Home Blog Page 272

குஞ்சாலி மரக்கார்: குன்ஹாலி மரைக்காயர் வரலாறு

0
குஞ்சாலி மரக்கார்

குஞ்சாலி மரக்கார் அல்லது குன்ஹாலி மரைக்காயர் வரலாறு. மரக்கார் என்பது 16-ஆம் நூற்றாண்டில் கேரளா காலிகட் மன்னர் ஜாமோர்,  முஸ்லீம் கடற்படைத் தலைவருக்கு வழங்கப்பட்ட பட்டம்.

மரைக்காயர் அல்லது மரக்கார்

மரக்கார் மலையாள மொழி வார்த்தையான மரக்கலம் என்பதிலிருந்து உருவானது. இது மரக்கலத்தின் (கப்பலின்) கேப்டனை குறிக்கிக்கும் சொல்.

ஐரோப்பாவை உருவாக்கும் ஆசியா  என்ற  புத்தகத்தில் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள்  டான் லாச் & எட் லெவி, மரக்கார் என்றால் ‘வைஸ்ராய்’ என்று கூறுகிறார்.

மரைக்காயர் வரலாறு1507 முதல் 1600 வரை போர்த்துகீசியர்களுடன் ஜாமோரின் கடற்படைப் போர்களில்   நான்கு  முக்கிய குஞ்சாலி மரக்கார்கள் இருந்தனர்.

இந்திய கடற்கரையின் முதல் கடற்படை பாதுகாப்பை ஏற்பாடு செய்த பெருமை மரக்கார்களுக்கு உண்டு.

குஞ்சாலி என்பது குடும்பப் பெயர். இவர்களில் இரண்டாம்  குஞ்சாலி மரக்கார் அல்லது மரைக்காயர் பிரபலமானவர். இந்தியக் கடற்கரையில் முதல் கடற்படை பாதுகாப்பு தளத்தை உருவாக்கியவர்.

காலிகட்டுக்கு அருகிலுள்ள கோட்டக்கலில் உள்ள இரிங்கலில் உள்ள குஞ்சாலி மரக்காரின் மூதாதையர் வீடு இப்போது ஒரு அருங்காட்சியகமாக பாதுகாக்கப்படுகிறது.

நான்கு முக்கிய குஞ்சாலி மரக்கார்கள்

முதலாம் குஞ்சாலி குட்டி அஹம்மத் அலி 1520-1531
இரண்டாம் குஞ்சாலி குஞ்ஞாலி மரைக்காயர் 1531-1571
மூன்றாம் குஞ்சாலி பட்டு குஞ்ஞாலி 1531-1571
நான்காம் குஞ்சாலி முஹம்மது அலி 1595-1600

மரக்கார்களின்  தோற்றம் 

மரக்கார்கள் முதலில் கொச்சி துறைமுகத்தின் முஸ்லீம் கடல் வணிகர்களாக இருந்தனர்.

போர்த்துகீசிய கடற்படைகள் கேரளாவில் உள்ள மலப்புரத்தின் ஒரு பகுதி  பொன்னானியை  தாக்கியபோது மிகுந்த வீரத்துடன்  அவர்களுக்கு எதிராகப்   போரிட்டனர்.

இதனால்  காலிகட்டின் அரசர்  ஜாமோர் தன் படையில் இணைத்து கடற்படையின் அட்மிரல்களாக நியமித்தார்.

1504 ஆம் ஆண்டிலேயே போர்த்துகீசிய ஆதாரங்களின்படி  மரக்கார்கள் கேரளாவின் கொச்சி மற்றும் தமிழ்நாட்டின்  சோழமண்டல பகுதிகளில் கப்பல்கள் மற்றும் தொழிற்சாலைகள் வைத்திருந்தனர்.

போர்த்துகீசியர்கள் இப்பகுதிகளில்  தங்கள்  ஆதிக்கத்தை  நிலைநிறுத்துவதற்க்கு முன்பு மலேசியா முதல் மாலத்தீவு வரை இவர்களுடைய வர்த்தகம் இருந்தது என வரலாற்று ஆராய்ச்சியாளர்  (கே.எஸ்.மேத்யூ)  தெரிவிக்கிறார்.

இலங்கை, ராமநாதபுரம் மற்றும் கயல்பட்டணம் மரக்கார்களுக்கிடையேயான மிக நீண்ட  வரலாற்றுத்  தொடர்பு  இருந்தது.

அரிசியும், மசாலா பொருள்களும் முக்கியமான வர்த்தக பொருள்கள் என வரலாற்றாசிரியர்கள், ஷேக் ஜைனுதீன் மற்றும் பார்போசா போன்ற வரலாற்று  எழுத்தாளர்களால் மேற்கோள்காட்டப்படுகிறது.

போர்த்துகீசிய அடக்குமுறைக்கு எதிராக

போர்த்துகீசியர்கள் ஆரம்பத்தில் 1498-இல் வர்த்தக சலுகைகளைப் பெற முயன்றனர். ஆனால் முஸ்லீம்கள் பாரம்பரியமாகத் துறைமுகங்களில் வியாபாரம் செய்து வந்தனர்.

இதனால், இவர்களுக்கு இடையில் வர்த்தகப்போர் ஆரம்பித்தது. மன்னர் ஜாமோரும் போர்த்துகீசியர்கள் கொச்சியில் வர்த்தகம் செய்வதை விரும்பவில்லை.

இதன் விளைவாக போர்த்துகீசியர்கள் 1503-ஆம் ஆண்டில் தனது பரம எதிரியான கொச்சின் அரசுடன்  ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி ஆட்சியை சீர்குலைக்க முயன்றனர்.

போர்த்துகீசிய படையின் ஆதிக்கத்தைக் கடலில் உணர்ந்த ஜாமோர் தனது கடற்படையை மேம்படுத்தத் தொடங்கினார். இதனால்  குஞ்சாலி மரக்காரை பணிக்கு நியமித்தார்.

குன்ஹாலி மரக்கார்ஜாமோரினுக்கும் போர்த்துகீசியர்களுக்கும் இடையிலான போர்  16-ஆம் நூற்றாண்டின் இறுதி வரை தொடர்ந்தது,  மரைக்கார்கள் மிகத் தீவிரமாகப்  போராடி போர்த்துகீசியர்களின்  ஆதிக்கத்தைத்  தடுத்தனர்.

1598-ஆம் ஆண்டில் போர்த்துகீசியர்கள் அரசர் ஜாமோரினிடம் சமாதான உடன்படிக்கை ஏற்படுத்தி மராக்கார் IV ஆட்சியைக்கைப்பற்ற போகிறார் என பயமுறுத்தி அரசர் ஜாமோர் போர்த்துகீசியர்களுடன் சேர்த்துக்கொண்டு மராக்கார் IV-ஐ தோற்கடித்தனர்.

அவரையும் படைவீரர்கள் 40 பேரையும் கோவாவில் தூக்கிலிடப்பட்டனர். அவரது இறந்த உடல் பனாஜி  மற்றும் பத்ரெஸ் கடற்கரைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டது. அவரது  தலை  வெட்டி  எடுக்கப்பட்டு கேரளா  கன்னனூருக்கு அனுப்பப்பட்டது.

உலகில் எல்லா பகுதிகளிலும் கொடுமையான அரசுக்கு எதிராக அன்று முதல் இன்று வரை எந்த விளைவுகளைப் பற்றியும் பயம் இல்லாமல் குஞ்சாலி மரைக்காயர்கள் போராடிக்கொண்டே இருக்கின்றனர்.

3

Top 10 Fitness App 2020: டாப் 10 உடற்பயிற்சி செயலிகள்

0
Top 10 Fitness App 2020 download link

Top 10 Fitness App 2020: டாப் 10 உடற்பயிற்சி செயலிகள். உடலை பிட்டாக வைப்பதற்கு சிறந்த ஃபிட்னஸ் செயலிகள் தேர்வுசெய்து கீழே டவுன்லோட் லிங்க் இணைத்துள்ளோம்.

இணையம் வளர்ந்த இன்றைய காலக்கட்டத்தில் எதை எடுத்தாலும் செயலிகள். எந்தவொரு துறையாக இருந்தாலும் காலை நாம் எழுந்ததிலிருந்து இரவு உறங்கும் வரை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு செயலிகள் உள்ளன.

நாம் நம் உடலை பிட்டாக வைக்க உதவும் 2020-ன் 10 சிறந்த ஃபிட்னஸ் செயலிகள் உங்களுக்காக தேர்வு செய்து எழுதியுள்ளோம்.

Top 10 Fitness App 2020: டாப் 10 உடற்பயிற்சி செயலிகள்

10. Keelo 

இந்த செயலியின் சிறப்பு நாம் வீட்டிலிருந்தே ஜிம்க்கு செல்லாமல் உடற்பயிற்சி செய்வதற்கு முன்னுரிமை கொடுக்கும்.

நம்முடைய உடல் எடையை வைத்து தீவிர உடற்பயிற்சி செய்ய நிறைய டிப்ஸ் வழங்கும். இதில் பிரிமியம் அண்ட் ஃப்ரீ இரண்டுமே உள்ளது.

DOWNLOAD

9. Workit

தீவிர உடற்பயிற்சியும் பளுதூக்கும் பயிற்சியும் சேர்ந்த கலவையாக இந்த செயலி தயாரிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய உடலின் முன்னேற்றத்தை படிப்படியாக கணிக்கும் வகையில் இதன் யு‌ஐ உள்ளது.

இதன் ப்ரீ வெர்ஷனில் நீங்கள் அனைத்தையும் பெறலாம். பிரிமியம் வெர்ஷனில் பி‌எம்‌ஐ கணிக்கும் அம்சம் இன்னும் பல அம்சங்கள் அமைந்துள்ளன.

DOWNLOAD

8. Nike Training Club 

டாப் 10 உடற்பயிற்சி செயலிகள் டவுன்லோட் லிங்க்

தலைசிறந்த ஃபிட்னஸ் வல்லுனர்களால் எடுக்கப்பட உடற்பயிற்சி காணொளிகள் மற்றும் குறிப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன. இதில் நீங்கள் அனைத்து விதமான உடற்பயிற்சி சேவைகளையும் பெறலாம்.

DOWNLOAD

7. FitNotes 

இந்த செயலியை நீங்கள் இணையம் இல்லாமலும் உபயோகம் செய்யலாம். இதில் எந்த வித பெர்சனல் இன்ஃபர்மேஷன் இமெயில், மொபைல் எண் போன்றவை கேட்காது.

இதிலும் ப்ரீ மற்றும் பிரிமியம் வெர்ஷன்கள் உள்ளன.

DOWNLOAD

6. Sweat

உங்களுக்கு உடற்பயிற்சி குறிப்புகளுடன் உணவு அட்டவணையும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உங்களின் தேவைக்கேற்ப நீங்கள் உடல் எடைய குறைத்து கூட்டிக் கொள்ளலாம்.

DOWNLOAD

5.Sleep Cycle

நாம் வாழும் ஓய்வு இல்லாத இந்த மெஷின் வாழ்க்கையில் நம்மில் அதிக நபருக்கு தூக்கம் சரியாக வருவதில்லை.

அதனால் நேரத்திற்கு தூங்குவதற்கும் எவ்வளவு நேரம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தோம் என்பதையும் இது குறிப்பிடும். தூக்கத்தில் தொந்தரவு இருப்பவர்கள் இந்த செயலியை முயற்சி செய்து பார்க்கலாம்.

DOWNLOAD 

4. Home Workout – No Equipment

இந்த செயலியின் பெயரை படித்ததும் உங்களுக்கு தெரிந்து விடும் இது எதில் சிறந்து விளங்குகிறது என்று. உங்கள் உடலே உங்களுக்கு உடற்பயிற்சி உபகரணங்கள்.

நீங்கள் ஜிம்க்கு போகத் தேவையில்லை. வீட்டிலிருந்தே உடலை பிட் ஆக வைப்பது எப்படி என உங்களுக்கு உதவி செய்யும்.

DOWNLOAD  

3. Runtastic 

சிறந்த ஃபிட்னஸ் செயலிகள்இது அடிடாஸ் நிறுவனத்தின் சொந்த ஃபிட்னஸ் செயலியாகும். இதில் எந்த அளவுக்கு நீங்கள் தண்ணீர் குடிக்க வேண்டும், உடற்பயிற்சி குறிப்புகள் மற்றும் உணவு பழக்கங்கள் அனைத்துமே இதில் இருக்கும்.

இதில் பிரிமியம் வெர்ஷனில் நீங்க அனைத்து சேவையும் பெறலாம். ப்ரீ வெர்ஷனில் ஓரளவு உங்களுக்கு தேவையான சேவைகள் கிடைக்கும்.

DOWNLOAD  

2. MyFitnessPal 

கடந்த பதிமூன்று வருடமாக ஃபிட்னஸில் சிறந்த விளங்குகிறது. இதில் உடற்பயிற்சிக்கு இணையாக உணவுப் பழக்கங்களுக்கும் அதிக முக்கியத்தும் கொடுக்கப்பட்டுள்ளது.

உண்மையில் உணவு பழக்கம் என்பது மிகவும் முக்கியம் உடலை கட்டமைப்பாக வைப்பதற்கு இதனால்தான் மை ஃபிட்னஸ் பல் செயலி தலைசிறந்ததாக விளங்குகிறது.

DOWNLOAD 

1. Google Fit 

இதில் அனைத்து சேவையுமே உங்களுக்கு பிரீயாக கிடைக்கும். நம்மில் பல பேர் எதுவாக இருந்தாலும் இலவசத்தையே விரும்புகிறோம்.

மேலும் இதில் மற்ற ஃபிட்னஸ் செயலிகளுக்கும் இதற்கும் இருக்கும் தொடர்பு விளக்கி கூறப்பட்டிருக்கும். உங்களின் தேவைக்கு ஏற்ப உங்களுக்கு பிற ஃபிட்னஸ் கருவிகள் பரிந்துரைக்கப்படும்.

DOWNLOAD

3

உக்ரைன் விமான நிலையம்: 2 ஏவுகணைகள் வீசிய விவகாரம்

0
உக்ரைன் விமான நிலையம் ஏவுகணைகள் வீசிய விவகாரம்

உக்ரைன் விமான நிலையம்: 2 ஏவுகணைகள் வீசிய விவகாரம். ஏவுகணைகள் செலுத்தப்பட்டதை ஈரான் உறுதி செய்திருக்கின்றது.

உக்ரைனிய விமான தளத்தில் இந்த மாதம் இரண்டு ஏவுகணைகள் வீசப்பட்டதை உறுதி செய்த ஈரான் 176 பேரின் உயிரிழப்பிற்கு காரணமாகிறது .

உக்ரைன் விமான நிலையம்

நாட்டின் உள்நாட்டு போக்குவரத்து ஆணையம், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிலிருந்து வந்த தொழில்நுட்ப உதவியை பெற்றுக்கொண்ட பிறகு, விமான நிலையத்திலிருந்து கருப்பு பெட்டிகளை பறிமுதல் செய்வதற்கு நேர்மறையான பதிலைப் பெறவில்லை என்று தெரிவித்துள்ளது.

விமானமானது கியாவிலிருந்து உக்ரைன் சர்வதேச விமான நிலையத்தில் ஜனவரி 8-ல் தரையிறங்கியது.

ஈரான் இந்த விமான தாக்குதல் பற்றி ஒரு முழுமையான ,வெளிப்படையான விசாரணையை நடத்துவதற்கு சர்வதேச அழுத்தங்கள் பெருகியுள்ளன .

புலன் விசாரணை

புலன் விசாரணையில் இரண்டு Tpt-M1 ஏவுகணைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானம் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது குறித்து ஈரானின் உள்நாட்டு விமான போக்குவரத்து அமைப்பு அதன் வலைத்தளத்தில் திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விபத்து நடந்ததால் ஏற்படும் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு விசாரணை நடந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளது.

நியூயார்க் டைம்ஸ்‌ அறிக்கை

இந்த அறிக்கை நியூயார்க் டைம்ஸில் ஒரு அறிக்கையை உறுதிப்படுத்துகிறது. இதில் இரண்டு காட்சிகள் விமானத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டதை உறுதிப்படுத்துகிறது .

ஈரான், உக்ரைன் பயணிகள் விமானத்தை வேண்டுமென்றே சுடவில்லை என்று கூறுகிறது.

Tor-M1 என்பது வானூர்தி அல்லது கப்பல் ஏவுகணைகளை தாக்குவதற்கு சோவியத் ஒன்றியத்தால் உருவாக்கப்பட்ட குறுகிய தூர ஏவுகணை ஆகும்.

ஜனவரி 11-ம் தேதி புரட்சிக் காவலர்களின் வானொலித் தளபதி பிரிகேடியர் ஜெனரல் அமீர் ஹஜிதெத் முழுப்பொருப்பையும் ஏற்றுக்கொண்டார். ஏவுகணை ஆப்பரேட்டர் சுயமாக செயல்பட்டதாக அவர் கூறினார்.

மாணவர் போராட்டம்

ஈரானின் முக்கிய நகரங்களில் மாணவர்கள் தலைமையிலான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தலைமைத்தலைவர் அயதொல்லா அலி காமேனி  வெள்ளியன்று இந்த ஆர்ப்பாட்டங்கள் ஈரானிய மக்களின் பிரதிநிதி அல்ல என்றும் நாட்டின் எதிரிகள் இந்த வானவழியில் பெரும் பேரழிவை சுரண்டுகின்றனர் என்றும் குற்றஞ்சாட்டி உள்ளார்.

கருப்பு பெட்டிகளில் உள்ள செய்திகள் குறுகிய காலத்தில் மீட்கப்படும் என விமான போக்குவரத்து அமைப்பு கூறியுள்ளது.

சிவில் விமான போக்குவரத்து அமைப்பானது அதன் பிரெஞ்சு மற்றும் அமெரிக்க சக பணியாளர்களான பி.ஏ மற்றும் என்.டி.டி ஆகியவற்றை முறையே கருப்பு பெட்டிகளை வாசிப்பதற்கு தேவையான சாதனங்களின் பட்டியலை வழங்குமாறு கேட்டதாக தெரிவித்துள்ளது. தேவையான உபகரணங்களை மாற்றுவதற்கும் முயன்றதாக கூறியது.

3

சீனாவில் புதிய வைரஸ்: மூன்று மடங்கு அதிகரித்துள்ளது

0
சீனாவில் புதிய வைரஸ் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது இந்த வார இறுதிக்குள் சீனாவின் மற்ற முக்கிய

சீனாவில் ஒரு புதிய வைரஸ் தொற்று பரவியுள்ளது. இது இந்த வார இறுதிக்குள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இது வுஹனிடம் இருந்து சீனாவின் மற்ற முக்கிய நகரங்களுக்கு பரவியிருப்பதாக நம்பப்படுகிறது .

சீனாவில் புதிய வைரஸ்

சீனாவில் உள்ள பெய்ஜிங், ஷாங்காய் மற்றும் ஷென்சென் ஆகிய இடங்களில் மக்களுக்கு சுவாசக் கோளாறுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் வுஹனில் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை இந்த வைரஸால் மூன்று பேர் இறந்துள்ளனர். இதன் தாக்கம் ஜப்பான், தாய்லாந்து, தென் கொரியா போன்ற நாடுகளிலும் காணப்படுகின்றன.

இது ஒரு வகை நிம்மோனியாவை ஏற்படுத்தும் கொரோனா வைரஸின் பதிய திரிபு. இந்த வைரஸ் ஒரு நபரிடம் இருந்து மற்றவருக்கு பரவக்கூடும் என்று சீனா எச்சரித்துள்ளது.

விஷக்கிருமிகளை பற்றி விசாரணை செய்யும் சுகாதாரக் குழுவின் தலைவரான ஜாங் நான்சன் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது 14 மருத்துவ தொழிலாளர்களுக்கும் இந்த வைரஸ் பரவியுள்ளதாக கூறுகிறார்.

இந்த தொற்று நோய் ஒரு சந்தையில் இருந்து தோன்றியதாக கூறப்படுகிறது என்றாலும் அதிகாரிகளாலும் ,விஞ்ஞானிகளாலும் இது எப்படி பரவிக் கொண்டிருக்கிறது என்பதை அறிய இயலவில்லை.

சார்ஸ் மற்றும் கொரோனா வைரஸ்

இந்த வைரஸானது 2000ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பல நாடுகளில் பெரும்பாலும் ஆசியாவில் 774 பேரைக் கொன்ற சார்ஸ் மற்றும் கொரோனா வைரஸை நினைவுபடுத்துகிறது.

மரபணுக் குறியீடு பற்றிய ஆய்வில் மற்ற மனித நோய்களைக் காட்டிலும் சார்ஸ் வைரஸுக்கும் இந்த வைரஸுக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது .

இங்கிலாந்து வல்லுனர்கள் கூறுகையில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1700 ஆக இருக்க கூடும் என்று கூறியுள்ளனர்.

மற்ற நாடுகளுக்கு பரவிய வைரஸ்

தாய்லாந்து, ஜப்பான், தென் கொரிய நாடுகளில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் வுஹனில் உள்ளவர்களிடம் இருந்து இந்த வைரஸ் பரவியதாக தெரிகிறது.

தென்கொரியாவில் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்கள் கூறுகையில் ஒரு 35 வயது சீனப்பெண் வுஹனில் இருந்து பயணம் செய்த பின்னர், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறலில் சிக்கியிருப்பதாக கூறினார்.

உலக சுகாதார அமைப்பு சுற்றுலா மற்றும் வணிகம் பற்றி தடைகள் இல்லை என்று கூறியுள்ளது. எனினும் எந்த அறிவிப்பிற்கும் தயார் நிலையில் இருக்கும்படி மற்ற நாடுகளுக்கு வழிகாட்டியுள்ளது.

3

குஞ்சாலி மரைக்கார்: வரலாற்றுப் படத்தில் கீர்த்தி சுரேஷ்

0
மரக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம் குஞ்சாலி மரைக்கார் கீர்த்தி சுரேஷ்

குஞ்சாலி மரைக்கார்: வரலாற்றுப் படத்தில் கீர்த்தி சுரேஷ். மரக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம் மோகன்லால் நடிப்பில் பெரும் பொருட்செலவில் தயாராகி வரும் படம்.

தேசிய விருது வென்ற நடிகை என்று பெயர் பெற்ற பிறகு கீர்த்தி சுரேஷுக்கு படங்களின் வாய்ப்பு வந்த வண்ணம் உள்ளன.

சாவித்திரி பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டியப் பிறகு தமிழ், தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார்.

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்பொழுது மலையாளத்தில் தனது தடத்தை பதிக்க இருக்கிறார்.

மரைக்கார் திரைப்படம்

நடிகர் மோகன்லால் நடிக்கும் மரக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்ற சரித்திர படத்தில் கீர்த்தி சுரேஷ் இணைய இருக்கிறார்.

கீர்த்தி சுரேஷின்  சமீபத்திய போட்டோ சூட் முடிந்து அதனை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. கீர்த்தி சுரேஷ் தோற்றம் வெகுவாக ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது.

வலைதளத்தில் வைரலாகி கீர்த்தி சுரேஷுக்கு பாராட்டும், வாழ்த்துக்களும் தெரிவித்தவாறு இருக்கின்றனர் ரசிகர்கள். 

இப்படத்தில் மோகன்லால், கீர்த்தி சுரேஷ் உட்பட மஞ்சு வாரியார், ஆக்சன் கிங் அர்ஜூன், பிரபு, சுனில் ஷெட்டி, அசோக் செல்வன் உட்பட ஏராளமான தமிழ், மலையாள நடிகர்கள் நடிக்கின்றனர்.

மரைக்கார் வரலாறு

இந்த திரைப்படத்தின் கதை 16ம் நூற்றாட்டில் வாழ்ந்த நான்காவது குஞ்சாலி மரைக்கார் என்ற கடற்படை தலைவரின் கதை.  

இவரின் வீரதீர செயல்கள் தற்பொழுது வரை கேரளாவில் பிரபலம். மரைக்கார் வேடத்தில் மோகன்லால் நடிக்க இருக்கிறார்.

இதுவரை இல்லாத அளவிற்கு மோகன்லால் இந்த கதாபாத்திரத்திற்காக ரொம்பவே மெனக்கெடுகிறார். 

திரைப்படத்தின் பட்ஜெட்

சுமார் ரூ.100 கோடி ரூபாய் செலவில் தயாராகும் இந்த திரைப்படத்தை இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கவிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற 5 மொழிகளில் இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறார்கள்.

திரையரங்க வெளியீடு 

இப்படம் உலகம் முழுதும் தோராயமாக 5000 திரை அரங்குகளை அலங்கரிக்கும் என தகவல்கள் வெளியிட்டு இருக்கின்றனர்.

கீர்த்தி சுரேஷ் இந்தப் படம் தனக்கான நடிப்பை மேலும் பலப்படுத்தும் எனவும், நடிகையர் திலகம் திரைப்படத்தை போல இந்தப் படமும் தனக்கு நல்ல பெயரை கொடுக்கும் எனவும்  நம்புகிறார்.  

2020-ல் கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு என 7-க்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.

3

டிஎன்பிஎஸ்சி குரூப்-1: TNPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு

0
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 வேலைவாய்ப்பு அறிவிப்பு Tnpsc

டிஎன்பிஎஸ்சி குரூப்- 1: TNPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு. தமிழ்நாடு அரசு மற்றும் குடிமையியல் துறை இணைந்து நடத்தும் குரூப்-1 தேர்விற்கான அறிவிப்பு வெளியானது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அடுத்த அறிவிப்பு வெளியானது. வரும் ஏப்ரல் 5-ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என தனது அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப்-1

தமிழ்நாடு அரசு மற்றும் குடிமையியல் துறை இணைந்து நடத்தும் குரூப்-1 தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நேற்று 20-ம் தேதி வெளியிட்டுள்ளது.

அதில் தேர்வுக்கான விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, வயதுவரம்பு, மதிப்பெண்கள், தேர்வு நடைபெறும் நாள் போன்றவற்றை வெளியிட்டுள்ளது மற்றும் இணையத்தில் விண்ணப்பிக்க இணையதள முகவரியையும் வெளியிட்டுள்ளது.

பணி விவரம்

மொத்த பணியிடங்களாக 69 இடங்கள் அறிவிக்கப்பட்டது. இதில் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், உதவி காவல் ஆணையர், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர், தமிழ்நாடு கிராமப்புற வளர்ச்சித்துறையின் உதவி இயக்குனர் மற்றும் தீ மீட்பு பணியின் மாவட்ட நிர்வாகி போன்றவை அடங்கும். இதற்கு குறைந்த பட்ச வயது வரம்பு 21.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி நாள்

வரும் ஏப்ரல் 5ம் தேதி நடைபெற உள்ள முதல்நிலை எழுத்துத் தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் பிப்ரவரி-19 ஆகும்.

இதற்கான விண்ணப்ப படிவத்தினை tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கான கட்டண விவரம் அதிலேயே கொடுக்கப்பட்டுள்ளது.

மதிப்பெண்கள்

இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கு கட்டாயம் தமிழ்மொழி தெரிந்திருக்க வேண்டும்.

முதல்நிலைத் தேர்வில் கேள்விகள் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். முதன்மைத் தேர்வில் 750 மதிப்பெண்களுக்கும், நேர்காணலில் 100 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் கேட்கப்படும்.

TNPSC கேள்வி தாள்

பொதுவாக கேள்விகள் மூன்று பிரிவின் கீழ் கேட்கப்படும். பொதுஅறிவு, அறிவுத்திறன், திறனாய்வு சோதனைக்கேள்விகள். பொதுஅறிவுக் கேள்விகள் தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் இடம்பெறும்.

தேர்வு இறுதிக்கட்ட முடிவு

இறுதியாக தேர்வு செய்யப்பட்ட தேர்வானவர்களின் விவரம் முதன்மை மற்றும் நேர்காணலில் விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்களாகவே இருக்கும்.

முதல்நிலை தேர்வு என்பது முதன்மைத்தேர்விற்கு தேர்ந்தெடுக்க மட்டுமே.

3

ஷாருக்கான்-அட்லி: இதுக்கு ஒரு எண்டே இல்லையா

0
ஷாருக்கான்-அட்லி கூட்டணி எண்டே இல்லையா

ஷாருக்கான்-அட்லி கூட்டணி. இதுக்கு ஒரு எண்டே இல்லையா.:? கடந்த சில மாதங்களாக கோலிவுட்டை சுற்றி சுற்றி வரும் செய்தீதீ… இது..

விஜய்யுடன் மூன்று படம்

தொடர்ந்து தமிழ் சினிமாவில் 4 வெற்றி படங்களை இயக்கியவர் அட்லி. அவரது கதைகள் பற்றிய பிரச்சனைகள் பின் தொடர்ந்தாலும் படங்களின் வெற்றி அதனை மறைத்துவிடுகின்றன.

விஜய் கதாநாயகனாக நடித்த மூன்று படங்களுமே ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

ஷாருக்கான்-அட்லி கூட்டணி

அட்லியின் அடுத்த படங்கள் குறித்த வதந்திகள் வந்த வண்ணம் இருக்க, ஷாருக்கான் உடன் அமர்ந்து கிரிக்கெட் மேட்ச் பார்த்தார் அட்லி.

அவரது அடுத்த இலக்கு பாலிவுட் என கணிக்க துவங்கினர் ரசிகர்கள். ஷாருக்கான் அவருக்கு தேவையான கதையை தயார் செய்ய சொன்னதாக செய்திகள் பரவியது.

இதற்கிடையில் ரகசியமாக அட்லி தனது அடுத்த படத்துக்கான கதை விவாத வேலையைத் துவங்கினார்.

ஆனால், அட்லி சொன்ன கதை ஷாருக்கானுக்கு பிடிக்கவில்லை. இதனால் தனது உதவி இயக்குனர்கள் குழுவை முடுக்கி விட்டு இருக்கிறார் அட்லி.

மறுபடியும் கதை இறுதி வடிவத்தை எட்ட ஷாருக்கான் க்ரீன் சிக்னல் காண்பித்து இருக்கிறார் எனத் தகவல் கசிந்துள்ளது.

ஒரே மாதத்தில் கூட்டணி. பின்பு கூட்டணி முறிவு. பிறகு கூட்டணி, அதன்பிறகு கூட்டணி முறிவு என பல முறை அட்லி பற்றிய செய்தீ.. வதந்தியாய் பரவிய வண்ணம் உள்ளது.

அட்லி தன்னுடைய அடுத்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இதற்கு ஒரு முற்றுபுள்ளி வைக்க வேண்டும்.

3

கரும்பு தின்றவுடன் தண்ணீர் குடிக்க கூடாது ஏன்?

0
கரும்பு தின்றவுடன் தண்ணீர் குடிக்க கூடாது ஏன்?

கரும்பு தின்றவுடன் தண்ணீர் குடிக்க கூடாது ஏன்? தித்திக்கும் கரும்பை சுவைத்து தண்ணீர் அருந்தியதால் தத்தளித்ததாம் நாக்கு. சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்.

இனிப்பின் அரசன்

இனிப்பின் சுவையை பண்டிகை நாளில் முழுமையாய் உணரவைக்கும் பொருள் கரும்பு. கசக்கும் மருந்தை பார்த்திருப்பாம் ஆனால் இனிக்கும் மருந்தை பார்த்திருப்போமா???

உண்மையில் நாம் பார்த்திருப்போம் கரும்பின் வடிவில், அதை மருந்து என்று தெரியாமல் சுவைத்திருப்போம். இப்படிப்பட்ட கரும்பின் அறியப்படாத பலவற்றை இங்கு காண்போம்.

சர்க்கரை நோய் நண்பன் கரும்பு

கரும்பின் சுவையை சுவைக்காதவர் எவரும் இல்லை. ஏன் சர்க்கரை நோயுடையவரும் இதன் சுவையை சுவைக்கலாம்.

ஏனென்றால் கரும்பின் இனிப்பு தன்மை உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் சீராக வைத்திருக்க உதவும்.

அதுமட்டுமில்லாமல் சிறியவர் முதல் பெரியவர் வரை உண்ணும் இனிப்பால் எந்தவித தீமையும் ஏற்படுத்தாமல் சுவையுடன் கூடிய நன்மை தரும் ஒன்றே ஒன்று கரும்பு.

கரும்பு தின்றவுடன் தண்ணீர் குடிக்க கூடாது ஏன்?

இத்தகைய ஆற்றல் உடைய கரும்பை சுவைத்தவுடன் தண்ணீர் அருந்தினால் ஏற்படும் விளைவுகளும் உண்டு.

அந்த விளைவுகளைவை அனுபவித்திருப்பார்கள்  ஆனால் எது எப்படி உண்டானது என்பது யாரும் அறியாத ஒன்று.

பலர் கரும்பை சுவைத்தவுடன் தண்ணீர் அருந்தியதால் நாக்கு எரிச்சல் மற்றும் நாக்கினில் கொப்பளங்கள் ஏற்படுத்திருக்கும்.

கரும்பின் கால்சியம்

ஏனென்றால் கரும்பில் இயற்கையாகவே சுண்ணாம்பு சக்தியுடைய கால்சியம் அதிகம் இருக்கிறது. கரும்பிலிருந்து கிடைக்கும் கால்சியம் மனித உடம்பில் இருக்கும் எலும்புகளுக்கு நல்லது.

இதன் குறைபாடு காரணமாக பலபேர் மருத்துவமனையை நாடுகிறார்கள். ஆனால் கால்சியம் இயற்கையாகவே கரும்பின் மூலம் நமக்கு கிடைக்கிறது.

தித்திக்கும் கரும்பை சுவைத்து தண்ணீர் அருந்தியதால் தத்தளித்ததாம் நாக்கு

இனிப்பின் சுவையுடன் மருத்துவம் அளிக்கும் கரும்பில் இருக்கும் சுண்ணாம்பு என்னும் கால்சியத்தால் பிரச்சனையும் உண்டு என்றால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மைதான்.

பொதுவாகவே சுண்ணாம்பு வாய்க்குள் பட்டால் வாய் வெந்துவிடும் என்பார்கள். அதுபோல கரும்பில் இருக்கும் சுண்ணாம்பு தன்மையுடைய கால்சியம் நம் எச்சிலுடன் சேரும்போது ஒருவிதமான வேதிவினையை உருவாக்கிறது.

இந்த சமயத்தில் நாம் தண்ணீர் அருந்துவதால் நம் நாக்கினில் வெப்பம் அதிகமாகும்.  இதனால் ஒருவிதமான எதிர்வினை ஏற்படுத்துவதால் நாக்கினில் கொப்பளங்கள் ஏற்படும். மேலும் நாக்கு வெந்துவிடும்.

தவிர்க்கும் முறை

இதை தவிர்க்க கரும்பை சுவைத்தவுடன் தண்ணீர் அருந்தாமல் 15 நிமிடம் கழித்து தண்ணீர் அருந்தினால் நாக்கு எரிச்சல் மற்றும் நாக்கினில் ஏற்படும் கொப்பளங்கள் போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

மற்றபடி கரும்பில் உள்ள கால்சியத்தால் எந்த ஒரு ஆபத்தும் இல்லை. உடனே தண்ணீர் குடிப்பதால் மட்டுமே நாக்கில் கொப்பளம் ஏற்படுகிறது.

3

நெற்றிக்கண் 2: ரஜினி-மேனகா பதில் தனுஷ்-கீர்த்திசுரேஷ்

0
ரஜினி-மேனகா மூன்று ஹீரோயின்கள்

நெற்றிக்கண் 2: ரஜினி-மேனகா வேடத்தில் தனுஷ்-கீர்த்திசுரேஷ் நடிக்க உள்ளார்களாம். மேலும் இதில் மூன்று ஹீரோயின்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நெற்றிக்கண்

S P முத்துராமன் அவர்கள் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடமிட்டு அப்பா மகனாக நடித்து 1981 வெளிவந்த “நெற்றிக்கண்” திரைப்படம் மெகா ஹிட் ஆனது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

நெற்றிக்கண் 2

இந்த திரைப்படத்தின் அடுத்த பாகத்தை எடுக்கும் போட்டி தற்பொழுது கோலிவுட் வட்டாரத்தில் முக்கியமான விஷயமாக இருக்கிறது.

போட்டிகள் இருந்தாலும் இந்த திரைப்படத்தின் முழு உரிமையை யார் தக்க வைத்துக்கொள்வார் என்று கேட்டால் மறு பேச்சுக்கே இடமில்லாமல் நடிகர் தனுஷ் என்று பிசுறு இல்லாமல் கூறிவிடலாம்.

மூன்று ஹீரோயின்கள்

நெற்றிக்கண் 2 தனுஷ்-கீர்த்திசுரேஷ்அதே போல கதாநாயகி யார் என்று யோசிக்க கூட வேண்டாம். நெற்றிக்கண் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் தான்.

ரஜினி-மேனகா மட்டும் இல்லாமல் சரிதா லெட்சுமி என மொத்தம் மூன்று கதாநாயகிகள் ரஜினிக்கு ஜோடியாக நடித்து இருப்பார்கள். எனவே இதிலும் மூன்று ஹீரோயின்கள் நிச்சயம் இடம் பெறுவார்கள்.

வெற்றிவாகை சூடும் தனுஷ்

தனுஷ் படங்கள் சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. அசுரன் திரைப்படம் நூறு நாட்களை கடந்து திரை அரங்குகளை நிரப்பிக்கொண்டு இருந்தன.

தனுஷ் தேர்தெடுக்கும் கதைகள் ஒருபுறம் தனுஷ் நடிப்பு மறுபுறம் அவரது உழைப்பு என அனைத்தும் பாராட்டுக்கு உரியதே.

தனுஷ்-கீர்த்திசுரேஷ் நடிப்பில் தொடரி படம் சரியாக வெற்றிபெறவில்லை. நெற்றிக்கண் திரைப்படம் இருவருக்கும் ஒரு திருப்புமுனையாக அமையலாம்.

இந்த திரைப்படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி விரைவில் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3

தலைவலி ஏன் உண்டாகிறது? ஜில்லுன்னு சாப்பிட்டால்!

0
குளிர்பானம் சாப்பிடுவதால் தலைவலி ஏன் உண்டாகிறது?

தலைவலி ஏன் உண்டாகிறது ஜில்லுன்னு சாப்பிட்டால்? குளிர்ந்த பொருள், குளிர்பானம் சாப்பிடுவதால் தலைவலி ஏன் உண்டாகிறது? தலைவலி ஏற்பட காரணம் என்ன?

கோடை வெயில்

வெய்யில் காலம் ஆரம்பிக்க இருக்கிறது. பொதுவாக வெயில் காலங்களில் தான் அதிகப்படியான தலைவலி உண்டாகும்.

அதற்கு காரணம் வெயில் காலங்களில் வெயிலின் கொடுமை தாங்காமல் தலைவலி உண்டாகாது. நாம் உட்கொள்ளும் உணவே இதற்கு காரணம்.

குளிர்ந்த பொருள், குளிர்பானம், ஐஸ்கீரீம் போன்றவற்றை அதிக குளிருடன் அடிக்கடி சாப்பிடுவதன் காரணமாக தலைவலி ஏற்படுகிறது.

தலைவலி ஏற்பட காரணம் என்ன?

குளிர்ந்த பொருள் சாப்பிட்டால் தலைவலி ஏற்பட காரணம் என்ன?வெளியிலில் சென்றுவிட்டு வந்தவுடன் நாம் உட்கொள்ளும் குளிர்ந்த தண்ணீர், குளிர்பானம், ஐஸ்கிரீம் போன்றவற்றால் தான் தலைவலி உண்டாகிறது.

இது மூளையை முடக்கம் செய்யும் அல்லது மந்தமடையச் செய்யும். சில நேரங்களில் அதிகப்படியான தலைவலியை உண்டாக்கும்.

இதற்கு காரணம் வேகமாக அல்லது அதிகப்படியாக குளிர்ந்த உணவுகளையோ அல்லது குளிர்ந்த தண்ணீரையோ உட்கொள்வதே ஆகும்.

உடலில் ஏற்படும் விளைவுகள்

குளிர்ந்த உணவுகளை உட்கொள்ளும்போது அது முதலில் தொண்டை நரம்புகளில் ஒருவித சிலிர்ப்பை உண்டாக்கும்.

தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போது இரத்த நாளங்களில் வீக்கத்தை உண்டாக்கும் அல்லது தொண்டையின் மேல்பகுதியில் ஒரு வகையான வலியை ஏற்படுத்தும்.

மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளிடமும் இதற்கான அறிகுறிகளை நாம் காண முடியும்.

தலைவலி ஏற்படாமல் தடுப்பது எப்படி?

1. வெய்யில் காலங்களில் அதிகம் குளிர்ந்த உணவுகளையோ தண்ணீரையோ உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

2. இடைவெளி விட்டு எடுத்துக் கொள்வது உகந்தது. ஒரே நேரத்தில் அதிகம் உட்கொள்ளாமல் பகிர்ந்து உட்கொள்ளுதல் நல்லது.

3. முடிந்தவரை குளிர்ச்சியான உணவுகளை தவிர்த்து விடுதல் மிகவும் நல்லது.

3