Home Blog Page 55

முதல் முதலாக வாத்தி ரெய்டு: என்ன நடந்தது? அனிருத் உற்சாக டுவீட்!

0
Vijay and Anirudh

Vaathi Raid Song Making; முதல் முதலாக வாத்தி ரெய்டு: என்ன நடந்தது? அனிருத் உற்சாக டுவீட்! விஜய்யின் மாஸ்டர் படத்தின் வாத்தி ரெய்டு பாடலை உருவாக்கும் போது என்ன நடந்தது என்பது குறித்து இசையமைப்பாளர் அனிருத் டுவிட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

வாத்தி ரெய்டு பாடல் உருவாக்கும் போது என்ன நடந்தது என்பது குறித்து அனிருத் டுவிட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள படம் மாஸ்டர். தற்போது, இப்படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன், வில்லனாக விஜய் சேதுபதி, அர்ஜூன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், ஆண்ட்ரியா, நாசர், சஞ்சீவ், சாந்தனு, பிரேம் ஆகியோர் உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள 12 பாடல்களில் 8 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இந்த நிலையில், மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி ரெய்டு பாடலை உருவாக்கும் போது ஸ்டூடியோவில் என்ன நடந்தது என்பது குறித்து அனிருத் வீடியோ வெளியிட்டு காட்டியுள்ளார்.

அதன்படி, தோராயமாக காலை 6.45 மணி. வாத்தி ரெய்டு பாடலை முதல் முதலாக ஸ்டூடியோவில் வைத்து கேட்ட போது எங்களது ரியாக்‌ஷன் இப்படித்தான் இருந்தது என்று அந்த வீடியோ மூலம் காண்பித்துள்ளார்.

மாஸ்டர் திரைக்கு வரும் போது இதை விட அதிகளவிலான ரியாக்‌ஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

சியானின் துருவ நட்சத்திரம் என்னாச்சு? கௌதம் மேனன் வெளியிட்ட புதிய அப்டேட்!

0
Dhruva Natchathiram Update

Dhruva Natchathiram; சியானின் துருவ நட்சத்திரம் என்னாச்சு? கௌதம் மேனன் வெளியிட்ட புதிய அப்டேட்! சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் துருவ நட்சத்திரம் குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்றை இயக்குநர் கௌதம் மேனன் வெளியிட்டுள்ளார்.

துருவ நட்சத்திரம் குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் துருவ நட்சத்திரம். கடந்த 2016 ஆம் ஆண்டு இப்படத்தின் புரோடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட்டது.

மேலும், 7 நாடுகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ப்ரீ புரோடக்‌ஷன் பணிகள் காரணமாக படத்தின் படப்பிடிப்பு காலதாமதம் ஆனது.

கௌதம் மேனனின் கனவு படமான துருவ நட்சத்திரம் படத்தில், சியானுக்கு ஜோடியாக ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் இணைந்து பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னதாக முதலில் விக்ரமுக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், அதன் பிறகு அவருக்குப் பதிலாக ரித்து வர்மா ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் இன்னும் முடியாத நிலையில், ஸ்கெட்ச், சாமி ஸ்கொயர், கடாரம் கொண்டான் ஆகிய படங்களில் நடித்து அந்த படங்கள் அனைத்துமே வெளியாகிவிட்டது. இந்த நிலையில், தற்போது கோப்ரா படத்திலும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில், விக்ரமின் அடுத்த படம் குறித்து அறிவிப்பும் வெளியாகிவிட்டது.

அந்த வகையில், சியான்60 படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாகவும், அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படத்தின் விக்ரமுடன் இணைந்து துருவ் விக்ரமும் நடிக்க இருக்கிறார்.

இந்த நிலையில், தற்போது துருவ நட்சத்திரம் படத்திற்கு விடிவு காலம் பொறந்தாச்சு போல. ஆம், இப்படம் குறித்து அறிவிப்பை கௌதம் மேனன் வெளியிட்டுள்ளார்.

இப்படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது என்றும், விரைவில், விக்ரம் இப்படத்திற்கான டப்பிங் பணிகளில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறியுள்ளார்.

கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு மீதமுள்ள காட்சிகளையும் கௌதம் மேனன் படமாக்க இருக்கிறாராம்.

3

கத்தியால் குத்தப்பட்ட காவலர் காலமானார் : தூத்துக்குடி

கத்தியால் குத்தப்பட்ட காவலர்

தூத்துக்குடி: ஞாயிற்றுக்கிழமை மாலை பாதுகாவலரால் கத்தியால் குத்தப்பட்ட காவலர் புதன் கிழமை காலமானார்.

கே. புங்கலிங்கம் சிகிச்சை பலன் அளிக்காமல் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதன் கிழமை காலமானார்.

குத்தியவர் செல்வம் என்ற பாதுகாவலர்

கத்தியால் குத்தியவர் செல்வம் என்பதும், எம்.ஜி.ஆர் பூங்காவில் பாதுகாவலராக பணிபுரிபவர் என்பதும் தெரியவந்தது.

குடித்திருந்த நிலையில் இருந்த காவலர்

இறந்த காவலருக்கு 48 வயது என்பதும் சம்பவத்தன்று சீறுடையில் இல்லாமல் குடித்திருந்த நிலையில் இருந்தார் என்பதும் தெரியவருகிறது.

இருவருக்கும் இடையே வாக்குவாதம்

சம்பவம் நடந்த அன்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி பிறகு பாதுகாவலரால் காவலர் கத்தியால் குத்தப்பட்டு சரிந்து விழுந்தார் மற்றும் 4 மணி நேரம் வரை இரத்த போக்கு இருந்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் இரவு 7 மணி அளவில் நடந்தேரியது.

குற்றவாளி செல்வம் கைது

இதை தொடர்ந்து குற்றவாளி செல்வம் கைது செய்யப்பட்டு கொலை முயற்ச்சி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்.

காவலரின் இறப்பிற்கு பிறகு, வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது என காவல் துறை அதிகாரி அருண் பாலகோபாலன் தெரிவித்தார்.

இறந்த காவலர் புங்கலிங்கம் மார்ச் 2008 முதல் காவல் துறையில் பணியில் உள்ளவர் என்பதும் அவருக்கு காசியம்மாள் என்ற மனைவி மற்றும் 8, 16 வயதில் இரண்டு மகள்களும் உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

3

காமெடி நடிகர் கிரேசி மோகன் நினைவு நாள் இன்று!

0
Crazy Mohan Memorial Day
Actor Crazy Mohan. Express archive photo

Crazy Mohan Memorial Day; நகைச்சுவை நடிகர் கிரேசி மோகன் நினைவு நாள் இன்று! கமல் ஹாசன் மூலம் திரையுலகில் அறிமுகமான நகைச்சுவை நடிகர் கிரேசி மோகன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

கதை வசன கர்த்தாவான கிரேசி மோகன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகர் கிரேசி மோகன். கதை வசன கர்த்தாவாகவும், நாடக ஆசிரியராகவும் திகழ்ந்தவர். ஏராளமான மேடை நாடகங்களை இயக்கியுள்ளார்.

கமல் ஹாசன் மூலமாக சினிமாவில் அறிமுகமான கிரேசி மோகன், அவரது படங்களிலேயே பெரும்பாலும் நடித்துள்ளார். கமல் ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் படத்திற்கு வசனம் எழுதியவர் இவரே.

மைக்கேல் மதன காமராஜ், பஞ்ச தந்திரம், வசூல் ராஜா எம்பிபிஎஸ் ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். இந்த படங்கள் எல்லாமே கமல் ஹாசன் நடித்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜ், ஆஹா, காதலா காதலா, பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்பிபிஎஸ், நான் ஈ, அருணாச்சலம், தெனாலி, சதீலீலாவதி ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரேசி மோகன் கடந்த ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் மறைந்து இன்றுடன் ஒரு வருடன் ஆன நிலையில், இன்று, கிரேசி மோகன் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.

கிரேசி மோகன் நினைவு நாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் பலரும் அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.

3

ஜிம் உடையில் ஜில்லுனு வரலக்ஷ்மி

0
ஜிம் உடையில் ஜில்லுனு வரலக்ஷ்மி

ஜிம் உடையில் ஜில்லுனு வரலக்ஷ்மி. கொரோனா பொது முடக்கம் காரணமாக நடிகர் நடிகைகள் வீடுகளிலேயே முடங்கியுள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் தங்களின் ஒர்க்கவுட் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் சிம்புவுடன் இணைந்து போடா போடி திரைப்படம் மூலம் கால்பதித்தவர் நடிகர் சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மி சரத்குமார்.

இதை தொடர்ந்து விக்ரம் வேதா, தாரதப்பட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் தனது நடிப்பு திறமையில் அசத்தினார் வரலக்ஷ்மி.

கதாநாயகியாக மட்டுமின்றி சர்கார் மற்றும் சண்டக்கோழி 2 ஆகிய திரைப்படங்களில் வில்லியாகவும் தனது நடிப்பு திறமையை காட்டி மிரட்டியிருந்தார் வரலக்ஷ்மி.

மேலும் தமிழில் இவர் ஆக்ஷன் திரில்லர் அவதாரத்தில், வீரக்குமார் இயக்கத்தில் சேஸிங் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

தனது உடல் எடையை பேணிக்காப்பதில் தனி அக்கறை எடுத்து வரும் வரலட்சுமி, தற்போது ஜிம்முக்குச் சென்று இளைத்த தனது உடல் அழகை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

3

ட்ரம்பிற்கு தொடரும் எதிர்ப்பு

0
ட்ரம்பிற்கு தொடரும் எதிர்ப்பு

ட்ரம்பிற்கு தொடரும் எதிர்ப்பு. அண்மையில் CNN நடத்திய கருத்துக் கணிப்பில் டிரம்பின் தலைமைக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 57% பேர் ட்ரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்துள்ளனர்.

அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார்.

இவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோ-பிடன் களமிறங்க உள்ளார். இந்த தேர்தலில் மக்களின் ஆதரவு யாருக்கு என்பது குறித்த கருத்துக்கணிப்புகளை சிஎன்என் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

அதன்படி, கடந்த 2-5 ஆம் தேதி வரை நடைபெற்ற கருத்துக் கணிப்பின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்த தேர்தல் நடைபெற்றால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று மக்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த ஆய்வில் டிரம்புக்கு ஆதரவாக 38% பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர். இதில் ட்ரம்ப் ஜனநாயக கட்சியின் அதிபர் பதவி வேட்பாளர் ஜோ-பிடனை விட 14% பின் தங்கியுள்ளார்.

கொரோனா தாக்குதலை எதிர்கொள்ள டிரம்ப் எடுத்த நடவடிக்கைகள் மற்றும் ஜார்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட்ட சம்பவம் ஆகியவை மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் இந்த கருத்துக் கணிப்பில் ஒட்டுமொத்தமாக 57 சதவீதம் பேர் டிரம்பின் தலைமைக்கு எதிராக வாக்களித்துள்ளனர். எதிர்க்கட்சியினரிடமும் மிகக்குறைந்த ஆதரவைப் பெற்றுள்ளார் அதிபர் டிரம்ப்.

இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்த டிரம்ப் CNN கடந்த முறை தேர்தலுக்கு முன்னர் ஹிலாரி தான் வெற்றி பெறுவார் என கணித்து கூறியது பொய்யாகிப்போனது.

இதேபோல் தற்போதும் போலியான கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது CNN என பதிவிட்டுள்ளார்.

 

3

உடல்வெப்பச் சோதனைக் கருவி(தெர்மல் ஸ்கேனர்) கட்டாயம் வழங்கப்படவேண்டும் என டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை

உடல்வெப்பச் சோதனைக் கருவி

சென்னை: கொரோனா காரணமாக தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர் சங்கம் வாடிக்கையாளர்களின் உடலின் வெப்பநிலையை சரிபார்க்க, தங்களுக்கு உடல்வெப்பச் சோதனைக் கருவி(தெர்மல் ஸ்கேனர்) கட்டாயம் வழங்கப்படவேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

கொரோனா பரவலை தடுக்க

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் என். பெரியசாமி தெரிவிக்கையில் கொரோனா பரவலை தடுக்க கடைபிடிக்கப்படும் நடவடிக்கைகள் மே 16இல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டபின் கடைபிடிக்க வழிவகுக்க வேண்டும் என தெரிவித்தார்.

கிருமிநாசினிகள் தினசரி கடைகளில் தெளிக்கப்பட வேண்டும் என மேலும் அவர் தெரிவித்தார்.

8 புதிய டாஸ்மாக் கடைகள்

சென்னையை அடுத்த திருவள்ளூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் 8 டாஸ்மாக் கடைகள் புதன் கிழமை முதல் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

கொரோனா கட்டுபாட்டு மையங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

3

பிரபல மகிழுந்து(கார்) நிறுவனமான மாருதி கொரோனா காரணமாக 97.54 % உற்பத்தியை நிறுத்த முடிவு

maruthi_su

புதுடெல்லி: இந்தியாவின் பிரபல மகிழுந்து(கார்) உர்பத்தியாளரான மாருதி சுசுகி இந்தியா(MSI) கொரோனா காரணமாக 97.54 சதவிகித உற்பத்தியை நிறுத்த இருப்பதாக செவ்வாய் கிழமை அறிவித்தது.

கடந்த வருடம் இதே மாதம் இந்த நிறுவனம் 1,51,188 கார்களை உற்பத்தி செய்ததாக தெரிகிறது.

சிறிய ரக மகிழுந்துகள்

சிறிய ரக மகிழுந்துகளான ஆல்டோ மற்றும் எஸ்-பிரெஸ்ஸோ போன்ற கார்களின் உற்பத்தியையும் 98.32 சதவிகிதம் வரை நிறுத்துவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாகனார், செலேரியோ, இக்னிஸ், ஸ்விப்ட், பலினோ மற்றும் டிசையர் போன்ற மகிழுந்துகளையும் 97.69% வரை குறைத்து 1,950 அளவுக்கு மட்டுமே உற்பத்தி செய்ய இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

விடாரா பிரெஸ்ஸா, எர்டிகா

விடாரா பிரெஸ்ஸா, எர்டிகா மற்றும் எஸ்-கிராஸ் போன்ற மகிழுந்துகளின் உற்பத்தியை 96.25 % வரை குறைத்து 928 வாகனங்கள் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இது கடந்த வருடம் இதே மாதத்தில் 24,748 ஆக இருந்தது.

செடான் வகை மகிழுந்தான சியாஜ் வகையில் 163 மட்டுமே உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது இது கடந்த வருடம் 3,834 அளவில் இருந்தது.

சரக்கு வாகனம்

இலகு ரக சரக்கு வாகனமான ‘சூப்பர் கேரி’யின் உற்பத்தியும் 62 வாகனங்கள் என்ற அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது. இதன் உற்பத்தி கடந்த வருடம் 3,093 ஆக இருந்தது.

3

பிறந்தநாளன்று காலமானார் அன்பழகன்

0
பிறந்தநாளன்று காலமானார் அன்பழகன்

பிறந்தநாளன்று காலமானார் அன்பழகன். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன் இன்று காலமானார்.

சென்னை: ஜெ.அன்பழகன், திமுக சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளருமாவார். இவர் கடந்த 2-ஆம் தேதி உடல்நலக் குறைவால் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்பின்னர் இவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் சிறுநீரக கோளாறு, தீவிர மூச்சு திணறல் காரணமாக வென்டிலேட்டர் உதவியுடன் 90% ஆக்சிஜன் செலுத்தப்பட்டது.

பின்னர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் 40% ஆக்சிஜன் மட்டும் செலுத்தப்பட்டு வந்தது. மீண்டும் இவருக்கு திங்கட்கிழமை மாலை முதல் உடல்நிலை மோசமடைந்துள்ளது.

சிறுநீரகம் மற்றும் இதயம் ஆகியவற்றின் செயல்பாடுகள் மோசமடைந்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அன்பழகன் இன்று உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அன்பழகனின் இறப்பிற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

3

எம்ஜிஆரின் ரிக்‌ஷாக்காரன் சாதனையை முறியடித்த தல அஜித்தின் சிட்டிசன்!

0
MGR and Thala Ajith

Thala Ajith Citizen Movie; எம்ஜிஆரின் ரிக்‌ஷாக்காரன் சாதனையை முறியடித்த தல அஜித்தின் சிட்டிசன்! அட்வான்ஸ் புக்கிங்கில் தல அஜித்தின் சிட்டிசன் படம் எம்ஜிஆரின் ரிக்‌ஷாக்காரன் சாதனையை முறியடித்துள்ளது.

சிட்டிசன் படம் எம்ஜிஆரின் ரிக்‌ஷாக்காரன் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.

இயக்குநர் கிறிஷ்ணன் நாயர் இயக்கத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நடிப்பில் கடந்த 1971 ஆம் ஆண்டு மே 29 ஆம் தேதி திரைக்கு வந்த படம் ரிக்‌ஷாக்காரன்.

எம்ஜிஆர் படம் என்றாலே சொல்லவே வேணாம் குறைந்தது 100 நாட்களுக்கு மேலாக ஓடிவிடும். அந்த வகையிலும், இந்த படமும் அப்படித்தான். நூறு நாட்களுக்கு மேல் ஓடி பாக்ஸ் ஆபிஸ் வசூலும் குவித்துள்ளது.

இந்தப் படத்திற்காக எம்ஜிஆருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ரிக்‌ஷாக்காரன் பாலிவுட்டில் ரிக்‌ஷாவாலா என்ற டைட்டிலில் ரீமேக் செய்யப்பட்டது.

ரிக்‌ஷாக்காரன் படத்தில் இடம்பெற்றுள்ள கடலோரம் வாங்கிய காற்று, பொன்னழகு பெண்மை, அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும், அழகிய தமிழ் மகள், பம்பை உடுக்கை கட்டி ஆகிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. இன்றும், ரசிகர்களின் செவிகளுக்கு தேனூட்டும் வகையிலேயே அமைந்துள்ளது.

பம்பை உடுக்கை கட்டி என்ற பாடலைத் தவிர மற்ற அனைத்து பாடல்களையும் வாலி எழுதியுள்ளார். டிஎம் சௌந்தரராஜன், பி சுசீலா மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர் இந்தப் பாடல்களை பாடியுள்ளனர்.

சென்னையில் உள்ள தேவி பேரடைஸ் திரையரங்கில் கிட்டத்தட்ட 163 நாட்களுக்கு மேல் ஓடி வணீக ரீதியாக நல்ல வரவேற்பு கொடுத்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் உள்ள தேவி சினிமாவில் ரிக்‌ஷாக்காரன் படத்திற்கு 12 நாட்கள் அட்வான்ஸ் புக்கிங் செய்யப்பட்டது.

ஆனால், இதே போன்று தல அஜித் நடிப்பில் வந்த சிட்டிசன் படத்திற்காக அதே தேவி சினிமாவில் 13 நாட்கள் அட்வான்ஸ் புக்கிங் செய்யப்பட்டது.

இதன் மூலம் எம்ஜிஆரின் சாதனையை தல அஜித்தின் சிட்டிசன் படம் முறியடித்துள்ளது. அஜித்தின் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த படங்களில் சிட்டிசன் படமும் ஒன்று.

இயக்குநர் சரவணன் சுப்பையா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து மீனா, பாண்டியன், நிழல்கள் ரவி, வசுந்தரா தாஸ், நக்மா ஆகியோர் பலர் நடித்திருந்தனர். நேற்றுடன் சிட்டிசன் படம் வெளியாகி 19 ஆண்டுகள் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தல அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

ஹெச் வினோத் வலிமை படத்தை இயக்கி வருகிறார். தயாரிப்பாளர் போனி கபூர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஹூமா குரேஸி வலிமை படத்தில் தல அஜித்துக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். கொரோனா லாக்டவுன் முற்றிலும் சரியான பிறகு வலிமை படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

3