Home Blog Page 310

மோடிக்கு எதிராக ஆடையின்றி கறுப்புக்கொடி போராட்டம்

0

மோடிக்கு எதிராக ஆடையின்றி கறுப்புக்கொடி போராட்டம்

இந்திய நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி இந்தியா முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இரண்டு நாட்கள் பயணமாக இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு மோடி சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

இன்று அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதோடு சில நலத்திட்டங்களையும் துவங்கிவைத்தார் மோடி.

பிரச்சார மேடையில் தோன்றிப் பேசிய மோடி, அருணாச்சல பிரதேசம் சூரிய உதயத்தின் நிலம் என்பதால் இது நமக்கு உறுதியை கொடுக்கிறது எனப்பேசினார்.

முந்தைய அரசு இந்த மாநிலத்தை முற்றிலும் புறக்கணித்துள்ளது. சரியான திட்டங்கள் இல்லை. குறிப்பாக மின்சார உற்பத்தி திட்டம் இல்லை.

பாஜக அரசு 13 ஆயிரம் கோடி செலவில், போக்குவரத்து துறை மற்றும் மருத்துவத் துறையை சீரமைக்க உள்ளது.

பாஜக ஆட்சியில் அருணாச்சலப் பிரதேசத்தில் இரண்டு விமான நிலையங்கள் துவக்கப்பட்டு உள்ளது. ரயிவே துறை மிகவும் மேம்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு மோடி கூட்டத்தில் பேசினார்.

அவர் மேடையில் பேசும் முன்பு அவருக்கு எதிராக ஆடையின்றி கருப்புக்கொடி காட்டிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். பலர் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு எதிர்ப்புகளைக் காட்டினர்.

மோடி கடந்த தேர்தலில் பிரதம வேட்பாளராக போட்டியிட்டபோது, சில நடிகைகள் கவர்ச்சியாக உடையில்லாமல் மோடிக்கு ஆதரவாக புகைப்படங்களை வெளியிட்டனர்.

ஆனால், இந்த முறை மோடிக்கு எதிராக ஆடையின்றி போராட்டம் நடத்துகின்றனர். கறுப்புக்கொடி காட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஆன்லைன் ஷாப்பிங் மோசடி; 82 ஆயிரம் அபேஷ்!

0
ஆன்லைன் ஷாப்பிங் மோசடி

ஆன்லைன் ஷாப்பிங் மோசடி; 82 ஆயிரம் அபேஷ்!

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் உள்ள கப் பெத் என்ற பகுதியைச் சேர்ந்த பிரக்சானா என்பவர் ஆன்லைன் ஷாப்பிங் இணையதளம் ஒன்றின் மூலம் 107 ரூபாய்க்கு மோதிரம் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

அந்த மோதிரம் அவருடைய விரலில் சரியாகப் பொருந்தவில்லை. எனவே அதை திரும்ப பெற்றுக்கொண்டு ரீபன்ட் கேட்டுள்ளார்.

அந்த இணையதளத்தை சேர்ந்தவர் திரும்ப பணம் அனுப்ப ஏடிஎம் கார்ட் குறித்த தகவல்களை கேட்டுள்ளார். மேலும் அப்பெண்ணிடம் நைசாகப்பேசி ஓடிபி எண்ணையும் வாங்கியுள்ளார்.

அவருடைய கார்ட் மட்டுமல்லாமல் அவருடைய தந்தையின் கார்டு பற்றிய தகவல்களையும் கொடுத்துள்ளார் அந்த அப்பாவி இளம்பெண்.

இருவரது வாங்கி கணக்கில் இருந்தும் மொத்தம் 82,000 ரூபாய் வரை எடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகே அவர்கள் ஏமாற்றப்படத்தை உணர்ந்துள்ளனர்.

அதன்பிறகே மோசடி பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை செய்ததில் அந்த பணம் டெல்லியில் உள்ள வங்கிக் கணக்கிற்கு சென்றது தெரியவந்தது.

இதனை அடுத்து மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

3

கலாபவன் மணி கொலை: உண்மை கண்டறியும் சோதனைக்குத் தயார்

0
கலாபவன் மணி கொலை

கலாபவன் மணி கொலை: உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார்

மறைந்த நடிகர் கலாபவன் மணி, தமிழ், மலையாளம், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் 200-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

2016 மார்ச் 6-ஆம் தேதி காலக்குடியில் அவரது பண்ணை வீட்டில் நண்பர்களுடன் மது அருந்தினார். அப்போது திடிரென மரணமடைந்தார்.

முதலில் கல்லீரல் பாதிப்பால் இறந்ததாக போலீசார் தெரிவித்தனர். பிரேதப் பரிசோதனையில் அவர் பூச்சிக்கொல்லி மருந்து உட்கொண்டது இறந்தது தெரியவந்தது.

இதனால் அவ்விருந்தில் பங்கேற்ற நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வழக்கு விசாரணையின்போது கலாபவனின் நண்பர்களான ஜாபர் இடுக்கி, சபுமான் உள்ளிட்ட 7 பேரும் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்னர்.

3

உலகக்கோப்பையில் தோனியின் பங்களிப்பு முக்கியம் – யுவ்ராஜ்

0
உலகக்கோப்பையில்

உலகக்கோப்பையில் தோனியின் பங்களிப்பு முக்கியம் – யுவ்ராஜ்

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவ்ராஜ்சிங் www.livepools.com இணையத்தின் திறப்பின்போது அளித்த பேட்டியில் முன்னாள் கேப்டன் தோனியைப் பற்றி ஒருசில வார்த்தைகள் கூறினார்.

தோனி ஆட்டத்தை கணிப்பதில் மிகவும் சிறந்தவர். ஆட்டத்தின் முக்கியமான தருணத்தில் முடிவு எடுக்கும் பொழுதும், டி‌ஆர்‌எஸ் கேட்கும் பொழுதும் தோனியின் பங்களிப்பு அவசியம்.

விக்கெட் கீப்பிங்க் மற்றும் சேசிங்கில் தோனி மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 2019-ஆம் ஆண்டு தோனிக்கு நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது எனத் தெரிவித்தார்.

யுவ்ராஜ் மற்றும் தோனி இந்திய அணிக்காக நிறைய போட்டிகளில் ஒன்றாக நிலைத்து நின்று ஆடி வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளார்.

தோனி கேப்டன் ஷிப்பில் யுவ்ராஜ் 175 போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்தியா வென்றுள்ள 2007 டி20 மற்றும் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் முக்கிய பங்காற்றியவர் யுவ்ராஜ் என்பது அனைவரும் அறிந்ததே.

தற்பொழுது போதிய வாய்ப்பு கிடைக்காததால் இந்திய அணிக்கு விளையாட முடியாமல் தவிக்கிறார். ஐ‌பி‌எல் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் யுவ்ராஜ் திணறி வருகிறார்.

3

தமிழகத்திற்குள் கள்ளத்துப்பாக்கி; நீதிபதிகள் பரபரப்பு உத்தரவு

0
தமிழகத்திற்குள் கள்ளத்துப்பாக்கி

தமிழகத்திற்குள் கள்ளத்துப்பாக்கி; நீதிபதிகள் பரபரப்பு உத்தரவு

மதுரைக்கிளை உயர்நீதிமன்றத்தில், நாகன்குளத்தை சேர்ந்த கார்மேகம் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.

அவர் தாக்கல் செய்தமனு பின்வருமாறு, “தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக கள்ளத்துப்பாக்கி விற்பனை அதிகரித்துள்ளது.

கள்ளத்துப்பாக்கியை விற்பனை செய்ததாக காவல்துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரி கைது செய்யப்பட்டு உள்ளார்.

ஆயுத தடைச்சட்டத்தின் படி உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பது குற்றம். ஆனால் சமீப காலமாக கள்ளத்துப்பாக்கி விற்பனை பெருகி உள்ளது.

வட மாநிலங்களில் இருந்து துப்பாக்கிகள் கள்ளத்தனமாக தமிழகத்திற்குள் கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அரசியல்வாதிகள், பணக்காரர்கள், கூலிப்படையினர் எனப் பலர் கள்ளத்துப்பாக்கிகள் வைத்துள்ளனர். இது பெரிய அச்சத்தை விளைவித்து உள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கொலை செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

எனவே இவற்றுக்கு முடிவு கட்டவேண்டும். கள்ளத்துப்பாக்கி தொடர்பான வழக்கு விசாரணையை தேசியப் புலனாய்வு முகமைக்கு மாற்றவேண்டும்” என அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த  நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அடங்கிய அமர்வு, “மத்திய உள்துறை அமைச்சர், தேசியப் புலனாய்வு பிரிவு, சிபிஐ தரப்பில் இருந்து எந்தப் பதிலும் இல்லை.

கள்ளத்துப்பாக்கி என்பது ஒரு மாநிலப் பிரச்சனை இல்லை.  எனவே 2 வாரத்திற்குள் மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க வேண்டும். தவறினால் நேரில் ஆஜராக வேண்டிய நிலை வரும் என உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.

3

அரசியலில் போனியாகாத கமல்; ஆரம்பமே சறுக்கல்!

0
அரசியலில் போனியாகாத கமல்

அரசியலில் போனியாகாத கமல்; ஆரம்பமே சறுக்கல்!

நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற காலம் தற்பொழுது மலையேறிவிட்டது என்பதை உணர்த்துகிறது சமீபத்திய நிகழ்வுகள்.

விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தார். ஆனால் அவரால் இறுதிவரை போராட முடியவில்லை. வந்த வேகத்திலேயே உடல்நலம் குன்றி படுத்துவிட்டார்.

சரத்குமார், கூட்டணி கூட கிடைக்காமல் அவதிப்படுகிறார். ரஜினி இன்று வரை மக்களை குழப்பிக்கொண்டே உள்ளார்.

நவரச நாயகன் கார்த்திக், டி.ராஜேந்தர் இப்படி பல நடிகர்கள் ஆரம்பித்த கட்சிகள் இன்று இருக்கும் இடம் தெரியாமல் உள்ளது.

மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை கமல் துவங்கினார். இது கட்சிப் பெயர் தானா? என்றே பலருக்கும் சந்தேகமே வந்தது.

பாஜகவுடனான பேச்சுவார்த்தை தோல்வி. காங்கிரசுடன் கூட்டணி பேச்சு வார்த்தை தோல்வி. திமுக கூட்டணி தோல்வி.

கமலை ஆதரிக்கவோ, அவரை வளர்த்து விடவோ எந்தக் கட்சிகளும் தயாராக இல்லை. தமிழகத்தை அடுத்து வழிநடத்த தலைவர்கள் யாரும் இல்லை என நினைத்து கமல் கட்சியை துவங்கிவிட்டார்.

தனக்கு தலைவராகத் தகுதி உள்ளதா? என்பது கமலுக்கே குழப்பமாகிவிட்டது. இனி அவர் கரை சேருவாரா? எனப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

3

சூடான நடிகை என்றால் சும்மா விடுவாரா தாணு!!!

0
சூடான நடிகை

சூடான நடிகை என்றால் சும்மா விடுவாரா தாணு!!!

மலையாள நடிகை பிரியா வாரியார் ஒரு ஆதார் லவ் படத்தின் டீசரில், ஒரு கண் சிமிட்டும் காட்சியால் இந்தியா முழுவதும் ஒரே இரவில் வைரல் ஆனார்.

இந்தியாவில் சென்ற ஆண்டு கூகிளில் அதிகம் தேடப்பட்ட நபராகி விட்டார். அதன் பிறகு பல்வேறு பட வாய்ப்புகளும் விளம்பர வாய்ப்புகளும் அவருக்கு கிடைத்தது.

இதை அறிந்த டைரக்டர் ஒமர் லுலு, பிரியா வாரியார்-ரோஷன் இருவருக்குமான ரொமான்ஸ் காட்சிகளை மேலும் அதிகப்படுத்தினார்.

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் இந்தப் படம் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது.

தமிழில் கலைப்புலி எஸ் தாணு, ஒரு ஆதார் லவ் படத்தை ரீலிஸ் செய்கிறார். படத்தின் புரோமோசனுக்காக சிறு முத்தக்காட்சியை மூவி பப் மூலம் வெளியிட்டுள்ளார்.

வியாபாரமே ஆகாத ஓட்டைத் தக்காளியைக் கூட வியாபாரம் செய்வதில் கலைப்புலி தாணு கிங்கு. தற்பொழுது நன்கு சுவையான தக்காளி கிடைத்துள்ளது.

அப்போ வசூல் எப்படி இருக்கப்போகுதுன்னு கணக்குப்போட்டு பாத்துக்குங்க..

3

டீ குடிப்பதால் ஏன் மூளை சுறுசுறுப்பாகிறது?

0
டீ குடிப்பதால்

டீ குடிப்பதால் ஏன் மூளை சுறுசுறுப்பாகிறது?

தேநீர் குடிப்பவர்கள் எப்படி அதிக சிந்தனையும் ஆற்றலும் படைப்பாற்றலும் கொண்டுள்ளனர்?டீ உடலுக்குள் சென்று அப்படி என்ன தான் செய்கிறது?

பெர்கிங்க் பல்கலைக் கழகத்தில் நடந்த ஆய்வில் சீரான இடைவெளியில் டீ குடிப்பவர்கள் அதிக கவனமுடனும், அதிக தெளிவுடனும் செயல்படுவதாக நிரூபித்துள்ளனர்.

50 மாணவர்களைத் தேர்வுக்கு எடுத்துக்கொண்டு அதில் பாதிப்பேருக்கு டீயும் மீதமுள்ளோருக்கு தண்ணீரும் ஒவ்வொரு இடைவெளியில் வழங்கப்பட்டது.

தேநீர் குடித்தவர்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும் கிரியேட்டிவிட்டியுடனும் செயல்படுவது நன்றாகவே தெரிந்தது.

டீயில் என்ன இருக்கிறது?

டீயில் இருக்கும் மூலப்பொருட்களான காஃபின்(caffeine) மற்றும் தேயனின்(theanine) தான் மனித உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு காரணம் ஆகும்.

டீ அல்லது காஃபி குடித்த அடுத்த நிமிடத்திலே மூளை சுறுசுறுப்பாக வேலை செய்வதற்கு இவையே காரணமாகும். மேலும் நல்ல யோசிக்கும் திறனையும் அறிவாற்றலையும் அதிகப்படுத்துகிறது.

எந்த அளவிற்கு நாம் டீ குடிக்கிறோமோ, அதற்கு ஏற்றவாறு நாம் சுறுசுறுப்பாக இருக்கலாம். ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான்.

அதிகமாக டீ பருகினால் நாம் அதற்கு அடிமையாகி நேரிடும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

3

ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவர்களுக்கு ஸ்கூட்டர் அனுமதி – மத்திய அரசு அறிவிப்பு

0
ப்ளஸ் 1

ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவர்களுக்கு ஸ்கூட்டர் அனுமதி – மத்திய அரசு அறிவிப்பு

இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் பள்ளிகளுக்கு R15, FZ, BULLET என முரட்டு பைக்குகளுடன் செல்கின்றனர்.

லைசன்ஸ் எடுக்கும் வயதைக்கூட தாண்டுவதில்லை. பெற்றோர்கள் வசதி படைத்தவர்கள் என்பதால் உடனே பைக் வாங்கிக்கொடுத்து விடுகின்றனர்.

இதனால் பலர் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. இளம் கன்று பயமறியாது என்பதற்கு ஏற்ப வேகமாக பைக் ஒட்டி பொதுமக்களை அச்சுறுத்துகின்றனர்.

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், தொழில்நுட்ப வளர்ச்சியின் பெருக்கத்தை கண்டும் மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

16 முதல் 18 வயது உடையவர்கள், கியர் இல்லாத மின்சார வாகனங்களை ஓட்ட மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது

16 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். வாகனம் 50 சிசிக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.  கியர் இல்லா மின்சார வாகனமாக இருக்க வேண்டும்.

இந்த தகுதி உடையவர்கள் லைசன்ஸ் பெற்றுக்கொள்ளலாம் என மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

3

சூட்டைக் கிளப்பிய ஓவியா; சென்சார் அதிகாரிகள் அதிர்ச்சி

0
சூட்டைக் கிளப்பிய ஓவியா

சூட்டைக் கிளப்பிய ஓவியா; சென்சார் அதிகாரிகள் அதிர்ச்சி

பிக்பாஸ் டைட்டில் வெற்றிக்குப் பிறகு ஓவியா படவாய்புகளைத் தவிர்த்து வந்தார். முக்கிய தயாரிப்பாளர்கள் அழைப்பை மறுக்கமுடியாது என தலையை ஒரு பக்கம் ஒட்டவெட்டி ஹேர்ஸ்டைலை மாற்றிக்கொண்டார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஓவியா நடிப்பில் வெளிவர உள்ள படம் 90ml. இப்படத்திற்கு சிம்பு இசை அமைக்கிறார்.

இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் சென்சாருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகளுக்கு சூட்டைக் கிளப்பி உள்ளார் ஓவியா. அந்த அளவிற்கு படத்தில் கிளாமர் காட்சிகள் அதிகமாம்.

இதனால் படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். படத்தின் ட்ரைலர் நாளை வெளியாக உள்ளது. அதில் தெரிந்துவிடும் எந்த அளவிற்கு சூடான காட்சிகள் உள்ளது என்று.

3