Home Blog Page 274

நிலவை சுற்றிப்பார்க்க காதலி தேவை – யூசாகு மேசாவா

0
காதலி தேவை நிலவை சுற்றிப்பார்க்க யூசாகு மேசாவா

நிலவை சுற்றிப்பார்க்க காதலி தேவை என யூசாகு மேசாவா என்ற ஜப்பானிய கோடீஸ்வரர் விளம்பரம் செய்துள்ளார். எலோன் மஸ்க் நிறுவிய ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனம் மூலம் பறக்கவுள்ளார்.

யார் இந்த யூசாகு மேசாவா?

யூசாகு மேசாவா ஒரு ஜப்பானிய கோடீசுவரர், தொழில்முனைவோர் மற்றும் கலை சேகரிப்பாளர். 1998 இல் ஸ்டார்ட் டுடே (Start Today) என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார்.

ஜப்பானின் மிகப் பெரிய நிறுவனமான ஜூஜூ டவுன்  (zozo town) என்ற ஆன்லைன் பேஷன் சில்லறை வலைத்தளத்தை 2004-இல் தொடங்கினார்.

2019-ஆம் ஆண்டு  ஜூன் வரை  இவருடைய சொத்து மதிப்பு  1.8 பில்லியின் டாலர் என  ஃபோர்ப்ஸின் (Forbes) பத்திரிக்கை மதிப்பிட்டு உள்ளது. இவர் ஜப்பானில் 17-வது பணக்காரர்.

நிலவை சுற்றிப்பார்க்க காதலி தேவை

யூசாகு மேசாவா காதலியைத் தேடும் விளம்பரத்தை வெளியிட்டுள்ளார். காதலிக்காக இணையத்தில் விளம்பரம் செய்து தேடி வருகிறார்.

அந்தக் காதலியுடன் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் ராக்கெட் மூலம் சந்திர கிரகத்தை சுற்றிப்பறப்பார்.

சமீபத்தில் ஒரு ஜப்பானிய நடிகையுடான காதலை முறித்துக்கொண்டு பிரிந்து செல்வதாக அறிவித்தார் யூசாகு மேசாவா.

வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க விரும்பும் 20 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய  பெண்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

மூன்று குழந்தைகளைக் கொண்ட மேசாவா எனக்கு இப்போது 44 வயதாகிறது. தனிமை மற்றும் வெறுமை போன்ற உணர்வுகள்  காரணமாகவே  இந்த யோசனைக்கு ஒப்புக்கொண்டதாகக் கூறினார்.

SPACEX STAR SHIP 

எலோன் மஸ்க் SpaceXஎலோன் ரீவ் மஸ்க் (Elon Musk) ஒரு பொறியியலாளர் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவோர் ஆவார். இவருடைய டெஸ்லா கார் நிறுவனம் உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றுவிட்டது.

தற்பொழுது, ஸ்பேஸ் எக்ஸின் (SPACE X) நிறுவனர். பெரிய கனவுகளுடன் உள்ள தொழில் முனைவோர்களில் சம காலத்தில் வாழும்  மிக முக்கியமான நபர்

வணிக விண்வெளி பயணத்திற்காக விண்கலத்தை உருவாக்கும் நோக்கத்துடன் மஸ்க் தனது மூன்றாவது நிறுவனமான (SPACE X)  ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை 2002-இல் நிறுவினார்.

எதிர்காலத்தில் விண்வெளிச்  சுற்றுலா மற்றும்  சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான சரக்கு போக்குவரத்து  ஒப்பந்தத்தை நாசா இந்த நிறுவனத்திற்கு வழங்கியது.

2023-ஆம் ஆண்டில்  ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தில் நிலாவுக்கு சுற்றுப்பயணம் அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பயணத்தில் கலைஞர்களை தன்னுடன் அழைத்துச் செல்லவும் மேசாவா திட்டமிட்டுள்ளார்.

3

குளிர் சாதனப் பெட்டி விலை ரூ.200 மட்டுமே Swap Shop

1
குளிர் சாதனப் பெட்டி இடமாற்றுக்கடை Swap Shop வீட்டு  உபயோகப்பொருட்கள் கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன்

குளிர் சாதனப் பெட்டி விலை ரூ.200 மட்டுமே. கடந்த ஜனவரி 12, 13-ம் தேதி  கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் போகி, பொங்கலை முன்னிட்டு இடமாற்றுக்கடை (Swap Shop) வீட்டு  உபயோகப்பொருட்கள் கண்காட்சியை நடத்தியது.

இடமாற்றுக்கடை (Swap Shop) விற்பனைக்காக நடத்தப்பட்ட கண்காட்சியில் எதிர்பார்த்ததை விட அனைத்துப் பொருட்களும் விரைவாக விற்றுத் தீர்ந்தது.

இடமாற்றுக்கடை (Swap Shop)

இடமாற்றுக்கடை நோக்கம் புதிய பொருட்களை விற்பது மட்டுமல்ல. வீட்டில் பயன்படுத்தும் நிலையில் பழைய பொருட்கள் இருந்தால் அதை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதே ஆகும்.

பழைய பொருட்கள் வீணாக யாருக்கும் பயன்படாமல் குப்பைக்கு போவதைவிட பிறருக்கு பயன்படும் வகையில் கிடைக்க swap shop  உதவுகிறது.

சென்னை பெசன்ட் நகரில் உள்ள (TNHB ) தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பின் சமுதாய நலக்கூடத்தில் இந்த மாற்றுக் கடை கண்காட்சி நடைபெற்றது.

விற்பனை மற்றும் பரிமாற்றம்

ஆடைகள் முதல் வீட்டு உபகரணங்கள் வரை,  கட்டில்கள் மெத்தை,  குளிர்சாதனப் பெட்டிகள், நுண்ணலை அடுப்பு (மைக்ரோ ஓவன்) புத்தகங்கள், பாத்திரங்கள், செயற்கை ஆபரண நகைகள், பைகள் மற்றும் பயன்படுத்தும் நிலையில் உள்ள காலணிகளை இம்மையத்திற்குக் கொண்டு வந்து பொருட்களை விற்பனை மற்றும் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.

மளமளவென விற்பனை

அதிக மக்களின் வருகை காரணமாக  கார்ப்பரேஷன் ஊழியர்கள்  ஒரு மணி நேரத்திற்கு முன்னரே  மண்டபத்தைத் திறக்க வேண்டியிருந்தது.

மேலும், காட்சிக்கு வைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் விற்கப்பட்டதால் கடையை முன்கூட்டியே மூட வேண்டியிருந்தது.

நாள் முடிவில், சுமார் 1,800 பொருட்கள் ரூபாய் 23,000  விலையில் விற்கப்பட்டன. ஒவ்வொரு பொருளும் சராசரியாக 12.75 விலையில் விற்கப்பட்டன.

விலை நிர்ணயம்

நாங்கள் விலையைப் பற்றி அதிகம் குறிப்பிடவில்லை. பழைய பயன்படுத்தப்படாத பொருட்களைச் சேகரிப்பதில் எங்களுக்கு உதவிய குடியிருப்பாளர்கள் நலச்சங்கங்களின் தொண்டர்களையே விலையை நிர்ணயிக்க அனுமதித்தோம்.

தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தும் வாய்ப்பாகக் கருதாமல் பயன்படுத்தும் நிலையில் உள்ள பொருட்கள் பிறருக்குப் பயன்படும்.

இந்த  நோக்கத்திலேயே பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்று வட்டாரத் துணை ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக வீடுவீடாகப் பிரச்சாரம் செய்தோம். அதன் முடிவில் சிறு சிறு பொருள்கள்  முதல் வீட்டு அலங்காரங்கள் மற்றும் சமையலறை உபகரணங்கள் வரை சேகரித்தோம்  என கோட்டூர்புரத்தில் சேகரிப்பு இயக்கத்தை ஒருங்கிணைத்த உதவிப் பொறியாளர் ஒருவர் கூறினார்.

குளிர் சாதனப் பெட்டி விலை

நல்ல  நிலையில் உள்ள ஒரு குளிர்சாதனப் பெட்டி (AC) ரூபாய் 200-க்கும்  மைக்ரோவேவ் ஓவென்  ரூபாய் 100-க்கும் விற்கப்பட்டது.

சைக்கிள், இசைக் கருவிகள், இடமாற்று கடையில் மிகக் குறைந்த  விலையில் கிடைக்கின்றன.

திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இதேபோன்ற இடமாற்றுக் கடை வளசரவாக்கத்தில் நடைபெறும்.

 

3

Upcoming Tamil Movies 2020 | Most Awaited – ஒரு கண்ணோட்டம்

1
Most Awaited 2020 Most Awaited 2020 தமிழ் படங்கள்

Upcoming Tamil Movies 2020 | Most Awaited 2020. இவ்வருடம் வெளிவர உள்ள அதிகம் எதிர்பார்ப்புடைய ஆறு தமிழ் படங்கள் (Tamil Movies) பற்றி ஒரு சிறு கண்ணோட்டம்.

தலைவர் 168 அல்லது ரஜினி 168

Thalaivar 168 or Rajini 168: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – சிறுத்தை சிவா கூட்டணி என்றதுமே சமுகவலைதலங்களில் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ஆரம்பித்து விட்டது .

அந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தும் வகையில் நடிகைகள் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் போன்றோரும் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

இமான் அவர்கள் இப்படத்திற்கு இசையமைக்க சன்பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. தர்பார் தற்போது திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .

 

இந்தியன்-2 (Indian 2 Tamil Movie Release Date) 

Indian 2 Tamil Movie Release Date

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் அவர்களும் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களும் இரண்டாவது முறையாக இப்படத்திற்காக இணைகிறார்கள்.

ஏற்கனவே இவர்களிருவரும் இணைந்த இந்தியன் முதல் பாகம் மாபெரும் வெற்றியடைந்ததை நாம் அனைவரும் அறிந்ததே. இந்தியன் படத்தின் நீட்சியாகத்தான் இப்படமும் இருக்கும்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கமல் அவர்களின் இறுதிப்படமாக இப்படமிருக்க வாய்ப்பிருக்கிறது என்பதாலும், சங்கர் அவர்களின் படம் என்பதற்காகவுமே எதிர்பார்ப்பு விண்ணை முட்டிக்கொண்டு நிற்கிறது .

மாஸ்டர் (Master Upcoming Tamil Movie 2020)

பிகில் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் அவர்களும் கைதியின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் அவர்களும் இணைந்திருக்கும் படம் மாஸ்டர்.

விஜய் சரி சொல்கிற அளவிற்கு லோகேஷ் என்ன கதை சொல்லியிருப்பார் என்ற ஆவலும் இப்படத்தை பற்றி எழுந்துள்ளது.

படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு என பெரிதாய் நீண்டு கொண்டிருக்கும் நடிகர் பட்டாளம் ஏற்படுத்தியிருக்கிற எதிர்பார்ப்பும் சமூகவலைதளங்களில் பிரம்மாண்டமாய் பிரதிபலித்து கொண்டிருக்கிறது.

இப்படத்தின் மூலம் அனிருத் ‘கத்தி’ படத்திற்கு பிறகு விஜய்யுடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வலிமை (Valimai Upcoming Tamil Movie 2020)

அஜித் ‘நேர்க்கொண்ட பார்வை’க்கு பிறகு தனது வழக்கமான பாணியுடன் திரும்புவார் என்று ஆவலில் இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

படத்தைப் பற்றிய தகவல்கள் இன்னும் முழுவதுமாக வெளியாகாத நிலையில் மக்களிடத்தில் அதிக எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டு உள்ளது.

H.வினோத் மற்றும் அஜித்குமார் அவர்கள் இரண்டாவது முறையாக இணைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சூரரைப்போற்று (Soorarai Pottru Most Awaited Tamil Movie)

சூர்யா போன்ற முன்னனி கதாநாயகர் ஒரு பெண் இயக்குனர் படத்தில் நடிக்கிறார் என்பதே அவ்வளவு ஆரோக்கியமான சினிமா சூழலாகவும் அதேசமயம் படத்தை திரையில் பார்ப்பதற்கான ஆவலும் ஓங்கியுள்ளது.

இறுதிச்சுற்று எனும் மாபெரும் வெற்றிப் படத்திற்கு பிறகு சுதா கொங்கரா அவர்கள் இயக்கும் இப்படத்திற்கு ‘சூரரைப்போற்று’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ஜி.வி பிராகாஷ்குமார் அவர்கள் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மீப்பெறும் நம்பிக்கையை சம்பாதித்திருக்கிறது.

கோப்ரா (Cobra Tamil Movie 2020)

Cobra Tamil Movie 2020

சியான் விக்ரம் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் கோப்ரா. இப்படத்தை இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்குகிறார்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் என்பது  இப்படத்தின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இப்படத்தில் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிருக்கிறது.

D40 (தனுஷ் 40 or Dhanush 40)

தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் இருவரும் இணைந்து மிரட்ட காத்திருக்கிறார்கள். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

இப்படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசை அமைக்கிறார். லண்டனில் தான் பெரும்பான்மையான படப்பிடிப்பு காட்சிகள் நடத்தப்பட்டுள்ளது.

மேலும் இது ஒரு கேங்ஸ்டர் படம் என்று கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். இப்படத்தை திரையில் காண ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

இவையாவும் இவ்வருடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ் படங்கள்.

3

TamilViewers.com: ஸ்ரீகாந்த் குறிப்பிடுவது யாரை? #staraikelungal

1
TamilViewers.com #starsportstamil #staraikelungal ஸ்ரீகாந்த் HotStar.com

TamilViewers.com: ஸ்ரீகாந்த் குறிப்பிடுவது யாரை? #staraikelungal #starsportstamil போன்ற ஹேஸ்டாக்கில் கேள்வி கேட்பவரா நீங்கள்? HotStar.com Cricket Live Streaming

Star Sports Tamil Predictions Predictor

இந்தியாவின் முன்னணி ஸ்போர்ட்ஸ் சேனல் என்றால் அது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மட்டுமே. இந்தியாவில் மொழி வாரியாக விளையாட்டு சேனல் துவங்கி உள்ளது.

Star Sports Tamil சேனல் துவங்கப்பட்ட நாள் முதல் உலகில் உள்ள பல நாடுகளில் உள்ள தமிழர்கள் கிரிக்கெட் விளையாட்டை அதன் வழியே காண ஆரம்பித்துவிட்டனர்.

ஸ்ரீகாந்த், சிவராமகிருஷ்ணன், வி.பி.சந்திரசேகர், பத்ரிநாத், ஹேமங் பதானி, அபினவ் முகுந்த், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் கிரிக்கெட் போட்டியின்போது காமெண்டரிகளாக செயல்படுகின்றனர்.

TamilViewers.com

ஸ்ரீகாந்த் அடிக்கடி காமெண்டரியின் போது Tamil Viewers com எனக் குறிப்பிடுவார். அப்போது #staraikelungal என்ற ஹேஷ்டாக்கில் கேள்விகள் வரும்.

இதில் சில கிரிக்கெட் ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்படலாம். ஸ்டாரை கேளுங்கள் டிவிட்டர் தளத்தில் கேள்வி கேட்பதா? அல்லது தமிழ்வியூவெர்ஸ்.காம் சென்று கேள்வி கேட்கவேண்டுமா? என்று.

HotStar.com

HotStar Tamil. மற்றும் ட்விட்டர் கேள்வியாளர்களையே ஸ்ரீகாந்த் அவ்வாறு குறிப்பிடுகிறார். தமிழ் பார்வையாளர்களையே அவர் Tamil Viewers எனக் குறிப்பிடுகிறார்.

.காம் எனக் கூறுவது இணையப் பார்வையாளர்கள் (HotStar.com) பற்றியே ஸ்ரீகா அவ்வாறு குறிப்பிடுகிறார். மற்றபடி இதில் குழம்புவதற்கு ஒன்றும் இல்லை.

#staraikelungal #starsportstamil

ஸ்டாரை கேளுங்கள் என்ற ஹேஸ்டாக் மூலம் டிவிட்டரில் நீங்கள் உங்கள் சந்தேகங்கள் கேள்விகளைக் கேட்கலாம்.

கிரிக்கெட் ரசிகர்கள் கேட்கும் சிறந்த கேள்விகளை தேர்வு செய்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ்‌ தமிழ் வர்ணனையாளர்கள் (star sports tamil commentary) பதில் அளிப்பார்கள்.

நாளுக்கு நாள் கிரிக்கெட் ரசிகர்களிடம் இந்த ஹாஸ்டாக் பிரபலம் அடைந்து வருகிறது. கடந்த நியூசிலாந்துக்கு எதிரான T20 போட்டியில் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது.

இந்திய அளவில் கிரிக்கெட் பார்வையாளர்கள் உள்ளனர். இருப்பினும் தமிழ் ரசிகர்களை மட்டுமே கொண்டு தனியாக ஒரு ஹேஸ்டாக் ட்ரெண்ட் ஆகிறது.

இது தமிழ் ரசிகர்கள் எந்த அளவிற்கு சோசியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ளனர் என்பதற்கு உதாரணம். அதை ஸ்டார் தமிழ் சேனல் நன்கு பயன்படுத்திக் கொள்கிறது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் விளையாட்டு சேனல்

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மொழி வாரியாக சேனல் துவங்கியுள்ளது. மேலும் கிரிக்கெட் தவிர கபடி, கால்பந்து, லோக்கல் கேம்ஸ் போன்ற ஏராளனமான போட்டிகளை ஒளிபரப்பி வருகின்றனர்.

பொதுவாக தமிழ் நாட்டில் விளையாட்டுகள் பற்றி ஒரு தெளிவான கண்ணோட்டம் இல்லை. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மூலம் எத்தனை விளையாட்டு போட்டிகள் ஆண்டு தோறும் இந்தியாவில் நடக்கின்றன என்பது தெரியவந்துள்ளது.

இது மேலும் பல தமிழக வீரர்களை, பல விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள உந்துதலைக் கொடுக்கும் என்பது நிச்சயம்.

3

ட்ரம்ப் இந்தியா வருகை: அரசியல் நோக்கமா?

0
ட்ரம்ப் இந்தியா வருகை ஜிஎஸ்பி வர்த்தக பட்டியல் அரசியல் நோக்கமா Generalized system of preferences

ட்ரம்ப் இந்தியா வருகை: அரசியல் நோக்கமா? ஜிஎஸ்பி வர்த்தக பட்டியல் (Generalized system of preferences – GSP), மீண்டும் இந்தியா இடம்பெறுமா?

அமெரிக்க அதிபர் தேர்தல்

அமெரிக்க அதிபர் தேர்தல், வரும் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் நிலையில் ட்ரம்பின் இந்திய வருகை அரசியல் நோக்கம் உடையதா எனக் கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வசிக்கும் இந்திய வம்சாவளியினரின் ஓட்டுக்களைப்பெற ட்ரம்ப் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டதாக கருத்து நிலவுகின்றது.

ட்ரம்ப் இந்தியா வருகை

வாஷிங்டனில் இருந்து பாதுகாப்பு அதிகாரிகள் இந்த வாரத்தில் டெல்லி வர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிபார்க்க வர இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இன்னும் முறைப்படி எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் பிப்ரவரி இறுதியில் இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோடி கோரிக்கை

ஜனவரி 7ம் தேதி இந்தியப் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தொலைபேசி உரையாடலின் எதிரொலியாக ட்ரம்ப் இந்தியா வருகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோடி அவர்கள் முதலில் சிறப்பு விருந்தினராக குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்ததாகவும் அது தடைபட்டு பின்னர் பிப்ரவரியாக மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜிஎஸ்பி வர்த்தக பட்டியல்

ட்ரம்பின் இந்திய பயணத்தில் ஜிஎஸ்பி சலுகையை இந்தியாவிற்கு மீண்டும் அமெரிக்கா வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிஎஸ்பி பட்டியலில் இந்தியா மீண்டும் இடம் பெற்றால் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை இந்தியா அமெரிக்காவில் வரி இல்லாமல் வர்த்தகம் செய்ய முடியும்.

Generalized system of preferences – GSP

அமெரிக்கா, உலகின் சில முக்கிய நாடுகளை (இந்தியா உள்பட) வர்த்தக முன்னுரிமை நாடுகள் (Generalized system of preferences – GSP) என்ற பட்டியலில் வைத்திருந்தது.

அமெரிக்க – சீன வர்த்தகப் போரை தொடர்ந்து இந்தியாவின் ஜிஎஸ்பி வர்த்தக சலுகையை ட்ரம்ப் ஜூன் முதலாம் தேதி 2019-ம் ஆண்டு ரத்து செய்தார்.

தற்போது ட்ரம்ப் வருகையை தொடர்ந்து, இந்தியா மீண்டும் ஜிஎஸ்பி மூலம் பலன் பெற முடியுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

3

கைஃபி அஸ்மி பிறந்த தினம்: கூகிள் டூடுல் – Google Doodle Today

0
Google Doodle Today கைஃபி அஸ்மி கூகிள் டூடுல் இன்று உருது மொழி கவிஞர் கசல் ஸ்டைல் கவிதை

கைஃபி அஸ்மி 101வது பிறந்த தினம்: கூகிள் டூடுல் இன்று. Google Doodle Today. கசல் ஸ்டைல் கவிதை. உருது மொழி கவிஞர். உலகின் தலைசிறந்த நிகழ்வுகள்.

கூகிள் டூடுல் அவ்வப்போது உலகின் தலைசிறந்த நிகழ்வுகள் அல்லது தலைசிறந்த மனிதர்களின் பங்களிப்பை நமக்கு நினைவு கூறும் வகையில், அதனை பற்றிய கட்டுரைகள் கூகிள் பக்கத்தில் இடம்பெறும்.

கைஃபி அஸ்மி 101வது பிறந்த தினம்

கூகிள் டூடுல் இன்று உருது மொழியில் சிறந்து விளங்கிய இந்தியாவின் கவிஞர் மற்றும் எழுத்தாளர் கைஃபி அஸ்மி 101-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரை சிறப்பித்துள்ளது.

கவிதை, கட்டுரை, பாலிவுட் பாடல்கள் மற்றும் திரைக்கதைகள் என இவரின் பங்களிப்பு அதிகம். 20-ஆம் நூற்றாண்டில் தலைசிறந்த கவிஞராக விளங்கியவர் ஆவார்.

கசல் ஸ்டைல் கவிதை

1919-ஆம் ஆண்டு இதே நாளில் அஸ்மார்க் மாவட்டம் உத்திரபிரதேச மாநிலத்தில் பிறந்தார். தன்னுடைய 11-ஆம் வயதில் முதல் கவிதையை ‘கசல் ஸ்டைல்’ என்ற தலைப்பில் எழுதினார்.

மகாத்மா காந்தி அவர்களின் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தான் இந்த கவிதை எழுத அவருக்கு உந்துகோளாக அமைந்ததாம்.

பத்மஸ்ரீ விருது

பின்னர், பம்பாய் [இப்போது மும்பை] பயணம் செய்து உருது மொழி பத்திரிக்கையில் எழுத்தாளராக பணிபுரிந்தார்.

மூன்று ஃபிலிம்ஃபேர் விருதுகள், எழுத்து மற்றும் இலக்கியத்தில் பத்மஸ்ரீ என விருதுகளை வென்று சாதனை படைத்தார்.

3

ராமகிருஷ்ணா மடம்: மோடி சர்ச்சைக்குரிய பேச்சு

0
பிரதமர் நரேந்திர மோடி ராமகிருஷ்ணா மடம் கொல்கத்தா பேலூர்

ராமகிருஷ்ணா மடம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு இருந்தவர்களை சந்தித்து குடியுரிமை சட்ட திருத்தத்தைப் பற்றி பேசினார்.

கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஞாயிறு அன்று கொல்கத்தா பேலூர் இராமகிருஷ்ணா மடத்தில் தங்கி இருப்பவர்களை சந்தித்து பேசினார்.

அடிமைப்படுத்தியது பாகிஸ்தான்

பிரதமர் மோடி பேசியதாவது, “குடியுரிமை திருத்த சட்டம், மக்களுக்கு குடியுரிமை வழங்குவது மட்டுமே யாருடைய உரிமையும் பறிப்பது அல்ல” என்று தெரிவித்தார்.

பாகிஸ்தான் பற்றி தனது உரையில் மோடி கூறியதாவது, “பாகிஸ்தான், தன் நாட்டில் உள்ள சிறுபான்மையினரின் உரிமையைப் பறித்து அவர்களை 70 ஆண்டுகளாக அடிமைப்படுத்தி வருவதாகவும்” தெரிவித்தார்.

ராமகிருஷ்ணா மடம் விளக்கம்

சுவாமி சுவிரானந்தா செய்தியாளர்களை சந்தித்தபோது, “மோடியின் கருத்துக்களுக்கு நாங்கள் விளக்கம் அளிக்கப் போவதில்லை.

மோடி இந்த நாட்டின் பிரதமர். மம்தா மாநிலத்தின் முதல்வர். நாங்கள் அரசியல் சாரா அமைப்பினர். இல்வாழ்க்கையில் இருந்து விலகி துறவறம் ஏற்றுள்ளோம்.

எனவே, நாங்கள் உலகில் நடைபெறும் தற்காலிக விஷயங்களில் தலையிடமாட்டோம்” எனத் தெரிவித்தார்.

குடியுரிமை சட்டம் என்ன சொல்கிறது?

2004-ம் ஆண்டின் குடியுரிமை திருத்த சட்டத்தின் படி (அசாம் தவிர) இந்தியாவில் வாழும் தாயோ, தந்தையோ இந்தியராக இருந்து அவர்களுக்கு 1987-ம் ஆண்டிற்கு முன் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்களாகவே கருதப்படுவார்.

அசாம் மட்டும் விதிவிலக்கு. அசாமில் 1971-ம் ஆண்டிற்கு முன் பிறந்தவர்கள் மட்டுமே இந்தியர்களாக கருத்தப்படுவர் என்பதாகும். இதில் மேலும் சில திருத்தங்கள் கொண்டு வந்தது பாஜக அரசு.

பாகிஸ்தான், ஆப்கானிஷ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வந்த முஸ்லீம்கள் அல்லாதவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்படும் என்பதே அது.

குடியுரிமை சட்ட எதிர்ப்புகள்

இந்த குடியரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக, டிசம்பர் 4 2019-ல் இருந்து வடகிழக்கு இந்தியா முழுவதும் பிரச்சனைகள் ஆரம்பம் ஆயிற்று.

ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் மத்திய அரசு, ஒரே நாளில் மத்தியிலும், மாநிலத்திலும் அனுமதி வாங்கி குடியரசுத்தலைவரின் ஒப்புதலையும் பெற்றது.

முதலில் அசாமில் ஆரம்பித்து மேகாலயா கொல்கத்தா, மும்பை, டெல்லி என வடகிழக்கு இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற ஆரம்பித்தது.

இருப்பினும் மத்திய அரசு குடியரிமை சட்டத்தை திரும்ப பெரும் எண்ணம் இல்லை என்பதை தெளிவாக எடுத்துரைத்தது.

அமித்ஷாவின் அதிரடி பேச்சு

ஜபல்பூர்: இதனிடையே குடியரிமை சட்டத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

சில மாணவர்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் இந்தியாவிற்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றனர். அவர்கள் சிறையில் அடைக்கப்படுவர் எனவும் தெரிவித்தார்.

3

பொங்கல் விடுமுறை 9 நாள்; அரசு அறிவிப்பு யாருக்கு?

0
பொங்கல் விடுமுறை pongal holiday 2020 லீவ்

பொங்கல் விடுமுறை 2020: 9 நாள் என அரசு அறிவித்து உள்ளது. பொங்கல் லீவ் அனைவருக்கும் செல்லாது. குறிப்பிட்ட அரசு அலுவலர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

பொங்கல் லீவ் 2019: 

சென்ற ஆண்டு ஜனவரி 15, 16, 17 மட்டுமே விடுமுறை தினமாக இருந்தது. ஜனவரி 12, 13 சனி ஞாயிறு விடுமுறை தினம். ஜன.14 திங்கள் கிழமை வேலை நாள்.

உடனே தமிழக அரசு, ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று 14-ம் தேதியை விடுமுறையாக அறிவித்து 6 நாட்கள் விடுமுறை விடப்பட்டது.

பொங்கலுக்கு எத்தனை நாள் விடுமுறை

2020 இந்த வருடம் ஜனவரி 15, 16, 17 பொங்கல் விடுமுறை. 18, 19 சனி ஞாயிறு தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் விடுமுறை.

ஜனவரி 13,14 திங்கள், செவ்வாய் கிழமை. இந்த இரண்டு நாட்கள் விடுமுறை விட்டு இருந்தால், சென்ற 11-ம் தேதி சனி கிழமை துவங்கி 19-ம் தேதி வரை மொத்தம் 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

தமிழக அரசு ஓர வஞ்சனை pongal holiday 2020

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனரகத்தின் கீழ் பணிபுரியும் அலுவலகர்களுக்கு மட்டும் 9 நாட்கள் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதே நேரம் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த விடுமுறை தினம் பொருந்தாது. இன்று அவர்கள் பணிக்கு செல்ல வேண்டும்.

அதேபோல் தமிழகத்தில் உள்ள மற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவருக்கும் இன்று வேலை நாள் என அரசு அறிவித்துள்ளது.

மாணவர்கள் சோகம்

பள்ளி விடுமுறையே எடுக்கக்கூடாது என நினைக்கும் மாணவர்களுக்கு இது பெரும் அதிருப்தியாக அமைந்துள்ளது. பள்ளியை கட் அடிக்க நினைக்கும் மாணவர்களுக்கு கவலையில்லை.

pongal holiday 2020. கட் அடிக்கும் மாணவர்கள் வழக்கம்போல் திங்கள், செவ்வாய் கட் அடித்து 9 நாட்கள் விடுமுறை எடுத்துவிட்டனர்,

வெளியூர் மாணவர்கள் வெள்ளிக்கிழமையே லீவ் லெட்டர் கொடுத்து வீட்டிற்கு சென்று விட்டனர். ஆனால் அவர்கள் இது போன்று செய்வது நல்லதல்ல.

இதனால் அன்றைய பாடங்களை அவர்கள் கவனிக்காமல் இருக்க வாய்ப்பு உண்டு. மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டாவது விடுமுறை அறிவித்து இருக்கவேண்டும்.

இந்த இரண்டு நாள் விடுமுறை தினத்தை அடுத்தடுத்து வரும் சனி, ஞாயிறு கிழமைகளில் வேலைநாட்களாக அறிவித்து ஈடு செய்து இருக்கலாம்.

ஆனால் ஆசிரியர்கள் 5 நாட்களே போதும் என கருத்துக்கூறியுள்ளனர். ஏன் எனில் சனிக்கிழமை வேலைநாள் என அறிவிக்கப்படும். எனவே பள்ளிக்கு வர அவர்கள் விரும்பவில்லை.

3

தேசிய கீதம் தினம் ஒலிக்கும்; சிலையாய் நிற்கும் கிராம மக்கள்

0
ஜம்மிகுண்டா

தேசிய கீதம் தினம் ஒலிக்கும்; சிலையாய் நிற்கும் கிராம மக்கள். ஜம்மிகுண்டா கிராம மக்களிடம் எப்படி? இப்படி ஒரு தேசப்பற்று வந்தது?

இயந்திர வாழ்க்கை மனிதன் 

இயந்திர வாழ்க்கையில் நம்முடைய பணிகளை பார்க்கவே நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறோம்.

இதற்கிடையே எங்கு நம் தேசப்பற்றை வெளிக்காட்டுவது? தேசிய கீதம் கூட நம்முடைய பள்ளி கல்லூரி பருவத்தோடே பல பேருக்கு மறந்து விட்டது.

இப்படிப்பட்ட நிலையில் ஒரு கிராமம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் தினசரி வாழ்க்கையில் தேசிய கீதத்திற்கென்று சில நொடிகளை ஒதுக்குகின்றனர்.

இதெல்லாம் நடப்பது அயல் நாட்டிலோ அண்டை நாட்டிலோ இல்லை. நாம் வாழுகி்ன்ற இதே இந்திய நாட்டில் தான்.

ஜம்மிகுண்டா கிராமம்

கிராம மக்கள் Jammikunda-Telungana

தெலுங்கானா மாநிலம், கரீம் மாவட்டத்தில் உள்ள ஜம்மிகுண்டா என்கின்ற கிராமத்தில் தான் இது நடைபெறுகின்றது.

தினசரி காலை 8 மணிக்கு தேசிய கீதமானது கிராமத்தின் 16 முக்கிய இடங்களில் ஒலிபெருக்கிகள் மூலம் இசைக்கப்படுகிறது.

பொதுமக்கள் தாங்கள் எந்த பணியில் ஈடுபட்டு இருந்தாலும் அதை அப்படியே நிறுத்திவிட்டு 52 நொடிகள் எழுந்து நிற்கின்றனர்.

இதில் அவசர மருத்துவ ஊர்திகள் தவிர வாகன ஓட்டிகள் முதல் சாலையில் நடப்பவர்கள், டீக்கடையில் உள்ளவர்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவியர்கள் வரை அனைவரும் அடக்கம்.

தேசப்பற்று எப்படி வந்தது?தேசப்பற்று இயந்திர வாழ்க்கை

எப்படி இந்த தேசப்பற்று மக்களிடையே வரவேற்பை பெற்றது என்றால் அப்பகுதி காவல் துணை ஆய்வாளரின் தீவிர முயற்சி என்கின்றனர் அக்கிராம மக்கள்.

ஜம்மிகுண்டா காவல் துணை ஆய்வாளர் பிரசாந்த் ரெட்டியின் முயற்சியில் இந்தச் செயலானது ஜம்மிகுண்டா கிராமம் முழுவதும் செயல்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

பிரசாந்த் ரெட்டி கருத்து

இது குறித்து பிரசாந்த் ரெட்டி கூறுகையில் “தற்காலத்தில் உள்ள இளைஞர்களிடம் நாட்டுப்பற்று என்பது குறைந்து கொண்டே வருகிறது.

இதற்கிடையே உச்சநீதிமன்றமானது திரையரங்குகளில் படக்காட்சிகள் துவங்கும் முன் தேசியகீதமானது இசைக்க வேண்டும் என்கிற உத்தரவின் அடிப்படையில் தோன்றியதே இந்த எண்ணம் ஆகும்.

இதுகுறித்து ஒரு வாரத்திற்கு முன்பே கிராமம் முழுவதும் பிரச்சாரம் நடத்தப்பட்டது. 71 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா முதல் தினசரி, சரியாக காலை 07:58 மணிக்கு தேசிய கீதம் குறித்த அறிவிப்புகள் ஒலிக்கப்படும்.

சரியாக 08:00 மணிக்கு தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. 52 நொடிகள் வரை தொடரும். பொதுமக்களும் தங்களுடைய ஒத்துழைப்பை தீவிரமாக நல்கி வருகின்றனர்.

இன்றைய காலத்தில் மக்கள் அனைவரும் சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழா அன்று மட்டும் மரியாதை செலுத்த வேண்டும் என்பதில்லை.

இது போன்று தினமும் நமது தாய்நாட்டிற்காக நற்காரியங்களைச் செய்ய வேண்டும்” என பிரசாந்த் ரெட்டி கூறியுனார்

இது போன்ற நல்லதொரு செயலானது அனைத்து இடங்களிலும் நடைமுறைக்கு கொண்டு வந்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதிலும் சிறியதாவது தேசபக்தி வளரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

3

அணுசக்தி ஒப்பந்தம்: ஈரானை முடக்க சதியா?

0
அணுசக்தி ஒப்பந்தம் ஈரானை முடக்க சதியா

அணுசக்தி ஒப்பந்தம்: ஈரானை முடக்க சதியா? ஈரான் வளைந்து கொடுக்குமா? பொருளாதார தடை, கடுமையாக எதிர்க்கும் ஈரான்.

பெல்ஜியம்: பெல்ஜியத்தில் உள்ள பிரஸ்சல்சில் ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள், ‘நோட்டோ’ பொதுச்செயலாளர் உள்ளிட்டோர் ஈரானை மீண்டும் அணு ஆயுத ஒப்பந்தத்திற்குள் கொண்டுவருவது குறித்து அவசர கூட்டம் கூடி விவாதிக்க முடிவு செய்துள்ளனர்.

ஒப்பந்தத்தை புறக்கணித்த ஈரான்

மேற்காசிய நாடான ஈரான் வல்லரசு நாடுகளுடன் 2015-ல் போடப்பட்ட அணு ஆயுத ஒப்பந்தத்தின் கட்டுப்பாடுகளுக்கு இனி கீழ்ப்படியப் போவதில்லை என சமீபத்தில் அறிவித்தது.

அதற்கு காரணம் அமெரிக்காவின் புதிய அதிபர் ட்ராம்பும் அவரது புதிய அணுசக்தி ஒப்பந்தமும் தான்.

அணுசக்தி ஒப்பந்தம்

ஏப்ரல் 2015-ல் சுவிட்சர்லாந்து நாட்டின் லூசானேவில் ஈரானுடன் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, இங்கிலாந்து, சீனா நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தின.

அதில் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரான் புதிய கட்டுப்பாட்டை விதித்தது. அதன் மீதான பொருளாதாரத் தடையை முற்றிலும் விலக்கிக் கொள்ளவேண்டும் என்றது.

இது வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ஜெர்மன் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பேச்சுவார்த்தை நீண்ட காலமாக நடைபெற்று ஜீன் 30ம் தேதி ஒரு முடிவுக்கு வந்தது.

யுரேனியத்தை செறிவூட்டி, அணுகுண்டாக மாற்ற பயன்படும் ‘சென்ட்ரிபியூஸ்’ எண்ணிக்கையை 3ல் இருந்து இரண்டாக குறைத்து அடுத்த பதினைந்து ஆண்டுகளில் மூன்று புள்ளி ஆறு ஏழு சதவீதமாக குறைக்கும் முடிவு எட்டப்பட்டது.

அதுமட்டுமின்றி அணுசக்தியை ஆக்கப்பூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று ஈரான் உறுதியளித்தது. இறுதி ஒப்பந்தம் சர்வதேச வரவேற்பை பெற்றது.

ட்ரம்பின் புதிய ஒப்பந்தம்

ஈரானுக்கு எதிரான புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை ட்ரம்ப் திட்டமிட முடிவு செய்தார். புதிய ஒப்பந்தத்திற்கு பிரான்ஸ் தனது ஆதரவை தெரிவித்தது.

வெள்ளைமாளிகை

ஏப்ரல் – 25, 2018 வெள்ளைமாளிகை வெளியிட்ட செய்தியில், அமெரிக்க அதிபர் ட்ரம்பும், பிரான்ஸ் அதிபர் மக்ரேனும் புதிய அணுசக்தி ஒப்பந்தத்திற்கு திட்டமிட்டதாகவும், ஈரானின் கை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதை தடுக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அறிவித்தது.

மேலும் ட்ரம்ப் மீண்டும் ஈரான் மீது பொருளாதாரத்தடையை விதிக்க இருப்பதாகவும் தெரிவித்தது.

ஈரானின் எதிர்ப்பு

ஈரான் ட்ரம்பின் புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை நிராகரித்தது. மீண்டும் பொருளாதாரத்தடையை அமுல் செய்தால் விளைவுகள் மோசமானதாக இருக்கும் என எச்சரிக்கையும் செய்தது.

அதன் விளைவை நாமும் கண்முன் பார்க்கிறோம். இருப்பினும் ஐரோப்பிய அமைச்சர்கள், நோட்டோ பொதுச்செயலாளரின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்.

3