Notice: Function amp_is_available was called incorrectly. `amp_is_available()` (or `amp_is_request()`, formerly `is_amp_endpoint()`) was called too early and so it will not work properly. WordPress is currently doing the `amp_init` hook. Calling this function before the `wp` action means it will not have access to `WP_Query` and the queried object to determine if it is an AMP response, thus neither the `amp_skip_post()` filter nor the AMP enabled toggle will be considered. It appears the plugin with slug `schema-and-structured-data-for-wp` is responsible; please contact the author. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 2.0.0.) in /home/u899037853/domains/mrpuyal.com/public_html/wp-includes/functions.php on line 6114

Notice: Function amp_is_available was called incorrectly. `amp_is_available()` (or `amp_is_request()`, formerly `is_amp_endpoint()`) was called too early and so it will not work properly. WordPress is currently doing the `amp_init` hook. Calling this function before the `wp` action means it will not have access to `WP_Query` and the queried object to determine if it is an AMP response, thus neither the `amp_skip_post()` filter nor the AMP enabled toggle will be considered. It appears the plugin with slug `schema-and-structured-data-for-wp` is responsible; please contact the author. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 2.0.0.) in /home/u899037853/domains/mrpuyal.com/public_html/wp-includes/functions.php on line 6114

Notice: Function amp_is_available was called incorrectly. `amp_is_available()` (or `amp_is_request()`, formerly `is_amp_endpoint()`) was called too early and so it will not work properly. WordPress is currently doing the `init` hook. Calling this function before the `wp` action means it will not have access to `WP_Query` and the queried object to determine if it is an AMP response, thus neither the `amp_skip_post()` filter nor the AMP enabled toggle will be considered. It appears the plugin with slug `schema-and-structured-data-for-wp` is responsible; please contact the author. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 2.0.0.) in /home/u899037853/domains/mrpuyal.com/public_html/wp-includes/functions.php on line 6114

Notice: Function amp_is_available was called incorrectly. `amp_is_available()` (or `amp_is_request()`, formerly `is_amp_endpoint()`) was called too early and so it will not work properly. WordPress is currently doing the `init` hook. Calling this function before the `wp` action means it will not have access to `WP_Query` and the queried object to determine if it is an AMP response, thus neither the `amp_skip_post()` filter nor the AMP enabled toggle will be considered. It appears the plugin with slug `schema-and-structured-data-for-wp` is responsible; please contact the author. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 2.0.0.) in /home/u899037853/domains/mrpuyal.com/public_html/wp-includes/functions.php on line 6114
தமிழ் செய்திகள் | தமிழ் News | Blog | Page 3 of 336 | Mr Puyal
Home Blog Page 3

கிறிஸ்துமஸ் நட்சத்திரம் உண்மையா? கிரேட் கன்ஜெக்சன் என்றால் என்ன?

3
கிறிஸ்துமஸ் நட்சத்திரம் உண்மையா? கிரேட் கன்ஜெக்சன் என்றால் என்ன? இயேசு பிறப்பு வரலாறு

வானில் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்று ஒன்று உண்டா? அது ஏன் மற்ற நாட்களில் தெரிவதில்லை? (Great Conjunction tamil) இயேசு பிறந்தபோது கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தோன்றியதா?

இயேசு பிறப்பு, வாசலில் கிறிஸ்துமஸ் நட்சத்திரம்

கிறிஸ்தவ பைபிள் வழியாக மத்தேயு கூறியதாவது, இதன்படி கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, ஏரோது அரசனிடம் ‘யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்’ என்றார்கள்.

இயேசு பிறப்பின் அறிகுறியே இந்த கிறிஸ்துமஸ் விண்மீன். அந்த விண்மீன் இருந்த திசையை நோக்கி சென்றே ஞானிகள் இயேசுவை மாட்டுத்தொழுவத்தில் கண்டெடுத்தனர்.

இதுதான் இயேசு பிறப்பை பற்றி பைபிளில் கூறப்படுவது. இதன் காரணமாகவே கிறிஸ்துமஸ் தினத்தன்று வாசலில் நட்சத்திரம் தொங்கவிடப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

கிறிஸ்துமஸ் நட்சத்திரம் உண்மையா?

கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்பது மற்ற நட்சத்திரங்களைப் போல அல்ல. கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்பது கோள்கள் மூலம் உருவாகும் ஒளி. அதையே அன்றைய காலகட்டத்தில் நட்சத்திரம் எனக் கணக்கிட்டு உள்ளனர்.

சூரிய குடும்பத்தில் உள்ள இரண்டு பெரிய கோள்களான சனியும், வியாழனும் அருகருகே சந்தித்துக்கொள்ளும்போது ஏற்படும் மிகப்பெரிய ஒளியே பூமியில் இருந்து வெறும் கண்களால் பார்க்கும்போது நட்சத்திரமாக தெரிகிறது.

கிறிஸ்துமஸ் தாத்தா கதை  எப்படி உருவானது? சண்டா கிளாஸ் ஏன் சிவப்பு நிற ஆடை அணிந்து உள்ளார்?

கிரேட் கன்ஜெக்சன் (Great Conjunction)

அறிவியலின் படி சனியும், வியாழனும் அருகருகே சந்தித்துக்கொள்ளும் நிகழ்வை கிரேட் கன்ஜெக்சன் (Great Conjunction) என்று அழைக்கின்றனர்.

வியாழன் ஒருமுறை சூரியனை சுற்றிவர 11.86 வருடம் ஆகும். சனி ஒரு முறை சூரியனை சுற்றி வர 29.4 வருடம் ஆகும்.

இப்படி சுற்றி வரும்போது ஓவ்வொரு 20 வருடம் அல்லது 19 வருடத்திற்கு ஒருமுறை அருகருகே சந்தித்துக்கொள்ளும் இந்த நிகழ்வையே கிரேட் கன்ஜெக்சன் என அழைக்கின்றனர்.

397 வருடங்களுக்கு ஒருமுறை மிகவும் நெருக்கமாக வரும். அப்போது ஏற்படும் ஒளி வழக்கத்தை கட்டிலும் மிகவும் பெரிய நட்சத்திரம் போன்று காணப்படும்.

2020 டிசம்பர் 21 அன்று இந்திய நேரப்படி 11:50 pm இந்த நிகழ்வை வானில் காணலாம். 6.1 arcminutes தூரத்தில் மிகவும் நெருக்கமாக சனியும், வியாழனும் சந்திகின்றது.

இதற்குமுன் 1623-ஆம் ஆண்டு இதைவிட மிகஅருகில் (5.2 arcminutes) சனியும், வியாழனும் சந்தித்துக்கொண்டது. ஆனால் அவ்வளவு தெளிவாக பூமியில் இருந்து பார்க்கமுடியவில்லை.

கிறிஸ்துமஸ் மரம் வரலாறு | கிறிஸ்துமஸ் மரம் உண்மை பெயர் என்ன?

இந்த நூற்றாண்டில் பிறந்தவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். ஏன் என்றால் 2020, 2080 ஆகிய வருடங்களில் இந்த நிகழ்வு மிகநெருக்கமாக நடைபெறும்.

28 மே 2000 அன்று இந்த நிகழ்வு நிகழ்ந்தாலும் அது சூரிய உதயத்தின்போது தோன்றியது. எனவே அதை தொலைநோக்கி உதவியில்லாமல் பூமியில் இருந்து பார்க்க முடியவில்லை.

அடுத்ததாக வரும் 2040, 2080 ஆண்டுகளில் காணும் வாய்ப்பு உள்ளது. 2080 நிகழ்வது 6.0 arcminutes தூரத்தில் நிகழும் இதன்பிறகு இவ்வளவு நெருக்கமாக 2417-ல் 5.4 arcminutes தூரத்தில் நிகழும். எனவே இந்த நூற்றாண்டில் இரண்டு முறை நெருக்கமாக காணும் வாய்ப்பு உள்ளது.

3

கிறிஸ்தவம்: கிறிஸ்தவ மத வரலாறு & பிரிவுகள்

0
கிறிஸ்தவம்: கிறிஸ்தவ மத வரலாறு & பிரிவுகள்

கிறிஸ்தவம் – Christianity: கிறிஸ்தவ மத வரலாறு & பிரிவுகள் பற்றி காண்போம். கிறிஸ்தவம் உலக அளவில் அதிக மக்கள் பின்பற்றும் மதமாகும்.

உலகளவில் 2.3 மில்லியன் மக்கள் கிறிஸ்தவ மதத்தை தழுவி உள்ளனர். இவர்கள் ஓரிறைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு இயேசுவின் போதனைகளை பின்பற்றி வருகிறார்கள்.

கிறிஸ்தவ மதம்

இயேசு கிறிஸ்து மற்றும் அவரின் அப்போஸ்தலர்களுடன் தான் கிறிஸ்தவம் உருப்பெற்றது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, வாழ்க்கை, இறப்பு, உயிர்ப்பு,  விண்ணேற்பு இவற்றை மையமாககொண்டது இந்த மதம்.

மேலும் இம்மதம், கிறிஸ்துவின் படிப்பினைகளை கிறிஸ்தவர்கள் கற்றுக்கொண்டு, அவற்றின் படி வாழ  கற்றுக்கொடுத்து, மக்களை அதன்படி வழிநடத்துகிறது.

ரோமன் கத்தோலிக்க திருச்சபை வரலாறு

கிறிஸ்தவத்தின் ஆரம்பம்

இயேசுவின் இறப்பிற்குப் பின்னர் 1-ம் நூற்றாண்டில் யூதேயாவில் யூத மக்களின் ஒரு பிரிவாக கிறிஸ்தவம் தொடங்கியது. ஆனால் இது ரோமானிய பேரரசு முழுதும் மிக விரைவில் பரவியது.

கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு பின்பற்றியவர்கள் மிகவும் துன்புறுத்தப்பட்டார்கள். இருப்பினும் எண்ணிக்கையில் பெருகி, விரைவிலேயே யூதேயாவின் மாநில மதமாக கிறிஸ்தவம் மாறியது.

5-15ம் நூற்றாண்டுகள் வரையிலான காலகட்டத்தில், கிறிஸ்தவம் தெற்கு ஐரோப்பா மற்றும் ரஷ்யாவில் அதிகமாகப் பரவியது. தற்போது உலகெங்கும் பரவி, உலகத்தில் மிகப்பெரிய மதமாக உள்ளது.

மதத்தில் இருந்த சட்ட திட்டங்கள் எல்லோராரும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் சச்சரவுகளும், பிளவுகளும் எழுந்ததால், ரோமன் கத்தோலிக்கம், கிழக்கு ஆர்த்தடாக்ஸ், ஓரியண்டல் ஆர்த்தடாக்ஸி, ப்ரோட்டஸ்டண்ட் ஆகிய 4-கிளைகளாக உள்ளது.

முதல் கிறிஸ்தவர்களில் பெரும்பாலோர் இனரீதியாக யூதர்கள் அல்லது வேறு இனத்தவரிலிருந்து மதம் மாறியவர்கள். யூதர்களிடமிருந்து ஆரம்பகால கட்டத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டன.

அது, வேறு இனத்தை சேர்ந்தவர்கள் முதலில் யூதர்கள் ஆக வேண்டும். பின்னரே கிறிஸ்தவ மதத்தை தழுவ வேண்டும் என்பதாகும் ஆனால் புனித பீட்டர் (st.peter) இதற்க்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இதனால் பிளவுகள் வெடித்தன. கிறிஸ்தவம் 4 பிரிவுகளாக இருந்தாலும் அவர்களின் வழிபாட்டு முறைகளில் மட்டுமே வேறுபடுகின்றனர். கிறிஸ்தவத்தின் மையப்புள்ளி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தான்.

3

ராஜ ராஜ சோழன் சமாதி எது? தொடரும் மர்மம்!

1
ராஜ ராஜ சோழன் சமாதி

ராஜ ராஜ சோழன் சமாதி எது? தொடரும் சோழர்கள் மர்மம்! 1000 வருடங்கள் அழியா கோவில் கட்டிய அருள்மொழிவர்மன் கல்லறை, கைலாசநாதர் கோவில் பள்ளிப்படை?

அருள்மொழிவர்மன் கல்லறை பள்ளிப்படைஇந்தியா மட்டும் அல்ல உலக வரலாற்றில் தங்களுக்கென்று ஒரு தனிப் பெயரையும் புகழையும் நிலைநாட்டிச் சென்றவர்கள் சோழர்கள்.

இந்த சோழ சாம்ராஜ்யத்தின் மிகச்சிறந்த சோழ மன்னர்களில் ஒருவரான ராஜ ராஜ சோழன் என்ற அருள்மொழிவர்மன் இறப்பும் அவருடைய நினைவிடத்தில் இருக்கும் மர்மத்தையும் இக்கட்டுரையில் காண்போம்.

கி.பி 947-ஆம் ஆண்டு சுந்தர சோழனிற்கும் வானவன் மாகாதேவி அம்மையாருக்கும்  இரண்டாவது மகனாகப் பிறந்த இவர், கி.பி 985-ஆம் ஆண்டே ஆட்சிக்கு வந்தார்.

கி.பி 985 முதல் 1014 வரை வெறும் 30 ஆண்டுகள் இவர் புரிந்த ஆட்சியே சோழ சாம்ராஜியத்தின் பொற்காலம் என்று அனைவராலும் பேசப்படுகிறது.

ராஜ ராஜ சோழன் சமாதி மற்றும் இறப்பு

கைலாசநாதர் கோவில்தன்னுடைய புதல்வன் ராஜேந்திர சோழன் ஆட்சிக்குப் பின்னர் சிறிது காலம் மரணப் படுக்கையில் இருந்து கிபி 1014-ஆம் ஆண்டு தன்னுடைய 67-ஆம் வயதில் இயற்கை மரணம் அடைந்தார்.

இவருடைய சமாதி  கும்பகோணம் மாவட்டத்தில் உடையலூர் கிராமத்தில் ஒட்டத்தோப்பு எனும் இடத்தில் இருப்பதாக இணையத்தில் சில புகைப்படங்களும் பதிவுகளும் உள்ளன. அதனைச் சுற்றி வசிக்கும் மக்களால் அது நம்பப்பட்டு வருகிறது.

கட்டிட கலைஞரும் சோழ வரலாற்றைப் பற்றி நன்கு ஆராய்ச்சி செய்த பேராசிரியர் G. தெய்வநாயகம் அவர்கள்.

கைலாசநாதர் கோவில் தான் ராஜராஜ சோழன் அவர்களின் பள்ளிப்படையாக இருக்க முடியும் என்று சில கருத்துகளை முன் வைக்கிறார்.

அருள்மொழிவர்மன் பள்ளிப்படை மற்றும் அதன் வரலாறு 

தன்னுடைய வாழ்க்கையில் சிறந்து விளங்கி மக்கள் அனைவராலும் போற்றப்பட்டு பற்பல சாதனைகளை செய்து இறந்த மனிதர்களை கடவுளுக்கு நிகராக வைத்து வணங்குவதே பள்ளிப்படை.

அதாவது இறந்தவர்களின் அஸ்தியுடன் சேர்த்து சிவன்கோவிலை கட்டி அதன் பெயரை இறந்தவர்களின் பெயருக்கு இணையாக மாற்றி வைப்பதே இந்தப் பள்ளிப்படையின் சம்பிரதாயம் ஆகும்.

இந்த சம்பிரதாயம் ராஜ ராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் பின்பற்றப்பட்டது. ராஜ ராஜ சோழன் அவருடைய கொள்ளுப்பாட்டனார் ஆதித்யா சோழர், ஸ்ரீ கலகஸ்டியில் (தற்போதைய ஆந்திர பிரதேசம்) இயற்கை மரணம் அடைந்தார்.

ஆதித்யா சோழா நினைவாக அவருக்கு ஸ்ரீ கலகஸ்டியில் ஆதித்யேஸ்வர எனும் பள்ளிப்படையைக் கட்டியுள்ளார்.

வேலூர் அருகே வேள்பாடி எனும் இடத்தில் அரிஞ்செய சோழர் அவர்களின் நினைவாக அரிஞ்சிகை ஈஸ்வரன் கோவிலையும் கட்டியுள்ளார் ராஜராஜ சோழன்.

சிவனின் புகழையும் அதைப் போதிக்கும் லக்கூலிசா பசுபதா எனும் பள்ளி கிபி 7-ஆம் நூற்றாண்டில் தோன்றி அதன் பிறகு தமிழ்நாட்டில் பரவியதாக நம்பப்படுகிறது.

ராஜராஜ சோழன் இறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்னர் சிவபக்தியில் முழுத்தீவிரமாக இறங்கியதாக சான்றுகள் கூறுகின்றன.

பேராசிரியர் தெய்வநாயகத்தின் சான்றுகள் 

கிபி 1112-ஆம் ஆண்டு காஞ்சி கைலாசநாதர் கோவில் பாழடைந்து இடியும் நிலையில் இருக்கும் பொழுது ராஜராஜ சோழனின் கொல்லுபேரன் மன்னர் குலோத்துங்கச் சோழன் அதைப் புதுப்பித்துக் காட்டினார்.

இந்தக் கோவிலுக்கு எதிர்ப்புரத்தில் இருக்கும் பால்குலத்து அம்மன் கோவிலில் இருக்கும் கல்வெட்டுகளில் குலோத்துங்கச் சோழனின் 42-ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் புதுப்பித்ததாக பொறிக்கப்பட்டுள்ளது.

மேலும் ராஜராஜ சோழர் சிவபடசேகரர் ஆக அவதாரம் எடுத்தாகவும் சொல்லப்பட்டுள்ளது. அதாவது சிவனின் பாதத்தில் சேர்ந்து இதுவும் பள்ளிபடையாக உருப்பெட்டுள்ளதாக கூறுகின்றனர்.

கைலாசநாதர் கோவில் சாதாரண சிவன் கோவில் இல்லை என்பதை குறிப்பிட இன்னும் சில சான்றுகளும் அதனுள் அமைந்துள்ளன.

கோவிலின் ஆரம்பத்தில் இருக்கும் பெண் தெய்வமானது சமீபத்தில் அதாவது 200 ஆண்டுகளுக்கு முன்னரே அங்கு வைக்கப்பட்டதாக தெரிகிறது.

கோவிலின் மையப்பகுதியில் அகோரிகள் சிவனை வழிபடுமாறு கல்வெட்டுகள் அமைக்கப்பட்டிருக்கும். இது ராஜராஜனின் இறுதிக்கால வாழ்க்கையை குறிப்பிடுகிறது.

அதாவது கிபி 1010-ஆம் ஆண்டு ராஜராஜ சோழன் வாரணாசியில் நான்கு அகோரிகளை அழைத்துக்கொண்டு தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்ததாக வரலாறு கூறுகிறது.

கருவறையின் வெளிப்புறத்தில் நடனமாடும் சிவனும் அவரின் காலடியில் அகோரியும் இருக்குமாறு சிற்பம் ஒன்றுள்ளது. இது சிவபடசேகரர் எனும் அனுமானத்தை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது.

கைலாசநாதர் கோவிலில் அமைந்திருக்கும் விமான கட்டிட அமைப்பு இது பள்ளிப்படை என்பதை மேலும் உறுதி செய்கிறது. எனவே இது அருள்மொழிவர்மன் பள்ளிப்படை (கல்லறை) என அவர் குறிப்பிடுகிறார்.

Disclaimer

மேற்கூறிய அனைத்தும் நாங்கள் படித்த ஆராய்ந்த கட்டுரைகள், புத்தங்கள் மற்றும் காணொளிகளை வைத்தே எழுதப்பட்டுள்ளது. இவை அனைத்தும் 100 சதவிகிதம் உண்மை என்று எங்களால் கூற இயலாது.

3

ஜெய் பீம் 1881-ல் நடந்த உண்மை வரலாறு!

0
ஜெய் பீம் வரலாறு கோரேகாவ் போர் நினைவு தூண்

ஜெய் பீம்” என்ற வார்த்தை உருவான வரலாறு. ஜெய் பீம் என்ற வார்த்தை உருவாகக் காரணம் “பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்” மற்றும் “கோரேகாவ் போர்“.

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்பீம் ஜி” என்ற வார்த்தை பீம்ராவ் ராம்ஜி என்பதன் சுருக்கம். அம்பேத்கார் என்ற பெயர் அவருடைய ஆசிரியை மூலம் சூட்டப்பட்ட பெயர்.

அம்பாடவேகர் (Ambadawekar) என்ற பெயரை அம்பேத்கார் என மாற்றியவர் கிருஷ்ணாஜி கேஷவ் அம்பேத்கார் (Krishnaji Keshav Ambedkar) என்ற ஒரு பிராமண ஆசிரியர்.

அம்பாடவே (Ambadawe) என்ற கிராமத்தின் பெயரே முதலில் பீம்ராவ்விற்கு சூட்டப்பட்டது. பீம்ராவ் ராம்ஜி அம்பாடவேகர் என்பதை பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கார் என தன்னுடைய குடும்பபெயரை பீம்ராவ்விற்கு ஆசிரியர் சூட்டினார்.

இறுதியாக அம்பேத்கார் என்ற அந்த ஆசிரியர் அன்பாக சூட்டிய பெயரே உலக அளவில் நிலைத்து நின்றுவிட்டது.

அம்பேத்கார் வரலாறு

ஜெய் பீம் என்ற வார்த்தை உருவானது எப்படி?

இதைத் தெரிந்துகொள்வதற்கு முன், இதற்கு முன் நடந்த வரலாற்று சம்பவங்களை தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். பீம் என்ற வார்த்தையுடன் ஜெய் என்ற வார்த்தை எப்போது இணைந்தது?

கோரேகாவ் போர் (Battle of Koregaon)

Battle of Koregaon கோரேகாவ் போர் பேஷ்வா

கோரேகாவ் போர் என்பது கோரேகான் பீமா என்ற இடத்தில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கும், பேஷ்வா (மராத்திய பேரரசு) இருவருக்கும் இடையில் நடந்த யுத்தம்.

மராத்திய பேஷ்வா சாம்ராஜ்ஜியத்தின் மன்னன் பாஜிராவ். அவருக்கு பின் அரியணை ஏறியவர் இரண்டாம் பாஜிராவ். இவர்கள் பிராமண இனத்தை சேர்ந்த மன்னர்கள்.

இவர் தலைமையில் 1881-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி இருபத்து எட்டாயிரம் படை வீரர்களுடன் ஆங்கிலேயர் வசம் இருந்த புனே நகரை தாக்க ஆயத்தமாயினர்.

அந்த நாட்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான தீண்டாமை மேற்கொள்ளப்பட்டது. தாழ்த்தப்பட்டவர்கள் எச்சில்லை மிதித்தால் தீட்டு, காலடி தடத்தை மிதித்தால் தீட்டு எனக் கூறப்பட்டது.

தாழ்த்தப்பட்டவர்கள் பிராமணர் வசிக்கும் தெருப்பகுதிக்கு வந்தால் கழுத்தில் சிறிய மண்குடத்தை கட்டிக்கொண்டு வருவார்கள். அதில்தான் அவர்கள் எச்சில் துப்பவேண்டும்.

அவர்கள் காலடி தடம் அழிய வேண்டும் என்பதற்காக பனை ஓலையை பின்னால் கட்டித் தொங்கவிட்டு வருவார்கள். அவர்கள் நடக்க நடக்க காலடி தடத்தை பனை ஓலை அழித்து விடும்.

இதுபோன்ற காரணங்கள் ஆங்கிலேய படைகளில் தாழ்த்தப்பட்டவர்கள் அதிக அளவில் இணைந்தனர். மெஹர் (Mehar) இனத்தைச் சேர்ந்த மக்கள் அதில் அதிகம் இருந்தனர்.

பேஷ்வா படைகள் புனேவை தக்க செல்லுபோது, புனேவில் படையை வலுப்படுத்த கோரேகாவில் இருந்து 800 பேர் கொண்ட படை வருவதை அறிந்து அவர்களைத் தாக்க 2000 பேஷ்வா வீரர்கள் அனுப்பப்பட்டனர்.

2000 வீரர்களுடன் 800 வீரர்களை கொண்ட ஆங்கிலேய படை சுமார் 12 மணி நேரம் சண்டையிட்டது. இதில் 22 மெஹர் இனத்தைச் சேர்ந்த வீரர்கள் பலியாகினர்.

இந்த போரில் தோல்வியடைந்த இரண்டாம் பாஜிராவ் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டார். ஆட்சியை இழந்த பாஜி ராவ், உத்தரப் பிரதேசம், பித்தூரில், ஆங்கிலேயர்களால் தங்க வைக்கப்பட்டு, ஆண்டுக்கு 80,000 பிரிட்டன் பவுண்டு ஸ்டெர்லிங் ஓய்வூதியமாக பெற்றுக் கொண்டு வாழ்ந்தார்.

இதனால், மஹார் இனத்தவரை பேஷ்வாக்கள் ‘துரோகிகள்’ என்று சொல்ல, ஆங்கிலேயர்களோ, மஹார்களின் வீரத்தைப் பறைசாற்றும்விதமாக யுத்தம் நடந்த இடத்தில், நினைவுத் தூண் எழுப்பினார்கள்.

இந்த வெற்றியை நினைவு கூறும் விதமாக ஆங்கிலேயர்கள் பீமா நதிக்கரையில் நினைவுத்தூணை நிறுவி அதில் இறந்தவர்கள் பெயரைப் பொறித்தனர்.

ஜெய் பீம் அம்பேத்கார்

இந்த வரலாறு அதன்பிறகு பெரிய அளவில் பேசப்படவில்லை. அம்பேத்கார் இதை மீண்டும் உலகிற்கு அறிமுகம் செய்தார்.

‘மஹார்’கள் ஆண்ட ‘ராஷ்டிரம்’ (தேசம்) என்ற பொருளில் உருவானதுதான், ‘மஹாராஷ்டிரா’ எனும் மாநிலத்தின் பெயர். ஆனால், மஹார் இன மக்களின் வீரம், வரலாற்றில் பல காலமாக இருட்டடிப்பு செய்யப்பட்டே வந்திருக்கிறது.

1927-ல், அம்பேத்கர், அந்த வரலாற்றை மீண்டும் மக்களின் நினைவுக்குக் கொண்டுவரும்வரை!

ஒவ்வொரு இனத்திலும் ஒவ்வொரு ஆண்ட வம்சம் இருக்கும்போது நம் இனத்தில் இல்லையா? என அம்பேத்கார் மனதில் எழுந்த கேள்விக்கு கிடைத்த விடை தான் “ஜெய் பீம்”.

மஹாராஷ்டிரா என்ற தேசத்தின் சொந்தக்காரர்களே இந்த மெஹர் இன மக்கள் தான் என ஆண்டு தோறும் அங்கு ஜனவரி 1-ம் தேதி விழா எடுத்து கொண்டாட்டங்கள் நடைபெற அம்பேத்கார் காரணமாக அமைந்தார்.

அவருடைய பெயருக்கும், அந்த பீம் நதிக்கரைக்கும் இயற்கையே ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தி விட்டது. அம்பேத்கார் அங்கே செல்லும்போது எழுந்த கோஷம் தான் “ஜெய் பீம்“.

பாபாசாகேப் – நானாசாகேப்

ஆங்கிலேயரிடம் பென்ஷன் வாங்கிய இரண்டாம் பாஜிராவ்விற்கு குழந்தை இல்லை. இதனால் 1827-ஆம் ஆண்டில் நானா கோவிந்த் தோந்து பந்த் என்ற குழந்தையை தத்தெடுத்து நானாசாகேப் எனப் பெயர் சூட்டினார்.

நானா என்றால் தந்தை. சாகேப் என்றால் ஐயா (sir) என்று பொருள். நானாசாகேப் தன் சிறு வயதில் ராணி இலட்சுமி பாய், தாந்தியா தோப், அஷி முல்லா கான் ஆகியவர்களுடன் நெருங்கிப் பழகியவர்.

முதலாவது விடுதலைப் போர் என அழைக்கப்படும் 1857-ல் நடந்த இந்திய சிப்பாய் கலகம் போருக்கு தலைமை வகித்தவர்களில் ஒருவர்.

பாபாசாகேப் அம்பேத்கார் தந்தைக்கு மதிப்பு அளிக்கும்படி இந்த சிறப்பு பெயர் வழங்கப்பட்டது. சுதந்திர இந்தியாவில் இந்திய சட்டத்தை வடிவமைத்ததில் பெரும் பங்கு அம்பேத்காருக்கு உண்டு.

இவர் இல்லையேல் இன்னும் இங்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக சட்டங்கள் இருந்து இருக்குமா? என ஒரு பெரிய கேள்விக்குறியே உண்டாகியிருக்கும்.

இந்து மதத்தை வெறுத்த இவர் எல்லா மதத்திலும் ஜாதி உள்ளது எனக் கூறி புத்த மதம் தழுவினார்.

jai bhim 2021 movie

3

அண்ணல் அம்பேத்கார் வாழ்க்கை வரலாறு

1
அம்பேத்கார் வாழ்க்கை வரலாறு

அம்பேத்கார் வாழ்க்கை வரலாறு, பிறந்தநாள். அம்பேத்கார் பங்களிப்பு தீண்டாமைக்கு எதிராக, காந்தி பற்றிய அம்பேத்காரின்  குற்றச்சாட்டு, அம்பேத்காரின் பங்களிப்புகள்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை [பாபா சாகேப் – தந்தை] பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை இப்பதிவில் காண்போம்.

அம்பேத்கார் வாழ்க்கை வரலாறு

அம்பேத்கார் பிறந்தநாள்

மத்திய பிரதேசம் அம்போவதே கிராமத்தில் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் நாள் ராம்ஜி மாலோஜி சக்பால்-பீமாபாய் ஆகியோருக்கு 14ஆம் குழந்தையாக பிறந்தார்.

இளமைப்பருவத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த காரணத்தினால் பல்வேறு துன்பங்களையும் இன்னல்களையும் சந்தித்துள்ளார்.

பள்ளியில் கல்வி கற்கும் பொழுது மேல்சமூகத்தினரிடம் பேசவே உடன் அமர்ந்த்து பயிலவோ தடை செய்யப்பட்டிருந்தது. மேலும் வடமொழி மற்றும் பிற மாணவருடன் விளையாடவும் இயலாது.

பீமாராவ் ராம்ஜி அம்பேவாதேகர் என்பது அம்பேத்கரின் இயற்பெயராகும். 1904 ஆம் ஆண்டு அவரது குடும்பம் மும்பைக்குச் சென்றது. அங்கு எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து தனது கல்வியைத் தொடர்ந்தார்.

இவரது குடும்பம் அம்பேத்கரின் கல்வியில் ஆர்வம் காட்டியது. மேல்நிலை கல்வி முடிந்ததும் அம்பேத்கருக்கும் ஒன்பது வயதான ராமாபாய் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.

கல்லூரியிலும் சாதிகொடுமைகளை தாண்டி பரோடா மன்னரின் அரண்மனையில் படைகளுக்குத் தலைவராக ‘லெப்டினன்ட்’ பதவியில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கும் நிலவிய சாதி வேற்றுமையால் மனம் நொந்து மும்பைக்கே திரும்பினார்.

பின்னர் பரோடா மன்னார் இவருக்கு கொலம்பியாவில் எம்.ஏ. முதுகலைப் பட்டம் பயில ஏற்பாடு செய்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் உயர்கல்வி பயின்றவர் என்ற பெருமையும் பெற்றார்.

உயர்கல்வி பயில அமெரிக்கா சென்ற முதல் இந்தியரும் இவர்தான். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைப் படித்தார்.

இந்தியாவின் சாதிகள் என்ற தலைப்பில் கருத்தாழமிக்க ஒரு கட்டுரை மட்டும் ‘இந்திய தேசியப்பங்கு விகிதம் ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’ ஆகியவை எழுதி அங்கு முனைவர் பட்டம் பெற்றார்.

ஜெய் பீம் வரலாறு – ஜெய் பீம் பெயர் வந்தது எப்படி?

அம்பேத்கார் தீண்டாமைக்கு எதிராக

அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி வாக்காளர் தொகுதி வேண்டும் என வலியுறுத்தினார். இதை காந்தி கடுமையாக எதிர்த்தார்.

இது சமூகத்தை இரண்டாக பிரிக்கும் என அஞ்சினார். இதை எதிர்த்து காந்தி உண்ணாவிரத போராட்டம் செய்தார். இதனால் காந்தி கைது செய்யபட்டு புனே சிறையில் அடைக்கப்பட்டார்.

அம்பேத்கார் பிறந்த நாள்

காந்தி தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி தொகுதி வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட்டார் இது புனே உடன்படிக்கை எனப்படும்.

இதன் மூலம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என தனி தொகுதி அவர்கள் வாக்களிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.

அம்பேத்காரின் காந்தியை பற்றிய குற்றச்சாட்டு

“காந்தியை துறவி என்றோ, மகாத்மா என்றோ அழைக்காதீர்கள். அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி. காலத்திற்கேற்ப அவர் குணம் மாறும்.

ஆதரவும் மாறும், ஆனால் இந்து மதத்தில் ஒரு அடிமைகளாக தாழ்த்தப்பட்டவர்கள் காலம் முழுவதும் நீடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் மாறாது”.

காந்தியின் முகத்துக்கு நேரே அம்பேத்கர் இப்படிச் சொல்கிறார்: “காந்திஜி, உண்ணாவிரதம் ஒரு பலமான ஆயுதம்தான்.

ஆனால் அதை அடிக்கடி கையிலெடுக்க வேண்டாம். ஆயுதமும் மழுங்கிவிடும். நீங்களும் இருக்க மாட்டீர்கள். இந்த தேசத்துக்கு நீங்கள் தேவைப்படலாம்!”

அம்பேத்கார் பங்களிப்புகள்

இந்தியாவின் சட்ட மேதை என்று அழைக்கப்படும் இவர் இந்தியா அரசியலமைப்பு சட்டத்தை எழுத பல்வேறு நாடுகள் சென்று அதை நடுநிலையாக எழுதினார்.

அம்பேத்காரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு குடிமக்களின் உரிமைகளுக்கு பலவகைகளில் பாதுகாப்பை வழங்கியது. அரசியலமைப்பு நவம்பர் 26, 1949 அன்று மக்களவையில் ஏற்கப்பட்டது.

கில்டன் யங் ஆணையத்திடம் பொருளாதாரம் பற்றி நான்கு அறிந்து மூன்று புத்தகம் எழுதிய அம்பேத்கர் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் 1934ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்டது.

பவுத்த சமூகத்தினரின் தீண்டாமையினால் சந்தித்த பல இன்னல்களை பார்த்த அம்பேத்கார் யார் சூத்திரர்கள் என்ற புத்தகத்தை எழுதினார். 1956-ம் ஆண்டு புத்தரும் அவரின் தம்மமும் என்ற புத்தகத்தை எழுதினார்.

அம்பேத்கார் தழுவிய புத்த மத வரலாறு

அம்பேத்கர் அக்டோபர் 14, 1956ல் நாக்பூரில் உள்ள தீக்சாபூமியில் அதிகாரப்பூர்வமாக விழா எடுத்து பௌத்த சமயத்திற்கு மாறினார். அவருடன் அவர் ஆதரவாளர்கள் 500,000 பேரும் பௌத்த சமயத்திற்கு மாறினார்கள்.

நீண்ட காலமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அம்பேத்கார் 1956 டிசம்பர் 6ல் டில்லியிலுள்ள இவர் வீட்டில் தூக்கத்தில் உயிரழந்தார்.

3

புத்த பூர்ணிமா: புத்தர் வரலாறு & புத்த பூர்ணிமா சிறப்புகள்!

0
புத்த பூர்ணிமா – Buddha Poornima: புத்த பூர்ணிமா என்றால் என்ன? புத்த மதம் தோன்றிய வரலாறு

புத்த பூர்ணிமா – Buddha Poornima: புத்த பூர்ணிமா என்றால் என்ன? புத்தர் வரலாறு. புத்த மதம் தோன்றிய வரலாறு. புத்தரின் நான்கு முக்கிய போதனைகள் என்ன?

புத்தர்

உலகில் ஏற்படும் துன்பங்களை போக்க இறைவனின் அவதாரமாக எண்ணற்ற ஞானிகள் நமது பாரத தேசத்தில் பிறந்துள்ளனர்.

அவர்களில் துன்பதிற்கு காரணம் ஆசையே என்று போதித்து மக்களின் ஆசைகளை துறக்க சொல்லி நல்வழி படுத்திய மகான் “கௌதம புத்தர்” (Gautama Buddha).

அவரது ஜெயந்தி நாளே புத்த பூர்ணிமா என்று பௌத்த சமயத்தோரால் கொண்டாடப்படுகிறது.

புத்தர் வரலாறு

புத்தர் கி.மு 563 இல் லும்பினியின் (நேபாளம்) அரசர் சுத்தோதனருக்கு மே மாத முழுமதி நாளில் (வைசாகா) மகனாக பிறந்தார்.

புத்தரின் இயற்பெயர் சித்தார்தர். இவருக்கு பதினாறு வயதில் திருமணம் முடிந்து ராகுலா என்ற மகன் பிறந்தார்.

இல்லற வாழ்விலும், அரச வாழ்விலும் ஈடுபாடு இல்லாமல் 29 வயதில் வெளி உலகை காண கிளம்பினார். மக்கள் படும் துன்பங்களை, துயரங்களை கண்டு மிகவும் மனம் வருந்தினார்.

அதன்பின் காசிக்கு அருகே உள்ள கயாவில் போதி மரத்தடியில் அமர்ந்து கொண்டு ஆறு ஆண்டுகள் தவம் செய்து ஞானம் பெற்றார்.

புத்த மதம் என்ற புதிய மதத்தை புத்தர் உருவாக்கி அதன் கொள்கைகளை உலகறியச் செய்தார். இன்றும் 350-550 பில்லியன் பௌத்தர்கள் உலகம் முழுதும் உள்ளனர் என கணக்கீடு உள்ளது.

பௌத்த மதத்தை தழுவிய அம்பேத்கார் வரலாறு

புத்த பூர்ணிமா சிறப்புகள்

1. புத்தர் பிறந்த தினம்
2. புத்தர் ஞானம் பெற்ற தினம்
3. புத்தர் இறையான தினம்

புத்த பூர்ணிமாவின் மூன்று வகைகளும் சிறப்பு மிக்கதாகக் கூறப்படும்; மூன்றுமே மே மாதத்தில் வரும் பூர்ணை நாளில் நடந்ததாக வரலாறு உள்ளது. எனவே தான் புத்த பூர்ணிமா உலகம் முழுதும் பௌத்தர்களால் கொண்டாடப்படுகிறது.

இது ஆசிய நாடுகளான இந்தியா, இலங்கை, சீன, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, தைவான், கம்போடியா, திபெத், லாவோஸ் போன்ற நாடுகளில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இது மட்டுமன்றி உலகம் முழுதும் பௌத்தம் பரவி உள்ளது.

புத்தரின் நான்கு முக்கிய போதனைகள்:

  • துன்பத்தை மக்கள் எவராலும் தடுக்க முடியாது பிறப்பு, நோய், முதுமை, இறப்பு, ஆசை, பசி, வெகுளி, பகை, மயக்கம் அனைத்தும் துன்பத்தை தருபவை.
  • உலகில் மக்களின் துக்கத்திற்கு காரணம் ஆசை/பற்று ஆகும்.
  • ஆசையை துறப்பது துன்பத்தை தடுக்கும்.
  • நற்காட்சி, நல்லெண்ணம், நன்மொழி, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்கடைபிடி, நற்தியானம் இவை எட்டும் துக்கத்தை போக்கும் வழிமுறைகள் ஆகும்.

புத்த பூர்ணிமா விழா 2022 (Buddha Poornima 2022)

புத்தரை அறியாதவர்களும், பிடிக்காதவரும் எவரும் இல்லை என்றே கூறலாம். புத்தம் என்றாலே உயரிய ஞானம் பிறக்கும், மனத்தூய்மை அடையும், நல்வாழ்வு கிடைக்கும்.

புத்தரை இந்து மதத்தில் மகா விஷ்ணுவின் அவதாரமாக கருதுகின்றனர். அவரை துதிக்க மறுப்பதில்லை.

புத்த மதத்தில் மூன்று முக்கிய பிரிவுகள் இருப்பினும் கொள்கைகள் அனைத்தும் புத்தருடையதே ஆகும். அது வாழ்வை நெறிபடுத்தும் என்பது உண்மை.

இந்த ஆண்டு மே மாதம் 16-ஆம் நாள் பூர்ண முழுமதி நாளான இன்று புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது.

புத்தர் மதம் சாதி, சமயம் கடந்து அனைவராலும் துதிக்கப்படும். இந்த நாளில் அனைவரும் இருந்த இடத்தில் இருந்தே அவரை நினைந்து தியானம் புரிந்து நற்பண்புகளை பின்பற்றி வாழ்வோம்.

3

உலகின் மிக நீளமான ஆறுகள் (நதிகள்) டாப் 10 பட்டியல்

4
உலகின் மிக நீளமான ஆறுகள் டாப் 10 பட்டியல். Top 10 longest river in the world Tamil. ஆறு என்றால் என்ன? ஆறுகள் எப்படி உருவானது?

உலகின் மிக நீளமான ஆறுகள் டாப் 10 பட்டியல். Top 10 world longest river in Tamil. ஆறு (நதி) என்றால் என்ன? ஆறுகள் (நதிகள்) எப்படி உருவானது? உலகின் நீளமான நதி

ஆறு என்றால் என்ன? ஆறுகள் (நதிகள்) எப்படி உருவானது?

ஆறுகள் என்பது இயற்கையாக உருவான ஒரு நீரோடை ஆகும். பொதுவாக ஆறுகள் மலைப் பிரதேசங்களில் இருந்து உருவாகிறது.

குளிர்பிரதேசங்களில் காணப்படும் மலைப்பகுதிகளில் உள்ள பனிக் கட்டிகள் உருகுவதால், தண்ணீரானது தாழ்வான பகுதிகள் நோக்கி செல்லும்.

அதேபோல், தட்பவெப்பநிலை கொண்ட மலைப்பகுதிகளில் அதிக அளவு மழை பெய்து அந்த நீரும் தாழ்வான பகுதி வழியாகச் சென்று கடலில் கலக்கும்.

மலைக்கும், கடலுக்கு இடைப்பட்ட நீர் செல்லும் வழித்தடத்தையே நாம் ஆறுகள் என்று அழைக்கிறோம். இவை இயற்கையாகவே உருவாகியுள்ளது.

இவற்றில் இருந்து செயற்கை ஆறுகளை உருவாக்கி பல பகுதிகளுக்கு தண்ணீரை கொண்டு செல்வதும் உண்டு. இவை துணை ஆறுகள், கால்வாய்கள் என அழைக்கப்படும்.

ஆறுகள் பொதுவாக தூய்மையான நீர் நிறைந்த பகுதியாகவே உள்ளது. ஆதிகாலம் முதலே ஆற்றுக்கரையில் மனிதனின் நாகரீகம் வளர்ந்துள்ளது.

உலகின் மிக நீளமான ஆறுகள் டாப் 10 பட்டியல்

1.நைல் நதி

ஆறுகளில் மிகப்பெரிய நீரோடை கொண்ட ஆறு நைல் நதி ஆகும். இது மிகப்பெரிய ஆற்று படுகையையும் கொண்டது. உலகின் மிக நீளமான ஆறுகளில் முதன்மையானது.

6650 கிமீ நீளம் (4132 miles ) கொண்ட மிக நீளமான ஆறு நைல் நதி ஆகும். இது ஆப்ரிக்காவின் வட கிழக்கு பகுதியில் உள்ளது.

நைல் நதியானது வெள்ளை நைல் மற்றும் நீல நைல் என்ற இரண்டு துணை ஆறுகளை கொண்டுள்ளது. எகிப்து நாட்டின் பண்டைய கால குடி ஏற்றங்கள் நைல் நதிக் கரையில் அமைந்திருந்தன.

2. அமேசான் ஆறு

அமேசான் காடுகள் வழியாக பாய்கின்றன. உலகின் இரண்டாவது மிக நீளமான ஆறு ஆகும். தென் அமெரிக்காவில் உள்ளது.

6400 கி.மீ நீளம் கொண்ட மிகப்பெரிய ஆறு ஆகும். பரப்பளவில் உலகின் மிகப்பெரிய ஆற்று படுக்கை கொண்டது.

உலகின் மிகப்பெரிய ஆறு என்ற சிறப்பு இதற்கு இருந்தாலும் நீளத்தில் நைல் நதியே மிக பெரியதாக உள்ளது.

இது மழைக்காடுகள் என்று அழைக்கப்படுகிறது. உலகின் சுற்றுசூழல்-யை பாதுகாப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.

இங்கு அனகோண்டா வகைப் பாம்புகள் மற்றும் டால்பின் வகை மீன் இனங்கள் போன்ற அரியவகை உயிரினங்கள் இந்த ஆற்றில் வசிக்கின்றது.

உலகிலுள்ள உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு இங்கு வாழ்வது குறிப்பிடத்தக்க ஒன்று.

3. யாங்சி ஆறு

யாங்சி ஆறுகள் உலகின் மூன்றாவது பெரிய ஆறு ஆகும். இது சீனாவில் உள்ள மிகப்பெரிய ஆறு. 6,300 கி.மீ நீளம் கொண்டது. சீன நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை வளப்படுத்துகிறது.

இந்த ஆற்றுப் பகுதியில் ஏற்படக்கூடிய சுற்றுசூழல் மாசுபாடு காரணமாக அங்கு வசிக்கும் சீன முதலை, துடுப்பு மீன், கடல் பன்றி போன்ற இனங்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளன.

கடல் மட்டத்தில் இருந்து 5170 மீ உயரமாக உள்ளது. ஆசிய கண்டத்தில் உள்ள ஆறுகளில் மிக நீளமான ஆறு இதுவாகும்.

4. மிசிசிப்பி ஆறு

6,275 கிமீ கொண்ட உலகின் நான்காவது பெரிய ஆறு ஆகும். இது வட அமெரிக்காவில் உள்ள நீண்ட பெரிய ஆறாகும்.

பல வளைவுகள் கொண்டதாக உள்ளது. மிசிசிப்பி என்ற பெயர் இதில் மிசி என்பதற்கு விசாலம், சிப்பி என்பதற்கு தண்ணீர் என்று பொருள். இந்திய வார்த்தைகளின் அடிப்படையில் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளை வளப்படுத்துகிறது. இங்கு உயிரியல் பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளது.

5. யெனீசீ ஆறு

யெனீசீ ஆறு, உலகின் ஐந்தாவது மிகப்பெரிய ஆறு ஆகும். 5549 கிமீ நீளம் கொண்ட ஆற்றுப்படுகை உடையது. பைகால் ஏரியில் இருந்து யெனீசீ ஆறு உற்பத்தி ஆகிறது.

55 வகையான மீன்களுக்கு இருப்பிடமாக உள்ளது.

6. மஞ்சள் ஆறு

மஞ்சள் ஆறு சீனாவில் பாய்கிறது. இது சீன நாட்டின் இரண்டாவது நீளமான ஆறாகும்.

இதனை அந்நாட்டின் துயரம் என்று அழைக்கப்படுகிறது. 5,464 கிமீ நீளமுடைய உலகின் ஆறாவது பெரிய ஆறு ஆகும்.

மஞ்சள் நதியின் ஆற்றுப்படுகையில் வண்டல் மண் படிவம் அதிகமாக இருப்பதால் மஞ்சள் நிறத்தில் இருக்கும். எனவே இது மஞ்சள் நதி என்று அழைக்கப்படுகிறது.

2007 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி மூன்றில் ஒரு பங்கு விவசாயம் மற்றும் தொழில்துறை பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்த முடியாது.

ஆலைகள் மற்றும் நகரத்தில் இருந்து வெளிவரும் கழிவுகளால் நீரானது மாசடைந்துள்ளது.

7. ஓப் ஆறு

உலகின் ஏழாவது மிகப்பெரிய ஆறு ஓப் ஆறு ஆகும். 5410 கிமீ நீளம் கொண்ட நீண்ட நதியாகும். சைபீரியா நாட்டில் உள்ள பெரிய ஆறு ஆகும்.

நதி முகத்துவாரத்தில் ஓப் ஆறு உலகின் மிக பெரியது ஆகும். விவசாயம் செய்வதற்கு, மீன் பிடிக்க, நீரில் இருந்து மின் உற்பத்தி போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது.

8. பரனா ஆறு

4850 கிமீ நீளம் கொண்ட உலகின் எட்டாவது பெரிய ஆறு பரனா ஆறு. தென் அமெரிக்காவில் உள்ள இரண்டாவது நீளமான நதி ஆகும்.

பரனா என்பதற்கு ” கடலைப் போன்றது ” என்று பொருள். இங்கு அணைகள் கட்டப்பட்டு நீர் மின்சாரம் எடுக்கப்படுகிறது.

பிரேசில், பராகுவே, மற்றும் அர்ஜென்டினா போன்ற நாடுகள் வழியாக பரனா ஆறு சென்று அந்நாட்டை வளமாக்குகிறது.

9. காங்கோ ஆறு

உலகின் ஒன்பதாவது மிகப்பெரிய ஆறு காங்கோ ஆறாகும். இதன் ஆற்றுப்படுகை 4700 கிமீ கொண்டதாகும்.

உலகில் உள்ள மிகப்பெரிய ஆறுகளில் அதிக ஆழம் கொண்ட ஆறு காங்கோ ஆறாகும்.

அதிக கனஅளவில் நீரைக் கொண்டு செல்லும் ஆறுகளில் இரண்டாவது இடத்தைக் கொண்டது.

ஆப்ரிக்காவில் பாயும் முக்கிய ஆறாக விளங்குகிறது. காங்கோ பேரரசு காலத்தில் இந்த நதிக்கு காங்கோ ஆறு என்ற பெயர் உருவானது.

10. அமுர் ஆறு

உலகின் பத்தாவது மிகப்பெரிய ஆறு அமுர் ஆறாகும். 4444 கிமீ நீளம் கொண்ட பெரிய ஆறாகும்.

கருப்பு ட்ராகன் என்று சீன மொழியில் அழைக்கப்படுகிறது. சீனா மற்றும் ரஷியாவின் எல்லைப் பகுதியில் பாய்கிறது.

மேலே உள்ளவையே Top 10 longest river in the world.

உலகின் மிக நீளமான 3டி பாலம் – சீனா சாதனை
உலகின் நீளமான மலை தொடர்ச்சி – டாப் 10 பட்டியல்
இந்தியாவின் எல்லைகள் பற்றி தெரியுமா? 

உலகின் நீளமான கடற்கரைகள் டாப் 10 பட்டியல்

 

3

அசாமில் கொரோனா நோயாளி உயிரிழந்ததால் மருத்துவர் மீது கொடூர தாக்குதல்! 24 பேரை கைது செய்தது போலீஸ்!

0
Assam_Doctor_Assaulted_MrPuyal

கொரோனா நோயாளி ஒருவர் இறந்ததைத் தொடர்ந்து, அசாமின் ஹோஜாய் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவரைத் தாக்கியதாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அசாமின் ஹோஜாய் மாவட்ட போலீசார் தெரிவித்தனர்.

கொரோனா நோயாளி இறந்த பின்னர் இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது.

உதலி கொரோனா பராமரிப்பு மையத்தில் பணியாற்றி வந்த டாக்டர் சியூஜ் குமார் சேனாபதி மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நபர்களை தண்டிக்க, குறுகிய காலத்தில் இந்த வழக்கில் வலுவான குற்றப்பத்திரிகையை சமர்ப்பிப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தை கண்டித்து, அசாம் முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா ட்விட்டரில், “இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் ஈடுபட்ட இருபத்தி நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படும். இந்த விசாரணையை நான் தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறேன். நீதி கிடைக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்.” எனக் கூறினார்.

இதே போல் போலீஸ் தரப்பில், பாஸ்கர் ஜோதி மகாந்தா, மருத்துவர்கள் முன்னணியில் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதால் அவர்கள் இந்த சம்பவத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள் என்றும் சேனாபதி மீதான தாக்குதல் அனைத்து முன்னணி தொழிலாளர்களையும் தாக்குவது போன்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் வீடியோவில் காணப்பட்ட ஒரு பெண் உட்பட முக்கிய குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மற்றும் சதிகாரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு டிஜிபி (சட்டம் மற்றும் ஒழுங்கு) ஞானேந்திர பிரதாப் சிங் தெரிவித்தார்.

“மிகக் குறுகிய காலத்தில் நாங்கள் ஒரு வலுவான குற்றப்பத்திரிகையை சமர்ப்பிப்போம். குற்றவாளிகள் நீதிக்கு முன்பு கொண்டு வரப்படுவதை உறுதி செய்வோம்” என்று அவர் ட்விட்டரில் கூறினார்.

3

அண்டை நாட்டு எல்லைக்குள் அத்துமீறி பரந்த 16 சீன விமானங்கள்! மலேசிய அரசு கடும் கண்டனம்!

0
Jets_MrPuyal

16 சீன இராணுவ விமானங்கள் தனது வான்வெளியில் ஊடுருவியதற்கு எதிராக மலேசிய அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் சீனாவிடம் முறையிடும் என மலேசிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.

மலேசிய வான்வெளி மற்றும் இறையாண்மையில் மேற்கொள்ளப்பட்ட இந்த மீறல் குறித்து விளக்க சீன தூதர் ஆஜராக நோட்டீஸ் அனுப்புவதாக வெளியுறவு மந்திரி ஹிஷாமுதீன் ஹுசைன் தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய தென்சீனக் கடலில் வளமான மீன்பிடித் தளமான லுகோனியா ஷோல்ஸ் அருகே திங்கள்கிழமை அத்துமீறிய சீன விமானங்கள் அதன் ரேடாரில் சிக்கியதாக மலேசியாவின் விமானப்படை தெரிவித்துள்ளது. சீன விமானங்கள் போர்னியோ தீவில் சரவாக் கடற்கரையில் இருந்து கிட்டத்தட்ட 60 கடல் மைல் (110 கிலோமீட்டர்) தொலைவில் சென்றுள்ளன.

விமானத்தைத் தொடர்புகொள்வதற்கான முயற்சிகள் தோல்வியடைந்த பின்னர், மலேசிய விமானப்படை தனது போர் விமானங்களை அடையாளம் காண அனுப்பிய நிலையில், சீன விமானங்கள் பின்வாங்கிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

“மலேசியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. எந்த நாடுகளுடனும் நட்பான இராஜதந்திர உறவுகளைக் கொண்டிருப்பது நமது தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்வோம் என்று அர்த்தமல்ல” என்று ஹிஷாமுதீன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் மலேசியாவின் கண்டனத்தை சீன வெளியுறவு அமைச்சரிடமும் தெரிவிக்க உள்ளதாக அவர் கூறினார். எனினும் இந்த நடவடிக்கை குறித்து, சீனா இதுவரை எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.

கிட்டத்தட்ட முழு தென் சீனக் கடலையும் வரலாற்று அடிப்படையில் சீனா உரிமை கோருகிறது. புருனே, மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளும் தென்சீனக்கடலில் உரிமை கோரல்களைக் கொண்டுள்ளன. மேலும் சீனா பல செயற்கைத் தீவுகளை அமைத்து அவற்றை இராணுவத் தளங்களாக மாற்றியதிலிருந்து பதட்டங்கள் அதிகரித்துள்ளன.

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதி உலகின் பரபரப்பான கடல் பாதைகளில் சிலவற்றைக் கொண்டுள்ளது. மேலும் மீன்வளம், நிலத்தடி எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்புக்களை வைத்திருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

தென் சீனக் கடலில் சீன கடலோரக் காவல்படை மற்றும் கடற்படைக் கப்பல்கள் 2016 மற்றும் 2019 க்கு இடையில் 89 முறை ஊடுருவியுள்ளதாக மலேசியா கூறுகிறது. மலேசியா சீனாவிற்கு இராஜதந்திர முறை எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

3

பாகிஸ்தானுடனான அமைதி ஒப்பந்தம் அமலாகி 100 ஆவது நாள் நிறைவு! காஷ்மீர் பயணம் மேற்கொள்ளும் இந்திய ராணுவத் தளபதி!

0
army_chief_narawane_mrpuyal

ஜம்மு-காஷ்மீருக்கு இரண்டு நாள் பயணமாக ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவனே, பாகிஸ்தானுடனான போர்நிறுத்தத்திற்குப் பிறகு 100 நாட்கள் கழித்து செல்கிறார்.

இராணுவத் தலைவர் ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே ஸ்ரீநகரில் இன்று தொடங்கி இரண்டு நாள் பயணத்தில் எல்லையில் உள்ள நிலைமை மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வார் எனக் கூறப்படுகிறது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய போர்நிறுத்த ஒப்பந்தம் பிப்ரவரி கடைசி வாரத்தில் இரு படைகளின் இராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர் ஜெனரல்களுக்கிடையில் பேச்சுவார்த்தைக்கு பின்னர் தொடங்கியது. அது பின்னர் இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

“காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் ஊடுருவல் நடவடிக்கைகளை கவனிக்கும் 15 படைகளிலிருந்து அங்குள்ள உயர்மட்ட இராணுவத் தளபதிகளுடன் இராணுவத் தலைவர் இன்று ஸ்ரீநகரில் கலந்துரையாடுவார்” என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

ஊடுருவலை நடத்துவதற்கு பயங்கரவாதிகள் மேற்கொள்ளக்கூடிய எந்தவொரு முயற்சியையும் சமாளிக்க ராணுவத்தின் செயல்பாட்டுத் தயார்நிலையை மதிப்பாய்வு செய்வதற்காக தலைமை தளபதி காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள படைகளின் முன்னோக்கிய நிலைகளுக்கு செல்ல உள்ளார்.

நடந்து கொண்டிருக்கும் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முக்கிய பங்கு வகித்தார். இதன் விளைவாக கடந்த பல ஆண்டுகளாக கட்டுப்பாட்டுக் கோட்டில் அமைதி மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

உடன்படிக்கை முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இராணுவத் தலைவர் ஜெனரல் நரவனேவும் களத்தில் உள்ள அமைப்புகளுக்கு தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் கட்டுப்பாட்டுக் கட்டுப்பாடு முழுவதிலுமிருந்து பயங்கரவாதிகள் ஊடுருவ மேற்கொள்ளபப்டும் முயற்சிகளுக்கு எதிராக கடுமையான விழிப்புணர்வைக் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

3