Home Blog Page 279

Hero Official Trailer | Sivakarthikeyan | Arjun Sarja | P.S.Mithran | Tamil cinema

0

Hero Official Trailer | Sivakarthikeyan | Arjun Sarja | P.S.Mithran | Tamil cinema upcoming movie trailer and latest news updates.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ஹீரோ. இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.

படத்தில் சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரம் இடம் பெரும் காட்சிகள் உள்ளது. இதற்கு முன் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி திரைப்படம் வணிக ரீதியாக தோல்வியைத் தழுவியது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன்-மித்ரன் கூட்டணியில் சூப்பர் ஹீரோ படம் வெற்றி பெறுமா? என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Hero official trailer release in ‘Lahari Music | T-Series’ youtube channel

3

சிறுமி ஆபாச படம்: முதல் நபர் அதிரடி கைது!

0
சிறுமி ஆபாசம்

சிறுமி ஆபாசப் படத்தை சமூக வலைதளங்களில் அப்லோட் செய்த திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ரவி ஒரு அறிவிப்பை வெளியிட்டு வந்தார்.

அவர் கூறியதாவது, உலக அளவில் இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் தான் அதிகமாக குழந்தைகள் ஆபாச படம் இணையத்தில் அப்லோட் செய்யப்பட்டு வருகிறது.

குழந்தைகள் ஆபாச வீடியோவை இணையத்தில் அப்லோட் செய்வது சட்டப்படி குற்றம். இந்த குற்றச்செயலை செய்பவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை தண்டனைகள் கிடைக்கும் எனக் கூறினார்.

எனினும் பலர் இதை அலட்சியமாக கருதி வாட்ஸ்ஆப்பில் ஆபாச வீடியோக்களை அனுப்பி வந்தனர். ஆபாசப்படங்களை டவுன்லோட் செய்து வந்தனர்.

திருச்சியைச் சேர்ந்த ஏசி மெக்கானிக் கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்ற நபர் ‘நிலவன், வளவன், ஆதவன்’ என்கின்ற பெயர்களில் வாட்ஸ்ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் ஆபாச வீடியோவைப் பரப்பி உள்ளார்.

இதைக் கண்டறிந்த போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர். குற்றம் நிருபிக்கப்பட்டால் சமந்தப்பட்ட நபருக்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என டி.ஜி.பி. ரவி தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் ஆபாச படங்களைப் பரப்பிய வழக்கில் முதல் முறையாக கைது செய்யப்பட்ட நபர் கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

3

பாஜகவா? காங்கிரசா? உத்தவ்வின் உள்ளே.. வெளியே..

0
பாஜகவா

பாஜகவா? காங்கிரசா? இரண்டையும் விட்டுக்கொடுக்காமல் உள்ளே.. வெளியே.. என மங்காத்தா ஆடி வருகிறார் மகாராஸ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே.

முதல்வர் நாற்காலி மீது ஆசை வந்ததும் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்டு காங்கிரசுடன் கூட்டணி அமைத்து முதல்வரானார் உத்தவ்.

இந்நிலையில், குடியுரிமை சட்ட மசோதா பற்றி பாராளுமன்றத்தில் கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு, அதன் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சிவசேனா நைசாகக் கழன்று கொண்டது.

இதனால் காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தி கடும் அப்செட். டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து வெளிப்படையாக பொங்கிவிட்டார்.

எங்கே முதல்வர் பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ என மசோதாவிற்கு எதிராக மீண்டும் கம்பு சுற்றத்துவங்கிவிட்டார் உத்தவ்.

எங்கள் சந்தேகங்களுக்குப் பதிலளிக்கவில்லை எனில் குடியுரிமை சட்ட மசோதாவை ஆதரிக்க மாட்டோம் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் பாஜகவையும் வருங்கால நலன் கருதி மறைமுகமாக சிவசேனா ஆதரித்து வருவது வெளிப்படையாக தெரியவந்துள்ளது.

3

வெறிபிடித்த இந்திய வீரர்கள்; மிரண்டுபோன பிளாக் பேந்தர்ஸ்!

0
ind vs wi t20

வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா இடையே நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய  அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

வெறிபிடித்த இந்திய வீரர்கள்

முதல் இரண்டு போட்டியில் 1-1 வெற்றி என்ற கணக்கில் சம பலத்துடன் மூன்றாவது போட்டியில் இந்தியா-இண்டீஸ் அணி மோதியது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. கடந்த இரண்டு போட்டியிலும் சரியாக விளையாடவில்லை என ரோஹித் மீது விமர்சனம் எழுந்தது.

இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை அடித்து நொறுக்க ஆரம்பித்துவிட்டார். சிக்சர் மழை பொழிந்தார்.

சர்வேதச போட்டிகளில் 400 சிக்சர் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா, இப்போட்டியின் மூலம் படைத்தார்.

ரோஹித் 34 பந்துகளில் 71 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அதன் பின் வந்த ரிஷப் பண்ட் டக்அவுட்டாகி வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினார்.

பின்னர் வந்த விராட் கோலியின் ருத்ர தாண்டவத்தைக் கண்ட வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் செய்வதறியாது திகைத்தனர்.

மறுபுறம் ராகுல் விறுவிறுவென ரன்களைக் குவித்து சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி ஓவரில் 91 ரன்களில் அவுட் ஆனார்.

இறுதிவரை களத்தில் நின்ற கோலி 29 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். நான்கு பவுண்டரி, ஏழு சிக்ஸர்கள் இதில் அடங்கும்.

மிரண்டுபோன பிளாக் பேந்தர்ஸ்

எவ்வளவு ரன்கள் என்றாலும் சேஸ் செய்யக்கூடிய அணியாக உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியே மிரளும் அளவிற்கு இந்திய வீரர்கள் ஸ்கோர் குவித்தனர்.

கடைசிவரை போராடிய வெஸ்ட் இண்டீஸ் அணியினர் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை மட்டுமே குவித்தனர்.

ஹெட்மயர் 41, பொல்லார்டு 68 ரன்கள் குவித்தனர். மற்ற அனைத்து வீரர்களின் சொதப்பலால் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியைத் தழுவியது.

3

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – திரைவிமர்சனம்

0
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – திரைவிமர்சனம் | Irandam Ulagaporin Kadaisi Gundu – Tamil Movie Review

இரண்டாம் உலகப்போர் முடிவடைந்தவுடன் இந்தியாவில் எஞ்சி இருந்த அணுகுண்டுகளை செயலிழக்கச்செய்ய முடிவு செய்கிறது இந்தியா.

அணுகுண்டை செயலிழக்கச் செய்வதாகக்கூறி டெண்டர் எடுத்த போலி நிறுவனம் அதை ஆழ்கடலில் மறைத்துவிடுகிறது.

அந்த எஞ்சிய அணுகுண்டுகள் கரைஒதுங்கி இந்தியர்களைக் காவு வாங்குறது. அதில் ஒரு குண்டு ஹீரோ அட்டகத்தி தினேஷிடம் வருகிறது.

ஏற்கனவே ஒரு அணுகுண்டுவால் குடும்பத்தை இழந்த ரித்விகா, மீண்டும் ஒரு குண்டு கரை ஒதுங்கியதும் இந்தியாவில் நடந்த ஊழலை அம்பலப்படுத்தப் பாடுபடுகிறார்.

இறுதியில் அந்தக் குண்டு வெடித்ததா? அல்லது ஊழல் அம்பலமானதா? என்பதே மீதிக்கதை.

படத்தில் வரும் இரும்புக்கடை காட்சிகள் மட்டும் தத்ரூபமாக படம் பிடிக்கப்படவில்லை, அங்கு எழும் சப்தங்களும் நுணுக்கமாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

தியேட்டரில் தான் இருக்கிறோமா அல்லது பழைய இரும்புக்கடைக்குள் சென்று விட்டோமா என்கிற அளவிற்கு படம் ஆரம்பித்தது முதலே சவுண்ட் எபெக்ட் இஞ்சினியர் டங்… டொய்ங்.. என இரைச்சலைக் கொடுக்கத்துவங்கிவிட்டார்.

பின்னர் தான் இயக்குனர் இரும்புக்கடையில் வேலைசெய்தவர் எனத் தகவல் கிடைத்தது. அடடே… அதனால் தான் இரும்புக்கடை பற்றி இவ்வளவு தெளிவாக காட்சியமைப்பு செய்துள்ளார்.

வித்தியாசமான, இதுவரை பேசப்படாத கதைக்களம் எனவே படம் விறுவிறுப்பாக சென்றுகொண்டு இருந்தது.

முதல் முறையாக பா.ரஞ்சித் ஜாதி முத்திரை பதிக்காத படத்தைத் தயாரித்து உள்ளார் என சபாஷ் போட்டுக்கொண்டு படம் பார்த்தால், அடுத்த சில நிமிடங்களிலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

அணுகுண்டு பற்றிய மையக்கதைக்கும் ஜாதிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாதபோதும் கூட…. வலுக்கட்டாயமாக வேற்று ஜாதி, காதல் கதையைப் புகுத்தி விட்டனர்.

தான் சம்பந்தப்பட்ட எல்லாப் படங்களிலும் ஜாதிச் சாயம் இருக்க வேண்டும் என்று ரஞ்சித் கதையில் மாறுதல் செய்தாரா? அல்லது ஜாதிச் சாயம் உள்ள கதையைத் தேர்வு செய்து தயாரிக்கின்றாரா? என்று தான் புரியவில்லை.

ஜாதி பற்றி பேசியது தவறில்லை. ஆனால் அதுவே படத்திற்கு பெரிய மைனசாக அமைந்துவிட்டது.

படத்தின் இறுதியில் கூறப்பட்ட ஹிரோஷிமா, நாகாசாகியில் வசித்த தந்தையின் கதை படத்திற்கு சற்று பலமாக அமைந்தது.

காதல் காட்சிகளை நீக்கிவிட்டு இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தைப் பார்த்தால் நிச்சயம் ஒரு நல்ல படம் என்றே கூறலாம்.

Irandam Ulagaporin Kadaisi Gundu wikipedia

3

சிமோகா சிறையில் விஜய்; மீண்டும் கைதியா?

0
சிமோகா

சிமோகா சிறைச்சாலையில் தளபதி 64 படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

மாநகரம் படத்திற்குப் பிறகு இரண்டு வருடமாக ‘கைதி’ படத்தின் கதையை வைத்துக்கொண்டு வாய்ப்புக்காக காத்திருந்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

கைதி படத்தில் நடிக்க கார்த்தி ஒப்புக்கொண்டது, லோகேஷ் கனகராஜுக்கு அதிஷ்டமோ இல்லையோ? நடிகர் கார்த்திக்கு மிகவும் அதிஷ்டம்.

தீரன் பட வெற்றி, தேவ் படம் தோல்வி என இருந்த நிலையில் கைதி வெளியானது. கார்த்தியை அப்படம் வேறு ஒரு உயரத்திற்குக் கொண்டு சென்றுவிட்டது.

லோகேஷ் கனகராஜ் மீது சினிமா ரசிகர்கள் பார்வை மட்டுமல்லாது பல முன்னணி ஹீரோக்கள் பார்வையும் திரும்பியது.

கைதிக்கு பிறகு கைதி இரண்டாம் பாகம் எடுக்கப்போவதாக லோகேஷ் கனகராஜின் விக்கிபீடியா பக்கத்தில்  தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதற்குள் விஜய்யின் அழைப்பு வரவே லோகேஷ் தற்பொழுது தளபதி 64 படத்தை இயக்கி வருகிறார்.

நடிகர் கார்த்தியும் அண்ணி ஜோதிகாவுடன் இணைந்து ‘தம்பி‘ படத்தில் நடித்து வருகிறார். தற்பொழுது கைதி-2 படமும் லோகேஷ் கனகராஜின் விக்கி பக்கத்தில் இருந்து தூக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில், கர்நாடக அரசின் சிறப்பு அனுமதியுடன் சிமோகா சிறையில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி சார்ந்த சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

தனது அடுத்த படத்திலும் சிறை, கைதி மற்றும் சண்டைக்காட்சி எனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இதனால் தளபதி 64 படம் எப்படி இருக்கப்போகிறதென? ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளது.

இப்படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் சூர்யாவுடன் இணைவாரா? அல்லது கைதி-2 படத்தின் பணிகள் துவங்கப்படுமா? என கேள்வியும் எழுந்துள்ளது.

3

விக்ரம் லேண்டரை மறந்த இஸ்ரோ; தேடிக்கண்டுபிடித்த தமிழர்

0
விக்ரம் லேண்டரை

விக்ரம் லேண்டரை மறந்த இஸ்ரோ; தேடிக்கண்டுபிடித்த தமிழர்

நிலவின் தென்துருவப் பகுதிக்கு முதல் முறையாக இஸ்ரோ சந்திராயன்-2 செயற்கைக்கோளை அனுப்பியது.

நிலவில் தரையிறங்கி தென்துருவப் பகுதியில் தண்ணீர் இருப்பதை ஆராய்ச்சி செய்வதற்காக விக்ரம் லேண்டரும் அதனுடன் சென்றது.

சந்திராயன்-2 நிலவின் வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டாலும், விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க மூன்று நிமிடம் இருந்த நிலையில், தொடர்பு துண்டிக்கப்பட்டது.

தொடர்ந்து விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட இஸ்ரோ மற்றும் நாசாவின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

சந்திராயன்-2 மூலம் விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை படம்பிடித்தும் அதை பற்றி சரியாக கண்டறிய முடியவில்லை. இதன்பின் இதை இஸ்ரோவே மறந்துவிட்டு ககன்யான் திட்டத்திற்குச் சென்றுவிட்டது.

சந்திராயன்-2 விண்கலம் எடுத்த படத்தை ஒவ்வொரு பிக்சலாக ஆராய்ச்சி செய்து மதுரையைச் சேர்ந்த சண்முக சுப்ரமணியம் என்பவர் கண்டறிந்து உள்ளார். இதை நாசாவும் அங்கீகரித்து உள்ளது.

ஒரு பிக்சல் என்பது 1.25 மீட்டர் ஆகும். விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை இரண்டு சதுர கிலோமீட்டர் வரை ஒவ்வொரு பிக்சலாக ஆய்வு செய்து இத்தனை நாள் கழித்து இதைக் கண்டறிந்து உள்ளார் சண்முகம்.

3

தமிழக மீனவர்களின் படகுகள் திருப்பி ஒப்படைக்கப்படும் – கோத்தபய

0
தமிழக மீனவர்கள்

தமிழக மீனவர்களின் படகுகள் திருப்பி ஒப்படைக்கப்படும் என கோத்தபய ராஜபக்சே இந்தியப் பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபராக பதவியேற்றுள்ள கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சேவின் நெருங்கிய உறவினர்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தின்போது பலலட்சம் தமிழர்களை கொன்றுகுவிக்க உறுதுணையாக இருந்தவர் என அப்போது கோத்தபயவின் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் கோத்தபய, இலங்கை அதிபராக பதவியேற்றவுடன் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடித்து விரட்டப்பட்டனர்.

இதனால் மீண்டும் இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது என பெரும்பாலானோர் கருத்துக்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, கோத்தபய ராஜபக்சே இந்தியாவின் அழைப்பை ஏற்று இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து ராணுவ மரியாதை  செய்யப்பட்டது.

இதன்பின்பு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியுடன் நடந்த சந்திப்பில், தமிழக மீனவர்களின் படகுகள் திரும்ப ஒப்படைக்கப்படும் என கோத்தபாய, மோடிக்கு உறுதியளித்துள்ளார்.

இலங்கையுடன் நட்பு தொடர்வதால் இந்தியாவின் பலமும், இந்தியப் பெருங்கடலின் பலமும் அதிகரிக்கும் என மோடி தெரிவித்துள்ளார்.

3

நிலவு மனித இனத்தை அழிவில் இருந்து காக்கும் – மயில்சாமி அண்ணாதுரை

0
நிலவு
M.Annadurai, Director, ISRO Satalite Center Bengaluru. (C)H.K.Rajashekar.

நிலவு மனித இனத்தை அழிவில் இருந்து காக்கும் என மயில்சாமி அண்ணாதுரை விழா ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் வானம் உங்கள் வசப்படும் விருது வழங்கும் விழா கலந்துகொண்டு இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:-

விண்வெளி ஆராய்ச்சிக்கு தேவையான ஹீலியம்-3 என்ற வாயு நிலவில் அதிகமாக உள்ளது. இதனால் நிலவு விண்வெளி ஆராய்ச்சியை சிறப்பாக மேற்கொள்ள உதவும்.

வரும் வருடங்களில் நிலவில் மனிதர்கள் தங்குவதற்கும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. நிலவு மனித இனத்தை அழிவில் இருந்து காக்க உதவும் கோளாக விளங்கும் என தெரிவித்தார்.

3

100 Tamil Movie Review | 100 திரைவிமர்சனம்

0
100 Tamil Movie Review

100 Tamil Movie Review | 100 திரைவிமர்சனம்

100 ஒரு க்ரைம் திரில்லர் படம். அதர்வா ஒரு நல்ல படத்தில் நடித்தவுடன் அடுத்து ஒரு மொக்க படத்தில் நடித்து தன்னுடைய இமேஜை கெடுத்துக்கொள்கிறார்.

செம போத ஆகாதே, பூமராங் படங்களை பார்த்த பின்பு இனி அதர்வா படம் என்றால் கொஞ்சம் யோசித்தே செல்ல வேண்டும் என முடிவு செய்தேன்.

அதே மொக்கை படங்களுக்கு நடுவில் இமைக்கா நொடிகள், 100 ஆகிய நல்ல படங்களையும் கொடுக்கிறார்.

இவர் நம்பி ஓகே சொல்லும் இயக்குனர்கள் கவிழ்த்து விடுவதால் இவருடைய பெயரும் டேமேஜ் ஆகிவிடுகிறது.

நூறு படம் எப்படி?

இயக்குனர் சாம் ஆண்டனின் மூன்றாவது ஹாட்ரிக் ஹிட் படம். டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு என ஜி.வி.பிரகாஷை அறிமுகம் செய்து ஹிட் கொடுத்த இயக்குனர்.

டார்லிங் படம் ஹிட் என்றாலும் எனக்கு அந்தப்படம் பிடிக்காது. 100 படத்திற்கு பிறகு சாம் ஆண்டன் ஒரு எதிபார்ப்பை உருவாக்கும் இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார்.

அதர்வாவை பக்கா ஆக்சன் ஹீரோவாகவும் உருவாக்கி விட்டார். ஒரு லட்சம் போலீஸ் படங்கள் வந்துவிட்டாலும் அதில் புதுமையுடன் கூறினால் மட்டுமே படம் ஓடும்.

அந்த வகையில் 100 படம் நல்ல ஒரு திரில்லர் படமாக வெளிவந்துள்ளது. 112 டைட்டில் கிடைக்கவில்லையோ என்னவோ 100 என்ற எண் எமர்ஜென்சி கால் நம்பராக மாற்றிவிட்டனர்.

உண்மையில் 112 என்று வைத்திருந்தால் நிறைய பேரிடம் விழிப்புணர்வு கிடைத்திருக்கும். உண்மையில் மொபைல் லாக் ஆகி இருந்தாலோ, சிம் இல்லை என்றாலோ 112 என்ற எண்ணை மட்டுமே அழைக்க முடியும்.

படம் வழக்கம் போல் ஹீரோ, ஹீரோ பிரண்டு, ஹீரோயின் என ஆரம்பிக்கிறது. ஹீரோவின் நண்பரை அடித்தவரை அடிக்கப்போகும் போது, போலீஸ் அப்பாயின்மென்ட் ஆர்டர், அடி தடி, பாட்டு என்ன முதல் ஹியரில் சென்ற படத்தை டாப் கியரில் தூக்கிவிட்டார்.

அங்கு ஆரம்பித்த வேகம் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் அடித்து படத்தை கிளைமேக்ஸ் வரை ரசிக்க வைக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு யோகி பாபு காமெடிகள் சிரிக்க வைக்கிறது.

ஹன்சிகா படத்தில் உப்புக்கு சப்பா கேரக்டர் தான். தங்கையாக நடித்த ஹரிஜாவின் படம் இந்த வாரம் இரண்டு வெளியாகிவிட்டது.

mr.லோக்கல் மற்றும் 100. ஹீரோயின் ஹன்சிகாவை விட ஹரிஜாவிற்கு நல்ல கதாப்பாத்திரம் கிடைத்துள்ளது.

கடைசியாக வில்லன் கதாப்பாத்திரம் யாரும் எதிர்பாராத ட்விஸ்ட் என்றாலும் இந்த மூஞ்சி அதுக்கு எல்லாம் ஒர்த் இல்லை என சற்று சலிப்பு தட்டியது.

ராதா ரவியின் பிஸ்டல் கிளைமேக்ஸில் அந்தக் குறை பெரிய சலிப்பை தரவில்லை. மொத்தத்தில் 100, 100% ரசிக்க வைக்கும் படம்.

3