Home Blog Page 312

நாகர்கோவில் பேருந்து நிலையத்தை அதிர வைத்த ஒரு பெண், 5 இளைஞர்கள்

0
நாகர்கோவில் பேருந்து
file image

நாகர்கோவில் பேருந்து நிலையத்தை அதிர வைத்த ஒரு பெண், 5 இளைஞர்கள்

நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் திடீரென ஒரு பெண் 5 இளைஞர்களுடன் நடனமாடினர். கானா பாலாவின் பாட்டு ஒலிக்க, படுபயங்கரமாய் குத்தாட்டம் நிகழ்ந்தது.

அங்கு பேருந்திற்காக காத்திருந்த பொதுமக்களுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. திடீரென அங்கு நடனம் அரங்கேறியதால், கூட்டம் கூடிவிட்டது.

பின்பு தான் விஷயம் தெரிந்தது. அது சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு விழாவிற்காக காவல்துறை சார்பில் ஏற்படுத்திய நிகழ்ச்சி என்பது.

பொதுமக்களின் கவனத்தை உடனடியாக ஈர்க்க கானா பாடலுடன் நிகழ்வைத் துவங்கியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் 30-தாவது சாலைப் பாதுகாப்பு வார விழா 10-ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.

இதனை முன்னிட்டே நேற்று நாகர்கோவில் பேருந்துநிலையத்தில் இந்த நிழ்ச்சியைப் போலீசார் நடத்தியுள்ளனர்.

ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதின் அவசியம், சாலை விதிமுறைகளை கடைபிடிப்பதன் கட்டாயம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

எப்படி பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்வது? என்பது குறித்து போலீசார் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு விளக்கமளித்தனர்.

3

போர்ப்ஸ் 30 பட்டியலில் இடம் பிடித்த விஜய் தேவரகொண்டா

0
போர்ப்ஸ் 30

போர்ப்ஸ் 30 பட்டியலில் இடம் பிடித்த விஜய் தேவரகொண்டா

2011-ஆம் ஆண்டு நுவ்விளா என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் விஜய் தேவரகொண்டா.  2017-ஆம் ஆண்டு வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் மிகப்பிரபலமானார்.

அர்ஜூன் ரெட்டி திரைப்படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, தமிழிலும் ஹிந்தியிலும் அப்படத்தை ரீமேக் செய்துள்ளனர்.

அதன்பிறகு வெளிவந்த கீதா கோவிந்தம் வசூலை அள்ளியது. சமீபத்தில் டோலிவுட்டில் அதிக வசூல் செய்த படம் இதுவாகும்.

2019-ஆம் ஆண்டு போர்ப்ஸ் வெளியிட்ட 30 நபர்கள் கொண்ட பட்டியலில் இடம் பெற்ற ஒரே நடிகர் விஜய் தேவரகொண்டா மட்டுமே.

யூடியூப்பர் பிரஜக்தா கோலி, கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, தடகள வீராங்கனை ஹிமா தாஸ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

சமீபத்தில் விஜய் தேவரகொண்டா அளித்த பேட்டியில் ‘எனக்கு 25 வயது இருக்கும் பொழுது 500 ரூபாய் குறைந்தபட்சத் தொகையை, என்னுடைய பேங்க் அக்கவுண்டில்  பராமரிக்கவில்லை. இதனால் ஆந்திரா பேங்க் என்னுடைய அக்கவுண்டை லாக் செய்தது.

என்னுடைய அப்பா 30 வயதிற்குள் செட்டில்லாகிவிட வேண்டும். அப்போது தான் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று என்னிடம் கூறினார் என அந்தப்பேட்டியில் தெரிவித்தார்.

அவர் கூறிய நான்கு வருடம் கழித்து இந்தியாவின் போர்ப்ஸ் 100, போர்ப்ஸ் 30 பேர் கொண்ட பட்டியலில் விஜய் தேவரகொண்டா இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரௌடி என்ற பெயரால் அவருடைய அனைத்து ரசிகர்களாலும் அழைக்கப்படுகிறார். மேலும் ரௌடி என்ற பெயரில் ஒரு வலைதளம் ஆரம்பித்து அதில் ரசிகர்களுடன் தொடர்பிலும் உள்ளார்.

தற்பொழுது டியர் காமரேட் படத்தில் கம்மியுனிசத்தை பரப்பும் மாணவன் ஆக நடித்துக்கொண்டு வருகிறார்.

3

முகத்தைப் பொலிவாக்கும் 60 செகண்ட் ரூல்

0
முகத்தைப் பொலிவாக்கும்

முகத்தைப் பொலிவாக்கும் 60 செகண்ட் ரூல்

இணையத்தில் வைரல் ஆகிக்கொண்டு இருக்கும் 60 செகண்ட் ரூல் முயற்சி செய்வதன் மூலம் உங்கள் முகத்தை எளிதாக பொலிவாக்கலாம்.

உங்கள் முகத்தை வெறும் கைகளை வைத்து எப்படி ஒரு நிமிடம் தேய்த்து கழுவ வேண்டும் என்ற வீடியோ கோல்டன் ஆர்‌எக்ஸ் யுடியூப் சேனலில் வெளியானது.

இந்த செய்முறை மூலம் நீங்கள் உங்கள் சருமத்தை எளிதில் மென்மையாக மாற்ற இயலும். முகத்தில் இருக்கும் பள்ளங்களைச் சரி செய்யவும் இயலும்.

60 செகண்ட் ரூல் செயல்படுத்தும் முறை

வழக்கம்போல் இருகைகளாலும் உங்கள் முகத்தை நன்றாக அலசவும். ஸ்பாஞ்ச், பிரஷ் போன்ற எதுவும் பயன்படுத்தக்கூடாது.

உங்கள் சருமத்திற்கு ஏற்ற கிரீம் (face wash cream) அது எந்த வித ஃபிரண்ட் ஆகவும் இருக்கலாம். சருமத்தில் அதை அப்ளை செய்து கிளாக் மற்றும் ஆண்டி கிளாக் திசையில் நன்கு தேய்க்கவும்.

மூக்கு, மூட்டுவாய் மற்றும் முடி வளரும் நெற்றிப்பகுதி போன்ற இடங்களில் நன்றாகத் தேய்க்கவும்.

ஒரு நாளுக்கு இரண்டு முறை 60 செகண்ட் ரூலை செயல்படுத்தினால் ஒரே வாரத்தில் நல்ல ரிசல்ட் கிடைக்கும். இந்த முறையில் பயனடைந்து ட்விட்டரில் #60secondrule  ஹஸ்டாக் செய்தவர்கள் ஏராளம்.

3

அதிகமாகக் குடித்தால் ஆண்மை மட்டுமல்ல, அதுவும் போய்விடும்!

0
அதிகமாகக் குடித்தால் ஆண்மை மட்டுமல்ல, அதுவும் போய்விடும்!

அதிகமாகக் குடித்தால் ஆண்மை மட்டுமல்ல, அதுவும் போய்விடும்!

ஆல்கஹால் என்பது ஒரு போதை தரும் பானம். பெரும்பான்மையானோர் விரும்பி அருந்துவார்கள் குறிப்பாக ஆண்கள்.

ஆல்கஹால் நமது உடலுக்கு எந்த அளவிற்கு கேடு விளைவிக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மையே.

அதிகமாக ஆல்கஹால் பருகுவதால் மூளையிலிருந்து ரத்தத்தின் சக்கரை அளவு அதிகரிப்பு, சிறுநீரக இழப்பு மற்றும் பல் சொத்தையும் ஏற்படுகிறது.

மாடரேட் டிரிங்கெர்ஸ் (moderarte drinkers)

ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒரு ட்ரிங் எடுத்துக்கொள்ளும் பெண்களும் இரண்டு ட்ரிங்க்கு குறைவாக எடுத்துக்கொள்ளும் ஆண்களும் மாடரேட் டிரிங்கெர்ஸ் என்று அழைக்கப்படுகின்றனர்.

பல் சொத்தை ஏற்படுதல்

தினமும் அதிகமாக குடிப்பதால் பல்லின் மேற்பகுதி அதிகமாக பாதிக்கப்பட்டு பல் சிதைவு ஏற்படுகிறது.

ஆல்கஹாலுடன் சோடா அல்லது பிற பானங்கள் சேர்ப்பதால் ஏற்படும் கலவையில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். இது பல்சொத்தை, பற்சிதைவை ஏற்படுத்தும்.

ஆல்கஹால் உடலில் சேரும் பொழுது, உடலில் உள்ள நீரின் அளவு குறையும். இதனால் வாய்யில் எச்சிலின் உற்பத்தி குறைந்து நாக்கு வறண்டு விடும். இதன் காரணமாகவே மது அருந்தினால் அடிக்கடி தாகம் ஏற்படுகிறது.

வாய் மற்றும் பல்லின் சுற்றுப்புற பகுதிகளில் காணப்படும் பாக்டீரியாக்களை அகற்ற எச்சில் தேவை. இவ்வாறு எச்சில் இல்லாத நேரத்தில் பல் கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்படையும்.

குரோமோஜென்ஸ் என்ற பொருள் தான் ஆல்கஹாலின் நிறத்திற்கு காரணம் ஆகும். அதிகமாக ஆல்கஹால் பகிருவதால் நீங்காத கரை பற்களின் மீது படிகிறது.

தீர்வு 

மது அருந்திய பிறகு பல்துலக்கினால் பல்லின் மீது படிந்துள்ள சர்க்கரையை அகற்ற முடியும்.

அதிகமாக தண்ணீர் பகிருவதால் உடலில் உள்ள நீரின் அளவை சமமாக கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம்.

நீங்கள் என்னதான் முயற்ச்சி செய்தாலும் அளவாக குடிக்காவிட்டால் உங்கள் உடலை பாதுகாக்க இயலாது.

3

இத மட்டும் இந்தியாவுல செஞ்சுடாதிங்க; ரேப் பண்ணிடுவாங்க!

0
இத மட்டும்

இத மட்டும் இந்தியாவுல செஞ்சுடாதிங்க; ரேப் பண்ணிடுவாங்க!

ஐஸ் பக்கெட் சேலஞ்ச், கிகி சேலஞ்ச், ப்ளூ சர்ட் சேலஞ்ச் இப்படி வெளிநாடுகளில் ஆரம்பிக்கப்படும் ஏதாவது ஒரு சேலஞ்ச் இந்தியாவில் பிரபலமாகி விடுகிறது.

மேலும் காதலர்தினம், ஏப்ரல் பூல், பிரண்ட்ஸ்ஷிப் டே இதுபோன்ற தினங்களும் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்தவையே.

அதேபோல் அமெரிக்காவில் காற்சட்டை அணியாமல் பயணம் செய்யும் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

சப்வே ரயிலில் பேண்ட் அணியாமல் பயணிக்க வேண்டும். இதில் ஏராளமானவர்கள் கீழே பேண்ட் அணியாமல் பேண்டியுடன் பயணிப்பார்கள்.

ஆண்களும், பெண்களும் என அனைவரும் இதில் பங்கேற்பார்கள். இது அந்த நாட்டில் சர்வ சாதாரமான ஒன்று.

அதை இந்தியாவில் செயல்படுத்த நினைத்தால் கற்பழிப்பு நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக டெல்லி போன்ற நகரங்களில் சாதாரணமாகவே கற்பழிப்புகள் அதிக அளவில் நடக்கின்றன.

இதுபோன்ற சம்வங்கள் அரங்கேறினால் இது மேலும் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி கலாச்சார சீரழிவு என்று கொலை செய்யக்கூட நேரிட வாய்ப்பு உண்டு.

கேரளாவில் கிஸ் ஆப் லவ் என்ற கலாச்சாரத்தை அறிமுகம் செய்ய முயன்று அது பெரிய போராட்டமாக மாறி வன்முறை வெடித்தது.

கிஸ் ஆப் லவ்வில் ஈடுபட்ட பலர் தாக்குதலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

3

ஏர்டெல்லும் அம்பேல்: மொத்தமாக தீர்த்துக்கட்டியது ஜியோ!

0
ஏர்டெல்லும் அம்பேல்

ஏர்டெல்லும் அம்பேல்: மொத்தமாக தீர்த்துக்கட்டியது ஜியோ!

இந்தியத் தொலைத்தொடர்பு வரலாற்றில் ஏர்டெல் பங்கு மிகவும் பெரியது. அவ்வளவு வாடிக்கையாளர்களையும் தன்பக்கம் இழுத்துக்கொண்ட மிகப்பெரிய நெட்வொர்க்.

போன் என்றால் நோக்கியா, சிம் என்றால் ஏர்டெல் என இந்த இரண்டு நிறுவனங்களும் இந்தியாவைத் தன்வசப் படுத்தியிருந்தனர்.

குறிப்பாக ஏர்டெல்லை இந்தியாவின் மூலைமுடுக்கெங்கும் கொண்டு சென்றது ஏ.ஆர்.ரகுமானின் இசையில் உருவான விளம்பரம்.

ஆண்ட்ராய்டு வந்தது நோக்கியா இருக்கும் இடம் தெரியாமல் போனது. ஜியோ வந்தது 2 நிறுவனங்கள் முற்றிலும் ஊத்தி மூடிப்பட்டு விட்டது.

எஞ்சி இருக்கும் நிறுவனங்களும் உயிர் பிழைக்குமோ? பிழைக்காதோ? என ஐசியு நோயாளி ரேஞ்சுக்கு சென்றுவிட்டது.

குறிப்பாக ஏர்டெல்.  3வது காலாண்டில் ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் 45 மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்துவிட்டது.

ஏர்டெல்லின் ஆண்டு வருமானமும் படுபாதாளத்திற்கு சென்றுவிட்டது. குறிப்பாக ஏர்டெல் கட்டுப்பாட்டில் இருந்த ரயில்வே இணையச் சேவையை ஜியோ கைபற்றிவிட்டது.

ரயில்வேயில் இருந்து ஏர்டெல்லை மொத்தமாக தீர்த்துக்கட்டியுள்ளது. இதனால் 100 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

ரயில்வே மூலம் ஏர்டெல்லுக்கு, ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. தற்பொழுது அதுவும் காலி. மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் ஏர்டெல் பலத்த நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

விரைவில் இந்த நிறுவனமும் மூடுவிழா கண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

3

லதாவைத் தீர்த்துக்கட்டிய சைக்கோ வேலு; உருட்டுக்கட்டையுடன் உறவினர்கள்

0
லதாவைத் தீர்த்துக்கட்டிய சைக்கோ
இடதுபுறம்: சைக்கோ வேலுச்சாமி. வலதுபுறம்: கோப்புப்படம்

லதாவைத் தீர்த்துக்கட்டிய சைக்கோ வேலு; உருட்டுக்கட்டையுடன் உறவினர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் லதா-வேலுச்சாமி தம்பதியினர்.

இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளது. கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு நீண்ட நாட்களாக இருந்துள்ளது.

இதனால் லதா கொண்ணகட்டு பட்டியில் அவருடைய அம்மா வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டார்.

பிள்ளைகளைப் படிக்க வைப்பதற்காக விராலிமலை பேன்சி ஸ்டோரில் வேலை செய்து வந்துள்ளார் லதா. தினமும் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு கடைக்கு வேலைக்குச் சென்றுவிடுவார்.

லதா பிரிந்து சென்றாலும், சைக்கோ கணவன் வேலு விடுவதாய் இல்லை. நேராக லதா வேலை செய்யும் கடைக்குள் புகுந்து சட்டையிட்டுள்ளான்.

பட்டப் பகலிலேயே ஆள் நடமாட்டமுள்ள பேருந்து நிலையத்தில் லதாவை சரமாரியாகக் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டான்.

கொலை செய்தவுடன் நேராக போலீஸ் நிலையத்தில் சரணடைந்துவிட்டான். சிலமணி நேரங்களில் வேலுவுக்கு கைவிரல் உடைந்துவிட்டது என மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

லதாவின் உறவினர்கள் வேலுவை அடித்துநொறுக்க உருட்டுக்கட்டையுடன் மருத்துவமனைக்குள் நுழைந்துவிட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.

போலீசார் உறவினர்களைத் தடுத்து நிறுத்திவிட்டு, வேலுவை இலுப்பூர் காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

தாய் இறந்த செய்தி கேட்டு, பள்ளியில் இருந்து வந்த இருமகன்களும் கட்டிப்பிடித்து அழுதது அங்கிருந்தவர்களின் நெஞ்சை உறைய வைத்துவிட்டது.

3

அந்த நடிகைக்கு இப்படி ஒரு நோயா? மரணத்தின் பிடியில் இருந்து உயிர் தப்பினார்

0
அந்த நடிகைக்கு

அந்த நடிகைக்கு இப்படி ஒரு நோயா? மரணத்தின் பிடியில் இருந்து உயிர் தப்பினார்

பம்பாய், காதலர் தினம் படத்தின் மூலம் தமிழ் அறிமுகமான நடிகை சோனாலி பிந்த்ரே கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டார்.

அமெரிக்காவிற்கு சென்று மருத்துவ சிகிச்சை செய்துகொண்டார். மொட்டைத் தலையுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவேற்றினர்.

தற்பொழுது கேன்சர் நோய் முற்றிலும் குணமடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மீண்டும் சினிமாவில் நடிக்கத் தயாராகிவிட்டாராம்.

3

சிபிஐயா? போலீசா?; மோடியா? லேடியா? – கெல்கத்தா களோபரம்

0
சிபிஐயா? போலீசா?

சிபிஐயா? போலீசா?; மோடியா? லேடியா? – கெல்கத்தா களோபரம்

கொல்கத்தா கமிஷனர் ராஜிவ்குமாரை திரோஸ் வேலி ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்ய சிபிஐ முயன்றது.

ஆனால் அதற்குள் சிபிஐ அதிகாரிகள் 15 பேரை கமிஷனர் உத்தரவின் பேரில் கொல்கத்தா போலீஸ் கைது செய்துவிட்டனர்.

மேலும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சிபிஐ அதிகாரிகளையும் கைது செய்ய போலீசார் மும்முரமாகினர்.

இவை அனைத்தும் அம்மாநில முதல்வர் மம்தா பேனர்ஜியின் சம்மதத்துடன் நடந்துள்ளது.

இந்த அசாதாரண சூழலில் சிபிஐ அதிகாரிகளை காக்க மத்திய அரசு, மேற்கு வங்கம் முழுவதும் உள்ள சிபிஐ அலுவலங்களில் மத்திய ரிசர்வ் போலீசாரை குவித்துள்ளது.

மத்திய அரசு அலுவலகங்களிலும் சிஆர்பிஎஃப் படை குவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் vs சிபிஐ என்று இருந்த பிரச்சனை ‘லேடி vs மோடி’ என மாறிவிட்டது.

மத்திய அரசின் பவரும், மாநில அரசின் பவரும் மேற்குவங்க மாநிலத்தையே களோபரமாக மாற்றிவிட்டது.

மாநில அரசை கலைக்க மத்திய அரசு முயன்று வருவதாக மம்தா பேனர்ஜி குற்றம் சுமத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

129 இந்திய மாணவ, மாணவிகளை வலைவிரித்துப் பிடித்த அமெரிக்கா

0
129 இந்திய மாணவ

129 இந்திய மாணவ, மாணவிகளை வலைவிரித்துப் பிடித்த அமெரிக்கா

அமெரிக்காவில் போலியாக குடியேறும் நபர்கள் அல்லது குடியேற விரும்பும் நபர்களை கண்டறிய அமெரிக்கா சிறப்புப் பிரிவை வைத்துள்ளது.

இந்த அமைப்பின் மூலம், போலியான கல்லூரியைத் துவங்கி வெளிநாட்டில் உள்ளவர்களின் பார்வைக்கு விடும்.

அமெரிக்காவில் மாணவ விசாவில் சட்டவிரோதமாக குடியேறலாம் என ஆசை வார்த்தை கூறி இருக்கும்.

சம்பந்தப்பட்ட இணையதளமும், பார்த்தவுடன் நம்பும் படியாக வகுப்பறை, ஆசிரியர்கள், மாணவர்கள் என புகைப்படங்களுடன் இருக்கும்.

இது உண்மையான, போலிஏஜெண்டுகளின் வேலை என நம்பி அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக சென்ற 129 இந்திய மாணவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

காரணம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டு உள்ளனர். அதை நடத்துவதே அமெரிக்கா தான் என விளக்கமும் கொடுத்துள்ளனர்.

இந்திய அரசு இதற்கு கடும் கண்டம் தெரிவித்துள்ளது. மாணவர்களை யாரோ தவறாக வழிநடத்தி பதிவுசெய்ய வைத்திருக்கலாம் எனக்கூறியுள்ளது.

மேலும், இந்திய தூதர் மாணவர்களைச் சந்திக்க அனுமதியளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளது.

இனியாவது எந்த நாட்டிற்கும் மக்கள் சட்டவிரோதமாக நுழையும் எண்ணத்தை கைவிடவேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

3