Home Blog Page 276

மீசை இல்லா விஜய்; மாஸ்டர் கதைக்கு செக்!

0
மீசை இல்லா விஜய் மாஸ்டர் ப்ளான்

மீசை இல்லா விஜய், மாஸ்டர் படத்தில் முதல் முறையாக விஜய் மீசை இல்லாமல் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாஸ்டர் கதை, மாஸ்டர் ப்ளான் செய்த இயக்குனர்.

அரும்பு மீசை

அரும்பு மீசையுடன் நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகமானார் விஜய். அதனைத் தொடர்ந்து சில படங்களுக்குப் பிறகு விஜய்யின் மீசைக்கு என ஒரு ரசிகர் கூட்டம் உருவானது.

பங்க் தலைமுடி, சின்ன உதடுகள், அதன் மேல் குட்டி மீசை என ஆண்கள் பலருமே ‘விஜய் மீசை’ நமக்கில்லையே என விஜய்யைப் பார்த்து ஏங்கியது உண்டு.

காலப்போக்கில் வயது முதிர்ச்சி காரணமாக பழைய விஜய்யை எந்த ஒரு படத்திலும் பார்க்கவே முடிவதில்லை.

கெட்டப் சேஞ்ச்

விஜய் பொதுவாக ‘கெட்டப் சேஞ்ச்’ செய்து கொள்வது இல்லை. அப்படியே கெட்டப் சேஞ்ச் செய்து கொண்டாலும் பெரிய வித்யாசம் இருக்காது.

சமீப காலமாக விஜய், டோப்பா வைத்து ஹேர் ஸ்டைலை மாற்றி நடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அது சற்று பாசிடிவ் கமெண்ட் வரவே; மாஸ்டர் படத்தில் மேலும் சில மாற்றங்களை செய்துள்ளாராம்.

மீசை இல்லா விஜய்

மாஸ்டர் படத்தில் விஜய் மீசை இல்லாமல் சுத்தமாக கிளீன் சேவ் செய்து சில காட்சிகள் நடித்துள்ளாராம். இதுவரை விஜய் மீசையை சுத்தமாக எடுத்து படத்தில் நடித்ததே இல்லை.

மீசை இல்லா விஜய் பார்க்க எப்படி இருப்பார். இதுவரை விஜய் மீசை இல்லாமல் இருக்கும் ஒரே ஒரு புகைப்படம் மேலே உள்ளது மட்டுமே. அதிலும் மீசை ட்ரிம் மட்டுமே செய்துள்ளார்.

எனவே, மாஸ்டர் படம் ஒரு வித்யாசமான படமாக விஜய்க்கு அமையும் என படப்பிடிப்பில் வேலை செய்த தொழிலாளி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் கதை

விஜய் படம் என்றால் ஏதாவது ஒரு உதவி இயக்குனர் என்னுடைய கதை என படம் வெளியாகும் கடைசி நிமிடத்தில் நீதிமன்றம் செல்வது வழக்கம்.

இந்த முறை அப்படி எந்த ஒரு இயக்குனரும் கதை என்னுடையது என்று வரவில்லை. அதேநேரம் படத்தின் கதை கொரியன் படத்தின் தழுவல் என தகவல்கள் கசிந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் ப்ளான்

சமீபத்தில் இரும்புத்திரை படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த P.S. மித்ரன், ஹீரோ படத்தில் கதை திருட்டு புகாரில் சிக்கிக்கொண்டார்.

முருகதாசுக்கே ஷட்டர் போட்ட பாக்கியராஜூக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு நேக்காக படத்தை ரிலீஸ் செய்துவிட்டார் P.S. மித்ரன்.

அதேபோன்ற பிரச்சனை தன் படத்திலும் வந்து விடக்கூடாது என்பதற்காக லோகேஷ் கனகராஜ் இது கொரியன் படத்தில் இருந்து சுடப்பட்டது என ஒரு புரளியை உதவியாளர்கள் மூலம் கிளப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.

எந்த உதவி இயக்குனரும் புகார் தெரிவிக்க வராத வண்ணம், மாஸ்டரை காப்பாற்ற மாஸ்டர் ப்ளான் செய்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

பார்க்கலாம் மாஸ்டர் படம் காப்பியா? அல்லது செய்தி புரளியா? என்று.

3

சுப்மன் கில் மிரட்டல்: நாட் அவுட் கொடுத்த நடுவர்

0
சுப்மன் கில் மிரட்டல் ரஞ்சிக்கோப்பை 2020 புதுமுக நடுவர் டெல்லி அணியினர் நாட் அவுட்

சுப்மன் கில் மிரட்டல் காரணமாக புதுமுக நடுவர் நாட் அவுட் கொடுத்ததாக ரஞ்சிக்கோப்பை 2020 தொடரில் விளையாடிய டெல்லி அணியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ரஞ்சிக்கோப்பை 2020 (Ranji Cup 2019-20)

ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் டெஸ்ட் தொடர் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் உள்ளூர் அணிகள், மாநில அணிகள் மோதிக்கொள்ளும். இன்று மொகாலியில் பஞ்சாப்-டெல்லி அணியினர் மோதிக்கொண்டனர்.

சுப்மன் கில் மிரட்டல்

பஞ்சாப் அணியின் துவக்க வீரராக சுப்மன் கில் களம் இறங்கினார். சில பந்துகளே ஆடிய நிலையில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார்.

அம்பயர் அவுட் கொடுத்தும் சுப்மன் கில் மைதானத்தை விட்டு வெளியேற மறுத்துவிட்டார். தொடர்ந்து அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டும் தொனியில் பேசினார்.

புதுமுக நடுவர்

நடுவர் ரபி புதுமுகம், இதுதான் அவருக்கு முதல்போட்டி. எனவே சுப்மன் கில்லின் விடாப்பிடியான வாக்குவாதத்தினால் லெக் அம்பயருடன் ஆலோசனை செய்தார்.

சிறிது நேரம் கழித்து நாட் அவுட் கொடுத்தார். சுப்மன் கில் மீண்டும் ஆடலாம் என கிரீன் சிக்னல் கொடுத்தார் நடுவர் ரபி.

டெல்லி வீரர்கள் அதிருப்தி

நடுவரின் செயலால் அதிருப்தி அடைந்த டெல்லி வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர். தொடர்ந்து விளையாட மறுத்தனர்.

இதனால் போட்டியின் மூன்றாம் நடுவர்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டனர். 15 நிமிடம் ஆட்டம் தடைபட்டது.

ஆட்டம் துவங்கியது

ஒருவழியாக சுப்மன் கில் மீண்டும் விளையாட அனுமதிக்கப்பட்டார். டெல்லி வீரர்கள் சமாதானமாகி மீண்டும் மைதானத்திற்கு வந்தவுடன் ஆட்டம் துவங்கியது.

தொடர்ந்து விளையாடிய சுப்மன் கில் 41 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

டெல்லி அணியினர் குற்றச்சாட்டு

போட்டி நேரம் முடிந்தவுடன் புதுமுக நடுவரான ரபி மீது டெல்லி அணியினர் குற்றம் சுமத்தினர். சுப்மன் கில் அவுட் ஆனது உண்மை.

ஆனால் தொடர் வாக்குவாதத்தைக் கண்டு நடுவர் பயந்து, தன் முடிவை மாற்றிக்கொண்டு உள்ளார். நடுவர் ரபியின் செயல் மிகவும் வருத்தம் அளிப்பதாக உள்ளது.

இந்திய அணிக்காக விளையாடிய வீரருக்கு சலுகை அளித்தது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என அம்பயர் மீது குற்றம் சுமத்தினர்.

3

மாஸ்டர் படம்: தொகானி என்ற படத்தின் காப்பியா?

0
மாஸ்டர் படம் Master Movie Copycat Dogani Korean Movie

மாஸ்டர் படம் (Master Tamil Movie) விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மும்முரமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.

சில நாட்களுக்கு முன் மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அந்தக் காட்சி ஆங்கிலப் படமான ‘தி மாஸ்டர்’ படத்தின் காப்பி போல் உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் கதை மூலம் 2011-ஆம் ஆண்டு வெளியான கொரியன் படமான தொகானி (Dogani) (Silenced) என்ற படத்தின் காப்பி எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

லோகேஷ் கனகராஜ்

மாநகரம், கைதி ஆகிய படங்களில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இரண்டு படங்கள் மூலம் இந்தியத் திரையுலகை தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர். குறிப்பாக கைதி படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.

இந்நிலையில் மாஸ்டர் படம் காப்பி என்ற சர்ச்சை எழுந்துள்ளது. விஜய் படம் என்றாலே காப்பி சர்ச்சைகள் தொற்றிக்கொள்வது வழக்கமாகி வருகிறது..

தொகானி (Silenced) (Dogani Korean Movie)

2011-ஆம் ஆண்டு வெளியான கொரியன் படம் தொகானி. இப்படம் கொரிய வரலாற்று சரித்திரம் நிகழ்த்திய படம்.

இப்படம் பள்ளிக் குழந்தைகள், ஆசிரியர்களால் பாலியல் கொடுமை செய்யப்படும் உண்மை சம்பவத்தை பற்றி பேசிய படம்.

இதில் கூடுதல் ட்விஸ்ட் என்னவென்றால் சிறார் பாலியல் கொடுமை நடந்த அதே பள்ளியிலேயே அப்படத்தின் காட்சிகளைப் படமாக்கியுள்ளார் இயக்குனர் குவாங் டோங்க் ஹையுக் (Hwang Dong-hyuk).

இவ்விசயம் தென்கொரியா நாடு முழுவதும் பரவி மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. அந்த பள்ளி சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது.

சிறார் பாலியல் வன்கொடுமை குற்றம் புரிந்தவர்களுக்கு 3 வருடங்கள் என இருந்த  தண்டனையை வாழ்நாள் முளுவதும் சிறை என்று சட்டத்தை திருத்தி அமைத்தது தென்கொரிய அரசு.

அந்த சட்டத்திற்கு பெயரே தொகானி சட்டம் (Dogani ACT) என்று பெயர் வைக்கப்பட்டு சரித்திரம் படைத்த படம்.

மாஸ்டர் காப்பியா? ( Master Movie Copycat)

கைதி படம் ரிலீஸ் சமயத்திலேயே மேலும் ஒரு பெரிய கேங்க்ஸ்டர் கதை எழுதி உள்ளதாகக் கூறியிருந்தார் லோகேஷ் கனகராஜ்.

மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி உள்ளார் என்றவுடன் இது கேங்க்ஸ்டர் படம் என்பது கிட்டத்தட்ட உறுதியானது.

அதேநேரம் சிறார் சீர்திருத்த பள்ளியில் மாஸ்டர் படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதால், இப்படி ஒரு காப்பி சர்ச்சை வெடித்துள்ளது.

உண்மையில் மாஸ்டர் படம் தொகானி படத்தின் காப்பியா? அல்லது ரீமேக்கா அல்லது படத்திற்கு சற்றும் சம்பந்தம் இல்லையா? என லோகேஷ் கனகராஜ் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

3

ஜகர்தா வெள்ளம்: சென்னை வெள்ளத்தை நினைவூட்டுகிறது!

0
ஜகர்தா வெள்ளம் இந்தோனேசியா

ஜகர்தா வெள்ளம்: 2013-ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இந்தோனேசியா தலைநகரம் ஜகர்தா நீரில் மூழ்கியுள்ளது.

தொடர் கனமழை

இந்தோனேசியாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் வசித்த மக்கள் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தொடர்கனமழையால் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டு உள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் இதுவரை 24 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

7 ஆண்டுகளுக்குப் பின்

ஜகர்தா இந்தோனேசியாவின் தலைநகரம் மட்டுமல்ல அந்த நாட்டில் உள்ள மிகப்பெரிய நகரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த நகரமே மூழ்கும் அளவிற்கு மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டிற்கு பிறகு 7 ஆண்டுகள் கழித்து பெரிய வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டு உள்ளது.

வெள்ள பாதிப்புகள்

இந்த வெள்ளப்பெருக்கில் பலியானவர்களில் இரண்டு பேரின் உடல் அருகில் உள்ள ஜாவா தீவில் கரை ஒதுங்கியுள்ளது.

மின்கம்பி அறுந்து விழுந்து ஒரு சிறுவன் பலியாகியுள்ளான். ஏராளனமான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

31. ஆயிரம் பேர் வீடுகளை இழந்த நிலையில் முகாம்கள் இருக்கும் இடத்திற்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டு உள்ளனர்.

சென்னை வெள்ளம்

2016-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் டிசம்பர் மாதம் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஜகர்தா வெள்ளம், சென்னை வெள்ளம் சம்பவத்தை நினைவூட்டும் விதமாக உள்ளது.

3

2019 கிரிக்கெட்: தரமான சம்பவம்: மறக்க முடியுமா?

0

2019 கிரிக்கெட்: தரமான சம்பவம்: மறக்க முடியுமா?

2019 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டியின் போது பல சம்பவங்கள் அரங்கேறியது. அதில் மிகவும் சர்ச்சைக்கு உள்ளான சம்பவங்களை இந்த வீடியோவில் வெளியிட்டுளோம்.

இதில் உங்களுக்கு பிடித்த அல்லது பிடிக்காத மறக்க முடியாத சம்பம் இதில் இடம் பெற்றால் கமெண்ட் செய்யவும்.

2019 கிரிக்கெட் விளையாட்டின் போது வேறு ஏதாவது சர்சையான விஷயத்தை வீடியோவில் கூற மறந்தாலும் கமெண்ட் செய்யவும்.

3

புத்தாண்டு தினம்: தேனியில் படுகொலை, சாலை மறியல்

0
புத்தாண்டு தினம்

புத்தாண்டு தினம்: கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் ஒருவரை 50-ற்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் காந்திநகர் காலணி பகுதியைச் சார்ந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வருபவர் காளிமுத்து.

இவரின் மகன் கார்த்தி (வயது 24) தனது நண்பர்களுடன் புத்தாண்டிற்காக “கேக் வாங்க” தனது இரு சக்கர வாகனத்தில் பெரியகுளத்திற்கு சென்றுள்ளார்.

50 பேர் கொண்ட கும்பல்

மேல்மங்கலம் அம்பலகாரர் சாவடி அருகே வந்த போது அங்கு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த சுமார் 50 க்கும் மேற்பட்டோர் பைக்கில் வந்தவர்களை வழிமறித்து கடுமையாக தாக்கி உள்ளார்கள்.

இந்த தாக்குதலில் நிலை குலைந்த கார்த்தி மற்றும் அவரது நண்பர்கள் பைக்கை அங்கேயே விட்டு விட்டு ஓடியுள்ளார்கள்.

தனியாக சிக்கிய கார்த்தி

சிறிது நேரம் கழித்து நண்பர்கள் யாரும் இல்லாமல் கார்த்தி மட்டும் தனியே வந்து தனது பைக்கை எடுக்க முயன்றுள்ளார்.

அப்போது, அங்கே கூடியிருந்தவர்கள் கார்த்தியை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே கார்த்தி உயிரிழந்தார்.

சம்பவம் பற்றி அறிந்த ஜெயமங்கலம் காவல்துறையினர், கார்த்தியின் உடலை கைப்பற்றி பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

உறவினர்கள் மறியல்

இக்கொலை சம்பவத்தை தொடர்ந்து கார்த்தியின் உறவினர்கள் குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி ஜெயமங்கலம் நான்கு ரோடு மற்றும் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனை முன்பாக சாலை மறியல் செய்தனர்.

மேலும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் செய்த கார்த்தியின் உறவினர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சாய்சரன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படலாம் என்ற நம்பிக்கையில் உறவினர்கள் கலைந்து சென்றனர்.

கேட்டுக்கு பூட்டு

முன்னதாக, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மருத்துவமனை நுழைவாயில் கேட்டை பூட்டியதால் மருத்துவமனைக்குள் மருத்துவர்கள், நோயாளிகள், மருத்துவமனை பணியாளர்கள் என யாருமே உள்ளே செல்ல முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

புத்தாண்டு தினம் அன்று நடந்த இக்கொலை சம்பவத்தால் பெரியகுளம் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

3

தலை தனியாக உடல் தனியாக வீசி சிறுவன் படுகொலை

0
தலை தனியாக நகுலன் சிறுவன் படுகொலை

தலை தனியாக உடல் தனியாக வீசி 6 வயது சிறுவனை எட்டையபுரத்தைச் சேர்ந்த அருண்குமார் படுகொலை செய்துள்ளார்.

தூத்துக்குடி: எட்டையபுரம் அருகே உள்ள வடக்கு முத்தலாபுரம் கிராமத்தில் வசிப்பவர் ஜெய்சங்கர். இவருடைய மகன் நகுலனை (வயது 6) நேற்று மாலை முதல் காணவில்லை.

சிறுவன் நகுலன் துவக்கப்பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்துள்ளான். நேற்று வீட்டின் முன்பு விளையாடிய சிறுவனை காணவில்லை.

Promo Video

இதையடுத்து சிறுவனின் பெற்றோர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது அருண்குமார் என்பவர் நகுலனை அழைத்துச் சென்ற காட்சி பதிவாகியிருந்தது.

சிறுவன் படுகொலை

உடனே அருண்குமாரை கைது செய்து போலீசார் விசாரணை செய்தனர். சிறுவனை படுகொலை செய்ததை அருண்குமார் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இன்று காலை சிறுவன் கொலை செய்யப்பட்ட இடத்தைக் காண்பிக்க அருண்குமாரை அழைத்துச் சென்றுள்ளனர் போலீசார்.

சிறுவனை படுகொலை செய்து தலை தனியாக, உடல் தனியாக வேறுவேறு இடங்களில் அருண்குமார் வீசியது தெரியவந்தது.

பெற்றோர் சாலை மறியல்

சிறுவனின் உடலைக் கைபற்றி போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பெற்றோரிடம் இத்தகவலை போலீசார் கூறவில்லை எனக் கூறப்படுகிறது.

கொலையாளியை தப்பிக்க வைக்க போலீசார் முயற்சி செய்வதாகவும்; சிறுவன் நகுலனின் உடலை, உடனே காண்பிக்க வேண்டும் எனவும்; பெற்றோரும், பொதுமக்களும் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் சமரசம்

இதையடுத்து சிறுவனின் உடலை போலீசார் காண்பித்து போராட்டத்தைக் கலைத்தனர். இருப்பினும் சிறுவன் எதற்காக கொலை செய்யப்பட்டான் எனத் தெரியவில்லை.

அருண்குமாரிடம் சிறுவனை கொலை செய்த காரணத்தை தெரிந்துகொள்ள தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார்.

3

மருத்துவமனை அலட்சியம்: 1 மாதத்தில் 77 குழந்தைகள் பலி

0
மருத்துவமனை அலட்சியம் குற்றச் சம்பவங்கள்

மருத்துவமனை அலட்சியம்: இந்தியா முழுவதும் மருத்துவமனைகளில் பிஞ்சுக் குழந்தைகள் கொத்தாக இறந்துபோவது தொடர்கதையாகி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜேகே லோன் மருத்துவமனையில் 1 மாதத்தில் 77 குழந்தைகள் பலியாகி உள்ளது.

இந்தியாவில் மிகப் பெரியது மருத்துவத்துறை. அதிலும் இந்தியா முழுவதும் அரசு மருத்துவமனைகள் ஏராளமாய் உள்ளது.

குற்றச் சம்பவங்கள்

தனியார் மருத்துவமனைகள் பல சிறப்பாக தரமாக செயல்பட்டாலும், அங்கே கட்டணங்கள் அதிகம் வசூலிக்கப்படுகிறது.

இதனால் ஏழைகளின் மருத்துவமனையாக செயல்படுவது அரசு மருத்துவமனைகளே! இங்கு வருபவர்கள் பெரும்பாலும் வசதி இல்லாதவர்களே என்பதால், பல குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

செவிலியர்கள் அலட்சியம்

அரசு மருத்துவமனைகளில் உள்ள ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் மிகவும் கவனக் குறைவுடன் நடந்துகொள்வதாக குற்றச்சாட்டுகள் வந்த வண்ணமே உள்ளன.

அதேவேளை சிறப்புடன் செயல்படும் அரசு மருத்துவமனைகளும் உள்ளன. நவீன வசதிகள் பல இருந்தும், ஸ்கேன் செய்ய தனியார் மையங்களுக்கே நோயாளிகள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு, தமிழகத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில், கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஹெச்.ஐ.வி. ரத்தத்தை ஏற்றியது அதிர்வலையை ஏற்படுத்தியது.

தனியார் மருத்துவமனை அலட்சியம்

அரசு மருத்துவமனையில் தான் இந்த அவலம் என்றால், தனியார் மருத்துவமனைகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

தனியார் மருத்துவமனைகளிலும் பவர்கட் என பல குழந்தைகள் இறந்த சம்பவங்களும் தமிழகம் உட்பட நாடு முழுவதும் அரங்கேறி வருகிறது.

உண்மையில் இது விபத்தா? அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்டதா? எனக் கேட்டால் இந்த வழக்குகள் பெரும்பாலும் நிலுவையிலேயே உள்ளன.

ராஜஸ்தான் மருத்துவமனை

ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா மாவட்டத்தில் உள்ள ஜேகே லோன் என்ற தனியார் மருத்துவமனையில் 1 மாதத்தில் 77 குழந்தைகள் பலியாகியுள்ளது.

இதுகுறித்து அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறியதாவது, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் குழந்தைகள் இறப்பது ஒன்றும் புதிதல்ல.. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.

விசாரணை நடத்தப்பட்டதா?

இந்தியா முழுவதும் இதுபோன்ற ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவை அனைத்தும் இன்னும் முழுமையாக விசாரணை நடத்தப்படாமலே உள்ளது.

அப்படி இருக்கும்போது இந்த வழக்கு மட்டும் முழுமையாக விசாரிக்கப்பட்டுவிடுமா? என்ற கேள்வியே எழுகிறது. இதற்கு விடை எப்போது கிடைக்கும்?

3

கீர்த்தனா மரணம்: உருக்கமான கடிதம்; சாவுக்கு யார் காரணம்?

0
கீர்த்தனா மரணம்: உருக்கமான கடிதம்

கீர்த்தனா மரணம்: கல்லூரி மாணவி கீர்த்தனா மரணமடைந்ததை அடுத்து அவர் எழுதி வைத்துச் சென்ற உருக்கமான கடிதம் கிடைத்துள்ளது.

சென்னை: திருவெற்றியூரைச் சேர்ந்த சாமுவேல் சென்னை குடிநீர் வாரியத்தில் கிளர்க்காக வேலை பார்த்து வருகிறார்.

இவர் மகள் கீர்த்தனா (18) மணலியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி‌எஸ்‌சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கதவு மூடப்பட்டது

காலேஜில் தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு வந்த கீர்த்தனா, நேராக தன்னுடைய அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டார்.

நீண்ட நேரமாகியும் மகள் வெளியே வராததால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கதவை நீண்ட நேரம் தட்டியும் மகளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

கீர்த்தனா மரணம்

அதன்பிறகு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். மகள் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்ததைக் கண்டு கதறி அழுதுள்ளனர்.

பெற்றோர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்த பின்பு, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பிரேத பரிசோதனை

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கீர்த்தனாவின் உடலைக் கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார், கீர்த்தனாவின் அறையை சோதனை செய்தனர். அப்போது கீர்த்தனா எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது.

உருக்கமான கடிதம்

அக்கடிதத்தில் கீர்த்தனா எழுதியதாவது, என் அப்பா-அம்மா மிகவும் கஷ்டப்பட்டு என்னை படிக்க வைக்கின்றனர்.

ஆனால், நான் சரியாகப் படிக்கவில்லை. எனவே, தேர்வில் தோல்வி அடைந்துவிடுவேன். இதனால் நான் தற்கொலை செய்துகொள்கிறேன்.

என் சாவுக்கு யாரும் காரணம் அல்ல என உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3

இந்து பாகுபாடா? நான் கங்குலி ஹோட்டலில் சாப்பிட்டவன்!

0
இந்து மதம் கங்குலி இன்சமாம் கனேரியா

இந்து என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தன்னை ஒதுக்கிவிட்டது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் பவுலர் தானிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.

ஸ்பார்ட் பிக்ஸிங் குற்றத்தில் சிக்கி வாழ்நாள் தடை பெற்றவர் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் தானிஷ் கனேரியா.

இந்து மதம்

கனேரியா குறித்து சில நாட்கள் முன் சோயிப் அக்தர் தன்னுடைய யூடியூப் சேனலில் பகீர் குற்றச்சாட்டு ஒன்றை வைத்தார்.

கனேரியா இந்து என்பதால் அவருடன் சக வீரர்கள் உணவை பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். அவர் மத அடிப்படையில் ஓரங்கட்டப்பட்டார் என ஒரு பரப்பு குற்றச்சாட்டை பாகிஸ்தான் அணி மீது அக்தர் சுமத்தினார்.

சோயப் வார்த்தைகளே சான்று

சோயப் அக்தர் கருத்துக்கு கனேரியாவும் பதில் அளித்தார். கனேரியா கூறியதாவது, என்னைப் போன்றே குற்றம் சுமத்தப்பட்ட சக வீரர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய உதவியுடன் மீண்டும் விளையாடினார்.

ஆனால், என்னை மட்டும் வேண்டும் என்றே பாகிஸ்தான் அரசும், கிரிக்கெட் வாரியமும் கண்டுகொள்ளவில்லை. இதற்கு சோயப் அக்தரின் வார்த்தைகளே சான்று எனக் கூறினார்.

இன்சமாம் மறுப்பு

கனேரியாவின் குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் காக் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கனேரியா என் தலைமையில் உள்ள அணியிலேயே இடம் பெற்றார். அவர் கூறியது போன்ற ஒரு சம்பவத்தை நான் கேப்டனாக இருந்த வரை பார்த்ததே கிடையாது.

எல்லா மதத்தவரையும் அணியில் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு பாகிஸ்தானியர்கள் இதயம் மிகவும் பெரியது.

கங்குலி துவங்கிய ஹோட்டல்

ஒருமுறை 2005-ம் ஆண்டு சூட்டிங்கிற்காக கொல்கத்தா சென்றிருந்தேன். அப்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி  ஒரு ஹோட்டல் ஒன்றே துவங்கினார்.

நானும், சச்சினும் தான் அந்த ஹோட்டலை திறந்து வைத்தோம். நான் சூட்டிங்கில் இருந்த நேரம் கங்குலி எனக்கு தினமும் சாப்பாடு அனுப்புவார்.

ஒரே டேபிள்

சார்ஜாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இந்திய வீரர்களும், பாகிஸ்தான் வீரர்களும் ஒரே டேபிளில் உட்கார்ந்து சாப்பிட்டு அரட்டை அடிப்போம்.

நான் இருந்தவரை எந்த ஒரு வீரரும் மத அடிப்படையில் ஒதுக்கப்பட்டதை நான் ஒருபோதும் பார்த்ததே கிடையாது எனத் தெரிவித்தார்.

3