Home Blog Page 309

சப்-கலெக்டரை அசிங்கப்படுத்திய எம்.எல்.ஏ.!

0
சப்-கலெக்டரை
இடது புறம் பெற்றோருடன் ரேணு ராஜ். வலதுபுறம் ராஜேந்திரன் எம்.எல்.ஏ.

சப்-கலெக்டரை அசிங்கப்படுத்திய எம்.எல்.ஏ.!

கேரளா இடுக்கி மாவட்டம் தேவிகுளம் பகுதியில் சப்-கலெக்டராக ரேணு ராஜ் என்ற பெண் பணியாற்றி வருகிறார்.

மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் இடுக்கி மாவட்டத்தின் எம்.எல்.ஏ.வாக பதவி வகிக்கிறார்.

அப்பகுதியில் ராஜேந்திரன் புதிய அடுக்குமாடி கட்டிடம் ஒன்றைக் கட்டி வருகிறார். இந்த கட்டிடம் முறையான அனுமதியின்றி சட்டவிதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளது.

எனவே சப்-கலெக்டர் ரேணு ராஜ் கட்டிடம் கட்டும் பணிகளை நிறுத்துமாறு எம்.எல்.ஏ.விற்கு நோட்டிஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ரேணு ராஜூடன் நடுரோட்டில், பொதுமக்கள் முன்னிலையிலேயே  ராஜேந்திரன் வாக்குவாதம் செய்துள்ளார்.

அப்போது அவர், கட்டிட விதிமுறைகளை வகுக்க அந்தப்பகுதி பஞ்சாயத்துகளுக்கு மட்டுமே அனுமதி உள்ளது.

விதிமுறைகளை பற்றி இவர் தெளிவாகப்படிக்க வேண்டும். மூளை இல்லாதவர்களை சப்-கலெக்டராகப் பணியமர்த்தியுள்ளனர்.

இவ்வாறு பெண் சப்-கலெக்டர் ரேணு ராஜை பொதுமக்கள் முன்னிலையில் இழிவாகவும், தரக்குறைவாகவும் பேசினார் எம்.எல்.ஏ. ராஜேந்திரன்.

எம்எல்ஏவின் கருத்துக்கு பதிலளித்த ரேணு ராஜ், “நான், எனது கடமையை எனது கடையைத்தான் செய்தேன். தொடர்ந்து செய்வேன். அவர்கள் எந்த நடவடிக்கை மேற்கொண்டாலும் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை” எனக் கூறினார்.

3

புல்டாஸ் பால், மின்னல் வேக அடி; சுருண்டு விழுந்த திண்டா!

0
புல்டாஸ் பால்

புல்டாஸ் பால், மின்னல் வேக அடி; சுருண்டு விழுந்த திண்டா!

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில், சையது முஸ்தாக் அலி கோப்பைக்காக பயிற்சி ஆட்டத்தில் கலந்துகொண்டு பந்து வீசினார் இந்திய வீரர் அசோக் திண்டா.

பெங்கால் அணியைச் சேர்ந்த விவேக் சிங் பேட்டிங் செய்தபோது, அசோக் திண்டா புல்டாஸ் பால் ஒன்றை வீசினார்.

உடனே மின்னல் வேகத்தில், அந்த பாலை விவேக் ஸ்ட்ரைட் டிரைவில் தூக்கி அடித்தார். எதிர்பாராத விதமாக அந்தப் பந்து திண்டாவின் நெற்றியைப் பதம் பார்த்தது.

பந்து சற்றும் எதிர்பாராமல் வேகமாகத் தாக்கியதில் நிலைகுலைந்து அங்கேயே சுருண்டு விழுந்தார் திண்டா.

உடனே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.

பெரிய அளவில் காயம் ஏதும் ஏற்படவில்லை. விரைவில் உடல் நலம் பெறுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் திண்டாவை பந்து தாக்கியபோது கனீர் எனக் கேட்கும் சத்தம் நமக்கே ஒரு வித நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.

3

ஓநாய் முகம்: ஹைப்பர் ட்ரிக்கோசிஸ் சிறுவன் வேதனை!

0
ஓநாய் முகம்

ஓநாய் முகம்: ஹைப்பர் ட்ரிக்கோசிஸ் சிறுவன் வேதனை!

ஓநாய் மனிதனை ஹாலிவுட் படங்களில் அடிக்கடி பார்த்திருப்போம். உடல் முழுவதும் முடி வளரும் காட்சிகளை ஷங்கர் படத்தில் பார்த்திருப்போம்.

உண்மையிலேயே அதுபோன்ற மனிதர்கள் உள்ளனர். ஹைப்பர் ட்ரிக்கோசிஸ் (ஓநாய் நோய்க்குறி) என்ற நோய் உள்ளவர்களுக்கு விலங்குகளைப் போன்று உடல் முழுவதும் அடர்த்தியான ரோமங்கள் வளரும்.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த லலித் பாட்டீடர் (13) என்ற சிறுவன் மிகவும் கவலை தெரிவித்துள்ளான்.

அவனை புதிதாகப் பார்ப்பவர்கள் குரங்கு என நினைத்து கல்லால் அடிக்கின்றனராம். அந்த சிறுவனுக்கு காவல்துறை அதிகாரியாக வேண்டுமாம்.

தவறு செய்பவர்களைப் பிடித்து சிறையில் அடைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இந்தியா முழுவதும் அந்த சிறுவனுக்கு ஆதரவு குவிந்துள்ளது.

பலர் முகநூலில் ப்ரோபைல் படமாக அவனுடைய படத்தை வைத்துள்ளனர். அவனுடைய பள்ளி நண்பர்கள் லலித்திடம் அன்பாகவே பழகுகின்றனர்.

பிறக்கும்போதே முகம் முழுவதும் அதிக முடிகள் இருந்தது. எனவே மற்றவர்களை போல் என்னால் இருக்க முடியாது. எனவே நான் மகிழ்ச்சியாக நிம்மதியாவும் உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

3

சௌந்தர்யாவிற்கு கல்யாணம்; ஆர்வமாய் பார்த்த மகன்

0
சௌந்தர்யாவிற்கு கல்யாணம்

சௌந்தர்யாவிற்கு கல்யாணம்; ஆர்வமாய் பார்த்த மகன்

ரஜினியின் சொந்த திருமண மண்டபமான ராகவேந்திரா மண்டபத்தில் சௌந்தர்யா-விசாகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நாளை திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில், மூன்று ஆண்கள் என் வாழ்வில் முக்கியமானவர்கள் என சவுந்தர்யா ரஜினிகாந்த் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

முதலாவது நபர் ரஜினிகாந்த் எனவும், இரண்டாவது நபர் அவருடைய மகன் வேத் எனவும், மூன்றாவது நபர் வருங்கால கணவர் விசாகன் என மூவருடன் இருக்கும் தனித்தனி படங்களை வெளியிட்டார்.

இரண்டாவது படத்தில் அவருடைய மகன் வேத் அம்மாவின் கைகளில் உள்ள மெகந்தியை பார்த்து கொண்டுள்ளது போல் உள்ளது.

அந்தப்புகைப்படத்தை பார்த்தவர்கள் பல்வேறு விதமான கருத்துகளை கூறியுள்ளனர். அச்சிறுவனுக்கு அம்மாவிற்கு திருமணம் என அறிந்துகொள்ளும் பக்கும் இன்னும் வந்திருக்காது என்றே தோன்றுகிறது.

இருப்பினும் அந்தப் புகைப்படத்தை பார்க்கும்போது நம்மை நெகிழச்செய்கிறது. எதற்கு இப்படி புகைப்படம் இட்டு பிரபலப்படுத்த வேண்டும் சத்தம் இல்லாமல் திருமணம் செய்துகொள்ளலாமே என கருத்துக்கள் தெரிவித்தனர்.

பலர், பழைய கசப்பான அனுபங்களை தூக்கியெறிந்துவிட்டு தைரியமாக வெளியே வந்ததற்காக பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

3

நிலவில் கால் பதித்தவர்களை பாராட்டும் நாசா பாடல்

0
நிலவில்

நிலவில் முதலாவதாகவும், இரண்டாவதாகவும் கால் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங்க், பஸ் ஆல்ட்ரின் இருவரும் நாசா பாடலை பாராட்டி ட்விட் செய்தனர்.

இதை தன்னால் நம்பவே முடியவில்லை என்று அப்பாடலைப் பாடிய பிரபல பாப் பாடகி அரியனா கிராண்டே கூறியுள்ளார்.

இப்பாடல் விண்வெளி ஆய்வு மற்றும் பிரபஞ்சத்தைப் பற்றிய குறிப்புகளுடன் ‘நாசா’ என்ற அதன் பெயரைக் கொண்டுள்ளதாக ஸ்பேஸ்.காம் வலைப்பக்கமும் தெரிவித்துள்ளது.

ட்விட்டரில் அரியனா கிராண்டைப் பாராட்டும் நாசா பதிவுகளை அடுத்து பாடகியின் பதில் ட்வீட்டுக்கு உடனுக்குடன் மின்னணு பதில்கள் வந்தன.

இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவெனில் நிலவில் நீல் ஆம்ஸ்ட்ராங்குடன் காலடி வைத்த புஸ் ஆல்ட்டிரினும் உரையாடலில் இணைந்துகொண்டார் என்பதுதான்.

நாசா விஞ்ஞானிகளின் இத்தகைய பாராட்டு கிடைத்தது குறித்து தன்னால் நம்ப முடியவில்லை என்று அரியனா கிராண்டின் மகிழ்ச்சி பொங்க தெரிவித்திருந்தார்.

இதற்குமுன், கிராண்டின் தனது ஆடைகள் மீது நாசா லோகோ அணிந்து, ட்விட்டரில் பிரபஞ்சம், வியாழன் மற்றும் நெப்டியூன் போன்ற கிரகங்கள் மீதான தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

3

நல்ல நினைவுகளுடனும், பாடத்துடனும் நாடு திரும்புகிறோம் – ரோஹித்

0
நல்ல நினைவுகளுடனும்

நல்ல நினைவுகளுடனும், பாடத்துடனும் நாடு திரும்புகிறோம் – ரோஹித்

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டி, 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

ஒரு நாள் போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி 4-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. டி20 போட்டியில் 1-2 என்ற கணக்கில் தோல்வியை தழுவியுள்ளது.

இதனால் 10 தொடர்களைத் தொடர்ந்து வென்ற இந்திய அணிக்கு இது முட்டுக் கட்டையாக அமைந்துவிட்டது.

ஒரு நாள் தொடரின் இடையில் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா இந்திய அணியை வழி நடத்தினார்.

மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டியில் தொடக்கமே அதிரடியாக விளையாடிய நியூசிலாந்து அணி 212 ரன்கள் அடித்தது. அதிரடியாக விளையாடிய மன்றோ 40 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார்.

213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை துரத்திய இந்திய அணி நல்ல துவக்கத்தை கொடுத்தது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 4 ரன்களில் இந்திய அணி தோற்றது.

தோல்வி குறித்து ரோஹித் கூறியதாவது

இலக்கிற்கு மிக அருகில் சென்று தோற்றது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. கடைசி நேரத்தில் நியூசிலாந்து சிறப்பாக பந்து வீசி ஆட்டத்தை தங்கள் வசப்படுத்தினர்.

ஒரு சில சிறிய தவறுகளால் தோல்வியை தழுவினோம். தோல்வி அடைந்தாலும் நல்ல நினைவுகளுடனும், பாடத்துடனும் நாடு திரும்புகிறோம் எனக் கூறினார்.

3

சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக செல்லலாம் – அதிரடி அறிவிப்பு

0
சென்னை மெட்ரோ

சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக செல்லலாம் – அதிரடி அறிவிப்பு

சென்னை பயணிகள் வாகனம் என்றாலே நிரம்பி வழியும். சாதாரண சேர் ஆட்டோ என்றால் கூட இடித்துப்புடித்து அமர்ந்து பயணிப்பார்கள்.

ஏசி பஸ்கள் முதலில் அறிமுகம் செய்யப்பட்டபோது அதிக கட்டணம் என பலர் பயணிப்பதை தவிர்த்தனர்.

ஆனால் இன்று ஏசி பஸ்களில் நிற்கக்கூட இடம் இல்லாத அளவிற்கு கூட்டம் அலைமோதுகின்றது.

அதேபோன்றே சென்னை மெட்ரோ ரயில் சேவையும். ஆரம்பித்தது முதல் சற்று மந்தமாகவே காணப்படுகிறது.

மெட்ரோ ரயில் கட்டணம் அதிகமாக இருப்பதால், அதைவிட ஆட்டோ கட்டணங்கள் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருப்பதாலும் மக்கள் ஆட்டோவிலேயே செல்கின்றனர்.

இதனால் மெட்ரோ ரயில்வே பல்வேறு சலுகைகளை அவ்வபோது அளித்து வருகிறது. மேலும் பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக கட்டணக் குறைப்பும் செய்தது.

தற்பொழுது பயணிகளை கவர அனைத்து மெட்ரோ ரயில்களிலும் நாளை இரவு வரை இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என அதிரடி அறிவிப்பை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

3

எல்லோருக்கும் ஒரு வாட்ச் பார்சல்; அசத்திய நயன்தாரா

0
எல்லோருக்கும் ஒரு வாட்ச்

எல்லோருக்கும் ஒரு வாட்ச் பார்சல்; அசத்திய நயன்தாரா

நகைச்சுவைப் படம் இயக்குவதில் எம்.ராஜேஷ் வல்லவர். இவர் இயக்கிய முதல் மூன்று படங்கள் சூப்பர் ஹிட்.

தற்பொழுது சிவகார்த்திகேயன், நயன்தாராவை வைத்து மிஸ்டர் லோக்கல் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு மேலும் பலர் இதில் நடித்து வருகின்றனர். ஹிப் ஹாப் ஆதி படத்திற்கு இசையமைக்கிறார்.

ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். கோடை விடுமுறையில் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன் மிஸ்டர் லோக்கல் படப்பிடிப்பு காட்சிகளில் பங்கேற்ற நயன்தாரா, படப்பிடிப்பு முடிந்தவுடன் படக்குழுவினருக்கு கைக்கடிகாரத்தை பரிசாக வழங்கியுள்ளார்.

மேலும் தன்னுடைய ஓவியம் வரைந்தவருக்கு ஆட்டோகிராப் இட்டு, அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார்.

தற்பொழுது அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

3

பிராவோவின் அடுத்த பாடலில் கோலி-தோனி

0
பிராவோவின்

பிராவோவின் அடுத்த பாடலில் கோலி-தோனி.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டர் திவைன் பிராவோ இந்தியாவில் அதிக ரசிகர்களைக் கொண்டவர்.

கிரிக்கெட் மட்டுமில்லை, பாடகர், டான்சர் மற்றும் நடிகர் என பல அவதாரம் எடுத்துள்ளார்.

குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த பிறகே, பிரவோவிற்கான மவுசு அதிகமானது. சினிமா வாய்ப்புகள் தேடி வந்தது.

ஒவ்வொரு முறையும் விக்கெட் எடுக்கும்போது, கேட்ச் பிடிக்கும்போது பிராவோ ஸ்டைலாக நடனம் ஆடுவார்.

ஏற்கனவே பிராவோ பாடிய சாம்பியன் பாடல் பயங்கர ஹிட் ஆகியது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.

தற்பொழுது அவர் ரிலீஸ் செய்த ‘ஆசியா’ பாடல் இந்தியாவின் தோனி-கோலி, ஸ்ரீ லங்காவின் சங்ககரா, பாகிஸ்தானின் அஃப்ரீடி, பங்களாதேஷின் சாகிப் அல் ஹாசன் மற்றும் ஆப்கானிஸ்தான் அணியின் ராசித் கான் போன்ற ஆசியக் கிரிக்கெட் வீரர்களை மையமாக வைத்து எழுதி பாடியுள்ளார் பாடலாகும்.

அஃப்ரீடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆசியா பாட்டை பாராட்டி ட்வீட் செய்து உள்ளார்.

3

அதிக கதிர்வீச்சை வெளியிடும் பட்டியலில் ஐபோன்

0
அதிக கதிர்வீச்சை

அதிக கதிர்வீச்சை வெளியிடும் பட்டியலில் ஐபோன்

அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் அனைத்து ஸ்மார்ட் ஃபோன்களுமே அதிகமான கதிர்வீச்சை வெளியேற்றுகின்றன.

16 மொபைல்கள் கொண்ட பட்டியலில் சியோமி மற்றும் பிளஸ் ஒன் ஃபிராண்ட் மொபைல்கள் 8 இடம் பெற்றுள்ளன.

குறைந்த கதிர்வீச்சை வெளியிடும் மொபைல்களில் சாம்சங் கேலக்ஸி நோட் 8 முதலிடத்தில் இருக்கிறது.

ஐ ஃபோன் 7, 8 மற்றும் கூகிள் பிக்சல் மொபைல் மாடல்களும் அதிக கதிர்வீச்சை வெளியிடும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

கதிர்வீச்சை வெளியிடும் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சியோமி எம்‌ஐ எஒன் 1.75 வாட்ஸ் பெர் கிலோகிராம் அளவில் கதிர்வீச்சை வெளியிடுகிறது.

இரண்டாம் இடத்தில் உள்ள ஒன்பிளஸ் 5டி, 1.68 வாட்ஸ் பெர் கிலோகிராம் என்ற அளவில் கதிர்வீச்சை வெளியிடுகிறது.

குறைந்த கதிர்வீச்சில் சாம்சங், மோட்டரோலா மற்றும் ஜெட்‌டி‌இ ஃபிரண்ட் ஸ்மார்ட் ஃபோன்களே அதிகமாக உள்ளன.

உலக அளவில் பாதுகாப்பான கதிர்வீச்சு என்று எதுவும் இல்லை. ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த புளு ஏஞ்சல் என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் 0.60 வாட்ஸ் பெர் கிலோகிராமுக்கு குறைவான கதிர்வீச்சை வெளியிடும் ஸ்மார்ட்ஃபோன்களை மட்டுமே அனுமதிக்கிறது.

3