மந்திர மாயாஜால பின்னணி கொண்ட கதையில் முண்டாசுப்பட்டி ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். சத்யஜோதி நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது.
இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம், மந்திர மாயாஜால சண்டைகள் நிறைந்த திரைப்படமாக உருவாகி வருகிறது.
தனுஷ் தற்பொழுது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படமும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற திரைப்படத்திலும் பரபரப்பாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.
கலைப்புலி தாணு அவர்கள் தயாரிக்கும் கர்ணன் படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற்று வருகிறது. யோகி பாபு, லால் என பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.
‘கர்ணன்’ படத்தை முடித்துவிட்டு, ‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ படங்களை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் தனுஷ் கவனம் செலுத்தவுள்ளார் .
இந்தப் படத்தையும் ‘பட்டாஸ்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விரைவில் படப்பூஜையுடன் பணிகள் தொடங்கப்படவுள்ளது.
ராம்குமார் படம் தவிர்த்து மற்றொரு படமும் சத்யஜோதி நிறுவனத்துக்காகச் செய்யவுள்ளார் தனுஷ்.
இதன் இயக்குநர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. மேலும், ராம்குமார் படத்தில் நடித்துக்கொண்டே இயக்குநர் செல்வராகவன் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார் தனுஷ். செல்வராகவன் படத்தை தாணு தயாரிக்கவுள்ளார்.
தெலுங்கில் ரீமேக்: தனுஷின் அசுரன், விஜய் சேதுபதியின் 96 ஆகிய படங்கள் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது.
ரீமேக் திரைப்படங்கள்
ஒரு மொழியில் வெற்றி பெற்ற படங்கள் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்வது மற்றும் அதனை தழுவி அந்த மண்ணுக்கு ஏற்றவாறு திரைப்படங்கள் எடுப்பது வழக்கம்.
அந்த வகையில் தமிழில் வெளிவந்து மெகா ஹிட் ஆனா திரைப்படங்கள் 96 மற்றும் அசுரன் தற்பொழுது தெலுங்கில் தயாராகி வருகிறது.
சமீபத்தில் விஜய்யின் “காவலன்” அஜித்தின் “வீரம்”, காக்க காக்க, நாடோடிகள் என ஏராளமான படங்களை தெலுங்கிலும் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்து வெளியிட்டனர்.
96 தெலுங்கில் ஜானு
கடந்த 2018 ஆம் ஆண்டு திரிஷா விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் அதுவும் இளசுகள் மத்தியில் நீங்கா இடம்பெற்ற திரைப்படம்.
இதனை தெலுங்கில் “ஜானு” எனப் பெயர் மற்றம் செய்யப்பட்டு தற்பொழுது தயாராகி வருகிறது. திரிஷாவிற்கு பதில் சமந்தா மற்றும் விஜய் சேதுபதிக்கு பதில் சர்வானந்தும் நடிக்கின்றனர்.
இந்த படத்தையும் இயக்குனர் பிரேம்குமார் தான் இயக்குகிறார். இந்த படத்தின் முதல் லுக் மற்றும் ட்ரைலர் வெளியாகி கொண்டாடப்பட்டு வருகிறது.
அசுரன் தெலுங்கில் நரப்பா
2019-ஆம் ஆண்டு வெளிவந்து வசூலில் நூறுகோடிக்கு மேலும், திரை அரங்குகளில் நூறு நாட்களுக்கு மேலும் ஓடி சாதனை புரிந்த அசுரன் தற்பொழுது தெலுங்கில் தயாராகிறது.
தமிழில் தனுஷ் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்கிறார். தனுஷ் முதிர்ந்த நடிப்பு தமிழ் ரசிகர்கள் இடையில் வெகுவாக பாராட்டை பெற்றது.
இதனை அப்படியே தெலுங்கில் தக்க வைத்துக்கொள்ள நடிகர் வெங்கடேஷ் தெலுங்கில் மிகவும் மெனக்கெடுகிறார்.
மஞ்சு வாரியாருக்கு பதில் பிரியா மணி அல்லது ஸ்ரேயா தேர்வு செய்ய இருக்கிறார்கள். தமிழில் வந்த அசுரனுக்கு தெலுங்கில் “நரப்பா” என பெயர் வைத்து இருக்கிறார்கள். தெலுங்கு முதல் தோற்றம் வெங்கடேஷ்க்கு வெகுவாக பாராட்டை பெற்று தந்தது.
ஸ்ரீகாந்த் அடல்லா இயக்குகிறார். இதற்கு முன் தெலுங்கில் ப்ரமோட்ஷவம் திரைப்படத்தை இயக்கியவர். இவர் பாடல் ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார்.
நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய பாலிவுட் திரைப்படத்தில் நடிகர் அக்ஷய்குமார் சம்பளம் 120 கோடி ரூபாய் எனத் தகவல் கிடைத்துள்ளது.
பாலிவுட் படத்தில் தனுஷ்
பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இதுவரை தனு வெட்ஸ் மனு ஜீரோ திரைப்படத்தின் மூலம் மிக பெரிய புகழை எட்டினார்.
இயக்குனர் ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் நடிகர் அக்ஷய்குமார் நடிக்க இருக்கிறார். நடிகர் அக்ஷய்குமார் உடன் இணைந்து நடிகர் தனுஷ் மற்றும் சாரா அலிகான் போன்றவர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.
அசுர வளர்ச்சியில் அக்ஷய்குமார்
அக்ஷய்குமார் நடிக்கும் திரைப்படங்கள் வசூலில் சக்கை போடு போடுகின்றன. அவரது திரைப்படங்கள் பாலிவுட் திரையுலகை ஆச்சர்யப்பட வைக்கின்றன.
அக்ஷய்குமார் திரைப்படங்களை வாங்குவதற்கு பாலிவுட் சின்னத்திரையுலகில் மிக கடுமையான வாய்க்கால் சண்டையே நடைபெறுகிறது.
அக்ஷய்குமார் சம்பளம்
அக்ஷய்குமார் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வசூலிலும், விமர்சனங்களிலும் சக்கைப்போடு போடுகிறது. இதனால் அவரது சம்பளம் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் உயர்ந்துக்கொண்டே போகிறது.
தற்பொழுது தனுஷ் உடன் இணையும் ஆனந்த் எல் ராய் இயக்கும் திரைப்படத்தில் அக்ஷய்குமார் சம்பளம் ரூபாய் 120 கோடி என பேசப்பட்டு வருகிறது.
போர்ப்ஸ் 2019-ஆம் ஆண்டின் உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் அக்ஷய்குமார் 4-ஆம் இடத்தில் பாலிவுட் திரைத்துறை பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறார்.
அக்ஷய்குமார் தேர்ந்தெடுக்கும் கதை, கதைக்கான நடிப்பு அவரது வருங்காலங்களில் இந்த பட்டியலில் முதல் இடம் பிடிக்கக்கூடும்.
திருநங்கை வேடத்தில் அக்ஷய்குமார்
லஷ்மி பாம் திரைபடத்தில் அக்ஷய்குமார் முதல் முறையாக திருநங்கை வேடத்தில் நடிக்க இருக்கிறார். கைர அட்வானி கதாநாயகியாக நடிக்கிறார்.
நம்ம ராகவா லாரன்ஸ் தான் இந்த படத்தின் இயக்குனர். தமிழில் வெளிவந்து கல்லாவை நிறைப்பிய காஞ்சனா திரைப்படத்தின் ரீமேக் திரைப்படம். வருகிற மே 2020-இல் திரைக்கு வர இருக்கிறது.
மாஸ்டர் ரிலீஸ் தேதி க்லூ கொடுத்த ஆண்ட்ரியா. ஆண்ட்ரியா, லோகேஷ் கனகராஜ் உடன் டிஸ்க்ஷன் செய்துகொண்டு இருக்கும் படத்தை வெளியிட்டு மாஸ்டர் ரிலீஸ் தேதி பற்றி க்லூ கொடுத்துள்ளார்.
பிகில் வெற்றிக்குப் பிறகு விஜய் நடித்து வரும் அடுத்த திரைப்படம் மாஸ்டர். இது ஒரு வித்தியாசமான திரைப்படமாக உருவாகி வருகிறது என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்குமுன் மாநகரம், கைதி என இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இந்த திரைப்படத்தை இயக்குகிறார்.
இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், கவுரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மாளவிகா மோகனன், விஜய்க்கு நாயகியாக நடிக்கிறார்.
மாஸ்டர் படப்பிடிப்பு தளம்
படப்பிடிப்பு விறுவிறுப்பாக டெல்லியிலும், கர்நாடகாவிலும் உள்ள சிறைச்சாலையில் நடந்துள்ளது. சென்னை பூந்தமல்லி அருகே உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளியிலும் முக்கியக் காட்சிகளை படமாக்கிக்கொண்டு இருக்கின்றனர்.
ஆண்ட்ரியா லோகேஷ் கனகராஜ்
கவர்ச்சியான வேடத்தில் ஆண்ட்ரியா நடிப்பதாக வதந்திகள் பரவுகிறது. அதுவும் கவர்ச்சிகரமான பேராசிரியர் வேடமாம்.
நடிகை ஆண்ட்ரியா, ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், “அதிசயிக்கும் திறமை கொண்ட இயக்குநருடன், 2020 ஆண்டின் மிகப்பெரிய படங்களில் ஒன்றான ‘மாஸ்டர்’ படத்தில் பணியாற்றுகிறேன். வரும் பிப்ரவரியுடன் எனக்கான படப்பிடிப்பு காட்சிகள் நிறைவடைகிறது” என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மாஸ்டர் திரைப்படம் வெளியீடு
‘மாஸ்டர்’ கோடை விடுமுறை நேரத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரியுடன் இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் முடிவடைய உள்ளன. அதனை ஆண்ட்ரியாவின் பதிவும் உறுதி செய்துள்ளது.
எனவே இப்படம் கோடை விடுமுறையை டார்கெட் செய்து வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரைப்படத்திற்கும் மக்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது.குழந்தை பிறப்பு, காது குத்து, சடங்கு, கல்யாணம் முதல் இறப்பு வரை சினிமா நட்சத்திரங்களின் கட்டவுட் மற்றும் பிளக்ஸ்போர்டுகளுக்கு தமிழ்நாடு மிகப் பிரபலம்.
வலைத்தளமும் இதற்கு விதி விலக்கல்ல. திரைப்பட மற்றும் விளையாட்டு நட்சத்திரங்களின் ரசிகர்கள் தங்கள் வலிமையையும் விசுவாசத்தையும் காட்டும் இடம் சமூக ஊடகம்.
முன்னணியில் இருக்கும் பிரபலமான திரைப்பட நட்சத்திரங்கள் யாரும் ஒருவர்க்கொருவர் சண்டை போட்டுக்கொள்வதில்லை.
பொதுவாக நண்பர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் ரசிகர்கள் புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது இணையத்தில் எதிர்மறையாக ட்ரோல் செய்வது இயல்பாக உள்ளது.
இதில் மிகவும் முக்கியமானது, தல மற்றும் தளபதி ரசிகர்கள். அவர்கள் நாள் முழுவதும் பிரபலமாக இருக்கும் ஹேஷ்டேக்குகளை உருவாக்குகிறார்கள்.
பிரபலமான திரைப்பட நட்சத்திரங்களின் புதிய படங்கள் வெளியாகும்போது சில இடங்களில் வெட்டுக் குத்து அளவுக்குப்போன வரலாறுகளும் தமிழ்நாட்டில் உண்டு.
இன்று #UnrivledTamilActors என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. தல அஜித் மற்றும் தளபதி விஜய் ரசிகர்கள் தங்கள் வேறுபாடுகளை மறந்து தற்காலிகமாக இணைந்து உள்ளனர்.
ஹார்ட்கோர் தெலுங்கு சினிமா ரசிகர்கள் #TeluguRealHeroes என்ற ஹேஷ்டேக்கை முதலில் தொடங்கினர். இது முதலில் பிரபலமாக இருந்தது. பின்னர் தமிழ் ஹீரோக்களை வசை பாடத் தொடங்கினர்.
இப்போது அஜித் மற்றும் விஜய் மட்டுமல்ல ரஜினி, கமல், சூரியா, விக்ரம், கார்த்தி, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி மற்றும் ஜீவா ரசிகர்களின் ரசிகர்களும் சேர்ந்துள்ளனர்.
தெலுங்கு ஹீரோக்களில் சிலரின் மிக மோசமான நடிப்பைப் பற்றி தமிழ்த் திரைப்பட ரசிகர்களும் கேலி கிண்டல்களை ட்விட்டரில் ஷ்டேக்க்குகளாக உருவாக்குகிறார்கள்.
பொதுவாகத் தென்னிந்திய சினிமாவில் தமிழ் படங்கள் பெரிதும் ரசிக்கப்படுகிறது. தெலுங்கு மற்றும் மலையாளம் நடிகர்கள் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலம்.
கலைகளுக்கு எப்போதும் மொழி ஒரு தடை இல்லை. அவ்வப்போது இது மாதிரியான சில வாய்க்கால் தகராறுகளும் நடந்து கொண்டேயிருக்கும்.
இன்று இந்தியாவில் ட்விட்டரில் முதலிடத்தில் இருப்பது #UnrivledTamilActors ஹேஷ்டேக்குகளாக இருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது
சைக்கோ பாடல் வரிகள் எனக்குள் ஏற்படுத்திய மாற்றம். இசைஞானி இளையராஜா இசையில் வெளிவந்த சைக்கோ பட பாடல்களை பற்றிய சிறுகுறிப்பு.
மிஷ்கின் அவர்கள் இயக்க உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதரி மற்றும் இயக்குனர் ராம் போன்றோர்கள் நடித்திருக்கும் சைக்கோ திரைப்படம் வருகிற ஜனவரி 24ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இப்படத்திற்கு நம்மின் இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.
செவிக்கு வெறும் இனிமையாக மட்டுமல்லாமல் ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு உணர்வை கேட்பவருக்கு கடத்துகிறது.
இளையராஜாவும் மிஷ்கினும்
மிஷ்கின் தன்னுடைய இண்டர்வியூக்களிலும், பிற நிகழ்ச்சிகளிலும் இளையராஜா என்பவர் அவருக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும், அவர் பாடல்களை பற்றியும் சிலாகித்து பேசியிருப்பதையும் பேசிக்கொண்டிருப்பதையும் நாம் இப்பொழுதும் பார்க்கலாம்.
ஏற்கனவே நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியுமென இரு திரைப்படங்கள் இளையராஜாவுடன் இணைந்து மிஷ்கின் பணியாற்றியிருக்கிறார்.
“எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை ஆனால் இளையராஜா என் கடவுள்”
என்றெல்லாம் கூட சொல்லியிருக்கிறார்.
மிஷ்கின் இளையராஜாவை காதலிக்கிறார் என்று சொல்லும் அளவிற்கு இளையராஜாவின் இசைப்பிரியர் மிஷ்கின்.
இந்த பக்தன், தன் கடவுளுடன் இணைந்து ரசிகர்களுக்கு கொடுத்திருக்கும் இசைப்படையல் தான், சைக்கோ படத்தில் இதுவரை வெளிவந்திருக்கும் மூன்று பாடல்களும்!
உன்ன நெனச்சி நெனச்சி.. பாடல் வரி
இப்பாடலின் வரிகளை கவிஞர் கபிலன் எழுத சித் ஶ்ரீராம் பாடியுள்ளார். மிகவும் எளிமையான வரிகளை கொண்டுள்ளது இப்பாடல்.
கண் தெரியாத ஒருவன் தன் காதலுக்காக ஏங்கும் பாடலாக உள்ளது இப்பாடல். இளையராஜா மென்மையாக இசைக்க முதன்முறையாக சித்ஶ்ரீராம் இப்பாடலுக்காக தன் குரலை வேறுவிதமாக பயன்படுத்தியுள்ளார் .
கண்தெரியாத ஒருவனுக்கு வாசனைகளும், ஓசைகளும்தான் அடிப்படையாக புரியக்கூடியவை. அவற்றை வைத்துதான் அவன் வேறுபாடுகளை, இவ்வுலகத்தை புரிய முயற்ச்சிப்பான் .
அவன் உறவாக கருதக்கூடியது வாசமும் , ஓசையும் மட்டும்தான் அதுமட்டுமல்ல அவர்களுக்கு எப்போதும் இருள்மட்டும்தானே காட்சியளிக்கும் . இதை இப்பாடலில்
வாசம் , ஓசை இவைதானே எந்தன் உறவே .. உலகின் நீண்ட இரவென்றால் அது எந்தன் இரவே ! இவ்வாறாக கூறியிருப்பார் கபிலன் .
மேலே குறிப்பிட்ட வரிகள் மட்டுமல்ல பாடலில் உள்ள மற்ற வரிகளும் எளிமையாக நம்மில் வலியை உணர வைக்கும் .
நீங்க முடியுமா என்று தொடங்கும் இப்பாடலையும் சித்ஶ்ரீராமே பாடியுளள்ளார். கபிலன் அவர்கள் இப்பாடலுக்கும் வரிகள் எழுதியுள்ளார். இளையராஜா தனது இசையால் மீண்டும் நம்மை உணர வைத்து அழுக வைக்கிறார்.
கண் தெரியாதவர்கள் உபயோகிக்கும் blind stick-ஐ மூன்றாவது கால் எனவும், பார்வையில்லாததால் இருக்கும் ஒரு இருளையும், பகலிற்கு பிறகு வரும் ஒரு இரவையும் சேர்த்து இரு இரவு என்கிறார் கவிஞர்.
மேலும் அந்த இரு இரவுகளுக்குமே ஒரே நிலவு அவன் காதலியென்கிறார் அதை கீழ்க்கண்ட வரிகள் மூலம் கூறுகிறார்.
மூன்று காலில் காதல் தேடி நடந்து போகிறேன்.. இரண்டு இரவு இருந்தபோதும் நிலவை கேட்கிறேன் ..
தன் காதலியை தேடிக்கொண்டிருக்கும் ஒருவன்
“உயிர்ப்போகும் நாள்வரை உனை தேடுவேன் , உனை மீண்டும் பார்த்தப்பின் கண்மூடுவேன்…”
எனச்சொல்வதெல்லாம் பெருங்காதல். அதை இசையால் ராஜாவும்
குரலால் சித்ஶ்ரீராமும் கேட்பவர்களுக்கு மென்மையாக உணர்த்தியுருப்பார்கள்.
தாய்மடியில் .. பாடல் வரி
சில நாட்களுக்கு முன்னரே வெளியானது தாய்மடியில் எனத்தொடங்கும் இப்பாடல் . கைலேஷ் என்பவர் இப்பாடலை பாடியுள்ளார்.
இந்த தாய்மடியில் பாடல் தாலாட்டு பாடலாக உள்ளது. அம்மா மகனுக்காக பாடும் தாலாட்டல்ல, மகன் அம்மாவுக்காகவோ அம்மாவாக நினைக்கும் உயிருக்காகவோ
ஏங்கி பாடும் தாலாட்டு வகையைச்சார்ந்தது.
ஏற்கனவே இளையராஜா அவர்கள் தன்னிசையால் பெரும்மக்களுக்கு தாலாட்டு பாடுகிறார். ஆனால் இதுவோ தாலாட்டு பாடலாகவே அமைந்திருக்கிறது .
” சோகம் தாங்கி பாரம் இறக்க யாரும் இல்லையே.. தாகம் தீர்க்க சுணையாய் இங்கு கருணை இல்லையே . “
மேலே உள்ள பாடல் வரிகள் யாருமற்ற தனிமையின் வலியை உணர்த்துகிறது. சோகங்களும் ரணங்களும் நிரம்பியிருக்கும் இவ்வாழ்வில் மகிழ்வே இல்லாதவர்களுக்கும் உயிரிடம் அன்பை காட்ட யாருமில்லை என்பதெல்லாம் எவ்வளவு கொடுமையான விஷயம்..?
இத்தகைய தனிமையை வரிகளில் நிரப்பியிருக்கிறார் பாடலாசிரியர் மிஷ்கின். ஆம் ! தாய்மடியில் பாடல்வரிகளுக்கு சொந்தக்காரர் மிஷ்கின் அவர்களே.
சைக்கோ படத்தில் இதுவரை வெளிவந்த மூன்று பாடல்களுமே வலி, காதல், ஏக்கம் என ஒலிக்கிறது. அதே சமயம் ஆறுதல் ஒலியையும் தந்து மனம் தேற்றுகிறது.
தூய தேன் அருந்தும் போது தொண்டையில் ஒருவித எரிச்சலை உண்டாக்கும். மருத்துவ குணம் கொண்ட தேன் ஏன் எரிச்சலை ஏற்படுத்துகிறது என்று தெரியுமா?
தேன்
அனைவருக்கும் பிடித்த ஒன்று. இது இனிய உணவுப் பொருள் மட்டும் அல்ல மருத்துவ குணம் வாய்ந்ததும் கூட. அனைவரும் விரும்பி உண்ணும் மருத்துவ குணம் வாய்ந்த தேன் நமது தொண்டையில் எரிச்சலை உண்டாக்குமா???
தூய தேன்
பூக்களில் இருந்து பெறப்படும் ஒருவகை இனிப்பான வழுவழுப்பான திரவமே தேனீக்கள் மூலம் தேனாக மாற்றப்படுகிறது.
இவ்வாறு பெறப்படும் தேனில் குளுக்கோஸ், ப்ரக்டோஸ், நீர், பாலிஃபீனால், புரதங்கள், அமினோஅமிலங்கள், வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடென்ட்டுகள் போன்றவை நிறைந்துள்ளன.
நோய் எதிர்ப்பு சக்தி
தூய்மையான தேன் நமது உடலில் உள்ள கிருமிகளை வளரவிடுவது இல்லை. இது ஒரு கிருமி நாசினி.
நம் உடலில் உள்ள எந்தவகையான நோய்க்கும் தேன் ஒரு மிகச்சிறந்த மருந்தாக இந்நாள் வரை இருக்கிறது.
தேன் தானும் கெடாமல் தன்னோடு சேரும் பொருளையும் கெடாமல் பாதுகாக்கும் தன்மை உடையது.
தொண்டை எரிச்சல்
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது தேனிற்கும் பொருந்தும். மலர்களில் இருந்து தேனீக்களின் மூலம் சேகரிக்கப்படும் தேனில் குளுக்கோஸ் 40% முதல் 80% வரை நீர் நிறைந்ததாக இருக்கும்.
ஆனால், உற்பத்தி செய்யும் தேனில் 16 முதல் 18% மட்டுமே நீர் இருக்கும். இதுவே தேனின் கெட்டித்தன்மைக்கு காரணம் ஆகும்.
இதனால் தான் தூய தேன் உட்கொள்ளும் பொழுது தொண்டையில் கரகரப்பை ஏற்படுத்துகிறது. அதுவே அதிகமாக உட்கொண்டால் சற்று எரிச்சலை உண்டாக்கும். அளவோடு உட்கொண்டால் எரிச்சலை தவிர்க்கலாம்
குடியரசு தினம் முதல் அரசியலமைப்பு முகவுரை வாசிப்பு கட்டாயம்
மஹாராஷ்டிரா முழுவதும் உள்ள பள்ளிகளில் அரசியலமைப்பு முகவுரை வாசிப்பு கட்டாயமாக்கப்பட உள்ளது.
வரும் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று இது அமல்படுத்தப்பட உள்ளது. மஹாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிட்டத்தக்கது.
அமைச்சரின் அறிவிப்பு
மஹாராஷ்டிரா பள்ளிகளில் அரசியலமைப்பு முகவுரை வாசிப்பை கட்டாயமாக்க மஹாராஷ்டிரா அமைச்சர் அறிவித்துள்ளார்.
காலை இறைவணக்கத்தின் போது மாணவர்கள் இதையும் வாசிப்பார் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
குடியரசு தினம்
வரும் ஜனவரி 26 குடியரசு தினத்தில் இருந்து மஹாராஷ்டிராவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அரசியமைப்பு முகவுரை வாசிப்பு கட்டாயமாக்கப்படுகிறது.
இதன் மூலம் குழந்தைகள் தங்கள் அரசியலைப்பு சட்டம் குறித்தும் அதன் கொள்கைகள் குறித்தும் தெரிந்துகொள்ள இது வாய்ப்பாக அமையும் மற்றும் அது சார்ந்த மற்ற சட்டங்கள் குறித்தும் மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும்.
மேலும், ஒரு மாணவன் அவ்வாறு அரசியலமைப்பு முகவுரை வாசிக்கவும் உறுதிமொழி எடுக்கவும் ஆரம்பித்தால் அது அவனது குடியுரிமை பற்றிய உணர்வை அவனுள் உண்டாக்கும்.
தான் ஓர் இந்தியக்குடிமகன் என்பதை அவனை உணர வைக்கும். மேலும் நமது அரசியல் அமைப்பு கூறுகள், அதன் அர்த்தங்களை புரிந்து கொள்ள முடியும் என்பது போன்ற தனது கருத்தை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் பகிர்ந்து கொண்டார்.
டிரம்ப் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. என்ற ஒரு குற்றச்சாட்டுகளும் இல்லை என வெள்ளைமாளிகை தெரிவித்துள்ளது.
வெள்ளமாளிகை, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது தற்போதைய குற்றச்சாட்டு விசாரணை தவறானது என்று கூறியுள்ளது. ஏனெனில், திரு.டிரம்ப் எந்த குற்றவியல் நடவடிக்கையும் செய்யவில்லை என கூறியுள்ளது.
சட்ட அறிஞர் ஜோனதன் டர்லி பார்வை
இந்த வாதத்தை அவர் ஆழ்ந்த குறைபாடு உடையதாக கருதுகிறார். ஏனெனில் வெள்ளை மாளிகை தனது பாதுகாப்பை அமைப்பதில் கவனம் காட்டுகிறது. காரணம் பதவி நீக்க விசாரணை செல்லாது என அவர்கள் வாதிடுகின்றனர்.
பேராசிரியர் அலன் டெரோவிட்ஸ் இந்த நாடகத்தை செனட் அரசியல் ரீதியில் செல்லாததாக தள்ளுபடி மட்டுமே செய்ய முடியும் என்று நம்புகிறார்.
கடந்த கால தடைகள்
வாதம் என்பது நிலையான “உயர்ந்த குற்றங்கள் மற்றும் தவறான நடத்தைகள் “ என்ற ஒரு நேரடி வாதத்தை அடிப்படையாக கொண்டது.
கடந்த காலத்தில் நீதித்துறை மற்றும் ஜனாதிபதி தடைகளில் அமெரிக்காவில் பழைய கொள்கையுடைய வர்க்கமோ அல்லது இங்கிலாந்தில் இத்தகைய குற்றச்சாட்டுகளோ எந்தக் கருத்தையும் காணவில்லை .
இங்கிலாந்து தடைகளை எதிர்த்து நிற்கும் அமெரிக்க குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் குற்றமற்ற குற்றச்சாட்டுகளில் நின்றன.
1604-ம் ஆண்டில் பிரிஸடல் பிஷப் ஜான் தோன்பரோவ், ஸ்காட்லாந்தின் சர்ச்சைக்குரிய யூனியனில் ஒரு புத்தகத்தை எழுதுவதற்கு தடைசெய்யப்பட்டார்.
சட்டப்படியான அதிகாரிகளை நியமிப்பது, காரணமற்ற அதிகாரிகளை நியமிப்பது போன்ற குற்றங்களுக்காக 1386-ல் மைக்கேல் டி-லா போல் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
சட்டங்களை நிறைவேற்றுவதற்கு தடையாக சில நபர்களுக்கு சுதந்திரங்களையும் சலுகைகளையும் வழங்க அரசுக்கு ஆலோசனை கூறிக்கொண்டார் .
அமெரிக்க செனட் நிராகரிப்பு
ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் விசாரணை தொடங்கியதும், புதிய சாட்சிகளைப் பெற புதிய ஜனநாயக முயற்சிகளை அமெரிக்க செனட் நிராகரித்தது.
குடியரசு கட்சியின் பெரும்பான்மை கட்சித் தலைவர் மிட்ச் மெக்னெல் இதற்கிடையில் சக குடியரசு கட்சியினரின் அழுத்தத்தின் கீழ் வரும் விசாரணைகளை துரிதமாக விசாரிக்கும் திட்டத்தை நிராகரித்தார். டிரம்ப் அதிகாரத்தை பயன்படுத்தி காங்கிரஸ் விசாரணையை தடுக்கிறார்.
விசாரணை காலம்
சுவிட்சர்லாந்தில் உலக பொருளாதார இயக்ககம் செவ்வாயன்று, டிரம்ப் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஒரு ஏமாற்றும் செயல் எனக் கூறி நிராகரித்திருக்கிறது.
அமெரிக்க வரலாற்றில் மூன்றாவது முறை ஒரு ஜனாதிபதி பெரிய குற்ற விசாரணையை எதிர்நோக்கியுள்ளார்.
எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை. கடந்த மாதம் ஜனநாயகத் தலமையிலான பிரதிநிதிகளால் டிரம்ப் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
அவரது சக குடியரசுக் கட்சியினரால் கட்டுப்படுத்தப்படும் செனட், ஜனாதிபதியை தண்டிக்கவும் அவரை பதவியில் இருந்து அகற்றவும் எதிர்பார்க்கப்படவில்லை.
ஜனாதிபதியின் சட்டகுழு முன்னதாக அவர் உடனடியாக விடுவிக்க பட வேண்டும் என்று கோரிய போது இந்த விசாரணை அரசியலமைப்பின் ஆபத்தான வழியில் தவறானது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
இறந்தவர்களின் அஸ்தி கங்கையில் ஏன் கரைக்க வேண்டும்? கங்கை பூமிக்கு வந்த வரலாறு என்ன? சடலங்களை கங்கையில் வீசுவது சரியா?
இந்தியாவில் எண்ணற்ற நதிகள் இருப்பினும் இந்தியாவின் தேசிய நதி என்று கூறப்படும் நதி “கங்கை” ஆகும். இது இந்தியா மற்றும் வங்கதேசத்தில் பாய்கின்றது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி எனும் இடத்தில் “பாகீரதி” எனும் பெயரில் பிறந்து தேவபிரயாக் என்ற இடத்தில் அலக்நந்தா என்ற நதியுடன் கலந்து ௧ங்கை என பெயர் பெறுகிறது.
கங்கையானது 2525 கிமீ வரை பாய்கின்றது. ரிஷிகேஷ், ஹரிதுவார், அலகாபாத், பாட்னா, வாரணாசி, கொல்கத்தா ஆகியவை இதன் நதிக்கரையில் அமைந்த நகரங்கள் ஆகும்.
இந்நகரங்கள் வழியே பாய்ந்து வங்காள விரிகுடாவை அடைகின்றது. கங்கையின் பெருமைகளை கூறிக் கொண்டே போகலாம்.
இருப்பினும் இந்துக்களின் புனித நதி என்று கூறப்படும் கங்கையில் இந்துக்கள் மட்டுமின்றி சமண, புத்த சமயத்தோரும் தங்களின் வாழ்வின் முக்கிய கடமையாக இறந்தவர்களின் அஸ்தியை கங்கையில் கரைகின்றனர்.
அப்படி கரைத்தால் இறந்தவர்கள் சொர்கத்தை அடைகின்றனர் என்று நம்புகின்றனர். இதன் பின்னனியில் உள்ள கதையை பார்ப்போம்.
கங்கை பூமிக்கு வந்த வரலாறு
சூரிய குலத் தோன்றலாகிய திலீபன் என்ற மன்னனின் மகன் பகீரதன். அவர் தன் முன்னோர்கள் சாபத்தால் இறந்து ஆத்ம சாந்தியற்று இருப்பதை வசிஷ்டர் மூலம் அறிந்தார்.
அவர்கள் சுவர்க லோகம் அடைய உபாயம் வேண்டி பிரம்மாவை நோக்கி 10,000 ஆண்டுகள் தவம் புரிந்து பிரம்மாவின் காட்சியைப் பெற்றார்.
பிரம்மா இவரின் முன்னோர்கள் சாபம் தீர தேவலோக நதியான கங்கை நீர் இவரின் முன்னோர்கள் சாம்பல் மீது பட வேண்டும் என்று கூறினார். பகீரதனும் கங்கையை நோக்கி கடும் தவம் புரிந்தார்.
தவத்தால் மகிழ்ந்த கங்கை பூமிக்கு வர சம்மதித்து தன்னுடைய வேகத்தை கட்டுப்படுத்த இயலாது. அவளின் முழு வேகத்தில் பூமிக்கு பாய்ந்தாள் பூமி அழிந்து விடும் எனக் கூறினார்.
தன் வேகத்தை கட்டுப்படுத்த சிவபெருமானால் தான் இயலும் என்றார். பகீரதன் சிவனை வேண்டி நின்றார் அவரும் கங்கையின் வேகத்தை கட்டுப்படுத்த சம்மதித்தார்.
கங்கையும் மிகவும் ஆவேசமாக பூமி தாங்க இயலாத வேகத்தில் பாய்ந்தாள். இதனை கண்ட சிவன் தன் சடாமுடியை விரித்து அதில் கங்கையை சிறைப்பிடித்தார்.
பகீரதனும் சிவனின் சடாமுடியில் அடைப்பட்ட கங்கையை பூமிக்கு அனுப்ப வேண்டுமாறு வேண்டினார்.
சிவனும் பூமி தாங்கும் அளவிற்கு கங்கையை பாகீரதனுடன் அனுப்பினார். பிந்து சரஸ் மலை மீது பாயச் செய்தார். பாகீரதன் மூலம் பூமிக்கு வந்ததால் “பாகீரதி” எனப்பெயர் பெற்றாள்.
அஸ்தியை கரைத்தால் சாபம் நீங்கும்
பிந்து சரஸ் மலையிலிருந்து கங்கை பூமியெங்கும் பாய்ந்தாள். பகீரதன் முன்னோர்களின் சாம்பல் மீது பட்டு சாபம் நீங்கி சுவர்கலோகம் அடைந்தனர்.
கங்கையும் இமயத்திலிருந்து தான் பாய்ந்த இடம் முழுதும் செழுமையாக மாற்றி அனைவரின் பாவங்களையும் போக்கினாள்.
இதனால் தான் இன்றளவும் இறந்தவர்களின் சாம்பலை (இறந்தவர்களின் அஸ்தி) கங்கையில் கரைத்தால் அவர்களின் சாபம் நீங்கி நற்கதி் அடைகின்றனர் என நம்பப்படுகிறது.
கங்கையில் சடலங்கள் வீசுவது சரியா?
கங்கையானது 5-வது மாசு அடைந்த நதியாக 2007 இல் கணக்கிடப்பட்டுள்ளது. மனிதர்கள் சாம்பலை மட்டும் கரைக்காமல் பல்வேறு பொருட்களை கங்கையிலே போடுவதனால் இந்த மாசு ஆனது ஏற்படுகின்றது.
இறந்தவர்களின் சடலைத்தை கூட கங்கையில் சேர்க்கின்றனர். பாவம் போகும் என்ற நினைப்பில் பாவ காரியங்களையே செய்கின்றனர்.
இது போன்ற செயலால் கங்கையை நம்பி உள்ள நீர் வாழ் உயிரினங்கள் மடிகின்றன. ஒருபிடி சாம்பல் சேர்ப்பதே போதுமானது இறந்தவர்கள் நற்கதி அடைவர்.
மாறாக இறந்தவர்களின் உடைமைகள், பிளாஸ்டிக் பொருட்கள் எல்லாம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று எந்த புராணத்திலும், வேதத்திலும் இல்லை. நம்பிக்கை இருக்கலாம் ஆனால் மூட நம்பிக்கைகள் கூடாது.
இனியாவது கங்கையை தூய்மையாக வைத்து நாமும் பாவங்களைப் போக்கி நற்கதி அடைவோம்.