சென்னை: தெற்கு சென்னையில் கொரோனா தொற்றுகள் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து மாநில அரசு இரண்டு சுகாதார நிலையங்களை கொரோனா மருத்துவமனைகளாக மாற்றியுள்ளது.
தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், கிண்டி மற்றும் புறநகர் நோயாளிகள் அனுமதி
நெஞ்சுகூடு சார்ந்த நோய்களுக்கான மருத்துவமனை(500 படுக்கைகள்) மற்றும் 750 படுக்கைகள் வயது சம்பந்தமான இந்திய கழகம் (இந்தியன் இன்ஸ்டிடுட் ஒஃப் ஏஜிங் – 750 படுக்கைகள்) ஆகிய இடங்களில் தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், கிண்டி மற்றும் மற்ற புறநகர் பகுதிகளில் இருந்து கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்கப்படுகிறது.
100 நாள் ஊரடங்கிற்கு பின் திங்கள்கிழமை சென்னைக்கு தளர்வு
100 நாள் ஊரடங்கிற்கு பின் திங்கள்கிழமை சென்னையில் தொழில்கள் விறுவிறுப்புடன் நடக்க, ஊரடங்கு நீக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Thalapathy Vijay; மங்காத்தா வெற்றிக்கு விருந்து கொடுத்த விஜய்! தல அஜித்தின் மங்காத்தா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நடிகர் விஜய் தன்னை வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
மங்காத்தா படத்தின் வெற்றிக்கு தளபதி விஜய் தனக்கு விருந்து கொடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தல அஜித் நடிப்பில், கடந்த 2011 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் மங்காத்தா.
இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, மகத், அர்ஜூன், லட்சுமி ராய், வைபவ், ஆண்ட்ரியா, பிரேம்ஜி, அஞ்சலி ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் இயக்குநர் வெங்கட் பிரபு, மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன் உடன் நேரலையில் கலந்துரையாடினார்.
அப்போது, விஜய் பற்றி வெங்கட் பிரபு கூறியிருப்பதாவது, சிவகாசி படத்தில் விஜய்யுடன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தேன். மங்காத்தா படம் முடிந்தவுடன், வீட்டிற்கு அழைத்து பெரிய விருந்து கொடுத்தார். ஏனென்றால், மங்காத்தா படம் அவருக்கு, ரொம்பவும் பிடித்திருந்தது.
விருந்து முடிந்த உடன் அவருடன் நிறைய பேசினேன். அவரும் நிறைய விவாதித்தார். கதை தயாரானவுடன் எப்போது வேண்டுமானாலும், வாருங்கள் புதிய படம் பண்ணுவோம் என்றார். விரைவில், நல்ல கதையுடன் அவரை சந்திக்க காத்திருக்கிறேன்.
விஜய்யுடன் இணைந்து வித்தியாசமான ஒரு புதிய படம் பண்ண வேண்டும் என்று வெங்கட் பிரபு கூறியுள்ளார்.
கொல்கத்தா: கொரோனா பரவலை கட்டுபடுத்தும் பொருட்டு ஜூலை 9 முதல் கடுமையான கொரோனா ஊரடங்கை அமல்படுத்த கொல்கத்தா அரசாங்கம் செவ்வாய் கிழமை முடிவு செய்துள்ளது.
வியாழன் மாலை 5 மணி முதல் தீவிர கொரோனா ஊரடங்கு
கட்டுபாட்டு பகுதிகள் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளையும் சேர்த்து சற்று பெரிய கட்டுபாட்டு பகுதிகளாக மாற்றியமைக்கப்பட்டு வியாழன் மாலை 5 மணி முதல் தீவிர கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
வீட்டிற்கே சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்க முடிவு
அதிகாரிகள் வீட்டிற்கே சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆனால் இந்த தீவிர ஊரடங்கு எத்தனை நாட்கள் நீடிக்கும் என தெரிவிக்கப்படவில்லை.
தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு ஜூலை 31 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கட்டுபாட்டுபகுதிகளில் தீவிர ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
Thalaivar169: Rajinikanth; லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் பிளான்: ரஜினி படத்தில் கமல் ஹாசன்! ரஜினிகாந்த் நடிக்க இருந்த லோகேஷ் கனகராஜ் படத்தில் அவருக்குப் பதிலாக கமல் ஹாசன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் நடிக்க இருந்த புதிய படத்தில் அவருக்குப் பதிலாக கமல் ஹாசன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.
இது ரஜினி நடிக்கும் 169 ஆவது படம். இந்தப் படத்திற்கு தற்காலிகமாக தலைவர்169 என்று டைட்டில் வைக்கப்பட்டது. அதோடு, மார்ச் மாதத்தில் இந்தப் படத்திற்கு பூஜை போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால், நாட்டையே உலுக்கிய கொரோனா காரணமாக ரஜினியின் அண்ணாத்த, கமலின் இந்தியன் 2 ஆகிய படங்களின் படப்பிடிப்பு பாதியிலேயே நின்றுள்ளது.
இந்த நிலையில், ரஜினி, கமல், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாக இருந்த புதிய படம் தொடங்கப்படுமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த நிலையில், இந்தப் படத்தில், ரஜினிகாந்திற்குப் பதிலாக கமல் ஹாசன் நடிக்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி வருகிறது.
ஏனென்றால், அண்ணாத்த படப்பிடிப்பு முடிவதற்குள் தமிழக சட்டமன்ற தேர்தல் காலம் நெருங்கிவிடும்.
அதில், ரஜினி தனது முழு கவனத்தையும் செலுத்த இருப்பதாகவும், அரசியல், சினிமா என்று இரண்டிலும் பயணித்து வரும் கமலே இந்தப் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
ஆனால், இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. கைதி படத்தில் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில், தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சஞ்சீவ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். கொரோனா முடிந்து திரையரங்குகள் திறந்த பிறகே மாஸ்டர் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விழுப்புரம்: திங்கள் கிழமை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்கானத்தில் 4 அடி உயர விஷ்ணு சிலை குளம் தூர்வாரும் பொழுது கண்டெடுக்கப்பட்டது.
500 வருடங்கள் பழமை வாய்ந்த விஷ்னு சிலை
காரிப்பாளையம் கிராமத்தில் இந்த சிலையானது பூமியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது, மேலும் இது 500 வருடங்கள் பழமை வாய்ந்தது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குடிமராமத்து பணி துவங்கப்பட்டது
கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில், “காரிப்பாளையம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த கிராமங்களில் ஒன்றாகும் மற்றும் இங்கு நான்கு குளங்கள் உள்ளன. பல வருடங்களாக இங்குள்ள குளங்களில் தூர்வாரப்படாமல் இருந்தமையால் இவைகளை தூர்வார, கிராம மக்கள் மனு அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் குடிமராமத்து பணி திட்டத்தில் தூர்வார அனுமதி அளிக்கப்பட்டு, சனிக்கிழமை அதற்கான பணிகள் துவங்கப்பட்டன”.
குளத்தில் கல் போன்ற பொருள் தட்டுபட்டது
திங்கட்கிழமை மாலை ஊற்றுகுளம் பகுதியில் உள்ள குளத்தை தூர்வாரும் பொழுது கல் போன்ற பொருள் தட்டுபட்டதை அடுத்து தூர்வாரும் இயந்திர ஓட்டுநர் அதை மக்களிடம் தெரிவித்தார்.
விஷ்னு சிலை கண்டெடுப்பு
மரக்கானம் தாசில்தார் தெரிவிக்கையில், “கிராம மக்கள் கல் போன்ற பொருளை கைகளால் எடுத்தனர். அப்போது அது விஷ்ணு சிலை என தெரியவந்தது மேலும் அதன் இரண்டு கைகளும் உடைந்த நிலையில் இருந்தன,”
கிராம மக்கள் அந்த சிலையை அருகில் இருந்த கோவிலில் வைத்து வழிபாடு நடத்தினர்.
Master Kutty Story Dhoni Version; ஆர்ஜே பாவனா பாடிய குட்டி ஸ்டோரி தோனி வெர்ஷன்! தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படத்தில் உள்ள குட்டி ஸ்டோரி பாடலை தோனி வெர்ஷனில் பாடி ஆர்ஜே பாவனா வெளியிட்டுள்ளார்.
தோனி வெர்ஷனில் மாஸ்டர் குட்டி ஸ்டோரி பாடலை பாடி அதனை நிகழ்ச்சி தொகுப்பாளினி பாவனா வெளியிட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சஞ்சீவ் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர்.
தொடர்ந்து கொரோனா காரணமாக தாமதமாகிக் கொண்டிருப்பதால், அனைவரது எதிர்பார்ப்பும் தற்போது மாஸ்டர் படத்தின் மீது விழுந்துள்ளது.
மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள 12 பாடல்களில் 8 பாடல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் அமோக வரவேற்பு பெற்றது. அதில், மாஸ்டர் குட்டி ஸ்டோரி மற்றும் வாத்தி கம்மிங் ஆகிய பாடல்கள் யூடியூப்பில் நல்ல வியூஸ் பெற்று வருகிறது.
இந்த நிலையில், கிரிக்கெட் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இன்று தனது 39 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.
இந்த நிலையில், தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து கூறும் வகையில், நிகழ்ச்சி தொகுப்பாளரும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஆர்ஜேவுமான பாவனா, தோனி வெர்ஷனில் குட்டி ஸ்டோரி பாடலை பாடியுள்ளார்.
அதனை வெளியிட்டு, HappyBirthdayDhoni என்று அவருக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார். தற்போது மாஸ்டர் குட்டி ஸ்டோரியின் தல வெர்ஷன் ஸ்டோரி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
தோனியா தல? டுவிட்டரில் டிரெண்டாகும் #RealBrandTHALAAjith ஹேஷ்டேக்! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இன்று தனது 39 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், தல தோனி என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது. இதற்கு போட்டியாக #RealBrandTHALAAjith ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
தல தோனி என்ற ஹேஷ்டேக்கிற்கு போட்டியாக #அன்றும்இன்றும்என்றும்ஒரே_தலஅஜித் மற்றும் #RealBrandTHALAAjith ஆகிய ஹேஷ்டேக்குள் டிரெண்டாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித் குமார். தனது கடின உழைப்பு, விடா முயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றின் மூலம் முன்னுக்கு வந்தவர்.
தல என்றாலே தன்னம்பிக்கை லட்சியம். தொடர்ந்து, ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அன்று மட்டுமல்ல என்றுமே ஒரே தல அது நம்ம தல அஜித் தான்.
கடந்த ஆண்டு விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய இரு படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். தற்போது, வலிமை படத்தில் நடித்து வருகிறார்.
வலிமை படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு முற்றிலும் சரியான பிறகே வலிமை படத்தின் படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என்று தயாரிப்பாளர் போனி கபூருக்கு தல அஜித் வேண்டுகோள் வைத்துள்ளார்.
தனது 49 ஆவது பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என்றும், பேனர்கள், கட் அவுட், போஸ்டர்கள் ஆகியவை வேண்டாம் என்றும் அஜித் கேட்டுக்கொண்டுள்ளார். இதன் காரணமாக அவரது ரசிகர்கள் தல பிறந்தநாளை கொண்டாடவில்லை.
அஜித்தின் 49 ஆவது பிறந்தநாள் முடிந்து, 68 நாட்கள் மட்டுமே ஆன நிலையில், 50 ஆவது பிறந்தநாளுக்கு இன்னும் 300 நாட்கள் இருப்பதாக கூறி டுவிட்டரில், VersatileStarAjithBdayIn300D என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது.
தற்போது தோனி ரசிகர்களுக்கும், தல ரசிகர்களுக்கும் இடையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கூல் எம் எஸ் தோனி இன்று தனது 39 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும் வகையில், டுவிட்டரில் பல்வேறு ஹேஷ்டேக்குகள் டிரெண்டானது.
இந்த நிலையில், அவரை தல தோனி என்று கூறி டுவிட்டரில் பலரும் வாழ்த்து கூறினர். மேலும், ஹேஷ்டேக்கும் டிரெண்டானது.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அஜித் ரசிகர்கள் டுவிட்டரில், #அன்றும்இன்றும்என்றும்ஒரே_தலஅஜித் மற்றும் #RealBrandTHALAAjith ஆகிய ஹேஷ்டேக்குளை டிரெண்டாக்கி வருகின்றனர்.
Makkal Selvan Vijay Sethupathi; டுவிட்டரில் டிரெண்டாகும் Makkal Selvan ஹேஷ்டேக்! விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில், Makkal Selvan என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
துக்ளக் தர்பார் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில், மாமனிதன்,
லாபம், துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, புஷ்பா, யாதும் ஊரே யாவரும் கேளிர், க/பெ.ரணசிங்கம், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, வரும் 8 ஆம் தேதி துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துக்ளக் தர்பார். வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.
கோவிந்த வசந்தா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.துக்ளக் தர்பார் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடித்து வருகிறார். மேலும், பார்த்திபன் இந்தப் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sivakarthikeyan; SKவை பாராட்டிய Deputy கமிஷனர்: நன்றி சொன்ன சிவகார்த்திகேயன்! புகைப்பிடிப்பதும் இல்லை, குடிப்பதும் இல்லை என்று கூறிய சிவகார்த்திகேயனின் வீடியோவை பதிவிட்டு Deputy கமிஷனர் அர்ஜூன் சரவணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயனை Deputy கமிஷனர் அர்ஜூன் சரவணன் வெகுவாக பாராட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன். விஜய் தொலைக்காட்சி மூலமாக பிரபலமான சிவார்த்திகேயன் தற்போது நம்ம வீட்டு பிள்ளையாக வளர்ந்து நிற்கிறார்.
அண்மையில், மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டுப்பிள்ளை, ஹீரோ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. தற்போது அயலான், டாக்டர் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில், குடிப்பழக்கம், புகைப்பழக்கம் குறித்து சிவகார்த்திகேயன் பேசிய வீடியோ ஒன்றை பதிவிட்டு திருநெல்வேலி மாவட்ட Deputy கமிஷனர் அர்ஜுன் சரவணன் டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது: நட்சத்திரங்கள் சொல்வதை அப்படியே கேட்பவர்கள் என்றால் இதனையும் கொஞ்சம் கேளுங்க.
குடிக்க , புகைக்க எந்த நண்பனும் அழைக்க மாட்டான், அப்படி அழைப்பவர் நட்பிலிருந்து வெளியேறுங்கள். அவன் உங்களை உலகிலிருந்து வெளியேற அழைக்கிறான் என்று பதிவிட்டு, நன்றி சிவகார்த்திகேயன் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனை ரீடுவிட் செய்த சிவகார்த்திகேயன் சரியாக சொன்னீர்கள் சார். உங்களுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
MS Dhoni Birthday Petta Theme Music; ரஜினி தீம் மியூசிக் உடன் கேப்டன் கூல் MSD வாழ்த்து சொன்ன அனிருத்: வைரலாகும் வீடியோ! ரஜினிகாந்த் தீம் மீயூசிக் போட்டு கேப்டன் கூல் MSD என்ற மகேந்திர சிங் தோனிக்கு இசையமைப்பாளர் அனிருத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மகேந்திர சிங் தோனிக்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் தனது ஸ்டைலில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான கேப்டன் கூல் எம் எஸ் தோனி இன்று தனது 39 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
கிரிக்கெட் ஜாம்பவான்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என்று அனைவரும் கேப்டன் கூல்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், இளம் இசையமைப்பாளர் அனிருத் தனக்கே உரிய பாணியில் MSDக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எப்போதும், ரஜினிக்கு போடும் சூப்பர்ஸ்டார் தீம் மியூக் போட்டு MSDக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
ஆம், பேட்ட படத்தில் வரும் மரணம் மாஸ் மரணம் என்ற பாடலின் தீம் மியூசிக் போட்டு தல தோனி ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உடை அணிந்து நடந்து வருவது போன்றும், கேப்டன் கூல் MSD என்று கூறுவது போன்றும் அந்த வீடியோ அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஹேப்பி பர்த்டே அன்பே நம்பர் 7 என்று குறிப்பிட்டுள்ளார். ஆம், கிரிக்கெட்டில் தோனி அணிந்திருக்கும் ஜெர்ஸியின் நம்பர் 7. அதனை குறிப்பிட்டு தோனிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.