Home Blog Page 278

2 ஓவர் 55 ரன்கள்: காட்டுத்தனமாக அடித்த இந்திய வீரர்கள்

0
2 ஓவர் 55 ரன்கள் hot star live watch

2 ஓவர் 55 ரன்கள் என காட்டுத்தனமாக வெஸ்ட்இண்டீஸ் பவுலர்களை அடித்து நொறுக்கினர் ரிஷப் பண்டும், ஸ்ரேயாஸ் அய்யரும்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 போட்டியை வென்ற களிப்பில், முதல் ஒரு நாள் போட்டியில் விளையாடிய இந்திய அணி மொக்கையாக தோற்றுப்போனது.

அடுத்து நடக்கும் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்ற முடியும்.

இந்நிலையில் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங்-யை தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள் ராகுல்-ரோஹித் ஜோடி வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை ஆரம்பம் முதலே வெளுக்கத் துவங்கினர்.

இருவரும் நிலைத்து ஆடி சதம் அடித்தனர். 159 ரன்கள் எடுத்த நிலையில் மீண்டும் ஒரு இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா அவுட் ஆகினார்.

அடுத்து வந்த விராட் கோலி வந்தவுடனே டக் அவுட். 102 ரன்களில் கே.எல்.ராகுல் விக்கெட்டும் காலி.

இனி இந்திய அணியின் ரன் வேகம் கட்டுக்குள் வந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் ஜோடி காட்டுத்தனமாக அடிக்க ஆரம்பித்தனர்.

46-வது ஓவரில் பண்ட் சிக்சர்கள் அடிக்க, 47 ஓவரில் தன் பங்குக்கு ஸ்ரேயாஸ் அய்யர் சிக்சர் மழை பொழிந்து அரைச்சதம் கடந்தார்.

50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழந்து 387 என்ற மாபெரும் வெற்றி இலக்கை வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு நிர்ணயித்தது.

பின்னர் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 43.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 280 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

3

சாந்தி பிரியா கொலை: ஒருபுறம் திமுக, மறுபுறம் செம்மரக்கடத்தல்

0
சாந்தி பிரியா கொலை வழக்கு முனிவேல் செம்மரக்கடத்தல்

சாந்தி பிரியா கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. இக்கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக வேலூர் மேற்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் முனிவேல் கைது செய்யப்பட்டு உள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் பூங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் சென்ற மாதம் ஆந்திரக் காட்டிற்கு செம்மரம் வெட்ட இளையகுமார், பழனி, சென்றாயன், பழனி, இளையராஜா, சஞ்சய், கிருஷ்ணமூர்த்தி,  ஆகிய 7 பேரை அழைத்துச் சென்றுள்ளார்.

இதில் புரோக்கராக செயல்பட்ட சீனிவாசன் பெரும் பங்கு பணத்தை எடுத்துக்கொண்டு மற்றவர்களுக்கு குறைந்த பணமே கொடுத்துள்ளார்.

நீண்ட நாட்களாக அந்த ஏழு நபர்களும் மீத பணத்தை சீனிவாசனிடம் கேட்டு வந்துள்ளனர். ஆனால் சீனிவாசன் பாக்கி பணத்தை தராமல் இழுத்தடித்து உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஏழு பேரும் டிசம்பர் 3-ம் தேதி சீனிவாசன் வீட்டிற்கு சென்று அவரை கடத்த முயன்று உள்ளனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சாந்தி பிரியா கடத்தல் நபர்களை தடுக்க முயன்று உள்ளார்.

சாந்தி பிரியாவின் கழுதை நெரித்து, தலையை சுவற்றில் பலமாக முட்டியதில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தக் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக வேலூர் மேற்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் முனிவேல் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இவர் கிட்டத்தட்ட 20 வருடங்களாக திமுக கட்சியில் உள்ளார். ஒரு பக்கம் கட்சி மறுபக்கம் செம்மரக் கடத்தல் என வலம் வந்துள்ளார் முனிவேல்.

3

குடியுரிமை சட்டம்: வாபஸ் பெறப்போவதில்லை – அமித்ஷா

0
குடியுரிமை சட்டம், குடியுரிமை திருத்த சட்டம், அமித்ஷா, ஜாமியா மிலியா மாணவர்கள் போராட்டம்

குடியுரிமை சட்டம்: குடியுரிமை திருத்த சட்டம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை மீண்டும் வாபஸ் பெறப்போவதில்லை  என திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

நிகழ்ச்சியில் அமித்ஷா கூறியதாவது,

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்துள்ளது. அதில் ஒரு சில இடங்களிலேயே கலவரமாக மாறியுள்ளது.

ஆனால், நாடு முழுவதும் கலவரங்கள் வெடித்துள்ளதாகப் பிம்பம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. உண்மையில் அதிதீவிரமாகப் போராட்டம் நடக்கும் இடங்கள் மூன்று மட்டுமே.

அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், ஜே.என்.யூ., ஜாமியா மிலியா ஆகிய கல்லூரிகளில் தான் போராட்டம் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இந்தியா முழுவதும் 400 கல்வி நிறுவனங்கள் உள்ளது. அங்கெல்லாம் இப்போராட்டம் நடைபெறவில்லை. எனவே இந்தியா முழுவதும் போராட்டம் நடக்கிறது எனக் கூறுவது தவறான விஷயம்.

மாணவர்கள் போராட்டம் நடத்தும் போது கலவரங்கள் ஏற்பட்டால் போலீசார் தடுக்கத்தான் செய்வார்கள். கை மீறிப்போகும் வரை எங்களால் காத்திருக்க முடியாது.

போலீசார் மீது, சில மாணவர்கள் கற்களை வீசியுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

குடியுரிமை திருத்த சட்டத்தை மீண்டும் வாபஸ் பெறப்போவதில்லை. எங்கள் முடிவில் உறுதியாக உள்ளோம் என அமித்ஷா திட்ட வட்டமாகக் கூறியுள்ளார்.

மாணவர்கள் போராட்டம்

ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அசாமில் 6 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது.

புதிய குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதே இந்த போரட்டத்தின் முக்கிய காரணம் எனக்கூறி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

3

தேசியக் கொடி; பாஜகவின் முகத்திரை சூட்சமம்

0
தேசியக் கொடி அனுராக் காஷ்யப்

தேசியக் கொடி மூலம் பாஜகவின் முகத்திரை பற்றி சூட்சமமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் இயக்குனர் அனுராக் காஷ்யப்.

அனுராக் காஷ்யப் இந்தி இயக்குனர். இவர் திரைக்கதை எழுதிய முதல் படமும் சரி.. இயக்கிய முதல் படமும் சரி… திரையரங்கில் வெளியாகவில்லை.

சென்சார் போர்டால் தடை செய்யப்பட்டது. பைரசி இணையதளங்களின் மூலமே இவருடைய படங்கள் பிரபலமானது.

அனுராக் காஷ்யப் என்ற ஒரு கலைஞரை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்ததே பைரசி இணையதளங்கள் தான். இதை அவரே பல மேடைகளில் கூறியுள்ளார்.

‘இமைக்கா நொடிகள்’ மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானார். இவருடைய படங்கள் மட்டும் சர்ச்சையில் சிக்குவதில்லை, இவருடைய கருத்துக்களும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தும்.

பாஜக அரசை ஆரம்பம் முதலே எதிர்த்து வருபவர் இவர். சில நாட்களாக பாஜகவிற்கு எதிராக கருத்துச் சொல்வதை நிறுத்தியிருந்தார்.

இந்நிலையில் பாஜக கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவால் நாடே போராட்ட களமாக மாறியுள்ளது.

மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது குறித்து, மாணவர்களை கேலி செய்யும் விதமாக ஒரு வீடியோவை நடிகர் அக்ஷய் குமார் லைக் செய்தார்.

டிவிட்டரில் அதற்காக கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அதை டிஸ்லைக் செய்துவிட்டு தெரியாமல் கை பட்டு விட்டதாக  கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர் ஒருவர் அக்ஷய் குமார் முதுகெலும்பு இல்லாத மனிதர் என ஒரு ட்விட் செய்திருந்தார்.

உடனே அந்த ட்விட்டை ‘Absolutely’ எனக்கூறி அனுராக் காஷ்யப் ரீட்விட் செய்து அக்ஷய் குமாரின் செயலைக் கடுமையாக எதிர்த்தார்.

அடுத்த சில மணி நேரங்களிலேயே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய தேசியக்கொடியின் படத்தை வெளியிட்டார்.

அதில் பச்சை நிறம் தரைமட்டத்துடனும், வெள்ளை நிறம் சிறிதளவும் காவிநிறம் முழுவதுமாகப் பரவுவது போன்றும். அதை அசோகச் சக்ர மனிதன் தடுத்து நிறுத்துவது போன்றும் உள்ளது.

பாஜக இன்னும் கொஞ்சம் விட்டால் இந்தியாவை காவி மயமாகவும், இந்திய தேசியக் கொடியை காவி நிறமாகவும் மாற்றிவிடும் அதை ஒரு போதும் அனுமதிக்க கூடாது என ஒரு படத்தின் மூலமாக பாஜகவின் முகத்திரையைச் சூட்சமமாக கூறியுள்ளார்.

3

மாணவர் போராட்டம்: தமிழகத்திலும் வெடித்துள்ளது

0
மாணவர் போராட்டம் IIT

மாணவர் போராட்டம் வட மாநிலங்கள் முழுவதும் எதிரொலித்து வரும் நிலையில் தென் இந்தியாவிலும் பரவத் துவங்கியுள்ளது.

இன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆளுநர் எதிர்ப்பையும் மீறி கொல்கத்தாவில் மாபெரும் பேரணியை நடத்தி மத்திய அரசை கண்டித்தார்.

குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை எதிர்த்து இந்த பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

வடஇந்தியாவில் மட்டும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் சென்னையிலும் மாணவர்கள் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

சென்னை ஐஐடி மற்றும் மெட்ராஸ் பல்கலைக்கழக மாணவர்கள் கிண்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

3

குட்டி தோனியாக மாறிய பண்ட்; ரசிகர்கள் கப்சிப்

0
குட்டி தோனியாக tamil news today

குட்டி தோனியாக நேற்றைய போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடியதாக பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட் ஆரம்பம் முதலே விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார்.

காரணம் அவர் வகிக்கும் விக்கெட் கீப்பர் பதவி. தோனி இருந்த இடத்தில் ரிஷப்பை வைத்து அழகு பார்ப்பது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

அவர் மைதானத்தில் சொதப்பும் போதெல்லாம் தோனி.. தோனி.. என கூச்சலிட்டு அவருக்கு மேலும் நெருக்கடியை உண்டு செய்கின்றனர்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் ரோஹித், கோலி சீக்கிரமே அவுட் ஆகியிருந்த நிலையில் ரிஷப் பண்ட் வழக்கம்போல் அவுட்டாகி வெளியேறாமல் தோனி போன்று பொறுப்புடன் ஆடினார்.

ஆரம்பத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பின்னர் மெல்ல மெல்ல இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

69 பந்துகளில் 71 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். சென்ற போட்டி வரை ரிஷப்பை கலாய்த்த ரசிகர்கள் நேற்று குட்டி தோனியாக ரிஷப்பை பார்த்ததாக கருத்து தெரிவித்தனர்.

இருப்பினும் அப்போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. பவுலிங்-பீல்டிங் சொதப்பல்கள் காரணமாக வெட்ஸ்இண்டீஸ் வீரர்கள் 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து எளிதாக வெற்றி பெற்றனர்.

Tamil News Today

3

தமிழ் பெண்களே இந்த வீடியோ உங்களுக்குத்தான்

0

தமிழ் பெண்களே இந்த வீடியோ உங்களுக்குத்தான்…

பாலியல் வன்கொடுமை செய்யும் நயவஞ்சகர்களிடம் இருந்து பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்வது எப்படி?

தமிழக காவல்துறையின் பெண்கள் பாதுகாப்பிற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?.

தமிழக காவல்துறை பெண்கள் ஆபத்தில் இருக்கும்போது உதவுவதற்கு காவலன் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

அந்த காவலன் செயலியை எப்படி உபயோகிப்பது?

3

உலகின் ஆழமான நிலப்பகுதி எது தெரியுமா?

0
உலகின் ஆழமான நிலப்பகுதி Deepest point on land டென்மேன் பனிப்பாறை Denman Glacier

உலகின் ஆழமான கடல் பகுதியாக இதுவரை ‘டெட் கடல்’ (Dead Sea) என்ற பகுதி விளங்கியது. இது இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் நாட்டிற்கு இடையில் உள்ளது.

தற்பொழுது இதை விட ஆழமான பகுதி ஒன்றைக் கண்டுபிடித்து உள்ளனர். அப்பகுதி பனிப்பாறைகளால் மூடப்பட்டு உள்ளது.

ஆண்டார்டிகா பகுதியில் உள்ள டென்மேன் பனிப்பாறை (Denman Glacier) மேல் மிக நுண்ணிய ரேடார் ஒலிகளை ஒலிக்கச் செய்து அதன் ஆழத்தை கண்டறிந்து உள்ளனர்.

இது கடல் மட்டத்தில் இருந்து 3.5km (11,500ft) ஆழம் கொண்டதாக விளங்குகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழு இதனைக் கண்டறிந்து உள்ளது.

இனி உலகின் அழமான பகுதி எதுவென்று கேட்டால் டென்மேன் கிளேசியர் என்பதே சரியான விடை ஆகும்.

3

தீப்பற்றி எரிந்த பேருந்து; 15 பேர் ஸ்பாட் அவுட்

0
தீப்பற்றி

தீப்பற்றி எரிந்த பேருந்தில் 15 பயணிகள் தீயில் சிக்கி உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது பாகிஸ்தானை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாகிஸ்தான் பாலுசிஸ்தான் மாநிலத்தில் உள்ள கில்லா சைபுல்லா மாவட்ட எல்லைப்பகுதிக்கு உட்பட்ட சாலையில் டாங்கர் லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

டேங்கர் லாரியில் டீசல் இருந்ததால் உடனே தீப்பற்றியதில் பேருந்தும், லாரியும் எரிந்தது. பேருந்து பள்ளத்திற்குள் விழுந்ததால் உள்ளே இருந்த 15 பயணிகள் அடிபட்டு தீயில் மாடிக்கொண்டனர்.

ஒரு பயணி மட்டும் அதிஷ்டவசமாக ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பினார். இதுவரை இந்த விபத்தில் 15 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டீசல் கடத்திச் சென்ற லாரியால் தான் இப்படி ஒரு விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

சட்டத்திற்குப் புறம்பாக டீசலைக் கடத்தி, விபத்தை ஏற்படுத்தும் லாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பாலுசிஸ்தான் மாநில முதல்வர்  தெரிவித்துள்ளார்.

3

திஷா சட்டம் 2019: 21 நாட்களுக்குள் தூக்கு தண்டனை

0

திஷா சட்டம் 2019 என்ற புதிய சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்துள்ளது ஆந்திர அரசு. ஆந்திர சட்டசபையில் ஒரு மனதாக ‘disha act 2019‘ நிறைவேற்றப்பட்டுவிட்டது.

தெலுங்கானா மாநிலத்தில் பெண் கால்நடை மருத்துவரை திட்டமிட்டு பாலியல் வன்கொடுமை செய்த நால்வரை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.

இந்நிலையில், பெண்களை பாதுகாக்க ஆந்திர மாநிலத்தில் இதற்காக பிரத்தியேக சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றி உள்ளது ஆந்திர அரசு.

அந்த சட்டத்திற்கு பெயரே ‘திஷா சட்டம் 2019’ என பெயர் வைத்துள்ளது. இந்த சட்டத்தின் படி பாலியல் குற்ற வழக்குகளை 21 நாட்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்.

பாலியல் வழக்குகளை ஒரு வாரத்திற்குள் விசாரணை செய்து போலீசார் அறிக்கை சமர்பிக்க வேண்டும். நீதிமன்றம் 14 நாட்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 21 நாட்களுக்குள், அதிக பட்ச தண்டையான மரண தண்டனையை விதிக்க வேண்டும் என்பது உட்பட பல முக்கிய அம்சங்கள் திஷா சட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும் குழந்தைகள் பாலியல் குற்றங்களுக்கு எதிரான போக்சோ சட்டமும் திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் குறைந்தபட்ச தண்டனை 3 முதல் 5 ஆண்டுகள் வரையும், அதிகபட்சமாக 5 முதல் 7 ஆண்டுகள் வரையும் உயர்த்தப்பட்டுள்ளது.

3