Home Blog Page 52

சந்தோஷி வழிபாடு: விநாயகருக்கு மகள் உள்ளாரா? யார் அவரின் மகள்? எப்படி அவரை பூஜிப்பது?

0

சந்தோஷி வழிபாடு : விநாயகருக்கு பிறந்த மகள் கதை. கன்னிகள் வெள்ளிக்கிழமை விரதமிருந்தால் திருமணம் நடக்கும். சந்தோசம் வழங்கும் சந்தோஷி மாதா வழிபாடு.

மூல முதற்பொருளாக விளங்குகின்ற விநாயகர் வழிபாடு இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ளது. நமது தமிழகத்தில் பெரும்பாலும் அவரை பிரம்மச்சாரியகவே வழிபடுகின்றனர்.

ஆனால் இந்தியாவின் வட மாநிலங்களில் அவர் குடும்பத்துடன் காட்சி தருகிறார். சித்தி, புத்தி என்ற இரு மனைவிகளும். சுபம், லாபம் என்ற இரண்டு மகன்களும் அவருக்கு உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படி தம்பதி சமேதராக குடும்பத்துடன் உள்ள காட்சி தரும் விநாயகப் பெருமானிற்கு மகளும் உண்டு. இதனை பற்றி நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அண்டம் முழுதும் தனது பேழை வயிற்றில் அடக்கிய கண நாதனின் மகளே “சந்தோஷி மாதா” ஆவாள்.

சந்தோஷி மாதா பிறப்பு

ஒருமுறை விநாயகர் தனது மனைவி மற்றும் மகன்களுடன் பூமிக்கு வந்திருந்தார். அந்த நாள் பாரத தேசம் முழுதும் ரக்‌ஷா பந்தன் என்கிற விழா கொண்டாடப்பட்டு வந்தது.

அப்போது அனைத்து சகோதரிகளும் தம் சகோதரனுக்கு கயிறு கட்டி, பரிசுகளை பரிமாறி கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதனை கண்டு சுப தேவன் மற்றும் லாப தேவனுக்கு தமக்கும் சகோதரி வேண்டும் என்ற எண்ணம் தோன்றி தனது தந்தையிடம் வேண்டினர். மகன்களின் வேண்டுதலை ஏற்று விநாயகர் ஒரு மகளை பிறக்கச் செய்தார்.

துர்கா, லட்சுமி, சரஸ்வதியின் குணங்கள் ஒரு சேர பெற்ற மகளை தோற்றுவித்தார். அவளே சந்தோஷி மாதா ஆவாள். அனைவரின் கவலைகளை போக்கி மகிழ்ச்சியை வழங்கும் அம்பிகை ஆதலால் சந்தோஷி என்ற நாமம் கொண்டாள்.

நான்கு கரங்களை உடையவள். வலது மேற்கரத்தில் வாளும் கீழ்கரத்தில் அபயமும் தாங்கி, இடது மேற் கரத்தில் சூலமும் கீழ் கரத்தில் பொற்கிண்ணம் தாங்கியவள்.

பூர்ண சந்திரனை போல் ஒளி பிரகாசமான திருமுகத்தை கொண்டு பத்மாசனத்தில் அமர்ந்தவள். இவளை வழிபடுவதால் விநாயகரையும் சேர்த்து பூஜிக்கும் பலன் கிடைக்கும்.

சந்தோஷி மாதா விரதம்

வட மாநிலத்தில் பல இடங்களில் அன்னைக்கு ஆலயம் உண்டு. மேலும் திருமணம் வேண்டி கன்னி பெண்கள் விரதமிருந்து இவளை பூஜிக்கின்றனர். 11 வெள்ளிக்கிழமைகள் விரமிருந்து வழிபட வேண்டும். விரத நாட்களில் புளிப்பு உண்ணக்கூடாது.

விரத முடிவில் 8 ஆண் பிள்ளைகளுக்கு விருந்து வைக்க வேண்டும். விருந்தில் புளிப்பான ஆகாரம் இருக்க கூடாது. பணமாக தட்சணை அளிக்க கூடாது. காரணம் அந்த பணத்தில் குறிப்பாக அவர்கள் எதுவும் வாங்கி உண்டுவிடக்கூடாது என்பதற்காகவே இந்த வழிமுறை ஆகும்.

சந்தோஷி மாதாவிற்கு பிடித்தமான நைவேத்தியங்கள் படைக்க வேண்டும். கொண்டைக்கடலை, பூரி, வெல்லம், அப்பம், போலி முதலான இனிப்பு பதார்த்தங்கள் வைக்கலாம். புளிப்பான நைவேத்தியம் கூடாது.

இவ்வாறு வெள்ளிக்கிழமை விரதம் இருக்கும் பெண்களுக்கு நல்ல கணவன் கிடைப்பான், சீக்கிரமே திருமணம் கைக்கூடும் என்பது உண்மை ஆகும்.

தமிழகத்தில் சந்தோஷி மாதா ஆலயம்

அனைத்து துன்பங்களையும் நீக்கி சுக போக வாழ்வு அளிப்பவள் சந்தோஷி மாதா ஆவாள்.
தமிழகத்தில் சில விநாயகர் ஆலயத்தில் இவளுக்கு தனி சன்னதி உண்டு.

சென்னை விருகம்பாக்கம், கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் சந்தோஷி மாதா ஆலயம் அமைந்துள்ளது.

இவ்வன்னைக்கு உகந்த நாட்கள் வெள்ளிக்கிழமை, சதுர்த்தி தினங்கள், ரக்‌ஷா பந்தன், நவராத்திரி போன்ற நாட்கள் ஆகும். பெரும்பாலான சந்தோஷி மாதா ஆலயத்தில் வெள்ளிக்கிழமை ஆண்கள் தரிசிக்க தடை ஆகும். மற்ற நாட்களில் தரிசனம் செய்யலாம்.

சந்தோஷங்களை வாரி வழங்குவாள் சந்தோஷி!

இல்லற வாழ்வில் எண்ணற்ற பிரச்சனைகளும், பிணிகளும் நம்மை வாட்டி வதைக்கின்றன. இதனை போக்கி மகிழ்ச்சி பெற வைப்பாள் மாதா சந்தோஷி.

அனைவரும் வீட்டில் சந்தோஷி மாதா படத்திற்கு வெள்ளிக் கிழமைகளில் மலர் சாற்றி விளக்கேற்றி பூஜித்தாள் இப்பிறவியில் ஏற்படும் கஷ்டங்கள் நீங்கி சந்தோஷ வாழ்வு பெறலாம்.

3

ஜம்மூ காஷ்மீர்: பாதுகாப்பு படையினரால் இரண்டு தீவிரவாதிகள் சுட்டு கொலை

இரண்டு தீவிரவாதிகள்

ஸ்ரீநகர்: ஜம்மூ காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகாலை பாதுகாப்பு படையினரால் இரண்டு தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

குல்காம் மாவட்டத்தில் உள்ள நிபோரா என்ற பகுதியில்

தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் உள்ள நிபோரா என்ற பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வந்தது. இதை அடுத்து அங்கு பாதுகாப்பு படையினரால் தேடுதல் நடவடிக்கை நடத்தப்பட்டது, என காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.

பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட தீவிரவாதிகள்

தேடுதல் நடவடிக்கையின் போது தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.இதனை தொடர்ந்து நடந்த துப்பாக்கி சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர், என அந்த அதிகாரி தெரிவித்தார்.

கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் அடையாளங்கள் உறுதி செய்யப்பட்டது என மேலும் அவர் தெரிவித்தார்.

3

தைரியம் பிறக்க, வாழ்வு சிறக்க கால பைரவர் வழிபாடு, தேய்பிறை அஷ்டமி

வாழ்வு சிறக்க கால

வாழ்க்கையை பயத்துடன் வாழ்பவர்களுக்கு தைரியம் பிறக்க வாழ்வு சிறக்க கால பைரவரை வழிபடலாம். சிவனின் அம்சமாக கருதப்படும் கால பைரவர் பயத்தை போக்கி மனதில் தைரியத்தை கொடுப்பவர்.

தேய்பிறை அஷ்டமி அன்று சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

அனைத்து மாத்திலும் தேய்பிறை அஷ்டமி அன்று சிவன் கோவில்களில் மாலை நேரத்தில் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படும். இந்த ராகுகால நேரத்தில், வழிபாட்டில் கலந்துகொள்ளுதல் சிறப்பானதாக கருதப்படுகிறது.

எதிரிகளின் தொல்லைகள் தீர்ந்து நன்மைகள் கிட்டும்

இவ்வாறு காலபைரவரை தொடர்ந்து வழிபட்டால் எதிரிகளின் தொல்லைகள் தீர்ந்து நன்மைகள் வீடு தேடி வரும் என்பது நம்பிக்கை.

காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் அனைத்து சிவன் கோயில்களிலும் ஈசான திசையில் நாயுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

தேய்பிறை அஷ்டமி போன்று ஞாயிற்று கிழமை மாலை நேரத்தில் வரும் ராகு காலத்தில் தீபம் ஏற்றியும், சிகப்பு நிற பூக்களால் அர்ச்சித்தும் கால பைரவரை வழிபடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.

காவல் தெய்வமான கால பைரவர்

சிவன் கோவில்களில் நடை சாத்தியவுடன் சாவியை காவல் தெய்வமான கால பைரவரின் காலடியில் வைத்து செல்வர். மறுநாள் வந்து சாவியை எடுத்து நடை திறப்பர்.

இவ்வாறு காவலுக்கு பேர் போன கடவுளாக கருதப்படும் பைரவர் மன சஞ்சலங்களை போக்கி, பயத்தை நீக்கி, பில்லி ஏவல் போன்றவற்றில் இருந்து காத்து அனைத்து காரியங்களிலும் வெற்றியை கொடுக்க வல்லவர்.

நாளை(சனிக்கிழமை) தேய் பிறை அஷ்டமி வழிபாட்டை மேற்கொண்டு அனைத்து வளங்களையும் பெறலாம்.

3

பெங்களூரு: வயதான தம்பதிகள் வாடகை வீட்டில் கொலை

வயதான தம்பதிகள் வாடகை வீட்டில் கொலை

பெங்களூரு: புதன்கிழமை காமாக்சிபால்யா என்ற இடத்திற்கு அருகில் உள்ள ரங்கனாதபுரத்தில் வயதான தம்பதிகள் வாடகை வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

இறந்தவர்கள் மைசூரில் இருந்து வந்து வசிக்கும் முதிய தம்பதிகள்

இறந்தவர்கள் மைசூரில் இருந்து வந்து வசிக்கும் நரசிம்ம ராஜூ வயது 70 மற்றும் அவரது மனைவி சரஸ்வதி 64 என தெரியவந்தது. இதில் ராஜூ திருமணத் தரகர் மற்றும் சரஸ்வதி ஆசிரியை என்பதும் தெரியவந்தது.

சம்பவம் குறித்து காவல் துறை தெரிவிக்கையில் இறந்தவர்களின் மகன் சந்தோசை காணவில்லை எனவும் அவரது கைப்பேசி அணைக்கப்பட்ட நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

சந்தோஷ் இறந்தவர்களின் ஒரே மகன் என்பதும் இவரது மனைவி பிரசவத்திற்காக பிறந்தவர்களின் வீட்டிற்கு சென்றுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

சந்தேகத்திற்கு உரிய வகையில் காணாமல் போன மகன்

“நாங்கள் சந்தோஷ்தான் குற்றவாளி என்று தெரிவிக்கவில்லை ஆனால் சந்தேகத்திற்கு உரிய வகையில் அவரை காணவில்லை. அவரை கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது,” என காவல் துறை தெரிவித்தது.

காவல்துறை தெரிவிக்கையில் “இருவரும் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், இந்த கொலையை இவர்களது மகன் சந்தோஷ் செய்திருக்க வாய்புகள் உள்ளதாகவும், உடற்கூறு பரிசோதனை செய்தால் உண்மைகள் தெரியவரும் எனவும் தெரிவித்தனர்”

உடல்கள் விக்டோரியா மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும். இறந்தவர்கள் செவ்வாய்கிழமை கொலை செய்யப்பட்டிருக்க வாய்புகள் உள்ளது எனவும் தெரிவித்தனர்.

3

இனி ஹெச்1-பி விசா வைத்திருக்கும் யாரும் அமெரிக்காவிற்கு வேலைக்கு வரமுடியாது: ட்ரம்ப்

அமெரிக்காவிற்கு வேலைக்கு

வால் ஸ்டிரீட் வெளியிடுள்ள அறிக்கையின்படி இந்த புதிய சட்டம் செயல்படுத்தப்பட்டால் அமெரிக்காவிற்கு வெளியில் ஹெச்1-பி விசா வைத்திருக்கும் யாரும் அமெரிக்காவிற்கு வேலைக்கு வரமுடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு பொருந்தாது

ஆனால் ஏற்கனவே அமெரிக்காவில் இருந்து கொண்டே இந்த விசா வைத்திருப்பவர்களுக்கு இந்த புதிய சட்டம் பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது.

மின்னனு பொறியாளர்களும் விரும்பும் ஹெச்1-பி விசா

ஹெச்1-பி விசா என்பது இந்தியாவில் வசிக்கும் அனைத்து மின்னனு பொறியாளர்களும் விரும்பும் விசாவாகும். ட்ரம்ப் அரசின் இந்த நடவடிக்கை ஆயிரக்கணக்கான இந்திய மின்னனு பொறியாளர்களின் மத்தியில் பாதகமான அதிர்வலையை கிளப்பி உள்ளது.

கொரோனா பரவல்

ஏற்கனவே கொரோனா பரவலால் பெரும் எண்ணிக்கையிளான ஹெச்1-பி விசா வைத்திருக்கும் இந்தியர்கள் வேலையை இழந்து அமெரிக்கவில் இருந்து இந்தியா திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரம்ப் அரசாங்கம் நடவடிக்கை

இந்த நடவடிக்கைகள் குறித்து ட்ரம்ப் அரசாங்கம் தெரிவிக்கையில் கொரோனா தொற்றுள்ளவர்கள் அமெரிக்காவில் நுழைவதை தடுக்கும் பொருட்டும், பொருளாதாரம் மீண்டவுடன் அமெரிக்கர்கள் முதலில் தங்களுக்குக்கான வேலைகளை பெறுவதில் உள்ள சிக்கலை குறைக்கும் விதத்திலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

3

மார்பகத்தை தொட்டு அமுக்குவதா? எஸ்கேப் ஆன நயன்தாரா: சிக்கிய காஜல் அகர்வால்!

0
Queen Tamil Remake

Nayanthara; மார்பகத்தை தொட்டு தடவுவதா? எஸ்கேப் ஆன நயன்தாரா: சிக்கிய காஜல் அகர்வால்! குயீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வரும் காஜல் அகர்வாலின் பாரிஸ் பாரிஸ் படத்தில் மார்பக பகுதியை தொட்டு தடவுவது போன்ற காட்சி இருந்ததால், நயன்தாரா அந்தப் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளாராம்.

மார்பகத்தை தொட்டு தடவுவது போன்று காட்சி இருந்ததால் நயன்தாரா குயின் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளாராம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர்ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார். கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் நயன்தாரா சினிமாவில் நடித்து வருகிறார்.

கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக நடித்து வரும் நயன்தாரா, மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

ஹீரோக்களை விட ஹீரோயின்கள் தான் சினிமாவில் நிலைத்து நிற்பது கடினமான ஒன்று. ஹீரோயின்கள் சில காலம் நிலைத்து நிற்பதே அரிதாக பார்க்கப்படுகிறது.

அப்படியே அவர்கள் நிலைத்து நின்றாலும், திருமணம் செய்து கொண்ட பிறகு அவர்களுக்கு இருக்கும் மார்க்கெட் காணாமல் போய்விடுகிறது. மாறாக, அக்கா, அண்ணி, அம்மா கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புதான் கிடைக்கிறது.

பல கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக சினிமாவில் காலூன்றி வருவதோடு, லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடனும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.

இந்த நிலையில், பாலிவுட்டில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற கங்கனா ரணாவத்தின் குயின் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இந்தப் படம் பாரிஸ் பாரிஸ் என்ற டைட்டிலில் உருவாக்கப்பட்டு வருகிறது.

தெலுங்கில் தமன்னாவும், மலையாளத்தில் மஞ்சிமா மோகனும், கன்னடத்தில் பருல் யாதவ்வும் நடித்து வருகின்றனர்.

பாரிஸ் பாரிஸ் படத்தின் டீசர் வெளியான போது, காஜல் அகர்வாலின் மார்பகத்தை அவரது தோழி தொட்டு அமுக்குவது போன்று இடம்பெற்றிருந்த காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனால், குயின் படத்தின் தமிழ் ரீமேக்கில் முதலில் நடிகை நயன்தாரா தான் நடிக்க இருந்தார். படத்தின் கதை கூறும் போது, மார்பகத்தை அமுக்குவது போன்ற காட்சி எல்லாம் இருக்கிறதா? போன்ற சில காரணங்களுக்காக இந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.

பிறகுதான் காஜல் அகர்வாலை நடிக்க வைத்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3

உலகளவில் கொரோனா பாதிப்பில் 4-ம் இடத்தில் இந்தியா

0
உலகளவில் கொரோனா பாதிப்பில் 4-ம் இடத்தில் இந்தியா

உலகளவில் கொரோனா பாதிப்பில் 4-ம் இடத்தில் இந்தியா முன்னேறியுள்ளது. இதுவரையில் 5-ம் இடத்தில் இருந்துவந்த நிலையில் தற்போது பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி இந்தியா 4-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்தியா: உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து அதிகப்படியான என் ணிக்கைகளை பதிவுசெய்துவரும் நிலையில் தற்போது 4-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் முதலில் பரவ தொடங்கியது covid-19 எனப்படும் கொரோனா வைரஸ். இந்த வைரஸ் தற்போது 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது.

சீனாவில் தற்போது இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டாலும் மற்ற நாடுகளில் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் பாதிகக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 75 லட்சத்தை கடந்துள்ளது.

இவர்களில் 38 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ள நிலையில் 423819 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவை அடுத்து இரண்டாம் இடத்தில் பிரேசிலில் 8 லட்சம் பேரும், மூன்றாம் இடத்தில் ரஷ்யாவில் 5 லட்சம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தற்போது நான்காம் இடத்தில் இருந்த பிரிட்டனை பின்னுக்கு தள்ளி இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,98,283 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் அதிகப்படியாக மஹாராஷ்டிராவில் 94041 பேரும் தமிழ்நாட்டில் 36841 பேரும் டெல்லியில் 32810 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளது.

3

குழந்தை தொழிலாளர் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்: அஜித் ரசிகர்கள் வேண்டுகோள்!

0
Anti Child Labor Day

Child Labour Day; குழந்தை தொழிலாளர் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்: அஜித் ரசிகர்கள் வேண்டுகோள்! குழந்தை தொழிலாளர் இல்லாத இந்தியாவை, தமிழகத்தை உருவாக்குவோம் என்று தல அஜித் ரசிகர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அஜித் ரசிகர்கள், குழந்தை தொழிலாளர்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அரசிடமும், நடிகர்களிடமும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

உலகில் பல்வேறு பகுதிகளில் குழந்தை தொழிலாளர் முறை உள்ளது. பாலியல் தொழில், விவசாயம், குவாரி, கட்டிடத் தொழில், பெற்றோரின் தொழிலுக்கு உதவுதல், சிறிய வணிகத்தில் உணவுப் பொருள் விற்பனை, வீட்டு வேலைகள் செய்தவதிலும் குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர்.

குழந்தையும் தெய்வமும் ஒன்று கூறும் நம் சமூகம் தான், புத்தகம் எடுக்க வேண்டிய கைகளில் குடும்பத்தை சுமக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தான் கடந்த 1986 ஆம் ஆண்டு குழந்தை தொழிலாளர் முறை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது. மேலும், 1987 ஆம் ஆண்டு குழந்தை தொழிலாளர் பற்றிய தேசியக் கொள்கை உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகெங்கிலும் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஜூன் 12 ஆம் தேதியான இன்று குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம். இதனை முன்னிட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று கூறியுள்ளார்.

இது குறித்து தல அஜித்தின் ரசிகர்கள் கூறுகையில், குழந்தை தொழிலாளர் இல்லாத (இந்தியாவை) தமிழகத்தை உருவாக்குவோம். அரசும், நடிகர்களும் தொலைக்காட்சியிலும், படத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக தல அஜித்தின் புகைப்படத்தை பதிவிட்டு தல என்பதற்கான அர்த்தம் தன்னம்பிக்கை லட்சியம் என்று கூறி பதிவிட்டு வருகின்றனர்.

3

கணவருக்கு முடி வெட்டி அழகு பார்த்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி உரிமையாளர்!

0
Preity Zinta Hair Cut Video

Preity Zinta Hair Cut Video; கணவருக்கு முடி வெட்டி அழகு பார்த்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி உரிமையாளர்! கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளரான நடிகை பிரீத்தி ஜிந்தா தனது கணவருக்கு முடி வெட்டி அழகு பார்த்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தனது கணவருக்கு முடி வெட்டி விட்ட நடிகை பிரீத்தி ஜிந்தாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், என்ன செய்வது என்று பலரும் கதி கலங்கி நிற்கின்றனர்.

தற்போது இந்தியா முழுவதும் 5 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. எனினும், பலவித விதிமுறைகளுடன் தான் இந்த ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு காலத்தில் சலூன் கடைகள் முற்றிலும் திறக்கப்படவில்லை. இதனால், பலர் தாடியுடனும், அதிகளவில் தலைமுடியுடனும் காணப்பட்டனர். சிலர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறினர்.

தற்போது ஊரடங்கு தளர்வு ஏற்பட்டு சலூன் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. எனினும், சிலர் எங்கு நமக்கு கொரோனா தொற்றிவிடுமோ என்று பயத்திலும் இருந்து வருகின்றனர். இதனால், அவர்கள் சலூன் கடைக்கு செல்வதில்லை என்று கூறப்படுகிறது.

இதன் விளைவாக அவர்களே தங்களுக்கு முடி வெட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிலர் தங்களது மகன், மகள் அல்லது மனைவி மூலம் முடி வெட்டிக் கொள்கின்றனர்.

இவ்வளவு ஏன், சினிமா பிரபலங்களும் தங்களது தலைமுடியை தாங்களே வெட்டிக்கொண்டும், தங்களது அன்புக்குரியவர்களுக்கு முடி வெட்டி விடும் அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா தனது கணவருக்கு முடி வெட்டிவிட்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஆம், நடிகையும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளருமான பிரீத்தி ஜிந்தா தனது கணவருக்கு தானே முடி வெட்டி விட்டு அழகு பார்த்துள்ளார்.

மிகவும் கச்சிதமாக தனது கணவருக்கு தான் முடி வெட்டிவிட்டதாகவும், அவரை பார்ப்பதற்கு புத்துணர்ச்சியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

நயன்தாராவின் அழகின் ரகசியம்: இதைத் தான் தினமும் செய்வாராம்!

0
Nayanthara Beauty Tips

நயன்தாராவின் அழகின் ரகசியம்: இதைத் தான் தினமும் செய்வாராம்! நடிகை நயன்தாரா அழகாகவும், ஸ்லிம்மாகவும் இருப்பதற்கு இந்த 5 காரணங்கள் தான் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

நயன்தாராவின் அழகின் ரகசியம் குறித்து 5 முக்கிய காரணங்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வளர்ந்து நிற்பவர் நடிகை நயன்தாரா. சரத்குமார் நடித்த ஐயா படத்தில் ஹோம்லி கேர்ளாக நடித்து ரசிகர்களின் அன்பையும், பாராட்டையும் பெற்றார்.

ஐயா படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பு நயன்தாராவை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்றது. ஐயா படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா நடித்த சந்திரமுகி படத்தில் நடித்தார். இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கொடுத்தது.

அடுத்து, கஜினி, வல்லவன், பில்லா, ஏகன், ராஜா ராணி, ஆரம்பம், தனி ஒருவன், மாயா, இது நம்ம ஆளு, இரு முகன், டோரா, அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், விஸ்வாசம், ஐரா, மிஸ்டர் லோக்கல், வேலைக்காரன், தர்பார், பிகில் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நயன்தாரா இம்முட்டு அழகாக இருப்பதற்கும், தொடர்ந்து அவர் ஸ்லிம்மாக இருப்பதற்கும் என்ன காரணம் என்று பலரும் தங்களுக்குள்ளாகவே கேள்வி எழுப்பி வந்தனர்.

தற்போது அதற்கு காரணம் தெரிந்துவிட்டது. ஆம், நயன்தாரா தினமும் இவற்றை மட்டும் செய்து வருகிறாராம்.

அதன் சில டிப்ஸ் இதோ உங்களுக்காக…

தினமும் தனது முகத்தை அடிக்கடி தண்ணீரால் சுத்தம் செய்து கொள்வாராம். ஏனென்றால், எப்போதும் தனது முகத்தில் ஈரப்பதம் இருக்க வேண்டும் என்பதால் அப்படி செய்வாராம். மேலும், அது முகத்தை டிரை ஆக்காது.

அதிகளவில் பழ ஜூஸ்களை விரும்பி அருந்துவாராம். சாப்பாட்டை விட ஜூஸ் தான் அதிகம் குடிப்பாராம்.

தினந்தோறும் தனது கூந்தலுக்கு எண்ணெய் வைத்து பராமரித்துக் கொள்வாராம். பெரும்பாலும் நடிகைகள் அவ்வாறு செய்வது கிடையாது என்று கூறப்படுகிறது. அதற்கு விதிவிலக்காக நயன்தாரா தினமும் எண்ணெய் வைத்துக் கொள்வாராம்.

எவ்வளவு பிஸியான காலகட்டத்திலும் உடற்பயிற்சி செய்வதை மட்டும் தவிர்க்கவே மாட்டாராம். தினந்தோறும், உடற்பயிற்சி செய்து கொள்வாராம்.

எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பாராம். புன்னகையுடன் தோன்றுவதற்கு இதுதான் காரணம். அவர் கோபமே படமாட்டாராம்.

இந்த 5 முக்கிய காரணங்களால் தான் நயன்தாரா 35 வயதான போதிலும் இன்னும், அழகாகவும், ஸ்லிம்மாகவும் தோற்றமளிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், இதுவரையில் அவர்கள் திருமணம் பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

கடந்த ஆண்டே நயன்தாராவிற்கு திருமணம் நடக்கும் என்று பிரபல ஜோதிடர் கூறியிருந்தார். ஆனால், இதுவரை அப்படி ஒன்றும் அறிவிப்பு வரவில்லை. இன்னமும் காதலர்களாகவே சுற்றி வருகின்றனர்.

3