Home Blog Page 275

காணும் பொங்கல்: கண்காணிப்பு வளையத்திற்குள் வண்டலூர்

0
காணும் பொங்கல் வண்டலூர் பூங்கா மெரினா பீச் கண்காணிப்பு பொதுமக்கள்

காணும் பொங்கல்: பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த மெரினா பீச் மற்றும் வண்டலூர் பூங்கா ஆகிய இடங்களில் போலீசாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

சிறப்பு ஏற்பாடுகள்

மெரினா பீச், வண்டலூர் உயிரியல் பூங்கா ஆகிய இடங்களில் காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

அதிலும் குறிப்பாக பொதுமக்களின் சிரமத்தை குறைக்க 20க்கும் மேற்பட்ட நுழைவுச் சீட்டு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

15, 16, 17 ஆகிய தேதிகளில் காலை 8மணி முதல் மாலை 6மணி வரை நுழைவுச் சீட்டு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் வசதி

பொதுமக்கள் இணையத்திலும் தங்கள் நுழைவுச் சீட்டை பதிவு செய்து கொள்ளலாம். www.aazp.in என்ற இணைய முகவரியில் முன்பதிவு வசதி கொடுக்கப்பட்டு உள்ளது.

vandaloor zoo என்ற செயலியையும் பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலமும் கட்டணத்தை செலுத்தும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

சிறப்பு வாகன வசதிகள்

பார்வையாளர்கள் அனைவரும் தங்களின் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை கேளம்பாக்கம் சாலையில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி வாகன நிறுத்துமிடத்திலிருந்து பூங்காவிற்கு செல்ல இலவச சிறப்பு பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எச்சரிக்கை: பார்வையாளர்கள் அங்கிருக்கும் விலங்குகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கத் தடைசெய்யப்பட்டுள்ளது. சிகரெட், மது, ஆயுதங்கள், பிளாஸ்டிக் போன்றவை எடுத்துச் செல்லவும் தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

3

INDvsSL: மலிங்காவை மின்னல் வேகத்தில் தாக்கிய தாக்கூர்

0
INDvsSL தாக்கூர் மலிங்கா பந்து மின்னல் வேகத்தில் கோலி 11000 ரன்கள்

INDvsSL 2020: மலிங்கா பந்து வீச்சை மின்னல் வேகத்தில் தாக்கி இந்திய அணியின் ரன் எண்ணிக்கையை 201 என உயர்த்தினார் தாக்கூர்.

பந்துவீச்சு தேர்வு

முதலில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் மலிங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியின் தவான்-ராகுல் ஜோடி துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.

இருவரும் நிலைத்து நின்று ஆடினர். 10 ஓவர்கள் முடிந்தும் இருவருடைய விக்கெட்டுகளையும் இலங்கை அணியினரால் வீழ்த்த முடியவில்லை.

தவான் 2018 ஆம் ஆண்டு போட்டிக்கு பிறகு T20 போட்டியில் அரைசதம் அடித்து ஃபார்மிற்கு திரும்பினார். ஆனால் அடுத்த சில பந்துகளிலேயே விக்கெட் இழந்தார்.

அடுத்தடுத்து விக்கெட்

அதன் பிறகு வந்த சஞ்சு சாம்ஸன் முதல் பந்திலேயே சிக்சர் பறக்கவிட்டு மைதானத்தை அதிர வைத்தார். ஆனால் அடுத்த பந்திலேயே அவுட் ஆகி புஸ்வானமாக மாறினார்.

கே.எல். ராகுல் அரை சதம் கடந்த நிலையில் இறங்கி அடிக்க முற்பட்டு ஸிடெம்பிங்க் ஆனார். அவருடன் சேர்ந்து ஸ்ரேயாஸ் ஐய்யரும் அவுட் ஆகினார்.

இவர்களைத் தொடர்ந்து முதல் பாலிலேயே வாஷிங்டன் சுந்தர் லட்டு கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார். மறுமுனையில் பொறுப்புடன் ஆடினார் கோலி.

மீண்டும் விக்கெட்

கோலி 32 ரன்கள் கடந்த நிலையில் தேவையில்லாமல் ஓடி ரன் அவுட் ஆனார். இதன்பிறகு போட்டியை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டோம் என நினைத்த இலங்கைக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

மின்னல் வேக தாக்குதல்

மனீஷ் பாண்டேவுடன் கை கோர்த்த தாக்கூர் மலிங்காவை நைய்யப்புடைத்தார். சிக்ஸர், ஃபோர் பறக்கவிட்டு மலிங்காவை கதிகலங்க வைத்தார்.

மறுபக்கம் பாண்டேவும் நான் ஒன்றும் சளைத்தவன் அல்ல என அவர் பங்குக்கு பவுண்டரிகளை விளாசினார்.

தாக்கூர் மின்னல்வேக தாக்குதல் நடத்தி 8 பந்துக்கு 22 ரன்கள் குவித்தார். பாண்டே 18 பந்துக்கு 31 ரன்கள் குவித்தார்.

கோலி 11000 ரன்கள்

இந்தப் போட்டி மூலம் சர்வதேச அளவில் 11000 ரன்கள் குவித்த இரண்டாவது இந்தியப் கேப்டன் என்ற சாதனையை படைத்தார் கோலி. தோனி முதலாவது இடத்தில் உள்ளார்.

உலக அளவில் 6வது இடத்தில் உள்ள விராட்கோலி அதிவிரைவாக 169 போட்டிகளில் 11000 ரன்களை கடந்து முதலிடம் பிடித்தார்.

இலங்கை பரிதாப தோல்வி

கத்துக்குட்டி அணியாக இந்தியா வந்துள்ள இலங்கை அணியினர்  பரிதாபமாக டி20 போட்டியில் தோல்வியைத் தழுவினார்.

15.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்தனர். சைனி 3, சுந்தர் 2, தாக்கூர் 2, பும்ரா 1 என விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தொடர் நாயகன் ஆட்ட நாயகன்

இந்த ஆட்டத்தில் 8 பந்துகளில் 22 ரன்கள் குவித்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய தாக்கூர் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

INDvsSL இரண்டு T20 போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்ட சைனி தொடர் நாயகன் விருதை வென்றார்.

3

மூன்றாம் உலகப்போர்: முடிவு ஈரான் கையில் உள்ளது?

0
சுலைமானி கொலை மூன்றாம் உலகப்போர் ஈரான் நிலைப்பாடு

மூன்றாம் உலகப்போர்: அமெரிக்கா போர் வேண்டாம் என முடிவு செய்துவிட்டது. ஈரான் நிலைப்பாடு என்ன என்பது உறுதியாகத் தெரியவில்லை.

சுலைமானி கொலை

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஈரான் நாட்டு ராணுவத் தளபதி சுலைமானி அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை ஏவுகணை வீசி தாக்கியது ஈரான். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது.

பொருளாதார நிபுணர்கள் கருத்து

போர் ஏற்பட்டால் இரு நாடுகளின் பொருளாதாரமும் கடும் வீழ்ச்சியைச் சந்திக்கும். எனவே போர் அவசியமற்றது என பொருளாதார நிபுணர்கள் பலர் தங்கள் கருத்துக்களை முன் வைத்துள்ளனர்.

பிரதிநிதிகள் சபை

ஈரான் மீதான ராணுவ தாக்குதலில் ட்ரம்பின் அதிகாரத்தை கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிரான தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்திற்கு ஆதரவாக 224 பேர் வாக்களித்துள்ள நிலையில் போர் பதற்றம் சற்றே தணிந்துள்ளது.

மூன்றாம் உலகப்போர்

ஆனால் ஈரான் தனது ராணுவ தளபதியின் இழப்பிற்கு பதில் தாக்குதல் நடத்துமா?அல்லது கைவிடுமா? என இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

ஒருவேளை ஈரான் போர் தொடுப்பது என முடிவு செய்தால் நிச்சயம் பல நாடுகள் ஈரணியாகப் பிரியும். இதன்மூலம் உலகப்போர் மூளும் அபாயம் உள்ளது.

3

வில்சன் கொலை: பெங்களூர் பயங்கரவாதிகளுடன் தொடர்பா?

0
வில்சன் கொலை பெங்களூர் பயங்கரவாதிகளுக்கு

வில்சன் கொலை: பெங்களூர் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (57) நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

வில்சனை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கொலைகாரர்களை போலீசார் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

கண்காணிப்பு கேமரா

இதனிடையே சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் கொலையாளிகள் இருவரும் தப்பியோடும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

குற்றவாளிகளின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ள நிலையில் அவர்கள் பற்றிய சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இருவரும் குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டையைச் சேர்ந்த அப்துல் சமீம். நாகர்கோவில் இளங்கடையைச் சேர்ந்த ரபீக் என்பதும் தெரியவந்தது.

கொலையாளி ரபீக் கைது

ரபீக் என்பவரை கேரள போலீசார் பூந்துறையில் வைத்து கைது செய்துள்ளனர். அப்துல் சமீம் இன்னும் போலீசாரிடம் சிக்கவில்லை.

தமிழக உளவுப்பிரிவு, மத்திய உளவுத்துறை உயர் அதிகாரிகளின் விசாரணையில், ரபீக் இடம் இருந்து அதிர்ச்சிகரமான விஷயங்கள் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளனர்.

குடியரசு தின விழாவினை சீர்குலைக்க திட்டம் தீட்டி பெங்களூருவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக கண்டறிந்துள்ளனர்.

மீதம் உள்ள ஒரு குற்றவாளி கேரளாவில் உள்ள பயங்கரவாதிகளிடம் தஞ்சம் அடைந்து இருக்கலாம் என சந்தேகித்து கேரள போலீசார் தேடுதலை தீவிரப்படுத்தி உள்ளனர்.

3

தர்பார் திரைவிமர்சனம் | Darbar Movie Review Download HD

0
தர்பார் திரைவிமர்சனம் டவுன்லோட் | Darbar Movie Review Download HD சூப்பர் ஸ்டார் ரஜினி Darbar Full Story

தர்பார் திரைவிமர்சனம் | Darbar Movie Review Download HD | Darbar HD Movie Review Watch Online. தர்பார் டவுன்லோட் ரிவியூ.

தர்பார் திரைவிமர்சனம்

நீண்ட காலங்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி போலீஸ் ஆக நடித்து AR முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் தர்பார் ஆகும்.

இதில் நயன்தாரா, நிவேதிதா தாமஸ் மற்றும் யோகி பாபு என பல முன்னனி நடிகர்கள் நடித்துள்ளனர்.

Darbar Movie Review Watch Online

Darbar Opening Scene

படத்தின் ஆரம்பத்தில் இவர்கள் கொடுக்கும் பில்ட் அப்பிலையே இது வெறும் ரஜினிக்காக எடுக்கப்பட்ட திரைப்படம் என்று தெரிந்துவிட்டது.

Darbar Full Story Online

படத்தின் கதையைப்பற்றி பார்த்தால் ஹீரோ போலீஸ் கமிஷ்னர் ஆதித்யா அருணாச்சலம் டெல்லியில் இருந்து மும்பைக்கு ஒரு சீக்ரெட் ஆபரேஷனுக்காக பணி மாற்றம் ஆகிறார்.

மும்பையில் அதிகமாக நடக்கும் போதைப் பொருள் பரிமாற்றத்தால் இளம் வயதினர் அதிகமாக பாதிக்கப்பட்டு வருவதைக் கண்ட ஹீரோ கொந்தளிக்கிறார்.

அதை அடியோடு காலி செய்ய முடிவு செய்கிறார். இதனால் போதைப்பொருள் கடத்துபவர்களின் தலைவனை கைது செய்ய நேரிடும்.

அவர் மும்பையில் செல்வாக்கு அதிகமுள்ள குடும்பத்தை சேர்ந்து இருந்தாலும் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி சிறையில் அடைக்கிறார்.

வில்லன் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி சிறையில் ஆள்மாறாட்டம் செய்து வெளிநாட்டில் இருப்பதை தெரிந்த ஆதித்யா அருணாச்சலம் எப்படியோ அவனை இங்கு வரவழைத்து அவன் கதையை முடிக்கிறார்.

இது ஒருபக்கம் போக… மறுபக்கம் நயன்தாராவுடன் ரொமான்ஸ், யோகி பாபுவின் நகைச்சுவை மற்றும் அப்பா மகள் பாசம் என இரண்டும் படத்தை முதல் பாதி வரை எடுத்து சென்றுவிட்டது.

இரண்டாம் பாதியில் ஆரம்பித்து சிறிது நேரத்தில் ஹீரோவின் மகளை கொன்று விடுகிறார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த ரஜினி மும்பையில் இருக்கும் அனைத்து ரௌடிகளையும் சூறையாடுகிறார்.

தன்னுடைய மகளின் மரணத்திற்கு பின் யார் இருக்கிறார்கள் என்று கண்டறிந்து பழி தீர்ப்பதே மீதமுள்ள கதை.

படத்தின் நிறைகள்

படத்தின் ஓப்பனிங்கில் வரும் குத்து பாடல் அருமையாக இருக்கும். ரஜினி அவர்களின் சுறுசுறுப்பும், நடிப்பும் நமக்கும் 90களில் பார்த்த ரஜினி போன்ற உணர்வைக் கொடுக்கிறது.

அப்பா மகள் பாசம், நிவேதிதா அவர்களின் நடிப்பு அருமையாக இருக்கும். படத்தின் பி‌ஜி‌எம் ரஜினி அவர்களின் ஃபேமஸ் ஆனா படங்களில் இருந்த கலவை போன்று இருக்கும்.

இருந்தாலும் ரஜினியின் ஸ்டைல் அண்ட் பி‌ஜி‌எம் காம்போ பார்ப்பதற்கு அருமையாக அமைந்தது.

படத்தின் குறைகள்

சண்டைக்காட்சிகள் தெலுங்கு படங்களை போன்றே இருக்கும். அந்த அளவுக்கு ரசிக்கும்படியாக இருக்காது.

ரஜினிக்கு அதிக முக்கியத்துவம் குடுத்ததால் வில்லன் கதாப்பாத்திரம் சரியாக அமைக்கவில்லை. கமர்ஷியல் மட்டுமே கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது என்று பச்சையாக தெரிகிறது.

படத்தில் விறுவிறுப்பு என்ற ஒன்றே இல்லை. ஒரு சுமாரான போலீஸ் திரைப்படமாக எடுத்து வைத்துள்ளனர்.

3

ரஜினி-சசிகலா: தர்பார் ரகசியத்தை உடைத்த ஜெயக்குமார்!

0
ரஜினி-சசிகலா பொங்கல் பரிசு அமைச்சர் ஜெயக்குமார் தர்பார்

ரஜினி-சசிகலா: தர்பார் படத்தில் வரும் ஒரு காட்சியை சசிகலாவுடன் ஒப்பிட்டு, பொங்கல் பரிசு வழங்கியபோது அமைச்சர் ஜெயக்குமார்  பேட்டி அளித்தார்.

தமிழக அரசின் சார்பில் பொங்கல் பரிசு

தமிழக அரசின் சார்பில் தமிழகம் முழுவதும், சுமார் 35000 ரேஷன் கடைகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை ‘பொங்கல் பரிசு’ வழங்கப்படுகிறது.

பொங்கல் பரிசு பொருட்கள்

ஒரு குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் ரொக்கப்பணம். ஒரு கரும்புத் துண்டு, சர்க்கரை, பச்சரிசி, ஏலக்காய், முந்திரி எனப் பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் இடம்பெற்று உள்ளது.

மேலும் குடும்பத் தலைவருக்கு வேட்டியும், குடும்பத் தலைவிக்கு சேலையும் வழங்கப்பட்டு உள்ளது,

ஸ்மார்ட் கார்டு அவசியம்

மின்னணு குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) மூலமாகவே பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஸ்மார்ட்கார்டு இல்லாதவர்கள் பழைய ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை காண்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

பொங்கல் பரிசு வாங்கியவுடன் குடும்ப அட்டைதாரர்களின் மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு விடும்.

இந்தப் பரிசு தமிழகம் முழுவதும் 2.5 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு ரூ.2363 கோடியை பட்ஜெட் தொகையாக ஒதுக்கி உள்ளது.

அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை இராயபுரம் கூட்டறவு அங்காடியில் அமைச்சர் ஜெயக்குமார் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசினை வழங்கிய பின்பு நிருபர்களுக்கு பேட்டி கொடுத்தார்.

ஜெயக்குமார் கூறியதாவது, பொங்கல் பரிசு 4 நாட்களுக்கு காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை வழங்கப்படும். ஒரு கடையில் 300 பேருக்கு தினசரி வழங்கப்படுகிறது.

பொதுமக்கள் காலையிலேயே வந்து காத்திருக்க வேண்டாம். இரவு 7 மணி வரை வழங்கப்படுவதால் பொறுமையாக வந்து வாங்கி செல்லுங்கள்.

பொதுமக்கள் அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து பொங்கல் பரிசினை பெற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

தர்பார் ரஜினி-சசிகலா

மேலும் அவர் கூறியதாவது, “தர்பார் திரைப்படத்தில் சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் மனிதர்கள், பணத்தினால் எதையும் சாதிக்க முடியும் என நினைப்பவர்களைப் பற்றி கூறப்பட்டு உள்ளது.

பணம் பாதாளம் வரைக்கும் பாயும் அதேசமயத்தில் பணம் சிறைச்சாலை வரைகூட பாயும் என்று கூறினார்.

இந்தப் படத்தின் ஒரு காட்சியில், இப்போதெல்லாம் சிறையிலிருப்பவர்கள் ஷாப்பிங் போகிறார்கள் என்று ரஜினியிடம் பேசுவதாக வசனம் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வசனம் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டு உள்ளது என தர்பார் படத்தில் சசிகலா பற்றி இருந்த ரகசியத்தை கூறி விமர்சனம் செய்தார்.

3

தேனியில் சாலைமறியல்: தொழிற்சங்கத்தினர் கைது

0
தேனியில் சாலைமறியல் தொழிற்சங்கத்தினர்

தேனியில் சாலைமறியல் செய்த தொழிற்சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அகில இந்திய வேலை நிறுத்தம்

இன்று இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் சார்பாக வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் ஆயிரக்காணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.

தேனி தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்

தேனி மாவட்டம் தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் கம்பம் – மதுரை, கம்பம் – திண்டுக்கல் நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடத்தில் நேரு சிலை உள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்டோர் தேனி பூதிப்புரம் பஸ் நிலையத்தில் தொழிற்சங்கங்களின் கட்சிக் கொடிகளுடன் ஒன்று கூடி நேரு சிலையை நோக்கி ஊர்வலமாக வந்தனர்.

தடுத்து நிறுத்திய காவல்துறையினர்

பூதிப்புரம் பஸ் நிறுத்தத்திலிருந்து நேரு சிலையை நோக்கி கோசங்கள் எழுப்பியவாறு வந்த தொழிற்சங்க நிர்வாகிகளை காவல்துறையினர் தடுத்தி நிறுத்தினார்.

தர்ணாவில் ஈடுபட்ட நிர்வாகிகள்

போராட்டம் நடத்திய தொழிற்சங்க நிர்வாகிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியவுடன், சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனார்.

கோரிக்கைகள்:

தொழிலாளர் நலச்சட்டங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்தி தொழிலாளர்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவை வழங்காமல் தனியார் நிறுவனத்திற்கு மத்திய அரசு துணைபோகக் கூடாது.

பொதுமக்கள் பெரிதும் பயன்பெறும் அரசு போக்குவரத்து துறையினை தனியாருக்கு வழங்கிடக் கூடாது. பிரதமர் சுரக்ஷா யோஜனா என்ற பெயரில் போலியான பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும்.

தொழிலாளர்கள் நலவாரிய சங்கத்தின் முதலீடுகளை பெருக்கித் தர வேண்டும். முதலீடு செய்ய வருபவர்களை அலைக்கழிக்க கூடாது.

முறைசாரா தொழிலாளர்கள் பென்சன் ஆயிரத்தில் இருந்து மூவாயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். முறைசாரா நல வாரியமான எங்களுக்கு முழுமையான நிதியை ஒதுக்கீடு செய்யவேண்டும்.

வேலையின்மை, வேலை இழப்பு வருமான சரிவு விவசாயிகள் தற்கொலை போன்ற செயல்கள் நடைபெறுவதைத் தடுத்து, அதற்குண்டான வழிமுறைகளை கையாள வேண்டும்.

கட்டுமான தொழிலாளர் பாதிப்பு போன்றவற்றிலிருந்து மீட்டு எடுக்கவும் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து 100க்கும் மேற்பட்டோர் நேருசிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியல் செய்தனர்.

கைது நடவடிக்கை

தேனியில் சாலைமறியல் செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

இந்த போராட்டத்தினால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளயினர்.

இந்தப் போராட்டத்தில் AIUTUC, AITU, CITU, LPF, INTUC ஆகிய தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

3

வாரம் 4 நாள் வேலை; மீத நாட்கள் விடுமுறை – இதுதான் அரசு!

0
பின்லாந்து அரசு குடிமக்கள்

வாரம் 4 நாள் வேலை. ஒரு நாளைக்கு 6 மணி நேரம். மீதம் 3 நாட்கள் விடுமுறை. குடிமக்கள் மீது அக்கறை உள்ள அரசு என்றால் அது சன்னா மரின்  அரசு.

பின்லாந்து அரசு

பின்லாந்து நாடு என்றால் சட்டென நினைவுக்கு வருவது கல்வி. இந்த நாட்டில் கல்வி தரமாக வழங்கப்பட்டு வருகிறது.

கல்வியை எப்படி மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என பல நாட்டின் தலைவர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் பின்லாந்து சென்று ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

பிரதமர் சன்னா மரின்

சன்னா மரின் வேலை நாள்

34 வயதில் பிரதமராக உருவெடுத்தவர் சன்னா மரின். இவரின் பெற்றோர் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள்.

வாரம் 4 நாள் வேலை. ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வேலை செய்தால் போதும். மீதம் 3 நாட்கள் விடுமுறை என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டவர் இவரே.

ஊழியர்கள் கோபம்

பின்லாந்து குடிமக்கள், அந்நாட்டு ஊழியர்கள் அனைவரும் பிரதமர் சன்னா மரின் அறிவிப்பைக் கண்டு கொண்டாட்டத்தில் உள்ளனர்.

ஆனால் மற்ற நாடுகளில் உள்ளவர்கள் கோபத்தில் உள்ளனர். நம்ம ஊர் அரசு ஏன் இப்படி ஒரு சலுகை வழங்கவில்லை என்று.

ஏன் இந்த விடுமுறை?

ஊழியர்கள் தொடர்ந்து வேலை செய்வதால் அவர்களால் குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட முடிவதில்லை. இதனால் அவர்களுக்குள் மன அழுத்தம் ஏற்படுகிறது.

இதைக் குறைக்கவே இந்த விடுமுறை என சன்னா மரின் தெரிவித்துள்ளார். இந்த நேரக் குறைப்பு மூலம் ஊழியர்கள் தங்கள் குடும்பங்களுடன் அதிக நேரம் செலவிட முடியும்.

இதனால் அவர்கள் வேலை நாட்களின்போது, வேலையில் அதிக கவனம் செலுத்துவர். நிறுவனங்களுக்குச் சற்று இழப்பீடு ஏற்பட்டாலும், இன்னும் அதிக வேலைவாய்ப்பு ஏற்படும்.

இந்திய நாட்டிற்கு இது ஒத்து வருமா?

இந்தியாவில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. அதேநேரம் வேலைவாய்ப்புகள் குறைந்து கொண்டே செல்கிறது.

பின்லாந்து போன்று இந்தியாவில் வேலை நாட்கள், நேரம் குறைக்கப்பட்டால் அந்த இடத்தை நிரப்ப கூடுதலாக வேலையாட்கள் நியமிக்கப்பட வேண்டும்.

எனவே, இந்தியா போன்ற நாடுகளில் இதைச் செய்தால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். வேலையில்லாத் திண்டாட்டத்தை ஓரளவு சமாளிக்க முடியும்.

நம் நாட்டுத் தலைவர்கள், பின்லாந்து போன்ற நாடுகளுக்கு விசிட் மட்டும் அடிக்கின்றனர். ஆனால் திட்டங்களை வகுப்பதில் கோட்டை விட்டு விடுகின்றனர்.

அப்படியே ஒரு சில நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், ஊழல் அதிகாரிகளால் சரிவர நடைமுறைப் படுத்தப்படுவதில்லை.

தொண்டர்கள் குத்தாட்டம்

இதைப் பற்றி எல்லாம் கட்சித் தொண்டர்கள் எந்தக் கவலையும் படுவதில்லை. அவர்களுடைய கட்சி ஜெயித்தால் மீடியா முன்பு குத்தாட்டம் போடுவார்கள்.

தோற்றவர்கள் ஜெயிக்கும் நாளுக்காக காத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் கட்சி ஆட்சியில் இருக்கும் ஐந்து வருடமும் எந்த ஒரு கேள்வியும் கேட்க மாட்டார்கள்.

தேர்தல் நேரம் என்றால் எங்கள் கட்சித் தலைவர் ‘இப்படி அப்படி’ என வாட்ஸ்ஆப்பில் புரளிகளை சேர் செய்து பெருமைப்பட்டு கொள்வார்கள்.

இவர்கள் தான் இந்தியா. இவர்கள் தேர்ந்தெடுப்பவர்கள் தான் இந்திய அரசு. அதில் சேர்ந்து பாதிக்கப்படுவது சக மக்களும் தான்.

ஒரு நல்ல அரசு கிடைத்துவிடாதா எனக் கனவில் மிதக்கும் சக இந்தியக் குடிமக்களும் இவர்களைப் போன்ற தொண்டர்களால் ஒரு நல்ல கட்சியைத் தேர்ந்தெடுக்க முடியாமல் தவிக்கின்றனர்.

3

பிசிசிஐ கோபம்: இனி கவுஹாத்தியில் போட்டிகள் நடக்குமா?

0
பிசிசிஐ கோபம் இந்தியா-இலங்கை T20 போட்டி மழையால் ரத்து கவுஹாத்தி

பிசிசிஐ கோபம்: கவுஹாத்தி மைதானத்தில் இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த T20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

மழை குறுக்கீடு

கவுஹாத்தியில் இந்தியா-இலங்கை அணிகள் இடையேயான முதலாவது T20 போட்டி நேற்று நடைபெற்றது.

போட்டி துவங்கும் முன்பே மழை பெய்யத் துவங்கிவிட்டது. இதனால் போட்டி நடைபெறவதில் சிக்கல் ஏற்பட்டது. ஒரு மணி நேரம் கழித்து மழை ஓய்ந்தது.

மழை நின்றவுடன் மைதானத்தை ஆய்வு செய்தபோது நடுவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் மழை நீர் ஆடுகளத்திற்குள் புகுந்து பிட்சின் தரத்தை குறைத்துவிட்டது.

அயன் பாக்ஸ் காமெடி

மைதான நிர்வாகிகள் கவனக்குறைவால் மைதானம் ஈரமாகிவிட்டது. இது ஒருபுறம் இருந்தால் அதை சரி செய்கிறேன் என்று நம்ம ஊர் விஞ்ஞானி ராஜூபாயை விஞ்சிவிட்டனர்.

அயன்பாக்ஸ் எடுத்து வந்து மைதானத்திற்கு சூடுவைத்து காயவைக்க முயன்றனர். மேலும் ஹேர் டிரையர் கொண்டும் மைதானத்தை உலர்தினர். இவர்களின் அறிவைக் கண்டு நாடே வியந்துவிட்டது.

போட்டி ரத்து

இறுதிவரை மைதானத்தை காயவைக்க முடியவில்லை. இதனால் போட்டியை ரத்து செய்வதாக நடுவர்கள் அறிவித்தனர்.

மைதானம் ஈரம் ஆகும் அளவிற்கு பெரிய மழை ஒன்றும் பெய்யவில்லை. இருப்பினும் ஊழியர்களின் அலட்சியத்தால் போட்டி ரத்தானது.

பிசிசிஐ கோபம்

மைதானத்தை மூட பயன்படுத்திய தார்பாய்களில் ஓட்டை இருந்து இருக்கலாம் அதன் காரணமாகவே மைதானதிற்குள் மழை நீர் புகுந்து உள்ளது என பிசிசிஐ கருதுகின்றது.

மைதானம் சேதமடைந்தது குறித்து பிசிசிஐ அறிக்கை சமர்பிக்க வேண்டும் என மைதான நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.

IPL T20 போட்டிகள் நடைபெறுமா?

ராஜஸ்தான் ராயஸ் அணி கவுஹாத்தியில் தங்களுடைய சொந்த மைதான போட்டிகளை நடத்த முடிவு செய்து இருந்தது.

இந்நிலையில் மைதானம் ஒழுங்காக பராமரிக்கப்படவில்லை என்பதால் இனி சில வருடங்கள் அங்கு இண்டர்நேசனல் போட்டிகள், டி20 போட்டிகள் நடைபெறாது என்று கூறப்படுகிறது.

கவுஹாத்தி மைதானத்தை அசாம் மாநில கிரிக்கெட் அமைப்பு நிர்வாகிகள் தான் நிர்வகித்தனர். அவர்களின் அலட்சியப்போக்கு காரணமாகவே போட்டி நடத்தமுடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.

3

தேனி E.புதுக்கோட்டை ராஜ் தாக்குதலின் பின்னணி என்ன?

0
தேனி E.புதுக்கோட்டை

தேனி E.புதுக்கோட்டை ராஜ் என்பவர் சில மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ஆள்நடமாட்டம் உள்ள கடைத்தெருவில் வைத்து தாக்கப்பட்டார்.

தாக்குதலின் பின்னணி என்ன?

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே E.புதுக்கோட்டை ஊரைச் சேர்ந்த ராஜ் காதல் திருமணம் செய்து கொண்டதால் தாக்கப்பட்டார்.

வீடியோ செய்தியை பார்க்க யுட்யூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.

காதல் திருமணம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள E.புதுக்கோட்டை கிராமத்தில் வசித்து வருபவர் 45 வயதுள்ள அய்யனார் மகன் சேகர்.

இவருடைய மகள் காயத்திரி (24 வயது) அதே ஊரைச் சேர்ந்த சிவராஜ் மகன் ராஜ் (24 வயது) என்பவரைக் காதலித்து வந்தார் .

பெற்றோர் அனுமதி இல்லை

காயத்திரி-ராஜ் காதல் ஜோடியின் திருமணம் 2019 ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று பெற்றோர்களுடைய சம்மதமில்லாமல் நடந்தது.

அன்று முதல் காயத்திரியின் பெற்றோர் மாப்பிள்ளை ராஜ் மீது விரோதத்தில் இருந்துள்ளனர். மகளுடன் முற்றிலும் பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொண்டனர்.

தாக்குதல் நடத்திய பெண் வீட்டார்

இந்நிலையில் இன்று ராஜ் தனது இருசக்கர வாகனத்தில் ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள தனியார் மளிகைக் கடைக்கு மளிகைப் பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார்.

அப்போது ராஜ்-யை, அய்யனார் மகன் சேகர் (காயத்திரியின் தந்தை), சேகர் மகன் பிரகாஷ் (வயது 26), ராஜேஷ் (வயது 24) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.

மூவரும் கடையில் நின்று இருந்த ராஜ்-யை அரிவாள் மற்றும் உருட்டுக்கட்டையை கொண்டு கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இந்த எதிர்பாராத தாக்குதலைக் கண்டவுடன் ராஜ் பயங்கரமாக சத்தம் கொடுத்துள்ளார். இதனால் அருகில் இருந்தவர்கள் வருவதைக் கண்டவுடன் அங்கிருந்து மூவரும் தப்பி ஓடிவிட்டார்கள்.

போலீசார் விசாரணை

தாக்குதலில் காயம் பட்ட ராஜ்-யை 108 வாகனத்தின் மூலமாக அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சம்பவம் பற்றி பெரியகுளம் காவல்துறை அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

பொதுமக்கள் அச்சம்

பெரியகுளம் பகுதியில் புதுவருடப்பிறப்பு அன்று கொலை நடந்ததையடுத்து ஆட்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் இச்சம்பவம் நடந்திருப்பதால் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பயத்தையும் உண்டாக்கி இருக்கிறது.

3