Home Blog Page 270

கரோனா வைரஸ்: ஆறு நாட்களில் அதிநவீன மருத்துவமனை

0
கரோனா வைரஸ்

கரோனா வைரஸ்: ஆறு நாட்களில் அதிநவீன மருத்துவமனை ஒன்றைக் கட்டும் திட்டத்தை துவங்கியுள்ளது சீன அரசு.

சீனா: ஹீபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹான் நகரில் அதிநவீன மருத்துவமனை ஒன்றை கட்டும் முயற்சியில் சீன அரசு இறங்கியுள்ளது.

கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க இந்த மருத்துவமனை கட்டப்பட உள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

கரோனா வைரஸ் அதிநவீன மருத்துவமனை

கரோனா வைரஸ் coronavirus

சீனாவின் தலைநகரான ஹீபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மர்மக்காய்ச்சலால் இருவர் உயிரிழந்ததை தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு கரோனா வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வேகமாக பரவும் கரோனா

தற்போதைய தகவலின் படி சீனாவில் கரோனா வைரஸினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41-ஆக அதிகரித்து உள்ளது. மேலும் 1200க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது.

சமீபத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் வூஹான் நகரைச் சேர்ந்தவர்கள் என்பதால் சீனா முழுவதும் இவ்வைரஸ் பற்றிய பயம் தொற்றி உள்ளது.

சீனாவை மட்டும் அல்ல உலக நாடுகள் அனைத்திற்கும் பயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சீனா முழுவதும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதி நவீன மருத்துவமனை

அதிநவீன மருத்துவமனைவூஹான் மறுத்துவமையில் நீண்ட வரிசையில் கூட்டம் அதிகமாக அலைமோதுவதால் பலர் மருத்துவ உதவி பெறாமலேயே வீடு திரும்புகின்றனர்.

இதனை சரி செய்து அவர்களுக்கும் மருத்துவ உதவிகளை வழங்க சீன அரசு முடிவெடுத்தது. இதனால், 6 நாட்களில் மிக அவசரமாக ஆதி நவீன மருத்துவமனை ஒன்றை கட்டத் திட்டமிட்டுள்ளது.

அதிநவீன மருத்துவமனை பணிகள் நேற்று துவங்கிவிட்டது. வரும் பிப்ரவரி மாதம் இந்த அதி நவீன மருத்துவமனை திறக்கப்பட உள்ளது.

நோய் பரவாமல் தடுக்க முன்னேற்பாடுகள்

மேலும் நோய் பரவாமல் இருக்க 10 நகரங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இரண்டரை கோடி மக்கள் வாழும் ஹூவாங்ஷி நகரில் படகுப் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் மூன்றரை கோடி மக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வெஜ்க்கு மாறும் சீனர்கள்

பாம்பின் கறியிலிருந்து இந்த வைரஸ் பரவி இருக்கலாம் என சீன விஞ்ஞானிகள் கூறுவதால் சீனர்கள் அவர்களின் உணவு பழக்கங்களை மாற்றி வருகின்றனர்.

ஊர்வன பறப்பனவற்றை விட்டு காய்கறியின் மீது நாட்டம் கொண்டுள்ளனர். எனினும் வைரஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

தமிழகத்தில் முன்னேற்பாடு

கரோனா வைரஸ் தமிழகத்தில் இல்லை என பொதுசுகாதார இயக்குனர் குழந்தைசாமி கூறியுள்ளார்.

மேலும் இந்த கரோனா வைரஸ் குறித்து குழந்தைசாமி தெரிவித்ததாவது, “காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல் ஆகியவை இதன் அறிகுறியாகும்.

இது மற்றுமொரு நிமோனியா போன்றது. பன்றிக்காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த வகை வைரஸை கண்டறிய பூனேவில் உலக தேசிய வைராலஜி நிறுவனம் மற்றும் சில நிறுவனங்களும் தயார் நிலையில் உள்ளன.

அரசு ராஜுவ் காந்தி பொது மருத்துவமனையில் 8 படுக்கை வசதி கொண்ட தனியறை அமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

எதற்கும் பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது மிகவும் அவசியம். ஒரு நோய் வரும் முன் காப்பதே சிறந்தது.

3

Master Third Look Poster: மாஸ்டர் கிளாஸ் லூக்

1
Master Third Look Poster மாஸ்டர் கிளாஸ்

Master Third Look Poster: மாஸ்டர் கிளாஸ் ஆக வெளியாக உள்ளது. விஜய், விஜய்சேதுபதி இணைந்து இப்போஸ்டரில் இருக்கவேண்டும் என்பது ரசிகர்கள் எதிர்பார்ப்பு.

Mastar Tamil Movie

தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கைதி புகழ் அர்ஜுன் மற்றும் பலர் நடித்துள்ள படம்  மாஸ்டர்.

இப்படத்தை மாநகரம் மற்றும் கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்குகிறார். கத்தி திரைப்படத்திற்கு பிறகு அனிருத், விஜய் நடிக்கும் படத்திற்கு இசையமைக்கிறார்.

மாஸ்டர் படத்திற்கான எதிர்பார்ப்புகள் ஏற்கனவே சமூகவலைதளங்களில் மாஸ் காட்டிக்கொண்டிருக்கிறது.

கைதி திரைப்படத்தின் தரமான வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீது சினிமா இரசிகர்களுக்கு அதீத நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இவர் வித்தியாசமான கதையைக்கூறி விஜய் அவர்களிடம் ஓகே வாங்கியிருப்பார் என்ற ஆவல் சினிமாத்துறையில் உள்ளவர்களுக்கே இருக்கிறது.

மேலும், வேறு மாதிரியான விஜய் அவர்களை மாஸ்டர் திரைப்படத்தில் பார்க்கலாம் என்ற எண்ணமும் ரசிகர்களிடத்தில் உள்ளது.

Master Third Look Poster

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் நாளை ஜனவரி 26-ம் தேதி மாலை 5 மணியளவில் வெளியாகிறது.

ஏற்கனவே இரண்டு போஸ்டர்கள் மாஸ்டர் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த இரு போஸ்டர்களிலும் தளபதி விஜய் அவர்கள் மட்டுமே இருப்பார் தனித்தே மாஸ் & க்ளாஸ் ஒரு சேர காட்டியிருப்பார்.

இந்நிலையில் நாளை வெளியாகவிருக்கும் Third look போஸ்டரில் விஜய்சேதுபதியும் விஜய்யும் இணைந்து தோற்றமளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் நாளை 5 மணிக்காக தீவிர எதிர்பார்ப்பில் உள்ளனர் .

மாஸ்டர் திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 9-ம் தேதி திரைக்கு வரவிருப்பதாக படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3

TNPSC Group 4 முறைகேடு: தோண்ட தோண்ட கிளம்பும் பூதம்

0
TNPSC Group 4 முறைகேடு தோண்ட தோண்ட கிளம்பும் பூதம்

TNPSC Group 4: டி‌என்‌பி‌எஸ்‌சி குரூப் 4 முறைகேடு செய்தவர்களை: போலீசார் அதிரடியாக கைதுசெய்து வருகின்றனர். தோண்ட தோண்ட கிளம்பும் பூதம் கதை போல் உள்ளது.

TNPSC Group 4 முறைகேடு

டி‌என்‌பி‌எஸ்‌சி குரூப் 4 முறைகேடு புகாரின் பேரில் 99 பேருக்கு வாழ்நாள் தடை விதித்துள்ளது டிஎன்பிஎஸ்சி. மேலும், இவர்கள் 99 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாகவும் அறிவித்துள்ளது.

டி‌என்‌பி‌எஸ்‌சி குரூப் 4 தேர்வு

TNPSC Group 4 முறைகேடு 99 பேர் தகுதி நீக்கம் 99 பேர் தகுதி நீக்கம்சாமானியனின் கனவும், வாய்ப்பும், அவன் எதிர்காலமும் அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் வெற்றி பெறுவதேயாகும்.

சமீபகாலமாக அதுவும் கனவாகிப்போகிறது. 9-ம் காலிப்பணியிடங்களுக்கு என செப்டம்பர் மாதம் 1-ம் தேதி நடைபெற்ற தேர்வில் 16 லட்சத்து 29 ஆயிரத்து 865 பேர் கலந்து கொண்டனர்.

தமிழகம் முழுவது சுமார் 5575 மையங்களில் தேர்வு நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு குரூப் 4 பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு இத்தேர்வு நடைபெற்றது.

சமீபத்தில் தேர்வு முடிவு வெளியாகி தரவரிசைப் பட்டியலும் நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது.

தேர்வில் முறைகேடு

நவம்பர் மாதம் வெளியாகிய குரூப் 4-ன் தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் 35 பேர் இராமநாதபுரம். கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

8 மையங்களில் 39 பேர் முதல் 100 இடத்தில் வெற்றி பெற்றது அதிகாரிகளிடையே சந்தேகத்தை உண்டாக்கியது.

இதையடுத்து டிஜிபி திரிபாதியிடம் டிஎன்பிஎஸ்சி புகார் அளித்ததை தொடர்ந்து தேர்வானவர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தினர்.

99 பேர் தகுதி நீக்கம்

குரூப் 4 தேர்வில் நடைபெற்ற முறைகேட்டிற்கு தேர்வு அதிகாரிகளும் உடைந்தை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 13-ம் தேதி நடைபெற்ற முதல்கட்ட விசாரணையில் தேர்வுப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் துணையுடன் விடைத்தாள்கள் மாற்றம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து டிஎன்பிஎஸ்சி அமைப்பு, முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேர் தகுதி நீக்கம் செய்தும், அவர்களுக்கு வாழ்நாள் தடையும் விதித்துள்ளது.

மேலும் முறைகேடு செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

அழியக்கூடிய மை கொண்ட சிறப்பு பேனா 

இது தொடர்பாக சென்னையில் 12 பேரிடம் விசாரணை நடத்தியதில் 3 பேரை கைது செய்தது சிபிசிஐடி போலீஸ். அதில் ஒருவர் இடைத்தரகர் என்பதும் தெரியவந்துள்ளது.

கைதானவர்களில் ஒருவர் கூறியது அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்தது. சிலமணி நேரங்களில் அழிந்து விடும் சிறப்பு மை கொண்ட பேனாக்களால் முதலில் தேர்வு எழுதியுள்ளனர்.

அந்த மை அழிந்த பிறகு இடைத்தரகர்களின் உதவியால் மீண்டும் அந்த விடைத்தாள்களில் சரியான விடையை நிரப்பியுள்ளனர். பின்னர் விடைத்தாள் கட்டுகளில் வைத்துத் திருத்தும் இடத்திற்கு அனுப்பியுள்ளனர்.

தேடுதல் வேட்டை தொடரும்

இன்று ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்ற மேலும் ஒரு இடைத்தரகர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அனைவரையும் கைது செய்து தண்டனை வழங்கும் வரை டிஎன்பிஎஸ்சியும் காவல்துறையும் ஓயாது எனவும், எங்கள் மேல் நம்பிக்கை வைத்து தொடர்ந்து நீங்கள் பரீட்சை எழுதுங்கள் எனவும் இனி இதுபோல முறைகேடு நடைபெறா வண்ணம் நடவடிக்கை எடுப்பதாகவும் டிஎன்பிஎஸ்சி ஆணையம் உறுதியளித்துள்ளது.

தோண்ட தோண்ட கிளம்பும் பூதம் கதை போல் உள்ளது இந்த TNPSC Group 4 தேர்வு விவகாரம்.

3

கடவுள் எங்கு உள்ளார்? எந்த காரியத்தால் மகிழ்கிறார்?

0
கடவுள் எங்கு உள்ளார்? குரு என்பவர் எப்படி இருக்க வேண்டும்?

கடவுள் எங்கு உள்ளார்? எந்த காரியத்தால் மகிழ்கிறார்? எப்படி அவரை அடைவது? கடவுளை மகிழ்விப்பது எப்படி? கடவுள் எந்த மதம்? குரு என்பவர் எப்படி இருக்க வேண்டும்?

கடவுள் எங்கே உள்ளார்?ஆன்மீக பூமி என்று கூறப்படும் அளவிற்கு நமது நாடானது ஆன்மீகத்தில் அலாதியான ஈடுபாடு மற்றும் நம்பிக்கை கொண்டு விளங்குகிறது.

இங்கு மத நம்பிக்கைகள், சடங்குகள் போன்றவற்றிக்கு பஞ்சமே இல்லை. நம்பிக்கைக்கு ஏற்ப மூட நம்பிக்கைகளும் மேலோங்கி தான் உள்ளது.

மொத்தத்தில் கடவுளின் பெயரை சொல்லி பெரிய வியாபாரமே நடக்கின்றது. கோவிலுக்குச் சென்றுவிட்டு அடுத்தவர்கள் வீட்டிற்குச் சென்றால் கடவுளின் அருள் நாம் செல்பவரின் வீட்டிற்கே போய்விடும் என்ற அளவிற்கு மூட நம்பிக்கைகளில் வீழ்ந்து கிடக்கிறோம்.

தினமும் கடவுளைத்தேடி அழைகின்ற கூட்டம் சென்று சேரும் ஒரே இடம், குருமார்கள் என்று கூறி வெளிச்சாயம் பூசி ஏமாற்றும் சந்நியாசிகளிடமும், சாமியார்களிடமும் தான். உண்மையில் கடவுள் எங்கு உள்ளார்.

வாழ்வில் குருவின் முக்கியத்துவம்

கடவுள் எந்த மதம்? குரு என்பவர் எப்படி இருக்க வேண்டும்?

குரு இல்லாமல் இறை நிலையை அடைய இயலாது அது எல்லா மதத்திற்கும் பொருந்தும். குருமார்கள் என்பவர்கள் வழிகாட்டிகள். வழி தெரியாமல் தவித்து நிற்கும் ஆன்மாவிற்கு முறையான பாதையை அமைத்து நாம் சென்று சேரும் இடத்தை அடைய பாதை வகுத்தளிப்பவர்கள்.

கடலில் பயணிக்க ஓடம் இருந்தும் துடுப்பு இல்லாமல் நகரமுடியாது. அதுபோல வாழ்க்கை கடலென்றால் மதம் ஓடம் போன்றது, அதில் ஏறி பயணிக்க குரு ஒரு துடுப்பு போன்றவர் சென்று சேரும் இடமே இறைநிலை.

குரு என்பவர் எப்படி இருக்க வேண்டும்?

இன்று குருமார்கள் என்பவர்கள் எவ்வாறு உள்ளனர் என்று எண்ணிப் பார்ப்போம். பணத்தை மட்டுமே தேடி தாமே கடவுள் என்று கூறி மக்களின் செல்வத்தை எல்லாம் பறித்து நிற்கதியில் விடுபவர்களே பெரிய குருமார்கள் என்று நம்பப்படுகின்றனர். மக்களும் அவர்களையே ஏற்கின்றனர்.

சுய நலமற்ற, எந்த ஒரு பொருளின் மீதும் மோகம் இல்லாமல் நல்வழிகளை வழங்குபவர்களே சிறந்த குருவாக இருக்க முடியும். அப்படிப்பட்ட குருமார்களை தேர்வு செய்ய வேண்டும்.

ஆதிசங்கரர், இராமானுசர், இராமலிங்க வள்ளலார், இராகவேந்திரர், இராமகிருஷ்ணர், விவேகானந்தர், குருநானக் போன்ற எண்ணற்ற தன்னலமில்லா குருமார்கள் வாழ்ந்த தேசத்தில் இன்று ஆதிசங்கரரோ அல்லது சுவாமி விவேகானந்தரோ வாழ்ந்தால் கூட அவர்களை ஏற்க மறுக்கும் அளவிற்கு இன்றைய வியாபார ஆன்மீகம் பெருத்துவிட்டது என்றால் மிகையாகாது.

கண்ணால் காணும் குருமார்களுக்கே இந்த நிலையென்றால் கண்ணால் பார்த்திராத கடவுளின் நிலை அதற்கும் மேல்.

சிவனோ, விஷ்ணுவோ எதிரில் நின்று நான் தான் நீ வணங்கும் சிவன் அல்லது விஷ்ணு என்று கூறினால் கூட, எங்கே சடாமுடி, சூலம், நாகம், சக்கரம், நான்கு கரங்கள்? நீ பொய்யுரைகிறாய் நான் வணங்கும் கடவுள் நீ இல்லை என்று கூறி அவர்களை நம்ப மறுக்கும் அளவிற்க்கு மூடர்களாக நம்மை மாற்றி வைத்துள்ளனர் பல குருமார்கள்.

கடவுள் எங்கு உள்ளார்?

முதலில் நாம் வணங்கும் இறைவன் எங்கே இருக்கிறார் என்றால் கைலாயம், வைகுண்டம், சத்திய லோகம் என்பதை எல்லாம் மறக்க வேண்டும்.

பிறகு கடவுள் எங்கு உள்ளார் என்று கேட்கின்றீர்களா? இறைவன் நம்முடன் இருக்கிறார் என்பதை நம்ப வேண்டும்.

அப்படி தம்முள்ளே இருக்கும் இறைவனை கண்டவர்கள் தான், நாம் மேலே கூறிய குருமார்கள் அனைவரும். இதனை தான் சித்தர்களும், ஞானிகளும் நம்பினார்கள் இறைநிலையை அடைந்து இன்றளவும் சாகா வரத்துடன் வாழ்ந்தும் வருகிறார்கள்.

“ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்
வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறைந்த கோடியே”
சிவவாக்கியம்

இந்த பாடலின் மூலம் சிவவாக்கியர் இறைவன் எங்கே உள்ளார் என்பதை விளக்குகின்றார். நம் உள்ளிருக்கும் இறைவனை தேடி ஓடி அலைந்து கடைசி வரை காணமுடியவில்லை என்று வாடிப்போய் கோடி கணக்கான மனிதர்கள் மாண்டுபோய் விடுகின்றனர் என்று எடுத்துரைத்துள்ளார்.

இது போன்ற எண்ணற்ற நூல்கள் எடுத்துரைத்தாலும் நாம் இன்னும் நம்பாதவர்களாக குருடர்களாக தேடி அலைந்து ஈட்டிய செல்வத்தை எல்லாம் கொண்டு சேர்க்கும் ஒரே இடம் போலியான குருமார்களின் ஆஸ்ரமங்கள் மற்றும் மடங்களில் தான்.

கடவுள் எந்த மதம்?

இறைவனை மதங்கள் மூலம் பிரித்து வைத்துள்ளனர். அவர் அளாதியானவர். எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர். அவருக்கு எல்லை இல்லை.

நீ சிவம் என்றால் சிவனாவும், விஷ்ணு என்றால் விஷ்ணுவாகவும், அல்லா என்றால் அல்லா ஆவார், ஏயேசு என்றால் அவரே ஏயேசுவாகவும் உள்ளார்.

நீ எதை நம்புகிறாயோ அதுவாகவே அவர் ஆகிறார். நீ உன்னுள்ளே இருக்கும் இறைவனை காண அரம்பித்தால் வெளியில் இருக்கும் பிம்பத்தை மறந்து விடுவாய்.

பக்தி இப்பொழுது எப்படி இருகின்றது?

பக்தியும் நம்பிக்கையும் தான் அவரை காண இயலும் வழிகள் பக்தி இப்பொழுது எப்படி இருகின்றது என்றால் அதுவும் சுயநலத்துடன் தான் உள்ளது.

திருக்கோவில் பணிகளில் கூட கல்வெட்டில் பெரியதாக பெயர் வரும் என்பதற்காகவே பணத்தை செலவிடுகின்றனர் அதற்காக சண்டையும் இடுவதை பார்த்திருகின்றோம்.

40 ரூபாய் மின்விளக்கில் கூட பெயர் எழுதித்தான் வைக்கின்றனர். இதுதானா பக்தி, இதைத்தான் இறைவன் விரும்புகின்றாரா? இதுபோன்ற தற்பெருமை பக்தியில் கூடாது

மந்திரங்கள் கூறுவதாலும் பணத்தை கொட்டுவதாலும் பால் பழங்களை ஊற்றுவதாலும் பக்தியில் சிறந்தோன் என்று ஆகி விட முடியாது.

“நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே சுத்தி வந்து முண முணென்று சொல்லும் மந்திரம் ஏதடா? நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்? சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?”
                               -சிவவாக்கியம்

இது நார்தீக ரீதியான பாடல் போல் இருக்கலாம் ஆனால் உள்ளிருக்கும் பொருளை ஆராய்ந்தால் நம்முடைய மடமை நிலை புரியும். எப்படி சமைப்பதற்காக பயன்படும் சட்டி அதனுள் உள்ள கறியின் சுவையை அறியாதோ அதுபோல தான் நாமும் உள்ளிருக்கும் இறைவனை அறிவதில்லை.

“அஹம் பிரம்மாஸ்மி” என்கிறது வேதம். அகத்தில் இருக்கும் பிரம்மத்தை புரத்தில் தேடினால் எப்படி கிடைக்கும்?.

வெறும் சமய சின்னங்களை அணிவதால் மட்டுமே பக்தியில் சிறந்தோன் ஆகிவிட முடியாது. இதில் ஒரே சமயத்தில் எத்தனை பிரிவுகள் வேறு உள்ளன. இறைவன் தன் நெற்றியில் எதை அணிந்துள்ளான் என்று கண்டிலர்.

ஆனால் ஒரே சமயத்தில் வடகலை, தென்கலை என்ற பூசல்கள் ஒருபக்கம். இதுவா இறைவனை அடையும் வழி? சிந்தித்து செயலாற்ற வேண்டும்.

கடவுள் மீது நம்பிக்கை வேண்டும்

சரி வெளியில் பூசிக்கும் இறை பிம்பதிற்காவது உண்மையான பக்தியை செலுத்துகிறோமா என்றால் அதுவும் இல்லை.

பசித்து அழும் ஆதரவற்ற குழந்தைகளை விடுத்து குடம் குடமாக பாலும் தேனும் கொண்டுபோய் இறை வடிவங்கள் மீது ஊற்றினால் இறைவன் மகிழ்கிறாரா?

மந்திரங்கள் கூறி பெரிய வேதவிர்பனர்களுக்கு தானங்களை வாரி வழங்கினால் இறைவன் மகிழ்கிறாரா?

இறைவனின் பெயருக்கே அர்ச்சனைகள் செய்தால் நினைத்தது நடக்கும் என்று நம்பி அர்ச்சனைகள் செய்தால் மகிழ்கிறாரா?

நீ இன்ன செய்தால் நான் இன்ன தருகிறேன் என்று இறைவனிடமே பேரம் பேசி காரியங்களை சாதிக்க நினைத்தால் மகிழ்கிறாரா?

இது தானா பக்தி? இது தானா நாம் இறைவன் மீது உள்ள நம்பிக்கை? பக்தி என்ற பெயரில் நம்மை நாமே ஏமாற்றி வருகிறோம்.

முதலில் இறைவன் நமக்கு வேண்டியவற்றை தேவையான நேரங்களில் அவரே வழங்குவார் என்ற நம்பிக்கை வேண்டும்.

இறை பக்தி எப்படி இருக்க வேண்டும்?

கடவுளை மகிழ்விப்பது எப்படி? எந்த காரியத்தால் மகிழ்கிறார்?

சைவம், வைணவம், சாக்தம் கௌமாரம், கணாதிபத்யம், சௌரம், புத்தம், சமணம் என்று எந்த சமயத்தை வேண்டுமானாலும் பின்பற்றுங்கள். ஆனால் நிலையான நம்பிக்கையும் எல்லைற்ற பக்தியால் மட்டுமே இறைவன் மகிழ்கிறார்.

தாழ்ந்த சாதி என்று ஒதுக்கி வைத்து கோவிலில் அனுமதிக்காத அந்தனர்களை தாழ் பணிய வைத்தது அல்லவா நந்தனாரின் பக்தி!

அவரின் நம்பிக்கையல்லவா தீயில் இரங்க வைத்து தீயை பூக்களாக மாற்றியது. கோவிலுக்குள் அனுமதித்து.

எவரும் இல்லாத காட்டிலே முதலை வந்து கவ்வியதும் நம்பினால் ஓடி வருவார் என்று எண்ணி ஆதி மூலமே என்றதே அந்த யானை அதல்லவா பக்தி.

ஓடியும் வந்து பக்தனை காத்தாரல்லவா அதல்லவா இறை நம்பிக்கை. யானைக்கு வேதம் தெரியுமா? மந்திரங்கள் தெரியுமா? பின்பு எப்படி அழைத்ததும் வந்தார்? அதுவே யானையின் பக்தி.

அமாவாசை என்று அறியாமல் பௌர்ணமி என்று கூறிய பட்டரின் நம்பிக்கை அல்லவா அமாவாசை இருளிலும் பௌர்ணமியாக நிலவு தோன்றியது. உயர்ந்த பக்திக்கும் நிலவு வரும் என்ற இறை நம்பிக்கைக்கும் கிடைத்த பரிசு தானே அது.

ஒன்றுமறியா அருணகிரிக்கு தூயதமிழால் அடியெடுத்து தந்து பாட வைத்தது வேல் அல்லவா? அங்கல்லவா தூய பக்தி உள்ளது. இப்படி எண்ணற்ற விளக்கங்களை கூறி் கொண்டே போகலாம்.

மூடநம்பிக்கைகளை தகர்த்தல் வேண்டும்

நம்மை படைத்தோனுக்கு நமது பெயர் என்ன? நட்சத்திரம் என்ன என்று தெரியாதா? நமக்கு என்ன தேவை என்ன தர வேண்டும் என்பது தான் தெரியாதா? பிறகு ஏன் நம் பெயருக்கு அர்ச்சனைகள். அதிலும் கடவுள் பெயருக்கே அர்ச்சனை செய்பவர் பலர்.

யாகங்கள் செய்தால் ஏழை பிராமணர்களுக்கு தானம் தரவேண்டும் என்று தான் கூறி உள்ளனர். நாம் அவ்வாறு செய்கிறோமா? அனைத்தும் உள்ளோருக்கு தானம் செய்து என்ன பயன்.

அனைத்து உயிர்களையும் படைத்தவனுக்கு வேண்டுமென்றால் எடுத்து கொள்ள தெரியாதா? அனைவருக்கும் தாய் என்கிறோம் தாயே தன் குழந்தையின் உயிரை கேட்பாளா?

பிறகு ஏன் ஆடு, மாடு, கோழிகளை பலி இடுகிறோம் இதுவா பக்தி. இறைவன் மீது நம்பிக்கை வேண்டுமே தவிர மூட நம்பிக்கையால் ஏமாற்றக் கூடாது.

இறை நிலையை அடைய வழி

கடவுளை மகிழ்விப்பது எப்படி? எந்த காரியத்தால் மகிழ்கிறார்

நீ இறைவனை நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி, அவர் தனது கடமைகளில் இருந்து மாற மாட்டார்.

உனக்கு தேவையானவற்றை உன் பாவம் மற்றும் புண்ணியங்களுக்கு ஏற்றார் போல தகுந்த நேரத்தில் செய்து கொண்டே தான் உள்ளார்.

உனக்குத் திருந்த வாய்ப்பும் வழங்கிக் கொண்டுதான் இருப்பார். அதை ஏற்று மனந்திருந்தி வாழ்வது நம் கையில் தான் உள்ளது.

“படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில்” என்ற முதுமொழிக்கு ஏற்ப வாழ்கின்றனர் இன்றைய பக்திமான்கள்.

பக்தி மார்க்கம் என்பது அதீத நம்பிக்கை கலந்த பக்தி, சரணாகதி மற்றும் அனைத்து உயிர்களையும் சரி சமமாக மதிப்பதே ஆகும்.

இருப்பதை பகிர்ந்து உண்டு அன்பும் செலுத்தி உள்ளிருக்கும் இறை குணத்தை வளர்தாலே போதும் இல்லற வாழ்விலும் மேன்மை அடையலாம் என வாழ்ந்தோர் பலர்.

ஏழைகளுக்கும், உணவில்லாமல் வாடும் அனைத்து உயிரினங்களுக்கும் உதவுங்கள், உணவு வழங்குங்கள் இறைவன் மகிழ்வார்.

வஞ்சகம், போட்டி, பொறாமையை தகர்த்து எறியுங்கள். தகுதியான குருவை தேர்ந்தெடுங்கள் அவரின் மூலம் உண்மையான மெய்ப்பொருளை காணலாம். அனைவரும் இறை நிலையை அடையலாம்.

பாதை எதுவாயினும் சென்று சேரும் இடம் ஒன்றே என்ற உயர்ந்த எண்ணத்தை மனதில் விதையுங்கள். அனைவரும் இறைவனைக் காணலாம்.

3

Ashan Birthday Celebration: உண்மையில் இவர் தெலுங்கு பெண்ணா?

0

Ashan Birthday Celebration: உண்மையில் இவர் தெலுங்கு பெண்ணா? – Fact Check. மீம் கிரியேட்டர்கள் ஏன் இந்த ஜோடிகளை பற்றி மீம்ஸ் போடுகின்றனர். IT Video Link

கடந்த சில நாட்களாக ஒரு ஜோடியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம் இணையத்தில் உலா வந்துகொண்டு இருக்கிறது.

மீம் கிரியேட்டர்கள் வரை இவர்கள் புகைப்படங்களை வைத்து மீம்ஸ் போடத் துவங்கிவிட்டனர்.

Ashan Birthday Celebration

டிவிட்டரில் ராம் குமார் என்பவர் புகைப்படத்தில் உள்ள பெண் தெலுங்கு பெண் என்றும் இவரைக் காப்பாற்ற வேண்டி அமித்ஷா, ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடுவிற்கு டிவிட் செய்து உள்ளார்.

Ashan Birthday Celebration video

உண்மையில் அப்பெண் யார்? அவருக்கு என்ன நேர்ந்தது?

புகைப்படத்தில் உள்ள பெண்ணின் பெயர் சந்துனிகா (பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது). உடன் இருப்பவர் ஆஷன் (Ashan).

இவர்கள் இருவரும் ஸ்ரீலங்கா நாட்டைச் சேர்ந்தவர்கள். சில தினங்களுக்கு முன்பு (Ashan Birthday Celebration) ஆஷன் பிறந்த நாள் விழாவில் எடுக்கபட்ட புகைப்படம் இது.

இது ஏன் தற்பொழுது வெளியாகி வைராலாகி கொண்டு உள்ளது என்றால் இவர்கள் இருவரும் தனிமையில் இருந்த அருவருக்கத் தக்க வீடியோ இணையத்தில் வெளியாகிவிட்டது.

அந்த வீடியோவில் அப்பெண் ஐபோன் கிஃப்ட் கிடைத்தது உள்ளிட்ட பல விஷயங்களை சிங்கள மொழியில் பேசுகின்றார்.

இந்த வீடியோவை வெளியிட்டது அவருடைய காதலர் ஆஷன் தான் என தகவல் வெளியாகியுள்ளது. இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக இந்த வீடியோ வெளியிட்டதாக அவருடய நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்பொழுது ஆஷன் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வருகிறது. அப்பெண் வெளிநாடு செல்ல உள்ளார். மீண்டும் ஸ்ரீலங்கா வரப்போவதில்லை எனவும் கூறியுள்ளாராம்.

இந்நிலையில் இந்த வீடியோவில் இருப்பது தெலுங்கு பெண் என்று டிவிட்டரில் ஒரு ஐடி இந்த வீடியோவை வெளியிட்டது.

இதன் காரணமாகவே ராம்குமார் உட்பட பலர் அமித்ஷா, ஜெகன்மோகன் ரெட்டி போன்ற  தலைவர்களுக்கு டிவிட் செய்து வருகின்றனர்.

தமிழ் மீம் கிரியேட்டர்கள் மீம்ஸ் வெளியிடுவதால் ஏதோ தமிழ் பெண்ணோ என பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தேவையில்லாமல் ஒருவருடைய பெர்சனல் விஷயங்களை வைத்து மீம்ஸ் கிரியேட் செய்து அந்த வீடியோவை மேலும் மேலும் பார்க்கவைக்க மீம்ஸ் கிரியேட் செய்வது போன்று உள்ளது. இது வேதனையான விஷயம்.

மீம்ஸ் கிரியேட்டர்கள் ஆரோக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்துவதே சிறந்தது.  தேவையில்லாமல் வதந்திகள் பரவுவது தவிர்க்கப்படும்.

3

சில்லுக்கருப்பட்டி: நானும் ஒரு காக்கா கடி கடிச்சிக்குறேன்!

0
சில்லுக்கருப்பட்டி காக்கா கடி

சில்லுக்கருப்பட்டி: நானும் ஒரு காக்கா கடி கடிச்சிக்குறேன்! சில்லுக்கருப்பட்டி படத்தில் வரும் காக்கா கடி பற்றிய என் பார்வை.

சில்லுக்கருப்பட்டி காக்கா கடி!

உரையாடல் என்பது வெறுமனே பேசிக்கொள்வது, பேசுவதை கேட்பது என்றல்லாமல் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நம் உணர்வுகளை கம்யூனிக்கேட் செய்யும் விதமாக இருத்தல் என்பது மிக முக்கியம்.

அதுவும் இக்காலத்தில் பெறும்பாலான மக்களிடம் அப்படியொரு உரையாடல் நிகழ்வதே இல்லை. மொபைல், வாட்ஸப், ஃபேஸ்புக், டிவிட்டர் என கம்யூனிக்கேட் செய்ய செயலிகள் இருந்தும் இங்கு பலர் தனித்தனியாகத்தான் இருக்கிறார்கள்.

உணர்வுகளை கடத்தும் விதமான உரையாடல்களை அசைவுகளை அன்பை மட்டுமே பிரதானமாக வைத்துக்கொண்டு நான்கு கதைகளில் சொல்லிருக்கிறார் இயக்குனர் ஹலிதா அவர்கள். அதில் ஒரு கதைதான் காக்கா கடி.

காக்கா கடி – பகிர்தல் 

இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட  குழந்தைகள் இருக்கும் ஒரு பொழுதில் ஒரே ஒரு சாக்லேட்தான் இருக்கிறது.

அப்படியொரு சமயத்தில் அங்கிருந்த குழந்தை ஒன்று “நா.. காக்கா கடி கடிச்சுட்டு கொடுக்குறேன்” என சொல்லி சாக்லேட்டை கடிக்க தொடங்க.. அதன்பின் அங்கிருந்த அனைத்து குழந்தைகளும் ‘காக்கா கடி’ கடித்தே அந்த ஒரே ஒரு சாக்லேட்டை ருசித்து சாப்பிட்டனர்.

இதில் வெறும் பகிர்தல் மட்டுமில்லை அதன்பின் அனைவரும் சாப்பிட வேண்டுமென்ற அன்பு இருக்கிறது இனிப்பாக !

முகிலன் தனக்கு புற்றுநோய் இருப்பது தெரிந்தவுடன் அவனின் முகக்கலை மாறும் காட்சியில் நம் மனதில் நெருடல் ஆரம்பிக்கிறது.

கல்யாணம் செய்யலாம் என்றிருந்த பெண் “எப்படி இப்படியொரு பையனுக்கு பெண்தருவாங்க” என்ற சாயலில் கேட்ட கேள்விக்கு அவன் உடையும்போது பார்க்கும் நாமும் உடைய ஆரம்பிக்கிறோம்.

இப்படி உடைந்து கொண்டிருந்த முகிலனுக்கு மட்டுமல்ல படம்பார்த்த நமக்கும் ஒரு சுவையுடைய சாக்லேட் போல வந்த பெண்தான் மது.

முகிலனின் மீம்ஸ்களைத் தேடி ரசிக்கும்போதே அவளை நாம் ரசிக்கத்தொடங்கியிருப்போம். அவன் தூங்கட்டும் என்பதற்காக இன்னும் சிறிது தூரம் காரை ஓட்டச்சொல்லும்போது அவளைக் கண்டு பூரிக்க தொடங்கியிருப்போம்.

எதார்த்தத்தின் உச்சக்கட்டம் 

ஒரு காருக்குள் அவ்வளவு அழகான சகஜமான உரையாடல்கள் காக்கா கடி கதையில் வாய்த்திருக்கிறது. இருவருக்கிடையில் நடைபெறும் உரையாடல்கள் ஒருபோதும் போலித்தன்மையாகவோ எதார்த்தம் மீறியதாகவோ தோன்றவே இல்லை.

முகிலன் தனக்கு இருக்கும் நோயை மதுவிடம் கூறுவதாகட்டும் அதற்கு அவள் கூறும் மறுமொழியாகட்டும் அனைத்துமே சகஜமான வார்த்தைகள்.

பாசிடிவ் ஃபார்முலா 

மதுவும் முகிலுனும் முதன் முதலாக பேசிக்கொள்ளும் காட்சியில் “மீம்ஸ்லாம் ஒரு மேட்டராங்க ” என முகிலன் சொல்ல, அதற்கு பதில்மொழியாக “கம் ஆன் இது ஒரு ரெவல்யூஷன். இப்போ ஹியூமர் காலமிஸ்ட், கார்ட்டூனிஸ்ட் அந்த மாதிரி இது ஒரு க்ரியேட்டிவிட்டி ஃபார்ம்” என்று சொல்லிக்கொண்டே மது  தரும் ரியாக்ஷன் அழகு.

மேலும் இந்த உரையாடல் ‘மீம் க்ரியேட்டர்ஸ்’ அனைவருக்கும் ஒரு புன்னகையை நிச்சயமாக பரிசளித்திருக்கும். மேலும் காதலுக்காக மது எடுத்துக்காட்டாக
சொல்லும் கார்னிட்டோ ஐஸ்க்ரீம் கான்செப்ட் எவ்வளவு உண்மை.

“கறை நல்லது ..It’s ok to be sad !
No more tears !
Just kick it !
ஒரு பால்னாலும் அடிச்சு நவுத்துங்க !”

போன்றவைகளெல்லாம் ‘பாசிட்டிவ்வைப்’ கொடுத்து பார்ப்பவர்களையும் உற்சாகப்படுத்தி தட்டிக்கொடுக்கிறது வசனங்கள்.

மது தனக்கு இதுவரை வந்த லவ் புரோபசல்களை காட்டும்போதாகட்டும், தனக்கு தினம் பரிசுகளை தரும் அந்த காகத்தை அறிமுகப்படுத்தும் காட்சியாகட்டும்
முகிலன் வேகமாக பேசும் அந்த தோரணை அந்த வேகத்திலும் நச்சென்று இருக்கும் வசனங்களெல்லாம் மழையின் போது தேநீர் அருந்தும் சுவையை தரவல்லது.

கதையின் இறுதிக்காட்சிகளில் முகிலன் மருத்துவமனையில் இருக்கும்போது மது தந்து அனுப்புகிற பொருட்கள் ஒவ்வொன்றும் எதுமற்று இருப்பவனுக்கு  நம்பிக்கையை தருகிறது.

மதுவும் தன்னிருப்பை அவனுக்கு தெரிவிக்கிறாள். மது தன் காதலை வெளிப்படுத்துவதும் உலகமே ஒரு உருண்டைலதானே இருக்கு என்று சொல்வதும் காக்கா கடியின் இறுதிச்சுவை.

வசனஙக்ளை எழுதியதற்காகவே ஹலிதா அவர்களுக்கும் பின்னனி இசையில் குறிப்பாக ஹம்மிங் செய்ததற்காக பிரதீப் குமார் அவர்களுக்கும் தினக்காட்சிகளை அப்படியே காட்டிய ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணணுக்கும் மீப்பெறும் நன்றிகளை தெரிவித்தாக வேண்டியதிருக்கிறது.

பகிர்தல் நல்லது 

முகிலன் தன்னைப்பற்றி மதுவிடம் சொன்னப்போதுதான் அவனுக்கான கதவு திறந்தது என்று சொல்லலாம். ஆம்! முடிந்தவரை நமக்குள் இருக்கும் வலிகளை
விருப்பத்துக்குரியவர்களிடம் வெளிப்படையாக பகிர்வோம்.

நம்மிடம் மற்றவர்கள் அவர்களின் வலியைக் கூறுமளவிற்கு நாம், அவர்களிடத்தில் அன்பு செலுத்துவோம். சக உயிர்களிடம் அன்பை வெளிப்படுத்தி நம் வாழ்வை வாழ முயற்ச்சிப்போம் .

நம் வலியாகட்டும் அன்பாகட்டும் வெளியில் சொல்லுவோம்! மது எனும் அழகி முகிலனிடம் சொல்வதைப்போன்றதுதான். “வெக்கப்பட்றது அவமானப்பட்றது இதுலாம் வேணாம்” Be sportive!

அழுகையையும், அமைதியையும் அன்பின் உரையாடல்களோடும் தினம் நாம் காண்கிற சராசரி காட்சிகளுடனும் காட்டிய இந்த காக்கா கடி படம் முடிந்த பின்பும் இனிக்கிறது, இனித்துக்கொண்டிருக்கிறது.

3

தை அமாவாசை: ஏன் எதற்கு வழிபட வேண்டும்?

2
தை அமாவாசை புனித நீராடல்

தை அமாவாசை: ஏன் எதற்கு வழிபட வேண்டும்? புனித நீராடல், முன்னோர்களுக்கு தர்பணம், குல தெய்வ வழிபாடு ஏன் செய்யவேண்டும். இதன்மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன?

இந்து மத நம்பிக்கைகளில் திதிகளுக்கென்று தனி இடம் உண்டு. எந்த திதிகளில் என்ன காரியங்கள் செய்யலாம் என்று வகுத்து வைத்துள்ளனர்.

தை அமாவாசை புனித நீராடல் குல தெய்வ வழிபாடுஅதிலும் அமாவாசை, பௌர்ணமி போன்றவை இறை வழிபாடு, பித்ருக்கள் வழிபாடு, குருமார்கள் வழிபாடு போன்றவை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

அதிலும் குறிப்பிட்ட மாதங்களில் வரும் அமாவாசை திதி அதீத பலன்களைத் தரும் என நம்பப்படுகிறது. ஆடி, புரட்டாசி மற்றும் தை அமாவாசைகள் வழிபாடானது கூடுதல் பலன்களைத் தரும் தை அமாவாசையின் சிறப்புகள் பற்றி காண்போம்.

புனித நீராடல்

தை அமாவாசையன்று புனித நதிகள் மற்றும் சமுத்திரங்கள் சென்று புனித நீராடி அங்குள்ள இறைவனை தரிசித்து வர அவர்களின் பாவம் நீங்குவதோடு முன்னோர்கள் செய்த பாவங்களும் நிவர்த்தியாகும்.

தை அமாவாசையன்று இராமேஸ்வரத்தில் உள்ள இராமநாத சுவாமி மற்றும் பர்வதவர்தினி அம்பாளின் உற்சவ மூர்த்தங்கள் அங்கே உள்ள அக்னி தீர்த்ததிற்கு கொண்டு செல்லப்பட்டு புனித நீராடல் நடைபெறும். பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்று புனித நீராடுவர்.

முன்னோர்களுக்கு  தர்பணம்

முன்னோர்களுக்கு  தர்பணம்

சூரியனை பித்ருகாரகன் என்பர். அப்படிப்பட்ட சூரியன் தன் மகனின் ஆட்சி வீடான மகர ராசியில் தை மாதத்தில் சஞ்சரிக்கிறார். சந்திரனை மாத்ருகாரகன் என்பர்.

சூரியன் சந்திரனுடன் சேர்ந்து சனியின் ஆட்சி வீட்டில் சஞ்சரிக்கும் நாளே தை அமாவாசை நாளாகும். எனவே தான் இந்நாளில் பித்ரு தர்பணம் மிகச்சிறப்பு எனக் கருதப்படுகிறது.

தை அமாவாசையில் நாம் நமது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கு அவர்களின் பசி மற்றும் தாகம் தனிந்து நற்கதி அடைய தர்பணம் தர வேண்டும்.

மற்ற அமாவாசைகள் மற்றும் இறந்த திதியில் தர்பணம் தர மறந்தாலும் தை அமாவாசையில் தர வேண்டும்.

ஏனெனில் தை அமாவாசை முடிந்ததும் பித்ருக்கள் பித்ரு லோகம் திரும்பி விடுவர். அடுத்த மகளாய பட்சம் வரும் வரை அவர்கள் பூமிக்கு வர அனுமதியில்லை.

பித்ருகளுக்கு தர்பணம் ஆனதும் ஏழைகளுக்கோ, ஆதரவற்ற முதியோர்களுக்கோ அல்லது பசுக்களுக்கோ நம்மால் இயன்ற பொருட்களைத் தானமாக தர வேண்டும்.

தர்பணம் என்றால் பிண்டம், எள், தண்ணீர் மட்டுமே மாறாக உடைகள் போன்ற பொருட்களை நீர் நிலையில் சேர்ப்பது தவறு. நீர் நிலைகளை மாசுபடுத்துவது பாவம் ஆகும்.

உடை போன்ற பொருட்களை ஆதரவற்றோருக்கு கொடுத்து உதவுங்கள். அவர்களுக்கு ஒருவேளை உணவாவது வழங்கினால் போதும் உங்களின் பித்ருக்கள் மனம் மகிழ்ந்து ஆசி வழங்குவர். அன்னதானம், வஸ்திர தானங்கள் செய்யுங்கள் ஏழு ஜென்ம பாவங்களும் போகும்.

இராமேஸ்வரம், வேதாரண்யம், பவானி, கொடுமுடி, பூம்புகார், கோடியக்கரை, திருப்புல்லாணி, காவிரி, தாமிரபரணி, வைகை போன்ற நதிக்கரையில் அமைந்த தலங்களில் சென்று புனித நீராடி பித்ரு தர்பணம் செய்து பித்ருக்களின் ஆசிகளைப்பெற வேண்டும்.

சூரியன் திருகல்யாண விழா

குல தெய்வ வழிபாடு முன்னோர்களுக்கு  தர்பணம்இந்தியாவில் சூரியனுக்கு இரண்டு கோவில்கள் உள்ளன. அதில் ஒன்று ஒடிசாவிலும். மற்றொன்று நம் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை அருகில் சூரியனார் கோவில் என்ற பெயரில் உள்ளது.

சூரியனார் கோவிலில் சூரியன் உஷா மற்றும் சாயா தேவியருடன் காட்சி தருகிறார்.

இங்கே தை அமாவாசை துவங்கி பத்து நாட்கள் சூரியனின் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.

இரவு தாடங்கம் மூலம் பகல் ஆனது

இரவு தாடங்கம் மூலம் பகல் ஆனது

தை அமாவாசை அன்று தான் திருக்கடையூர் அபிராமி அம்பிகை தனது பக்தனான அபிராமி பட்டரின் வாக்கு பொய்க்கக் கூடாது என்பதற்காக அமாவாசை இருளை தன் தாடங்கத்தின் (தோடு) ஒளியின் மூலம் பௌர்ணமியை தோற்றுவித்தாள்.

இவ்வாறே இரவு தாடங்கம் மூலம் பகல் ஆனது.

பட்டருக்கு அருள் புரிந்து அபிராமி அந்தாதி பாட செய்து அவரின் புகழ் மற்றும் நூலினை உலகறியச் செய்தாள். இன்றும் திருக்கடையூரில் தை அமாவாசை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இன்னாளில் அன்னையைப் போற்றி அபிராமி அந்தாதியை பாடினால் சிறந்த பலன்களை மகிழ்ந்து அருளுவாள்.

குல தெய்வ வழிபாடு

நம் பரம்பரையை காத்து தெய்வங்களான முன்னோர்களையே பெரும்பாலும் குல தெய்வங்களாக வழிபடுகிறோம். வருடத்திற்கு ஒரு முறையாவது நாம் எங்கு இருந்தாலும் நம் குலதெய்வ கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும்.

குறிப்பாக தை அமாவாசை அன்று குல தெய்வ வழிபாடு  செய்வது சகல தோசங்களும் நீங்கி நம் சந்ததியினர் அனைவரும் குறையின்றி வாழ்வர் என்பது நம் முன்னோர்கள் கண்டு உணர்ந்த உண்மை.

இந்த ஆண்டு ஜனவரி 24 ஆம் நாள் (இன்று) தை அமாவாசை வருகின்றது. இந்நாளில் நம்மால் இயன்ற தான தருமங்களை அதரவற்றோர் மற்றும் பசுக்களுக்கு அளித்து சகல தோஷங்களும் நீங்கி சிறப்புடன் வாழ்வோம்.

3

#Vijay65 படத்தை இயக்கப்போவது இவரா?

0

#Vijay65 படத்தை இயக்கப்போவது இவரா? சம்பளம் கூட வாங்கிவிட்டாரா? கோடம்பாக்கத்தில் கசிந்துவரும் தகவல்.

விஜய்யின் 65-வது திரைப்படத்தை இயக்கப்போவது ஜெயம் ரவி நடிப்பில் சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த புதுமுக இயக்குனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

#Vijay65  Movie Update

விஜய் இப்போது நடித்துவரும் படம் மாஸ்டர் 64-வது படமான இப்படத்தை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

படத்தில் மருத்துவப் படிப்பை பற்றி விஜய் முக்கியமாக பேசுவதாக தகவல் வருகின்றன. இந்த நிலையில் தான் விஜய்யின் 65-வது படத்தின் செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இதில் நிறைய இயக்குனர்களின் பெயர் அடிபடுகிறது, இப்போது ஒரு புதுத்தகவல் கிடைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் விஜய்யின் 65-வது படத்தை தயாரிக்கிறார்களாம்.

இப்படத்தை இயக்கப்போவது ‘அடங்க மறு’ பட இயக்குனர் கார்த்திக் தங்கவேல் என்றும், அதற்காக அவருக்கு சம்பளமும் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், இதுபற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும், விஜய் சமீபமாக ஹிட் படங்கள் கொடுத்து வரும் புதுமுக இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்க விருப்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

பெரியார் சர்ச்சை: படிக்கத்தெரியாத ரஜினி எப்படி படித்தார்?

1
பெரியார் சர்ச்சை ரஜினி படித்தாரா?

பெரியார் சர்ச்சை பற்றி கூறிய ரஜினி உண்மையில் 1971-ல் வெளிவந்த துக்ளக் கட்டுரையைப் படித்தாரா? 2017-ல் வெளிவந்த அவுட்லுக் பத்திரிக்கையைப் படித்தாரா?

ரஜினி, பெரியார் பற்றி என்ன கூறினார்

1971 பெரியார் அவர்கள் சேலத்தில் ஸ்ரீராமார்-சீதை சிலையை அம்மணமாக்கி செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாகச் சென்றார்.

இதை துக்ளக் இதழில் சோ வெளியிட்டார். அந்த இதழை அன்றைய திமுக அரசு வெளியாகவிடாமல் தடுத்தது.

இதனால் யாருக்கும் தெரியாமல் அந்த குறிப்பிட்ட இதழை சோ அவர்கள் கள்ளச்சந்தையில் (பிளாக்) விற்க ஏற்பாடு செய்தார். அதனால் ஒரு பத்திரிக்கை விலை 50 ரூபாய்க்கு மேல் விற்றது.

இதுவே ரஜினி துக்ளக் விழா மேடையில் கூறியது.

பெரியார் சர்ச்சை திகவினர் போர்க்கொடி

இந்த சர்ச்சை அன்றோடு முடிந்துவிடவில்லை. ரஜினியின் இந்த பேச்சுக்கு ஆதாரம் இல்லை என திகவினர் போர்க்கொடி தூக்கினர்.

அன்றைய ஊர்வலத்தில் பெரியார் மீதே செருப்பு மாலை வீசப்பட்டது. இதையே ரஜினி மாற்றிப்பேசுகிறார். இதில் உண்மை எதுவும் இல்லை என திகவினர் ரஜினி மீது குற்றம் சுமத்தினர்.

வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் செய்யப்போவதாக வீரமணி தெரிவித்தார். இதற்கு தமிழக கட்சிகள் பல ஆதரவும் தெரிவித்தது.

பெரியார் சர்ச்சை மீண்டும் பிள்ளையார் சுழி

ஹைட்ரோ கார்பன் பிள்ளையார் சுழிஇதனையடுத்து ரஜினி பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து பெரியார் பற்றி கூறிய கருத்துக்கு மன்னிப்புக் கேட்கப்போவதில்லை என்று கூறினார்.

மேலும் அவர், 2017 அன்று ஹிந்து குழுமத்தின் அவுட்லுக் பத்திரிக்கையில் கூட இதைப்பற்றிய செய்திகள் வெளிவந்துள்ளது.

எனவே நான் படித்த, கேட்ட செய்திகளைப் பற்றியே கூறியுள்ளேன். இந்த விஷயத்தை மீண்டும் கிளறுவது நீங்கள் தான் (பத்திரிக்கையாளர்கள்). இது மறுக்க கூடிய சம்பவம் அல்ல. ஆனால் மறக்கக்கூடிய சம்பவம் எனத் தெரிவித்தார்.

மறக்கக்கூடிய சம்பவத்தை துக்ளக் விழாவில் மீண்டும் கூறி அதை அனைவரும் அறிந்துகொள்ள ரஜினியே பிள்ளையார் சுழி போட்டு உள்ளார்.

ரஜினிக்கு படிக்கத் தெரியுமா?

ரஜினிக்கு இன்று படிக்கத் தெரியுமா என்பது தெரியவில்லை. ஆனால் அவருக்குப் பல ஆண்டுகளாக தமிழ் படிக்கத் தெரியாது.

இதை எத்தனையோ பத்திரிக்கையாளர்கள் நேரடியாகவே கண்டுள்ளனர். சினிமா பத்திரிக்கையாளர் அந்தணன் கூட இதை ஓப்பனாக வலைப்பேச்சு யுட்யூப் பக்கத்தில் கூறியுள்ளார்.

மீண்டும் துக்ளக் பிரவேசம்

துக்ளக் இதழின் இன்றைய ஆசிரியர் குருமூர்த்தி 1971-ல் வெளிவந்த முழு பத்திரிக்கையை வெளியிடப்போவதில்லை.

ஆனால், அதில் இடம் பெற்ற சேலம் பற்றிய கட்டுரையை மீண்டும் வெளியிட உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

ரஜினி கூறிய கருத்துக்கள் யாருக்கு நாட்டமோ இல்லையோ? குருமூர்த்திக்கு நல்ல லாபம். அவர் எதிர்பார்த்த விஷய்ம் நடந்துவிட்டது. துக்ளக் பத்திரிக்கை விற்பனை மீண்டும் சூடு பிடிக்கும் என்பது மட்டும் உறுதி.

தஞ்சையில் ஹைட்ரோ கார்பன்

பெரியார் சர்ச்சையில் ஹைட்ரோ கார்பன் பற்றிய செய்தி காணாமல்போய் விட்டது. மத்திய அரசு தஞ்சையில் ஹைட்ரோ கார்பன் எடுக்க சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி தேவையில்லை எனக் கூறியது.

தஞ்சையில் எங்கு வேண்டுமானாலும் குழி தோண்டி ஹைட்ரோ கார்பன் எடுத்துக்கொள்ளலாம் எனக் கூறியுள்ளது.

இந்தச் செய்தி அடியோடு காணாமல்போய் விட்டது. இதற்கு காரணமும் ரஜினியே. ரஜினி வேண்டும் என்றே பெரியார் சர்ச்சை பற்றி மீண்டும் பேட்டி கொடுத்ததாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரஜினியை இயக்குவது குருமூர்த்தியா?

இதேபோன்றே ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக போராட்டம் வெடித்தது. அப்போது போலீசார் தடியடி நடத்தினர்.

பயங்கரவாதிகளை இப்படித்தான் அடிக்கவேண்டும் என போலீசாருக்கு ஆதரவாக ரஜினி  பேட்டி கொடுத்தார். இதையும் அன்று குருமூர்த்தி சொல்லித்தான் சொன்னார் என செய்திகள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

3

ரஜினி-பெரியார் சர்ச்சை: ஆதரவு தரும் பிரபலங்கள்

0

ரஜினி-பெரியார் சர்ச்சை: ரஜினி பெரியார் பற்றி பேசியதற்கு திகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேவேளை திரைப் பிரபலங்கள் பலர் ரஜினிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ரஜினி-பெரியார் சர்ச்சை

பெரியார் பற்றி பேசுபவர்கள் இன்று தமிழகத்தில் விமர்சனத்துக்கு உள்ளாவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

தற்பொழுது ரஜினிகாந்த் பெரியார் பற்றி தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு ஒருபுறம் ஆதரவும் மறுபுறம் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

அரசியல் தலைவர்கள் ஒருபுறம் அந்த கருத்திற்கு ஆதரவும் மறுபுறம் ரஜினிகாந்த் மன்னிப்பு கேக்க வேண்டும் எனவும் வற்புறுத்தி வருகின்றனர்.

ரஜினிகாந்த் பதில்

இதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த் ” நான் உண்மையைத்தான் சொன்னேன். மன்னிப்பு கேட்க முடியாது”  என திட்டவட்டமாக கூறினார்.

இதனால் அவரின் வீட்டின் முன்பும், பல பொது இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போலீசில் புகார்கள், கோர்ட்டில் வழக்குகள் என ரஜினிகாந்த் மீது பல வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன.

நடிகை குஷ்பூ ஆதரவு

நடிகை குஷ்பூ, ரஜினிகாந்த் பேசியதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் அடுத்தப்படத்தில் இணைந்து நடிக்க உள்ளார் என்பது கூடுதல் செய்தி.

இயக்குனர் பேரரசு ஆதரவு

நடிகரும் இயக்குனருமான பேரரசு தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு ஆதரவாக கருத்துக்கள் பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது, “பெரியார் பற்றி பேசியதற்கு ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டுமானால், இந்து மதத்தையும், இந்து தெய்வங்களையும் இழிவாக பேசி விமர்சித்த அனைவரும் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

நடிகர் ரோபோ ஷங்கர் ஆதரவு

விஜய் டிவி புகழ், நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், ரஜினிகாந்துக்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

“தலைவர் எப்பொழுதும் உண்மையையே பேசிவிடுகிறார். உண்மையைச் சொன்னால் ஏன் சில பேருக்கு எரியுது என்று தெரியவில்லை” எனப் பதிவிட்டுள்ளார்.

3