Home Blog Page 311

முதலில் தூக்க மாத்திரை, பின்பு மண்ணெண்ணெய் – எங்கே ரோகினி?

0
முதலில் தூக்க மாத்திரை

முதலில் தூக்க மாத்திரை, பின்பு மண்ணெண்ணெய் – எங்கே ரோகினி?

சேலம் மாவட்டம் மாமாங்கம் பகுதியைச் சேர்ந்தவர் பூங்கொடி. இவருடைய கணவர் இறந்துவிட்டார். 3 குழந்தைகளுடன் நீண்ட நாட்களாக ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

திடிரென வீட்டின் உரிமையாளர் வீட்டை விற்பதாகக் கூறி காலி செய்யச் சொல்லியுள்ளார். பூங்கொடியே, அந்த வீட்டை வாங்கிக்கொள்வதாகக் கூறி உள்ளார்.

முதல் தவணையாக எட்டரை லட்சம் ரூபாய்யை வீட்டின் உரிமையாளரிடம் கொடுத்துள்ளார். மீதத்தொகையை சிலநாட்களில் கொடுத்துவிடுவதாகக் கூறியுள்ளார்.

ஆனால் சில நாட்கள் கழிந்த உடன் வேறு ஒருவருக்கு வீட்டை விற்றுவிட்டார் அதன் உரிமையாளர்.

பாதிக்கப்பட்ட பூங்கொடி காவல் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்துள்ளார்.எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் கலெக்டர் அலுவலகத்திலும் பலமுறை புகார் தெரிவித்துள்ளார். அங்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, தூக்கமாத்திரையை விழுங்கிக்கொண்டு கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பிறகும் நடவடிக்கை இல்லை.

இறுதியாக மண்ணெணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப் பார்த்த காவலர்கள் உடனே பூங்கொடியின் மீது தண்ணீரை ஊற்றி அனைத்து விட்டனர்.

ஏழை எளிய மக்களுக்கு உதவுவது, நலத்திட்டங்கள் செய்வது என அவ்வபோது மீடியாக்களில் வலம்வந்த சேலம் கலெக்டர் ரோகினி எங்கே போனார்?

இத்தனை முறை ஒரு பெண், கலெக்டர் அலுவலகத்தில் உயிர்விட முயற்ச்சி செய்தது ரோகினியின் காதுகளுக்கு எட்டவில்லையா?

3

வர்மாவை குருமாவாக்கிய பாலா; விக்ரமும் தயாரிப்பாளரும் அதிர்ச்சி

0
வர்மாவை குருமாவாக்கிய பாலா

வர்மாவை குருமாவாக்கிய பாலா; விக்ரமும் தயாரிப்பாளரும் அதிர்ச்சி

விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளிவந்து பட்டிதொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய படம் அர்ஜுன் ரெட்டி.

இதற்கு முன்னர் மலையாளத்தில் வெளிவந்த ப்ரேமம் படம் இதேபோல் சக்கைபோடு போட்டது. அதைத் தெலுங்கில் ரீமேக் செய்தார்கள். ஆனால் அது ரசிக்கும்படியாக இல்லை.

காரணம், ஒரு நாயகனை மனதில் நிறுத்திவிட்டு, இன்னொருவரை அதே வேடத்தில் நினைத்துப்பார்க்க முடியாது.

அதேபோன்றே அர்ஜுன் ரெட்டியும். இந்த படத்தின் மூலம் விஜய் தேவரகொண்டாவிற்கு தமிழ்நாட்டில் அதிக ரசிகர் படை உருவானது.

படத்தை டப் செய்து வெளியிட்டாலே பயங்கரமாக ஓடியிருக்கும். ரீமேக் செய்ய முடிவு செய்தார்கள். விக்ரம் மகன் துரூவ் நாயகனாக நடித்தார்.

பர்ஸ்ட் லுக் வெளியானபோதே பயங்கரமாக கலாய்க்கப்பட்டார். இருப்பினும் டீசரில் ஓரளவு ஏற்றுக்கொள்ளும் படியாகவே இருந்தது அவருடைய நடிப்பு.

வர்மா 100 சவீதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது படத்தயாரிப்பு நிறுவனம்.

காரணம் பாலா, அர்ஜூன் ரெட்டியை அப்படியே எடுக்கவில்லையாம். குறிப்பாக கிளைமேக்சை முற்றிலும் மாற்றி எடுத்துள்ளார்.

அதில் வழக்கம்போல பாலாவின் சைக்கோ தனக் காட்சிகளும், இரத்தவெறிக் காட்சிகளும் உள்ளதாம்.

படத்தை பார்த்த விக்ரமுக்கும், தயாரிப்பாளருக்கும் அதிர்ச்சிமேல் அதிர்ச்சி. இப்படத்தை அப்படியே வெளியிட்டால் படுதோல்வி அடையும்.

எனவே, பாலாவிடம் பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பாலாவின் மனதை மாற்ற முடியவில்லை. இதனால் பாலாவையே மாற்றிவிட படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்துவிட்டார்.

பாலா என்றாலே யார் சொல்லையும் கேட்கமாட்டார். அவர் நோக்கத்திற்கு செயல்படுவார் என அவர்மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் உண்டு.

இனி பாலா அப்படி ஏதும் செய்யமாட்டார் என படத்தின் தயாரிப்பாளரே பாலாவிற்கு சர்டிபிக்கேட் கொடுத்து படப்பிடிப்பைத் துவங்கினார்.

தற்பொழுது அவரே பாலாவை நீக்குவதாக அறிவித்துள்ளார். பாலா இன்னும் மாறவில்லை, மாற்றவும் முடியாது என்பது இதன்மூலம் நிரூபணம் ஆகிவிட்டது.

பாலாவின் திரையுலகப் பயணம் இதற்கு மேல் எடுபடுமா என்பது கேள்விக்குறியே?

3

5ஜி ஏலம்: 5ஜி-யை வேட்டையாட ஜியோ திட்டம்!

0
5ஜி ஏலம்

5ஜி ஏலம்: 5ஜி-யை வேட்டையாட ஜியோ திட்டம்!

இந்தியாவில் 5G சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றுவிட்டது. அமெரிக்கா, ஐரோப்பா, கொரியா மற்றும் சீனாவில் இந்த ஆண்டு 5G சேவைகள் துவங்கப்பட உள்ளது.

இந்தியாவில் வரும் ஜூலை மாதம் 5G அலைக்கற்றைகள் ஏலம்விடப்பட உள்ளது. 5G சேவையை முதலில் துவங்கும் முனைப்பில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் உள்ளது.

அடுத்த ஆண்டு தேர்தல் வர உள்ளதால், அடுத்து ஆட்சிக்கு வரப்போவது யார் என இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

பாஜகவே மீண்டும் ஆட்சிக்கு வந்தால், எஞ்சியிருக்கும் மொத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இழுத்து மூட வாய்ப்பு உள்ளது.

ஜியோ மட்டும் சிங்கிள் நிறுவனமாக உருவெடுத்தால், பின்பு அவர்கள் வைப்பது தான் விலை என்றாகிவிடும்.

4G-யில் பலத்த நஷ்டத்தைச் சந்தித்து வரும் ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்கள் 5ஜி வருகைக்குப் பின்பாவது தப்பிக்குமா எனப் பார்க்கலாம்.

இப்பொழுது செல்போன் தயாரிக்கும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது ஜியோ.

5ஜி போன்களை தயாரிப்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. மலிவு விலையில் 5ஜி போன்களை தயாரிக்க ஜியோ முடிவு செய்துள்ளது.

3

ஸ்ரீபெரும்புதூர்: தந்தை நினைவிடத்திற்கு பிரியங்கா வருகை!

0
ஸ்ரீபெரும்புதூர்

ஸ்ரீபெரும்புதூர்: தந்தை நினைவிடத்திற்கு பிரியங்கா வருகை!

பிரியங்கா காந்தி உத்தரபிரதேச மாநிலக் கிழக்கு பகுதி பொதுச்செயலாளராகப் பொறுப்பெற்று உள்ளார்.

பிரியங்கா காந்தியை  கட்சி தொண்டர்கள் ஜிந்தாபாத் என்ற கோசத்துடன் பதவி ஏற்க வரவேற்றனர். பதவியேற்றப்பின்  தன்னுடைய அறைக்குச் சென்று கட்சிப் பணிகளை மேற்கொண்டார்.

இந்த நிலையில் பிரியங்காவும், ராகுலும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவர்களுடைய தந்தை ராஜீவ்காந்தியின் நினைவிடத்திற்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தனது தந்தைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அவரிடம் ஆசிபெற்று நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளனராம்.

3

கள்ளக்காதல்: ட்ரைவரை ஆசிட்டில் கரைத்து கொடூரக்கொலை செய்த டாக்டர்

0
கள்ளக்காதல்

கள்ளக்காதல்: விரூவை ஆசிட்டில் கரைத்து கொடூரக்கொலை செய்த டாக்டர்

சுனில் மந்திர் மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஹோசங்காபாத் நகரில் எலும்பு அறுவைச் சிகிச்சை மருத்துவராகப் பணிபுரிகிறார்.

இவரிடம் பிரேந்திர பச்சவுரி என்பவர் கார் ஓட்டுனராகப் பணிபுரிந்துள்ளார். அவருடைய மனைவியுடன் டாக்டர் கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார்.

டாக்டரும் ட்ரைவரின் மனைவியும் தகாத உறவில் ஈடுபட்டுள்ளனர். இருவரின் கள்ள உறவுக்கு ட்ரைவர் பிரேந்திர பச்சவுரி இடைஞ்சலாக இருந்துள்ளார்.

இதனால் ட்ரைவருக்கு மயக்கமருந்து கொடுத்த டாக்டர் உடனடியாக கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

ட்ரைவரின் உடலைத் துண்டு துண்டாக வெட்டியுள்ளார். வெட்டிய உடல் பாகங்களை ஆசிட் நிரப்பிய ட்ரம்மில் வைத்துள்ளார்.

நாட்கள் செல்லச் செல்ல உடல் அழுகி துர்நாற்றம் வீச ஆரம்பித்துவிட்டது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

500-க்கும் மேற்பட்ட துண்டுகள் வீட்டிற்குள் கிடப்பதைப் பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக டாக்டர் சுனில் மந்திரை கைது செய்தனர்.

இந்தக் கொலைக்கும் ட்ரைவரின் மனைவிக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

3

அஜித்தின் 21 வயது மகள்; எப்படி சாத்தியம்?

0
அஜித்தின் 21 வயது மகள்

அஜித்தின் 21 வயது மகள்; எப்படி சாத்தியம்?

அமிதாப்பச்சன் நடிப்பில் ஹிந்தியில் வெளியாகிய பிங்க் படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர்.

போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார். அஜித் இந்தப் படத்தில் வக்கீலாக நடிக்கிறார். பிங்க் படத்தில் இல்லாத இரண்டு கேரக்டர்களை தமிழில் புதிதாக சேர்த்துள்ளார் இயக்குனர் வினோத்.

அஜித் மனைவி மற்றும் மகள் என இரண்டு கதாப்பாத்திரம் தமிழுக்காக சேர்த்துள்ளனர். மனைவியாக வித்யாபாலன் நடிக்கிறார்.

மகளாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க உள்ளார். இதெப்படி சாத்தியம். இரண்டு கதாப்பாத்திரங்கள் புதிதாக சேர்த்தால் மெயின் கதை மாறிவிடாதா? எனக் குழப்பம் வரலாம்.

மகள் மற்றும் மனைவி கதாப்பாத்திரங்கள் கெஸ்ட்ரோல் போன்றே இருக்கும். அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் அதேவேளை பேசும் படியான கதாபாத்திரமாக உருவாக்கியுள்ளாராம் வினோத்.

ஸ்ரீதேவியின் மகளுக்கு பாலிவுட்டில் வரவேற்ப்பு இல்லை. எனவே அம்மாவைப்போல தமிழில் கலக்க முடிவு செய்துள்ளார்.

ஸ்ரீதேவி தமிழில் அறிமுகமாகி பாலிவுட் சென்றார். அவருடைய மகள் பாலிவுட்டில் அறிமுகமாகி தமிழுக்கு வருகிறார்.

3

இயற்கை முறையில் மருக்களை அகற்றுவது எப்படி?

0
இயற்கை முறையில்

இயற்கை முறையில் மருக்களை அகற்றுவது எப்படி

மனித உடலில் இருக்கும் மருக்களை அகற்ற முயன்று பல முறை தோல்வி அடைந்திருப்பீர்கள். நமது உடலில் இருக்கும் பப்பிலோமா வைரஸ் மூலமோ அல்லது நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாலோ மருக்கள் வரலாம். மருக்களை எளிய முறையில் அகற்றும் ஒரு சில வழிகளைப் பார்ப்போம்.

1. ஆப்பிள் சிடர் வினிகர்

அதிக அமிலங்களைக் கொண்ட இது எளிதாக மருக்களின் வளர்ச்சியை தடுத்துவிடும். காட்டன் துணியில் நன்கு நினைத்து மரு இருக்கும் இடத்தில் இரவு முழுவதும் கட்டி விடவும்.

இதைத் தொடர்ந்து 5 நாட்கள் செய்தால் ஆறாவது நாளில் எளிதாக மறுக்களை அகற்றி விடலாம்.

2. சோற்றுக் கற்றாழை

இதில் காணப்படும் மலிசிக் அமிலங்கள் அதிக நோய் எதிர்ப்பு தன்மை கொண்டவை. இவை எளிதில் மருக்களை அகற்றி உங்கள் தோலை சரி செய்து விடும். இதன் ஜெல்லை எடுத்து மருக்களில் தேய்த்தால் மட்டுமே போதுமானது.

3. சோடா உப்பு 

சோடா உப்பு மற்றும் ஆமணக்கு எண்ணையை கலந்து மருக்கள் இருக்கும் இடத்தில் தினமும் தடவினால் எளிதில் மருக்கள் மறைந்து விடும்.

4. வாழைப்பழத் தோல்

நீங்கள் வாழைப்பழம் விரும்பி உண்பீர்களா ? இனிமேல் தோலை கீழே போடவேண்டாம். உங்கள் உடலில் மருக்கள் இருந்தால் அதில் நன்கு தேய்க்கவும். வாழைப்பழத் தோலில் இருக்கும் நொதிகள் எளிதில் மருக்களை அகற்றி விடும்.

5. வெள்ளைப்பூண்டு

தோல்களில் ஏற்படும் நோய்களுக்கு பூண்டு ஒரு சிறந்த தீர்வாகும். இதில் காணப்படும் அல்லிசின் அனைத்து பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைகளை எளிதில் அகற்றும் தன்மை கொண்டவை.

பூண்டின் தோலை உரித்து மருக்களின் மேற்பகுதியில் தினமும் தேய்த்து வந்தால் எளிதில் மருக்கள் மறைந்து விடும்.

3

சவர்க்காரா? சர்காரா? நேரு சிலைவடிவில் அரங்கேறியது – கர்மா 3

0
சவர்க்காரா

சவர்க்காரா? சர்காரா? நேரு சிலைவடிவில் அரங்கேறியது – கர்மா 3

வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான் என்பதே கர்மாவின் சூத்திரம்.

2004-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின் போது, சுதந்திரப்போராட்ட தியாகியும் எழுத்தாளருமான விநாயக் தாமோதர் சவர்க்கார் நினைவாக, அந்தமான் ஜெயிலில் இருக்கும் நினைவுச்சின்னங்கள் அனைத்தும் எவ்வித காரணமுமின்றி சங்கர் ஐய்யர் என்பவர் அகற்றிவிட்டார்.

இந்தியாவிற்கு உழைத்த மாமனிதரின் நினைவுச்சின்னங்கள் அனைத்தும் அகற்றப்பட்டது மிகவும் வருத்தமான நிகழ்வாக அமைந்தது.

கர்மாவின் செயல்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சிலை கும்பமேளா திருவிழாவிற்காக அலகாபாத் நகர் சாலையின் நடுவில் இருந்து அகற்றப்பட்டது.

உத்திரப்பிரதேசத்தின் முதலமைச்சர் எவ்வித உள்நோக்கமும் கொண்டும் இதை அகற்றவில்லை.

கும்பமேளாவிற்கு வரும் பக்தர்களுக்கு வசதியாகவும் சாலையை மேலும் அகலப்படுத்தவு இந்த முடிவை எடுத்தார்.

ஆனால், இந்த சம்பத்தால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர் அந்த இடத்தில் கலகத்தை ஏற்படுத்தினர்.

அன்று காரணமின்றி, விநாயக் தாமோதர் சவர்க்கார் அவரின் நினைவுச்சின்னங்களை அகற்றிய காங்கிரசாருக்கு, இன்று தானாகவே நேருவின் சிலையை அகற்றவைத்து கர்மா விளையாடிவிட்டது.

3

நம்பர் வாங்க பணத்தால் போலீசாரை வாயடைக்க வைத்த தொழிலதிபர்

0

நம்பர் வாங்க பணத்தால் போலீசாரை வாயடைக்க வைத்த தொழிலதிபர்

கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் பாலகோபால். இவர் ஒரு கார் பிரியர்.

புதிய மாடல் கார் வாங்குவது மட்டுமல்ல அதற்கு நம்பர் வாங்குவதிலும் நம்பர் ஒன்னாக இருக்கக்கூடியவர்.

போர்ஸ்சி 718 பாக்ஸ்டர் நீல நிற ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றை வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்தார்.

இந்தக் காரின் விலை 85 லட்சம் ரூபாய் மட்டுமே. அதை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு மட்டுமே ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளார்.

மேலும் இதற்கு பேன்சி நம்பர் வாங்குவதற்காக தனியாக 31 லட்சம் வரை செலவு செய்துள்ளார்.

திருவனந்தபுர போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் பேன்சி எண்ணிற்கான ஏலம் நடைபெற்றது.

KL-01 CK-1 என்ற எண்ணிற்கு ஆரம்ப விலை 500 என நிர்ணயித்து ஏலம் துவங்கியது. பலரும் இந்த நம்பரை வாங்குவதற்கு போட்டிபோட்டனர்.

ஆனால் பாலகோபால் விடுவதாய் இல்லை. சளைக்காமல் ஏலத்தின் விலையை ஏற்றிக்கொண்டே போனார்.

25 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை மூன்று பேர் போட்டி போட்டனர். உடனே 31 லட்சம் என தடலாடியாக ஏலம் கேட்டார் பாலகோபால்.

மற்றவர்கள் அத்துடன் ஒதுங்கிக்கொண்டனர். கேரள வரலாற்றிலேயே இவ்வளவு தொகை கொடுத்து நம்பர் ப்ளேட் வாங்குவது இதுவே முதல்முறை என போலீசாரே வாயடைத்துப்போய் விட்டனர்.

இதற்கு முன்னரே, 2017-ல் KL-01 CB-01 என்ற எண்ணை ரூ.19 லட்சம் செலவு செய்து வாங்கினார். நம்பர் ஒன் எண் என்றால் இவர் விட்டுக்கொடுக்க மாட்டார் போல.

3

நடிகை நதியாவின் மகளா இப்படி உள்ளார்? – வீடியோ

0
நடிகை நதியாவின் மகளா

நடிகை நதியாவின் மகளா இப்படி உள்ளார்? என்ன ஒரு நடிப்பு!

நடிகை நதியா 1985-ல் வெளிவந்த பூவே பூச்சுட வா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பல படங்களில் நடிகையாக நடித்துள்ளார்.

மீண்டும் 2004 ஆண்டு எம்.குமரன் படத்தின் மூலம் தமிழ்சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்தார். 85-களில் எப்படி நடிகையாக வலம் வந்தாரோ அதோபோல் இன்னும் இளமையான தோற்றத்திலேயே உள்ளார்.

தற்பொழுது அவருடைய மகள் சனம் நடிகையாவதற்கு தன்னை தகுதிப்படுத்திக் கொண்டுள்ளார். கல்லூரி மேடை நாடகங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

அவருடைய புகைப்படங்கள் வீடியோக்கள் தற்பொழுது வைரலாகி வருகிறது. அம்மாவை அப்படியே நகல் எடுத்தது போன்று உள்ளார்.

52 வயதைக் கடந்துவிட்ட நடிகை நதியா இன்னும் 30 வயது பெண்மணி போன்றே உள்ளார். அவருக்கு 23 வயதில் மகள் உள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

சனம், மேடை நாடகத்தைப் பார்க்கும்போது அவருக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதை நன்கு அறிய முடிகிறது.

விரைவில் அவரை வெளித்திரையில் பார்க்கலாம்… நதியாவும் சேர்ந்து நடித்தால் இன்னும் அழகாக இருக்கும்.

 

3