Home Blog Page 237

International Women’s Day 2020 Theme; சர்வதேச மகளிர் தினம் 2020ன் தீம் 

2
International Women’s Day 2020 Theme
சர்வதேச மகளிர் தினம் 2020ன் தீம் 

International Women’s Day 2020 Theme; சர்வதேச மகளிர் தினம் 2020ன் தீம்

உலக பெண்கள் தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தக் கலாச்சாராம் 100 வருடமாக பின்பற்றப்படுகிறது.

சர்வதேச மகளிர் தின கவிதைகள், ஸ்டேட்டஸ், மெசேஜ்

சர்வதேச மகளிர் தினம் 2020ன் தீம் 

2020ஆண்டின் பெண்கள் தினத்தில் ‘பெண்களின் உரிமை மற்றும் ஆண் பெண் சமத்துவம்’ ஆகிய இரண்டும் முதன்மையாக எடுத்துக்கொள்ளப்பட்டு பேரணிகளும் விழிப்புணர்வு முகாம்களும் நடைபெறவுள்ளன.

சமூக வலைத்தளங்களில் #IWD2020 #EachforEqual and #GenerationEquality ஆகிய ஹஷ்டக்குகள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

உலக பெண்கள் தினம்; வரலாறும் நோக்கமும்

இந்த பாலின சமத்துவ பேரணி ஜாதி, மதம், இனம், பாலினம், மொழி, நாடு, நிறம் மற்றும் வயது இவை அனைத்தையும் தாண்டி உலகத்திலுள்ள அனைத்து மனிதர்களையும் ஒன்றிணைக்கும் என்ற நோக்கத்தோட நடக்கவுள்ளது.

இந்த மகளிர் தின பேரணி மூலம் பாலினத்தை மையமாக வைத்து வரும் மன மற்றும் பாலியல் ரீதியான பிரச்சனைகளை எதிர்காலத்தில் நடக்காமல் பார்த்துக்கொள்ள உதவும்.

சர்வதேச மகளிர் தினம் 2020; பெண்களுக்கு இலவச பெட்ரோல்

 

3

மாஸ்டர் அடுத்த அப்டேட் வந்துருச்சு!

0
Master Premiere Show

Master USA Premiere Show; விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி அமெரிக்காவில் பிரிமியர் ஷோ வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் Master படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில், போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

பிகில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். கைதி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மாஸ்டர் ரிலீஸ் Master Release

வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாகிறது. மாஸ்டர் குட்டி ஸ்டோரி லிரிக் வீடியோ வெளியாகி உலக முழுவதும் வைரலானது.

இந்த நிலையில், தற்போது மாஸ்டர் குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாஸ்டர் பிரிமியர் ஷோ (Master Premiere Show)

அதன்படி, வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி அமெரிக்காவில் பிரிமியர் ஷோ (Master Premiere Show) வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திங்க் பிக் பிக்சரஸ் நிறுவனம் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து மாஸ்டர் படத்தை அமெரிக்காவில் வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியிடுவதில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளது.

இந்திய திரைப்படங்களை உலகம் முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ள திங்க் பிக் நிறுவனம் ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து மாஸ்டர் படத்தை அமெரிக்காவில் வெளியிடுகிறது.

இதனால் படம் எப்படி இருக்கிறது என்ற தகவல் டுவிட்டரில் ஒரு நாள் முன்னதாக வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, கோடிக்கணக்கான ரசிகர்கள் விஜய்யின் பேச்சைக் கேட்பதற்கு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆம், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசுவார் என்பதை காண்பதற்கு ஆர்வமுடன் இருக்கின்றனர்.

நெய்வேலியில் நடந்த படப்பிடிப்பின் போது விஜய்யைப் பார்ப்பதற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் வந்தனர். அது அந்தப் பகுதியில் மட்டுமே உள்ள ரசிகர்கள்.

அவர்களை பார்த்து விஜய் கையெடுத்து கும்பிடுவதும், செல்ஃபி எடுத்துக் கொள்வதும் என்று அவரது புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

மாஸ்டர் இசை வெளியீடு (Master Audio Launch)

தற்போது மாஸ்டர் டிரைலர், மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் டிராக், மாஸ்டர் இசை வெளியீடு என்று மாஸ்டர் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் வெயிட்டிங்.

இது குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில், ரசிகர்கள் யாரும் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிற்கு வர வேண்டாம் என்று விஜய் கேட்டுக்கொண்டதாக தகவல் வந்தது.

பிகில் படத்தின் போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இது போன்று விஜய் வேண்டுகோள் வைத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரர்த்தில் இருந்து தகவல் வந்துள்ளது.

விஜய் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர்169 என்ற படத்தை இயக்க இருக்கிறார்.

வரும் மார்ச் முதல் வாரத்தில் அதுவும் 5 ஆம் தேதி தலைவர்169 படத்தின் பூஜை நடக்க இருப்பதாக தகவல் வெளியானது.

ஆனால், இதுவரை தலைவர்169 படத்திற்கு பூஜை போடப்பட்டதாக தகவல் வரவில்லை.

இதே போன்று விஜய்யும் தனது 65 ஆவது படத்தில் சுதா கொங்கராவுடன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மாஸ்டர் படம் வெளியான பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

ஏசியா நெட் மற்றும் மீடியா ஒன் சேனல் தடை செய்யப்பட்டது

0
ஏசியா நெட் மற்றும் மீடியா ஒன் சேனல் தடை செய்யப்பட்டது சேனல்கள் தடை நீக்கம்

ஏசியா நெட் மற்றும் மீடியா ஒன் சேனல் தடை செய்யப்பட்டது. மத்திய அரசு இரண்டு சேனலையும் 48 மணி நேரம் தடை செய்து உள்ளது.

நேற்று இரவு 7:30 மணிக்கு தடைசெய்யப்பட்டு உள்ளது. மார்ச் 8-ஆம் தேதி 7:30 வரை இந்த தடை நீடிக்கும் என மத்திய தகவல் ஒளிபரபுத்துறை கூறியுள்ளது.

காங்கிரஸ் கண்டனம்

மீடியாவின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. அரசுக்கு எதிராக வாய் திறக்கக்கூடாத நிறையை பாஜக அரசு உருவாகியுள்ளது எனக் கூறியுள்ளார் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி.

பல்வேறு மீடியாக்கள் இதற்கு கண்டனங்கள் தெரிவித்துள்ளன. மீடியாவின் சுதந்திரம் கடந்த சில வருடங்களாகவே ஒடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

3

என்னப்பா பெட்ரோல் விலை பொசுக்குன்னு குறைஞ்சு போச்சு

0
பெட்ரோல் விலை petrol price tamil

என்னப்பா பெட்ரோல் விலை பொசுக்குன்னு குறைஞ்சு போச்சு. தங்கம் விலை கிடுகிடுவென ஏறும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. petrol price tamil.

பெட்ரோல் விலை: 73.78 ரூ/லிட்டர்

டீசல் விலை: 67.21 ரூ/லிட்டர்

விலை குறைவு (petrol price tamil)

இதற்கு முன்பு மாதம் இருமுறை மட்டுமே பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது.

தற்பொழுது தினசரி பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் தங்கம் விலை போன்றே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

இன்றைய பெட்ரோல் விலை 13 காசுகள் குறைந்து உள்ளது. டீசல் விலையும் 13 காசுகள் குறைந்து உள்ளது.

அதே நேரம் திடிரென பெட்ரோல் விலை ஏறுவதும் வாடிக்கையாகிவிட்டது. இதனால் பொதுமக்கள் எப்பொழுதும் நிம்மதியுடன் இருக்க முடிவதில்லை.

3

IPL Corornavirus; கொரோனா வைரஸ் பாதிப்பால் ஐ‌பி‌எல் தடையா?

0
IPL Corornavirus
IPL Corornavirus

IPL Corornavirus; கொரோனா வைரஸ் பாதிப்பால் ஐ‌பி‌எல் தடையா?

உலகம் முழுவதும் மிகவும் அச்சுறுத்தலாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதையடுத்து ஜப்பானில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளும் கைவிடும் நிலைமையில் உள்ளது.

இது வரை இந்தியாவில் மட்டும் 30 உறுதிபடுத்தப்பட்ட கொரோனா நோயாளிகள் உள்ளனர். இதனால் ஐ‌பி‌எல் போட்டி நடைபெருமா என சந்தேகம் எழுந்தது.

கொரோனா பாதிப்பு குறித்து கங்குலி 

ஐ‌பி‌எல் 2020 நடைபெறுவதற்கான அனைத்து வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் செய்து வருகிறோம். வீரர்களும் யாரும் அச்சப்பட தேவை இல்லை.

மேலும் ரசிகர்களும் எந்த வித கவலையும் பட தேவை போட்டி குறித்த நாளில் நடக்கும் குறித்த இடத்தில் நடக்கும் என படையப்பா ஸ்டைலில் கூறி விட்டார்.

3

கருணாநிதியின் ஆருயிர் நண்பர் க.அன்பழகன் காலமானார்

0

கருணாநிதியின் ஆருயிர் நண்பர் மற்றும் தி.மு.கவின் மூத்த தலைவருமான க.அன்பழகன் காலமானார். இவர் 98 வயது வரை வாழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூச்சுத்திணறல் காரணமாக பிப்ரவரி 25-ம் தேதி சென்னை கிரீம்ஸ் ரோடில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் உடல் நிலை தொடர்ந்து மோசமான நிலையிலேயே இருந்து வந்தது.

தி.மு.க தலைவர் ஸ்டாலின், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் நேரில் சென்று அன்பழகனின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

கடந்த சில நாட்களாக செயற்கை சுவாசத்தில் சுவாசித்து வந்த அன்பழகன் நள்ளிரவு திடீரென காலமானார். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

3

7/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0
7/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் - Horoscope Tamil

7/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம்வேகம்

மிதமான பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கும். தங்களின் மனநிலை திடமாக வைக்க வேண்டும்.

பணியை விரைவாக முடிக்க உந்துதல் தேவை. கணவன் மனைவி இடையே அனுசரணை தேவை. பணவரவு திருப்தியாக இல்லை.

ஆரோக்கியம் சிறந்து விளங்கும். அனுமனுக்கு விளக்கு ஏற்றினால் நற்பலன்கள் கிடைக்கும்.

ரிஷபம் பண வரவு

இன்று நிலுவையில் உள்ள பணிகளை செய்து முடிப்பீர்கள். பணியில் நல்ல முடிவுகள் கிடைக்கும்.

துணையுடன் நல்ல புரிதல் இருக்கும். பண வரவு சிறந்து விளங்கும். மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். ஆரோக்கியம் சிறந்து விளங்கும்.

விநாயகரை தரிசித்து கூடுதல் நற்பலன் கிடைக்கும்.

மிதுனம் பிரச்சனை

இன்று சுமாரான நாளாக இருக்கும். பணியில் பிரச்சனைகள் வரலாம். அதனை சரி செய்ய திட்டமிடல் அவசியம்.

குடும்பத்தில் அமைதியாக பேச வேண்டும். பணவரவு போதிய அளவில் இருக்காது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சனி பகவானை எள் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் வரும்.

கடகம் கவனம்

இன்று ஆன்மீக காரியத்திற்கு நேரம் செலவிட வேண்டும். உணர்ச்சி வசப்படுதலை தவிர்க்கவும். பணியில் ஏற்படும் கவனச்சிதறலை தவிர்க்கவும்.

உறவில் அனுசரணை தேவை. லாபம் குறைவு, செலவு அதிகம். உணவில் கவனம் தேவை. செரிமான கோளாறுகள் வரலாம். சிவபெருமானிற்கு விளக்கேற்றி வழிபட வேண்டும்.

சிம்மம்கவனம்

மிக முக்கியமான முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். பணிகளில் ஏற்படும் தவறுகளை திருத்தி கொள்ளவும்.

துணையிடம் புரிதல் அவசியம். யதார்த்தமாக நடந்து கொள்ள வேண்டும். பண செலவில் கவனம் தேவை. தொண்டையில் பிரச்சனைகள் வரலாம்.

கேது பகவானிற்கு விளக்கேற்றி வர தொல்லைகள் குறையும்.

கன்னி மகிழ்ச்சி

இன்று மகிழ்ச்சியுடன் கொண்டாட்டங்கள் நிறைந்த நாளாக இருக்கும். பணியில் ஊக்க தொகை பெறலாம். சாமர்த்தியமாக செயல்படுவீர்கள்.

துணையிடம் காதல் அதிகரிக்கும். தனலாபம் அதிகரிக்கும். வருத்தங்களை தவிர்த்தால் போதும் மன அமைதியுடன் இருக்கலாம்.

பெருமாள் கோயிலுக்கு சென்று வர நன்மைகள் கூடும்.

துலாம் நலம்

இன்று சாதகமான நாளாக இருக்கும். புதிய நட்புறவு கிடைக்கும். புத்திசாலித்தனமான காரியங்கள் புரிவீர்கள்.

துணையிடம் நேர்மையான அணுகுமுறை அவசியம். சுப செலவுகள் வரும். உடல் நலமுடன் இருக்கும். சனி பகவானை வழிபட கூடுதல் பலன் கிடைக்கும்.

விருச்சிகம் கவனம்

உங்கள் பணிகளை செய்து முடிக்க சிரமம் இருக்கும். பணியிடத்தில் அனுசரணை அவசியம். திருமண பேச்சுகளை தவிர்க்கவும்.

காதலில் பிரச்சனைகள் வரும். பண விஷயத்தில் கவனம் தேவை. உடல் சோர்வு ஏற்படும்.

காக்கைக்கு எள் அன்னம் வைத்து சரி பகவானிற்கு விளக்கேற்றி பூஜியுங்கள் நல்ல பலன் உண்டு.

தனுசு நிதானம்

மன தைரியம் குறையும். உறுதியுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கும். வாக்குவாதங்கள் பணியிடத்தில் வரலாம்.

கணவன் மனையிடையே பேச்சில் நிதானம் வேண்டிய நாள். பணவரவு மகிழ்ச்சிகரமாக இல்லை. பதட்டத்தை தவிர்க்க தியானம் செய்யவும். மொத்ததில் சுமாரான நாள்.

நாக தேவதைக்கு விளக்கேற்றி வழிபட நன்மை கிடைக்கும்.

மகரம் வெற்றி

இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் தொட்டதெல்லாம் துளங்கும் நாளாகும். பல்வேறு புதிய வாய்ப்புகள் தேடி வரும். உறவுகள் மேம்படும்.

கணவன் மனைவி புரிதல் நன்றாக இருக்கும். சேமிக்க பணம் வந்து சேரும். நிறைந்த ஆற்றலுடன் இருப்பீர்கள்.

அரச மரத்தடி விநாயகரை சுற்றி வர அதிக நன்மைகள் உண்டு.

கும்பம் – வரவு

இன்று மிகவும் நல்ல நாளாக இருக்கும். தங்க நகைகள் வாங்க வாய்ப்புண்டு. மேலதிகாரிகளிடம் பாராட்டுகள் வரும்.

துணையிடம் நேர்மையாக நடந்து கொள்ளவும்.தன லாபம் அதிகரிக்கும். வீண் செலவு வேண்டாம். சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

பெருமாளிற்கு விளக்கேற்றி வழிபட கூடுதல் நன்மைகள் வரும்.

மீனம் கவனம்

இன்று கவனமாக இருக்க வேண்டிய நாள். நகைச்சுவை உணர்வுடன் நடந்து கொண்டால் பிரச்சனைகள் அண்டாது.

அன்பான வார்த்தைகள் கணவன் மனைவியையே அவசியம். நட்புணர்வை வளர்த்து கொள்ளுங்கள். விரைய செலவுகள் வரலாம். கண்களில் பிரச்சனைகள் வரலாம்.

மாரியம்மனிற்கு விளக்கேற்றி வர நற்பலன்கள் கிடைக்கும்.

7/3/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

மரைக்காயர் டிரைலர் வெளியீடு!

0
Mohan Lal Maraikkayar Trailer

Marakkar Trailer மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

மோகன் லால், கீர்த்தி சுரேஷ், ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், பிரபு ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம் படத்தின் டிரைலர் Mohanlal Marakkar Trailer வெளியாகியுள்ளது.

குஞ்ஞாலி மரைக்காயர் என்பது கோழிக்கோடு சாமுத்திரி மன்னனுக்கு கடற்படை தலைவர்களாக திகழ்ந்தவருக்கு வழங்கப்பட்ட புனைப்பெயர்.

முதலாம் குஞ்ஞாலி, 2ம் குஞ்ஞாலி, 3ம் குஞ்ஞாலி மற்றும் 4ம் குஞ்ஞாலி என்று குஞ்ஞாலி மரைக்காயர் பதவியை நால்வர் வகித்தனர். மரக்கலம் என்பதைத் தழுவி மரைக்காயர் என்று அழைக்கப்பட்டனர்.

16 ஆம் நூற்றாண்டில் கேரள நாட்டில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்ஞாலி மரைக்காயர் என்று போற்றப்பட்டனர். இவர்கள், போர்ச்சுக்கீசியர்களுக்கு எதிராக போரிட்டனர்.

இவர்களில் வீர, தீரம் கொண்டவராக கருதப்பட்டவர் 4ஆவது குஞ்ஞாலி மரைக்காயர். தற்போது இவரது வாழ்க்கையை மையப்படுத்தி மரைக்காயர் அரப்பிக்கடலிண்டே சிம்ஹம் என்ற படம் தயாராகி வருகிறது.

இதில், குஞ்ஞாலி மரைக்காயர் என்ற ரோலில் மோகன்லால் நடித்து வருகிறார். இவருடன் இணைந்து மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், அர்ஜூன், சுனில் ஷெட்டி ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. வரும் 26 ஆம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஆர்ச்சா என்ற ரோலில் நடித்துள்ளார்.

இந்த கதாபாத்திரத்திற்காக கேரளத்து பாரம்பரிய உடையுடனும், வித்தியாசமான ஹேர்ஸ்டைலுடனும் தோற்றமளிக்கிறார்.

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சாமுத்திரி மண்ணிற்கு அத்துமீறி வரும் பரங்கியர்களை எதிர்த்து போரிடும் மாவீரன் குஞ்ஞாலியின் வரலாற்றை இந்த டிரைலர் சிறப்பிக்கிறது.

மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம் டிரைலரில் அர்ஜூன், பிரபு, மோகன் லால், மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், சுனில் ஷெட்டி ஆகியோர் அடங்கிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

3

இந்திய மகளிர் அணி-யைக் கண்டு மிரளும் ஆஸ்திரேலியா

0
இந்திய மகளிர் அணி INDW vs AUSW மேகன் ஷட்

இந்திய மகளிர் அணி-யைக் கண்டு மிரளும் ஆஸ்திரேலியா. இந்திய வீராங்கனைகள் சிக்சர் மழை பொழிவதைக் கண்டால் சற்று அச்சமாக உள்ளது என ஆஸ்திரேலிய பவுலர் மேகன் ஷட் கூறியுள்ளார்.

அரையிறுதி போட்டியில் இந்திய மகளிர் vs இங்கிலாந்து மகளிர் அணியினர் மோத தயாராக இருந்தனர். ஆனால் வருண பகவான் இந்திய அணியை போட்டியின்றி தேர்வு செய்ய வைத்தார்.

அதேபோன்று மற்றொரு அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி தென்ஆப்ரிக்கா மகளிர் அணியை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

INDW vs AUSW

இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் லீக் சுற்றில் ஏற்கனவே மோதிக்கொண்டன. இதில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது.

உலகக்கோப்பைக்கு முன்பு நடந்த முத்தரப்பு தொடரில் ஆஸ்திரேலியாவின் மேகன் ஷட்  வீசிய முதல் ஓவரில் முதல் பந்தில் சிக்சர் அடித்தார் மந்தனா.

ஷபாலி தன் பங்குக்கு ஒரு பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் மட்டும் 16 அடித்தனர். மேகன் ஷட் கேரியரில் முதல் பந்தில் மற்றும் ஒரு ஓவரில் அடிக்கப்பட்ட அதிக பட்ச ரன்கள்.

இதனால் உலக கோப்பை இறுதிப்போட்டியில் மந்தனா மற்றும் ஷபாலியை கண்டாலே பயமாக உள்ளது. அவர்களுக்கு பந்து வீச நான் விரும்ப வில்லை.

என்னுடைய ஓவரை எளிதாக அடித்து நொறுக்குகின்றனர். எனவே அவர்கள் களத்தில் இருக்கும்போது என்னை ஓவர் போட நிர்பந்திக்க வேண்டாம் என கேப்டனிடம் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

3

சர்வதேச மகளிர் தினம் 2020; பெண்களுக்கு இலவச பெட்ரோல்

0
சர்வதேச மகளிர் தினம் 2020 இலவச பெட்ரோல் petrol price

சர்வதேச மகளிர் தினம் 2020; பெண்களுக்கு இலவச பெட்ரோல். petrol price low free in Coimbatore. womens day celecbration. பெண்கள் தின கொண்டாட்டம் பெட்ரோல் இலவசம்

உலக பெண்கள் தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் 8-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தக் கலாச்சாராம் 100 வருடமாக பின்பற்றப்படுகிறது.

சர்வதேச மகளிர் தின கவிதைகள், ஸ்டேட்டஸ், மெசேஜ்

சென்னையில் மகளிர் பேரணி

இதை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இருக்கும் மத்திய தகவல் பரப்பு மையம் பேரணி ஒன்றை நடத்தியது. இதில் குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி பங்கேற்றார்.

சமூதாயத்தில் பெண்களின் வளர்ச்சி, சம உரிமை, சுதந்திரம் ஆகியவற்றை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதே உலக மகளிர் தினத்தின் நோக்கம்.

உலக பெண்கள் தினம்; வரலாறும் நோக்கமும்

மகளிர் தினத்திற்காக இலவச பெட்ரோல்

கோயம்பெத்தூரில் உள்ள எச்.பி பெட்ரோல் நிலையத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8ஆம் நாள் முதலில் வாகனம் ஒட்டி வரும் 100 பெண்களுக்கு 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாகவும் பெண்கள் முன்னேற்றம் பற்றி முகமும் நடத்த இருப்பதாக கூறியுள்ளனர்.

International Women’s Day 2020 Theme

3