Home Blog Page 268

Meet Meena ChatBot – மீட் மீனா; உலகின் சிறந்த சாட்பாட்

0
Meet Meena ChatBot உலகின் சிறந்த சாட்போட் மீனா சாட்பாட் (Chatbot) என்றால் என்ன?

Meet Meena ChatBot: “மீட் மீனா சாட்போட்”, உலகின் சிறந்த சாட்பாட் என கூகுள் கருத்துத் தெரிவித்துள்ளது. சாட்பாட் (Chatbot) என்றால் என்ன?

மனிதன் போலவே வாடிக்கையாளர்களிடம் பேசும் “மீனா” தான் தற்போது உலகின் சிறந்த சாட்பாட் (chatBot) என்று கூகுள் நிறுவனம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இதில் A1 ஆர்டிபிசியல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சாட்பாட் (Chatbot) என்றால் என்ன?

நம்முடைய உதவிக்காக ஒரு நிறுவனத்தை அழைக்கும்போது, மனிதர்களுக்கு பதில் நம்மோடு பேசுவது பேசும் கம்பியூட்டர் புரோகிராம் சாட்பாட் எனப்படும்.

மனிதனுக்கு பதிலாக அவன் செய்யும் வேலைகளை எளிதாக்கவும், அதே சமயம் மீண்டும் மீண்டும் செய்யவும் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு கணினி புரோகிராம் தான் சாட்பாட்.

நாம் சாட் செய்வதற்கு பயன்படும் பாட் ப்ரோகிராமை சாட்பாட் என்கிறோம். மனிதர்களைப் போலவே பேசுவதற்கான கம்ப்யூட்டர் புரோகிராம் இது.

இதில் A1 ஆர்ட்டிபிசியல் தொழில்நுட்பம் பயன்படுகிறது. மக்கள் சேவை மையங்களில் இவை உபயோகப்படுகிறது. உதாரணமாக நாம் கேஸ் சிலிண்டர் புக் செய்யும் போது நம்மோடு பேசுவது கணினியில் புரோகிராம் செய்யப்பட்ட சாட்பாட்டே.

பொதுவாக அமேசான் அலெக்ஸா (amazon alexa), கூகுள் அசிஸ்டண்ட் (google assitant), ஆப்பிள் சிரி (apple siri) மற்றும் மைக்ராசாப்ட் கார்டனா (microsoft cortana) போன்ற செயலியை இதுவரை மக்கள் பயன்படுத்தி இருப்பார்கள்.

இவ்வகை செயலிகள் மக்களுக்கு திருப்தி அளிப்பதாக இருந்திருக்காது. காரணம் உச்சரிப்பு சரியில்லை, வார்த்தை பிரயோகம் அல்லது தவறான புரிதலால் சரியான தகவலை நமக்குத் தர இயலாமல் போக வாய்ப்புகள் அதிகம். ஏதாவது ஒரு குறைபாடு இதுவரை இருந்த சாட்பாட்டில் இருந்து வந்தது.

மீட் மீனா சாட்போட் – Meet Meena ChatBot

இந்நிலையில் கூகுள் தங்களுடைய சாட்போட் மீனா தான் தற்போதைய நிலையில் உலகில் மிகச்சிறந்தது என அறிவித்துள்ளது.

மீனா மனிதர்கள் போலவே உரையாற்றும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். இதற்கு ஏதுவாக நியூரல் நெட்ஒர்க்கில் 2.6 மில்லியன் அளவுருக்கள் (parameter) உள்ளீடாக கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 40 பில்லியன் வார்த்தைகள் 341 ஜிபி text data-வும் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.

இதுமட்டுமின்றி பயனாளர்கள் தரும் தகவலை புரிந்துகொள்ள உதவும் என்கோடர் பிளாக் (encoder block) 13 டிகோடர் பிளாக் (decoder block)கும் பதிலை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது.

மீனாவின் சிறப்பம்சம்

ஆரம்ப நிலையிலேயே உணர்திறன் மற்றும் குறிப்பிட்ட சராசரி (SSA- Sensibleness and Specificity Average) 79% என்ற அளவில் சாதனை பெற்றுள்ளது.

மேலும் இது நண்பர்களைப் போல உரையாடவும், நகைச்சுவை கலந்தும் உரையாடும் வகையிலும் வடிவமைக்கப்பட்டது. வெறும் கேள்வி பதில் போல இனி உரையாடல் நிகழாது என்பதுவே இதன் கூடுதல் சிறப்பம்சம்.

சாட்பாட் பயன்படும் துறைகள்

  • Customer support
  • Data gathering
  • Healthcare
  • Personalised coach
  • Sales
  • Personalised news
  • Banking
3

கார்ல் மார்க்ஸ் வரலாறு – Karl Heinrich Marx History Tamil

1
கார்ல் மார்க்ஸ்

கார்ல் மார்க்ஸ் வரலாறு – Karl Heinrich Marx History Tamil. மார்க்சிசம் என்றால் என்ன? கார்ல் மார்க்ஸ் காதல், தோழன் ஏங்கல்ஸ் பற்றி தெரியுமா?

கார்ல் மார்க்ஸ் (Karl Heinrich Marx) ஒரு ஜெரமன் தத்துவவாதி, பொருளாதார நிபுணர், வரலாற்றாளர், சமூகவியலாளர், அரசியல் தத்துவவாதி, பத்திரிகையாளர் மற்றும் சோசலிச புரட்சியாளர் என்றெல்லாம் பலராலும் அறியப்படுகிறார்.

இவர் மே 5, 1818-ஆம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள டிரையர் என்னும் இடத்தில் பிறந்தார். 1843-ஆம் ஆண்டு அவர் ஜென்னி வான் வெஸ்ட்பாலனை (Jenny Von Westphalen) திருமணம் செய்து கொண்டார்.

மார்க்சின் மிகவும் பிரபலமான தத்துவம், “வரலாற்று சடவாதம்” என்பதாகும். சடவாதம் என்பது வாழ்க்கையில் பணமும், பொருளுமே முதன்மையானது என்னும் வாதம் ஆகும்.

மதம், அறநெறி, சமூக கட்டமைப்புகள் மற்றும் பிற விஷயங்கள் எல்லாம் பொருளாதாரத்தில் வேரூன்றியுள்ளன என்று அவர் நம்பினார். அவருடைய பிற்பகுதியில் அவர் மதத்தை சகித்துக் கொண்டார்.

முதலாளித்துவம் பற்றி மார்க்சின் பார்வை

கார்ல் மார்க்ஸ், முதலாளித்துவம் ஒரு முற்போக்கான வரலாற்று நிலை என்று பார்த்தார். அது இறுதியில் உள் முரண்பாடுகளால் மந்த நிலையில் உள்ளதுடன், சோசலிசத்தை பின்தொடருவதாக எண்ணினார்.

முதலாளித்துவம் என்பது மக்களுக்கு இடையேயான “சமூக, பொருளாதார உறவு” என்று குறிப்பிடுகிறார். இது மூலதனத்தை வரையறுக்கிறது. இந்த அர்த்தத்தில் அவர்கள் மூலதனத்தை அகற்ற முயல்கிறார்கள் என்று குறிப்பிடுகிறார்.

சோசலிசம் மற்றும் கம்யூனிசம்

சோசலிசம் என்பது ஒரு பொருளாதார தத்துவத்தின் மையத்தில் உள்ளதாகும். அதேநேரத்தில், கம்யூனிசம் என்பது பொருளாதாரம் மற்றும் அரசியல் தேவைகளுக்காக அரசாங்கத்தின் மத்திய உரிமையாளரின் முடிவுகளை உள்ளடக்கியதாகும். கம்யூனிஸ்ட் கட்சி எந்த மதத்தையும் நிராகரிக்கிறது.

மார்க்சிசம் என்றால் என்ன?

மார்க்சிசம் என்பது சமத்துவமின்மையின் அடிப்படையில் உள்ள பொருளாதார முறை எதிர்ப்பு, பெரும்பான்மை முறை மீதான விரோதப் போக்கு (ஊதியத் தொழிலாளர் முறை) மார்க்சிசம் எனப்படுகிறது.

மார்க்சிசம் நோக்கம் மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை அமைத்துக் கொடுப்பதே ஆகும்.

மெய்யியல்

இயற்கை, சமுதாயம், சிந்தனை போன்றவற்றின் வளரச்சியை நோக்கிய அறிவியலே மெய்யியல் எனப்படுகிறது. இதனைச் சார்ந்த அறிவு, காரணம், மனம், மொழி போன்றவற்றின் அடிப்படை பிரச்சனைகளைப் பற்றிய படிப்பு தத்துவவியல் எனப்படுகிறது.

புரட்சியாளர் மார்க்ஸ்

மார்க்ஸ் அறிவியல் சார்ந்த பொதுவுடைமைக் கருத்துக்களை மக்களிடம் விதைத்தவர். இவர் மெய்யியலாளர் மட்டுமின்றி அரசியல் வல்லுனர், ஆய்வாளர், எழுத்தாளர், சிந்தனையாளர் எனப் பலராலும் அறியப்பட்டாலும் புரட்சியாளராகவே மக்களிடம் பெரும்பாலும் அறியப்படுகிறார்.

ஏராளமான துறைகளில் இவர் வெளியிட்டுள்ள ஆய்வுகளும், கட்டுரைகளும் ஏற்றத்தாழ்வுகளை அகற்றும் நோக்கத்துடனேயே காணப்பட்டது.

பொதுவுடைமைக் கோட்பாடுகளை வகுத்தவர்களுள் முதன்மையானவராக மார்க்ஸ் அறியப்படுகிறார். இவருடன் இணைந்து பயணித்தவர் பிரெட்ரிக் ஏங்கல்சு (Friedrich Engels). இவர்கள் வர்க்க முரண்பாடுகளை எதிர்த்தனர்.

குழந்தை மார்க்ஸ்

மார்க்ஸ் பிரசியாவில் பிறந்தார். இவரது தந்தை பெயர் ஹென்றிச் மார்க்ஸ் (Heinrich Marx). இவர் வசதியான வழக்கறிஞர்களுள் ஒருவர். கார்ல் மார்க்ஸ் இவருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார்.

இவரது இளம் வயது பற்றி தெளிவான தகவல் இல்லை என்றாலும் மார்க்சின் தந்தை ஒரு யூதராக அறியப்படுகிறார். ஆனால் மார்க்ஸ் பிறப்பதற்கு முன்னரே கிறிஸ்தவராக மதம் மாறியதாகத் தெரிகிறது.

மார்க்ஸ் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் தனிப்பட்ட முறையில் கல்வி கற்றார். பின்னர் தனது 17-வது வயதில் பான் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார்.

பெர்லின் பல்கலைக்கழகத்தில் வரலாறு, மெய்யியல் கற்றுத் தேர்ந்தார். இறுதியாக எனா பல்கலைக்கழகத்தில் மெய்யியலைக்கான முனைவர் பட்டம் பெற்றார்.

பிரெட்ரிக் ஏங்கல்ஸ் சந்திப்பு

மார்க்ஸ் 1841-ல் பட்டம் பெற்ற பின்னர், சிலகாலம் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றினார். இவர் ரைனிஸ் சைத்துங் (Rheinische Zeitung) என்ற பத்திரிக்கையில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

ஆனால் இவரின் பொதுவுடமைக் கருத்துக்களால் பணியை விடுத்து பாரிஸ் செல்லும் நிலை ஏற்பட்டது. இங்குதான் மார்க்ஸ் 1844-ல் பிரெடரிக் ஏங்கல்ஸை சந்தித்தார்.

இருவரின் பொதுவுடமை நோக்கம் நட்பாக மலரந்தது. இருவரின் உறவும் இறுதிவரை அமைந்தது.

கார்ல் மார்க்ஸ் காதல் – karl Heinrich Marx Fall n Love

கார்ல் மார்க்ஸ் காதல், 17-வது வயதில் லுத்விக் வான் வெஸ்ட்பாலனின் (Ludwig von Westphalen) மகளான ஜென்னி வான் வெஸ்ட்பாலனுடன் காதல் மலர்ந்தது.

அப்போது ஜென்னிக்கு வயது 21. குடும்ப பிரச்சனை காரணமாக தன் காதலை மறைத்து வைத்திருந்த மார்க்ஸ் ஜென்னியின் 29-வது வயதில் அவரைத் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஏழு குழந்தைகள் என்றாலும் நான்கு குழந்தைகள் இளம் வயதிலேயே இறந்துவிட்டனர்.

மார்க்ஸின் முதல் நூல்

கார்ல் மார்க்ஸ் பிரான்சிலிருந்து வெளியேற்றப்பட்டு பிரசல்ஸ் சென்றார். ஜார்ச் வில்லியம், பிரெடரிக் ஹெகல், ஆடம் ஸ்மித், டேவிட் ரிக்கார்டோ மற்றும் ஜான் ஜாக் ரூசோவின் கருத்துக்களால் மார்க்ஸ் மிகவும் கவரப்பட்டார்.

மார்க்ஸ் 1847-ல் தனது முதல் புத்தகத்தை “தத்துவத்தின் வறுமை” என்ற தலைப்பில் வெளியிட்டார். அடுத்த ஆண்டு பலராலும் அறியப்படும் “பொதுவுடைமை அறிக்கை” என்னும் புத்தகத்தை ஏங்கல்சுடன் சேர்ந்து வெளியிட்டார்.

இவர் பல புரட்சிகர இயக்கங்களுடன் சேர்ந்து பணியாற்றினார். இதனால் பல இடங்களில் நாடுகடத்தப்பட்டார். பின்னர் இலண்டன் சென்று இறுதிவரை வாழ்ந்தார்.

தோழன் ஏங்கல்ஸ்

மார்க்ஸ் தனது வாழ்நாள் முழுவதையும் இலண்டனின் அரசியல் ஆராய்ச்சியிலும், பொதுவுடைமை பற்றிய நூல்களை எழுதுவதிலேயுமே கழித்தார்.

தனக்கு பத்திரிக்கைத் துறையில் கிடைத்த வருவாயையும் கூட மார்க்ஸ் தனது படைப்புகளுக்கே செலவளித்தார்.

1845-ல் பொதுவுடைமைக் கழகத்தை தொடங்கினார். அதில் உள்ள உறுப்பினர்களுள் ஒருவரான வில்ஹெம் வோல்ஃப் அவரகளுக்கு சிறிது பணத்தை கொடையாக வழங்கினார்.

இது அவரது பெற்றோரின் இறப்பிற்கு பின்னால் கிடைத்த பணம். பின்னர் நாடுகடத்தப்பட்ட மார்க்ஸ் மிகவும் வறுமைக்குள்ளானார்.

ஆடைகள் அனைத்தும் அடமானத்திற்கு சென்றன. மார்க்ஸின் மிக மோசமான சூழ்நிலை அது. மார்க்ஸ் வீட்டை விட்டுக்கூட வெளியே செல்லமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

கடன் கொடுத்தவர்களுக்குப் பயந்து வாழும் மோசமான பிரச்சனைகளுக்கு ஆளானார். வீட்டை விட்டும் மார்க்ஸ் விரட்டப்பட்டார்.

மாரக்சின் மோசமான சூழ்நிலையில் தனது மாத வருமானத்திலிருந்து சிறு தொகையை மார்க்சுக்கு வாழ்நாள் இறுதிவரை கொடுத்து உதவிய ஏங்கல்ஸ் சிறந்த தோழனாக இன்றுவரை அறியப்படுகிறார்.

லண்டன் பயணம்

மார்க்ஸ் நியூயார்க் டெய்லி டிரிபியூன் என்னும் முற்போக்குச் சிந்தனையுடைய பத்திரிக்கையில் ஐரோப்பிய அரசியல் நிருபர் ஆகப் பணியாற்றினார்.

அங்கு கட்டுரை எழுதுவதன் மூலம் அவருக்குச் சிறிதளவு பணம் கிடைத்தது. ஆனால் அவருடைய எல்லா கட்டுரைகளும் வெளியிடவில்லை.

சில கட்டுரைகளே வெளியிடப்பட்டன. மார்க்ஸ் மனைவி ஜென்னியின் பெற்றோர் இறப்பிற்குப் பின் அவர்களுக்கு மரபுரிமையாகப் கிடைக்கப்பெற்ற பணம் அவர்களை இலண்டனுக்கு குடிபெயர வைத்தது.

மூலதனம் நூல் (Capital)

ஐரோப்பாவில் நாட்டில் இருந்து வெளியேறியவர்களுக்கு இங்கிலாந்து வரவேற்பு நகரமாகவே காணப்பட்டது.

பிருத்தானிய அருங்காட்சியகத்தில் மார்க்ஸ் ஒவ்வொரு நாளும் தனது நேரத்தை செலவிடத் தொடங்கினார். இங்குதான் மார்க்ஸின் “மூலதனம்” என்னும் நூல் தோன்றியது.

கார்ல் மார்க்ஸின் மிகச்சிறப்பு வாய்ந்த நூலாக இந்த நூல் காணப்படுகிறது. 1867-ல் வெளிவந்த முதல் பகுதியைத் தொடர்ந்து மார்க்ஸ் எழுதிய குறிப்புகளையும், பதிகளையும் ஏங்கல்ஸ் தொகுத்து இரண்டாம் பகுதியாக 1883-ல் வெளியிட்டார்.

மார்க்ஸின் சிந்தனைகள்

மார்க்ஸின் சிந்தனைகள் எல்லா காலகட்டத்திலும் உள்ள மக்களாலும் ஏற்றுக்கொள்ள கூடியவையாக இருந்தது. அவருக்குப் பிடித்த சிந்தனைகள்:

* வரலாற்று தத்துவங்களும் அதன் ஆய்வும் – ஹெகல்
* செந்நெறி அரசியல் பொருளாதாரம் – ஆடம் ஸ்மித், டேவிட் ரிக்காடோ
* ஜான் ஜாக் ரூசோ, ஹென்றி டி செயன்ட் சிமோன், சார்லஸ் ப்யூரியர் போன்றோரின் சமூகவியல் சிந்தனைகள்.


* செருமானிய மெய்யியல் பொருளாதாரம் – லுத்விக் ஃபியூவெர்பக்
* தொழிலாளர் வர்க்கத்தினருடனான ஒருமைப்பாடு – பிரெடரிக் ஏங்கல்ஸ்

மார்க்ஸின் வரலாற்றைப் பற்றிய சிந்தனைகள் ஹேகலின் சிந்தனைகளை ஒத்திருந்தது. ஹேகல் அமெரிக்காவில் இருந்த அடிமை முறையை தீவிரமாக எதிர்த்தார்.

தத்துவவியல் கொள்கைகள்

மார்க்ஸின் தத்துவவியல் கொள்கையானது மனிதனின் இயற்கை இயல்புகளைப் பற்றி குறிப்பிடுகிறது. மனித இயல்பு என்பதை “இயற்கையை மாற்றுவது” என அவர் குறிப்பிடுகிறார்.

இயற்கையை மாற்றுவதை “உழைப்பு” என்றும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சிந்தனையை “உழைக்கும் திறன்” என்றும் குறிப்பிடுகிறார்.

சிந்தனைகளின் முடிவு

தனது வாழ்நாள் முழுவதையும் சிந்திப்பதிலேயே கழித்த மார்க்ஸ் கடும் மார்புச்சளி நோயாளும், நுரையீரல் வீக்கத்தாலும் பாதிக்கப்பட்டார்.

1881 டிசம்பரில் அவரது மனைவி ஜென்னியின் இறப்பு அவரை படுக்கையில் தள்ளியது. 1883 மார்ச் 14-ஆம் தேதி இலண்டனில் மார்க்ஸ் காலமானார்.

ஏங்கல்ஸ் அவரது இறுதி சடங்கில் உலகின் மிகச்சிறந்த சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார் என தனது வார்த்தைகளால் துயருற்றார்.

மார்க்ஸின் படைப்புகள்

* ஹெகலின் தத்துவத்தைப் பற்றிய சரியான விமர்சனத்திற்குரிய அறிமுகம்
* தத்துவத்தின் வறுமை
* கேள்விகளுக்கான இலவச பரிமாற்றம்
* கம்யூனிஸ்ட் அறிக்கை
* மூலதனம்
* அரசியல் பொருளாதார ஆய்வின் அறிமுகம்

மார்க்ஸ் கல்லறையில் பொரிக்கப்பட்ட வரிகள்

“உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்”

“தத்துவஞானிகள் உலகத்தை பல வழிகளில் புரிந்து கொள்கின்றனர் அவர்களின் நோக்கம் மாற்றம் மட்டுமே”.

3

NZvsIND: நியூசிலாந்து தோல்வி; காரணம் இந்தியாவின் பலமா?

0
NZvsIND நியூசிலாந்து தோல்வி

NZvsIND: நியூசிலாந்து தோல்வி; காரணம் இந்தியாவின் பலமா? ஏன் மீண்டும் நியூசிலாந்து சூப்பர் ஓவரில் தோற்றது.

NZvsIND 4th T20: India Batting

4வது டி20 போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. புதிய வீரர்களை கொண்டு களம் இறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே தடுமாறியது.

புதிய வீரர்கள் அனைவரும் சொதப்ப கே.எல்.ராகுல் மற்றும் மனீஷ் பாண்டே சிறப்பாக விளையாடி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

20 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழந்து 165 ரன்கள் எடுத்தது. ஆட்டத்தின் கடைசி பந்து சரியாக பேட்டில் படவில்லை என்றாலும் பாண்டேவும் சைனியும் ஒரு ரன் ஓடி விட்டனர்.

NZvsIND 4th T20: New Zealand Batting

பின்னர் களம் இறங்கிய நியூசிலாந்து அணி எளிய டார்கெட் 166 ரன்கள் அடித்துவிட வாய்ப்பு இருப்பதாகவே அனைவரும் கருதினர்.

இந்த போட்டியும் சூப்பர் ஓவர் வரை செல்லும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால் அது நடந்தது.

இந்த முறை சூப்பர் ஓவருக்கு காரணம் சாட்னர் தான். 19.5 ஓவருக்கு நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழந்து 164 ரன்கள் எடுத்தது.

கடைசி பந்தை தாக்கூர் வீசினார். எதிரில் இருந்த சாட்னர்  பந்து மிகவும் ஒயிடாக செல்வது கூடத் தெரியாமல் அதை விரட்டிச் சென்று அடித்தார்.

இதனால் தானாக கிடைக்க வந்த ஒரு ரன்னும் ஒரு பந்தும் வீணாகிவிட்டது. அந்த பந்தில் இரண்டு ரன்கள் எடுக்க முடியவில்லை. ஒரு ரன் ஓடிய நிலையில் அவுட் ஆகினர்.

நியூசிலாந்து பலவீனம்

நியூசிலாந்து அணி பவுலிங்கின்போது கடைசி பந்தில் தேவையில்லாமல் இந்திய வீரர்களை ஒரு ரன் ஓடவிடாமல் தடுத்திருந்தால் இந்த போட்டி நியூசிலாந்து அணிக்கு சாதகமாக மாறி இருக்கும்.

மேலும், நியூசிலாந்து பேட்டிங்போது கடைசி பந்தை அடிக்காமல் விட்டு இருந்தால் தானாக ஒரு ரன் கிடைத்து இருக்கும். அதுவும் போச்சு. இப்படி நியூசிலாந்து அணியின் பவீனம் மற்றும் சொதப்பல்கள் மூலமே இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

நியூசிலாந்து தோல்வி: வரும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சற்று உஷாராக நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாட வேண்டும். அடிபட்ட பாம்பு சும்மாவா இருக்கும்?

3

ரத சப்தமி: சூரிய வழிபாடு ஏன் செய்ய வேண்டும்?

0
ரத சப்தமி சூரிய வழிபாடு மந்திரங்கள்

ரத சப்தமி: சூரிய வழிபாடு ஏன் செய்ய வேண்டும்? ரத சப்தமி விரதம் எப்படி இருக்க வேண்டும்? மந்திரங்கள் எப்படி கூறவேண்டும்?

அதென்ன ரத சப்தமி? யாருடைய ரதத்தை இது குறிக்கிறது ? ரதத்திற்கும் சப்தமிக்கும் என்ன தொடர்பு என்கிற சந்தேகம் இருக்கலாம்.

இந்து மதத்தில் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் சூரியன் வானில் உலா வருவதாக ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது . அந்த சூரிய பகவானின் ரதத்தையும் திதிகளில் ஏழாவது திதியான சப்தமியையுமே இந்த ரத சப்தமி குறிக்கின்றது.

மகர மாதம் என்று சொல்லப்படுகின்ற தை மாதத்தில் அமாவாசை முடிந்து வரும் சுக்ல பட்ச சப்தமி திதியே ரத சப்தமி எனப்படுகிறது.

ரத சப்தமியின் சிறப்பு

12 ராசிகளிலும் ஒரு ஆண்டிற்கு சூரியன் பயணிக்கிறார். இதில் மகர மாதத்தில் (தை) ஆரம்பமாகும் காலமே உத்தராயண புண்ணிய காலம்  ஆகும்.

உத்தராயண காலத்தில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி தனது ரதத்தில் பயணிக்கத் துவங்குகிறார்.

வடக்கில் இருந்து வடகிழக்கில் சூரியன் தனது ரதத்தை செலுத்தி பயணிக்க துவங்கும் நாளே ரத சப்தமி நாளாகும்.

இதுவே வசந்த காலத்தின் துவக்கம் மற்றும் சூரியனின் சக்தி மற்றும் ஆற்றலானது அதிகமாக பூமிக்கு கிடைக்கத் துவங்கும் காலமாகும். எனவே பருவநிலை மாற துவங்கும்.

சூரிய ஜெயந்தி விழா

சூரிய வழிபாடு

காஸ்யப முனிவருக்கும் அதிதி தேவிக்கும் பிறந்த மகனே சூரியன் ஆவார். இவர் தோன்றிய நாளே மகர மாதம் சப்தமி திதி ஆகும். இந்நாளே சூரிய ஜெயந்தி விழா ஆகும்.

சூரியனின் தேரோட்டி அருணன் ஆவார். இவர் திருமாலின் வாகனமான பெரியதிருவடி கருடனின் சகோதரர் ஆவார்.

சூரியனின் ரதத்தில் ஏழு குதிரைகள் பூட்டப்பட்டுள்ளது. ஒற்றை சக்கரத்தில் ரதமானது ஓடுகின்றது.

இவரின் ஏழு குதிரைகள் ஏழு தினங்களை குறிப்பதாகும். ஏழு நிற குதிரைகள் வானவில்லின் நிறங்களை குறிக்கிறது. ரதத்தின் 12 சட்டங்கள் 12 ராசிகளை குறிப்பதாகும்.

மகா பாரதத்தில் ரத சப்தமி

மந்திரங்கள்

பீஷ்மர் தான் நினைக்கும் தருவாயில் மரணம் என்ற வரம் பெற்றும், அம்பு படுக்கையில் நினைத்த தருவாயில் மரணம் நேரவில்லை.

காரணம் குறித்து வியாசரிடம் கேட்கும் போது.  வியாசர் “அவரவர் செய்த பாவம் அவரவர் அனுபவித்தே ஆக வேண்டும்” என்றார்.

நன்னெறி தவறாத பீஷ்மர் பாவம் புரிந்திருப்பாரா? என்றால் ஆம், அவரும் பாவம் ஆற்றினார்.

முன்பு துரியோதனன் சபையில் துச்சாதனன் பாஞ்சாலியின் துகில் உரித்த போது. அந்த சபையில்  பீஷ்மர் இருந்தும் ஒன்றும் அறியாதவர் போல் இருந்தார்.

தடுத்து நிறுத்தும் அளவு சக்தி, திறன், ஆளுமை எல்லாம் இருந்தும் எதிர்த்து தடுக்கவில்லை. இது பெரும் பாவமல்லவா? இது தான் அவரின் இந்நிலைக்குக் காரணம் என்று வியாசர் உண்மையை எடுத்துரைத்தார்.

இதற்கு பிராயச்சித்தம் கேட்ட போது ஒருவர் தன் தவறை உணர்ந்தாலே அவரின் பாவம் மன்னிக்கப்படும்.

ஒரு தவறை செய்வது மட்டும் பாவம் அல்ல. ஒரு தவறு நடக்கவிடாமல் தடுக்காமல் இருப்பதும் பாவமே ஆகும்.

எல்லாமும் கண்டு காணமல் இருந்த உமது கண்கள், அவையில் பாஞ்சாலி மானம் காக்க எழாத உமது வலுவான தோள்கள், வாளெடுத்து எதிர்காத உமது கைகள், எழுந்து ஓடி காக்காத உமது கால்கள் இவை அனைத்தும் செய்த பாவத்தை அனுபவித்தே ஆக வேண்டும் என்றார்.

இதை கேட்ட பீஷ்மர் “இதற்கு சாதரண தண்டனை வேண்டாம் வெறும் நெருப்பு போதாது என்னைச் சுடுவதற்கு; சூரியசக்தியால் என்னைப் பொசுக்கி விடுங்கள்” என்று வேண்டினார்.

வியாசர் அர்க்க பத்ரம் என்று சொல்ல கூடிய எருக்க இலையை எடுத்து பீஷ்மர் அங்கம் முழுதும் அலங்கரித்தார்.

இந்த இலையானது சூரியனுக்குரிய சக்தியை உள்ளடக்கியது. இது உமது பாவங்களை பொசுக்கி தூய்மையாக்கும் என்றார். அவரும் தமது பாவம் நீங்கி தியானத்தில் ஆழ்ந்து இறைவனடி சேர்ந்தார்.

இது நடந்தது ரத சப்தமி நாளில் தான். இதன் அடுத்த நாள் வரும் அஷ்டமியே பீஷ்மாஷ்டமி எனப்படுகிறது.

ரத சப்தமி மற்றும் பீஷ்மாஷ்டமி தினங்களில் பித்ருக்களுக்கு செய்யும் தர்பணங்கள் பித்ருக்கள் மட்டுமின்றி நைஷ்டிக பிரம்மசாரியான பீஷ்மரின் அருளையும் பெற்று தரும்.

ரத சப்தமி விரதம்

ரத சப்தமி விரதம் எருக்க இலை மந்திரங்கள்

காலை எழுந்ததும் 6 மணி முதல் 7 மணிக்குள் நீர்நிலைகளிலோ அல்லது வீட்டிலோ நீராடும் போது 7 எருக்க இலைகளை தலை, கண்கள், தோள்பட்டைகள், கால்கள் மீது வைத்து நீராட வேண்டும்.

எருக்க இலையுடன் ஆண்கள் அட்சதையும், பெண்கள் அட்சதை மற்றும் மஞ்சள் வைத்து கொண்டு கிழக்கு திசை நோக்கி நீராட வேண்டும்.

இப்படி செய்வதால் சூரிய ஆற்றல் ஆனது எருக்க இலையில் இருந்து உடல் முழுவதும் பரவி நீண்ட ஆயுள் ஆரோக்கியம் தரும். பாவங்கள் நீங்கும்.

நீராடும் போது கூறும் மந்திரங்கள்,

ஸப்த ஸப்திப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே!
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி !
ஸத்வரம் யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு
தன்மே ரோகம் ச மாகரீ ஹந்து ஸப்தமீ நெளமி ஸப்தமி !
தேவி! த்வாம் ஸப்த லோகைக மாதரம் ஸப்தா(அ)ர்க்க பத்ர ஸ்நானேன
மம பாபம் வ்யபோஹய ! 

என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும்.

பின் சூரிய நமஸ்காரம் (சூரிய வழிபாடு) செய்து வீட்டில் பூஜை அறையில் செம்மண்ணில் மொழுகி சூரிய தேர் கோலம் வரைந்து சூரிய சந்திரரை வரைந்து மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.

சூரியனுக்குரிய மலர் தாமரை. இதனை வைத்து பூஜிக்கவும் இல்லையெனில் சிகப்பு நிற மலர்களை வைத்து பூஜிக்கவும்.

சூரியனுக்குரிய தானியம் கோதுமை அதில் சமைத்த பதார்தங்களை வைத்து நைவேத்தியம் செய்யலாம்.

சூரியனுக்குரிய சிகப்பு நிற வஸ்திரங்களை தானம் செய்யலாம். ரத சப்தமியில் செய்யப்படும் தானங்கள் சூரியன் மட்டுமின்றி நமது பித்ருக்கள் ஆசியினையும் பெற்று தரும்.

பூஜையின் போது ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம், விஷ்ணு சஹஸ்ரநாமம், காயத்ரி ஜெபம் செய்யலாம்.

ஸ்லோகம்-மந்திரங்கள்

“ஓம் ஜபாகுசும சங்காசம்
காச்யபேயம் மகாத்யுதிம்
தமோரிம் சர்வ பாபக்னம்
ப்ரனதோஸ்மி திவாகரம் !”

துதி:

“ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!
அருள் பொங்கும் முகத்தை காட்டி இருள் நீக்கம் தந்தாய் போற்றி!
தாயினும் பரிந்து சால சகலரை அணைப்பாய் போற்றி!
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!
தூயவர் இதயம் போல துலங்கிடும் ஒளியே போற்றி!
தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தை தருவாய் போற்றி!
ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி!
நானிலம் உளநாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி!!”

என்று மந்திரங்கள் கூறி துதித்துப் பாடி போற்றலாம்.

திருப்பதியில் ரத சப்தமி விழா

சூரிய வழிபாடு

சூரியன் விஷ்ணுவின் அம்சம் ஆவார் “சூரிய நாராயணர்” என்றே அழைக்கப்படுகிறார். திருமலை திருப்பதியில் ரத சப்தமி பிரம்மோற்சவம் விமர்சியாக நடைபெறுகிறது.

இந்நாளில் மலையப்ப சுவாமி ஒரே நாளில் ஏழு வாகனங்களில் எழுந்தருளி பிரம்மோற்சவம் காண்பார்.

அனைத்துப் பெருமாள் கோவிலிலும் சூரிய பிரபை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி தரிசனம் தருவார்.

2020 இல் ரத சப்தமி

ரத சப்தமி விரதம்

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி சனிக்கிழமை ரத சப்தமி வருகிறது.

அனைவரும் தவறாமல் சூரியனுக்குரிய (சூரிய வழிபாடு) அர்க்க பத்ரம் (எருக்க இலை) வைத்து கிழக்கு நோக்கி நீராடவும். ரத சப்தமி விரதம் இருக்கவும்.

இந்நாளில் கண்களால் காணக் கூடிய ஒரே இறைவனான ஒளி கடவுள் சூரியனை துதித்து போற்றி நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று வாழ்வோம்.

3

Corona Virus – கரோனா வைரஸ் – ஆபத்தானதா?

3
Corona Virus - கரோனா வைரஸ் - ஆபத்தானதா? கரோண வைரஸ் - உயிர்கொல்லி

Corona Virus – கரோனா வைரஸ் – ஆபத்தானதா? கரோண வைரஸ் – உயிர்கொல்லி கிருமி. ஒளிவட்ட வைரஸ்

கரோண வைரஸ் அடிப்படையில்  அபாயமானவை அல்ல, சில குறிப்பிட்ட வகை வைரஸ் மட்டுமே அபாயமானது ஆகும்.

MERS-Cov : MIDDLE EAST RESPIRATORY SYNDROME CORONA VIRUS

முதன் முதலில் மத்திய கிழக்கு நாடுகளில் மெர்ஸ் (MERS-Cov-MIDDLE EAST RESPIRATORY SYNDROME CORONA VIRUS) என்ற மர்ம காய்ச்சலால் சுமார் 858 பேர் மரணமடைந்தனர்.

அது குறித்த ஆய்வுகளில் முதல் கரோனா வைரஸ் கடந்த 2012-ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் அடையாளம் காணப்பட்டது.

2019 நவம்பர் மாத நிலவரப்படி மெர்ஸ் நோயால் சவூதி அரேபியாவில் தான் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை 712/858 என்பது குறிப்பிடத்தக்கது .

அதனைத் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளிலும் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவிலும் மேலும் ஐரோப்பாவிலும் கண்டறியப்பட்டது.

இருப்பினும் கடந்த 2014-ஆம் ஆண்டு முதன் முதலாக அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில் அமெரிக்கர் ஒருவருக்கு குறித்த வைரஸ் தாக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் புளோரிடா மாகாணத்திலும் ஒருவர் கரோனா வைரஸ் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று தரவுகள் கூறுகின்றன.

இதில் குறிப்பிடத் தகுந்தது என்னவென்றால் வைரஸ் தாக்கத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சமீபத்தில் சவூதி அரேபியா சென்று திரும்பினார்கள் என்பது தான்.

2020 ஜனவரி மாத நிலவரப்படி சீனாவின் கரோண வைரஸ் தாக்கம் காரணமாக அமெரிக்காவில் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் பலர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் .

கடந்த 2015 மே மாதம் கொரியாவில் மெர்ஸ் நோய் தாக்கத்தால் பல நூற்றுக்கணக்கானவர்கள் மரணமடைந்தனர்.

SARS-Cov : SEVERE ACUTE RESPIRATORY SYNDROME CORONA VIRUS

2003-ஆம் ஆண்டில் சார்ஸ் (SARS-Cov – SEVERE ACUTE RESPIRATORY SYNDROME CORONA VIRUS) என்ற நோயினால் பாதிக்கப்பட்டு சுமார் 774 பேர் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இருப்பினும் 2015 தரவின் படி உலகில் சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை.

உலக சுகாதார அமைப்பு (WHO): 2019-NCOV ( NOVEL CORONO VIRUS)

தமிழில் ஒளிவட்ட வைரஸ் என்றழைக்கப்படும். உலகசுகாதார அமைப்பின் படி சீனாவில் அடையாளம் காணப்பட்டுள்ள கரோனா வகை வைரஸ் பெயர் 2019 -Ncov-NOVEL CORONO VIRUS என்பதாகும்.

2019 டிசம்பர் மாதம் சீனாவில் கரோனா வைரஸ் தாக்கத்தால் தற்பொழுதுவரை 219 பேர் மரணம் அடைந்துள்ளனர் மற்றும் பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சீன அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த வைரஸ் தாக்கத்தால் மூச்சு திணறல், தொண்டை எரிச்சல், வறட்டு இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவை ஏற்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சிறுவர்களுக்கு இந்தவகை காய்ச்சலால் காதும் பாதிக்கப்படுமாம்.

சுகாதார அவசர நிலை பிரகடனம்

உலகம் முழுவதும் பரவி வரும் காரோண வைரஸ் காரணமாக உலக சுகாதார அமைப்பு அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது . இதனால் உலக நாடுகள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது .

வைரஸ் கண்டுபிடிப்பு

கரோனா வகை வைரஸ்கள் முதன்முதலில் 1960-களில் கண்டறிப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வைரஸ் எங்கிருந்து உருவானது என்பது இன்னமும் கண்டறியப்படவில்லை.

பரவும் முறைகள்

paravகாரோண வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நபர்களிடம் இருந்து இருமல் மூலமாகவும் தொடுதல் மூலமாகவும் பரவுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

மேலும் இந்த வகை வைரஸ் காரணமாக ஒரு நபர் தனது வாழ்நாளில் ஒருமுறையேனும் காய்ச்சலால் பாதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த வைரஸ் எளிதாக பரவி விடும் என்பது ஆய்வில் வெளிவந்த உண்மை. அமெரிக்காவில் காரோண வைரஸ் பாதிப்பு பனி காலங்களில் அதிகம் ஏற்படுகிறது.

பொதுவான அறிகுறிகள்

பொதுவாக இந்த வகை வைரஸ் ஆனது மனிதனின் சுவாச மணடலத்தை பாதிக்கிறது அதன்காரணமாக மூக்கு ,தொண்டை ,இரத்தம் சுழற்சி போன்றவைகளின் மூலம் அடையாளம் காணப்படுகிறது.

குறிப்பாக இந்த வைரஸ் தாக்கம் நுரையீரலில் உணரப்படும் பொழுது வயதான நபர்களுக்கு நிமோனியா போன்ற காய்ச்சல் ஏற்படுமாம். நாளைடைவில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு மற்றும் இதய நோய் போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது.

கொரணா வைரஸ் தடுப்பூசி

இந்த வகை வைரஸ் தாக்குதலுக்கு இதுநாள் வரை கொரணா வைரஸ் தடுப்பூசி கண்டறியப்படவில்லை, மேலும் வைரஸ் தாக்காமல் பாதுகாக்கும் வழிமுறைகள் மட்டுமே செயலாக்கப்பட்டு வருகிறது.

தடுப்பு முறைகள்:

1.கையை சோப்புகள் அல்லது ஆல்கஹால் கொண்டு மிதமான வெப்பநிலையில் உள்ள நீரில் கழுவவேண்டும்.

2.கைகள் மற்றும் விரல்களை கண்கள் மற்றும் மூக்கு ,வாய் பகுதிகளுக்கு அருகில் கொண்டு செல்ல கூடாது.

3.நோய் தாக்கிய நபருடன் நெருங்கிய தொடர்பு இருத்தல் கூடாது.

4.முடிந்தவரை தனிமை படுத்தப்படவேண்டும்.

5.நீர்ம உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

6.பாதிக்கப்பட்ட நபரை தனிமை படுத்தப்பட்ட அறையில் வைத்து சிகிச்சை அளிக்க பட வேண்டும்.

7.ஆஸ்பிரின் போன்ற மருந்துகளை குழந்தைகளுக்கு மற்றும் வாலிபப் பருவ வயதினருக்கு பரிந்துரைத்தல் கூடாது.

3

அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட புத்தகங்கள் 10!

0
தடைசெய்யப்பட்ட புத்தகங்கள் அரசு தடை செய்த புத்தகம்

அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட புத்தகங்கள் 10. அரசு தடை செய்த புத்தகம் மற்றும் தடைசெய்த காரணமும் இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

புத்தகங்கள் எப்பொழுதும் தகவலை அறிந்து கொள்வதற்காகப் பயன்படுகின்றன. ஆனால், சிலநேரங்களில் அவை நமக்கு தீங்கு விளைவிக்க கூடியதாக மாறி விடுகிறது.

அதன் நோக்கத்தில் இருந்து விலகி விடுகிறது. இவ்வாறு அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட புத்தகங்கள் பற்றியும் அதற்கான காரணங்களைப் பற்றியும் விவரிக்கிறது இந்தக் கட்டுரை.

World Book Day 2020 Theme; உலக புத்தக தினம்

அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட புத்தகங்கள் வாரம்

அமெரிக்க அரசு தடை செய்த புத்தகம். தடைசெய்யப்பட்ட புத்தகங்கள் வாரம் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவால் நடத்தப்படுகின்றன.

இதன் நோக்கம் என்னவென்றால் அனைத்து வாசகர்களும் தடைசெய்யப்பட்ட புத்தகங்களை வாசித்து அறிந்து கொள்வதற்காக. அதை பற்றி அறிந்து கொள்ளாமல் ஒரு தவறான புரிதலை பெற்று விடக்கூடாது என்பதற்காக.

புத்தகங்கள் பல காலங்களாகவே மனிதர்களுக்கு அறிவைப் பரப்பும் ஒரு வழியாகப் பயன்படுத்தப்படுகிறது.

அது அறிவை தெளிவு படுத்திக் கொள்ளவும் பயன்படுகிறது. புத்தகங்கள் ஆலோசனைகளின் எழுதப்பட்ட வடிவத்தைக் கொண்டிருக்கிறது.

ஆனால், அதன் மறுபக்கம் புத்தகங்கள் பிரச்சாரத்திற்கும், மக்களை உபயோகப்படுத்திக் கொள்ளவும், சர்ச்சை மற்றும் குழப்பங்களை உருவாக்கும் எண்ணத்துடனும் பரப்பப்பட்டு வருகிறது.

சில புத்தகங்கள் இன்னும் தடைசெய்யப்பட வேண்டியிருக்கிறது. சில தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு இருளில் மங்கிக் கிடக்கின்றன; வெளிச்சத்தைக் காண இல்லாமலேயே.

புத்தகங்கள் அதிக வன்முறை மற்றும் தீவிர வன்முறை, கலகம், போதைப்பொருட்களை ஊக்குவிப்பது போன்ற காரணங்களால் அரசாங்கத்தால் தடை செய்யப்படுகின்றன.

அவற்றில் மக்களிடம் எப்பொழுதும் சர்ச்சைக்குரிய வகையில் இருக்கும் புத்தகங்கள் சிலவற்றைக் காண்போம்.

விலங்கு பண்ணை – ஜார்ஜ் ஆர்வெல்

விலங்கு பண்ணை என்பது ஒரு டிஸ்டோபியன் நாவல். இது அரசியல் நையாண்டி மற்றும் கற்பனையின் கலவையாகும்.

இரண்டு பன்றிகள், பனிப்பந்து மற்றும் நெப்போலியனின் கதாப்பாத்திரத்தை மையமாகக் கொண்டுள்ளது.

அவர்கள் பண்ணையின் பழைய முதலாளியிடம் இருந்து தப்பிப்பது, கட்டுப்படுத்துவது மற்றும் அவர்கள் தங்கள் மனித எஜமானர்களிடம் இருந்து தங்களை வேறுபடுத்திக்கொள்ள முயற்சிக்கும் போது, அந்த நாவல் அவர்களின் சாகசங்களை வெளிப்படுத்த முயற்சிக்கிறது.

சோவியத் ஒன்றியம் தொடர்பாக நெப்போலியனின் கதாப்பாத்திரம் சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினை அடிப்படையாகக் கொண்டிருந்ததால் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டது.

லோலிடா – லாடிமிர் நபோகோ

இந்த நாவல் தனது சிறுவயது காதலி இறந்துபோன காலத்திலிருந்து அண்மையில் குழந்தைகளுடன் திருமணம் செய்துகொண்ட ஒருவரின் கற்பனையைக் கோடிட்டுக் காட்டுகிறது.

இது ஐக்கிய நாடுகள், அர்ஜென்டினா, நியூசிலாந்து, கனடா மற்றும் தென்னாப்பிரிக்காவில் அதன் தன்மை காரணமாக அதன் வெளியீட்டுக் காலத்திலிருந்தே தடைசெய்யப்பட்டுள்ளது.

கிறிஸ்தவம்: கிறிஸ்தவ மத வரலாறு & பிரிவுகள்

டாவின்சி கோட் – டான் ப்ரௌன்

இந்த புத்தகம் கதாநாயகனின் கதையை விவரிக்கிறது. ஏனெனில் அவர் வரலாற்றில் முன்னனி பொக்கிசங்களில் ஒன்றான புனித கிரியேலின் சதித்திட்டத்தை விவரிக்க முயற்சிக்கிறார்.

மேலும், இயேசு கிறிஸ்துவின் மேரி மகதலேன் உடனான உறவுகளை குறிப்பதற்காக, கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் உள்ள அனைத்து மத அமைப்புகளாலும் இந்த புத்தகம் நேரடியாகத் தடைசெய்யப்பட்டது.

இதன் திரைப்பட பதிப்பும் நிறைய தடைகளைப் பெற்றது. பின்னர் கத்தோலிக்க சர்ச்சின் ஒப்புதல் பெற்ற பின்னரே வெளியிடப்பட்டது.

ரோமன் கத்தோலிக்க திருச்சபை வரலாறு

கோப்புகளின் இறைவன் – வில்லியம் கோல்டிங்

இந்த நாவல் ஒரு தீவில் விமான விபத்துக்குள்ளான சிறுவர்களின் கதையை விவரிக்கிறது.

இளம் வயதில் எந்த மேற்பார்வையும் இல்லாமல் சிறுவர்கள் தீவில் உயிர்பிழைக்க முயற்சிக்கிறார்கள் என்பது கதையின் கருத்தாகும்.

இதன் வெளிப்படையான பொருளுரையினாலும், நெறியற்ற தன்மையை சித்தரிப்பதாலும் மற்றும் சமூகத்தின் சட்டங்களில் இருந்து மறைக்கப்பட்டிருக்கும் மனிதனின் புராதனமான உணர்வுகளை நோக்கிச் செல்லும் கருத்தாலும் தடை செய்யப்பட்டுள்ளது.

தி சாத்தானிக் வெர்சஸ் – சல்மான் ருஷ்டி

இந்தப் புத்தகம் இரண்டு தனி நபர்களைப் பற்றி விவரிக்கிறது. காபிரெல் சலாடின் இருவரும் அதிர்ஷ்டவசமாக ஒரு விமான விபத்தில் இருந்து உயிர்பிழைத்து வாழ்வதை விவரிக்கிறது.

இந்த புத்தகம் முஸ்லிம் மதத்தின் மத உணர்வுகளைத் துன்புறுத்தியதற்காக இந்திய அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டது.

இதன் எழுத்தாளருக்கு 1989-ம் ஆண்டு, ஈரானின் தலைமைத் தலைவரால் மரண தண்டனை பரிசாக வழங்கப்பட்டது.

தி கேட்சர் இன் தி ரை – ஜே.டி.சாலிங்கர்

இந்தப் புத்தகம் இளைஞர்களிடம் எந்த விதமான அதிர்ப்தியையும் ஏற்படுத்தவில்லை. இது மிகவும் அப்பட்டமாக இளைஞர்களின் கவுல்ஃபீல்ட் உணர்வுகளை சித்தரிக்கிறது.

ஏனெனில் அந்தக் கதாபாத்திரத்தில் உள்ள இளைஞன் வீணாக நகரத்தைச் சுற்றிக் கழிக்கிறான் மற்றும் அவனது வீட்டை விட்டு வெளியேறுவதைப் பற்றி நினைக்கிறான்.

எதிர்கால தலைமுறையினரை எதிர்மறையாக பாதிக்கும் அச்சம் காரணமாகவும், கட்டுக்கடங்காத நடத்தைக்காகவும் அமெரிக்க அரசாங்கம் இப்புத்தகத்தை தடை செய்திருக்கிறது.

லஜ்ஜா – தஸ்லிமா நஸ்ரின்

1992-ல் பாபர் மசூதி சிதைவுக்குப் பின்னர் நேரடியாக வங்காளத்தில் அமைந்த ஒரு நாவலாகும்.

இந்திய அரசாங்கம் மற்றும் பல மதச்சார்பற்ற அரசாங்கங்கள் மக்களிடம் இந்தப் புத்தகம் வகுப்புவாத வெறுப்பை தூண்டும் என்ற அச்சத்தால் தடை செய்துள்ளன.

ஒன் ஃப்ளியூ ஓவர் தி குக்யூஸ் நெஸ்ட் – கென் கெஸ்ஸி

இந்த நாவலானது ராண்டலே பாட்ரிக் மெக்கர்பியின் கதையை விவரிக்கிறது மற்றும் ஒரு மனநல நிறுவனத்தின் உள்ளே நடக்கும் நாடகங்களை சித்தரிக்கிறது.

மோசமான அமெரிக்க அரசாங்கத்தின் சுகாதார அமைப்பை எடுத்துக் காட்டுகிறது. அவர்களுக்கு உடனடித் தீர்வையும் வழங்குகிறது.

அமெரிக்க அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட போதிலும், இந்தப் புத்தகத்தின் திரைப்பட பதிப்பு ஐந்து அகாடமி விருதுகளை பெற்றுள்ளது.

மகாத்மா காந்தி மற்றும் இந்தியாவுடன் அவரது போராட்டம் – ஜோசப் லெயிலெல்ட்

இந்த புத்தகம் மகாத்மா காந்தியின் வாழ்க்கையைக் காட்டியது. மேலும், அவரது நண்பர் ஹெர்மன் கல்லென்பாக்குடன் மிகவும் நெருக்கமான உறவைக் குறிக்க முயன்றது.

இது இந்திய சுதந்திர இயக்கத்தின் முக்கிய தலைவரின் மறுபக்கத்தைப்பற்றி காட்டுவதற்காக இந்திய அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது.

நிறம் ஊதா – ஆலிஸ் வாக்கர்

இது டைரி வழியாக செலி வாக்கர் கதையை வர்ணிக்கிறது. அவள் அடிமை முறையில் அவளது இரண்டாவது தந்தையிடம் சிக்கிக்கொண்டதைப் பற்றி விவரிக்கிறது.

இதில் உள்ள அசுத்தத்தாலும், பாலியல் வன்முறைக்காகவும் தடைசெய்யப்பட்டுள்ளது. இது சீலி எழுச்சிக்காகவும், அவளது சுயமரியாதைக்காகவும் போராடுவதைப் பற்றி விவரிக்கிறது.

3

Does Nila vembu really has the ability to stand against coronovirus? true?

0
Does Nila vembu Green Chiretta coronovirus ability to stand against

Does Nila vembu (Green Chiretta) really has the ability to stand against coronovirus? Is it true? Some peoples are started sharing in social media about nilavembu prevent us from coronavirus.

Does Nila vembu really has the ability to stand against coronovirus? Is it true?

Recently Nilavembu (Green Chiretta) got famous because it prevents us against fevers especially malaria, chronic fever, dengue fever and chikungunya.

Nilavembu consists so many health benefits. First it improves our body strength I mean immunity. It enhances digestion, hepatic functions and metabolism.

If you intake Nilavembu regularly at least 6 to 8 weeks you can feel the change we mentioned above.

Intakes of Nilavembu vary by age. You can have max 20ml if you’re an adult. Take max 5ml if you are boy and take 2.5ml for child. Take this in multiple doses before meal.

Now comes to the question does this really work against coronovirus?

You can improve your immunity by taking this. it also boosts metabolism. So your body can’t easily get affected by the virus.

Your body might get the ability to stand against the coronovirus (கரோனா வைரஸ்) but no so long. Already WHO informed there is no medicine and vaccine for coronovirus.

So be aware. Keep your body healthy and strong. Do not eat outside and half cooked meats, eggs as well. Better go for veggies.

3

கொரொனா வைரஸ்: நிலவேம்பு கஷாயம் குடித்தால் வராதா?

2
green chiretta நிலவேம்பு கஷாயம் Nila vembu

கொரொனா வைரஸ்: நிலவேம்பு கஷாயம் குடித்தால் வராதா? Does Nila vembu (green chiretta) really has the ability to stand against coronovirus? Is it true?

கொரொனா வைரஸ் (கரோனா வைரஸ்) மிகவும் ஒரு அச்சத்தை உண்டாக்கும் நோயாக உருவெடுத்து உள்ளது. இந்த வைரஸ் கிருமி எப்படி மனிதர்களுக்கு பரவியது என்பதே மர்மமாக உள்ளது.

இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கபடவில்லை. சீனா, ஆறு நாட்களில் புதிய மருத்துவமனை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

வைரஸ் பாதிக்கபட்ட நகருக்குள் புதிய நபர்கள் உள்ளே செல்லவோ, அங்கு உள்ள நபர்கள் வெளியே செல்லவோ அனுமதிக்கபடவில்லை.

ஒரே நாளில் கொரொனா வைரஸ் இரண்டு மடங்காக அதிகரித்து உள்ளது. 2000 பேர் வரை பாதிக்கப்பட்டதாக தகவல் வந்த நிலையில் அடுத்த நாளே 4000 பேர் என பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது.

இந்நிலையில் கொரொனா வைரஸ் (coronovirus) பாதிக்கப்பட்டவர்கள் நிலவேம்பு கஷாயம் குடித்தால் சரியாகிவிடும் என தமிழக மீம் கிரியேட்டர்கள், மீம் செய்து வருகின்றனர்.

கொரொனா வைரஸ் கிருமியிடம் இருந்து நிலவேம்பு கஷாயம் பாதுகாக்குமா?

நிலவேம்பு கஷாயம் தயாரித்தல்

நிலவேம்பு (Nila vembu) என்பது ஒரு வகையான மூலிகை செடி. ஆதிகாலம் முதல் இதைத் தமிழர்கள் மருந்தாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

நிலவேம்பு செடியை காயவைத்து; அதன் இலை, வேர் ஆகியவற்றை எடுத்து நன்கு கொதிக்கும் வெந்நீரில் போட்டு; மேலும் நன்கு கொதிக்க விட வேண்டும்.

பிறகு அந்த நீரை ஆரவைத்து வடிகட்டி பருக்கவேண்டும். இது ஒரு எளிய முறைதான். இந்த கஷாயம் மிகவும் கசப்புத் தன்மை கொண்டது.

தற்பொழுது நாட்டுமருந்துக் கடைகளில், ரெடிமேடாக நிலவேம்பு பொடி கிடைக்கிறது. இதை நேரடியாகவே அல்லது சுடுநீரில் கலந்து அப்படியே கூடப் பருகலாம்.

மேலும், அரசு மருத்துவமனைகளில் மழைக்காலங்களில் கண்டிப்பாக இந்த நிலவேம்பு குடிநீரை அனைவருக்கும் வழங்குவார்கள்.

கிருமிகளை எதிர்க்கும் வெள்ளையணுக்கள்

நிலவேம்பு கஷாயம் ஏன் அரசு மருத்துவமனைகளில் கொடுக்கப்படுகிறது? பொதுவாக நிலவேம்பு உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

எந்த ஒரு கிருமியும் நம் உடலுக்குள் புகுந்துவிட்டால் உடனே வெள்ளையணுக்களுக்கு சமிக்கைகள் கிடைக்கும்.

உடலுக்குள் ஒரு கிருமி வந்துவிட்டது என்றால் அந்தத் தகவல் முதலில் வெள்ளையணுக்களையே சென்றடையும்.

வெள்ளையணுக்கள் அந்த கிருமியை அழிக்கும் ஆண்டிபயாடிக் வைத்து இருந்தால் கிருமியை அழித்துவிடும். புதிய கிருமி என்றால் அதனுடன் கடுமையாகப் போராடி பெருகவிடாமல் தடுக்கும்.

ஒருவேளை கிருமி மிகவும் வீரியம் மிக்கது என்றால், முதலில் உடலில் உள்ள வெள்ளையணுக்களை அழிக்கும். இதன் காரணமாகவே காய்ச்சல் வருமுன்; சளி, மூக்கு வழியாக வெளிவரும்.

இறந்த வெள்ளையணுக்களே சளியாக நம் உடலில் இருந்து வெளியேறுகிறது.

நிலவேம்பு கஷாயம் நன்மைகள்

நிலவேம்பு கஷாயம் குடிப்பதன் மூலம் உடலில் வெள்ளையணுக்கள் அதிகரிக்கிறது. ஒரே நாளில் பலமடங்கு வெள்ளையணுக்களை அதிகரிக்கச் செய்யும் வல்லமை நிலவேம்புவிற்கு உண்டு.

ஏதேனும் ஒரு கிருமி நம் உடலுக்குள் வந்து வெள்ளையணுக்களை குறைக்க முயன்றால் நிலவேம்பு கஷாயத்தை குடிப்பதன் மூலம் வேகமாக வெள்ளையணுக்கள் உற்பத்தியாகும்.

இதன் காரணமாகவே அரசு மருத்துவமனைகளில் டெங்கு, மலேரியா போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்க நிலவேம்பு குடிநீரை வழங்குகின்றனர்.

கொரொனா வைரஸை நிலவேம்பு கட்டுப்படுத்துமா?

கரோனா வைரஸ் கொரொனா வைரஸ்கொரொனா வைரஸ் மட்டும் அல்ல எந்த ஒரு கிருமி உடலுக்குள் புகுந்தவுடன் முதலில் எதிர்ப்பது வெள்ளையணுக்கள் மட்டுமே. எனவே அதை குறையவிடாமல் பாதுகாப்பது நமது கடமையாகும்.

வெள்ளையணுக்கள் உயிர்ப்புடன் இருந்தால், கொரொனா வைரஸ் போன்ற ஆட்கொல்லிகளை உடலுக்குள் பெருக விடாமல் கட்டுக்குள் வைத்திருக்கும்.

கொரொனா வைரஸ், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை அல்லது நீண்ட நாட்கள் நாம் கொரொனா வைரஸை சமாளித்து உயிர்வாழ நிலவேம்பு குடிநீர் நிச்சயம் பயன்படும்.

மற்றபடி கொரொனா வைரஸை அழிக்கும் சக்தி நிலவேம்பு குடிநீருக்கு கிடையாது. வெள்ளையணுக்கள் வேண்டுமானால் கொரொனா வைரைசை அழிக்க ஏதுவாக தன்னை தகவமைத்துக்கொள்ள வாய்புண்டு.

அதுவரை வெள்ளையணுக்கள் தாக்குப்பிடிக்க நிலவேம்பு (green chiretta) உதவும். எந்த ஒரு நோய் பரவினாலும் உடனே நாம் தினமும் நிலவேம்பு கஷாயம் உட்கொள்ளுவது நல்லது.

3

NZ vs IND 3rd T20: நியூசிலாந்துக்கு ரிவீட் அடித்த இந்தியா

2
Super Over

NZ vs IND 3rd T20: நியூசிலாந்துக்கு ரிவீட் அடித்த இந்தியா. நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா Super Over வரை சென்று த்ரில் வெற்றியைப் பெற்றது. ind vs nz world cup 2019.

ind vs nz world cup 2019

ind vs nz world cup 2019

2019-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெல்லும் எனக் கணிக்கப்பட்டது.

ind vs nz world cup 2019 போட்டி. ஆனால், அந்த கனவைத் தவிடுபொடியாக்கிய அணி நியூசிலாந்து. அந்த போட்டியில் ரன் அவுட் ஆகிய தோனி பல நாள் தூக்கத்தை தொலைத்துள்ளார்.

IND vs NZ. இந்தியாவை தள்ளி இறுதிப்போட்டிக்கு நுழைந்த நியூசிலாந்து, இங்கிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.

சூப்பர் ஓவர் வரை அந்த ஆட்டம் சென்றது. இரண்டு அணிகளுமே இதுவரை உலகக்கோப்பையை ருசித்தது கிடையாது.

சூப்பர் ஓவரிலும் போட்டி டை ஆனது. யார் வெற்றி என எல்லோரும் திகைத்துவிட்டனர். ஆனால் போட்டியாளர்கள் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவித்தனர். இன்றும் அப்படி ஒரு போட்டியைக் கண்டதுபோல் இருந்தது.

NZ vs IND 3rd T20

இன்று நடந்த NZ vs IND 3rd T20 போட்டியில் இந்தியா பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக ரோஹித் சர்மா 65, விராட் கோலி 38, கே.எல்.ராகுல் 27 ரன்கள் எடுத்தனர். ஹமிஷ் பென்னெத் 3 விக்கெட்டுகளை கைபற்றினார்.

பின்னர் களம் இறங்கிய நியூசிலாந்து அணி இந்தியாவைப் போலவே ரன் எடுக்கத் துவங்கியது. 49-வது ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.

கிட்டத்தட்ட நியூசிலாந்து வெற்றி பெற்றுவிடும் என அனைவரும் நினைத்தனர். ஏன் என்றால் கேன் வில்லியம்ஸன் 95 ரன்கள் எடுத்து வலுவான பார்மில் இருந்தார்.

பும்ராவிற்கு ஓவர் முடிந்துவிட்டது. இறுதி ஓவரை ஷமி வீசினார். நியூசிலாந்து வெற்றிபெற 9 ரன்கள் மட்டுமே தேவை.

ஷமி வீசிய முதல் பந்திலேயே டெய்லர் சிக்சர் அடித்தார். அவ்வளவு தான் எல்லோரும் முடிந்துவிட்டது என நினைத்தனர்.

இரண்டாவது பந்தில் ஒரு சிங்கிள். வில்லியம்ஸன் பேட்டிங் சதம் அடிக்க 5 ரன்கள் தேவை. வெற்றிக்கு 2 ரன்கள் மட்டுமே தேவை.

வேறுவழியே இல்லை சிக்சர் அடித்தால் மட்டுமே சதம் கிடக்கும் என சிக்சர் அடிக்க முடியல பந்து பேட்டில் டச் ஆகி ராகுல் கையில் சிக்கியது.

இங்குதான் மிகப்பெரிய ட்விஸ்ட். 2 ரன்கள் நான்கு பந்து. ஒரு விக்கெட் காலி. மீதம் மூன்று பந்துகள் எஞ்சி உள்ளது.

இருப்பினும் இந்தியா வெற்றி பெரும் என விராட் கோலி கூட நினைத்து இருக்க மாட்டார். ஓவரின் நான்காவது பால் டாட்.

5-வது பால் பேட்டில் சரியாக படவில்லை இருப்பினும் டெய்லர் ரன் அழைக்க ஷெபேர்ட் வேகமாக ஓடினார். ராகுல் ஸ்டெபில் டேரெக்ட் ஹிட் அடிக்க நினைத்தார் முடியவில்லை. ஒரு ரன் ஓடிவிட்டனர்.

போட்டி டை ஆகிவிட்டது. இப்பொழுது சற்று நம்பிக்கை வந்தது ஒரு பால் கட்டுக்குள் வைத்தால் சூப்பர் ஓவர் சென்று வெற்றி பெறலாம். எதிர் நிற்பவர் ராஸ் டெய்லர்.

ஷமி பந்தை தூக்கி அடிக்க முயல பந்து எட்ச் ஆகி ஸ்டெம்பில் பட்டு போல்ட் ஆகினார். ஈசியாக இந்தியா வெற்றிபெற்று இருக்கலாம் அல்லது நியூசிலாந்து வெற்றி பெற்று இருக்கலாம்.

ஆனால் இந்தப் போட்டியை பரபரப்பாக மாற்றியவர் ஷமி மட்டுமே. யாரையும் வெற்றிபெற விடாமல் சூப்பர் ஓவர் வரை கொண்டு சென்றார்.

NZ vs IND Super Over

Super Over முதலில் பேட் செய்தது நியூசிலாந்து அணியின் குப்தில் மற்றும் வில்லியம்ஸன். பந்து வீசியது பும்ரா.

ரன்கள் கொடுக்காமல் கட்டுக்கோப்பாக பந்து வீசும் பும்ரா சூப்பர் ஓவர் என்றவுடன் பதறிவிட்டார். நிதானம் இல்லாமல் பந்து வீசினார். 17 ரன்கள் அடித்தனர் நியூசிலாந்து வீரர்கள்.

18 ரன்கள் எடுத்தால் வெற்றி என கடின இலக்குடன் ரோஹித்-ராகுல் ஜோடி பேட்டிங் செய்ய வந்தனர். ஆரம்பமே அபச குணம்.

ரோஹித் தன்னுடைய ஹிட்மேன் பலத்தையும் நம்பவில்லை. கே.எல்.ராகுலையும் நம்பவில்லை. முதல் பந்தில் ஒரு ரன் ஓடினார்.

ராகுல் அடிக்க மாட்டார் என நினைத்தாரோ என்னவோ இரண்டாவது ரன் ஓடினார். கீப்பர் பந்தை சரியாக புடிக்கவில்லை இல்லை என்றால் ரோஹித் நிச்சயம் அவுட்.

ரோஹித் விக்கெட்டை ஏன் எடுக்காமல் விட்டோம் என கீப்பர் நிச்சயம் தூக்கத்தை தொலைத்து விடுவார் இன்று.

அடுத்த பந்தில் ஒரு ரன் மட்டுமே கிடைத்தது. ராகுல் தன் பங்குக்கு ஒரு பவுண்டரி விரட்டினார். அடுத்து ஒரு சிங்கிள் எடுத்தார்.

இந்திய அணி 8 ரன்கள் எடுத்து இருந்தது. எஞ்சி இருப்பது 2 பந்துகள் மட்டுமே. எதிரில் இருப்பவர் ஹிட்மேன் ரோஹித்.

முதல் இரண்டு பந்தில் தடுமாற்றம் அடிப்பாரா என எல்லோருக்குமே ஒரு சந்தேகம் தொற்றிக்கொள்ள மீண்டும் ஒருமுறை நபர் ஒன் ஹிட்மேன் என ரோஹித் நிரூபித்து உள்ளார்.

தொடர்ந்து இரண்டு சிக்சர் இந்தியா த்ரில் வெற்றி பெற்று நியூசிலாந்தை அவர்கள் இடத்தில் வைத்து தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தொடரையும் கைபற்றி விட்டது.

இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளது. நியூசிலாந்து ஆறுதல் வெற்றி பெறுமா இல்லை வாஸ்அவுட் ஆகுமா என்று பார்க்கலாம்.

3

Change in kollywood: கதை ஒருவர்! இயக்கம் வெறொருவர்!

0
Change in kollywood கதை ஒருவர்

Change in kollywood: கதை ஒருவர்! இயக்கம் வெறொருவர்! கோலிவுட் என்கிற தமிழ் சினிமா பல புதிய மாற்றங்களை சந்தித்து வருகிறது.

நமது தமிழ் சினிமாக்களில் இப்போது, கதையை ஒருவர் எழுதுகிறார்; மற்றொருவர் அக்கதையை திரைப்படமாக இயக்குகிறார்.

Change in kollywood இவ்வாறான நிகழ்வு நம் தமிழ் சினிமாவுக்கு மிகவும் ஆரோக்கியமான ஒன்றே! இந்நிகழ்வுகளுக்கான உதாரணங்களை இக்கட்டுரையில் காண்போம்.

உலகநாயகனே முதல் உதாரணம்

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் இந்த யூக்தியை எப்போதே தொடங்கிவிட்டார். ஆம்! இவர் எழுதிய பல கதைகள் வெவ்வேறு இயக்குனர்களால் படமாக்கப்பட்டிருக்கிறது. பிரபல இயக்குனர்களும் இவரின் கதையைப் படமாக இயக்கிய வரலாறும் உண்டு.

விக்ரம், ராஜபார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், தேவர் மகன், மகாநதி, மகளிர்மட்டும், குருதிப்புனல், ஆளவந்தான், பஞ்சதந்திரம், நளதமயந்தி, மன்மதன் அம்பு, தூங்காவனம், உத்தமவில்லன், தசாவதாரம் போன்ற படங்களின் கதையெல்லாம் கமல்ஹாசனால் எழுதப்பட்டு வேறுநபர்களால் இயக்கப்பட்டது.

கமல்ஹாசன் அவர்கள் இவ்வாறு தொடர்ந்து செய்துகொண்டிருந்ததை, நம் தமிழ் சினிமா சமூகம் கடந்த சில காலங்களாக கையில் எடுத்துக்கொண்டுள்ளது. இது நிச்சயமாக தமிழ் சினிமாவின் உலகளாவிய முன்னேற்றத்திற்கு உதவும்.

தற்போது நம் தமிழ் சினிமாத்துறையில், “கதை ஒருவர்! இயக்குனர் வெறொருவர்!” என்ற வகையை அவ்வப்போது காணமுடிகிறது. மேலும் இவ்வகை வளர்ந்தும் கொண்டிருக்கிறது.

அசுரன்

சென்ற வருடம் திரைக்கு வந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற அசுரன் படம் மிகச்சிறந்த உதாரணம் .

பூமணி என்பவர் எழுதிய ‘வெக்கை’  எனும் நாவலை, இரண்டரை மணி நேரத்திற்கு ஏற்ற திரைக்கதையாக வடிவமைத்து திரைப்படமாக இயக்கினார் வெற்றிமாறன்.

பொன்னியின் செல்வன்

மணிரத்னம் அவர்கள் தன்னுடைய கனவுப்படம் என்று சொல்லி எடுத்துக்கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் படமும் இவ்வகையைச் சார்ந்ததுதான்.

கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் எனும் கதையைத்தான் தற்போது, திரைப்படத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைத்து இயக்கிக்கொண்டிருக்கிறார் மணிரத்னம்.

மேலே சொல்லப்பட்ட அசுரனும், பொன்னியின் செல்வனும் ஒரு நாவலை திரைப்படமாக மாற்றிய வகையைச் சார்ந்தது.

நீதானே என் பொன்வசந்தம் & குயின்

ஜிவா, சமந்தா நடித்த “நீதானே என் பொன்வசந்தம்” திரைப்படத்தின் கதையை ரேஷ்மா என்பவர் எழுதினார். கெளதம் வாசுதேவ் மேனன் அவர்கள் அக்கதையை திரைப்படமாக  இயக்கினார்.

தற்போது MX பிளேயரில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் “குயின்” வெப்-சீரிஸின்  கதையும் வெறொருவரால் எழுதப்பட்டு பின்பு அக்கதை கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் கிடாரி பட இயக்குனர் பிரசாத் அவர்களால்  இயற்றப்பட்டதுதான்.

மான்கராத்தே

மான்கராத்தே  திரைப்படம் மேலே சொன்ன படங்களில் இருந்து சற்றே வித்தியாசமான அணுகுமுறையைக் கொண்டது.

மான்கராத்தே திரைப்படத்தின் கதை பிரபல இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களால் எழுதப்பட்டது .

ஆம்! முருகதாஸ் அவர்கள் எழுதிய இக்கதையை அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய திருக்குமரன் அவர்களால் திரைப்படமாக இயக்கப்பட்டது.

வானம் கொட்டட்டும்

சரத்குமார், ராதிகா, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றோர் நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் வானம் கொட்டட்டும் திரைப்படத்தின் கதை புகழ்பெற்ற இயக்குனர் மணிரத்னம் அவர்களால் எழுதப்பட்டது.

அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தனசேகரன் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.

முன்னனி இயக்குனர்களான மணிரத்னம், வெற்றிமாறன், முருகதாஸ், கெளதம் வாசுதேவ் மேனன் போன்றோர்கள் இச்செயல்களை செய்வது; வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது.

இப்படி படத்திற்காக கதை ஒருவர் எழுதுவதோ அல்லது எழுதிய கதைகளை மற்றொருவர் திரைப்படமாக இயக்குவதோ ஆரோக்கியமான விஷயம் .

ஏனெனில் அப்போதுதான் நிறைய புதுச்சிந்தனைகள் பிறக்கும் அதிக எழுத்தாளர்கள் முன்னேறுவார்கள்.

ரசிகர்களுக்கு புதுவித திரையனுபவம் கிடைக்கும். இனி வரும் காலங்களில் “கதை ஒருவர், இயக்கம் வெறொருவர்” என்ற பாணி அதிகரிக்கும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.

3