Home Blog Page 51

ஜல்லிக்கட்டு காளையை கொலை செய்த இளைஞர்கள் கைது: கிருஷ்ணகிரி

ஜல்லிக்கட்டு காளையை கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் ஜல்லிக்கட்டு காளையை கொலை செய்த காரணத்திற்காக இரண்டு இளைஞர்கள் கைது.

பாப்பாரப்பட்டியை இளைஞர்கள் கைது

காளையை கொலை செய்தவர்கள் பாப்பாரப்பட்டியை சேர்ந்த கே. லோகேஷ், 23, மற்றும் எம். பெரியசாமி, 19 என தெரியவந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை தற்போது இவர்களை கைது செய்துள்ளனர்.

காளையை  உடற்கூறு ஆய்வு செய்தனர்

சனிக்கிழமை கால்நடை மருத்துவர்களின் குழு கொல்லப்பட்ட ஜல்லிக்கட்டு காளையை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்தனர்.

காளை காயங்களுடனும், கொம்புகள் உடைக்கப்பட்டு இறந்து கிடந்தது

காவல் துறை தெரிவிக்கையில், இறந்த ஜல்லிக்கட்டு காளையின் சொந்தகாரரான சென்னசன்றத்தின் கிராம நிர்வாக அலுவலர் கே. வெற்றிவேல் ஜூன் 5ந்தில் தனது காளை மாடு வாயில் காயங்களுடனும், கொம்புகள் உடைக்கப்பட்ட நிலையிலும் தனது வயலில் இறந்து கிடந்ததை கண்டுள்ளார்.

அன்றே இறந்த மாட்டை புதைத்துள்ளார்

மாடு மரத்தில் சென்று முட்டிக்கொண்டதால் ஏற்பட்ட காயத்தால் இறந்துள்ளது என தவறாக எண்ணிய கே. வெற்றிவேல் அன்றே இறந்த மாட்டை புதைத்துள்ளார்.

டிக் டாக் காணொளி

5 நாட்கள் கழித்து டிக் டாக்கில் எதேச்சையாக சில நபர்கள் குடிபோதையில் அந்த மாட்டை துன்புறுத்துவது போன்ற காணொளியை காண நேர்ந்தது.

மரத்தில் மோதிய போது ஏற்பட்ட காயம்

இதனை அடுத்து குடித்துவிட்டு துன்புறுத்துபவர்களிடமிருந்து தப்பிக்க மரத்தில் மோதிய போது ஏற்பட்ட காயத்தால் அந்த காளை மாடு இறந்துள்ளது தெரியவந்தது.

காவல் நிலையத்தில் புகார்

இதை அடுத்த கே. வெற்றிவேல் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

ஜல்லிகட்டு விளையாட்டுகளில் பங்கெடுத்த காளை

இவர் இந்த காளையை இரண்டு வருடங்களாக வளர்த்து வருபவர். சில ஜல்லிகட்டு விளையாட்டுகளிலும் இறந்த காளை பங்கெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

3

‘தோனி’ திரைப்படத்தின் கதாநாயகன் ‘சுஷாந்த்’ தற்கொலை, இரசிகர்கள் அதிர்ச்சி

‘தோனி’ திரைப்படத்தின் கதாநாயகன் 'சுஷாந்த்' தற்கொலை

சினிமாவில் பிரபல கிரிக்கெட் வீரர் தோனியாக நடித்து புகழ் பெற்ற, ‘தோனி’ திரைப்படத்தின் கதாநாயகன் ‘சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி கிரிக்கெட் இரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

‘தோனி’ திரைப்படத்தின் கதாநாயகன் ‘சுஷாந்த்’

34 வயதாகும் சுஷாந்த், கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுத்த ‘தோனி’ திரைப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்ததன் மூலம் பெரிய அளவில் பிரபலமடைந்தார்.

மும்பையில் தனது வீட்டில் தற்கொலை

பீகாரில் பிறந்த இவரது இயற்பெயர் ‘சுஷாந்த் சிங்க் ராஜ்புட்’ ஆகும். மும்பையில் வசித்துவந்துள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

பாலிவுட்டின் கமர்ஷியல் வெற்றி படங்களில் நடித்தவர்

பாலிவுட்டில் 2013இல் நடிகனாக தனது வாழ்க்கையை துவங்கியவர் சுஷாந்த் என்ற ‘ரீல்’ தோனி. சுஷாந்த் பாலிவுட்டில் பலவிதமான கமர்ஷியல் வெற்றி படங்களில் கதானாயகனாக நடித்துள்ளார்.

பிரபலங்கள் மற்றும் இரசிகர்கள் இரங்கல் 

இவரது இறப்பிற்கு இரசிகர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள், சச்சின், அஸ்வின், இர்பான் பதான், சுரேஷ் ரெய்னா போன்ற கிரிக்கெட் வீரர்களும் இரங்கல் தெரிவித்தபடி உள்ளனர்.

கிரிக்கெட் வீரர் தோனியின் இரசிகர்கள் மத்தியில் இவரது இறப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தோனி போன்ற தன்னம்பிக்கை மிகுந்த கதாபாத்திரத்தில் நடித்த இவரது இந்த முடிவு நம்பமுடியாதது போல் உள்ளது.

3

தல- தளபதிக்கு 50 கோடிக்கு மேல் வசூல் தந்த படங்கள்

0
தல- தளபதிக்கு கோடிக்கு கோடிக்கு மேல் வசூல் தந்த படங்கள்

தல- தளபதிக்கு 50 கோடிக்கு மேல் வசூல் தந்த படங்கள் என்ன என்ன தெரியுமா? தமிழ் திரையுலகில் அதிகப்படியான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்கள் அஜித்-விஜய்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நாயகர்களாக இருந்துவரும் அஜித்-விஜய் இருவருமே தல-தளபதி என தங்களின் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்களின் ரசிகர்களுக்கு இவர்கள் இதுவரை நடித்த படங்கள், தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படங்கள் என அனைத்தும் அத்துப்படி. இவர்கள் தற்போது பல கோடிகளை தங்கள் சம்பளமாக பெறுகின்றனர்.

ஆனால் இவர்களுக்கு முதன் முதலில் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை கொடுத்த திரைப்படங்கள் என்ன என்பது தெரியுமா? அஜித்தின் திரைப்பயணத்தில் முதன் முறையாக ரூ 50 கோடி வசூலை கடந்த படம் ‘மங்காத்தா’ தான்.

இப்படம் தான் அஜித் திரைப்பயணத்தில் இது வரை வந்த படங்களில் அதிக வசூல், இப்படம் ரூ 80 கோடி வரை வசூல் செய்தது.

வேலாயுதம் படம் தான் ரூ 60 கோடி வரை வசூல் செய்து விஜய் திரைப்பயணத்தில் முதன் முறையாக ரூ 50 கோடியை தாண்டிய படமாகும்.

3

கேரளாவில் ‘கொரோனா தேவி’ ஆலயம்

0
கேரளாவில் 'கொரோனா தேவி' ஆலயம்

கேரளாவில் ‘கொரோனா தேவி’ ஆலயம் கட்டப்பட்டுள்ளது. கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேலாவில் கொரோனாவிற்கு ஒரு ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

கேரளா: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசிற்கு பக்தர் ஒருவர் கோவில் கட்டி வழிபட்டு வரும் சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயற்கை எழில்கொஞ்சும் கேரளா மாநிலத்தில் கொட்டிக் கிடக்கும் இயற்கை அழகைக் காண கோடி கண்கள் வேண்டும். ‘கொரோனா’ இந்த பெயரைக் கேட்டால் உலகமே நடுங்குகிறது.

ஆனால் இந்த கொரோனா வைரசுக்கு கோவில் கட்டி கொரோனாவின் உருவத்தை சிலையாக வடித்து பக்தர் ஒருவர் வழிபாட்டு வருகிறார். இங்கு நாள்தோறும் பூஜைகளும் நடைபெறுகின்றன.

கேரளாவின் கொல்லம் பகுதியிலிருந்து 44 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடக்கல் என்ற கிராமத்தில் தான் இந்த ’கொரோனா தேவி’ ஆலயம் அமைந்துள்ளது.

இதனை அணிலன் என்பவர் கட்டியுள்ளார். கோவில்கள் மூடப்பட்டுள்ள இந்த ஊரடங்கு சமயத்தில் மக்கள் வீடுகளிலேயே தங்கள் வேண்டுதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கோவில் குறித்து அனிலன் கூறுகையில் ௩௩ கோடி ஹிந்து கடவுள்களுடன் தற்போது இந்த கடவுளும் இணைந்துள்ளார். கேரளாவில் பெரியம்மைக்கு என ஏற்கனவே கோவில் ஒன்று உள்ளது.

தொற்றுநோய்க்கு எதிராக போராடிவரும் அனைவரின் நலவாழ்வு மற்றும் நலனுக்காக இந்த தெய்வத்திற்கு பூஜைகள் நடத்தப்படுகின்றன. எங்கள் கோவிலில் தரிசனம் இல்லை.

எனினும் கொரோனா தேவியின் பிரசாதம் பக்தர்களுக்கு அஞ்சல் மூலம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு வைரஸை தேவி என்று வணங்குவது எங்களுக்கு புதிய வழக்கம் கிடையாது.

சுகாதாரப் பணியாளர்கள், விஞ்ஞானிகள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் உள்ளிட்ட கொரோனா எதிர்ப்பு வீரர்களுக்காக இந்த கோவில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

பிறருக்கு உதவி செய்பவர்களின் பெயர்களில் பூஜைகள் நடத்தப்படும். பிரசாதம் வேண்டுமெனில் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். பூஜைகள் மற்றும் பிரசாதங்களுக்கு நான் பணம் வசூலிக்க மாட்டேன்.

இது யாரையும் கேலி செய்யும் முயற்சி அல்ல. அனைத்து பூஜைகளும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்யப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

3

நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா, 1989 புதிய கொரோனா தொற்றுகள்

1989 புதிய கொரோனா தொற்றுகள்

சென்னை: சனிக்கிழமை தமிழ்நாட்டில் 1989 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டன. தமிழ்நாட்டின் மொத்த கொரோனா எண்ணிக்கை 42,687 ஆக உள்ளது மற்றும் தமிழ்நாட்டின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 397.

ஜுன் 8 வரை சென்னையில் 236 பேர் கொரோனாவால் இறந்தனர்

ஜுன் 8 வரை சென்னையில் மட்டும் 236 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர் என தெரிகிறது. மேலும் 7 பேரின் இறப்பு சனிக்கிழமை கூடுதலாக சேர்கப்பட்டது.

கிட்னி நோயாளிகள்  அரசு மருத்துவமனைக்கு வருவது அதிகரிப்பு

“ கிட்னி பாதிப்படைந்த கொரோனா நோயாளிகள் பல பேர் தனியார் மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு திருப்பி விடப்படுகின்றனர்.3 டியாலஸிஸ் இயந்திரங்கள் தற்போது உள்ளன மேலும் 10 விரைவில் வாங்கப்படும்,” என ஸ்டான்லி மருத்துவ கல்லூரியின் தலைவர்(டீன்) தெரிவித்தார்.

சென்னையில் மொத்த கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 30,444

சனிக்கிழமை தமிழகத்தின் கொரோனா பாதிப்பாளர்களில் 1,487 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். சென்னையில் மட்டும் மொத்த கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 30,444 ஆக உள்ளது.

சென்னையின் அருகாமையில் உள்ள திருவள்ளூரில் 78 கொரோனா தொற்றுகளும், காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் சேர்த்து 170 தொற்றுகளும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் 50 புதிய கொரோனா தொற்றுகளும், தூத்துக்குடி மற்றும் மதுரையில் 30 மற்றும் 15 புதிய தொற்றுகளும் சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

3

உலகளவில் டிரெண்டான THALAPATHYBdayFestCDP!

0
THALAPATHYBdayFestCDP

உலகளவில் டிரெண்டான THALAPATHYBdayFestCDP! விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு உலகளவில் THALAPATHYBdayFestCDP என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் 2 ஆவது இடத்தில் டிரெண்டாகி வருகிறது.

THALAPATHYBdayFestCDP என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் உலகளவில் டிரெண்டாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தளபதி விஜய். தொடர்ந்து குடும்பக் கதையை மையப்படுத்திய படங்களில் நடித்து வருகிறார்.

பெரும்பாலும் இவரது படங்களில் குழந்தைகளை கவரும் காட்சிகளும், அரசியல் கட்சிகளை விமர்சிக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கும். அரசியல் தொடர்பான காட்சிகள் இருப்பதாலோ என்னவோ படம் சர்ச்சைக்குப் பிறகே வெளியாகிறது.

ஆனால், மாஸ்டர் படத்தில் கொஞ்சம் விதிவிலக்கு ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை, படப்பிடிப்பு தளபத்தில் பாஜகவினர் போராட்டம் என்று பல பிரச்சனைகளை கடந்து வந்தது.

சரி, பிரச்சனைகள் எல்லாம் முடிந்து படம் அறிவித்தபடி கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என்று பார்த்தால் அதுக்குள்ளாக கொரோனா வைரஸ் நாட்டையே உலுக்கியது.

கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதோடு, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. மேலும், லாக்டவுனும் அமல்படுத்தப்பட்டது. தற்போது, 5ஆவது ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கிறது.

இந்த நிலையில், வரும் 22 ஆம் தேதி தளபதி விஜய் தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். விஜய் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், ரசிகர்கள், பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வழக்கம்.

ஆனால், தற்போது நாட்டையே உலுக்கிய கொரோனா வைரஸ் காரணமாக சினிமா தொழிலாளர்கள் முதல் சாதாரண நடுத்தர ஜனங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஏராளமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று தளபதி விஜய் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எனினும், டுவிட்டரில் THALAPATHYBdayFestCDP என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. ஆம், உலகளவில் THALAPATHYBdayFestCDP இந்த ஹேஷ்டேக் 2ஆவது இடத்தில் டிரெண்டாகி வருகிறது.

இந்த ஹேஷ்டேக் மூலம் விஜய் போஸ்டர் ஒன்றை உருவாக்கி ரசிகர்கள் அதனை டிரெண்டாக்கி வருகின்றனர். விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படம் குறித்து முக்கியமான அறிவிப்பு அல்லது மாஸ்டர் டிரைலர் குறித்து அப்டேட் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் பிறந்தநாளுக்கு இன்னும் 9 நாட்கள் உள்ள நிலையில், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக நடிகர் அர்ஜூன் தாஸ் கூறுகையில், மாஸ்டர் டிரைலரை 6 முறை பார்த்ததாகவும், மரண மாஸாக இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.

ஆகையால், இந்தப் பிறந்தநாள் மாஸ்டர் டிரைலர் பிறந்தநாளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன் சென்ற காரில் சரக்கு பாட்டிகள் பறிமுதல்!

0
Ramya Krishnan

நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன் சென்ற காரில் சரக்கு பாட்டிகள் பறிமுதல்! நடிகை ரம்யா கிருஷ்ணன் சென்ற காரில் 100க்கும் அதிகமான மதுமான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக செய்தி வெளியாகி வருகிறது.

ரம்யா கிருஷ்ணன் சென்ற காரில் 100க்கும் அதிகமான மதுபான பாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்துள்ளவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். ஆனால், என்ன ரஜினிகாந்த் நடித்த படையப்பா படம் இன்றும் அவரது கதாபாத்திரத்தை பிரதிபலிக்கும் படமாக அமைந்துள்ளது.

தற்போது பாகுபலி படம் மூலம் உலகளவில் பிரபலமாகிவிட்டார். ராஜமாதா சிவகாமி என்ற கதாபாத்திரம் இன்று அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்,

சென்னையைத் தவிர மற்ற பகுதிகளில் மதுபானக் கடைகள் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. மதுபிரியர்கள், சென்னையைத் தாண்டி சென்று மதுபாட்டிகள் வாங்கி வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக, சோதனைச் சாவடிகளில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில், முட்டுக்காட்டில் உள்ள சோதனைச் சாவடியில் வாகனசோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அந்த காரில், நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரி வினயா கிருஷ்ணன் ஆகியோர் இருந்துள்ளனர்.

சோதனையின் போது அந்த காரில் 96 பீர் பாட்டில்கள், 8 மதுபாட்டிகள் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்லது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்த கார் டிரைவரை கைது செய்து பின்னர், சொந்த ஜாமீனில் விடுவித்துள்ளனர்.

ஆனால், ரம்யா கிருஷ்ணன் வந்த கார், அவரது சொந்த காரா? இல்லை வாடகை காரா? என்பது குறித்து போலீசார் எந்த தகவலும் வெளியிடவில்லை.

3

இயக்குநர் பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார்!

0
Cinematographer Kannan Died

Cinematographer Kannan Died; இயக்குநர் பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் காலமானார்! இயக்குநர் பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான கண்ணன் இன்று பிறபகல் 2 மணியளவில் காலமானார்.

ஒளிப்பதிவாளர் கண்ணன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று பிற்பகல் உயிரிழந்தார்.

இயக்குநர் பீம்சிங்கின் மகன் ஒளிப்பதிவாளர் கண்ணன். இவர், தனது தந்தை பீம்சிங் இயக்கத்தில் வந்த ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

இப்படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வந்த நிழல்கள் படத்தில் ஒளிப்பதிவாளராக இருந்துள்ளார்.

அதன் பிறகு அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், காதல் ஓவியம், வாலிபமே வா வா, புதுமைப் பெண், முதல் மரியாதை, ஒரு கைதியின் டைரி, கடலோர கவிதைகள், வேதம் புதிதி, கொடி பறக்குது, சொல்ல துடிக்குது மனசு, சூரசம்ஹாரம், என் உயிர் தோழன், கிழக்கு சீமையிலே, லூட்டி,

சேனாதிபதி, பசும்பொன், நாடோடி தென்றல், கருத்தம்மா, பிரியங்கா, ஆயுள் ரேகை, பொம்மலாட்டம், உழியின் ஓசை, கடல் பூக்கள், கேப்டன் மகள், கண்களால் கைது செய் என்று ஏராளமான தமிழ் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

இதில், பெரும்பாலும் பாரதிராஜா இயக்கத்தில் வந்த படங்கள். ஆதலால், பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக கண்ணன் கருதப்பட்டார்.

தமிழைத் தவிர, மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எனினும், அது பலனளிக்கவில்லை என்பதால், தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் 2 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 69. கண்ணனுக்கு லெனின் என்ற ஒரு சகோதரரும், காஞ்சனா என்ற மனைவியும் இருக்கின்றனர்.

மேலும், ஜனனி, மதுமதி ஆகிய இரு மகள்கள் இருக்கின்றனர். ஜனனி ஐடி துறையில் பணியாற்றும் தினேஷ் ஜெயபாலன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு தியாரா என்ற ஒரு மகள் இருக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்ணனின் உடல் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, நாளை ஜூன் 14 ஆம் தேதி இறுதிச் சடங்குகள் நடைபெற இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் கண்ணன் மறைவுக்கு, திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

3

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் எடுத்த சூரி!

0
Soori Teaching Video

Soori Teaching Video; பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் எடுத்த சூரி! மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நடிகர் சூரி பாடம் நடத்தியுள்ளார்.

ஆன்லைன் மூலம் நடிகர் சூரி பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுத்துள்ளார்.

நாடு முழவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக 5 ஆம் கட்ட ஊரடங்கு முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் பல்வேறு துறையினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பாவி ஜனங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

இதன் விளைவாக பாதிக்கப்பட்டுள்ள சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், சினிமா பிரபலங்கள் பலரும் நிதியுதவி, பொருளுதவி அளித்துள்ளனர்.

லாக்டவுன் காரணமாக சினிமா பிரபலங்களும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். அவர்கள், தங்களது குடும்பத்தோடு நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகர் சூரி, தனது மகன், மகளோடு நேரத்தை செலவிடும் வீடியோவை வெளியிட்டு வந்தார்.

மேலும், நிவாரண உதவிகள் வழங்குவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது என ஊரங்கிலும் பிஸியாக இயங்கி வருகிறார்.

அந்த வகையில், மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தியுள்ளார். ஆம், பாடங்களை நினைவூட்டும் வகையில், சிரிப்போம், சிந்திப்போம் என்ற தலைப்பில் சூரி மாணவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

கல்வியின் முக்கியத்துவம் குறித்து, விடா முயற்சி குறித்தும் நகைச்சுவையாக பேசியுள்ளார்.

நகைச்சுவையாக இருந்த இந்த நிகழ்வை அதிகாரிகளும் கண்டு ரசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

பாகிஸ்தான்: பிரபல முன்னாள் கிரிகெட் வீரர் சாகித் அஃப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா தொற்று

பாகிஸ்தானின் பிரபல முன்னாள் கிரிகெட் வீரர் சாகித் அஃப்ரிடிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ட்விட்டர் பக்கத்தில்

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில் வியாழக் கிழமை முதல் தான் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது தனக்கு கொரோனா இறுப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது எனவும், தனக்காக பிராத்தனை செய்யும்படி தனது இரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார்.

கொரோனா இருப்பது உறுதி

“நான் வியாழக்கிழமை முதல் உடல் நலம் குறைந்துள்ளதை உணர்ந்தேன்; உடல் வலி அதிகமாக இருந்தது. உடல் பரிசோதனை செய்ததில் எதிர்பாராத விதமாக எனக்கு கொரோனா இருப்பது உறுதி ஆகி உள்ளது. விரைவில் குணமடைய அனைவரது பிராத்தனையும் தேவை”, என தனது ட்விட்டர் பக்கத்தில் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் மூன்றாவது கிரிக்கெட் வீரர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களில் மூன்றாவது நபராக அஃப்ரிடி கருதப்படுகிறார்.

அஃப்ரிடி தனது அதிரடி ஆட்டத்தாலும் நல்ல நடத்தையாலும் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் இரசிகர்களை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

3