Home Blog Page 269

குடும்ப வன்முறை சட்டம்; பெண்கள் பாதுகாப்புச் சட்டம்

1
குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்புச் சட்டம்

குடும்ப வன்முறை சட்டம்; பெண்கள் பாதுகாப்புச் சட்டம். குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களைப் பாதுகாத்தல் சட்டமானது, 2005 அக்டோபர் 26 முதல் நடைமுறைக்கு வந்தது.

இது மிகவும் விரிவான மற்றும் நம்பத் தகுந்த சட்டமாகும். இது சிவில் தீர்வுகளை குற்றவியல் நடைமுறைகளுடன் இணைத்து; குடும்பத்தில் நிகழும் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பையும், உடனடி நிவாரணத்தையும் வழங்குகிறது.

வீட்டு வன்முறை குடும்ப வன்முறை சட்டம்

குடும்ப வன்முறை சட்டம்

‘வீட்டு வன்முறை’ என்பதன் வரையறை உள்நாட்டு வன்முறை தொடர்பான ஐ.நா. மாதிரி சட்டத்துடன் ஒத்துப்போகிறது.

வேதனைக்குள்ளானவர்கள் எந்தவொரு உடல், பாலியல், வாய்மொழி மற்றும் உணர்ச்சி ரீதியான துன்புறுத்தல் அல்லது பொருளாதார துன்புறுத்தல்களுக்கு எதிராகப் பாதுகாப்பை பெறலாம்.

இந்தச் சட்டம் முதன்முறையாக வன்முறை இல்லாத வீட்டிற்கும், பெண்களுக்கான உரிமையும் மீட்டுக்கொடுக்கிறது.

பகிரப்பட்ட வீட்டில் வசிக்கும் உரிமை

இந்தச் சட்டத்தின் கீழ், திருமண வீட்டில் வசிக்கும் உரிமை இந்தியாவில் பெண்கள் உரிமைகளில் ஒரு பெரிய திருப்புமுனையாகும்.

பகிரப்பட்ட வீட்டிலிருந்து மனைவியை விரட்ட முடியாது. அப்படி வெளியேற்றப்பட்டால் உடனடி நிவாரணம் பெறலாம்.

பாதுகாப்பு உத்தரவு, பண இழப்பீடு, வதிவிட (இருப்பிடம்) உத்தரவு, காவலில் வைக்க உத்தரவு, இலவச சட்ட சேவைகள், மருத்துவ உதவி மற்றும் பாதுகாப்பு அலுவலர் அல்லது சேவை வழங்குநரின் உதவியை நாடலாம்.

உள்ளூராட்சி வன்முறை பாதுகாப்பு அதிகாரிகள்

அனைத்து மாவட்டங்களிலும் உள்ளூராட்சி வன்முறை பாதுகாப்பு அதிகாரிகளை மாநில அரசுகள் நியமிக்க இந்த சட்டமானது அங்கீகரிக்கிறது. சேவை வழங்குநர்களாக தன்னார்வ சங்கங்களை பங்கேற்க வழிவகுக்கிறது.

விழிப்புணர்வு பிரச்சாரங்கள், கருத்தரங்குகள் மற்றும் அமலாக்க முகமைகளை உணர்த்துவதன் மூலமும்; பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இந்தச் சட்டத்தால் கிடைக்கும் தீர்வுகளைப் பெறுவதற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், தேசிய பெண்கள் ஆணையம் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் முயற்சிகள் எடுத்துள்ளன.

சட்டத்தின் தன்மைகள்

இருவரும் ஒரு திருமண வீட்டில் ஒன்றாக வாழ்ந்த துன்புறுத்தியவரிடம் உறவில் உள்ள பெண்களைச் சார்ந்தது; மேலும் அவை இணக்கம், திருமணம், திருமணத்தின் இயல்பில் ஒரு உறவு அல்லது தத்தெடுப்பு ஆகியவற்றால் தொடர்புடையவை.

ஒரு கூட்டுக் குடும்பமாக ஒன்றாக வாழும் குடும்ப உறுப்பினர்களுடனான உறவுகளும் இணைக்கப்பட்டுள்ளது.

புகார் அளிக்கும் உரிமை

பெண்கள் பாதுகாப்புச் சட்டம். சகோதரிகள், விதவைகள், தாய்மார்கள், ஒற்றைப் பெண்கள் அல்லது துன்புறுத்தல் செய்பவர்களுடன் வாழும் பெண்களுக்கு கூட முன்மொழியப்பட்ட சட்டத்தின் கீழ் பாதுகாப்புக்கு உரிமை உண்டு.

மேலும், கணவரின் எந்தவொரு உறவினருக்கும் அல்லது ஆண் நண்பருக்கும் எதிராக புகார் அளிக்க திருமணத்தின் இயல்பில் வாழும் மனைவி அல்லது பெண்ணுக்கு இந்த சட்டம் உதவுகிறது.

ஆனால் இது கணவரின் எந்தவொரு பெண் உறவினருக்கும் அல்லது ஆண் கூட்டாளருக்கும் எதிராக புகார் அளிக்க முடியாது.

நிவாரணம் மற்றும் காவல் உத்தரவு

புகார் அளித்தவர், ஒரு பெண்ணாக இல்லாமல், பகிரப்பட்ட வீட்டிலிருந்து தன்னை அனுப்புவதற்கோ அல்லது வேதனைக்குள்ளான பெண்ணுக்கு திருமண வீட்டில் தன்னை பாதுகாப்பதற்கோ அல்லது வாடகை செலுத்துவதற்கோ சட்டத்தின் கீழ் இயக்கப்படலாம்.

அதே வேதனையடைந்த பெண்ணுக்கு நிவாரணத்திற்கான உத்தரவுகளில் பாதுகாப்பு உத்தரவுகள், குடியிருப்பு உத்தரவுகள், பண நிவாரணம், காவல் உத்தரவுகள் மற்றும் இழப்பீட்டு உத்தரவுகள் கிடைக்கும்.

துன்புறுத்தல் செய்தவர் வீட்டு வன்முறை அல்லது வேறு ஏதேனும் குறிப்பிட்ட செயலுக்கு உதவி செய்வதாலோ அல்லது பணியிடத்திற்குள் அடிக்கடி வருகை தருவதாலோ, துன்புறுத்தல் செய்யப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சிப்பதைத் தடுக்க துன்பறுத்தல் செய்யப்பட்டவருக்கு ஆதரவாக பாதுகாப்பு உத்தரவை அனுப்ப இது நீதிபதிக்கு அதிகாரம் அளிக்கிறது.

சட்ட உரிமை

இருவரும் பயன்படுத்தும் எந்தவொரு சொத்தையும் தனிமைப்படுத்துவதோ மற்றும் துன்புறுத்தல் செய்யப்பட்டவர்கள், அவரது உறவினர்கள் அல்லது வீட்டு வன்முறைக்கு எதிராக அவருக்கு உதவி வழங்கும் மற்றவர்களுக்கு வன்முறையை தூண்டுவது போன்றவை பாதுகாப்பு அதிகாரிகளை நியமிப்பதோடு, துன்புறுத்தல் செய்யப்பட்டவர்களுக்கு அவரது மருத்துவ உதவி, சட்ட உதவி, இருப்பிட உதவி ஆகிய உதவிகளை வழங்குவதற்காக அரசு சாரா நிறுவனங்களை சேவை வழங்குநர்களை நியமித்துள்ளது.

3

Indian Borders: இந்தியாவின் எல்லைகள் பற்றி தெரியுமா?

0
Indian borders இந்திய எல்லை இந்தியாவின் எல்லைகள் நீளம் பரப்பளவு

Indian Borders: இந்தியாவின் எல்லைகள் பற்றி தெரியுமா? இந்திய எல்லை எத்தனை நாடுகளுடன் இணைந்து உள்ளது. இந்திய எல்லை மொத்த நீளம் எவ்வளவு? மொத்த பரப்பளவு?

இந்தியா தனது எல்லையை மற்ற நாடுகளுடனும் பகிந்து கொண்டுள்ளது. அவை முறையே ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சீனா, பூடான், நேபாளம், மியான்மர் மற்றும் வங்கதேசம். வங்கதேசத்துடன் தான் இந்தியா மிக நீளமான எல்லையைக் கொண்டுள்ளது.

இந்தியாவின் மொத்த பரப்பளவு

பரப்பளவு அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட நாடுகளில் இந்தியா 7ம் இடம் வகிக்கிறது. இந்தியாவின் மொத்த பரப்பளவு 3,287 மில்லியன் கிலோ மீட்டர். கடற்கரையின் நீளம் 7,517கிமீ (4,700மைல்).

இந்தியாவுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகளின் பட்டியல்

இந்தியா தனது எல்லையை பகிர்ந்து கொள்ளும் மிகப்பெரிய நாடு சீனா. இந்தியா மிக நீளமான தொலைவு எல்லையைப் பகிர்ந்து கொண்ட நாடு வங்கதேசம். மிகச்சிறிய நாடு பூடான்.

பரப்பளவில் மிகக்குறைந்த எல்லையை கொண்டுள்ள நாடு ஆப்கானிஸ்தான். மிக அதிக நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மாநிலம் ஜம்மு-காஷ்மீர்.

அதிக மாநிலங்களுடன் எல்லையைப் பகிந்து கொள்வது உத்திரப்பிரதேசம் எட்டு மாநிலங்களோடு தனது எல்லையை பகிர்ந்து கொள்கிறது.

இந்தியாவின் நிலப்பரப்பு எல்லைகள் Indian borders

பங்களாதேஷ் – இந்தியா எல்லை

பங்களாதேஷ் – இந்தியா எல்லை. வங்கதேசம், இந்தியா இடையேயான எல்லை சர்வதேச எல்லை (ஐபி) ஆகும். இதில் இரு நாடுகளும் 4,096 கிலோ மீட்டர் நீளத்தை (2.545mi) பகிர்ந்து கொள்கின்றன.

உலகின் 5-வது மிக நீளமான எல்லையாகும். இருபுறமும் வேலி அமைக்கப்பட்டுள்ளது. இது எல்லை பாதுகாப்பு படையின் கவனிப்பில் உள்ளது.

பூடான் – இந்தியா எல்லை

பூடான் – இந்தியா எல்லை 699 கிலோமீட்டர் தூரத்தை (434mi) பகிர்ந்து கொள்கின்றன. இந்தியத் துணை ராணுவப் படை எஸ்எஸ்பி (sashastra seema bal) பாதுகாப்பில் உள்ளது.

சீனா – இந்தியா எல்லை

சீனா – இந்தியா எல்லை. இந்தியா, சைனா 3,488 கிலோமீட்டர் (2.167mi) நீள நிலப்பரப்பை தங்களுக்குள் பகிர்ந்து கொள்கின்றன.

மக்மோகன் எல்லைக்கோடு தான் இரு நாட்டிற்கும் வரையறையாகும். இந்தோ திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படையின் பாதுகாப்பில் உள்ளது. மிகப் பிரச்சனை வாய்ந்த எல்லைக்கோடு இது மட்டுமே.

மியான்மர் – இந்தியா எல்லை

மியான்மர் – இந்தியா எல்லை. தங்களுக்குள் 1,643 கிலோமீட்டர் (1.021mi) நீளத்தை பகிர்ந்து கொள்கின்றன. அசாம் ரைபில்ஸ் மற்றும் இந்திய ராணுவத்தின் கண்காணிப்பில் உள்ளது.

நேபாளம் – இந்தியா எல்லை

நேபாளம் – இந்தியா எல்லை. இந்தியா மற்றும் நேபாளம் 1.751 கிலோமீட்டர் நீளத்தை பகிர்கின்றன. இந்திய துணை ராணுவத்தின் கண்காணிப்பில் உள்ளது.

பாகிஸ்தான் – இந்தியா எல்லை

பாகிஸ்தான் – இந்தியா எல்லை மிகச் சர்ச்சைக்குரியது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் 3,323 கிலோமீட்டர் (2.065mi) நீளத்தை பகிர்ந்து கொள்கின்றன.

எல்லைப்பாதுகாப்பு படையின் கண்காணிப்பில் உள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையேயான எல்லைக்கோடு சர்கிரில் ரெட் கிளிப், இது சர்வதேச எல்லைக்கோடு ஆகும்.

உலகின் மிக நீளமான ஆறுகள் டாப் 10 பட்டியல்
உலகின் மிக நீளமான 3டி பாலம் – சீனா சாதனை

உலகின் நீளமான கடற்கரைகள் டாப் 10 பட்டியல்

உலகின் நீளமான மலை தொடர்ச்சி – டாப் 10 பட்டியல்
உலகின் மிக உயரமான மலைகள் டாப் 10 பட்டியல்
3

கோபி பிரையன்ட்: கூடைப்பந்து சூப்பர் ஸ்டார் வரலாறு

0
கூடைப்பந்து சூப்பர் ஸ்டார் கோபி பிரையண்ட் பிரையன்ட்

கோபி பிரையன்ட்: கூடைப்பந்து சூப்பர் ஸ்டார் வரலாறு. யார் இந்த கோபி பிரையன்ட்? Who Is Kobe Bryant History Tamil.

முன்னாள் கூடைப்பந்தாட்ட வீரர் கோபி பிரையன்ட். அமெரிக்காவில்   லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ்  (Los Angeles Lakers), சென்னை கிங்ஸ் போல இது ஒரு விளையாட்டு குழு.

இந்த  அணியிடம்  விளையாடிய இவர்; ஐந்து  என்.பி.ஏ (NBA)  NATIONAL BASKET BALL ASSOCIATION பட்டங்களை வென்றார்.

கோபி பிரையன்ட் உலகின் மிகச்சிறந்த கூடைப்பந்தாட்ட விளையாட்டு வீரர். அவர் ஜனவரி 26, 2020 அன்று ஹெலிகாப்டர் விபத்தில் சோகமாக இறந்தார்.

யார் இந்த கோபி பிரையன்ட்? Who is Kobe Bryant

இந்தியாவில் கிரிக்கெட், இங்கிலாந்தில், ஸ்பெயினில், மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து  ரசிகர்கள் இருப்பது போல  அமெரிக்காவில் கூடைப்  பந்தாட்ட விளையாட்டுக்கு வெறித்தனமான ரசிகர்கள் உண்டு.

கோபி பிரையன்ட் தனது ஆரம்ப ஆண்டுகளை இத்தாலியில் கழித்தார், மேலும் உயர்நிலைப் பள்ளியிலிருந்து  நேராக NBA-வில் சேர்ந்தார்.

பிரையன்ட் ஐந்து என்.பி.ஏ ( Dear Basketball ) சாம்பியன்ஷிப் மற்றும் 2008-ம் ஆண்டு மிக உயரிய விருதானா எம்விபி (MVP) விருதை லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணியில் விளையாடி  வென்றார்.

சில வருடங்கள்  காயங்களால் பாதிக்கப்பட்டிருந்தாலும், டிசம்பர் 2014-இல் NBA டைம் ஸ்கோரிங் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு வந்தார்; கூடைப்பந்து சகாப்தம்  மைக்கேல் ஜோர்டானை விட  முன்னேறினார்.

தனது இறுதி ஆட்டத்தில் 60 புள்ளிகளைப் பெற்ற பின்னர் 2016-இல் முழுமையாக ஓய்வு பெற்றார்.

2018-ஆம் ஆண்டில் பிரையன்ட் எழுதிய, Dear Basketball என்ற குறும்படத்திற்கு சிறந்த அனிமேஷனுக்கான ஆஸ்கர் அகாடமி விருது கிடைத்தது.

Dear Basketball, கோப் பிரையன்ட்-யை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இப்படத்தை அனிமேஷன் செய்து இயக்கியவர் Glen Keane ஆவார்.

ஆரம்ப கால வாழ்க்கை (Kobe Bryant History Tamil)

இவருடைய முழுப்பெயர்  கோபி பீன் பிரையன்ட் ஆகஸ்ட் மாதம்  23-ம் தேதி 1978-ம் ஆண்டு  அன்று, அமெரிக்கா மாநிலம் பென்சில்வேனியாவில்  பிறந்தார்.

இவருடைய அப்பா ‘ஜோ ஜெல்லிபீன் பிரையன்ட்’. இவரும்  மிகப்  பிரபலமான முன்னாள் NBA  கூடைப் பந்தாட்ட வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய அப்பா  1984-ஆம் ஆண்டில், தனது NBA வாழ்க்கையை முடித்த பின்னர், தன்  குடும்பத்தை இத்தாலிக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு அவர் இத்தாலிய லீக்கில் விளையாடினார். ஷாயா மற்றும் ஷரியா ஆகிய இரு தடகள மூத்த சகோதரிகளுடன் இத்தாலியில் வளர்ந்த பிரையன்ட் கூடைப்பந்து மற்றும் கால்பந்து இரண்டிலும் தீவிர வீரராக இருந்தார்.

1991-ஆம் ஆண்டில் மீண்டும் இவர்களது குடும்பம் அமெரிக்கா மாநிலம்  பென்சில்வேனியாவிற்கு திரும்பியது.

பிரையன்ட் லோயர் மெரியன் என்ற உயர்நிலைப் பள்ளி கூடைப்பந்து அணியில் சேர்ந்தார்.  தனது அணியை தொடர்ந்து நான்கு ஆண்டுகள் மாநில சாம்பியன்ஷிப்பிற்கு அழைத்துச்சென்றார். எப்போதும் NBA மீது ஒரு தீராத காதலை வைத்து  தீவிரமாக விளையாடி வந்தார்.

மிகஅதிக  SAT மதிப்பெண்களை உயர்நிலைப் பள்ளியில் எடுத்திருந்தாலும், கூடைப்பந்து சூப்பர் ஸ்டார் பிரையன்ட்  நேராக NBA-க்குச் செல்ல முடிவு செய்தார்.

1996-ஆம் ஆண்டு NBA-வில்  13  ஒட்டுமொத்த  அதிகாரிகளும் ஒரு மனதோடு  இவரை   சார்லோட் ஹார்னெட்ஸால்  அணியில்  தேர்ந்தெடுத்தனர். பின்னர் லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் நிறுவனத்திற்கு மாறினார்.

NBA வெற்றியின்  புள்ளிவிவரங்கள்

லேக்கர்களுடனான தனது இரண்டாவது சீசனில், 1998-ம் ஆண்டு ஆல்-ஸ்டார் கேம் என்ற விருதை 19 வயதில் பெற்றார். NBA வரலாற்றிலே மிக இளம் வயதில் இப்பட்டதைப் பெற்றது இவர் மட்டுமே.

2002 முதல் 2004 வரை பிரையன்ட் அணி தொடர்ந்து மூன்று முறை முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது. ஷாகில் ஓ’நைல் மற்றும் பிரையன்ட் இப்போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டனர்.

அதனால், Shaquille O’Neal-வுடன் இணைந்து பிரையன்ட் அடிடாஸ், ஸ்ப்ரைட் போன்ற நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

2004-ஆம் ஆண்டில் Shaquille O’Neal வெளியேறிய பிறகும் தனது  லேக்கர்ஸ்  அணியை  மிகத்  திறமையாக வெற்றிப் பாதைக்கு அழைத்துச்சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 2006-இல் டொராண்டோ ராப்டர்கள் அணிக்கு எதிராக இவர் மட்டுமே 81 புள்ளிகளை எடுத்தார்.  இது NBA வரலாற்றில் தனிநபராக எடுக்கப்பட இரண்டாவது  அதிக ஸ்கோர்.

2008-ஆம் ஆண்டில், பிரையன்ட் மிகவும் மதிப்புமிக்க வீரராகப் பெயரிடப்பட்டார் மற்றும் அவரது அணியை NBA இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார், அங்கு அவர்கள் பாஸ்டன் செல்டிக்ஸ் அணியிடம்  தோற்றனர்.

2009 NBA இறுதி ஆட்டங்களில் லேக்கர்ஸ், ஆர்லாண்டோ மேஜிக்கை அணியை வீழ்த்தி சாம்பியன்ஷிப்பை வென்றனர்.

தனது  நண்பரும் இசை சூப்பர் ஸ்டாருமான மைக்கேல் ஜாக்சனைக் கவுரவிக்கும் விதத்தில்  சமூக சேவையையும்   செய்தார்.

பிரையன்ட் 2008 மற்றும் 2012 யு.எஸ் ஒலிம்பிக் அணிகளில் விளையாடினார், அணியின் தோழர்களான கெவின் டுரான்ட், லெப்ரான் ஜேம்ஸ் மற்றும் கார்மெலோ அந்தோணி ஆகியோருடன் தொடர்ந்து தங்கப் பதக்கங்களை வென்றார்.

ஏப்ரல் 2013-இல் அகில்லெஸ் என்ற தசைநார் நோயால் பிரையன்ட் பாதிக்கப்பட்டார். இதனால் 2013-2014-ம் ஆண்டு போட்டியின்போது முழங்காலில் முறிவு ஏற்பட்டது.

ஜனவரி 2015-இல் மீண்டும் விளையாட முயற்சி செய்தபோது காயம் காரணமாகத் தொடர முடியவில்லை . அவருடைய விளையாட்டு சகாப்தம் முடிவுக்கு வந்தது.

ஓய்வு அறிவிப்பு 

நவம்பர் 2015 வருட முடிவில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஓய்விற்குப்பிறகு, “20 ஆண்டுகள் எவ்வளவு விரைவாகச் சென்றன என்பதை என்னால் நம்ப முடியவில்லை” என்று அவர் கூறினார்.

தி பிளேயர்ஸ் ட்ரிப்யூன் இணையதளத்தில், “என் இதயத்தின் மிக வேகமான துடிப்பைத் தங்கிக்கொள்ளமுடியும். என் மூளையின் வலியைப் பொறுத்துக்கொள்ளமுடியும். இந்த உடல் விடைபெற வேண்டிய நேரம் இதுதான்” என்று எழுதினார்.

சமூகப்பணி 

இவருடைய பெரும் முயற்சியால் சக வீரர்களுடன் இணைத்து அறக்கட்டளை உருவாக்கி பள்ளிகளுக்கு உதவினார். கூடைப்பந்து  பயிற்சி அளித்து வருடம் தோறும்  கோடைக்கால முகாமையும் நடத்தி வருகிறார்.

Who Is Kobe Bryant Kobe Bryant History Tamilபிரையன்ட் குடும்பம்

பிரையன்ட் ஏப்ரல் 2001-இல் 19 வயதான வனேசா லெய்னை மணந்தார். இவர்களுக்கு  நான்கு மகள்கள். நடாலியா டயமண்டே (பிறப்பு  2003), கியானா மரியா-ஓனோர் (பிறப்பு  2006), பியான்கா (பிறப்பு  2016) மற்றும் கேப்ரி ( பிறப்பு 2019).

பிரையன்ட் இறப்பு

பிரையன்ட், 2020 ஜனவரி 26-ம் நாள் ஹெலிகாப்டரில் பயணம் செய்தபோது லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகர்ப் பகுதியான கலாபாஸில் ஹெலிகாப்ட்டர் விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில், பிரையன்ட் உட்பட 9 பேர் இறந்தனர். இதில் பிரையன்டின் 13 வயது மகள் கியானா “ஜிகி”, மற்றொரு மகள் அலிஸா, பிரையன்ட் மனைவி கெரி மற்றும் ஜிகியின் கல்லூரி பேஸ்பால் பயிற்சியாளர் ஜான் அல்தோபெல்லி ஆகியோரும் இறந்தனர்.

ஹெலிகாப்டர் கலிபோர்னியாவின் ஆரஞ்சு கவுண்டியில் இருந்து ஆயிரம் ஓக்ஸுக்கு சென்று கொண்டிருந்தது. (Orange County to Thousands Oaks) அங்கு பிரையன்ட், மாம்பா ஸ்போர்ட்ஸ் அகாடமியில் ஒரு போட்டி ஆட்டத்தைப் பயிற்றுவிக்கத் திட்டமிடப்பட்டிருந்தார்.

ஆனால் துரதிஷ்டவசமாக ஹெலிகாப்ட்டர் விபத்திற்குள்ளாகி கூடைப்பந்து சூப்பர் ஸ்டார் பிரையன்ட் இறந்துவிட்டார். உலகம் முழுவதும் உள்ள கூடைப்  பந்தாட்ட ரசிகர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

3

தூக்கம் தரும் பாடல்; தாலாட்டு கேட்டு தூங்கும் குழந்தை

1
தூக்கம் தரும் பாடல் தாலாட்டு

தூக்கம் தரும் பாடல்; தூக்கம் வரும் பாட்டு; தாலாட்டு கேட்டு தூங்கும் குழந்தை; இதுவே, வாழையடி வாழையாய் கிடைக்கும் தூக்க மருந்து. முன்னோர்கள் விட்டுச்சென்ற மருந்து.

இன்பம் துன்பம் என்ற இரண்டையும் மறந்து, அமைதியான நிலைக்கு அழைத்துச் செல்லுவதே தூக்கம். இதனை விரும்பாதவர் எவரும் இல்லை. ஆனால் தூக்கம் இல்லாமல் தவிப்பவர்கள் இங்கு அதிகம்.

தூக்கமின்மைக்குச் செய்யப்படும் செலவுகள்

தூக்கம் வரும் பாட்டு தூங்கும் குழந்தை

இப்படிப்பட்ட தூக்கத்தைப் பெறுவதற்காக சிலர் மருத்துவரைத்தேடி பல செலவுகளைச் செய்தும் தூக்கத்தைப் பெறமுடியாமல் தவிக்கிறார்கள்.

மருத்துவரை அணுகாமல் செலவுகள் செய்யாமல், தூக்க மாத்திரைகள் உபயோகிக்காமல் நிம்மதியான தூக்கத்தைப்பெற முடியும்.

இது சாத்தியமா??? என்பது தானே உங்கள் கேள்வி. ஆம் சாத்தியம் தான். தூக்கத்தைப் பற்றியும் அதை எளிதாய் பெறுவதைப் பற்றியும் இங்கு காணலாம்.

ஆரோக்கியத்துக்கு முக்கிய பங்கு வகிக்கும் தூக்கம்

தூக்கம் வரும் பாட்டு

பொதுவாக தூக்கம் என்பது நம் வாழ்க்கையில் ஒரு பகுதி. நாம் நாட்களைப் புத்துணர்ச்சியுடன் தொடங்குவதற்கும் சுறுசுறுப்பாக நம் வேலைகளைச் செய்வதற்கும் தூக்கம் ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது.

தூக்கத்தின் அவசியம்

பொதுவாகக் குழந்தைகள் 14 மணி நேரமும், நடுத்தர வயதுடையவர்கள் 7 முதல் 9 மணி நேரமும், 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 7 மணி நேரமும் தூங்குவது அவசியம்.

ஏனென்றால், மனிதனின் செயல்திறன் என்பது அவனின் மூளையைப் பொறுத்தே அமைகிறது. அந்த மூளைக்கு ஒய்வு கொடுப்பதே தூக்கம் தான்.

அப்படிப்பட்ட தூக்கம் சரியாக அமையவில்லை என்றால் தலைவலி, அளவில்லாத கோபம் ஏற்படுத்தும்.

தூக்கமின்மைக்கு காரணம்

ஏன் தூக்கம் சிலருக்கு சரியாக அமைவதில்லை? ஏனென்றால், தேவையில்லாத மன உளைச்சல், வயதுக்கு மீறிய அளவற்ற சிந்தனை, வேளையில் ஏற்படும் அதிகப்படியான வேளை அழுத்தம் போன்றவற்றால் தூக்கமின்மை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

இதைத் தவிர்க்க சிலர் ஊர் சுற்றுகின்றனர். தேவையில்லாத தீய பழக்கங்களுக்கு அடிமையாகின்றனர். சிலர் தற்கொலையும் செய்துகொள்ள முயற்சி செய்கின்றனர்.

இரவின் செலவு தூக்கம்

தூக்கம் வரவழைக்கும் பாடல்கள்

பொதுவாக இரவு என்பதை தூக்கத்தில் செலவு செய்தால் நல்ல ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும்.

நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதற்கு முதலில் நம் மனதை அமைதியான நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும். அப்படி இரவில் மனதை அமைதியான நிலைக்குக் கொண்டு சென்றால் தூக்கமின்மையைத் தவிர்க்கலாம்.

தாலாட்டு மூலம் தூங்கும் குழந்தை

பொதுவாகக் குழந்தைகளை தூங்க வைப்பது கடினம். அந்தக் கடினமான ஒன்றை தாலாட்டு என்ற பாட்டு மூலம் சாத்தியமாவதைக் கண்டிருப்போம்.

அதுதான் தூக்கமின்மைக்கு உண்மையான தூக்க மருந்து என்பதை பலர் அறிந்திருக்கமாட்டோம். ஆனால் அதுதான் உண்மை.

சிலர் பாட்டு கேட்டுக்கொண்டே தூங்கிக்கொண்டு இருப்பார்கள். பாட்டு காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கும் சத்தம் கேட்பதையும் மறந்து தூங்கி கொண்டிருப்பார்கள்.

அதுவே ஒரு சிறந்த இசைக்கு இருக்கும் வலிமை. நல்ல மெல்லிய இசை கொண்ட பாடல்களைக் கேட்பதன் மூலம் எளிதில் தூக்கத்தை அடையாலாம்.

தூக்கமின்மைையிலிருந்து விடுபட எளிதான வழி

தாலாட்டு உண்மையான தூக்க மருந்து

எப்படி என்றால் இயல்பாகவே இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இல்லை என்பார்கள். இதனை அறிந்த அன்னைமார்கள் தங்கள் குழந்தைகளைத் தூங்க வைக்க தாலாட்டு என்னும் பாட்டை பாடுகிறார்கள்.

இசை என்பது நம் கவலைகளை மறக்கடித்து மனதினை அமைதிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. நாம் முன்பு பார்த்தது போல் மனதினை அமைதிப்படுத்தி தூக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் உள்ளவை.

தூக்கம் வரும் பாட்டு, தூக்கம் தரும் பாடல் ஏராளம் இணையத்தில் உள்ளது. அதை கேட்டு தூக்க நிலையை அடைய முயற்சி செய்வதே சிறந்த வழி.

அதனால் தூங்கச் செல்லும் முன் ஹெட்செட் மூலமாக ஒரு 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை பாட்டு கேட்டு விட்டு தூங்கச் சென்றால் மனம் அமைதி நிலைக்குச் சென்றுவிடும். தூக்கமின்மையையும் நாம் தவிர்த்துவிடலாம்.

3

சியாமளா நவராத்திரி என்றால் என்ன? அதன் சிறப்புகள்!

0
சியாமளா நவராத்திரி என்றால் என்ன?

சியாமளா நவராத்திரி என்றால் என்ன? அதன் சிறப்புகள். நவராத்திரி கேள்வி பட்டிருப்போம் அதென்ன சியாமளா நவராத்திரி; மொத்தம் 4 நவராத்திரிகள் உள்ளது பற்றித் தெரியுமா?

சாக்தம் மற்றும் நவராத்திரி சிறப்புகள்

சாக்த சமயம் என்பது அம்பிகையின் வடிவங்களை பிரதானமாகக்கொண்டு பூஜிப்பது. இதில் அன்னைக்கு நவராத்திரி என்பது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.

பொதுவாக நவராத்திரி என்றவுடன் சாரதா நவராத்திரி என்று சொல்லப்படுகின்ற புரட்டாசி மாதத்தில் வரும் ஆயுத பூஜை, விஜயதசமி உடன் கூடிய நவராத்திரி மட்டுமே அனைவரின் நினைவுக்கும் வரும். அதுமட்டுமன்றி ஒரு ஆண்டுக்கு 4 நவராத்திரிகள் உள்ளன.

நவராத்திரி சிறப்புகள் 4 நவராத்திரிகள்

ஆஷாட நவராத்திரி – ஆனி மாதம்  அமாவாசை முடிந்த பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. இது வராகி தேவிக்குரிய நவராத்திரி ஆகும்.

சாரதா நவராத்திரி – புரட்டாசி  மாதம் அமாவாசை முடிந்த பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. இது துர்கா, லட்சுமி, சரஸ்வதிக்குரிய நவராத்திரி ஆகும்.

சியாமளா நவராத்திரி – தை மாதம் அமாவாசை முடிந்த பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. இது இராஜ மாதங்கி தேவிக்குரிய நவராத்திரி ஆகும்.

வசந்த நவராத்திரி – பங்குனி மாதம் அமாவாசை முடிந்த பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. இது லலிதா திரிபுரசுந்தரிக்குரிய நவராத்திரி ஆகும்.

சியாமளா தேவி என்பவர் யார்?

சியாமளா தேவி

மாதங்கியே இராஜ சியாமளா என்றும் மஹா மந்திரினி என்றும் அழைக்கப்படுகிறாள். மதங்க முனிவரின் மகளாகப் பிறந்தமையால் மாதங்கி என்ற திருநாமம் கொண்டாள். இவள் தசமஹாவித்யாவில் ஒன்பதாவது வித்யா ஆவாள்.

வேத மந்திரங்களுக்கெல்லாம் அதிதேவதை என்பதால் மந்திரிணி எனப்படுகிறாள். கல்வி, வித்தை, ஞானம் ஆகிய அனைத்திற்கும் இவளே ஆதாரம்.

லலதாம்பிகையின் கரும்பில் இருந்து தோன்றியவள். லலிதா திரிபுரசுந்தரியின் மஹா மேரு சாம்ராஜ்யத்தில் இவளே மந்திரி ஆவாள். அம்பிகையின் வலப்புறம் அமைச்சராக சியாமளாவும் இடப்புறம் படைத்தலைவியாக வராகியும் உள்ளனர்.

சியாமளாவின் திருவுருவை லலிதா சஹஸ்ரநாமம் மற்றும் மற்ற தாந்திரக புராணங்கள் வெவ்வேறு விதமாக விவரிக்கின்றன.

மாதங்கியின் தோற்றம்

இராஜ சியாமாளவின் தோற்றத்தை காளிதாசர் தன்னுடைய ஸ்யாமளா தண்டகம் என்ற நூலின் தியானத்தில் அழகாக வருணித்துள்ளார்.

“மாணிக்ய வீணாம் முபலாலயந்தீம் மதாலஸாம் மஞ்சுளவாக் விலாஸாம் | மாஹேந்த்ர நீலத்யுதி கோமளாங்கீம் மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி || சதுர்புஜே சந்த்ரகலாவதம்ஸே குசோன்னதே குங்கும ராகஸோனே | புண்ட்ரேக்ஷு பாஸாங்குஸ புஷ்பபாண – ஹஸ்தே நமஸ்தே ஜகதேக மாத: ||”

மாணிக்க கற்கள் பதித்த வீணையை வாசிக்கும் விருப்பம் உடையவள். பச்சை நிறம் கொண்டவள். மதங்க முனிவரின் புதல்வி. நான்கு திருக்கரம் உடையவள் பாசம், அங்குசம், மலர் அம்பு கொண்டவள். சந்திர கலை தலையில் அணிந்தவள். குங்கும சாந்தை மார்பில் தரித்தவள் என்று அம்பிகையின் தோற்றத்தை வருணிக்கிறார்.

அம்பிகையின் கையில் கிளியும் இடம்பிடித்திருகின்றது. இது வாக்கு திறமையை குறிக்கிறது. இவளின் நிறம் பச்சை ஆகும். பச்சை புதனுக்குரிய நிறம் இது ஞானத்தை குறிக்கிறது.

சியாமளா உபாசனை

சியாமளாவை உபாசிப்பவர்களுக்கு வாக்கு பலிதம், கல்வி, வித்தை, நுண்ணறிவு, எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை, ஞானம், மனதை ஒருநிலை படுத்தும் திறன், புத்தி கூர்மை, இசை, தேர்வில் வெற்றி போன்றவை தானாக வந்து சேரும்.

இவளை உபாசிப்பது கடுமையான விஷயம் என்று தாந்திரீக நூல்கள் கூறுகின்றன.

மதுரை மீனாட்சியம்மன்

4 நவராத்திரிகள் சியாமளா தேவி

சியாமளாவின் அம்சமாக மதுரை மீனாட்சி திகழ்கிறாள். இவளை வழிபடுவதும் மாதங்கியை வழிபடுவதும் ஒன்றே ஆகும்.

இந்த சியாமளா நவராத்திரியில் “மீனாட்சியம்மை பிள்ளை தமிழ்” படிப்பது நற்பலன்களைத் தரும்.

சியாமளா நவராத்திரியானது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வெகு விமர்சியாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த சியாமளா நவராத்திரியின் 5-வது நாள் பஞ்சமி அன்று சரஸ்வதி தேவி அவதரித்த நாளாகக் கருதப்படுகிறது.

எனவே இந்நாளில், வடநாட்டில் விஜயதசமி போன்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்வர். எனவே இந்நவராத்திரியானது சரஸ்வதி தேவியின் அருளையும் பெற்று தரும்.

சியாமளா நவராத்திரியில் எப்படி பூஜிக்க வேண்டும்?

தை அமாவாசை முடிந்து பிரதமை அன்று கலசத்தில் புனித நீர் நிரப்பி மாவிலை, தேங்காய் வைத்து; திலகம் இட்டு; மலர் மாலைகள் சூட்டி; பச்சை வஸ்திரம் சாத்தி; அதில், இராஜ மாதங்கியை ஆவாஹனம் செய்து; சியாமளா தண்டகம், சியாமளா அஷ்டோத்திரம் மற்றும் சகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம்.

வீணை மீட்ட தெரிந்தவர்கள் அம்பிகை முன் வீணை மீட்டி ஆராதிக்கலாம். மீனாட்சியம்மை பிள்ளை தமிழ் மற்றும் மீனாட்சியம்மை பதிகம் பாடலாம்.

அம்பிகைக்கு பிடித்தமான பழங்கள் மற்றும் நைவேத்தியங்களை ஒன்பது நாட்களும் படைக்க வேண்டும். மாதுளை சியாமளாவிற்கு மிகவும் பிடித்தமான பழமாகும்.

இவளை பூஜிக்கும் போது மனத்தூய்மை மிக முக்கியமான ஒன்றாகும். மனம் அலைபாய்வதைத் தவிர்த்து முழு மனதோடு வணங்கவேண்டும்.

2020-இல் சியாமளா நவராத்திரி

2020-இல் ஜனவரி 25 முதல் பிப்ரவரி 3 வரை கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களும் அன்னை இராஜ சியாமளாவை பூஜித்து அனைத்து நற்பேருகளை நாமும் பெறுவோம்.

3

கரோனா வைரஸ் என்றால் என்ன? – Coronavirus Tamil

9
கரோனா வைரஸ் Coronavirus Tamil

கரோனா வைரஸ் என்றால் என்ன? Coronavirus Tamil Explain Wikipedia. Coronavirus Disease Treatment,Infection, symptoms Awareness, Corona virus Name Meaning.

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கரோனா வைரஸ் மனிதர்கள் மூலம் பரவும் ஆட்கொல்லி தொற்றாகும்.

இந்த வைரஸ் தொற்று சீனாவில் இருந்து தென்கொரியா, தாய்லாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா என உலகின் அனைத்து நாடுகளுக்கும் விரைவாகப் பரவி வருகிறது.  இதனால் உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

கரோனா வைரஸ் எப்படி பரவியது

கரோனா வைரஸ் (கொரொனா வைரஸ்) எப்படிப் பரவியது என்ற முழுமையான விவரம் இதுவரை தெரியவில்லை. பாம்பில் இருந்து பரவி இருக்கலாம் என்ற கணிப்பு மட்டுமே சீனா அரசு தெரிவித்துள்ளது.

வைரஸ் தொற்று பலமடங்கு வேகமாக பரவுவதால் முதலில் அதை எப்படி அழிப்பது என்பது பற்றியே அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

வைரஸ் பரவியதற்கான காரணம் பற்றிய விசாரணையும் ஒருபுறம் நடந்துகொண்டு தான் உள்ளது.

ரோனா பெயர்க்காரணம் Corona Virus Name Meaning Tamil

Corona Virus Name Meaning

சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி அதனால் காய்ச்சல் உண்டாக்கி மனித உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து உள்ள கடும் தொற்று வைரஸ் கரோனா.

சீனாவில் தொடங்கிய இது; உலகம் முழுவதும் பயத்தை உண்டாக்கியுள்ளது. இந்த நோய்த் தொற்றுக்கு அதன் கிரீடம் போன்ற உருவ அமைப்பின் அடிப்படையில் பெயரிடப்பட்டுள்ளது.

குணப்படுத்தும் மருந்து Coronavirus Disease Treatment Tamil

வழக்கமாக புதுவித வைரஸ் நோய் பரவினால் அதை உடனடியாகக் குணப்படுத்த முடியாது. அதை மேலும் பரவ விடாமல் தடுக்க மட்டுமே முடியும்.

வைரஸ் நோய்களுக்கு மருந்துகள் என்பது இன்னும் முறையாக கண்டுபிடிக்கப்படாமலே உள்ளது. எனவே, புதிய நபர்களுக்கு இந்த நோய் பரவாமல் தடுத்தால் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

சார்ஸ்ஸின் மருஉருவமா கரோனா

2003-ம் ஆண்டு உலகையே உலுக்கிய வைரல் நோய்த் தொற்று சார்ஸ். உலகம் முழுவதும் 800 உயிர்களைப் பலி கொண்டது.

சார்ஸ் நோய்த் தொற்றின் அறிகுறிகளும் கரோனாவின் அறிகுறிகளும் பொதுவானதாகவே உள்ளது.

சார்ஸ் கடுமையான நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தி அதன் விளைவாக ப்ளூ காய்ச்சல் உண்டாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தியது. ஒரு வருடத்திக்குள் 30 நாடுகளுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்தியது.

கரோனா வைரஸ் அறிகுறிகள் corona virus symptoms

சார்ஸ் போன்றே கரோனா நோய்த் தொற்றும் சுவாசப் பாதையின் மேற்பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தி தொடர்ந்து நுரையீரல், குடல் பகுதிகளுக்கு பரவுகிறது.

சளி, இருமல், சுவாசக் கோளாறு, உயிர்பலி போன்ற அனைத்தும் சார்ஸ், கரோனா இரண்டிற்கும் பொதுவான அறிகுறிகளாகவே காணப்படுகிறது.

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கைகள்

பொதுவாக வைரஸ் தொற்று முதலில் பாதிப்பை ஏற்படுத்துவது குழந்தைகள், நீரிழிவு நோயாளிகள், காசநோயாளிகள் போன்றவர்களைத்தான். அதாவது, நோய் எதிர்ப்பு குறைவாக உள்ளவர்களை எளிதில் தாக்கும்.

Coronavirus Tamil Awareness இதனை தடுக்க நோய்த்தொற்று பரவாமல் இருக்க அடிக்கடி கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும். இருமல் மற்றும் .தும்மல் வரும்போது கைக்குட்டையால் வாய் மற்றும் மூக்குப் பகுதிகளை மூடிக்கொள்ள வேண்டும்.

அதிகம் வெளியில் செல்வது; அதிகம் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்ப்பது நோய்த்தொற்று பரவாமல் தடுக்க உதவும்.

Coronavirus Infection சுவாசப் பிரச்சனைகள், ஜலதோஷம், மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகள் இருப்பின் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை நாடுதல் நலம்.

3

Master 3rd Look Poster: உண்மையில் நான் மிரண்டு விட்டேன்

1
Master 3rd third Look Poster விஜய் vs விஜய் சேதுபதி

Master 3rd Look Poster: உண்மையில் நான் மிரண்டு விட்டேன். விஜய் vs விஜய் சேதுபதி அப்படி ஒரு ஆக்ரோஷ மோதல்.

Master Third Look Poster மாஸ்டர் கிளாஸ்

நேற்று வரை Master 3rd Look Poster வரப்போகிறது என வெறுப்பேற்றிக்கொண்டு இருந்தனர். ஒரு படத்திற்கு எத்தனை லூக் போஸ்டர் வெளியிடுவார்கள் என்று எரிச்சல் அடைந்தேன்.

என்ன செய்வது? விஜய் படம் எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர். செய்தி வெளியிட்டால் விஜய் ரசிகர்களை வாசகர்களாகப் பெறலாம் இதற்காகவே செய்தி வெளியிட்டோம்.

சரி இன்று 5 மணி ஆகிவிட்டதே கிரிக்கெட் மேட்ச் வேறு மொக்கையாய் முடிந்து விட்டது. Master 3rd Look Poster எப்படி உள்ளது எனப் பார்க்கலாம் என்று ட்விட்டர் பக்கம் சென்றேன்.

உண்மையில் போஸ்டரைப் பார்த்து மிரட்டு விட்டேன். பாகுபலியை மிஞ்சிய பலம் கொண்ட மனிதர்கள் மோதிக்கொள்வது போன்று மெய்சிலிர்த்து விட்டேன்.

போஸ்டர் என்றால் இப்படி ஒரு தரம் இருக்கக் வேண்டும். இப்படி ஒரு கம்பீரம் இருக்க வேண்டும். பார்த்த உடன் ஃபயர் தெறிக்க வேண்டும்.

ஏன் என்றால் இரண்டு மாபெரும் மலைகள் மோதுகின்றது. எதிர்பார்ப்பு ஏக்கசக்கம் இருக்கும். தியேட்டரில் பூகம்பம் வரும் அளவிற்கு இந்த சண்டைக்காட்சி இருக்க வேண்டும்.

வெறுமனே செய்தி எழுத நினைத்த என் கைகள் Master third Look Poster-யை பார்த்தவுடன் அதுவே என் மூளையை கண்ட்ரோல் செய்து டைப் செய்துகொண்டு இருக்கிறது.

படத்தை இயக்குவது யாரு கைதி இயக்குனரு. சற்று கைதி படத்தில் கார்த்தி, லாரியில் இருந்து இறங்கும் காட்சியை நினைத்துப்பார்த்தேன்.

இதென்ன கே.ஜி.எப். படமா? மாஸ்டர் படமா? என ஒரு நிமிடம் யோசித்து விட்டேன். ஏன் என்றால்? மோதிக்கொள்வது இரண்டு பெரிய தலைக்கட்டு.

ஒன்று நடிப்பிலேயே மிரள வைக்கும். மற்றொன்று நடிக்காமல் ஆக்ஷன் காட்டியே மிரள வைக்கும். இரண்டும் சேர்ந்து என்ன சேட்டைகள் செய்யப்போகிறதோ?

கட்டுக்கடங்காத காளைகள் திமிலை உயர்த்திக் கொண்டு மோதிக்கொள்வது போன்று உள்ளது. ஒரு போஸ்டரை பார்த்தே என் கைகள் இப்படி டைப் அடிக்கிறது என்றால்?

படம் வெளியானால்? யாருயா நீ? படம் எடுக்குறியா இல்ல பாம் வக்கிறாயா? பார்த்தவுடன் இப்படி வெடிக்கிறது.

லோகேஷ் கனகராஜ் நீ வேற லெவல். போஸ்டர் டிசைன் பண்ண தம்பி, கேமராக்காரத் தம்பி நீங்களும் தான்.

விஜய் vs விஜய் சேதுபதி Master third Look Poster பக்கா மாஸ் காட்டும் மாஸ்டர் பீசுமா!

3

இந்தியா-நியூசிலாந்து: சப்பையாக முடிந்த மேட்ச்

2
இந்தியா-நியூசிலாந்து

இந்தியா-நியூசிலாந்து: சப்பையாக முடிந்த மேட்ச். 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது.

India vs New Zealand T20 Series 2020

முதல் டி20 போட்டி

இந்தியா நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்றது.

நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 19 ஓவரிலேயே 4 விக்கெட் இழந்து 204 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இரண்டாவது டி20 போட்டி 

முதல் டி20 போட்டியில் 200 ரன்கள் வரை சென்றதால் இரண்டாவது போட்டி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியது.

ஆனால் நடந்ததுவோ வேறு, 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பின்னர் களம் இறங்கிய இந்திய அணி 17.3 ஓவர் முடிவில் 3 விக்கெட் மட்டுமே இழந்து 135 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி சப்பையாக முடிந்துவிட்டது. ஜடேஜா இரண்டு விக்கெட்களை கைபற்றினார். தாக்கூர், பும்ரா, துபே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

3

இந்தியக் குடியரசு தினம் ஏன் கொண்டாப்படுகிறது?

0

இந்தியக் குடியரசு தினம் ஏன் கொண்டாப்படுகிறது? அதிகமானோர் குடியரசு தின விழா மற்றும் சுதந்திர தினம் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் குழம்பி விடுகின்றனர்.

இந்தியக் குடியரசு தின விழா, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாள் தேசிய விடுமுறை தினமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காந்தி கொண்டு வந்த விடுதலை நாள்

விடுதலை நாள் இந்தியக் குடியரசு தினம்

சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே 1930-ஆம் ஆண்டு ‘பூர்ண சுவராஜ்’ என்ற விடுதலை அறைக்கூவலை நினைவு படுத்தும் வகையில் ஜனவரி 26 ஆம் நாளை ‘விடுதலை நாள்’ எனக் காந்தியடிகள் அறிவித்தார்.

அப்பொழுது இருந்தே ஜனவரி 26-ஆம் நாள் ‘விடுதலை நாள்’ என்று காங்கிரசார்களால் உறுதிமொழி எடுக்கப்பட்டு வந்தது.

இந்திய அரசியலமைப்பு சட்டம்

சுதந்திரம் பெற்றபின் ஆகஸ்ட் 28-ஆம் தேதி 1947-இல் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வரையறுக்க ஒரு குழு பி.ஆர். அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்டது.

அக்குழு 1947-ஆம் ஆண்டு நவம்பர் 4-இல் ஒரு வரைவு அரசியலமைப்பு சட்டவாக்கவையில் சமர்பித்தது.

அந்த வரைவானது 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 166 நாட்கள் திறந்த அமர்வுகளில் அனைவரையும் சந்தித்து பல விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டது.

பின் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24-இல் 308 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதலில், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இந்திய அரசியலமைப்பு சட்டம் கையெழுத்திடப்பட்டது.

1950-இல் காந்தி முன்பு கொண்டுவந்த ஜனவரி 26 விடுதலை நாள். மக்களாட்சி மலர்ந்த நாளாக (குடியரசு நாள்) அன்றைய நேரு தலைமையிலான அரசு அறிவித்தது.

இதன் பிறகே ஜனவரி 26, 1950 முதல் குடியரசு தின விழாவாக இந்திய அரசு மற்றும் இந்திய மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் வேற்றுமை

சுதந்திரம் என்பது ஒருவர் மற்றவரிடம் இருந்து பெறுவது ஆகும். ஆகஸ்ட் 15, 1947-இல் ஆங்கிலேயர்களிடம் இருந்து நாம் பெற்றது சுதந்திரம் ஆகும். எனவே அன்று சுதந்திர தின விழா கொண்டாடுகிறோம்.

குடியரசு தினம் என்பது இந்தியா தனக்கென்று தனியாக அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கி அதை ஏற்று கொள்ளப்பட்ட நாள் ஆகும். எனவே ஜனவரி 26 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவை கொண்டாடுகிறோம்.

இந்தியக் குடியரசு தினம் கொண்டாட்டம்

சுதந்திர தினம்
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ஆம் நாள் குடியரசு தின விழாவானது தலைநகர் டெல்லியில் இந்தியப் பிரதமர், டெல்லி இந்தியா கேட்டில் உள்ள மறைந்த வீரர்களுக்கான அமர்சோதிக்கு வீர வணக்கம் செலுத்தி விழாவை துவக்கி வைப்பார்.

பின் குடியரசுத் தலைவர் டெல்லியில் உள்ள இராஜ் பாதையில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து இந்திய முப்படை வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக் கொள்வார்.

அன்றைய நாள் முந்தைய ஆண்டு சிறப்பாகப் பணியாற்றிய வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் வழங்குவார்.

மாநிலம் முழுவதும் அம்மாநில ஆளுநர்கள் மூவர்ண கொடியினை ஏற்றி காவலர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்று வீரதீர செயல்கள் புரிந்த காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்குகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு அயல்நாட்டு அதிபர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுகிறார்.

இவ்வாறாக ஒவ்வொரு ஆண்டும் நமது நாட்டில் குடியரசு தினமானது கொண்டாடப்படுகிறது.

2020-இல் குடியரசு தின விழா

குடியரசுத் தலைவர் குடியரசு தின விழாஇந்த ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் 71-வது குடியரசு தின விழாவானது குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் வெகு சிறப்பாக நடைப்பெற்றது.

குடிமக்களாகிய நாம் குடியரசு நாளை வெறும் விடுப்பு தினமாகப் பார்க்காமல் நம்மால் இயன்ற சேவைகளை நம் தாய் நாட்டிற்காக செய்வோம் என உறுதி எடுப்போம்.

3

ஏன் இரவு தூங்கவேண்டும்? அறிவியல் காரணம் என்ன?

1
ஏன் இரவு தூங்க வேண்டும் தூக்கத்தில் உள்ள அறிவியல்

ஏன் இரவு தூங்கவேண்டும்? தூக்கத்தில் உள்ள அறிவியல் காரணம் என்ன? இரவில் நிம்மதியாக தூங்குவது எப்படி? தூக்கத்தின் பயன்கள், மனிதன் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?

தூக்கம் மனிதர்களுக்கு கிடைத்த வரம். ஒரு மனிதன் தூங்குவதால் மட்டுமே மூளை புத்துணர்ச்சி அடைகிறது. மூளை சுத்திகரிப்பு அடைகிறது.

ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலமான 78 வருடங்களில் 28 வருடங்கள் தூங்கியே கழிக்கின்றான். தூக்கம் அந்த அளவு மனிதனுக்கு இன்றியமையாததாகிறது.

தூக்கத்தில் உள்ள அறிவியல் காரணம் என்ன?

ஏன் இரவு தூங்கவேண்டும்? தூக்கம் மனித உடலுக்கும், மூளைக்கும் பல வழிகளில் உதவி செய்கிறது. தூக்கத்தின் முதல் நோக்கம் “மறுசீரமைப்பு” ஆகும்.

மனிதனின் மூளை ஒவ்வொரு நாளும் வளர்சிதை மாற்றக் கழிவுகளைக் குவிக்கிறது. இந்தக் கழிவுப்பொருடகளின் அதிகமான குவிப்பு ‘அல்சைமர்‘ என்ற நரம்பியல் நோய் ஏற்படக் காரணமாகிறது.

மூளை சுத்திகரிப்பு எப்படி நிகழ்கிறது?

ஒவ்வொரு இரவும் மூளை சுத்ததப்படுத்தப்படும். இந்த மூளை சுத்திகரிப்பு நிகழ தூக்கம் ஒரு முக்கிய பங்குவகிக்கிறது. காலையில் எழுந்ததும் பிரஷாக உள்ளது என்று கூறுவது இதனால் தான்.

தூக்கத்தின் போது மூளையில் உள்ள செல்கள் 60 சதவீதம் சுருங்கி மூளையின் கழிவு நீக்க அமைப்பு என்றழைக்கப்படும் கிளிம்போடிக் அமைப்பு வழியாக கழிவை வெளியேற்றுகின்றது. இது மனிதனுக்கு தெளிவான மனப்போக்கு ஏற்படக் காரணமாகிறது.

தூக்கத்தின் இரண்டாவது நோக்கம் நினைவக ஒருங்கிணைப்பு ஆகும். இது உங்கள் நீண்ட கால நினைவுகளைப் பராமரித்து புலப்படுத்துகிறது.

சரியான தூக்கம் இல்லாமை உறுதியான நினைவுகளையும், உணர்ச்சிகளை உருவாக்கும் திறனைத்தடுக்கிறது. தூக்கம் வளர்சிதை மாற்றத்திற்கும் முக்கியப்பங்கு வகிக்கிறது.

மனிதன் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?

எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் எனில், ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 8 முதல் 9 மணி நேரங்கள் தூங்குவது அவசியமாகிறது. குறைந்த தூக்கமானது உடலின் பல செயல்களை குறைக்கிறது.

அதேபோன்று அதிகமாகத் தூங்குவதும் பாதிப்பை உண்டாக்குகிறது. உடல் சோர்வு, மறதி போன்ற பல உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கிறது.

ஒரு மனிதன் தினசரி சரிவரத் தூங்காமல் வார இறுதியில் நன்றாகத் தூங்கலாம் என்று நினைப்பது தவறு.

ஒரு மனிதனுக்கு ஒவ்வொரு இரவும் போதுமான தூக்கம் அவசியமாகிறது. நீங்கள் என்றாவது சரிவரத் தூங்கவில்லை என்றால் நிச்சயமாகக் கூடுதல் தூக்கம் பெற முயற்சி செய்ய வேண்டும்.

தூக்கம் எவ்வாறு உண்டாகிறது?

ஒவ்வொரு நாளும், தூங்கும் நேரத்தின் தரம் தூக்க சுழற்சி என்றழைக்கப்படுகிறது. தூக்க சுழற்சி இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது.

ஒன்று மிதமான தூக்கம். மிதமான தூக்கத்தில் சுவாசம் சீராக இருக்கும், இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும் மற்றும் மூளையின் வெளித்தூண்டுதலுக்கு குறைவாக பதிலளிக்கிறது.

இரண்டு ஆழ்ந்த தூக்கம். இந்த வகையான தூக்கத்தில் எழுந்திரிப்பது மிகவும் கடினம். ஆழ்ந்த தூக்கத்தின் போது பிட்யூட்டரி சுரப்பி வளர்ச்சி ஹார்மோன்களை வெளியிடுகிறது.

இது திசு வளர்ச்சி மற்றும் தசைப் பழுவைத் தூண்டுகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியையும் தூண்டுகிறது.

சிறப்பாக தூங்குவது எப்படி?

தூங்குவது எப்படி? மூளை சுத்திகரிப்பு எப்படி நிகழ்கிறது?கணினி திரைகள், தொலைக்காட்சி மற்றும் தொலைப்பேசிகளில் இருந்து வரும் வெளிச்சம் மெலடோனின் உற்பத்தியைத் தடுக்கிறது.

அதாவது, உங்கள் உடலில் தூக்கத்திற்காக நுழைய வேண்டிய ஹார்மோன்களைத் தயார் செய்யவில்லை என்பதாகும்.

தூக்கத்திற்கான மெலடோனின் உற்பத்தியை அதிகரிக்க தூங்குவதற்கு முன் மின்சாதனங்கள் உபயோகப்படுத்துவதை குறைக்க வேண்டும்.

இரவு அதிக நேரம் வேலை செய்வதால் மன அழுத்தம் உண்டாகும். இதனால் உடல் தூக்கத்தை ஏற்க தாமதமாகிறது. புத்தகம் படிப்பதில் மூளையின் செயல்திறன் அதிகரிக்கிறது.

50 சதவீத இன்சோம்னியா நோயானது, உணர்வு அல்லது மனஅழுத்தம் தொடர்புடையவை என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

தூங்கும் அறையின் வெப்பநிலை எவ்வளவு இருக்க வேண்டும்? 

தூங்கும் அறையின் வெப்பநிலை எவ்வளவு இருக்க வேண்டும்? தியானம், உடற்பயிற்சி மற்றும் ஆழமான சுவாசப் பயிற்சி மூலம் சிறப்பான தூக்கத்தைப் பெறலாம். நல்ல இசை கேட்டு தூங்கலாம்.

ஒரு மனிதன் குளிர்ந்த அறையில் தூங்கக் கூடாது.

மாறாக 65 முதல் 70 டிகிரி ஃபேரன்ஹீட் வெப்பநிலையில் தூங்குவது நல்லது. புகையிலைப் பழக்கத்தை தவிர்ப்பது நல்லது. படுக்கை அறையை படுக்கைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

3