைவில் வைத்திருப்பதில்லை.
மனிதர்களுக்குள் இருக்கும் மனிதர்களுக்கிடையில் இருக்கும் எளிமையான விஷயங்களை காட்சிபடுத்துவது வெறுமனே அழகியல் மட்டுமல்ல. அத்தியாவசியமானதும் கூட!
மேகம் மட்டும் வானமில்லை
தேகம் மட்டும் வாழ்க்கையில்லை
புலன்களை கடந்தும் கூட
இன்பமிருக்கும் !
என்ற ‘வைரமுத்து’ அவர்களின் வரிகளுக்கு ஏற்பவே நிகழந்திருக்கிறது இக்கதை.
எளிமையான கதைகளை விரும்பி பார்ப்பவர்களுக்கு இத்திரைப்படம் நிச்சயம் விருந்தாக அமையும்
திரைப்படம் manorama max தளத்தில் காணக்கிடைக்கிறது.