Home Blog Page 280

மான்ஸ்டர் திரைவிமர்சனம் | Monster Tamil Movie Review

0
மான்ஸ்டர்

மான்ஸ்டர் படத்தோட போஸ்டர் பாத்ததுமே இது ஒரு எலியின் சுட்டித் தனத்தை பற்றிய படம் அப்படின்னு நல்லா தெரிஞ்சிடுச்சு.

எலிய வச்சு பல இங்கிலீஷ் படம் வெளிவந்துடுச்சு. அதில் ஒன்று லிட்டில் ஸ்டுவர்ட் என்ற படம் உலக அளவில் பிரபலம்.

தமிழ்ல சுந்தரா ட்ரவல்ஸ் படத்தில் வடிவேலும் எலியும் சேர்ந்து பண்ணும் ரகளை காமெடிகள் இன்றளவும் பேசப்படும் காமெடி.

எனவே மான்ஸ்டர் படத்தில் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் எந்த மாதிரியான கதையை வைத்து இயக்கி உள்ளார் என ஒரு ஆவல் உருவாகியது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு வித்தியாசமான கதை பின்னணியுடன் வெளிவந்த படம். இந்த படம் பெரியவர்களை ஈர்க்கிறதோ இல்லையோ குழந்தைகளை குதூகலப்படுத்தும்.

படத்தின் ஆரம்பத்திலேயே ஏதோ பேய் உள்ளது போன்ற ஒரு சஸ்பென்சுடன் கதை துவங்கும். போஸ்டரிலேயே எலியின் படம் இருப்பதால் அது எலி தான் என அருகில் இருந்த குழந்தையே கண்டுபிடித்து விட்டது.

எந்த ஒரு உயிரையுமே கொல்லக்கூடாது என நினைக்கும் எஸ்.ஜெ.சூர்யா வீட்டில் ஒரு எலி, தொல்லை கொடுக்கிறது.

ஒன்றை லட்சம் மதிப்புள்ள ஷோபாவை குதறி எடுக்கிறது. வீட்டின் கதைவை கரம்பி ஓட்டை இடுகிறது.

எனவே, அந்த எலியை லாவகமாக பிடித்து ஒரு வழியாக அதைக் கொள்ளாமல் குப்பை வண்டியில் போட்டு அனுப்புகின்றார் சூர்யா.

பல மைல் கடந்து சென்றாலும் மீண்டும் அதே வீட்டிற்கு குப்பை வண்டி மூலமே வந்து சேர்கிறது அந்த எலி.

சொட்டுன்னு அடிச்சி தூக்கி போடுற கரப்பான் பூச்சிய கொல்ல மிஷினா என்கிற பாணியில் ஒரு எலிய கொல்ல இத்தன பேரா என சற்று அழுப்பு தட்டினாலும்,

ஏன் எலி அந்த வீட்டை மட்டுமே மீண்டும் மீண்டும் தேடி வருகிறது என்பதற்கான விடையை கிளைமேக்ஸில் சொன்னதும் ஒரு நல்ல கதை தான் என சொல்லவைத்து விட்டது.

இருப்பினும் எலியின் குறும்புத் தனத்தை இன்னும் கொஞ்சம் காமெடி கலந்து கொடுத்திருந்தால் அதிக அளவில் குழந்தைகளை தியேட்டர் நோக்கி இழுத்திருக்கலாம்.

நாயகியாக வரும் பிரியா பவானி ஷங்கர் சிரித்தே கதையை நகர்த்துகின்றார். கருணாகரனின் சைலென்ட் காமெடிகள் சற்று ஆறுதல்.

நிறைய ஷாட்டுகள் ஒரிஜினல் எலியை வைத்தே மிகவும் நேர்த்தியாக எடுத்துள்ளனர். ஒளிப்பதிவு, இசை, கிராப்பிக்ஸ், சவுண்ட் எபெக்ட்ஸ் என டெக்னிக்கலாக படம் நன்றாக இருந்தது.

இன்னும் திரைக்கதையில் காமெடியைப் புகுத்தி இருந்தால் இந்தப் படம் எல்லோரையுமே குஷிப்படுத்தும் படமாக அமைந்திருக்கும்.

கிளைமேக்ஸ் கொஞ்சம் செண்டிமென்டுடன் முடிந்தது படத்திற்கு பாசிடிவ் விசயமாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் மான்ஸ்டர் குழந்தைகளைப் பயமுறுத்தும் அசுரன்

3

Mr. Local Movie Review | மிஸ்டர் லோக்கல் விமர்சனம்

0
mr. local

Mr. Local Movie Review | மிஸ்டர் லோக்கல் என்று டைட்டில் வைத்ததுமே ஏதோ தர லோக்கலாக ஒரு காமெடி காம்போவை எடுத்து வைத்து இருப்பார் எம்.ராஜேஷ் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஹாட்ரிக் கிட் கொடுத்த வேகத்தில் ஹாட்ரிக் ப்ளாப் கொடுத்த இயக்குனர் எம்.ராஜேஷ். இருப்பினும் ராஜேஷ் படம் என்றால் இந்த முறையும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

அந்த அளவிற்கு அவருடைய முதல் மூன்று படங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. இன்றும் அந்தப் படங்களின் காமெடிகளைப் பார்த்தால் சிரிக்காமல் இருக்க முடிவதில்லை.

Mr. Local படம் எப்படி?

மிஸ்டர் லோக்கல் படம் எந்த அளவிற்கு காமெடி ஒர்க்அவுட் ஆகியுள்ளது எனக் கேட்டால், கடைசி மூன்று படங்களை விட நன்றாகவே உள்ளது எனச் சொல்லும் அளவிற்கு உள்ளது.

ஆனால் சிவகார்த்திகேயன் இருந்தும் இதில் காமெடி மிகவும் குறைவு தான். காமெடி காட்சிகள் பல இருந்து அதை பலரால் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஏ சென்டர் ஆடியன்ஸ் புரிந்துகொள்ளக்கூடிய  காமெடிகளை சி சென்டர் ஆடியன்சால் புரிந்துகொள்ள முடியவில்லை.

மன்னன் படத்தை வைத்து ரீமேக் செய்துவிட்டனர் எனக் கூறினாலும் இந்தப் படம் மன்னன் படம் அளவிற்கு எல்லாம் ஒன்றும் இல்லை.

சிவகார்த்திகேயன் படங்கள் காமெடி எந்த அளவிற்கு இருக்குமோ அதே அளவு செண்டிமென்ட் காட்சிகள் நிறைந்து இருக்கும்.

ஆனால் இந்த படத்தில் செண்டிமென்ட் காட்சிகள் பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகவில்லை. இதனால் பேமிலி ஆடியன்சையும் இது முழுமையாக திருப்திப்படுத்தாது.

படம் சுமாராக இருந்தாலும் சிவகார்த்திகேயனின் மாஸ் காட்சிகளுக்குப் பஞ்சம் இல்லை. சீமராஜாவில் வாங்கிய அடியில் வெத்து பில்டப்புகளை குறைத்தது மிகவும் நலம்.

விஜய், அஜித் இடங்களைவிட நேராக ரஜினியின் இடத்தைப் பிடிக்க சிவகார்த்திகேயன் முயற்சி செய்வது நன்றாகத் தெரிகிறது. அதற்கேற்ற வலுவான படங்களில் தொடர்ந்து நடித்தால் தான் அது சாத்தியம் ஆகும்.

எம்.ராஜேஷ் சரக்கு மேட்டரை விட்டுவிட்டார். ஆனால் காமெடி சரக்குகள் அவரிடம் பெரிய அளவில் ஸ்டாக் இல்லை போலும்.

நயன்தாரா இந்தப் படத்தில் முக்கால்வாசி நேரம் முறைத்துக்கொண்டே உள்ளார். அவர் முறைக்கும் காட்சிகள் அவரின் வயதை அப்பட்டமாகக் காட்டிக்கொடுக்கிறது.

நயன்தாராவின் ஆட்டம் இன்னும் சில படங்கள் மட்டுமே. அவரின் வயதை குறைத்து காமித்து நாடித்தால் மட்டுமே லேடி சூப்பர் ஸ்டார் என இன்னும் சில வருடம் வண்டி ஓடும்.

இல்லையெனில் விக்னேஷ்சிவன் ரூட் கிளியர். பட வாய்ப்பு இல்லையென கல்யாணம், மனைவி, பிள்ளைகள் என நயன்தாரா ரூட்டை மாற்றிவிடுவார்.

க்ளைமேக்ஸ் ஹீரோ

கிளைமேக்ஸ் காட்சியில் ராஜேஷ் பட ஹீரோக்கள் என்ட்ரி கொடுப்பது வழக்கம். இந்த முறை கிளைமேக்ஸில் என்ட்ரி கொடுத்தது மெயின் ஹீரோ இல்லை துணை நடிகர் நாராயண் லக்கி.

ஓகேஓகே படத்தில் ஹன்சிகாவை நல்ல கொழு கொழுன்னு பூசணிக்காய் மாதிரி இருக்கே என ரெஸ்டாரண்டில் கலாய்பாரே அவர் தான்.

அந்தக் காமெடியை இன்று பார்த்தாலும் சிரிப்பை அடக்க முடியாது. அதேபோன்று இந்த படத்திலும் நயன்தாராவிற்கு பல்ப் கொடுக்கும் காட்சி உள்ளது.

அந்தக் காட்சியில் காமெடி நன்கு ஒர்க் அவுட் ஆகியுள்ளது. படத்தின் திரைக்கதை சுவாரஸ்யமாக இல்லை என்பதால் இந்த படத்தை பெரிய அளவில் பாராட்ட முடியவில்லை.

இருப்பினும் பெரிய அளவில் படம் பார்க்க வருபவர்களுக்கு இப்படம் எரிச்சலை ஏற்படுத்தவில்லை. எனவே படத்தை ஒருமுறை பார்க்கலாம்.

3

செயற்கை மழை: கர்நாடகா அரசின் முயற்சியில் உள்ள பாதிப்புகள்

0
செயற்கை மழை

செயற்கை மழை (Cloud Seeding) என்பது இயற்கை மேகங்கள் மீது அம்மோனியா போன்ற வேதிப்பொருட்களைத் தூவி மழையைப் பெய்ய வைப்பது ஆகும்.

இந்த முறையில் ஏற்கனவே கர்நாடகா அரசு, அந்த மாநிலத்தில் மழைப் பொழிவை நிகழ்த்தி உள்ளது.

தற்பொழுது இதற்காக ரூ.88 கோடி செலவில் இரண்டு ஆண்டுகள் செயற்கை மழைத் திட்டத்தைத் துவங்கியுள்ளது.

இதன் மூலம் மேகங்களை கர்நாடகாவின் மீது கூடச் செய்து வெயிலின் அளவைக் குறைக்க முடியும்.

பருவமழை கிட்டத்தட்ட சரியாகப் பெய்யும் கர்நாடக மாநிலமே இந்தத் திட்டத்தைக் கையில் எடுத்து உள்ளது.

சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. ஆனால் தமிழக அரசு மழை நீரை சேமிக்கும் திட்டங்களைக் கூட முறையாக செய்வதில்லை.

செயற்கை மழை பாதிப்புகள் 

செயற்கைமழையை ஏற்படுத்தும் ரசாயனப் பொருட்கள் நீரில் கலப்பதால் அது மனிதர்களுக்கு பெரிய அளவில் பதிப்பை ஏற்படுத்துவதில்லை.

ஆனால் சிறு சிறு உயிரினங்களுக்கும் சிறு சிறு பயிர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.

செயற்கைமழையால் இயற்கையாக மழை பெய்யக் கூடும் இடங்களில் மழை பொய்த்து போய் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

ஒரே இடத்தில் மேகங்களை கூட்டி மழைப்பொழிவை நிகழ்த்தும்போது அதிக அளவில் மழையைப் பெய்து வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தவும் வாய்ப்பு உண்டு.

ஒரு சில நேரங்களில் செயற்கைமழைக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்த பின்னும் மழை ஏற்படாமல் போகவும் வாய்ப்புகள் உண்டு.

இயற்கை மழை

இவ்வளவு பணத்தை செயற்கை மழைக்காக செலவிடுவதை விட மரம், செடி, கொடிகளை வளர்த்து நகர்புறம் வெப்பமயமாதலைத் தடுத்து இயற்கை வழிகளில் மழையைப் பெறத் தேவையான திட்டங்களை வகுப்பதே ஆகச் சிறந்தது.

செயற்கை மழை என்பது இன்னொரு ஊருக்கு செல்லும் மழையை ஆகாயத்தில் வழிமறைத்து திருடிக்கொள்ளவதே இதன் உண்மையான நிலை.

பக்கத்து ஊரிலோ அல்லது பக்கத்து மாநிலத்திலோ பெய்ய வேண்டிய மழை இதனால் பொய்த்துப்போக வாய்ப்புகள் அதிகம்.

அதே நேரம் செயற்கை மழைபோக இயற்கை மழையும் அங்கு அதிக அளவில் பெய்தால் அந்த மாநிலம் வெள்ளப்பெருக்கில் அழிவதும் சாத்தியம்.

3

மோடி காலாவதியாகிவிட்டார் – மம்தா பானர்ஜி

0
மோடி காலாவதியாவிட்டார்

மோடி காலாவதியாவிட்டார் என ஃபானி புயல் குறித்து மோடியிடம் பேசாததற்கு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

ஃபானி புயல் ஒரிஸாவில் கரையைக் கடந்து மேற்குவங்கம் சென்றது. இதுகுறித்து பாதிப்பை அறிய பிரதமர் மோடி மம்தா பானர்ஜிக்கு போன் செய்தார்.

ஆனால் மம்தா பானர்ஜி மோடியிடம் பேசவில்லை. பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் அவரே திரும்ப கூப்பிடுவார் என மோடிக்கு மம்தா அலுவலகத்தில் இருந்து பதில் கூறியுள்ளனர்.

இரண்டாவது முறை மோடி ஃபோன் செய்தும் பலனில்லை. இதனால் மம்தா என்னிடம் பேசக்கூட மாட்டேன் என்கிறார் என மோடி புலம்பினார்.

இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது, தேர்தல் நேரம் என்பதால் மோடி பாசாங்கு செய்கிறார். அவருடைய கருணை எங்களுக்குத் தேவையில்லை.

காலாவதியானவரிடம் எனக்கு பேச விருப்பமில்லை எனக் கூறியுள்ளார்.  முதல்வர் இல்லாமல் தலைமை செயலாளரையும் மூத்த அதிகாரிகளையும் எப்படி ஆலோசனை கூட்டத்துக்கு அழைக்கலாம்.

மோடி பிரச்சாரத்திற்கு வந்துவிட்டு ஆலோசனைக் கூட்டம் என நாடகமாடுகிறார். எனவே அவருடன் எனக்கு பேச ஒன்றும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

3

பானி புயல்: பெயர் வைத்த நாட்டிற்கு சென்றவுடன் கப்சிப்

0
பானி புயல்

பானி புயல் ஆக்ரோசம் மிக கொடூரமாக இருந்தது. நின்று கொண்டு இருந்த பள்ளிப் பேருந்தை அல்லேக்காக புரட்டிப்போட்டது.

மாடி மீது இருந்த க்ரில் கூரையை அப்படியே தூக்கிகொண்டு பறந்தது. பெட்ரோல் பங்க் கூரையையும் விட்டு வைக்கவில்லை.

டார் டாராக கண்ணில்பட்ட கூடாரங்களை கிழித்து எறிந்தது. 200 கிலோமீட்டர் வேகத்தில் ஒரிஸா மாநிலத்தை துவம்சம் செய்தது.

புயலின் கோரத்தாண்டவம் பலமாக இருந்தும், அங்கு உயிர் பலிகள் பெரிய அளவில் ஏற்படவில்லை. இதுவரை 12 பேர் மட்டுமே உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புயல் வரும் முன்பே 11 லட்சம் சுற்றுலா பயணிகளை வெளியேற்றினர். விமான நிலையம், ரயில்நிலையங்களை மூடி புதிதாக யாரும் உள்ளே வராத வண்ணம் தடுத்தனர்.

மேலும் புயல் கரையைக் கடக்கும் இடங்களில் வாசித்த 8 லட்சம் பேரை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர்.

உடமைகளை விட்டு வர மறுத்தவர்களை கூட போலீசார் கெஞ்சிக் கூத்தாடி அழைத்துச் சென்று பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்.

அதையும் மீறி புயல் கரையைக் கடக்கும் இடங்களில் வாசித்த சிலர் மட்டுமே படுகாயம் அடைந்தனர். சிலர் உயிரிழந்தனர்.

இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடிய ஃபானி புயல் பெயர் வைத்த நாடான வங்கதேசம் சென்றவுடன் வேகத்தை குறைத்து வலுவிழந்து கப்சிப் என மாறிப்போனது.

3

200 km வேகம்: பானி புயலின் கோர முகம்! – Fani Cyclone

0
Fani Cyclone

200 km வேகம், பானி புயலின் கோர முகம்! – Fani Cyclone

பானி புயல் வரும் முன்பே மத்திய அரசு, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் ஒரிஸா ஆகிய மாநிலங்களுக்கு நிவாரண நிதியை அறிவித்தது.

தேர்தல் நேரம் என்பதால் ஒரிசா அரசும் புயல் கரையைக் கடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தியது.

இதனால் பானி புயல் 200 கிமீ வேகம் வரை வீசியும் பெரிய அளவில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. பல ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்துள்ளது.

இது தேர்தல் அல்லாத நேரமாக இருந்திருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒன்றும் நடைபெற்று இருக்காது. பல பேர் உயிரிழந்து இருக்க வாய்ப்பு உண்டு.

இதுவரை பானி புயலால் ஒருவர் காயமடைந்து உள்ளார். 3 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

3

#SRHvsMI சன்ரைசருக்கு சங்கு; டாப் 2-வில் மும்பை இந்தியன்ஸ்

0
#SRHvsMI

#SRHvsMI  நேற்றைய ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது.

முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. டி காக் அதிகபட்சமாக 69 ரன்கள் அடித்தார்.

பின்னர் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழந்து அதே 162 ரன்கள் எடுத்தது.

கடைசி பந்தில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவை என இருந்த நிலையில் மனிஷ் பாண்டே அடித்த பந்து எல்லைக்கோட்டை தாண்டியதால் 6 ரன்கள் கிடைத்தது.

இதனால் போட்டி டை ஆகி சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் சன்ரைசர்ஸ் அணி 8 ரன்கள் மட்டுமே எடுத்தது.

மும்பை இந்தியன்ஸ் அணி பேட்ஸ்மேன் பொல்லார்ட்-ஹார்த்திக் பாண்ட்யா ஜோடி சூப்பர் ஓவரில் களம் இறங்கினர்.

முதல் பந்திலேயே பாண்ட்யா சிக்சர் அடித்தார். அடுத்து ஒரு சிங்கிள். அடுத்த பந்தில் பொல்லார்ட் லாங்காக அடிக்க இரண்டு ரன்கள் ஓடினர்.

3 பந்துகளிலேயே மும்பை அணி 9 ரன்கள் எடுத்து சூப்பர் ஓவரில் சூப்பராக வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது.

டெல்லி கேப்பிடல் அணியும் 16 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்தது. ஆனால் ரன் ரேட் அடிப்படையில் டெல்லி அணியை கீழே தள்ளி இரண்டாம் இடத்தைக் கைப்பற்றியது மும்பை.

4 வது இடத்தைப் பிடிக்க நான்கு அணிகளிடையே கடும்போட்டி நிலவி வருகிறது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றது.

இரண்டு அணிகளுமே வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

3

இஸ்லாமிய தொலைக்காட்சியான ‘பீஸ் டிவி’ தடை செய்யப்பட்டு உள்ளது

0
பீஸ் டிவி

பீஸ் டிவி இஸ்லாமிய மத போதனைகளை ஒளிபரப்பி வரும் தொலைக்காட்சி. இந்த தொலைக்காட்சியை இந்தியா ஏற்கனவே தடை செய்தது.

இலங்கையிலும் இந்த தொலைக்காட்சியின் ஒளிபரப்பை தடை செய்துள்ளது அந்நாட்டு அரசு. வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் சுனில் சமரவீர இதை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சு கூட்டத்தில் பீஸ் டிவியை தடை செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினர்.

இனவாதத்தை வெளிப்படுத்தும் வகையில் அத்தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் உள்ளன. இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பிற்கும் இது ஒரு காரணமாக உள்ளது என தடை செய்யப்பட்டு உள்ளது.

3

பணம் பத்தும் செய்யும்; மோடியின் அதிரவைக்கும் பணபல அரசியல்

0
பணபல

பணபல அரசியலில் பாஜக ஈடுபட்டு வருவதாக நாடு முழுவதும் அதிர்வலை கிளம்பியுள்ளது. பணத்தை இறைத்து ஆட்சியை தக்கவைக்க பாஜக முயற்சி.

தேர்தலுக்கு முன்பே மேற்குவங்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. 40 பேர் என்னுடன் தொடர்பில் உள்ளதாக மோடி மேடையில் தெரிவித்தார்.

அதே நேரம் தமிழகத்தில் அதிமுகவை கைக்குள் போட்டுக்கொண்டு நிழல் ஆட்சி செய்து வருகிறது பாஜக அரசு.

தற்பொழுது மோடி பிரமராக குதிரை பேரம் செய்துவருவதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

இப்படி பல கட்சியின் தலைவர்கள் பாஜக வெற்றி பெற்றால் கூட மோடி பிரதமராக இருப்பதை விரும்பவில்லை.

பாஜக கூட்டணியுடன் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டால் மீண்டும் மோடி பிரதமராக இருக்க கூடாது என இப்பொழுதே கூட்டணி கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றது.

இருப்பினும் பணத்தைக் கொடுத்து எம்.எல்.ஏக்களை வளைத்து விடலாம் என்பது மோடியின் மனக்கணக்காக உள்ளது.

 

3

ஃபானி புயல் தாக்கம்: தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு மழை உண்டு

0
ஃபானி புயல் தாக்கம்

ஃபானி புயல் தாக்கம் காரணமாக தமிழகம் முழுவதும் இந்த வருடம் மிகஅதிக அளவு பெய்ய இருந்த கோடை மழை பொய்த்து போனது.

தமிழக வானில் இருந்த மொத்த காற்றின் ஈரப்பதத்தையும் ஃபானி புயல் ஒரிசாவை நோக்கி ஈர்த்துக்கொண்டு சென்றுவிட்டது.

எனவே தமிழகத்தின் வெப்பநிலை அதிகரித்து உள்ளது. வெயிலின் தாக்கம் பல மாவட்டங்களில் அதிகமாக இருந்தது.

இந்த வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3